stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
கொழும்பில் கூடும் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச தோல் நோய் நிபுணர்கள்
வெப்பமண்டல சரும நோய்கள் குறித்த சர்வதேச மாநாடு இலங்கையின் சுகாதார சேவைக்கு உலகலாவிய பாராட்டு Published By: Vishnu 13 Mar, 2026 | 05:40 AM (செ.சுபதர்ஷனி) உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள வெப்பமண்டல நாடுகளின் சரும நோய்கள் குறித்த 2ஆவது சர்வதேச விசேட நிபுணர்கள் மாநாடு புதன்கிழமை (11) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமானது. "வெப்பமண்டல வலயங்களிலிருந்து முக்கிய விடயங்கள்" எனும் கருப்பொருளில் நடைபெற்றுவரும் இம்மாநாடு மார்ச் 14ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது. இலங்கை சரும நோய்கள் மற்றும் அழகியல் மருத்துவ விசேட நிபுணர்கள் சங்கம் மற்றும் ஜேர்மனிய விசேட நிபுணர்கள் சங்கம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. இதில் ஜேர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த 342 வெளிநாட்டுப் பிரதிநிதிகளும், இலங்கையிலிருந்து 150 நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய சர்வதேச சரும நோய்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிளயேர் புல்லர், குறைந்த வளங்களைக் கொண்டு இலங்கை சுகாதாரத் துறையில் காட்டும் அதீத வினைத்திறனையும் முன்னேற்றத்தையும் வெகுவாகப் பாராட்டினார். உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ள கவனிக்கப்பட வேண்டிய 10 முக்கிய நோய்களில் 7 நோய்கள் வெப்பமண்டல சரும நோய்களுடன் தொடர்புடையவை என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. சுமார் 4 பில்லியன் மக்கள் சரும நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டில் முன்வைக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்மானங்கள் உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் இலங்கை சரும வியாதிகள் சங்கத்தின் தலைவி விசேட வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/240837
-
இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க விமானப்படையின் போயிங் KC-135 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் (பிப்ரவரி) இராக்கில் ஒரு அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானதை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இது இரண்டு விமானங்கள் தொடர்புடைய ஒரு சம்பவம் என்றும், அதே சமயம், ‘எதிரி நாடு அல்லது நட்பு நாட்டின் தாக்குதலால்’ இது நடக்கவில்லை என்றும் அமெரிக்கா கூறுகிறது. இந்தச் சம்பவத்தில் ராணுவத்தின் KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. மேற்கு இராக்கில் ‘மீட்பு முயற்சிகள் நடந்து வருகின்றன’ என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் கூறுகிறது. சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் ஒரு அறிக்கை கூறுகிறது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர், ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா? விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்ன? சம்பவம் எப்போது நடந்தது - மீட்பு நடவடிக்கைகள் சரியாக எங்கு நடைபெறுகின்றன?, ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. KC-135 போன்ற எரிபொருள் நிரப்பும் விமானங்கள் போர்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன, போர் விமானங்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் இலக்கை அடைய நீண்ட தூரம் பறக்க வேண்டியிருக்கும் போது அவற்றுக்கு தேவையான எரிபொருளை நடுவானில் இவை வழங்குகின்றன. எரிபொருள் நிரப்பும் பணிகளின் போது, எதிரிகளால் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக விமானங்களின் விளக்குகள் முற்றிலுமாக அணைக்கப்படலாம். இது இராக் வான்வெளியில் நடந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது, ஆனால் அந்தப் பகுதி அண்டை நாடான இரானிலிருந்து எவ்வளவு தூரம் என்பது இதுவரை தெரியவில்லை. KC-135 விமானம் பொதுவாக மூன்று பேர் கொண்ட குழுவைக் கொண்டிருக்கும்- ஒரு விமானி, ஒரு துணை விமானி மற்றும் ஒரு பூம் ஆபரேட்டர். இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
-
நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் சுமார் 200 கிலோவுக்கு அண்ணளவான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு
நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் சுமார் 200 கிலோவுக்கு அண்ணளவான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு Published By: Vishnu 13 Mar, 2026 | 05:22 AM (செ.சுபதர்ஷனி) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த சுமார் 200 கிலோ கிராமுக்கு அண்ணளவான போதைப்பொருள் வெள்ளிக்கிழமை (13) காலை வனாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள விசேட தகன உலையில் வைத்து அழிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகள் யாவும் நிறைவடைந்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 40 கிலோ 533 கிராம் ஹெரோயின், 132 கிலோ 79 கிராம் கெத்தின் போதைப்பொருள், 55 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,482 போதை மாத்திரைகள் என்பன இவ்வாறு தகனம் செய்யப்படவுள்ளன. இந்த பாரியளவான போதைப்பொருள் இன்று (13) காலை 6.00 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புத்தளம், வனாத்தவில்லு - லொக்டோவத்த பகுதியில் அமைந்துள்ள விசேட தகன உலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. காலை 9.00 மணியளவில் குறித்த இடத்தில் போதைப்பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் குறித்த போதைப்பொருள் தொகுதியைப் பொறுப்பேற்கும் நிகழ்வை அறிக்கையிட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வනාத்தவில்லு லැக்டோவத்த பகுதியில் போதைப்பொருள் அழிக்கப்படும் நிகழ்வை அறிக்கையிடுவதற்காக அந்தந்த பிரதேச ஊடகவியலாளர்களை ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/240835
-
இரானுக்குள் தரைப்படை நடவடிக்கை?!
