Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடையாது Jan 16, 2026 - 05:34 PM - 0 அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும், எந்தப் பிரஜை, நகரம், கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர், தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவும் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாக செயல்படுத்தப்படும் என்றும், அது ஒருபோதும் பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். மேலும், ஒரு சமூகமாக மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றவும், அதற்காக ஒரு பாரிய பாதுகாப்பு அரணாக ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (16) பிற்பகல் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு தீவிர பங்களிப்பை வழங்கிய வட மாகாண முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, "முழு நாடுமே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டம் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் மாத்திரமன்றி, அதற்கு ஆளான பிள்ளைகளுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களுக்கு சிறந்த தொழிற்பயிற்சி வழங்கி, கிராமத்திற்கும் நாட்டிற்கும் பயன்மிக்க பிரஜைகளாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டமாகும் என்றும் தெரிவித்தார். நாட்டில் முதல் முறையாக, தெற்கு மற்றும் வடக்கு மக்களால் சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பகமான அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிகாரத்தை இழந்த இனவாத குழுக்கள் சிறிய, சிறிய இடங்களில் இனவாதத்தை மீண்டும் தூண்ட முயற்சித்தாலும், நாட்டில் மீண்டும் எந்த இனவாத போக்கும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தினார். மேலும், வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகளின் அபிவிருத்திக்காக கடந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டும் அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தி மக்கள் அந்த அபிவிருத்திப் பலன்களைப் பெறுவதை உறுதி செய்ய அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எமது நாடு எமது இளைஞர்கள் எமது அரச பொறிமுறையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள போதைப் பொருளை ஒழிப்பதற்காகவே நாம் உங்களை சந்திக்கிறோம்.நாடென்ற வகையில் எமக்கு பெருமளவு எதிர்பார்ப்புகள் உள்ளன. எமது நாட்டை உலகில் வளமான நாடாக முன்னேற்ற வேண்டும்.எமது நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். எமது நாட்டில் பலமான பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். எமது நாட்டில் அமைதி , சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். எமது நாட்டின் பிள்ளைகளுக்கு அவை மிகவும் அவசியமான விடயங்களாகும். ஆனால் இந்த அனைத்து எதிர்பார்ப்புகளும் ஒரு சவாலின் காரணமாக சாத்தியமாக்குவதில் தடையை எதிர்கொண்டுள்ளது. அது தான் இந்தப் போதைப் பொருள் அச்சுறுத்தல். எந்தவொரு இடத்தையும் எந்தவொரு பிரஜையையும் எந்தவொரு நகரம் அல்லது கிராமம் என்ற பேதமின்றி இந்த அச்சுறுத்தல் பரவியுள்ளது. இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். எமது பெற்றோர், தமது பிள்ளைகள் குறித்து பாரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்களை வளர்த்து பாரிய எதிர்பார்ப்புடன் கல்வி புகட்டுகின்றனர். ஆனால் அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் பிள்ளைகளை அடிமையாக்கும் போதைப் பொருள் அச்சுறுத்தலினால் வீணாகிறது. வறியவர்கள், செல்வந்தர்கள் மற்றும் தமிழ்,சிங்களம், முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி இந்த அச்சுறுத்தல் பரவியுள்ளது. இந்த போதைப் பொருளின் ஊடாக பெறப்படும் பெருந்தொகையான பணம் எமது அரச பொறிமுறையை ஆக்கிரமித்துள்ளது. சிறைச்சாலைகளுக்குள் கைதானவர்கள் இந்த வர்த்தகத்தை செய்கின்றனர். பொலிஸார் சிறந்த சேவையை செய்யும் நிலையில் ஒரு சிலர் இதில் சிக்கியுள்ளனர். சுங்கத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ,குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் என்பவற்றில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் இதற்குள் அகப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி அரச சேவையிலுள்ள முக்கிய இடங்களில் இந்த அச்சுறுத்தலில் சிக்கியுள்ள அதிகாரிகள் உள்ளனர். பிள்ளைகள் இதற்கு இறையாகியிருந்தால் அரச சேவை போதைப் பொருள் வர்த்தகர்களின் இறையாக மாறியிருந்தால் நாம் நாடென்ற வகையில் எங்கு செல்கிறோம்? அதனால் கட்டாயம் இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். இந்த போதைப் பொருள் வர்த்தகத்திற்கு அரசியல் பாதுகாப்பு பிரதானமான காரணமாக இருந்தது. சில பிரதேசங்களில் உள்ள அரசியல்வாதிகள் போதைப் பொருளை அடையாளப்படுத்தி அழைக்கப்பட்டனர். ஆனால் தற்போது அரசியில் வாதிகளுக்கு ஆதரவு வழங்காத அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். சில சமயங்களில் இதனை தடுப்பதற்காக உள்ள நிறுவனங்களின் பிரதானிகள் கூட இத்தகையோருடன் தொடர்பு வைத்திருந்தனர். கைது செய்யப்பட வேண்டிய நபரை விடுதலை செய்யும் வகையில் சாட்சியங்கள் தயார்படுத்தப்பட்டன. சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நிறுவனங்களின் பிரதான கதிரைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாறு உள்ளது. ஒரு காலத்தில் இவ்வாறான அதிகாரிகளை பணம் கொடுத்து தம் பக்கம் திருப்பினார்கள். சில காலம் அதிகாரிகள் அவர்களுக்கு அடிபணிந்து செயற்பட்டார்கள்.இன்று அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது. கைது செய்வதற்கான பொறிமுறை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ஆங்காங்கே சில விடயங்கள் நடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தயவு செய்து அவர்களுடனான தொடர்பை கைவிடுமாறு அந்த அனைத்து அதிகாரிகளிடமும் கோருகிறேன்.தெரிவு செய்வதற்கு இரண்டு பாதைகள் உள்ளன. அவர்களுடனான தொடர்பை கைவிட வேண்டும் அல்லது தொழிலை விட்டு விலகிச் செல்ல வேண்டும். போதைப் பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகத்தினருடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணிபுரிய ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். பொலிஸாரும் பாதுகாப்புப் படையும் இதனை ஒழிக்க பெரும் பங்காற்றுகின்றனர். போதைப் பொருளுடன் தொடர்புள்ள அதிகாரிகளினால் நேர்மையான அதிகாரிகளுக்கும் அவமரியாதையே ஏற்படுகிறது. போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்கான பொறிமுறையை பலப்படுத்த பின்வாங்க மாட்டோம். பொலிஸ் அதிகாரிக்கு தகவல் வழங்கப் பயப்படுவதாக ஒரு காலத்தில் கூறப்பட்டது. தகவலை வழங்கிய பின்னர் யார் அந்த தகவலை வழங்கினார் என்பது போதை வியாபாரிக்கு சென்றுவிடும். இவை ஆங்காங்கே நடைபெற்ற சிறு சம்பவங்களாகும்.இது ஒட்டுமொத்த பொலிஸாருக்கும் அவமானமாகும்.எனவே அதனை மாற்ற வேண்டும். எமது நாட்டு பொதுமக்களும் போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். உங்கள் பிள்ளை இந்த போதைக்கு அடிமையானால் என்ன நடக்கும். அந்தப் பிள்ளையின் முழு வாழ்க்கையும் நாசமாகும். பாரிய எதிர்பார்ப்புடனே அந்தப் பிள்ளைகளை வளர்த்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு முழுமையாக வீழ்ச்சி அடையும். பொருமளவான இளைஞர்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர். ஏனைய பெற்றோர்களைப் போலவே அவர்கள் மீதும் பெற்றோர் அன்பு செலுத்தினார்கள். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். இது எந்த வகையிலும் பின்வாங்கும் முன்னெடுப்பல்ல. வடக்கு இளைஞர்கள் ஒரு காலத்தில் யுத்தத்தில் சிக்கி பெரும் அழிவைச் சந்தித்தனர். பெற்றோர் தமது பிள்ளை குறித்து சந்தேகத்துடன் வாழும் நிலை ஏற்பட்டது. யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டது. இதனை தோற்கடிப்பதில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையும் உறுதியாக உள்ளனர். எமக்கு மக்களின் உதவி தேவை. போதைக்கு அடிமையானவர் யார் என ஊர்மக்களுக்குத் தெரியும். ஆனால் ஊர்மக்கள் அவருடன் மோதுவதற்குப் பயப்படுகின்றனர். போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு நாம் பயப்பட வேண்டுமா? அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இந்த விடயத்தை ஆராய்வோம் நாடுமுழுவதும் ஒரு பாதுகாப்பு அரணாக ஒன்றாக பிணைந்து இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக திடஉறுதிக்கு வருவோமானால் இதனை தோற்கடிக்கலாம். போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்களும் எமது பிள்ளைதான். அவர்களை மீட்டெடுக்கத் தவறியுள்ளோம். மாணவர்கள் கூட இதற்கு இறையாகியுள்ளனர். எமது பொறுப்பை தவறவிட்டுள்ளோம். முன்னர் சில நகரங்களில் தான் இந்த அச்சுறுத்தல் இருந்தது. தற்பொழுது சகல இடங்களிலும் பரவியுள்ளது. இதனுடன் இணைந்து குற்றச் செயல்களுடன் தொடர்புள்ள கும்பல்களும் உருவாகின. ஆயுதங்கள் அவர்களின் கைகளுக்குச் சென்றன.இந்த நிலை சில தசாப்தங்களாக வளர்ந்தன. அரச அதிகாரிகள்அவர்களுடன் கைகோர்த்திருந்தனர். போதைப் பொருள் பயன்படுத்துவோரை மாத்திரம் கைது செய்வதால் பயனில்லை.இதனை மேல் மட்டத்தில் இருந்து ஒழிக்க வேண்டும். இளம் வயதினர் சிறைகளில் உள்ளனர். போதைப் பொருளை ஒழிப்பது மாத்திரமன்றி அடிமையானவர்களுக்கு எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும். புனர்வாழ்வு நிலையங்களுக்கு அடிமையானவர்களை ஒப்படையுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பிள்ளையை மீள ஒப்படைப்போம். உங்கள் பிள்ளை இறையாகும் வரை காத்திருக்க வேண்டாம். அச்சுறுத்தல் உங்கள் வீட்டின் கதவு வரை வந்துள்ளது. கதவை மூடிவைப்பதால் எந்தப் பயனுமில்லை. அது கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விடும். பிள்ளையை எந்தளவு பாதுகாத்தாலும் சமூகத்தில் அந்த அச்சுறுத்தல் இருந்தால் உங்கள் முயற்சியால் பயன் ஏற்படாது. எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் இந்த போதைப் பொருளை முற்றாக ஒழிப்போம். அதற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். மக்கள் ஒன்றாக வாழும் நாடு தேவை. பல ஆண்டுகள் பிரிந்து சந்தேகத்துடன் வாழ்ந்ததால் என்ன பயன் கிடைத்தது.?எமது நாட்டில் ஒருபோதும் இனவாதம் ஏற்படாத ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும். இனவாதம் எந்தவொரு இடத்திலும் தலைதூக்க இடமளியோம். போயா தினத்தில் 'சில்' எடுப்பதற்காக சிரிமகா போதியை தாண்டி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள். அங்கு இருப்பது குரோதம் தான். பல விகாரைகளை தாண்டி யாழ்ப்பாணத்திற்கு வழிபட வருகிறார்கள். அதே போன்று சிலர் ஒவ்வொரு போயா தினத்திலும் காணிக்காக, அன்றி விகாரைக்கு எதிராக ஒன்று திரள்கிறார்கள். அவர்களின் யாருடைய காணியாவது அங்கு உள்ளதா என ஆராயுமாறு புலனாய்வு பிரிவிற்கு அறிவித்துள்ளேன். அதிகாரம் இழந்த இனவாத குழுக்கள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல்கிறார்கள். எந்த இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம். மக்கள் மோதிக்கொள்ளும் நாடன்றி நல்லிணக்கத்துடன் வாழும் நாடே எமக்குத் தேவை. இலக்கியம்,கலை,இசை மற்றும் திரைப்படத்துறையில் புதிய நிலைமைகளை இங்கு ஏற்படுத்த வேண்டும். மற்றவர்கள் குறித்து குரோதத்துடன் பார்க்கும் நிலைமையை மாற்ற வேண்டும். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சிறிதளவேனும் மீற மாட்டேன். தெற்கில் சிங்கள அரசாங்கம் உள்ளது. வடக்கிற்கு தமிழ் அரசாங்கம் தேவை என முன்னர் கோரப்பட்டது. தெற்கில் இருக்கும் அரசாங்கம் தமது அரசாங்கமாக மக்கள் கருதவில்லை. ஒரு சிலரது குடும்பங்கள்,உறவினர்களுக்காக அமைக்கப்பட்ட அரசாங்கங்களே இருந்தன. மக்களின் அரசாங்கம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள மக்களும் தெற்கில் உள்ள மக்களும் தமக்கான அரசாங்கம் உருவாகியுள்ளதாக கருதுகின்றனர். 2025 பல துறைகளில் வெற்றிகளை அடைந்த வருடமாகும். இந்த வருடம் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க இருக்கிறோம். அரச துறைக்கு 75 ஆயிரம் பேரை இணைக்கவும் பொலிஸிற்கு 10 ஆயிரம் பேரை இணைக்கவும் இருக்கிறோம். தமிழ்மொழியில் பேசும் பொலிஸார் எமக்குத் தேவை. பொலிஸிற்கு சென்று தமது மொழியில் முறையிடக் கூடியதாக இருக்க வேண்டும். இராணுவத்திற்கும் ஆட்சேர்க்க இருக்கிறோம். அவற்றுக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்புமாறு யாழ்ப்பாண பெற்றோர்களை கோருகிறோம். சகல மொழிகளிலும் பேசும் பொலிஸ் மற்றும் சகல மொழிகளிலும் செயலாற்றும் இராணுவமும் அவசியம். வறுமையை முற்றாக ஒழிக்கும் அரசாங்கமாக எமது அரசாங்கம் திகழும். வீடு, வருமானம், பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்வு, மற்றும் உளரீதியான நிம்மதியுடன் எமது நாட்டு மக்கள் வாழும் நிலைமையை உருவாக்க வேண்டும். அதற்கு சில காலம் செல்லும். நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டை உறுதியாக முன்னெடுப்போம். வடமாகாண பாதைகளை நிர்மாணிக்க 5000 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்தோம்.இந்த வருடமும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளுக்கு மத்தியிலும் போதைப் பொருளை ஒழிப்பது பிரதானமானது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு கொழும்பில் நாம் தொடங்கினோம். இன்று, அதன் வட மாகாண நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. போதைப்பொருள் அரக்கன் மக்களைச் சூழ்ந்துள்ள நிலையில், போதைப்பொருள் அரக்கனைச் சுற்றி வேறு அரக்கர்கள் உள்ளனர். வறுமையும் போதைப்பொருளும் ஒன்றோடொன்று இணைந்த இரண்டு தலைப்புகள். எனவே, வறுமை ஒழிப்பும் இந்தத் திட்டத்துடன் இணைந்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, Clean Sri Lanka திட்டமும், வறுமையை ஒழிப்பதற்கான சமூகசக்தி திட்டமும் அந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து வகையான அபிவிருத்தித் திட்டங்களையும் எதிர்க்கும் அரசியல்வாதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளனர். அழைக்கப்பட்ட போதிலும், சில அரசியல் கட்சிகள் இன்று இந்த இடத்திற்கு வரவில்லை. இருப்பினும், அனைத்து அரச அதிகாரிகளும் இன்று இங்கே உள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார். https://adaderanatamil.lk/news/cmkgtzm6g0403o29nccuu9mp9
  3. ஓம் அக்கா. என்னால் வீட்டினுள் செல்ல முடியாது. இந்த படங்கள் பிளம்பிங் செய்யும் தம்பி எடுத்து அனுப்பி உள்ளார். இந்த நிலையில் உள்ள மலசலகூடத்தை தான் 3 சகோதரர்களும் பாவித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்க கவலையாக உள்ளது. நாளை தான் மணல், சல்லி, சீமந்து, கம்பி என்பன வழங்குவார்களாம். உடனடியாக வேலையை தொடங்க கேட்டுள்ளேன். மலசலகூடத்தையும் தூய்மைப்படுத்த கேட்டுள்ளேன். இவர்கள் டிசம்பர் 3ஆம் திகதி நிகழ்விற்கு சகோதரியுடன் வந்தவர்கள், பிந்தியபடியால் தூக்கி இறக்குவதும் ஏற்றுவதிலும் உள்ள சிரமம் காரணமாக ஆட்டோவில் இருந்தவர்கள். அப்போதே மலசலகூடம் திருத்தும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் பின்னர் நடந்ததெல்லாம் விந்தைதான்!
