Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல் ஆரம்பம் Published By: Vishnu 13 Mar, 2026 | 05:02 AM செம்மணி மனிதப் புதைகுழியில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியன்று மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதியை வியாழக்கிழமை (12) மாலை யாழ்ப்பாணம் நீதிவான் உள்ளிட்ட அகழ்வு பணிகளில் ஈடுபடும் தரப்பினர் நேரில் கள விஜயம் செய்து பார்வையிட்டனர். இதன்போது அகழ்வு பகுதியில் நீரினுடைய அளவு மேற்பார்வையயிடப்பட்டு குறித்த நீரை அகற்றுகின்ற நடவடிக்கை மார்ச் மாதம் 28ஆம் திகதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்ததுடன் அகழ்வு பணிக்கான தற்போதைய திகதியாக ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அகழ்வு பணிகள் தொடர்பான வழக்கின் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஏப்ரல் மாதம் 8 ஆம் திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/240833
  3. ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்க அனுமதி Mar 13, 2026 - 06:41 AM ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, தற்போது கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்ய பல நாடுகளுக்கு 30 நாள் உரிமத்தை அமெரிக்கா வழங்கியுள்ளது நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் போரைத் தொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, அமெரிக்கா தனது மூலோபாய பெற்றோலிய கையிருப்பில் இருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை விடுவிக்கும் என்று அமெரிக்க எரிசக்தி துறை அறிவித்த நிலையில், குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிக உயர்வு ஒரு குறுகிய காலத்திற்கான இடையூறு மட்டுமே. இது நீண்ட கால அடிப்படையில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmo78u590001356p0iafwgbx
  4. “காயங்களைத் தாண்டி” காபி மேசை நூல் வெளியீடு – இலங்கையில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சி Published By: Vishnu 13 Mar, 2026 | 01:30 AM Alliance Development Trust (ADT) நிறுவனம் தயாரித்த “Beyond the Scars” (காயங்களைத் தாண்டி) என்ற காபி மேசை நூல், கொழும்பு நகர மையத்தில் அமைந்துள்ள Courtyard by Marriott Colombo City Centre ஹோட்டலின் Sapphire Hall மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் வளர்ச்சி கூட்டாளர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் முக்கிய அம்சமாக, சுய உதவி குழு உறுப்பினர்களான இரண்டு பெண்கள் தங்களது உண்மை வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இவர்களில் ஒருவரின் கணவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்; அவர் மொரட்டுவை, எகொடாவுயானா பகுதியில் நடைபெறும் Egodauyana சுய உதவி குழு கூட்டங்களை வழிநடத்தி வருகிறார். தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் துணையாக இருந்து எதிர்கொண்ட அனுபவங்களை அவர் பகிர்ந்தார். மற்றொரு உறுப்பினர் நேரடியாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்; நரம்பு சேதம் மற்றும் மன அழுத்தத்தையும் எதிர்கொண்டுள்ளார். தன்னுடைய போராட்டங்களையும் மீட்பு பயணத்தையும் அவர் தைரியமாக பகிர்ந்தார். இவர்களின் உறுதி, தைரியம் மற்றும் விடாமுயற்சி நிறைந்த அனுபவங்கள் நிகழ்வில் கலந்து கொண்டோரின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த நிகழ்வில், இவ்விரு சுய உதவி குழு உறுப்பினர்களும் முதன்மை விருந்தினர்களாக கௌரவிக்கப்பட்டனர். NCEASL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கோட்ப்ரி