குர்து குழுக்களின் ரகசிய மகளிர் ராணுவம் - இரானுக்கு எதிராக இந்த பெண்கள் ஆயுதம் ஏந்தியது ஏன்? பட மூலாதாரம்,Valentina Sinis கட்டுரை தகவல் கவூன் காமூஷ் பிபிசி உலக சேவை 12 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடர்ந்து வரும் நிலையில், இராக்கை தளமாகக் கொண்ட ஆயுதமேந்திய இரானிய குர்திஷ் குழுக்கள் விரைவில் எல்லையைக் கடந்து இரானின் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான போரில் ஈடுபடக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இரான் பல குர்திஷ் குழுக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளது, இதில் ஒரு குர்திஷ் போராளி கொல்லப்பட்ட ஏவுகணைத் தாக்குதலும் அடங்கும். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மார்ச் 7 அன்று பேசுகையில் குர்திஷ்கள் இரானில் சண்டையிடுவதை விரும்பவில்லை என்று கூறினார். குர்திஷ் போராளிகளின் முழுவதும் பெண்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவை அணுகுவதற்கான அரிதான வாய்ப்பை பிபிசி பெற்றது. இரானிய குர்திஷ் போராளிகளுக்கான தளமாக வடக்கு இராக்கில் செயல்படும் ஆழமான குகைகள் மற்றும் நிலத்தடி சுரங்கப்பாதைகளுக்குள் நுழைவதற்கு பல நாட்கள் காத்திருந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது. அவர்கள் ஒரு ரகசிய தகவல் தொடர்பு வலையமைப்பை இயக்குகிறார்கள் மற்றும் குர்திஸ்தானின் பாதி தன்னாட்சி பெற்ற பகுதியில் கண்காணிப்புக்கு உட்பட்ட ஒரு சுயசார்பு வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஒரு பெண் புகைப்படக் கலைஞர் மட்டுமே வளாகத்துக்குள் நுழைந்து குர்திஷ்களுடன் பத்து நாட்கள் செலவிட அனுமதிக்கப்பட்டார். சமீபத்திய தசாப்தங்களில், இரானில் இருந்து பல குர்திஷ் கிளர்ச்சிக் குழுக்கள் எல்லையைத் தாண்டி இராக்கின் மலைகளுக்குச் சென்றுள்ளன. அவர்கள் இரானிய உளவுத்துறை, இராக்கில் உள்ள ஷியா பிரதிநிதிகள் மற்றும் துருக்கியப் படைகளிடமிருந்து தலைமறைவாக உள்ளனர். சமீபத்தில், வடக்கு இராக்கில் உள்ள முக்கிய இரானிய குர்திஷ் குழுக்கள் ஒரு கூட்டணியை உருவாக்கினர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குர்திஷ் தலைவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு போரில் சேருமாறு கேட்டுக்கொண்டதாக ஊகங்கள் எழுந்துள்ளன. மார்ச் 5 அன்று ராய்ட்டர்ஸுக்கு டிரம்ப் அளித்த தொலைபேசி நேர்காணலில், இரானில் குர்திஷ் தாக்குதலை ஆதரிப்பதாகக் கூறினார், "அவர்கள் அதைச் செய்ய விரும்பினால் அது அற்புதம் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். இருப்பினும், அமெரிக்க அதிபர் சனிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், இரானிய நிலப்பரப்பில் குர்திஷ் படைகள் வேண்டாம் என்று கூறினார். "போரை ஏற்கெனவே இருந்ததை விட சிக்கலானதாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சு தொடர்வதற்கு நடுவே, இரான் பல குர்திஷ் குழுக்களுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடங்கியது, அதில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் ஒரு போராளி கொல்லப்பட்டார். மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட குர்திஷ் குழுக்களில் ஒன்று குர்திஸ்தானின் சுதந்திர வாழ்க்கைக் கட்சி (PJAK), அவர்கள் இரானில் மீண்டும் கால் பதிக்க பல ஆண்டுகளாகத் தயாராகி வருவதாகக் கூறுகிறார்கள். "நான் என் குடும்பத்துக்காகவும், நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட குர்திஷ் மக்களுக்காகவும் போராடுகிறேன்," என்று 21 வயது பெண் போராளியான