  4. 16 Jan, 2026 | 12:25 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று வெள்ளிக்கிழமை (16 ) காலை பலாலி–அன்ரனிபுரம் வீதி வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். காலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயிற்சியின் போது, வீதியோரங்களில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் இளைஞர்களுடன் ஜனாதிபதி சுருக்கமாக உரையாடியதுடன், அவர்களின் தினசரி வாழ்வாதார நிலவரங்கள், அடிப்படை தேவைகள் மற்றும் பிரதேசத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், குறித்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், வீதி அபிவிருத்தி மற்றும் பொது சேவைகள் தொடர்பான விடயங்களிலும் அவர் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த திடீர் நடைப்பயிற்சி பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்ததுடன், அவரை நேரில் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய இந்த நடைப்பயிற்சி எந்தவித இடையூறும் இன்றி நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் ! | Virakesari.lk
  5. பராசக்தி - சுப.சோமசுந்தரம் இது பராசக்தி படத்தின் விமர்சனப் பார்வை அல்ல. அப்படம் ஏற்படுத்திய பரபரப்பு பற்றியது. தற்போது வெளியாகியுள்ள புதிய 'பராசக்தி' திரைப்படம் பெரும் வரவேற்பையும், சிலரிடம் ஏதோ அரசியல் காரணங்களுக்காக வெறுப்பையும், சில தரமான திரை விமர்சகர்களிடமிருந்து அரசியல் கலக்காத விமர்சனப் பார்வைகளையும் பெற்று சமூக வலைத்தளங்களைப் பரபரப்பாக்கி விட்டது. பெயர் ராசியோ என்னவோ, பழைய பராசக்தியும் அக்காலத்தில் அரசியல் களத்தில் சூடேற்றியது. 1930 களிலேயே சூடு பிடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1950 களின் இறுதியிலும் 1960 களிலும் தீப்பிடித்துப் பரவியதை ஓரளவு தொட்டுக் காட்டிப் பெரும் வெற்றி கண்டுள்ளது தற்போது வெளிவந்துள்ள பராசக்தி. இந்தி எதிர்ப்பு அல்ல, இந்தித் திணிப்பு எதிர்ப்பாக்கும் எனும் பம்மாத்து எனக்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன் - நாங்கள் பார்ப்பனர்க்கு எதிரி அல்ல, பார்ப்பனியத்திற்கே எதிரி என்பது போல. தணிக்கைத் துறையைச் சரிக்கட்டவும், ஏதோ நாகரிகம் கருதியும் 'தமிழ் வாழ்க' முழக்கத்தை மட்டுமே படம் முன்னெடுத்துள்ளதை என்னைப் போன்றோரால் புரிந்து கொள்ள முடிகிறது. பாசிசத்திற்கு மட்டும்தான் பம்மாத்து தேவையா என்ன ? அறிஞர் அண்ணா போன்று சமூகத்திற்கு நன்மையாற்ற நினைக்கும் கொள்கைச் சான்றோர்க்கும் பம்மாத்து தேவைப்படவே செய்தது. இறை மறுப்பாளரான அண்ணா 'ஒருவனே தேவன்' என்று ஏற்றுக் கொண்டதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் ? மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலைத் தமிழ் மொழிவாழ்த்து ஆக்கிய கலைஞர் கருணாநிதி அப்பாடலில், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கழிந்து ஒழிந்து சிதைந்தது பற்றிய வரியினை நீக்கியதும் அவ்வாறுதானே ? இவை அரசியல் நாகரிகம் என்று சொல்லிக் கடந்து செல்லும் பக்குவம் பகுத்தறிவாளரிடம் உண்டு. ஆனாலும் 'இந்தி ஒழிக, தமிழ் வாழ்க !' என்று அன்றைய முழக்கம் சேர்ந்தேதான் ஒலித்தது, சரியாக ஒலித்தது என்பதை இங்கு பதிவு செய்யவே விழைகிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஏதுமறியாத இளம் தலைமுறையினர் இதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். நிற்க. சங்கிகளும், யாரோ வேறொரு கதாநாயகனைத் தெய்வமாய் வழிபடும் ரசிகக் கண்மணிகளும் பராசக்தி படத்தைப் பற்றி கன்னா பின்னாவென்று பதிவு செய்வதைப் புறந்தள்ளி விடலாம். அவர்களை ஆட்டத்துக்கே சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. உலக சினிமா இலக்கணமெல்லாம் பேசி அந்த அளவுகோலை இந்தப் படத்திற்கு வைத்துப் பேசும் தரமான சினிமா விமர்சகர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது, "உங்களின் நிலைப்பாட்டிற்குப் பெயர் அறிமடம் (அறிந்தும் அறியாதார் போல் செயல்படுதல்). இது ஒரு வணிக நோக்கிலான சினிமா. மொழிக் கொள்கை கூட படம் எடுத்தவர்களுக்கு வணிக நோக்கில் அமைந்த ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் மொழிப்போரைப் பற்றி ஏதுமறியாத, வாசிப்பு அதிகம் இல்லாத பெரும்பாலான இளைய தலைமுறையைச் சென்றடைந்து விட்டது இப்படம். பலருக்கு சரியாக மொழி உணர்வைக் கடத்தி இருக்கிறது. அவ்வளவே !". அடுத்து, இதனைத் தங்களுக்கு எதிரான படமாக நினைக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு : ஐயா ! உங்கள் காங்கிரஸ் என்பது அந்தப் பழைய காங்கிரஸிலிருந்து பிரிந்து, அது ஒன்றுமில்லாமல் ஆனபின் 'இனி இதுதான் காங்கிரஸ்' என்று ஆன ஒன்று. எனவே 'படத்தில் காட்டப்பட்டது பழைய சித்தாந்தங்களுடன் திகழ்ந்த காங்கிரஸ். நாங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை நன்கு உணர்ந்த புதிய காங்கிரசாக்கும்' என்று சொல்லி நீங்கள் கடந்து சென்றிருக்கலாம். அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் இந்திக்குப் பெரிய ஆதரவாளராயிருந்து மொழிப் போராளிகளை ஆங்காங்கே சுட்டுத் தள்ளியது நிஜம். அடுத்த தேர்தலில் காமராஜரை