stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்!
அந்தக் காசை வீணாக சில்லறையா செலவழிக்காமல் பலாலி விமான ஓடு பாதையை போடலாம்.😀
-
2025: அனுர அலையில் தொடக்கி மனிதாபிமான அலையில் முடிந்த ஆண்டு - நிலாந்தன்
2025: அனுர அலையில் தொடக்கி மனிதாபிமான அலையில் முடிந்த ஆண்டு - நிலாந்தன் இந்த ஆண்டு பிறந்த போது நாட்டில் “அனுர அலை” வீசியது. இந்த ஆண்டு முடியும் போது புயலுக்கு பின்னரான ஒரு மனிதாபிமான அலை நிலவுகிறது. இரண்டுமே அலைகள்தான். இரண்டுமே அரசாங்கத்தைப் பலப்படுத்தும் அலைகள்தான். அனுர அலை என்பது தமிழ் நோக்கு நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளியது. அது நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதீயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்தன. யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரியாமலேயே தமிழ்மக்கள் வாக்களித்திருந்தார்கள். இப்படிப் பார்த்தால் இந்த ஆண்டு தொடங்கும் பொழுது அது தமிழ்த்தேசிய அரசியலுக்குப் பாதகமான ஓர் ஆண்டாகத்தான் தொடங்கியது. அந்தத் தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றைச் சரி செய்யும் விடயத்தில் தமிழ்த்தேசிய அரசியல் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது? உள்ளூராட்சி சபைகளில் பெற்ற வெற்றிகள் சற்று ஆறுதல் தரக்கூடும். ஆனால் கடந்த வாரம் கரைத்துறைப் பற்று பிரதேச சபையில் என்ன நடந்தது? வடக்கில் அரசாங்கம் முதலாவது உள்ளூராட்சி சபையை கைப்பற்றியிருக்கிறது. அதற்கு என்ன காரணம்? சந்தேகத்துக்கிடமின்றி தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஐக்கியமின்மைதான் முதலாவது காரணம். அந்த ஐக்கியமின்மையை சரிசெய்யத் தேவையான தலைமைத்துவம் தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்பதுதான் இரண்டாவது காரணம். சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசிய கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலான காலப்பகுதியில் அதாவது ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் மூன்று முயற்சிகள் எடுக்கப்பட்டன. முதலாவது,தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றாக்கும் முயற்சி. தமிழரசுக் கட்சி அதைத் தோற்கடித்தது. இரண்டாவது,தமிழ்த்தேசியப் பேரவை என்ற பெயரில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி. அதுவும் இப்பொழுது ஏறக்குறைய தோற்கும் நிலைக்கு வந்துவிட்டது. மூன்றாவது அண்மையில் தமிழரசுக் கட்சியும் டிரிஎன்ஏயும் சந்தித்து மாகாண சபைத் தேர்தல்களை ஒன்றாக எதிர்கொள்வைத்தற்கான பேச்சுவார்த்தை. ஆனால் அந்த ஒற்றுமை முயற்சிகள் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பதற்கு கரத் துறைப் பற்று பிரதேச சபை ஓர் ஆகப் பிந்திய உதாரணமாக அமையுமா? தேர்தலை நோக்கி உருவாக்கப்படும் கூட்டுக்கள் நிலைத்திருக்காது என்பதைத்தான் கடந்த 16 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன. எனவே தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் ஆண்டு தொடங்கும் போது இருந்த அதே கட்சி நிலைமைகள்தான் ஆண்டு முடியும் போதும் காணப்படுகின்றன. மே 18ஐ நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் கிராமம் அமைந்திருக்கும் கரத்துறைப் பற்று பிரதேச சபையைத் தக்கவைக்க முடியாத தமிழ் கட்சிகள் இனிமேல் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடந்தால், அதில் ஒன்றாக நின்று அரசாங்கத்தை எதிர்கொள்ளும் என்று எப்படி நம்புவது? இந்த ஆண்டு பிறந்த போது ஒருபுறம் அனுர அலையின் விளைவுகளால் தமிழ் தேசிய அரசியல் சேதத்துக்கு உள்ளாகியிருந்தது. அதேசமயம் இன்னொருபுறம் யாரும் எதிர்பாராமல் திறக்கப்பட்ட செம்மணிப் மனித புதை குழியானது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு புதிய