stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
சீனாவின் மலிவான இறக்குமதி - பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு
சீனா விவசாய பொருட்களை வாங்காததால் விவசாயிகளுக்கு ரம் 10 பில்லியன் உதவித் தொகையாக வழங்க போகிறார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எங்களின் ஆய்க்கினை தாங்க இயலாமல் தட்டுத்தடுமாறி போட்டியில் கலந்து கொள்ளுவா? கிரிக்கட் பற்றி எதுவுமே தெரியாதலால் அப்பப்ப உதவி தேவைப்படும். நீங்களே கடையை விரிக்கும் போது இலகுவாக இருக்கும்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
1994 இல் 9. களல வோட்டு. பின் 2010 (யுத்த முடிவில் பல தமிழர் வாக்களிக்காத தேர்தல்) 3 இவை தவிர ஏனையவை 1. 2020 இல் யாழில் 1 வன்னியில் 1. 2025 பூச்சியம். என நினைக்கிறேன்.
- Today
-
ஐபோன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
ஆப்பிள் ஐபோன் iPhone பயனர்கள் உடனடியாக தங்கள் சாதனங்களின் மென்பொருளை புதுப்பிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மிக தீவிரமான இரண்டு மென்பொருள் பாதுகாப்புக் குறைகள் (software vulnerabilities) கண்டறியப்பட்டுள்ளதுடன், அவை “மிகவும் நுணுக்கமான” சைபர் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.ஐபோன் பயனர்கள் இந்த வாரம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவிப்பில், Safari உலாவி மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் அனைத்து மூன்றாம் தரப்பு உலாவிகளுக்கும் அடிப்படையாக உள்ள WebKit என்ற உலாவி இயந்திரத்தை இந்த குறைகள் பாதிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைகளை பயன்படுத்தி, ஒரு பாதிக்கப்பட்ட இணையதளத்தை பயனர் பார்வையிட்டாலே, அவருடைய சாதனத்தில் தீங்கு விளைவிக்கும் நிரல்கள் (malicious code) இயங்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த குறைகள் உண்மையில் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அவை பொதுவான பெருமளவு தாக்குதல்கள் அல்ல என்றும், குறிப்பிட்ட சில நபர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எனத் தோன்றுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. “இந்த பாதுகாப்பு குறைகள், குறிப்பிட்ட சில இலக்கு நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக நுணுக்கமான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் எங்களிடம் உள்ளது,” என ஆப்பிள் தனது பாதுகாப்பு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த குறைகளை சரிசெய்யும் வகையில், iPhone, iPad மற்றும் பிற ஆப்பிள் சாதனங்களுக்கு அவசர மென்பொருள் புதுப்பிப்புகளை (emergency software updates) ஆப்பிள் வெளியிட்டுள்ளது. அனைத்து பயனர்களும் உடனடியாக புதிய புதுப்பிப்புகளை நிறுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுமார் 1.8 பில்லியன் iPhone பயனர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என சில தகவல்கள் வெளியானாலும், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், இது பெருமளவு சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கான சான்று கிடையாது என தெரிவிக்கின்றனர்.எச்சரிக்கை மாறாக, இந்த பாதுகாப்புக் குறைகளின் தீவிரத்தையும், புதுப்பிக்கப்படாத சாதனங்களுக்கு ஏற்படும் அபாயத்தையும் இந்த எச்சரிக்கை எடுத்துக்காட்டுகிறது என அவர்கள் கூறுகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு பின்னால் யார் உள்ளனர் அல்லது யார் இலக்காக்கப்பட்டனர் என்பது குறித்து பாதுகாப்பு காரணங்களால் எந்த விவரங்களையும் ஆப்பிள் வெளியிடவில்லை. முன்னதாக அறியப்படாத மென்பொருள் குறைகள் (Zero-Day Vulnerabilities) உலகளவில் அதிகரித்து வரும் சூழலில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இவ்வகை குறைகள், திருத்தங்கள் வெளியிடப்படும் முன்பே ஹேக்கர்களால் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாதனங்களை எப்போதும் அண்மைய மென்பொருள் பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் வைத்திருப்பது மிகவும் அவசியம் எனவும் ஆப்பிள் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. https://tamilwin.com/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களா. எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருக்கிறதே.