யோகாராஜா அவர்களால் காபி மேசை நூலின் முதல் பிரதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த வெளியீடு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உறுதி, மரியாதை மற்றும் நம்பிக்கை நிறைந்த கதைகளை வெளிப்படுத்துவதோடு, அவர்கள் இன்னும் எதிர்கொள்ளும் சமூக குற்றப்பரப்பு மற்றும் பாகுபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்த காபி மேசை நூல் LKR 6,000 என்ற விலையில் வாங்குவதற்கு கிடைக்கப்பெற்றது. தேசிய கணக்கீடுகளின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 1,300 புதிய தொழுநோய் சம்பவங்கள் பதிவாகின்றன. உடல் பாதிப்புகளுக்கு மேலாக சமூக புறக்கணிப்பும் பலருக்கு இன்னும் சவாலாக உள்ளது. நிகழ்வில் உரையாற்றிய ADT பிரதிநிதிகள், தொழுநோயை எதிர்கொள்ள மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல், சமூக ஆதரவு, விழிப்புணர்வு மற்றும் உட்சேர்க்கை முக்கியமானவை என வலியுறுத்தினர். நிகழ்வின் இறுதியில், பங்கேற்பாளர்கள் ADT நிறுவனத்தின் பணிக்கு Goodwill Ambassadors ஆக இணைந்து விழிப்புணர்வு முயற்சிகளை ஆதரிக்க அழைக்கப்பட்டனர். பலர் இதில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்தனர். “தொழுநோய் என்பது சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு சமூக நீதி தொடர்பான பிரச்சினையும் ஆகும். இந்த வெளியீட்டின் மூலம் குற்றப்பரப்பையும் பாகுபாடுகளையும் அனுபவித்தவர்களின் குரல்களையும் கதைகளையும் சமூகத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்,” என ADT பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்த காபி மேசை நூல், உண்மை வாழ்க்கை கதைகள், புகைப்படங்கள் மற்றும் அனுபவங்களை இணைத்து, சமூகங்களில் அதிகமான புரிதலும் கருணையும் உருவாக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு விருந்தினர்கள் இடையிலான கலந்துரையாடலுடன் நிறைவடைந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வலுப்படுத்தவும், தொழுநோயற்ற இலங்கை என்ற இலக்கை அடையவும் கூட்டுப்பணியை மேம்படுத்துவது குறித்து கருத்துகள் பகிரப்பட்டன. Alliance Development Trust (ADT) பற்றி Alliance Development Trust என்பது இலங்கையில் செயல்படும் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கிய அபிவிருத்தி முயற்சிகள் மூலம் பாதிக்கப்படும் சமூகங்களை வலுப்படுத்துவதற்காக ADT பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. https://www.virakesari.lk/article/240831 https://www.adtlanka.org/
  5. Today
  6. மூஞ்சுரூ தான் போகவே வழிய காணோம்.. இதுல விளக்கு மாத்தை காவி திரிஞ்சதாம்
  7. வாய்க்குள் இறங்கும் கத்தி ரங்கநாதர் கோயில் - சிறி ரங்கம்
  8. இந்த றம்பளரில் தேத்தண்ணி / கொப்பி உறிஞ்சி குடித்த அனுபவம் உண்டா.. ரெல் மீ..
  9. பொறுமை இருந்தால் சாப்பிட உட்காரவும்... இல்லையென்றால் கிளம்பி போய்ட்டே இருக்கவும் ..
  10. பாசி பருப்பு பூரி சாம்பார்.. உருளை கிழங்கை தவிர்க்க விரும்புபவர்களுக்கு ..
  11. பால் நிலவு நேரம்.. ( இனி அந்த கால கிளுகிளுப்பான பாடல்கள் பதிவேற்றம் செய்யப்படும் ) படம் : அன்பு ரோசா ( 1975 ) இசை: சங்கர் - கணேசு வரிகள்:கண்ணதாசன் பாடியோர்: SPB & P சுசீலா
  12. பெண்ணல்ல நீ ஒரு.. படம் : சொந்தமடி நீ எனக்கு ( 1977 ) பாடியோர் : ஜெயசந்திரன் & சுசீலா இசை : V குமார்
  13. ஏற்கெனவே கடைஞ்சா கூறியதும் இதுவே. ஆப்கானிஸ்தானில் நடந்ததும் இதுவே. போர் முடிய அமெரிக்கர்கள், அதன் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று பாப்போம்! இவரே ஆட்சியை இழக்கும் சந்தர்ப்பமும் ஏற்படலாம்.