அனைத்துலக வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. மனிதப் புதைகுழி என்பது உணர்வு பூர்வமானது. அது உள்ளூரில் மக்களைத் திரட்ட உதவும். இன்னொரு புறம் பொறுப்புக் கூறும் விடயத்தில் உலக சமூகத்துக்கு எடுத்துக் காட்டத்தக்க ஆகப்பிந்திய உதாரணமாகவும் அது அமைந்தது. அதன் காரணமாகத்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வர வேண்டியிருந்தது. ஆனால் ஐநா செம்மணிக்கூடாக பொறுப்புக்கூறலை அணுகவில்லை என்பதைத்தான் கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் உணர்த்துகின்றது. அதாவது தமிழ் மக்கள் ஐநாவில் பலமாக இல்லை என்பதைத்தான் அது உணர்த்தியது. உள்நாட்டிலும் தமிழ் மக்கள் பலமாக இல்லை அனைத்துலக அளவிலும் தமிழ் மக்கள் பலமாக இல்லை. ஆண்டு பிறந்த போதும் பலமாக இல்லை. ஆண்டு முடியும்போதும் பலமாக இல்லை. இந்த ஆண்டின் ஆகப்பிந்திய தோல்வி கரைத்துரைப் பற்று பிரதேச சபை. ஒரு புயலுக்கு பின்னரான அரசியலில்,தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஆதீனத் தலைவரும் உட்பட பல போராட்டக்காரர்கள் மீது பலப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் அதிலும் குறிப்பாக, இந்திய வெளியுறவு அமைச்சர் கொழும்புக்கு வருகை தந்த அதே நாளில்,வடக்கில் முதலாவது பிரதேச சபையை தமிழ் தேசியத் தரப்பு அரசாங்கத்திடம் இழந்திருக்கிறது. அரசாங்கம் புயலுக்கு பின் முன்னரைவிடப் பலமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில் தமிழ்த் தேசியத் தரப்புக்கு ஏற்பட்ட தோல்வி இது. ஆண்டின் முடிவில் நாட்டைத் தாக்கிய புயலின் விளைவாக ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியது. அந்த மனிதாபிமானச் சூழலை ஜேவிபி உள்நாட்டில் கிராமங்கள் தோறும் நிவாரண அரசியலாக,தொண்டு அரசியலாக திட்டமிட்டுக் கட்டமைத்தது. அதன்மூலம் எதிர்க்கட்சிகளை பெருமளவுக்கு பலவீனப்படுத்தியது. ஆண்டு தொடங்கும்போது பலவீனமாக இருந்த எதிர்க்கட்சிகள் இடையில் நுகேகொட பேரணிமூலம் தலையெடுக்க முயற்சித்தன. ஆனால் புயல் வந்து அரசாங்கத்தை மீண்டும் பலப்படுத்தி விட்டது. அண்மையில் உலகளாவிய 120 நிபுணர்கள் அடங்கிய குழு வெளியிட்ட அறிக்கை அதைக் காட்டுகிறது. கடனை மீளக்கட்டமைக்கும் விடயத்தில் அரசாங்கத்துக்குச் சாதகமாக முடிவெடுக்குமாறு அந்த அறிக்கை கேட்டிருக்கிறது. அதாவது புயலுக்கு பின்னரான மனிதாபிமான அலை என்பது உள்நாட்டில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கடந்து போவதற்கு அரசாங்கத்துக்கு உதவுகிறது. அனைத்துலக அளவில் கடனை மீள கட்டமைக்கும் நெருக்கடியிலிருந்து விடுபட உதவியிருக்கிறது. புயலின் பின்னரான மனிதாபிமானச் சூழலுக்குள் முதலில் இறங்கியது இந்தியா. அதிகமாக உதவியதும் இந்தியா. இயற்கை அழிவு ஒன்றுக்குப் பின்னரான இலங்கைத் தீவின் அரசியலில் இந்தியா தன்னுடைய பிடியை மேலும் பலப்படுத்தியிருக்கிறது. இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது அனுர அலை, அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை. இந்த ஆண்டின் முடிவில் இருப்பது மனிதாபிமான அலை. அது இலங்கை அரசாங்கத்தைப் பலப்படுத்தும் அலை. எதிர்க்கட்சிகளை மேலும் வாயடைக்கச் செய்யும் அலை. இந்த இரண்டு அலைகளுமே எதிர்கட்சிகளை மட்டுமல்ல தமிழ்த்தேசியக் கட்சிகளையும் பலவீனப்படுத்தியிருக்கின்றன. புயலுக்குப் பின்னரான மனிதாபிமான அலையின் பின்னணியில், தமிழ்த் தேசியப் பேரவை தமிழகத்தை நோக்கிச் சென்றது. தமிழரசுக் கட்சியும் டிரிஎன் ஏயும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தை நோக்கிச் சென்றன. ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியாவை நோக்கிச் சென்ற அதே காலகட்டத்தில், இந்தியா கொழும்பை நோக்கி அதன் வெளிவிவகார அமைச்சரை அனுப்பியது. தமிழ்க் கட்சிகள் இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தபோது ஒருமித்த நிலைப்பாட்டோடு இருக்கவில்லை என்பதைத்தான் பின்னர் வெளிவந்த அறிக்கைகள் காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக இந்திய வெளிவகார அமைச்சர் கொழும்புக்கு வந்த அதே நாளில்தான் கரைத்துறைப்பற்று பிரதேச சபையை தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்திடம் பறி கொடுத்தன. எனவே இந்த ஆண்டு முடியும்போது தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்கும் இந்த அரசாங்கம் தீர்வைத் தரவில்லை. உதாரணமாக,அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை அதற்குப் பதிலாக புதிய சட்டம் வருகிறது. சிங்கள பௌத்த மயமாக்கல்,நிலப்பறிப்பு போன்ற பெரும்பாலான உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. திருமலையில் அண்மையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்திலேயே இருக்கிறது. அதாவது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை. நிரந்தரப் பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை. அதேசமயம் ஆண்டின் இறுதியில் வீசிய புயல் அரசாங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அது எதிர்கொள்ளக் கடினமான பிரச்சினைகளையும் வாக்குறுதிகளையும் ஒத்திவைப்பதற்கு வேண்டிய அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கிறது. கடந்த மூன்று தசாப்த காலத்துக்குள் ஏற்பட்ட இரண்டாவது இயற்கைப் பேரிடர் ஒன்றுக்குப் பின்னரான மனிதாபிமான அலை இது. இந்த மனிதாபிமான அலையை,ஜேவிபியின் கிராமமட்ட வலையமைப்பு திட்டமிட்டு எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கத்தோடும் கட்டமைத்து வருகிறது. ஜேவிபியின் கிராமமட்ட வலைப்பின்னலுக்கூடாக உள்ளூர் தொண்டர்களும் தன்னார்வலர்களும் இந்த மனிதாபிமான அலையைக் கட்டியெழுப்பினார்கள். இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி கூறுவதுபோல,இது ஓர் அசாதாரணமான சகோதரத்துவநிலைதான். ஆனால் இதே போன்றதொரு மனிதாபிமான அலை 2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரழிவின் பின்னரும் தோன்றியது. அப்பொழுது யுத்த நிறுத்தம் நிலவியது. எனவே அது நாடு முழுவதுமான ஒரு மனிதாபிமான அலையாகக் காணப்பட்டது. அந்த மனிதாபிமானச் சூழலை அரசியல் தீர்வு ஒன்றுக்கான சாதகமான நிலைமைகளைக் கனியவைப்பதற்கான ஒரு சூழலாக மாற்றலாமா என்று பரிசோதிப்பதற்கு அப்பொழுது சமாதானத்தை முன்னெடுத்த மேற்கு நாடுகள் முயற்சித்தன. அதன் விளைவாக உருவாக்கப்பட்ட மனிதாபிமானக் கட்டமைப்புத்தான் சுனாமிக்கு பின்னரான பொதுக் கட்டமைப்பாகும். அந்தக் கட்டமைப்பு வெற்றிகரமாக இயங்கி இருந்திருந்தால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு பரிசோதனைக் கட்டமைப்பாக அது அமைந்திருக்கக்கூடும். ஒரு மனிதாபிமானச் சூழலை அவ்வாறு அரசியல் உள்நோக்கத்தோடு பயன்படுத்த மேற்கு நாடுகள் முயற்சித்தன. முதற்கட்டமாக அதில் வெற்றியும் அடைந்தன. அரசாங்கமும் விடுதலைப்புலிகள் இயக்கமும் சுனாமி பொதுக் கட்டமைப்புக்கு இணங்கின. ஆனால் அந்த மனிதாபிமானச் சூழலுக்குள் இனவாத அலையைத் தூண்டியா ஜேவிபி அதைத் தோற்கடித்தது. சுனாமிக்குப் பின்னரான ஒரு மனிதாபிமானச் சூழலை இனவாதத்தின் மூலம் தோற்கடித்த அதே இயக்கத்தை அடித்தளமாகக் கொண்ட இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழலை தன்னைப் பலப்படுத்துவதற்கும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதற்கும் கெட்டித்தனமாகப் பயன்படுத்துகின்றது. ஆனால் இந்த அசாதாரண மனிதாபிமானச் சூழலை அரசாங்கம் இனவாதத்துக்கு எதிராக கட்டமைக்கவில்லை. அவ்வாறு கட்டமைக்கும் என்று நம்பத்தக்கதாக தேசிய மக்கள் சக்தியின் கடந்த ஓராண்டு காலம் அமையவில்லை. https://www.nillanthan.com/8034/
- Today
-
பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!