மக்கள் தோற்கடித்ததற்கும் பெரும் பங்களிப்புச் செய்தவர் பக்தவத்சலம். அவரை உள்ளது உள்ளவாறு படத்தில் காட்டியதற்கு இன்றைய காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்திரா காந்தி அம்மையாரைக் காட்டிய விதத்திலும் பெரும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அன்று வடக்கில் இருந்த தலைவர்கள் எவரும் மொழிப்போரில் நம்முடைய நிலையைப் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை என்பது நமது முகத்திலறையும் நிதர்சனம். இறுதியாக தற்போது சிறிய சர்ச்சைக்கு உள்ளானது என்னவென்றால் பராசக்தி படக்குழு டெல்லியில் மோடி தலைமையில் நிகழ்ந்த பொங்கல் விழாவில் பங்கேற்றது. தமிழ்த் திரையுலகில் எத்தனையோ பேர் இருக்க, இப்படக் குழுவை பாஜக அழைத்ததும் இவர்கள் அதில் கலந்து கொண்டதும் ஒரு வேடிக்கை அரசியலாகத் தெரிகிறது; கேவலமான அரசியலாகவும் இருக்கலாம். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் இவ்வாறான நிகழ்வுகளை உதாசீனப்படுத்திக் கடந்து செல்ல வேண்டும். படம் தமிழ்ச் சமூகத்திற்கு நல்ல செய்தியைத் தந்தது என்பதோடு நிறுத்த வேண்டும். படக்குழுவினரை நிஜ வாழ்விற்கு அழைத்து வந்து நாயகர்களாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நாயகன் சிவகார்த்திகேயன் தாங்கள் திராவிட இயக்கத்தினர் என்றோ குறைந்தபட்சம் தமிழ் உணர்வாளர் என்றோ கூறிக் கொள்ளவில்லை. பாஜக நாளைக்கே இவர்களை அழைத்து ஒரு இந்தி ஆதரவுப் படத்தை எடுக்கச் சொன்னால், "நீ காசு குடு மாமே ! மத்ததை நாங்க பாத்துக்குறோம்" என்று இவர்கள் ஆனந்தக் கூத்தாடலாம். இதை விட இவர்களிடம் பெரிதாக ஏன் தமிழ்ச் சமூகம் எதிர்பார்க்க வேண்டும் ? இது விஷயத்தில் பாசிச பாஜகவை வேண்டுமானால் கடுமையாக விமர்சிக்கலாம். அவ்வளவுதான். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'ரகு தாத்தா' திரைப்படமும் ரசிக்கும் படியாக இருந்தது. இதுவும் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தின் பின்னணியில் உருவான கதை. ஆனால் இது அப்போது நிகழ்ந்த வரலாற்றைக் கூற வரவில்லை. மாறாக, பெண்ணியம் பேசும் கதையில் கதாபாத்திரங்கள் இந்தி எதிர்ப்பைப் பதிவு செய்தன. பராசக்தி திரைப்படம் போன்று ரகு தாத்தா பரபரப்பாகப் பேசப்படாததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் - கீர்த்தி சுரேஷ் தவிர நட்சத்திர நடிகர்கள் இல்லாமையும், முழுமையான வணிக நோக்கில் இளையோரைக் கவரும் உத்திகள் இல்லாமையும் அவற்றில் சில. எது எப்படியோ, இது போன்று தமிழரின் தன்னுணர்வை விழிப்புறச் செய்யும் திரைப்படங்கள் அவ்வப்போது திரையில் தோன்றுவது அவசியமாகிறது. சுதந்திரப் போராட்டம் நாட்டு விடுதலைக்கானது என்றால் மொழிப்போர் தமிழ் இன விடுதலைக்கானது என்பதை இந்நிலத்து இளையோர் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ரகு தாத்தா திரைப்படம் குறித்து முன்னர் நான் முகநூலில் எழுதியவை பின்வரும் இணைப்பில் : https://www.facebook.com/share/p/1bL1fCKieF/
  6. 16 Jan, 2026 | 01:30 PM டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பல் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த பாதாள உலக கும்பல் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை 05.20 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இவ்வாறு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலில் “கொன்ட ரன்ஜித்” என்பவரின் சகாவான 30 வயதுடைய “சூட்டி மல்லி“ என்பவரும் , “புன்சா” என்பவரின் 52 வயதுடைய சகாவும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கல்கிஸ்ஸை இரத்மலானையைச் சேர்ந்த 56 வயதுடைய “சூத்தித“ என்ற பெண்ணும் அடங்குகின்றனர். அதன்படி, கந்தான பிரதேசத்தில் 2025.07.03 இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கந்தான பிரதேசத்தைச் சேர்ந்த “சூட்டி மல்லி“ என்பவர் மேலதிக விசாரணைகளுக்காக களனி பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொலை மற்றும் பல்வேறு குற்றச் செலய்களுடன் தொடர்புடைய உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் எல்பிட்டிய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில் பாரிய மோசடியில் ஈடுபட்ட கல்கிஸ்ஸை இரத்மலானையைச் சேர்ந்த “சூத்தித“ என்ற பெண் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பல் தொடர்பில் வெளியான தகவல்! | Virakesari.lk
  7. திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை சந்தித்தார் விமல் வீரவன்ச! 16 Jan, 2026 | 03:30 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மற்றும் அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவங்ஸ நாயக்க தேரர் உள்ளிட்ட பலர் இன்று வெள்ளிக்கிழமை (16) திருகோணமலை சிறைச்சாலைக்கு வருகை தந்து கஸ்ஸப தேரரை சந்தித்து சுகம் விசாரித்து சென்றனர். இன்று காலை 10.00 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச 1 மணி நேரத்திற்கு மேலாக கஸ்ஸப தேரருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை சந்தித்தார் விமல் வீரவன்ச! | Virakesari.lk
  8. உரிமையாளரின் அனுமதி இன்றி பொருட்களுக்கு இலவச விளம்பரம் பண்ண கூடாது. Any propaganda is good propaganda.
