Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala, which formed an integral part of ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document: shirini
  3. புதிய இணைப்பு கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்கு செல்லவிருந்த விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அதன் விமானி சாமர்த்தியமாக கையாண்டுள்ளார். பயணத்தை தொடங்கிய சிறு பொழுதுகளிலேயே, விமானத்தின் சக்கரங்களை உள்ளிழுக்கும் அமைப்பில் (Landing Gear) சிக்கல் ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்துள்ளார். அதன் பின்னர், விமானத்தைத் தொடர்ந்து இயக்குவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த விமானி, உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரியுள்ளார். இருப்பினும், முழுப் பயணத்திற்கும் தேவையான எரிபொருளுடன் இருந்த விமானம், அதன் அதிகப்படியான எடையுடன் தரையிறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் உடனடியாகத் தரையிறக்க முடியாமல் போயுள்ளது. அதனை தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, சிலாபம் கடல் பகுதிக்கு மேலே விமானத்தை வட்ட பாதையில் செயற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக நடுவானிலேயே பெருமளவு எரிபொருள் கடலில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் முழு அவசரக்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எடையைக் குறைத்துக்கொண்ட அந்த விமானம் நள்ளிரவில் மிகவும் லாவகமாகப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 202 பயணிகள் மற்றும் 10 பணிக்குழுவினர் என யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் விமானம் தரையிறங்கியுள்ளது. ஆபத்தான நேரத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானியின் நிதானமும், தரைக் கட்டுப்பாட்டு அறையின் துரித நடவடிக்கையும் இவ்விடத்தில் பாராட்டத்தக்கது. இரண்டாம் இணைப்பு கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அதிகாலை 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதலாம் இணைப்பு துருக்கிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விமானம், தரையிறங்கும் கியரில் செயலிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்கத் தயாராக உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இஸ்தான்புல்லுக்குச் செல்லவிருந்த TK 733 விமானம், 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களை ஏற்றி கொண்டு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதன் தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார்நிலையில் இதனை தொடர்ந்து, தரையிறங்கும் போது ஏற்படும் அபாயங்களைக் குறைக்க விமானி கடலுக்கு மேலே ஒரு முன்னெச்சரிக்கை எரிபொருள் நிரப்புதலை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்விடயம் தொடர்பிலான அறிக்கை வெளியான நேரத்தில், விமானம் சிலாபம் பகுதிக்கு மேலே சுமார் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்துள்ளது. மேலும், விமானம் இன்று நள்ளிரவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தீயணைப்பு வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் ஓடுபாதையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Tamilwinநள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை கா...புதிய இணைப்புகொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்கு செல்லவிருந்த விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட...
  4. Today
  5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நிழலி
  6. பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்ப்பதற்காக மனிதாபிமானப்போர் புரிந்து மக்களை மீட்டோம் என்று மார் தட்டி விழா எடுத்தார்கள். அந்தமக்களுக்கு மாற்றுத்துணி இல்லை, அடுத்தவேளை உணவு இல்லை, கழிப்பிட வசதியில்லை, உறங்க கூரையில்லை, மந்தைகள் போல் வெளியில் அடைத்தார்கள், அந்த மக்கள் அனுபவித்த சுதந்திரம் கூட இல்லை. அவர்களை அவர்கள் சொந்த இடத்தில வாழ விடாமல் துரத்துவதற்கு அவர்களது வாழ்விடங்களை சூறையாடுவதற்கும் அடுத்த வேளைக்கு அடுத்தவர் கையை எதிர்பாத்து அடிமையாக்கியதே இவர்கள் செய்த சாதனை. அவர்களை அவர்கள் இடத்தில வாழுவதற்கு வழிவகை செய்வதே அவர்களுக்கு செய்யும் உதவியாக இருந்திருக்கும். தங்களது இரத்தம் வியர்வை சிந்தி காட்டை மேடாக்கி வளமாக்கியவர்கள் அவர்கள். அவர்கள், எங்களை இந்த இடத்திலிருந்து வேறொரு இடத்தில குடியிருத்துங்கள் என்று கோரவில்லை. அந்த மண் அவர்களுக்குரியது. அதை அவர்களது உரிமையாக்குவதற்கு என்ன செய்யலாமென ஆராய்ந்து அதற்கான செயற்பாடுகளை செய்ய வேண்டும். அவர்களது அவலங்களில் அரசியல் செய்ய முயலக்கூடாது. வெளிநாட்டில் குடும்பம், உறவுகள் யாரும் நம் நாட்டில் இல்லை, போர்க்காலத்தில் தமது வீட்டை இழந்த அயலவரை குடியிருக்கும்படி சொன்னார்கள் அந்த புலம்பெயர்ந்த தமிழர். பற்றைக்காடாக கிடந்த காணியை, பாம்புப்புற்று நிறைந்திருந்த வீட்டை சுத்தம் பண்ணி, சோலையாக வைத்திருந்தார்கள். எல்லாம் நிறைவானபின், அவர்கள் இன்னொரு இல்லிடத்தை தேடவும் அவகாசம் கொடுக்காமல் அவர்களை தெருவில் விரட்டியது இந்த புலம் பெயர் கூட்டம். இன்னும், வெளிநாடுகளிலிருந்து அதிகாரம் பண்ணுவோர், கண்காணித்து கேள்வி கேட்போர் இருக்கிறார்கள். இதில மலையக மக்களை வரவழைத்து வாழவைக்கப்போகிறார்களாம். ஒரு சில குடும்பத்தையே பொறுப்பெடுக்க பல யோசனை, உறவுகளை சகோதரர்களை வாழவைப்பதற்கே எத்தனையோ காரணங்கள் கூறுகிறார்கள். மலையக மக்கள் ஒன்று இரண்டு குடும்பமா இவர்கள் பெருந்தன்மையாக குடியேற்றி வாழ வைப்பதற்கு? அவர்களுக்கு இங்கு அநிஞாயம் நடந்தால், கேட்பதற்கு நாதியில்லை. தெருவிற்தான் அவர்கள் விடப்படுவார்கள். அவனவன் காணியையே எல்லையை கூட்டுவதும், அடாவடி பண்ணி பறிப்பதும், இடிப்பதும் தெரியாததா என்ன? ஜதார்த்ததை சிந்தியுங்கள். அவலங்களில் அரசியல் செய்வதும், உண்மையை பேசுபவர்களை குற்றம் காண்பதும், ஏதோ சுமந்திரன் சொன்னால் செய்பவர் போலவும் சுமந்திரனின் அபிமானிகள் கூச்சல் போடுவதும் தான் மிச்சம். எங்கே, சுமந்திரன் தன் வீட்டின் பக்கத்தில் ஒரு அறையை ஒரு பாதிக்கப்பட்டவருக்கு உறங்க கொடுக்கட்டும் பாப்போம்?