  14. இந்தியாவே பெற்றோலுக்காக தள்ளாடுது. ரம்பைக் குசிப்படுத் ரசியாவை கையைவிட்டதன் பலன்.
  15. ஈரானை ஆட்சிமாற்ற போய் மத்திய கிழக்கையும் கை விடுவதோ தெரியவில்லை. மக்களின் கிளர்ச்சியைப் பார்த்து தலைமையை அழித்துவிட்டால் ஆட்சி மாறிவிடும் என்று போட்ட கணக்கு தப்பாகிவிட்டது.
  16. இந்தப்போரில், சீனா ஈரானுக்கு ஆதரவாக நேரடியாக இறங்குமென அமெரிக்கா கணக்கு போட்டிருக்கலாம், அதே நேரம் வெனிசூலாவைப்போல் ஈரானையும் தனது கடுப்பாட்டுக்குள் இலகுவாக கொண்டுவரலாமென கணக்குப்போட்டு போரை தொடங்கியிருக்கும். இப்போ, போரை தொடரவும் முடியாமல், முடிக்கவும் முடியாமல் சொதப்புது. ட்ரம்பின் ஆட்டம் முடிவுக்கு வரும் நேரமிது. ஈரானிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால், இந்தப்போரில் பாவித்திருக்குமே, இப்போ இல்லாமல் எப்போ பாவிக்கப்போகிறது என்று அமெரிக்காதான் நிரூபிக்க வேண்டும். அணு ஆயுதம் இருக்கிறது, மக்களை வதைக்கிறது என்று பொய் காரணங்களை சாட்டி போர் தொடுத்த ட்ரம்ப், அவர்களது ஆட்சி பற்றியோ, மதம் பற்றியோ அக்கறையில்லை, அவர்கள் எங்களோடு உடன்பட்டு ஆட்சி நடத்தவேண்டுமென்று உண்மையை கூறி விட்டார். நாங்கள் தான் இன்னும் அணு ஆயுதம் பற்றி கதைக்கிறோம். எல்லோருக்கும் நானே வல்லரசு என்கிற தலைக்கனமே ஆழ் கிணறில் தள்ளப்போகிறது. உலகை இருளிலும் வறுமையிலும் தள்ளியதே இப்போரின் முடிவு!
  17. Yesterday
  18. ஈரான் ஹோர்மூஸ் கடல்வழி பாதையில் கண்ணி வெடிகள் வைத்தால் , ஈரான் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அழிவை எதிர்கொள்ளும் : ட்ரம்ப் ! அதாவது அணுகுண்டு தாக்குதல் கூட நடத்துவோம் என்று மறைமுகமாக சொல்றார். அதுசரி , ஈரான் மீது ஏன் தாக்குதல் நடத்தினீங்க? ட்ரம்ப்: அது வந்து அவங்க அணு ஆயுதம் செய்யுறாங்க . அதனால் சூழல் மாசடைந்து உலகம் பாதிக்கப்படும் அதுதான். இந்த உலகம் விசித்திரமானது ! இந்த ஐ.நா சபையில் சிறுவர்களுக்கு என்று ஏதோ ஒரு பிரிவு இருக்குதே , அது ஈரானில் ஒரு பாடசாலையில் அத்தனை மாணவிகள் உயிரிழந்ததுக்கு ஏதாவது கருத்து சொல்லிச்சா ? இந்த உலகம் விசித்திரமானது! அமெரிக்காவை நம்பியதற்கு மத்தியகிழக்கு நாடுகள் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாலும் , அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையாவது கூறினார்களா ? அவர்கள் அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்க ரெடி . ஆனால் ஈரான் முன்னேறி விடக்கூடாது . காரணம் மத்திய கிழக்கில் புத்தி ஜீவிகளை அதிகம் கொண்ட நாடு ஈரான். குழப்பங்கள் அதிகம் ஏற்படாமல் விட்டால் , ஈரான் அறிவியலில் தங்களை வென்று விடுவார்கள் என்ற பயம் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு. அப்படி