  9. 16 Jan, 2026 | 04:20 PM இன்றும் கூட, சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் தனது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்று (16) முற்பகல் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி, மீசாலை, வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணித்தல் உட்பட நாடு முழுவதும் 31,218 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் “தமெக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' தேசிய வீட்டுத் திட்டம் 2026” அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 800 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக 20 இலட்சம் ரூபா வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், தலா 300,000 ரூபாவுக்கான காசோலைகள் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது வழங்கிவைத்தனர். வட மாகாணத்தை விரிவான அபிவிருத்திக்கு உட்படுத்தி அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என்று நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார். சுற்றுலாத் துறையை மேம்படுத்தக்கூடிய அழகிய கடற்கரைகளும், பல கவர்ச்சிகரமான இடங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக, பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், காங்கேசன்துறை துறைமுகப் பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முதல் முறையாக யாழ்ப்பாண மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு அரசாங்கம் இன்று நாட்டில் உருவாகி இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த நம்பிக்கை ஒரு துளி கூட மீற இடமளிக்கப்பட மாட்டாது என்றும் உள்ளங்களை ஒன்றிணைத்து, பிள்ளைகளுக்காக மோதலற்ற, ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்க ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, “யுத்தத்தினால் பெருமளவான வீடுகள் சேதமடைந்தன. நீண்டகாலம் சென்ற போதும் அந்த வீடுகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்படவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் அநேகமானோர் யுத்த சமயத்திலும் இடம்பெயர்ந்திருந்தார்கள். யுத்தத்தின் பின்னரும் இடம்பெயர்ந்திருந்தார்கள். நீண்டகாலமாக தமக்கென வீடோ, இடமோ இன்றி அவர்கள் வாழ்வது நியாயமல்ல. எமது ஆட்சிக் காலத்திற்குள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களினதும் வீட்டுப் பிரச்சினையை நாம் தீர்ப்பதே எமது எதிர்பார்ப்பாகும். இந்த பிரதேச மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எமது அரசாங்கத்தை உருவாக்க பங்களித்தார்கள்.ஆட்சியில் இருக்கும் தரப்பினருக்கு எதிரான மற்றும் உடன்பாடற்ற நிலைப்பாடே நீண்டகாலமாக இங்கு காணப்பட்டது. அதில் தவறில்லை. அரசாங்கம் இனவாதத்தை போசிப்பதாகவோ மக்களின் சொத்துக்களை திருடுவதாகவோ பொதுமக்கள் குறித்து சிந்திக்காமல் இருந்தாலோ அல்லது அரசாங்கம் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாக இருக்குமாயின் அரசாங்கமும் மக்களும் தூரமாவதை தடுக்க முடியாது. ஏனென்றால் அவை மக்களுக்கு எதிரான முரண்பாடுகளை உருவாக்கும் அரசாங்கங்கள். தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பற்றி மாத்திரம் சிந்திக்கும் அரசாங்கங்களாகவே அவை இருந்தன. ஆனால் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் பொதுமக்களின் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. தேர்தல் சமயங்களில் மக்களின் மனங்களில் குறிப்பாக வடபகுதி மக்களிடையே எம்மைப்பற்றி குழப்பமும் தெளிவின்மையும் இருந்திருக்கும். எம்மை ஆட்சிபீடமேற்ற வாக்களித்தாலும் சந்தேகத்துடன் தான் வாக்களித்திருக்கலாம். எமது அரசாங்கம் உருவாகி ஒரு வருடத்திற்கு சற்று கூடுதல் காலம் சென்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய அரசாங்கம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களின் கஷ்டங்களை தீர்க்கவேண்டும். அரசாங்கமென்ற வகையில் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். வீடற்றவர்களுக்கு வீட்டை வழங்க நடவடிக்கை எடுப்போம். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். வரலாற்றில் அதிக தொகையை அதற்காக ஒதுக்கியுள்ளோம். மக்களுக்கு சிறந்த வருமான வழியை அமைக்க வேண்டும். குறிப்பாக விவசாயத்துறை, தெங்குப் பயிர்ச்செய்கை, மீன்பிடித்துறை மற்றும் சிறிய கைத்தொழிற்துறைகள் என்பன இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அந்த அனைத்துக் கைத்தொழிற்துறைகளுக்கும் ஆதரவு வழங்கி மக்களின் வாழ்க்கை நிலையை, இருப்பதை விட உயர்ந்த நிலைக்கு மேம்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இது அதற்காக பாடுபடும் அரசாங்கம். அது மட்டும் எமக்கு போதுமானதல்ல. நீண்டகாலமாக எமது வாழ்வில் பெரும்பகுதியை யுத்தத்துடனே கழித்தோம். மோதல்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம். சந்தேகத்துடன் வாழ்ந்தோம். குரோதத்துடன் வாழ்ந்தோம். தமிழ் மக்கள் குறித்து சிங்கள இனவாதக் குழுக்கள் சந்தேகமாக பார்த்தன. சிங்கள மக்கள் குறித்து தமிழ் இனவாதக் குழுக்கள் சந்தேகக் கண்கொண்டு நோக்கின. நீண்டகாலமாக முரண்பாடுகள் நீடித்தன. அந்த மோதலினால் எவருக்கும் பலன் கிடைக்கவில்லை. அந்த மோதலினால் எஞ்சியது எதுவும் இல்லை. வீடுகளை இழந்த குடும்பங்கள், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், பொருளாதாரத்தில் முழுமையான வீழ்ச்சி என்பவை தான் கிடைத்தன. உற்றார் உறவினர்களை இழக்க நேரிட்டது. வடக்கு, தெற்கு இரண்டிலும் உள்ளோர் இந்த அழிவினால் பாதிக்கப்பட்டனர். இந்த முழு அழிவின் பின்னாலும் அரசியல் தான் இருந்தது. அதிகாரத்தைப் பெறுவதற்காக சிங்கள மக்களை தூண்டிவிட்டார்கள். அதிகாரத்தைப் பெறுவதற்காக தமிழ் மக்களை தூண்டிவிட்டார்கள். இவ்வாறான இனவாத அரசியல்தான் முன்னர் காணப்பட்டது. இன்றும் ஆங்காங்கே அந்த நிலைமை இருக்கிறது. தொல்பொருள் விடயத்தை முன்வைத்து அல்லது ஒரு மத ஸ்தலத்தை காரணம் காட்டி இந்த இனவாத முரண்பாடுகளை தூண்டிவிடப் பார்க்கிறார்கள். மீண்டும் எமது நாட்டில் வடக்கிலோ தெற்கிலோ கிழக்கிலோ நாட்டின் எப்பகுதியிலும் சிங்களவரோ தமிழரோ முஸ்லிமோ எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை தருகிறேன். நாம் அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழும் நாடு தேவை. அதேபோன்று , சிறப்பான பொருளாதா நிலையுள்ள பொழுதுபோக்குள்ள மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை எமக்கு அவசியம். யாழ்ப்பாணத்தில் பாரிய விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். அதில் சில சிக்கல்கள் உருவாகியுள்ளன. அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நேற்று மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடினேன்.