  7. கன்னியா வெந்நீரூற்றும் அழிந்து போகும் நாமும்..! கன்னியா வெந்நீரூறுப் பகுதியில் புதிதாக பெரிய புத்தர் சிலை ஒன்று திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. எனது தாய் தந்தை அவர்களின் தாய் தந்தை அதற்கு முன் இருந்தவர்கள் என இந்த இடம் முழுமையாக சைவர்களின் வழிப்பாட்டுத் தலங்களால் நிறைந்து இருந்தது. நாம் சிறுவயதில் சென்று நீராடி அருகில் உள்ள சிவன் கோவில் பூசைகளில் கலந்துகொள்வோம். இறந்தவர்களுக்கான பிதிர்கடன் செய்யும் இடமாகவும் இருந்தது. 180 வருடங்கள் பழமையான பிள்ளையார் கோவிலும் அங்குள்ளது. அந்த கோவில் இடம் முழுமையாக தனியாருக்கு சொந்தமானது. குறித்த உரிமையாளர் தனது ஏக்கர் கணக்கான காணியை பிள்ளையார் கோவில் கட்ட வழங்கியிருந்தார். யுத்தம் முடிந்த பின் படிப்படியாக இடங்களை கொள்ளையடிகும் நோக்குடனும் பெளத்த மயப்படுத்தும் நோக்குடனும் இருந்த பெளத்த பேரினவாதம் முழுமையாக சிங்களவர்களை கொண்ட தொல்பொருள் எனும் பித்தலாட்டத்தின் மூலம் வரலாறுகளை புதிதாக உருவாக்கி தமிழர் காலாகாலமாக இருந்த இடங்களை வழிப்பாட்டுத்தலங்களை கொள்ளையடித்தது. அதில் திருகோணமலை தழிழர்கள் இழந்த அரிய சொத்து எமது வெந்நீர் ஊற்று. அங்கிருந்த சிவன் கோவிலும் பூட்டப்பட்டது. பிள்ளையார் கோவில் கட்ட வாசலுக்கு ஒரு சிறிய இடம் மட்டுமே வழங்கப்பட்டது அதுவும் செய்ய தடைகள் வந்தது. பிதிர்கடன் செய்ய வருபவர்களுக்கு அதற்கு முன் பல அனுமதிகள் எடுக்க வேண்டியிருக்கின்றது. இராணவன் வரலாற்றுப் பதாகை உடைக்கப்பட்டு, புது அனுராதபுர வரலாறு எழுதப்பட்டது. இராணுவத்தினர் அங்கு இருந்தனர். விகாரை உருவானது. முழு நேரம் ஒலி பெருக்கியில் பண ஓதப்படுகிறது. உப்புவெளி பிரதேச சபையிடம் இருந்த இடம் தொல்பொருள் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டது. வருமானமும் அங்கு செல்கிறது. மொத்தமாக சிதைக்கப்பட்ட ஒரு வரலாற்றை நாம் கண் முன் காண்கிறோம். ஒவ்வொரு திருகோணமலைத் தமிழனும் இதை நினைத்து வருந்திக்கொண்டே இருக்கின்றனர். தொல்பொருள்த் திணைக்களம் மூலம் எல்லாளன் கால கோவில்களைத் தேடுவார்களா? அல்லது ராஜராஜ சோளன் கால கோவிலைகளைத் தேடுவார்களா? இவர்களது நோக்கம் ஒரு பொழுதும் தொல்பொருளைத் தேடுவதல்ல மாறாக இனவழிப்பை நடத்துவதே. அதனால் தான் விகாரைகள் புத்தர் சிலை தொடர்பில் ஏனையோர் ஆவது அவதானமாக இருங்கள். திருகோணமலை போல் ஆகி விடாதீர்கள். https://www.facebook.com/share/p/1AMkhjKGR6/ Rajkumar.Rajeevkanth.