ஆரியன் கூறுகிறார். அவர் பிஜேஏகேவில் உள்ள பெண்கள் பாதுகாப்புப் படைப் பிரிவின் உறுப்பினராக உள்ளார். ஒரு குர்து இனத்தவராக, ஆரியன் இரானில் அநீதி மற்றும் பாகுபாட்டை அனுபவித்ததாகவும், ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகிறார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஜேஏகேவில் சேர்ந்தார். ரகசிய ராணுவ தளங்களில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Valentina Sinis இந்த சுரங்கங்கள் உணவு, பணம் மற்றும் வெடிமருந்து கிடங்குகளுடன் கூடிய பாதுகாப்பான புகலிடங்களாகும். பிஜேஏகே தனது போராளிகளின் எண்ணிக்கையை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது, ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இரானுடனான போரை தொடங்குவதற்கு முன்பே பெரும்பாலும் பெண்களைக் கொண்ட சுமார் 60 போராளிகள் இந்த தளத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். போராளிகளுக்கு ராணுவப் பயிற்சிகள், சித்தாந்த அமர்வுகள், துப்பாக்கி சுடுதல் மற்றும் ட்ரோன்களை கையாளுதல் போன்ற பல்வேறு திறன்களைப் பயிற்சி செய்கிறார்கள். அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பதற்ங்கள் அதிகரித்த சூழலில், எல்லையை நோக்கி அனுப்பப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்கள் மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். "இந்தப் போர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று" என்று 40 வயதான கெலாவெஜ் எவ்ரின் பிபிசியிடம் கூறினார். 20 வயதில், எவ்ரின் இரானிய நகரமான உர்மியாவில் தனது புவியியல் படிப்பை கைவிட்டு, ஒரு காலாட்படை வீரராக பிஜேஏகேவில் சேர்ந்தார். பின்னர் அவர் ஒரு செய்தித் தொடர்பாளராக ஆனார். ரகசிய குகைகளில் ஒன்றிலிருந்து பேசிய எவ்ரின், தனது வாழ்நாளில் பாதியை இந்த மலைகளில் கழித்ததாகவும், தான் போராளியாக சென்றதிலிருந்து தனது குடும்பத்தைப் பார்க்கவில்லை என்றும் கூறுகிறார். தற்போதைய தாக்குதல்களில் இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி இறந்திருக்கலாம் என்றாலும், இரான் முழுவதும் 2022 இல் தொடங்கிய பெண்கள் தலைமையிலான தொடர் போராட்டங்கள் ஏற்கெனவே இஸ்லாமிய குடியரசை பலவீனப்படுத்தியிருப்பதாக அவர் கூறுகிறார். பெண்கள் தலையை மூடும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதிகளைப் பின்பற்றாததற்காக இரானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 22 வயது மஹ்சா அமினி என்ற குர்திஷ் பெண்ணின் மரணத்தால் ஏற்பட்ட அமைதியின்மையை அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Valentina Sinis பெண்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு 'பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்' என்ற பெயரில் இயக்கமாக பரிணமித்த போராட்டங்கள் மீது, இரானிய அதிகாரிகள் கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டனர். ஆனால் அது சில புதிய பிஜேஏகே உறுப்பினர்களுக்கு ஒரு உத்வேகமாகவே அமைந்தது. PJAK-வில் சேருவதற்கு முன்பு, 18 வயதான பிகென் வெகுஜன போராட்டங்களில் பங்கேற்றார் மற்றும் பள்ளியில் ஹிஜாப் அணிய மறுத்து, ஒரு சிவில் ஒத்துழையாமையில் ஈடுபட்டார். "பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை," என்று பிகென் ஒரு சக போராளியின் தலைமுடியை மெதுவாக பின்னிக் கொண்டே கூறுகிறார். "நாங்கள் வீட்டு வன்முறை மற்றும் சமூக கட்டுப்பாடுகளை அனுபவிக்க வேண்டும், அல்லது புரட்சி மூலம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்." என்கிறார் பிகென். குர்திஷ் கிளர்ச்சிக் குழுக்கள் பெரும்பாலும் குழந்தைகளை