ஈரான் முன்னேற கூடாது என்று ஏன் நினைக்கிறார் என்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அதை சொன்னால் இந்த பதிவை மடை மாற்றி விடுவார்கள். இப்போதைய நிலையில் நாம் தனிப்பட்ட நபர்களாக நம்மை பார்த்துக்கொள்வதும் , பெற்றோல் புல் டேங் அடித்து வைப்பதும் , சாப்பாடு தட்டுப்பாடு வந்தால் சமாளிக்கூடிய அளவு ஏற்பாடு செய்து வைப்பதுமே செய்யக்கூடியவை. செய்திகள் வாசிக்கும் , தொகுக்கும் ஆர்வம் காரணமாக இரு பக்க செய்திகளை ஆராய்ந்து போலி செய்திகளை ஒதுக்கி உண்மையான செய்திகளை எழுதினால் சண்டைக்கு வருகிறார்கள். நேற்று அப்படி சண்டை பிடித்த ஏராளமானோரை ப்ளொக் பண்ணினேன். அதற்கு முன் அவர்களின் புரோபைலை பார்த்தால் அநேகமானோர் மத்தியகிழக்கு நாட்டில் வேலை செய்வோர். ஈரான் அடிக்கும் குண்டு அவர்கள் தலைமீது விழுந்து விடுமோ என்று ஊரில் உள்ள அவர்கள் வீட்டில் குடும்பத்தார் பயந்துகொண்டு இருப்பார்கள். அவர்களால் வெளிப்படையாக அவர்கள் வாழும் நாட்டை திட்ட முடியாது. அந்த ஆதங்கத்தை என்னைப் போன்றோரை திட்டி தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த யுத்தத்தால் , யாராவது வந்து நான் வசிக்கும் இடத்தில் குண்டு போட்டால் மட்டுமே எனக்கு பாதிப்பு வரும். மற்றப்படி எனக்கு பெரிய பாதிப்பு இல்லை. பொருட்கள் விலை உயர்வோ , பெற்றோல் விலை உயர்வோ என்னைப் பாதிக்கப்போவதில்லை. ஆனால் சின்ன விலை உயர்வைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத பெருமளவு மக்கள் தொகை உள்ளது. உலகம் பூராக அப்படியொரு மக்கள் கூட்டம் உள்ளது. அந்த வீட்டு பிள்ளைகளை நினைத்தால்தான் பாவம். யுத்தம் காரணமாக அமெரிக்கா பிள்ளை இறக்காது. இஸ்ரேல் மீது எத்தனை குண்டு போட்டாலும் , அந்த நாட்டு பிள்ளைகள் நிலக்கீழ் அறையில் பாதுகாப்பாக இருக்கும். இந்த யுத்தத்தில் ஈரான் எவ்வளவு பதிலடி கொடுத்தாலும் இஸ்ரேலில் ஒரு குழந்தையாவது இறந்ததா ? ஆனால் ஈரானில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளாவது இறந்திருக்கும். காசாவில் எத்தனை குழந்தைகள் இறந்தன? ஒரு காலத்தில் யுத்தம் என்றால் யுத்தப் பிரகடனம் செய்து குழந்தைகள் , முதியோர்களை எல்லாம் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடு செய்துதான் யுத்தம் நடக்கும்..அரச காலத்தில் இருந்த அந்த நாகரீகம் கூட இப்போது இல்லை. இதையெல்லாம் நாம் மாற்ற முடியாது. உலகத்தின் நியதி இதுதான். அமெரிக்கா அடி வாங்குது , இஸ்ரேல் அடிவாங்குது என்று சந்தோசப்பட என்னால் முடியாததுக்கு காரணம் அதுதான். மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் தாக்குதலால் வந்த இழப்பு அந்த நாட்டு தலைவர்கள் , அரசர்களின் பொக்கட் மணி. அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் செலவு