  8. Yesterday
  9. மரப்பாவம் ----------------- 'உங்கள் வீட்டில் நிற்கும் தென்னை மரத்தை நீங்கள் வெட்ட வேண்டும்.........' என்றார் அவர். அவர் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர். பக்கத்து வீட்டுக்காரரின் மகள். மிகவும் வயதாகிவிட்ட தந்தைக்கு உதவியாக சில மாதங்களின் முன் இங்கு குடி வந்தார். நான் இருக்கும் அமெரிக்காவின் மேற்கு கரையில் ஒரு தென்னை மரம் கூட கிடையாது என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கின்றேன். மேற்கு கரை எங்கெனும், மேலே கனடா எல்லையில் இருந்து கீழே மெக்சிகோ எல்லையில் வரை உள்ள சில ஆயிரம் மைல்களிலும், தென்னை மரமே இல்லை என்னும் போது, என் வீட்டில் தென்னை மரமா என்ற யோசனையுடன் அவரைப் பார்த்தேன். 'தென்னை மரமா................... என் வீட்டில் இல்லையே..................' 'ஆமாம்.............. அந்த மரம் முன்னர் இங்கிருக்கவில்லை.............. ஆனால் இப்பொழுது ஒரே இரவில் இப்படி வளர்ந்திருக்கின்றது.........' 'என் வீட்டிலா அல்லது உங்கள் வீட்டிலா..............' என்று உண்மையான சந்தேகத்துடன் கேட்டேன். 'என் வீட்டில் மரம் எதுவுமே இல்லை.............. உங்கள் வீட்டில் தான் ஏராளமான மரங்கள் நிற்கின்றன..........' என்றார் கொஞ்சம் கடுமையுடன். என்னுடைய ஆங்கிலத்தின் தொனி தான் அவரை சினமடைய வைத்திருக்க வேண்டும். நான் சாதாரணமாகவே தான் கேட்டேன், ஆனால் ஆங்கிலம் தான் அந்தக் கணத்தில் கையைவிட்டு விட்டது. இரவல் மொழியில் பணிவு இல்லாமல் போய் விட்டது என்று விளக்கம் கொடுக்கவா முடியும். நிறைய காய்களும் தன்னுடைய வீட்டுக்குள் விழுந்திருக்கின்றன என்றார் அவர். அதனால் அவர் வீடு ஒரே குப்பையாகக் கிடக்கின்றது என்றும் குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்தார். 'தேங்காய்களா.....................' என்றேன் ஆச்சரியத்துடன். இங்கு ஒரு டாலருக்கு விற்ற தேங்காய்கள் இப்பொழுது மூன்று டாலர்கள் ஆகிவிட்டன. ஆனால் என் வீட்டில் எந்த மரத்தில் தேங்காய்கள் காய்க்கின்றன என்று தெரியவில்லையே. 'இல்லை................... அவை மாதுளையின் காய்கள்......................' என்றார். மாதுளை இந்த வருடம் எந்த வருடமும் இல்லாதது போல காய்த்து நிற்கின்றது. நீலி என்ற ஒரு பெண் தெய்வம் பற்றி உங்களுக்கு தெரியுமா. நீலியை ஒரு கொடிய பேய் என்று சொல்பவர்களும் உண்டு. இந்த மாதுளையும் ஒரு பெரும் நீலித் தெய்வம் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பிரமாண்டமாய் நிற்பது போல நிற்கின்றது. ஆகாயத்தின் ஒரு பகுதியையே மறைத்து அதன் கீழ் முழு நிழலை வைத்திருக்கின்றது. மாதுளை மரம் இப்படியும் வளருமா என்றே நம்ப முடியாமல் இருக்கின்றது. இது அமெரிக்காவில் நின்றாலும், இது அமெரிக்க மாதுளை இல்லை, ஆசிய மாதுளை என்றே ஒரு இடத்தில் விற்றார்கள். ஒவ்வொரு திசையிலும் நூற்றுக் கணக்கான காய்களுடன் ஆயிரம் கண்களுடைய நீலி போல நிற்கும் மாதுளையின் ஒரு பக்கம் பக்கத்து வீட்டுக்குள் சரிந்திருந்தது. 'மன்னிக்க வேண்டும்............... நான் உங்களின் வீட்டுக்குள் வரும் அந்த மாதுளையின் பகுதியை இந்த வாரத்துக்குள் வெட்டி விடுகின்றேன்.............' 'தென்னை மரம்.................?' என்று கேள்வியாக நின்றார். தென்னை மரத்தை தயவு செய்து கொஞ்சம் காட்ட முடியுமா என்றேன். இந்த தடவை வந்த ஆங்கிலத்தில் பணிவு நன்றாகவே இருந்தது. வாருங்கள் என்று அவர் வீட்டின் ஒரு பக்க கதவைத் திறந்து உள்ளே கூட்டிப் போனார். அங்கே பாருங்கள் உங்களின் தென்னை மரத்தை என்று மேலே விரலை உயர்த்திக் காட்டினார். 'இதுவா................. இது தென்னை மரம் இல்லை............. இது வாழை மரம்...............' பல வருடங்களின் முன்னர் ஒரு நாள் இங்கு ஒரு செய்தி நிறுவனம் வட கொரியா எங்கே இருக்கின்றது என்று ஒரு உலக வரைபடத்தில் சுட்டிக் காட்டும்படி பலரை நேரலையில் கேட்டிருந்தார்கள். பல அமெரிக்கர்கள் கனடாவையே வட கொரியா என்று சுட்டிக் காட்டியிருந்தார்கள். எனக்கு வாழை தென்னை ஆகியது அதை விட பெரிய செய்தி. 