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
விஜயினை பற்றி எனக்கு தெரிந்த சில தமிழகத்தினை சேர்ந்தவர்களுடன் உரையாடினேன். பல இளைஞர்கள், பெண்கள் அவருக்கு வாக்களிக்க விரும்புவதாக சொல்லுகிறார்கள். திமுகவுக்கு மாற்று விஜய் என்று சொல்கிறார்கள்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
2010 பாராளுமன்ற தேர்தலில் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. அதற்கு முந்தைய தேர்தலில் ஒன்று கிடைத்தது. மற்றைய தேர்தல்கள் பற்றிய விபரங்களை இன்னும் பார்க்கவில்லை.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டக்கிலஸுக்கு மரணதண்டனை அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா? சிலரின் முதலமைச்சர் கனவில் இப்படி மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்களே. இப்போ யார் யார் சிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லையே? கடல், விமான நிலையம் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். சாண் ஏற நினைக்கும்போது முழம் சறுக்குகிறதே. அனுராவை இப்போதைக்கு ஒழிக்க முடியாது, அப்படி நினைத்தால், நினைப்பவர்கள் அரசியல் கேள்விக்குறியாகும்போல் உள்ளதே!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Come on @நிலாமதி அக்கா.
-
டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்
ம்.... இந்நாள்வரை அளவுக்கதிகமான கைதிகளை அடைத்து வைத்திருக்கும்போது குரல் எழுப்பாத சுரேன் ராகவன், இந்த ஜனநாயக வீரனுக்கு குரல் எழுப்புகிறார். இவர் வடக்கில் ஆளுநராக இருந்தபோது இந்த டக்கிளஸ் செய்த கொலை, கொள்ளை, சுரண்டல், அதிகாரதுஷ்ப்பிரயோகம் பற்றி அறியாமலா இருந்திருப்பார்? ஒருவேளை இவரும் தனது தேவைகளுக்காக இவரை பயன்படுத்தியிருப்பாரோ? சற்றுப்பொறுங்கள் ஆளுநர் அவர்களே! உங்கள் கூட்டாட்சியில் அங்கம் வகிக்கும்போது அவர் நிகழ்த்திய வண்டவாளங்கள் வெளியில் வரட்டும், அவர் அப்படி ஒரு தியாகியல்ல, அவரும் ஏனைய கைதிகள் போலவே சமமாக அடைக்கப்படவேண்டியவர்.
- Yesterday
-
சீனாவின் மலிவான இறக்குமதி - பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு
சீனாவின் மலிவான இறக்குமதியால் பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் சீனாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நாடு தனது பொருட்களை மாற்று சந்தைகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. இதில் பிரித்தானியா முக்கிய இடமாக மாறி வருகிறது. சீனாவின் மலிவு விலை கார்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ஒலி உபகரணங்கள் பிரித்தானியாவிற்கு அதிக அளவில் வருவதால் அங்குள்ள பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் வர்த்தக உபரி முதல் முறையாக 1 டிரில்லியன் டொலரை கடந்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி 29 சதவீதம் குறைந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 15 சதவீதம் மற்றும் பிரித்தானியாவிற்கு 9 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் தற்போது பணவீக்கம் 3.2 சதவீதமாக உள்ளது. 2026 நடுப்பகுதிக்குள் 2 சதவீதம் இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த பட்ஜெட்டில் எரிசக்தி மற்றும் எரிபொருள் வரிகளில் தளர்வு வழங்கப்பட்டதால் பணவீக்கம் மேலும் 0.5 சதவீதம் குறையலாம். இங்கிலாந்து வங்கி (Bank of England) வட்டி விகிதத்தை 3.75 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2026-இல் மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது. சீனாவிலிருந்து பிரித்தானியாவிற்கு 70 பில்லியன் பவுண்டு மதிப்பிலான பொருட்கள் வந்துள்ளன. இதில் கார்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஒலி சாதனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மலிவான இறக்குமதி காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளில் எழுந்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், “ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம்” என எச்சரித்துள்ளார். பிரித்தானிய அரசு உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளது. சீனாவின் மலிவு இறக்குமதி பிரித்தானியாவில் விலைகளை குறைத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவலாம். ஆனால் இது உள்ளூர் தொழில்துறைக்கு சவாலாக மாறும் அபாயமும் உள்ளது. https://tamilwin.com/uk
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உதவிதான் செய்யலாம். வாடகை என்றால், அது வேறமாதிரி ஆகிடும்😁😜 கிருபனுக்காக இதுகூடச் செய்யாவிட்டால்.....