என்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள முதல் 10 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2200 பில்லியன். அதாவது அமெரிக்காவின் பத்து பணக்காரர்களின் பொருளாதார பலம் இலங்கை நாட்டின் மொத்த உற்பத்தியைவிட 25 மடங்கு அதிகம். இந்த நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை திருப்பி அடிக்க பயமென்றால் ஆட்சியை என்னிடம் தாருங்கள் என்று சஜித் காமெடி பண்ணிட்டு இருக்கார். நாமும் அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் நட்டம் என்று சந்தோசப் பட்டுடுட்டு இருக்கம். யுத்தம் முடிய ட்ரம்ப் வந்து இலங்கை பொருட்களுக்கு இறக்குமதி வரியை கூட்டப் போறேன் என்றால் , உங்கட வரி காசில் இலங்கை அரசில் இருந்து கொஞ்சம் பேர் போய் ட்ரம்பின் காலில்தான் விழனும் -whatsapp-
  19. நான் அறிந்த வரையில் இரு பெரு மதங்கள் உருவாகிய பூமியில் என்றும் கலவரமும் இரத்தக்களரியும் தான்.....
  20. ஹலோ ஸ்ரீலங்கா....... கிந்தியா இருக்க பயமேன் 🤣
  21. மணி. இதைத்தான் கழுத்து பிடி என்பது. இதைத்தான் சொல்வது இருந்ததையும் கெடுத்தானாம் ஆண்டி என்று. ஏற்கனவே கொரோனா,உக்ரேன் போர் என்பவனவற்றால் பாரிய சறுக்கல்.இப்போது இது புதிய பிரச்சனை. இந்த மேற்குலகு 50 வருடங்களுக்கு முன்னர் தாம் இருந்த நினைப்பில் இன்றும் இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அடிமையாக்கப்பட்டவர்களோ அசுர வேகத்தில் வளர்ந்து தம்மை எதிர்ப்பவர்களை திருப்பி தாக்க ஆரம்பித்து விட்டார்கள். ஈரானின் பூகோளம் நன்றாகவே அவர்களுக்கு கை கொடுக்கின்றது. சிந்திக்க தவறியது அவசர புத்தி. இன்றைய அவசர வெற்றி நாளைய அழிவிற்கு சமம். இதுதான் இன்றைய உலகில் நடக்கின்றது.
  22. வட பகுதியில் போதை பிரச்சனைகள் வர முன்பே இப்படி குடும்பத்துக்குள்ளான பிரச்சனைகளும்,வெட்டுக்கொத்துகளும்,கொலைகளும் நடந்துள்ளன. பிள்ளைகள் திருமணம் செய்து தனிக்குடித்தனம் போன பின்...... அவர்களாச்சு அவர்கள் குடும்பமாச்சு என தாய் தகப்பன் வாயை மூடிக்கொண்டு இருக்கணும். பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைக்குள் தாய் தகப்பன் மூக்கை நுழைத்து நாட்டாண்மை பண்ணக்கூடாது.
  23. என்றும் எதிலும் எங்கும்... போர் எனும் கிடாரத்தை தலையில்.. தூக்கி வைத்துக்கொண்டு.. தாம் அறிவாளிகள் என்பர்- தாம் விஞ்ஞானிகள் என்பர்- தாம் அதை கண்டு பிடித்தோம் என்பர்- தாம் இதை கண்டு பிடித்தாம் என்பர்- தாம் எல்லூருடனும் நேயம் மிக்கவர் என்பர்- தாம் மனித நேயம் கொண்டவர்கள் என்பர்- தாம் பட்டினிக்கு உணவு கொடுக்கின்றோம் என்பர்- நெஞ்சில் வஞ்சத்தை வைத்துக்கொண்டு.......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.