'இந்த வாழை மரங்கள் என் வளவுக்குள் தானே நிற்கின்றது. இதில் நான் எதை வெட்ட வேண்டும்.................' 'இந்தப் பக்கம் வரும் இலைகள் எல்லாவற்றையும் நீங்கள் வெட்ட வேண்டும். இவை ஏன் என் வீட்டின் கூரையின் மேல் ஆடிக் கொண்டு நிற்கின்றன.......... என்ன பெரிய இலைகள்...................' என்று சலித்துக் கொண்டே அவரின் கூரைக்கு மேல் போயிருந்த வாழை இலைகளை காட்டினார். அங்கே பார்த்தேன். சமீபத்தில் வீசிய பெருங்காற்றில் வாழை இலைகள் கிழிந்திருந்தன. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று அவை அயல் வீட்டுக்கார பெண்ணின் கோபம் அறியாமல் அடுத்த வீட்டுக் கூரையின் மேல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. சுற்று முற்றும் பார்த்தேன். மற்ற வீடுகளில் மரங்கள் எல்லாம் அடக்க ஒடுக்கமாகவே நின்று கொண்டிருந்தன. என் வீட்டில் எல்லா மரங்களிலும் நீலித்தெய்வம் குடியேறியிருந்தார். ஒரு பிரச்சனையும் இல்லை, வாழை இலைகளை வெட்டி விடுகின்றேன், ஆனால் இரண்டு வாழைகள் குலைகள் போட்டிருப்பதால் உடனடியாக வெட்ட முடியாது என்றேன். எப்போது வெட்ட முடியும் என்று ஒரே பிடியாகவே நின்றார். குளிர்காலம் முடிந்து, வசந்த காலம் வரும் போது குலைகள் மீண்டும் முற்ற ஆரம்பிக்கும் என்று வழக்குக்கு ஒரு வாய்தா கேட்டேன். காற்றும் புயலும் மழையும் மாறி மாறி வருகின்றது, இவை முறிந்து வீட்டுக்கு மேல் விழுந்தால் என்னவாவது என்று ஒரு காப்புறுதி நிறுவனப் பணியாளர் போல கேட்டார். சில வருடங்களின் முன்னர் ஒரு வாழை முற்றிய குலையுடன் அவர்களின் வீட்டுக்குள் விழுந்ததைச் சொன்னேன். வாழை முறிந்து விழுந்தாலும் அதனால் சேதம் எதுவும் ஆகாது என்று உறுதிப்படுத்தவே அதைச் சொன்னேன். அதைக் கேட்டு திடுக்கிட்டவர் அப்பா சொல்லவில்லையே என்றார். 'உங்களின் அப்பா மிகவும் நல்ல ஒரு மனிதர்..................' 'அவர் சரியான அப்பாவி................... மனிதர்கள் அவரை ஏமாற்றி விடுகின்றார்கள்...............' எந்தப் பக்கம் போனாலும் கல்லால் எறிவது என்று அவர் முடிவெடுத்து விட்டார் என்று தெரிந்தது. அப்பாவை எங்கே சில நாட்களாக வெளியே காண்வில்லையே என்று கேட்டேன். அப்பா குளியலறையில் வழுக்கி முன் பக்கமாக விழுந்து மிகவும் பலமாக அடிபட்டு, படுத்த படுக்கையாகவே கிடக்கின்றார் என்றார். முன்னர் வாழை ஒன்று முறிந்து அவர்களின் வீட்டுக்குள் விழுந்த போது, அவரின் அப்பா வாழைக்குலையை தான் எடுக்கவா என்று மட்டுமே கேட்டார். சந்தோசத்துடன் சம்மதித்தவுடன், குலையை எடுத்து விட்டு மிகுதியை அவரே வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினார். இது நல்ல குணமா அல்லது அப்பாவித்தனமா என்று ஏஐயிடம் ஒரு தடவை நான் கேட்டுப் பார்க்கவேண்டும். அந்த வாரமே மாதுளையையும், அவர்களின் வீட்டுக்குள் எட்டிப் பார்த்த வேறு சில மரங்களையும் வெட்டினேன். அந்தப் பெண் மிகவும் சந்தோசப்பட்டார். அந்த வீட்டின் சொந்தக்காரியாக ஆவதற்கு அவர் தயாராகி விட்டார் என்றே தெரிந்தது. பின்னர் ஒரு நாள் நான் வெளியில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணின் காரை ஒரு கார் இழுக்கும் வாகனத்தில் கொண்டு வந்து அவருடைய வீட்டின் முன்னே இறக்கினார்கள். அவருடைய காரின் மேற்கூரை முற்றிலும் உள்ளே போயிருந்தது. கார் இழுக்கும் வாகனத்துக்குள் இருந்து அந்தப் பெண்ணும் இறங்கினார். 'என்ன............... விபத்து ஆகிவிட்டதா..............உங்களுக்கு ஒன்றும் இல்லை தானே.................' என்று கேட்டேன். 'ஆமாம்............. எனக்கு எதுவும் ஆகவில்லை. நான் காரை விட்டு விட்டுப் போயிருந்தேன்.............. காரின் மேல் ஒரு பெரிய மரக்கிளை முறிந்து விழுந்து விட்டது.................' 'கடவுளின் அருள்......... நீங்கள் அங்கே இல்லாதது.................' 'ஆமாம்....................' 'பெரிய சேதமாக இருக்கின்றதே................ என்ன மரம் உங்களின் கார் மேல் விழுந்தது................' ''