காலநிலை தொடர்பாக நடைபெறும் மாநாடுகள் வடையும் தேனீரும் அருந்தும் மாநாடுகள் போல் தோன்றுகின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
2026 இல் உள்ள அரச விடுமுறைகள்
கிட்டதட்ட ஒரு மாதம் வருகிறது😂. நாடு உருப்பட்ட மாதிரித்தான்😂
-
மட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்திற்குள் நுழைந்தது 20 மேற்பட்ட காட்டு யானைகள் ; விரைந்து செயற்பட்டனர் ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்
மட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்திற்குள் நுழைந்தது 20 மேற்பட்ட காட்டு யானைகள் ; விரைந்து செயற்பட்டனர் ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் 28 Dec, 2025 | 05:04 PM மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம், போன்ற பல பிரதேசங்களில் நீண்ட நாட்களாக காட்டு யானைகள் தொல்லைகளும் அட்டகாசங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியிலுள்ள மக்களின் பயன்தரும் தென்னை, வாழை, உள்ளிட்ட பயிரினங்களையும் காட்டுயானைகள் துவம்சம் செய்து வருவதாகவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது இவ்வாறு இருக்க சனிக்கிழமை (27) அப்பகுதியைச் சூழ சுமார் இருபதிற்கு மேற்பட்ட காட்டுயானைகள் உலாவித்திரிந்ததனால் மக்கள் பீதிடைந்தநிலையில் காணப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள மக்கள் விடுத்த கோரிக்கைக்கு வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் அப்பகுதிக்கு விரைந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து காட்டு யானைக் கூட்டத்தை விரட்டுவதற்கு எடுத்த முயற்சியின் பலனாக பல்வேறு பிரேயத்தனங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் அனுப்படுத்தியுள்னர். எனினும் காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உள்நுளையாமலிருப்பதற்காக வேண்டி அங்குள்ள காட்டுயானைகளை நிரந்தரமாக அப்புறப்படுத்தி, யானைப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர். https://www.virakesari.lk/article/234601
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. திராவிட நாடு ஒன்றை வலாற்காரமாக பிடித்து வைத்துக் கொண்டு சீமான் இவ்வாறு சொன்னால் இரண்டும் ஒரே தன்மையை உடையன. சீமானின் தமிழ் தேசியக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தாலும் அதன் மூலம் திராவிட நாடு ஒன்றை ஏற்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
-
வறுமையிலும் மலர்ந்த மனிதாபிமானம் - தமிழக வாழ் இலங்கையர்களின் பாரிய நிவாரண உதவிகள்
வறுமையிலும் மலர்ந்த மனிதாபிமானம் - தமிழக வாழ் இலங்கையர்களின் பாரிய நிவாரண உதவிகள் 28 December 2025 இலங்கையில் அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகப் பாரிய நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். குறித்த நிவாரண உதவிகள் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முறையாகக் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு மையத்தின் அதிகாரிகள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர். இதன்படி தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள், 2 கொள்கலன்களில் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், தமது ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் 12,33,604 இந்திய ரூபாய் நிதியுதவியையும் (இலங்கை ரூபாயில் சுமார் 42,50,000) வழங்கியுள்ளனர். இதற்கமைய குறித்த நிவாரணப் பொருட்கள் கடந்த 26ஆம் திகதி சென்னையிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவை உரிய திணைக்கள அதிகாரிகள் ஊடாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. மேலும் இக்கட்டான காலகட்டத்தில் அனர்த்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளுக்குத் தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60,000 இலங்கையர்கள் வசிக்கின்றனர். மேலும் 40,000 பேர் முகாம்களுக்கு வெளியே தங்கியிருந்து, அந்தந்தப் பகுதி காவல்துறையில் பதிவு செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் இடப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், அவர்கள் இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கூட்டாக நிவாரண உதவிகளைத் திரட்டிய செயலானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கமைய குறித்த உன்னதமான பங்களிப்பிற்காக இலங்கை அரசாங்கம் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கையில் அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தில் இருந்து அடுத்த வாரத்தில் மற்றுமொரு நிவாரண கொள்கலன் அனுப்பி வைக்கப்படவுள்ளது. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தது. அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தில் இருந்து இதுவரை 4 கொள்கலன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஆடைகள், உலர் உணவு பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துகள் மற்றும் சுகாதார நப்கின்கள் உள்ளிட்டவை அடங்கும். மக்களின் தேவைக்கருதி அடுத்த வாரத்தில் மேலும் ஒரு நிவாரண கொள்கலன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/438008/humanitarianism-blossoms-even-in-poverty-massive-relief-assistance-from-sri-lankans-living-in-tamil-nadu