-
யேர்மனியின் Gelsenkirchen நகரத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வங்கிக் கொள்ளை
இவர்கள் வங்கி காப்பக பெட்டிக்கு பதிலாக இந்த பணத்தை தமிழ் ஆட்களிடம் கொடுத்து வைத்திருந்தால் அவர்கள் பாதுகாப்பாக வைத்திருந்து தேவைபடுகின்ற நேரத்தில் இவர்களிடம் பவுத்திரமாக திருப்பி ஒப்படைத்திருப்பார்கள்
-
மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.
இந்தக் கலாச்சார வேறுபாடுகள் பற்றிய விழிப்புணர்வின்மை வேற்று நாட்டவருக்கு மட்டுமல்லாமல், வேற்று மாநிலத்தவர், ஒரே மாநிலத்தின் வேற்று நகரத்தவர் போன்றவர்களுக்கும் ஆப்பாக முடிந்திருக்கிறது. சில ஆண்டுகள் முன்பு, ஒஹையோவில் ஒரு பெரும்பனிப் புயல் வந்து, வீதிகளில் இருந்து வாகனங்கள் சறுக்கி மீடியனில் மாட்டிக் கொண்ட நிலை. இப்படி மாட்டிக் கொண்ட ஒரு வாகனத்தை, உதவும் நோக்கில் இன்னொரு வழிப்போக்கர் அணுகி கண்ணாடியைத் தட்டிய போது உள்ளே இருந்த அரை லூசுப் பயல் துப்பாக்கியால் சுட்டதில் உதவ வந்தவர் இறந்தார். சுட்டவருக்கு பின்னர் நீண்ட சிறை கிடைத்தது, ஆனால் ஒரு நல்ல மனிதர் உலகில் இருந்து மறைந்தார். இங்கே வாகனங்களை ஒரு வீதியில் திருப்ப வேண்டிய தேவை (U-turn) வந்தால், முடிந்த வரையில் எந்த தனியார் வீடுகளின் வாசல் பகுதி (driveway) யினுள்ளும் நுழையாமல் திருப்ப வேண்டும் என ஆலோசனை இருக்கிறது. நியூ யோர்க் நகரில் இருந்து வடக்கில் இருக்கும் நியூயோர்க் மாநில கிராமம் ஒன்றுக்குச் சென்ற ஒரு இளையோர் குழு, ஒரு தனியார் வீட்டின் வாசலில் நுழைந்து வாகனத்தைத் திரும்ப முயன்ற போது உள்ளேயிருந்து வந்த ஒரு கிழவர் வாகனத்தை நோக்கிச் சுட்டதில் ஒரு இளம் பெண் பலியானார். இந்தக் கிழவருக்கும் நீண்ட சிறை கிடைத்தது. எந்த வீட்டில்/வாகனத்தில் எத்தகைய மனப் பிறழ்வுடைய மனிதர்கள் இருப்பார்கள் என்ற அறுதியில்லாத காரணத்தால் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே 911 அல்லது உள்ளூர் காவல் துறையை அழைப்பதும் ஏனையோருக்கு உதவும் ஒரு பாதுகாப்பான வழி.