  10. பசப்பு வார்த்தை பேச நான் என்ன அருச்சுனாவா 😂. பதில்கள் கீழே முடியாது மிக முக்கியகாரணம் கட்டமைப்பாக விரிந்துள்ள வர்க, இனவாதம். இங்கே நாம் தோட்ட மக்களை மட்டுமே அலசுகிறோம். அவர்கள் நில உரிமை அற்றவர்கள். அதாவது அவர்கள் இருக்கும் பகுதிகள் அநேகம் உள்ளூராட்சி சபை அன்றி தோட்ட நிர்வாகத்தின் கீழ் வருவன. இது அவர்களை சம பிரஜைகளாக வாழ விடாமல் தடுக்க அமைக்கப்பட்ட திட்டமிட்ட பொறிமுறை. அவர்களுக்கு தொழிலுடன் குடியிருப்பும் இணைக்கப்படுகிறது. எனவே இந்த முறையில் இருந்து வெளி வந்தால், இரெண்டும் போய்விடும். கிராமமங்களுள் அவர்களை நடமாடவே சிங்களவர் அடிக்கடி கெடுபிடி செய்வார்கள். அருகில் உள்ள கிராமங்களில் குடி அமர்த்த, அல்லது இவர்களுக்கு ஒரு கிராமத்தை அமைக்க முனையின் பிக்குகள் தலைமையில் கிராமமே சேர்ந்து எதிர்க்கும். ஆகவே இருக்கும் ஒரே தெரிவு லைன் வீடு, 1000 ரூபாய் சம்பளம் என இவர்களை சந்ததி சந்ததியாக கட்டிப்போட்டுள்ளனர். இதை எதிர்த்து அவர்களை மலையகத்தில் சிங்களவருக்கு நிகரான சம பிரசைகள் ஆக்குவது. தமிழ் ஈழம் எடுப்பதை விட கடினமானது. பலநூற்றாண்டு காலமாக தொர, சாமி என அடிமைபட்டு போன மக்கள் கூட்டம். இன்றும் அதிகாரத்தின் மீது “பெரியவன்” மீது அதீத பயம் இருக்கிறது. தவிர தொழிற்சங்கங்கள், ஈரோஸ், ஈபி, ஜேவிபி எல்லாரும் இவர்களை பயன்படுத்தினரே ஒழிய, அரசியல் ஓர்மத்தை வளர்க்கவில்லை. எந்தளவுக்கு என்றால் மின்னல் ரங்கா போல ஒரு மரம்தாவியை தமது எம்பியாக்குள் அளவுக்கு அரசியல்படுத்த படாத மக்கள். இவர்களின் அரசியல் அனைத்தும், நவீன கங்காணிகளாக இருக்கும் சில குடும்பங்களால் கட்டுப்படுத்தபசுகிறது. எனவே அவர்கள் போராட வாய்ப்பில்லை. எவரும் இல்லை. வாக்குகளுக்காக சில சலுகைகளை பெற்று கொடுப்பார்கள். இவர்கள் தோட்டத்தை விட்டு நாட்டு மக்கள் ஆகி விட்டால் தமது வாக்கு வங்கி, மிராசுத்தனம் பாதிக்கப்படும் என்பதால் இவர்களை இப்படியே வைத்திருக்கவே இவர்களின் அரசியல் தலைமைகளும் விரும்புகிறன.
  11. உக்ரேன் என்பது அனைத்து வளங்களையும் சொந்த அரசியலையும் நாடு மொழி ராணுவம் ஆட்சியென்று அனைத்தையும், உலகதேவையின் பெரும்பங்கை கொண்ண்ட தானியங்கள், எண்ணெய்வளம், கனிமங்கள், பல்கலைகழகங்கள்,உலகத்திலேயே பெரிய சரக்கு விமானத்தை கொண்ட பெருமை ஆயுத உற்பத்தி என்று பலவற்றை கொண்டு தனியாக இயங்கியநாடு. அத்தனையும் இருந்தும் தனது பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு வேற்று வல்லரசு சக்திகளுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்க்க கிளம்பியதால்தான் இந்த போரே ஆரம்பித்தது. தமிழர்கள் இத்தனை வசதிகள் தம் வசம் இருந்தும் இந்திய வல்லரசுடனும் உலக வல்லரசுகளுடனும் இணைந்து இலங்கையை அழிக்க நினைத்து இறுதியில் தோற்று போனார்களா? அதைதான் கண்ணாடிமுன் நின்றூ கேட்கவேண்டுமென்று நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்களா? உக்ரேன் மேற்குலகுடன் இணைந்து ரஷ்யாவை மிரட்ட வேண்டுமென்று போர் செய்த நாடு, தமிழர்கள் எவர் உதவியும் இன்றி சிங்களவனிடம் அடிவாங்கி செத்ததால் வேறுவழியின்றி போர் செய்த இனம் இந்த இரு பிரிவுகளையும் ஒப்பிட்டுபார்க்க எந்தரீதியிலான பெளதீக அறிவு உங்களை தூண்டியது? உக்ரேன் சொந்தநாடு இருந்தும் போருக்கு வழி தேடிய இனம், தமிழர்கள் வேறி வழி இல்லாததால் சொந்தநாடுவேண்டி போராடி தோற்றுபோன இனம் இந்த இரண்டையும் ஒப்பிட்டு எகத்தாளமாய் சிரிக்க உங்கள் ஒரு சிலரால் முடிகிறது அது உலகின் பார்வைக்கு கண்டிப்பாக ஏளனமாய் அமையாது. 