-
யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்!
இலண்டனின் ஹைட்பார்க், நியோர்க்கின் சென்ரல் பார்க் போல பேணப்படவேண்டிய இடம் பழைய பூங்கா. சும்மா கையூட்டுக்காக அதை நாசம் பண்ணாமல், வேறு இடத்தில் உள்ளக விளையாட்டரங்கை அமைக்க வேண்டும்.
-
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைப் பெற வேண்டுமானால், அது குறித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட வேண்டுமென அதிபர் தரச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார். அவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல், ஜனவரி 5ஆம் திகதி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்படி, ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் இதற்குத் தெளிவான பதிலொன்றை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் 6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் ஏனைய வகுப்புக்களிலும் உயர்தர வகுப்புக்களிலும் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால் கல்வித் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் நிமல் முதுன்கொடுவ வலியுறுத்தியுள்ளார். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடுவதன் மூலம் நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை அமுல்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். கல்விச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு முன்னர் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் இருப்பதாகவும், அவற்றைப் பின்பற்றாமல் இறுதியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை முதலில் செய்ய முயற்சிப்பதால் இதனை வெற்றிகொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, பாடசாலைகளை பிற்பகல் 2.00 மணி வரை நடத்துவதும், பாடவேளைகளை 50 நிமிடங்கள் வரை நீடிப்பதும் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனை உடனடியாக மீளப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஜனவரி 5ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் 6ஆம் தரத்திற்கும், ஜனவரி மாத இறுதியில் 1ஆம் தரத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், தற்போது அது பாரிய சிக்கலாக மாறியுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார். ஏனைய தரங்களுக்கான பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிக்குமாறு கூறப்பட்டாலும், அது இதுவரை நான்கு முறை சுற்றறிக்கைகள் மூலம் மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். கடந்த ஆண்டுகளில் இந்த காலப்பகுதியில் பாடசாலை நேர அட்டவணைகள் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டு அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு கல்வி அமைச்சு தேவையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என அவர் தெரிவித்தார். இது அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிரச்சினையாக மாறியுள்ளதோடு, நேர அட்டவணைகளை அங்கீகரிப்பதற்கான அறிவுறுத்தல்கள் வலய மற்றும் கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 40 நிமிடப் பாடவேளைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை 50 நிமிடப் பாடவேளைகளுக்கு அமைய முன்னெடுப்பது சிக்கலானது என்றும், அதனை எவ்வாறு செய்வது என்பது குறித்து கல்வி அமைச்சு இதுவரை எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும், சீர்திருத்தங்கள் தொடர்பான எந்தவொரு தொகுப்புகளும் (Modules) இதுவரை எந்தப் பாடசாலைக்கும் கிடைக்கவில்லை எனவும், இந்நிலையில் ஜனவரி 5ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பித்து கற்பித்தல் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் பெரும் கேள்விக்குறி நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjpklfcw037go29n5vtsxvm0
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
சில வேளை அதுதான்…உண்மையாய் இருக்குமோ. 😂
-
”சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழரசுக் கட்சி கைவிடாது” - இளையதம்பி சிறிநாத்
”சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழரசுக் கட்சி கைவிடாது” தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாது என பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும். எனவே குறைந்த தீர்வாக இந்தியா கொண்டு வந்த 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரத்தை பெற்று அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை செய்ய வேண்டும். அதேவேளை தமிழ் மக்களின் மிக முக்கியமான கோரிக்கை சமஸ்டி முறையிலான தீர்வாகும். அதனை ஒருபோதும் இலங்கை தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுக்காது. புதிய ஆண்டு பிறக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்பார்ப்புக்கள், அபிவிருத்தி வாழ்வாதாரங்கள் முற்றுமுழுதாக கொண்டு செல்லப்பட்டுள்ளதா? என்று பார்த்தால் ஒரு ஏமாற்றமான நிலைமையே மிஞ்சி இருக்கின்றது. 