-
யேர்மனியின் Gelsenkirchen நகரத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வங்கிக் கொள்ளை
நமதாக்கள் பணம் இதற்குள் தான் சேமிப்பு. 200 பேரில் எங்கட ஆட்கள் யாராவது நின்றார்களோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாங்க இருக்கிறமல்ல ஒரு சத்தியாகிரகமே நடத்துவோம்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
முன்னர் கூறியது போல கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையேயான பலச்சமநிலையாக உக்கிரேனை இரஸ்சிய உக்கிரேன் முடிந்த பின்னரும் பயன்படுத்தும் நோக்கம் இருக்கலாம் அதற்காகவே 800000 உக்கிரேன் இராணுவத்தினை பேண வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முன்நிற்கிறது என கருதுகிறேன், இரஸ்சிய எரிபொருளை வாங்கும் கங்கேரி, ஸ்லோவாக்கியாவின் இரஸ்சிய ட்ருஸ்வா எரிபொருள் வழங்கி மீதான தாக்குதல், ஜேர்மனி மற்றும் போலந்து தொடர் நெருக்கடிக்கு போலந்திற்Kஉ ஒரு பலச்சமனிலையாக உக்கிரேனை ஜேர்மனி பார்க்ககூடும். இந்த பலச்சமனிலை பூகோள அரசியல் பனிப்போர் கால உத்தி, இந்த பழைய பனிப்போர் கால அதே பழைய உத்தியினைத்தான் தற்போது ட்ரம்பும் புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயம் என பழைய கள்ளு புதிய மொந்தையிலாக அமெரிக்க மூலோபாயம் வந்துள்ளது(சீனாவினையும் இரஸ்சியாவினையும் பிரித்து வைப்பது). ட்ரம்ப் இன்னும் ஒரு படி மேலே போய் ஐரோப்பாவினை தள்ளி வைத்துள்ளார் (மொன்ரோ கோட்பாடு). இது பிரித்தானியர்கள் காலனித்துவ காலத்திலேயே பயன்படுத்தும் பிரித்தாளும் அதற பழசான உத்தி. அரசியல் ஆய்வாளர்கள் இனி இதெல்லாம் சரிவராது எனக்கூறுகிறார்கள். இதனைத்தான் எம்மவர்கள் ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று கூறுவார்கள்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 20.12.2025
-
கருத்துப்படம் 19.12.2025
-
கருத்துப்படம் 17.12.2025
-
கேலி 15.12.2025
-
கருத்துப்படம் 12.12.2025
-
கருத்துப்படம் 11.12.2025
-
கருத்துப் படம் 06.12.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 15.10.2025
-
கருத்துப்படம் 10.10.2025
- யேர்மனியின் Gelsenkirchen நகரத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வங்கிக் கொள்ளை
கிறிஸ்துமஸ் தினம் என்பது யேர்மனியில் மகிழ்ச்சியோடு, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாக கொண்டாடும் ஒரு முக்கியமான நாள். கிறிஸ்துமஸ் விடுமுறை பொதுவாக அமைதியானதாகத்தன் இருக்கும், ஆனால், இந்த அமைதியான நேரத்தில் Gelsenkirchen நகரத்தில் அசாதாரணமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. Gelsenkirchen நகரத்தில் உள்ள Sparkasse வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள், வங்கியின் அடித்தளத்தில் உள்ள பார்க்கிங் கேரேஜ் வழியாக அங்குள்ள ஒரு அறையில் நுழைந்து, வங்கியின் சுவரில் ஒரு துளையை ஏற்படுத்தி, அதன் மூலம் காப்பக அறைக்கு சென்றிருக்கின்றனர். அந்த துளையை உருவாக்குவதற்காக சிறப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவோ, அதனுடைய சத்தம் வெளியே யாருக்கும் கேட்காமல் துளையிட்டிருக்கின்றார்கள் என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காப்பக அறையின் தரையில் உள்ள கோப்புகள் சிதறிக் கிடப்பதோடு, அந்த அறையில் இருந்த பெட்டிகளும் உடைக்கப்பட்டிருந்தன. பொதுவாக, காப்பகப் பெட்டிகளில் பணத்தை வைக்க அனுமதியில்லை, மேலும் அங்கு வைக்கப்பட்ட பணத்திற்கு காப்புரிமையும் இல்லை. இக் கொள்ளை சம்பவத்தை கேள்விப்பட்ட 200க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள், வங்கியின் முன்னால் கூடியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. மறு அறிவித்தல் வரை, வங்கி பொதுமக்களுக்கு திறக்கப்படாது என அறிவிப்புகள் பலகையில் போடப்பட்டிருக்கின்றது. புது வருடம் வரும் நேரத்தில் இது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்றில்லை, சிலருக்கு சோகத்தையும் ஏற்படுத்தும் blue NewsGermany: Hole in vault triggers rush of bank customersUnknown persons have broken into a bank building in the German city of Gelsenkirchen and ransacked several safe deposit boxes. According to police, the perpetrators used a large drill to get into the- மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.