1958 ,1977, 1983 வரை எந்த தமிழர்களும் ஆயிரக்கணக்கில் ஆயுதம் ஏந்தி சிங்களவனுக்கெதிராய் போராட நினைத்ததில்லை, அவன் அரசியல் யாப்பையும் ஆயுதபடைகளையும் ஏற்றும், சொல்லபோனால் படைபலத்தை வைத்து சிங்களவன் எங்களை நீங்கள் வேறு நாங்கள் வேறூ என்று மிதி மிதியென்று மிதித்தபோதும் துடைத்துவிட்டு காவல்துறை ராணுவம் கடற்படை விமானபடை என்று சிங்களவனின் படைகளில் சேவையாற்றியும் வாழ்ந்தார்கள். கல்வி சுகாதாரம் பாதுகாப்பு, மொழி, அரசியல் என்று அனைத்திலும் வலிகளை மட்டுமே அவன் எமக்கு தந்தாலும்முடிந்தவரை சிங்கள தேசத்துடன் முரண்படாமலே வாழ நினைத்தார்கள். 83ல் ஜேஆர் எனும் மனிதகுலவிரோதி இலங்கையில் இனக்கலவரம் என்ற ஒன்றை உருவாக்காமல் விட்டிருந்தால் தமிழர் ஆயுத போராட்ட இயங்கங்களின் உறுப்பினர் தொகை இரண்டு இலக்கங்களுக்கிடையே மட்டுமே இருந்து தானாகவே காணாமல் போயிருக்கும். லட்சக்கணக்கான தமிழர்கள் ஆயுதபோராட்ட இயக்கங்களுக்கு பின்னால் போக வைத்த பெருமை சிங்கள இனத்தையும் ஆட்சியாளர்களையுமே சேரும். உக்ரேன் அப்படியா வாழ்ந்துவிட்டு நேட்டோவுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்த்து போர் செய்து பேரழிவின் முடிவில் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்தது? எங்கள் காயங்கள் உங்களுக்கு சிரிப்புக்கிடமானதாக தெரிந்தால் விலகி நில்லுங்கள் அதனை பார்த்து கைகொட்டி சிரிக்காதீர்கள், பிற விலங்குகள் குட்டி ஈன்று கொண்டிருக்கும்போதே தன்பசியாற தாயின் பிறப்புறுப்பிலிருந்து இழுத்தெடுத்து உண்ணுமாம் ஹயினாஸ் எனும் விலங்கு அதுபோல் எமக்கு வசதியென்றால் எது வேண்டுமென்றாலும் பேசலாமென்ற மனபாங்கில் பேசி பழகுவான் மனிதன். அது விலங்குகள் பரவாயில்லை அப்படித்தான் அவற்றின் இயற்கை சுழற்சி இருக்கும், நாம் அப்படியா? அழகானமனிதர்கள். அழகான மனிதர்கள் அந்த கொடூர இனத்தில் சேராமல் சுயமாக சிந்தித்து வாழ்ந்தால் அதில் தவறென்று எதுவும் இருக்க போவதில்லை.
  12. இப்படி ஒரு நடனத்தை யாழ்களத்தில் போடுவதற்கு இவருக்கு எப்படி மனது வந்தது 🙁 😂 செலன்ஸ்கி இராஜதந்திர கேம் ஆடுகிறார் என்று தான் Vasee நினைத்தார். மற்றவரோ செலன்ஸ்கி பெல்லி நடனம் ஆடுவதாக கற்பனை பண்ணி அதை யாழ்களத்திலும் போடுகின்றார்
  13. இது போன்ற இரஸ்சியாவிற்குள் நிகழும் தாக்குதலுக்கு பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக கூறுகிறார்கள், இதனை உக்கிரேன் தரப்பில் இருந்து புடனோவ் ஒழுங்குபடுத்துகிறார் என கூறப்படுகிறது, புடனோவ் சி ஐ ஏ இனால் பயிற்றுவிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. தேவையில்லாத மேலதிக விடயங்களை எழுதினால் நச்சென்றிருக்காது🤣.
  14. சரி உங்கள் கருத்துப்படியே செல்வோம் ஆனால் முதலில் சில கேள்விகளுக்கு நேர்மையான பதில் வேண்டும்.... 1.மலையகத்தில் வாழும் அடிமட்ட மக்களுக்கான உதவிகளையும் வாழ்வாதாரத்திற்காக தேவைகளையும் அவர்களுடை நிலத்திலேயே வைத்து செய்ய முடியாதா? 2.முடியாது என்றால் என்ன காரணம் ? (சிங்கள அரசு செய்து கொடுக்காது என்பது அபத்தமான ஒரு பதிலாக இருக்கும் ஏனெனில் வடக்கு கிழக்கிலும் சிங்கள அரசு மக்களுக்கு ஏதும் பெரிதாகச் செய்து விடவில்லை) 3.தங்கள் உரிமைகளை தேவைகளை பெற்றுக்கொள்ளவதற்காக எந்த வகையில் அந்த மக்கள் முயற்சி செய்கின்றார்கள் ? 4.எந்த அரசியல் தலைவர்கள் அவர்களுடைய தேவைகளையும் வசதிகளையும் செய்து கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் ? மனோ கணேசன் கூட காணி உரிமை என்பதைக் கூறாமல் மக்களுக்கான நிலங்கள் கிடைக்காவிட்டால்....... மட்டுமே....... (வடிவாகக் கவனிக்க வேண்டிய இடம்) வட கிழக்கிற்குச் செல்ல மக்கள் தயார் என்று அறிவிப்புச் செய்ததை நியாயப்படுத்தும்அரசியல்வாதிகள் அரசியல் லாபம் தேட முயற்சிக்கவில்லையா ? முடிந்தால் அரசியல் பசப்பு வார்த்தைகளை அள்ளி வீசாமல் பதில் தாருங்கள் 😂
  15. அந்த வீடியோ எல்லாம் புட்டினுக்கு பொன் முட்டையிடும் வாத்து. என்று அதை வெளியிட்டால் தனக்கு தீமையை விட நன்மை என உணர்கிறாரோ அன்று வெளியிடுவார். அண்டைக்கு MAGA மொக்குகளே தம்பருக்கு உயிரோடு சமாதி கட்டுவார்கள்😂.