அதற்கான பணிகளை இந்த வருடத்திற்குள் துரிதமாக நிறைவு செய்ய உள்ளோம். பிள்ளைகளுக்கு விளையாடுவதற்காக, அவர்களுக்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பொழுதுபோக்காக வாழக்கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும். யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கொன்றை உருவாக்க திட்டமிட்டோம். ஆனால் அரசியல்வாதிகளின் ஊடாக வழக்கு தொடரப்பட்டது. யாழ்ப்பாண பிள்ளைகளுக்கு அது அவசியமானது. ஆனால் அரசியல்வாதிகள் வழக்குத் தொடர்கின்றனர். அதாவது அவர்கள் மக்களுக்கு எதிரான அரசியலை செய்கிறார்கள். நாம் மிக விரைவில் அந்த வழக்கை நிறைவுசெய்து அதே இடத்திலோ அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் அந்த உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். அதேபோன்று சுற்றுலாத்துறையின் ஊடாக பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைக்கிறது.யாழ் மாவட்டம் மிகவும் ரம்யமான கடற்கரையைக் கொண்டுள்ளது. மக்களை கவரக்கூடிய பல பிரதேசங்கள் உள்ளன. இருந்தாலும் இன்னும் பலமான சுற்றுலாத்துறை கிடையாது. பலாலி விமான நிலையத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை மறுசீரமைக்க எதிர்பார்க்கிறோம். மிக விரைவில் காங்கேசன்துறை துறைமுக பணிகளை ஆரம்பிக்க இருக்கிறோம். இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் உதவியை வழங்க உடன்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மிக முன்னேற்றகரமான சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். அதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு சிறந்த தொழில்கள் அவசியம். சிறந்த பொருளாதாரம் அவசியமானது. மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எமது பொறுப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். இங்குள்ள பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், தமது வாழ்நாளில் முதன் முறையாக ஜனாதிபதி, அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருக்கும் என கருதுகிறேன். சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஒதுக்க வேண்டும். எமது சந்ததி யுத்தம் செய்துகொண்டது. எமது சந்ததி மோதிக் கொண்டது. எமது பிள்ளைகளின் சந்ததிக்கு மோதலற்ற நாட்டை, யுத்தமில்லாத நாட்டை ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். துணிச்சலான செயற்பாட்டை இந்த பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள் மேற்கொண்டார்கள். நேரில் கண்டிறாத எம்மை, கேள்விப்படாத எம்மை நம்பி இணைந்திருக்கிறீர்கள். நாம் ஆட்சியமைக்க நீங்கள் பங்களித்திருக்கிறீர்கள். நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் மீறாமல் மென்மேலும் நம்பிக்கை ஏற்படும் வகையில் அன்பு, நெருக்கம் அதிகரிக்கும் அரசாங்கம் மற்றும் மேம்படுத்தும் தலைவர்களாக நாமிருப்போம்.நீங்கள் எம்மை விட்டும் ஒதுங்கிச் செல்லாதது போன்றே நாமும் உங்களை விட்டும் விலக மாட்டோம். நாம் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். அதற்காக அனைவரும் சகோததரத்துவத்துடனும் குறிக்கோளுடனும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன்” என ஜனாதிபதி தெரிவித்தார். வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க: “தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இன்று வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக உதவி வழங்கப்படுகிறது. நாட்டில் இரண்டு வீட்டுத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் அண்மைய சூறாவளி பேரழிவில் வீடுகளை இழந்தவர்களுக்கான வீட்டுத் திட்டம் மற்றும் இன்று தொடங்கப்படும் தேசிய வீட்டுத் திட்டம் ஆகியவை அடங்கும். இந்த தேசிய வீட்டுதிட்டம் ஐந்து அமைச்சுகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மூலம் 31,218 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வீடுகளை இழந்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளடங்கும். அதற்காக, ஒரு வீட்டிற்கு 20 இலட்சம் ரூபா வீதம் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் “யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் பத்தொன்பதாயிரம் குடும்பங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றன. இவற்றில், இந்த ஆண்டு 2,500 பேருக்கு வீடுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னர், வீட்டுத் திட்டங்களுக்குப் பெறப்பட்ட தொகை, வீடு நிர்மாணிப்பதற்குப் போதுமானதாக இல்லை. எனவே, ஜனாதிபதி உதவித் தொகையை பத்து இலட்சத்தில் இருந்து பதினைந்து இலட்சமாகவும், பின்னர் இருபது இலட்சமாகவும் அதிகரித்துள்ளார். இதனால் மக்கள் நீர் மற்றும் மின்சார வசதிகளுடன் கூடிய வீட்டை நிர்மாணிக்கக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளார். வீட்டுத் திட்டங்கள் மட்டுமல்ல, இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசாங்க சேவைகளை மக்கள் எளிதாகப் பெறக்கூடிய சூழலையும், அரச ஊழியர்கள் எளிதாகச் சேவை செய்யக்கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி கருதுகிறார். ஆண்டுதோறும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான வடக்கு மக்களின் நம்பிக்கை பலப்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் அது இன்னும் வலுவான பிணைப்பாக மாறும் என்று நம்புகிறேன்” என்று இளங்குமரன் தெரிவித்தார். வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எல்.பி. குமுதுலால் நிகழ்வில் அனைவரையும் வரவேற்று தனது கருத்துக்களை தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சண்முகநாதன் பவானந்தராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், ஜி.ஜி. பொன்னம்பலம், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் ஆகியோருடன் வட மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் எம். பிரதீபன், உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். வடக்கு, தெற்கு அல்லது கிழக்கில் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும், இனவாதத்திற்கு இடமில்லை - யாழில் ஜனாதிபதி | Virakesari.lk
  10. Published By: Digital Desk 1 16 Jan, 2026 | 04:46 PM நாட்டில் மதுபானம் அருந்துவதால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மது அருந்துவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிர்வாக பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார். அவர்களில், 34.8 சதவீதமானோர் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், அதேநேரம் 0.5 சதவீதத்திற்கும் மிகக் குறைவான அளவில் பெண்கள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, நாட்டின் மொத்த மதுபான பயன்பாடு சுமார் 10 சதவீதமாகும். எமது நாட்டில் ஒட்டுமொத்த மது பயன்பாட்டைப் பார்த்தால், அது மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அன்மைய காலகட்டத்தில், குறிப்பிடத்தக்க போக்கு சட்டவிரோத மது பயன்பாட்டின் கூர்மையான அதிகரிப்பு ஆகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, சுமார் 10சதவீத மது பயன்பாடு சட்டவிரோதமானது. சட்டவிரோத மதுவால் 5-6 பேர் உயிரிப்புகள் பவிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், இன்று, வியாழக்கிகிழமை மது தினமும் சுமார் 50 பேரைக் கொல்வதாவவும். அவர் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துவதால் நாளொன்றுக்கு 50 பேர் உயிரிழப்பு! | Virakesari.lk