2025 புயல் ஏற்பட்டு தமிழ் மக்களுடைய பிரதேசங்களிலும் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. போர்க்காலப் பகுதியில் சிதைக்கப்பட்ட கட்டுமானங்கள் இன்னும் மீண்டெழ முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை பெரிதும் பாதித்திருக்கின்றன. தற்போது இந்த புயல் காரணமாகவும் மக்களின் நிலை மேலும் மோசமாகியுள்ளது. அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆகக் குறைந்த தீர்வாக 13வது திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டிய மாகாண சபை அதிகாரங்கள் கூட பாரியளவில் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது மிக இலகுவாக பாராளுமன்றத்தின் அனுமதியுடன் செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. 13வது திருத்தத்தின் ஊடான இந்த மாகாண சபையை நாம் முதல் மிக வெற்றிகரமாக அதன் முழுமையான அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட அரசியல் நகர்வாக செய்ய வேண்டும் என்பதே யதார்த்த கள அரசியல் ஆகும் என தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/சமஸ்டி-முறையிலான-அரசியல/
-
சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️
சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️ adminDecember 28, 2025 தற்போதைய அரசாங்கத்தின் 5 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் உட்பட 6 பேருக்கு எதிராக, அறிவிக்கப்படாத சொத்துக்கள் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 🔍 விசாரணைக்குள்ளாகும் அமைச்சர்கள்: பிமல் ரத்நாயக்க வசந்த சமரசிங்க குமார ஜெயக்கொடி சுனில் ஹந்துன்னெத்தி நளிந்த ஜெயதிஸ்ஸ சுனில் வட்டகல (பிரதி அமைச்சர்) ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷார செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக வாக்குமூலங்களை வழங்குவதற்காக அவர் நாளை (டிசம்பர் 30, செவ்வாய்க்கிழமை) ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். சொத்துக்கள் எவ்வாறு திரட்டப்பட்டன என்பது குறித்து பணமோசடி சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சட்டத்தின்படி, மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களை (Asset Declaration) சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இதில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் கண்டறியப்பட்டால், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு தன்னிச்சையாகவோ அல்லது முறைப்பாட்டின் அடிப்படையிலோ விசாரணை நடத்தும் அதிகாரம் உண்டு. https://globaltamilnews.net/2025/225152/#google_vignette
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் சுற்றுப்போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN WI BAN 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN ITA BAN 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA USA 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group A - First IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group A - Second PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! USA முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group B - First AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group B - Second SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI Select BAN Select BAN BAN NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group C - First ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group C - Second BAN 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group D - First NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group D - Second SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 Y2 Y3 NZ 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 Y1 Y4 ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 X1 X4 IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 X2 X3 AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 Y1 Y3 PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 Y2 Y4 SL 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 X3 X4 SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 X1 X2 AUS 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 Y1 Y2 ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 Y3 Y4 PAK 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 X2 X4 AUS 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 X1 X3 IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) X1 Select X1 IND X2 Select X2 AUS X3 Select X3 Select X4 Select X4 Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) Super 8: Group 1 - First AUS சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) Super 8: Group 1 - Second IND 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Y1 Select Y1 ENG Y2 Select Y2 Select Y3 Select Y3 PAK Y4 Select Y4 Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) Super 8: Group 2 - First PAK சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) Super 8: Group 2 - Second ENG 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), Super 8: Group 1 - First X2 Super 8: Group 2 - Second Y1 AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, Super 8: Group 2 - First Y3 Super 8: Group 1 - Second X1 IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS IND IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ITA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Travis Head 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) VARRUN 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) AHBISEK SARMA 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SA 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) BUMRA 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) IND 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
-
மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது
மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது: adminDecember 28, 2025 யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் நீண்ட காலமாக திட்டமிட்டு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ஒரு பெண்ணையும், அவருடன் தொடர்புடைய மூவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளார். இது தொடா்பில் பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் குறித்த பெண் ஐஸ் போதைப்பொருளுடன் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சட்டவிரோத போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் போதை தரக்கூடிய ‘மாவா’ பாக்கு வகைகளுடன் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாக இந்த வலையமைப்பை நடத்தி வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது மற்றும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://globaltamilnews.net/2025/225120/
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
தான் கேட்க்கும்போது துப்பாக்கியை திருப்பி தரும்படி மதுஷிடம் கொடுத்து வைத்திருந்தாராம் டக்கிளஸ்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
நல்லூரில் யானையுடன் புகுந்த பெளத்தபிக்கு என்று ஒரு காணொளிவந்தது நல்லூர் கோவிலுக்கு பக்கத்தால் இந்திய ஐயப்பா கடவுள் தமிழ் பக்தர்கள் போகின்றார்கள் 🙄 முருகன் பக்தர்கள் கட்சி மாறிவிட்டர்களா- அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம்
அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம் adminDecember 28, 2025 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) கடற்கரையில், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்த விசேட ” அலையோடு உறவாடு ” உணவுத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்திற்கே உரிய தனித்துவமான பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் கடலுணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிராமிய உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் சந்தையும் இதில் இடம்பெறுகிறது. மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள், பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் கலாச்சார நிகழ்வுகள்,இரவு நேரத்தை உற்சாகப்படுத்த பிரம்மாண்டமான இன்னிசை கச்சேரி ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இன்று இரவு வரை நீடிக்கவுள்ள இந்தத் திருவிழா, காங்கேசன்துறை கடற்கரைப் பகுதிக்கு ஒரு புத்துயிரைத் தந்துள்ளதுடன், ஏராளமான மக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். https://globaltamilnews.net/2025/225120/- Screenshot_20251228_110921.png
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@புலவர் ஐயா, பதில்களை தரவேற்றும்போது பார்க்கின்றேன். எதற்கும் திரும்பவும் ஒருமுறை முழுவதுமாகச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். திருத்த விரும்பினால் தாராளமாகத் திருத்தலாம்- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து விசாரணை ஆரம்பம்! கைத்துப்பாக்கி தொலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். மதூஷிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்படும் நிலையில், இன்று (28) கம்பஹா நீதவானிடம் ஆஜர்படுத்தப்படுப்படவுள்ளார். https://athavannews.com/2025/1457509- இரசித்த.... புகைப்படங்கள்.
- “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
தேர்தலில் வெற்றி பெறுவது ஆட்சியை பிடிப்பது சீமான் நோக்கம் இல்லை என்பது இப்போது விளங்கிவிட்டது.. பிஜேபி நிகழ்ச்சி நிரல் படி தமிழ்நாட்டு மக்களை குழப்பி அடித்தல் அந்த கடமையை மிகவும் மோசமாக சீமான் செய்து கொண்டு போகின்றர். சமீபத்தில் பிஜேபி ஆதரவு மேடை ஒன்றில் புர்க்காவால் மூடிய ஒரு பெண்ணை இவர் தான் வீர புலி தமிழிச்சி என்று பேசவைத்தார்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@கிருபன் 23வது கேள்வியின் பதில் விடுபட்டுள்ளது.ENG மாற்ற முடியுமா?- கருத்து படங்கள்
- தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.