  16. அண்ணை, நானும் நீங்களும் இந்த திரியில் எதிர் எண்டால் உக்ரேன் திரியில் ஒரே கருத்து. 2017 முதல் இப்படித்தான். அதேபோல் நீங்களும் யாழை விட்டு ஒதுங்கவில்லை. ஒதுங்கவும் கூடாது. எந்த தனிப்பட்ட உள்நோக்கமும் இல்லை. ஆனால் மலையக மக்களை ஊரில் குடிவைக்க இங்கே சொல்லப்பட்ட எந்த காரணும் தர்க வலு அற்றவை. இந்த எதிர்ப்பின் பின்னால் இருப்பது (நாம் உணரும் (conscious) அல்லது உணரா (unconscious) யாழ் மையவதம் என்பது என் நிலைப்பாடு. இணைந்திருங்கள்.
  17. 🤣................. ஏதேதோ வெளியிடுகின்றார்கள், இதை மட்டும் வெளியே விடுகின்றார்கள் இல்லை........😜. அதிபர் ட்ரம்ப் இவ்வளவு ஆதரவாக இருந்துமே, சேற்றில் ஒரு கால், சகதிக்குள் ஒரு கால் என்று ரஷ்யாவும், அதிபர் புடினும் இழுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்............. உக்ரேன் மக்களின் வீரம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று......................👍.
  18. மிகத் தவறான புரிதலும் உள்நோக்கமும். உங்களுக்கு கரம்பன் மண்ணுக்கும் கண்டி மண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது என்று என்னால் எழுத முடியவில்லை.. நீங்கள் சிலர் என் போன்ற சிலரை எங்கே குற்றம் கண்டு பிடிக்கலாம் எங்கே சிறு தடுமாற்றம் அல்லது கொள்கை சறுக்கலில் சிக்குவார்கள் என்று தான் இங்கே வருகிறீர்கள். எனவே நான் எதை எழுதினாலும் அதை எப்படியாவது உருமாற்றி தான் புரிந்து கொள்வீர்கள். அதனால் தான் யாழில் இருந்து முடிந்தவரை தள்ளி நிற்கிறேன். என்னைப்போல பலர் இங்கே....
  19. இஙளவுக்கு செலன்ஸ்கி இராஜதந்திர கேம் ஆடுகிறார் என நீங்கள் எழுதினால், அண்ணன்மாருக்கு பிளட் பிரசர் ஏகிறிவிடும், கவனம். எல்லாரையும் பட்டியல் இட்டீர்கள். குறை சொன்னீர்கள் - எனக்கும் உடன்பாடுதான். ஆனால், தேடிப்பார்த்தேன், ஒரு இறைமையுள்ள நாட்டினுள் படைகளை அனுப்பி போரை ஆரம்பித்த புட்டின் பற்றி ஒரு வரி கூட இல்லை. வீட்டில் யன்னல்கள் அதிகமோ😂 டிரெம்ப் இருக்கும் வரை புட்டினுக்கு வெற்றி மேல் வெற்றிதான். ஈயூ, யூகே, துணையுடன் - அதிக இழப்பு இல்லாமல் டிரம்பின் பதவிகாலத்தை எப்படி கடத்துவது என்பது மட்டுமே இப்போதைக்கு செலன்ஸ்கியின் குறி என நான் எண்ணுகிறேன். பிகு அமெரிக்கன் அரசிடம் இருக்கும் எப்ஸ்டீன் பைலில் டிரம்ப் பற்றிய போட்டோ தான் உள்ளது…. புட்டினிடம் டிரம்பின் எப்ஸ்டீன் விளையாட்டுகளின் வீடியோவே உள்ளதாம்.
  20. ஆனால் நான் அப்டேட்டட்! எனக்கு ஏஅய் எண்டு வாசிக்கத்தெரியும்!
  21. உக்ரைன் அதிபர் மிகவும் இக்கட்டான நேரத்தில் மிகவும் கடினமான முடிவை எடுத்திருப்பது உலக அமைதிக்கு வழி வகுக்கும். அதேவேளை தனக்கு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கிறார். நல்லது நடக்கட்டும்.