அவுஸ்ரேலியாவில் இதே போல் ஒரு சம்பவம் நான் அவுஸ்ரேலியாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் நடந்திருந்தது, பஞ்சாப் பின்னணியினை கொண்ட ஒருவரின் தந்தையினை வரவழைத்திருந்தனர், அவர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வெள்ளையின குழந்தையினை தூக்கியதாகவும் அதனை ஆந்த குழந்தையின் தாய் காவல்துறையில் முறையீடு செய்து நீதிமன்றம் சென்று அவரின் மகன் நீதிமன்றில் இந்தியாவில் குழந்தைகளை தூக்குவது சாதாரண விடயம் அந்த மனநிலையில் செய்துவிட்டார் என கூறியும் அவரினை (தந்தையினை) நீதிமன்றம் நாட்டிற்கு திருப்பி அனுப்பியதாக கூறினார்கள். இன்னுமொருவர் ஒரு வெள்ளையினை பெண் பின்னால் சுற்றிதாக நீதிமன்றம் சென்றபோது பொலிவூட் சினிமாவில் அவ்வாறுதான் காதலிப்பது என நீதிமன்றில் கூறியதாக வாசித்த நினைவுள்ளது. வேறுபட்ட கலாச்சாரங்களில் வந்தவர்களினால் அறியாமையினால் ஏற்படும் தவறாக இருக்கலாம்.- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இவர். சிறந்த. பௌருளதாரக். கொள்கை. கொண்டவர் என்று. முன்பு. நீங்கள். இந்த. களத்தில். எழுதியுள்ளீர்கள் இல்லையா ?. அங்கிக்கு. கிட்டவும். நிற்க. முடியாத. மனிதன். எதோ. நடக்கட்டும். நடப்பதை. இருந்து பாரப்போம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நடுவரின் (கிருபன்) தீர்ப்பே இறுதியானது என்பதால், நான் போட்டியில் தொடர்வதில் சந்தோசமே, யாழ்கள போட்டியில் கலந்து கொள்ளும்போதுதான் போட்டி சுவாரசியமாகிறது (போட்டியினை மைதானத்தில் இருந்து பார்ப்பது போல கள உறவுகளுடன் போட்டியினை பார்க்கும் ஒரு அனுபவம்).- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
நித்தியாநந்தா அல்ல டக்லசின் பெயர். அவர் இயற்பெயர் வேறு. இயக்க பெயராக டக்லஸ் தேவானந்தா என்பதை சூடி கொண்டார். இது நித்யானந்தா மீது உள்ள பற்றால் அல்லது அவரின் புகழ் தன் மீதும் கொஞ்சம் பட வேண்டும் என்பதால். பனை அபிவிருத்தி சபையில் டக்கா அதிகாரம் செய்ய வரும் போது, நித்யானந்தா இல்லை என நினைக்கிறேன். ஈபிடிபி க்கு எப்போதும், இன்றும் 10% வாக்கு உண்டு. மிகுதி எல்லாம், 1994 தேர்தலில் வாக்கு சீட்டை புத்தகத்தோடு தூக்கி பெட்டியில் போட்ட வாக்குகளால் கிடைத்த எம் பி சீட்டுகள்.- வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night”
நான் இவரை முன்னர் அறிந்திருக்கவில்லை. அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஜஸ்டின். உங்களின் மிகச் சுருக்கமான வடிவத்தில் இருந்து, இந்த நாவல் மிகவும் பக்கச் சார்பாகவும், அடிப்படையிலேயே தவறுகள் உள்ளது போன்றும் தெரிகின்றது. ஆனாலும் நேரம் கிடைக்கும் போது இதை வாசிக்க வேண்டும் என்றிருக்கின்றேன். எவ்வளவு தான் மொழிகளில் ஆற்றல்கள் இருந்தாலும், மண்ணுடனும் அங்கிருந்த மனிதர்களுடனும் ஒட்டி ஒட்டி வாழ்ந்திருக்கா விட்டால், பல விடயங்களை என்றுமே புரிந்துகொள்ள முடியாது என்றே நினைக்கின்றேன். - கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.