  11. Today
  12. 16 Jan, 2026 | 04:57 PM வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சென்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (16) வழிபாடுகளில் ஈடுபட்டார். நயினாதீவுக்கு உலங்கு வானூர்தி மூலம் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு, விகாராதிபதியிடமும் ஆசிகளை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்குச் சென்று ஜனாதிபதி வழிபாடு | Virakesari.lk
  13. 16 Jan, 2026 | 05:08 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டார். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை தொழில் நிமித்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்து வருகிறார். இந்த நிலையில் தந்தை அவரது 4 வயது 8 மாதம் கொண்ட மகளிடம் மீது பாலியல் சேட்டை விடுத்துள்ளதாக மகள், தாயாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து தாயார் பொலிஸ் நிலையம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (15) முறைப்பாடு செய்ததையடுத்து தந்தை கைது செய்யப்பட்டதுடன் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரை இன்று வெள்ளிக்கிழமை (16) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 29ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பில் 4 வயது மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த தந்தை! | Virakesari.lk
  14. Published By: Digital Desk 1 16 Jan, 2026 | 04:23 PM 2026 கொழும்பு நவம் மகா பெரஹெராவிற்கான சர்வதேச விளம்பரத் திட்டத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் கொழும்பு கங்காராம விகாரை இணைந்து ஆரம்பிக்கவுள்ளன. உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் மதிக்கப்படும் மத மற்றும் கலாச்சார விழாவான கொழும்பு நவம் மகா பெரஹெரா சர்வதேச கலாச்சார விழாவாகவும், கொழும்பு நகரத்தை சுற்றுலா மற்றும் கலாச்சார தலமாகவும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஏர்பஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ் A320neo விமானம், இலங்கையின் கலாச்சார பாரம்பரியத்தையும் பெரஹெராவின் சிறப்பையும் வெளிப்படுத்தும் ஒரு தூதராக செயற்படும். அலங்கரிக்கப்பட்ட இந்த விமானத்தின் மூலம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதன் சர்வதேச இணைப்புகள் முழுவதும் நவம் மகா பெரஹெராவின் புகழ், மகிமை மற்றும் கலாச்சார அடையாளத்தை கொண்டு செல்லும் எனவும், இந்த முயற்சி நவம் மகா பெரஹெராவை ஒரு புனிதமான பௌத்த ஊர்வலமாக மட்டுமல்லாமல், கலாச்சார மற்றும் சுற்றுலா தலமாகவும் நாட்டை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்காராம விகாரையால் ஏற்பாடு செய்யப்படும் நவம் மகா பெரஹெரா, அதன் வரலாற்று முக்கியத்துவம், மத மற்றும் கலாச்சார மகத்துவத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதன் நிறுவன கட்டமைப்பின் அனைத்து மட்டங்களிலும் ஆதரவை வழங்கியுள்ளது. ஏர்பஸ் A320neo விமானம், நகரத்திலிருந்து நகரத்திற்கு, கலாச்சாரத்திலிருந்து கலாச்சாரத்திற்குப் பறந்து, கங்காராம விகாரை மற்றும் நவம் மகா பெரஹெராவின் செய்திகளை உலகிற்கு எடுத்துச் செல்வதாகவும், இதன் மூலம் இலங்கையின் நீண்டகால கலாச்சார விழுமியங்களை உலகிற்குக் கொண்டு செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது இலங்கையை சர்வதேச அளவில் மேம்படுத்துவதோடு, நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார பெருமையின் இடமாக நாட்டின் பிம்பத்தை வலுப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னெடுத்துள்ள பாரிய திட்டம்! | Virakesari.lk
  15. 16 Jan, 2026 | 06:38 PM மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் உள்ள மதுபானசாலையில் மது அருந்திய கும்பலிடம் பணம் கேட்ட அதன் முகாமையாளரின் தலையில் மதுபான போத்தலினால் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை (16) பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வசதி கொண்ட மதுபானசாலையில் கடந்த 9ஆம் திகதி இரவு மது அருந்துவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த கும்பல் சென்று மதுபானம் அருந்தியுள்ளது. பின்னர், அருந்திய பானத்துக்கான பணத்தை, அதன் முகாமையாளர் கேட்டதற்கு, அந்த நபர்கள் முகாமையாளரின் அறைக்குள் சென்று, முகாமையாளரின் தலையை மதுபான போத்தலைக் கொண்டு தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் தேடி வந்த நிலையில் தலைமறைவாகியிருந்த ஒருவரை இன்று கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர். மது அருந்தியதற்காக பணம் அறவிட்ட மதுபானசாலை முகாமையாளரை தாக்கிய கும்பல் ; ஒருவர் கைது ; இருவர் தலைமறைவு | Virakesari.lk
  16. Nitesh Samuel not out 77 101 163 0 0 76.23 கந்தப்பு இவர் அடித்த ஓட்டம்களில் 4 6 ஒன்றும் இல்லையே? ஆளுக்கு முட்டைக்கோப்பி கொடுக்க வேண்டும்.
  17. ஈழவம்சாவளி தமிழன் நித்தீஸ் சாமுவேல் இன்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவின் முதலாவது போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 101 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ஒட்டங்களை பெற்றார்
  18. பாலியல் குற்றவாளி என சந்தேகித்து தவறான நபரை தாக்கி கொலைசெய்த 16 வயது இளைஞன் கைது! கென்ட் நகரில் உள்ள கடல் பகுதியில் (Alexander Cashford) அலெக்சாண்டர் காஷ்ஃபோர்ட் என்ற 49 வயது நபர், மூன்று பதின்ம வயது இளைஞர்களால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை, இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்று தவறாகக் கருதி, இளைஞர்கள் அவரை ஒரு போலிப் பெயரில் குறுஞ்செய்திகள் மூலம் கடற்கரைக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அவரைத் துரத்திச் சென்று போத்தல்கள் மற்றும் கற்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியதில் அவருக்குத் தலையில் பலத்த காயங்களும் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்தை ஒரு சிறுமி காணொளியாக பதிவு செய்ததோடு, தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த வழக்கு, தன்னிச்சையான நீதி என்ற பெயரில் ஒரு குழு முன்னெடுத்த வன்முறையையும் அதன் கோரமான முடிவையும் சுட்டிக்காட்டுகிறது. இச்சம்பவம் ஒரு தவறான புரிதலால் உருவான திட்டமிடப்பட்ட கொலை வழக்காக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1460141
  19. சுகாதாரமற்ற இடங்களுக்கு போகும் போது உங்கள் நலனிலும் கவனம் எடுங்கள் ஏராளன்.
  20. கடலில் மூழ்கும் நிலையில் இலங்கையில் தமிழர்கள். (தமிழ் பேசுபவர்கள் அல்ல). சிறு துரும்பு கிடைத்தாலும் பற்றிக்கொள்ளவே முயல்வார்கள்.