  22. Link: ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு Translation: Atrocities committed by Sri Lankan Muslim Home Guards and Armed Groups against Eelam Tamils | Documentary This is an extensive Tamil documentary of approximately 200 pages compiled by me, Nane Chozhan (நன்னிச் சோழன்). The work focuses on episodes of violence against Tamil civilians in Sri Lanka, particularly in the Eastern Province, and attributes many of these incidents to armed groups identified as Muslim home guards and mobs during specific periods of the civil conflict. The documentary catalogues alleged incidents of mass killings, arson attacks, sexual violence, looting, and forced displacement affecting Tamil Hindu and Christian communities. According to the author, the material is based largely on direct compilation of primary testimonies, local records, photographs, and contemporaneous publications, rather than secondary quotation, which he argues increases its evidentiary weight. A central argument advanced in the work is a revision of the commonly cited chronology of anti-Tamil pogroms. While mainstream narratives often place the beginning of systematic violence against Tamils in 1956, the author contends that the first major pogrom occurred earlier, in 1954, citing the Veeramunai attack. In this incident, Veeramunai—described as a historically significant Tamil settlement and former regional capital—was allegedly destroyed by fire. To support this claim, the author references two contemporaneous sources: a Tamil-language book published in 1956 titled “Theeyunda Veeramunai” (Burnt Veeramunai), and a later Muslim-authored publication from 1993 that also discusses the same event. The documentary further records over 30 separate attacks on Tamil civilians by Muslims prior to the Katankudy mosque incident, attributing approximately 300 civilian deaths to Muslim home guard units, including claims that around 120 individuals were burned alive. On this basis, the author argues that these earlier episodes provide historical context for later retaliatory violence, though this interpretation remains contested and controversial. In addition to written material, the work includes photographic documentation of Muslim home guards from the pre-2009 period who were killed in clashes with the LTTE, as well as images of now-destroyed Tamil memorials erected to commemorate victims of these attacks. The documentary also incorporates video testimonies from survivors describing their experiences during the violence. The author additionally references the Tamil book “Uthikkum Thisaiyil Unnatha Payanam” (A Noble Journey in the Direction of the Dawn), which documents violence in Eastern Sri Lanka / southern regions of Tamil Eelam attributed to both Muslim and Sinhala home guard forces. This work is noted as having been written under the influence or direction of Maththaiya, described as a former Indian intelligence-linked figure. Overall, the documentary positions itself as a counter-narrative to dominant historical accounts of the Sri Lankan conflict, emphasizing incidents of violence against Tamil civilians (by the Muslims) that the author believes have been under-documented or marginalized in mainstream discourse. The English translation of the Introduction written in the document: "Introduction "In this document, only the atrocities committed against the Eelam Tamils by the Sri Lankan Muslim Home Guards and Armed Groups, who were accepted as a separate ethnic group by the Liberation Tigers of Tamil Eelam on 19th April 1988 as ‘Muslims’ (LTTE-Muslim Accord, the satanic force, Part-1, page: 747), will be recorded. I also make it clear in advance that nothing will be recorded about the atrocities committed by the LTTE against the Muslims (although the LTTE has denied them). "One of the main reasons for compiling this is that Sri Lankan Muslims always deliberately hide all the massacres committed by their side against the Tamils in the articles and books they write, and spread the blame for the murders on the Tamil side. In those statements, they have created the impression that they did not attack the Tamils first, pretending to be good children, and that the Tamils attacked them while they were idle. That is, they have created a false impression contrary to the truth. Moreover, they have written a little about the massacres they instigated against the Tamils that led to the murders accused of the Tamil side. Therefore, this document will try to highlight the justifications of the Tamil side instead of only demanding justice for the Muslim side, which has existed for a long time. "Furthermore, it is a weakness of our side that the Tamil side has not taken the effort to document the atrocities committed by Muslims as vigorously as it has documented the massacres committed by the Sinhalese people. Therefore, this document is being written to remedy that deficiency and to highlight the atrocities suffered by the Tamil side. "Only the 'Preface' is my own writing with the support of sources. Everything else that will be posted is articles, news and reports published by various reliable websites, magazines, newspapers and some specific international organizations about the atrocities committed by Muslim armed groups, Home Guards, & Goons against Tamils during the Eelam War. It will be a collection of short words. "This archive will be continuously updated by me and will be preserved as a vast historical archive and a historical knowledge repository for future generations regarding the atrocities committed against our Tamil nation by the racism of Sri Lankan Muslims." *****
  23. இன்றைய செய்தியை பார்த்தீர்களா, வசீ................. அமெரிக்கா உக்ரேனின் நிலப்பகுதிகளை தங்களுக்கு கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருப்பதாக ரஷ்ய தரப்பிலிருந்து சொல்லுகின்றார்கள்..................🫢. நாங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை பாடசாலைகளில் எங்களுக்கு பிஸ்கட் கொடுத்தார்கள். அது அமெரிக்கா கொடுத்த பிஸ்கட்டே............... அப்படி ஏதோ பெட்டிக்குள்ளிருந்து பிஸ்கட் எடுத்துக் கொடுப்பது போலவே இந்தச் செய்திகளும் இருக்கின்றன................. ஆனால் அவர்கள் இருவரும் மாறி மாறி ட்ரோன்களை விட்டு, இரண்டு நாடுகளையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்............ நேற்று ஒரு நீர்மூழ்கி போய்விட்டதா.............🫣.
  24. Tamil Genocide Memorial inside the Jaffna University Built in the year: 2021 Version: 2 The above monument was destroyed by the Sri Lankan military in the year January 2021, and after a protest by the campus students, a new one was built within fewdays after the incident.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.