  21. மோகன் அவர்களே! இதுவும் கடந்துபோகும் என்று சொல்வார்கள். ஆனால் வாழ்நாளில் கடக்கவே முடியாத துன்பங்களும் உண்டென்பதை மறுக்கவே முடியாது. அத்தகைய ஒரு துன்பம் உங்களையும் சூழ்ந்துவிட்டதை எண்ணிக் கலங்குகிறோம். ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் உங்களுக்கு ஆறுதல்கூற வார்த்தைகள் இல்லை. தமிழினம் அழிவுகளைச் சந்தித்துவந்த வேளையில் யாழ்களத்தை ஆரம்பித்து எங்கள் மனதுயருக்கு ஆறுதல்தந்து ஆற்றுவதற்கு வந்த ஒருவராகவே உங்களை எங்கள் மனங்களில் பதியவைத்தோம். அந்தப்பதிவு அழியாது. என்றும் உங்களுக்கு ஆதரவு தரவே மனம் விரும்புகிறது. ஆறுதல்கூற முடியாத உங்கள் துணைவியாரின் இழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்... அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!!🙏
  22. பாவம் மரியா கிடைச்சதை பிச்சை பொட்டிட்டு வெளிய வந்து செய்தியார்களை சந்தித்து அதை பிச்சை போட்டதை பெருமையாக சொல்லிக்கொண்டிருக்க வெள்ளை மாளிகைக்குள் நடந்த பத்திரையாளர் சந்திப்பில் மரியாயாவை மரியாதை குறைவாக சொன்னதை பார்க்க ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வந்தது “ பார்த்திரம் அறிந்து பிச்சை போடு”
  23. ஆழ்ந்த இரங்கல்😥 மோகன் அண்ணாவுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இந்த கடினமான நேரத்தில் கடவுள் ஆற்றலும் துணையும் தந்து தாங்கட்டும்
  24. கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 02 மதுவில் கொஞ்சம் பலவீனமாக இருந்த அவன், கண்மணியைச் சரியாகக் கவனிக்கவில்லை. என்றாலும் எதோ தானோ என்று குடும்பவாழ்வு ஓடியது. ஒருநாள், உண்மை பெரும் சத்தத்துடன் வரவில்லை. அது சுலபமாக வந்தது. அவனுடைய பூட்டப்படாத கைப்பேசி அவள் கைகளில் சிக்கியது. அடிக்கடி தோன்றும் ஒரு பெயர். வேறொரு பெண். வேறொரு வாழ்க்கை. அதில் அவனின் இரட்டை வாழ்வு (Double Life) வெளிச்சத்துக்கு வந்தது. கண்மணி அழவில்லை. கெஞ்சவில்லை. ஒரு முடிவு மட்டும் அவளுக்கு வந்தது. இது தவறு அல்ல. இது திட்டமிட்ட புறக்கணிப்பு. அது துரோகம் மட்டும் அல்ல — கண்மணிக்கு அவள் வாழ்ந்த திருமணம் ஒரு பொய்யென்று உறுதி செய்த தருணம். அவள் துரோகத்தையும் அதனால் மனவேதனையையும் அடைந்தாள். அவளது இளமைக் கனவு சுக்குநூறாகியது. அதிர்ச்சி அடைந்தாள், திருமண வாழ்வை வெறுத்தாள். ஆனால், அவள் கோபப்படவில்லை. அவள் கத்தவில்லை. அவள் விழித்தாள். “பொறுத்துக்கொள்” என்று சொன்ன உலகை அவள் இனி கேட்கவில்லை. “பெண்ணாக இருந்தால் சகிக்க வேண்டும்” என்ற பொய்யை அவள் உடைத்தாள். விவாகரத்து வழக்கறிஞர் மென்மையாகப் பேசினார். “குழந்தைக்காக மீண்டும் யோசியுங்கள்.” நீதிபதி நடுநிலையாகக் கேட்டார். ஆனால் கேள்விகளில் சமூக தீர்ப்பு மறைந்திருந்தது. உறவினர்கள் சொன்னார்கள்: “பெண் பொறுத்துக் கொள்ள வேண்டும்.” கண்மணி ஒருமுறை மட்டும் சொன்னாள்: “நான் திருமணத்திலிருந்து தப்பவில்லை. பொய்யிலிருந்து வெளியேறுகிறேன்.” விவாகரத்து கிடைத்தது. வெளியில் யாரும் வாழ்த்தவில்லை. பெண்கள் பெற்ற சுதந்திரம் பொதுவாகக் கொண்டாடப்படுவதில்லை. உண்மையில் விவாகரத்து கண்மணிக்குத் தோல்வி அல்ல— அது மூச்சை மீண்டும் பெறும் தருணம். கண்மணி ஒரு கணவனை விட்டு வரவில்லை; அவள் தன்னைச் சிதைத்த வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாள். எனக்கு மீண்டும் காதல் அல்லது திருமணம் வேண்டாம். இந்த வகையான வலியிலிருந்து நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள தனிமைதான் ஒரே வழி என்று, தன் பெற்றோரிடம் பிறந்த கைக் குழந்தையுடன் திரும்பினாள். அவளுக்கு உழைப்பு இருந்தது. அந்த உழைப்பு அவளும் மகளும் வாழப் போதுமாக இருந்தது. கண்மணியின் கையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை. வீடும் அதே வாசனை. ஆனால் பார்வைகள், எதிர்பார்ப்புக்கள் மாறின. பெருமைக்கு பதிலாக பரிதாபம் வந்தது. பாசத்திற்குப் பதிலாக அறிவுரை வந்தது. [Pity replaced pride. Advice replaced affection.] அவளுடைய அம்மா அண்டை வீட்டாரைப் பற்றி கவலைப்பட்டார். அவளுடைய தந்தை எதிர்காலப் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்டார். கண்மணி ஒரே ஒரு விடயத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டாள் - தன் மகள் ஒருபோதும் உயிர்வாழ்வதை காதலோடு, அன்போடு குழப்பக்கூடாது [her daughter should never confuse survival with love.]. இரவில், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு, அவள் கிசுகிசுத்தாள்: நீ என்னிடமிருந்து மௌனத்தைக் கற்றுக்கொள்ள மாட்டாய் [You will not learn silence from me]. அக்கம்பக்கத்தினர் பார்த்தார்கள். சிலர் பரிதாபப்பட்டனர். சிலர் தீர்ப்பளித்தனர். சிலர் அமைதியாக சரிப்பண்ணி அவனுடன் மீண்டும் இருக்குமாறு அறிவுறுத்தினர். ஒரு உறவினர் மெதுவாக, “குழந்தைக்காக, நீங்கள் சரிப்பண்ணி வாழ்ந்து இருக்க வேண்டும்” என்றார். ஆனால், கண்மணி அமைதியாக, “என் குழந்தைக்காக, நான் சரிசெய்ய மாட்டேன்” ஏன் எனறால், அப்படியான தந்தையிடம் எந்த நல்ல பழக்கவழக்கங்களையோ, பாசத்தையோ குழந்தை காணாது, வெறுப்பைத் தவிர என்றாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1997 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 02] / எனது அறிவார்ந்த தேடல்: 1413 https://www.facebook.com/groups/978753388866632/posts/33310717181910167/?
  25. “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்! 16 Jan, 2026 | 12:48 PM வெனிசுவெலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவைச் சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததோடு, மரியா கொரினா மச்சாடோவுக்கு தனது நன்றியினையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை (15) வெள்ளை மாளிகைக்கு சென்று ட்ரம்பை சந்தித்த வெனிசுவெலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் பெற்ற 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுப் பதக்கத்தை ட்ரம்பிடம் வழங்கினார். தனது நாட்டின் சுதந்திரத்துக்கான ட்ரம்பின் தனித்துவமான அர்ப்பணிப்புக்கு, தான் அளிக்கும் கௌரவம் என்று கூறிய மரியா கொரினா மச்சாடோவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்ரம்ப் சமூக ஊடகத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். “மரியா கொரினா மச்சாடோ, பலவற்றைக் கடந்து வந்த ஒரு அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா!” என்றும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்த நோபல் பரிசுக்காக உலகில் இடம்பெறும் போர்களையெல்லாம் நிறுத்தியதாக ட்ரம்ப் வெற்றி முழக்கமிட்டதாக சர்வதேச ஊடகங்களும் தெரிவித்திருந்தன. எனினும், 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப் பெறாத காரணத்தினாலும் அந்தப் பரிசை மரியா பெற்றதனாலும் தனது அதிருப்தியை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின்னர், வெனிசுவெலா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், ட்ரம்பின் ஆலோசனைப்படி அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதன் பின்னர், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், ட்ரம்பின் செயலுக்காக, தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு வழங்கி கௌரவிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். எனினும், ஒருவர் பெற்ற நோபல் பரிசை இன்னொருவருக்கு கைமாற்ற முடியாது என நோபல் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே நேற்று மரியா, தனது அமைதிக்கான நோபல் பரிசை, வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தபோது அவருக்கு வழங்கியுள்ளார். Virakesari.lk“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ;...“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.