படையில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்படுகிறார்கள், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிகென் கிளர்ச்சிக் குழுவில் சேர்ந்தபோது ,இரானில் ஒரு பள்ளி மாணவியாக இருந்தார். இங்குள்ள பல போராளிகள் தங்களுக்கு ஆயுதமேந்திய எதிர்ப்புதான் ஒரே வழி என்று கூறுகிறார்கள். "குர்திஷ் மக்களின் அடுத்த தலைமுறைக்கு சுதந்திரமான எதிர்காலத்தைப் பெறுவதற்கானதே எனது போராட்டம்," என்று 23 வயதில் கெரில்லா போராளியாக மாறிய பல் மருத்துவர் டெலால் கூறுகிறார். "குர்திஷ் மக்களுக்கு... கடந்த இருநூறு ஆண்டுகள் அடக்குமுறை மற்றும் வன்முறையால் அறியப்படுகின்றன," என்று அவர் மேலும் கூறுகிறார். பிஜேஏகே 2004 இல் உருவாக்கப்பட்டது மற்றும் துருக்கிய அரசுடன் நான்கு தசாப்த கால மோதலுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆயுதங்களை ஒப்படைத்த துருக்கியில் உள்ள ஒரு பிரிவினைவாத குழுவான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் (PKK) இணைக்கப்பட்டது. இந்த முடிவை மதிக்கிறோம் என்று பிஜேஏகே கூறியது, ஆனால் இரானிய குர்துகள், அந்நாட்டின் இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பைத் தொடருவார்கள். துருக்கி மற்றும் இரான் இரண்டும் பிஜேஏகேவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கின்றன. துருக்கி பாதுகாப்பு அமைச்சகம், "பிஜேஏகே என்ற பயங்கரவாதக் குழுவின்" செயல்பாடுகளை கண்காணிப்பதாகக் கூறுகிறது, இது இனப் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அது குற்றம் சாட்டுகிறது. உள்நாட்டுப் போர் குறித்த அச்சம் பட மூலாதாரம்,Valentina Sinis குர்திஷ் போராளிகள் தங்களுக்கு முன்னால் உள்ள சவாலின் தன்மையை அறிந்திருக்கிறார்கள். ஒருவேளை இரானின் இஸ்லாமிய குடியரசின் நன்கு ஆயுதம் ஏந்திய படைகளுடன் நேரடி மோதலுக்கான வாய்ப்பு கூட இருக்கலாம். "ஒரு உள்நாட்டுப் போரை எதிர்கொள்ள மாட்டோம் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று எவ்ரின் பிபிசியிடம் கூறுகிறார். "போரை ஆட்சியின் வீழ்ச்சியை நோக்கி வழிநடத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், இதனால் போர் நம்மை நோக்கித் திசைதிருப்பப்பட்டு எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டிய கட்டாயம் ஏற்படாது," என்று அவர் மேலும் கூறுகிறார். "மத்திய கிழக்கு மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது, இரான் மக்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்காலத்திற்காக ஒரு முடிவை எடுக்க வேண்டும்." என்கிறார் எவ்ரின். இரானிய எதிர்க்கட்சி குழுக்கள் இந்தப் போரிலிருந்து இரான் பிராந்தியத்தில் ஜனநாயகத்தின் ஒரு உதாரணமாக வெளிவரும் என்று நம்புகின்றன, ஆனால் தேசியவாத சக்திகள் வெற்றி பெற்றால் அது மாறுபட்ட சுழற்சியாக இருக்கும் என்று அஞ்சுகின்றன. இரானின் சுமார் 9 கோடி மக்கள்தொகையில் குர்துகள் 10% வரை உள்ளனர், மேலும் அவர்கள் பல தசாப்தங்களாக இஸ்லாமியக் குடியரசால் ஓரங்கட்டப்பட்டு துன்புறுத்தப்படுவதாக உணர்ந்தனர். அது முதலே இராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் வாழும் இவர்கள் மீது, இரானிய அரசு தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. குர்திஷ் குழுக்கள் அமைத்திருக்கும் புதிய கூட்டணியின் தலைவர்களிடம் பிபிசி பேசியதுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான பேச்சு குறித்து அவர்களிடம் கேட்டது, ஆனால் அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். மேலும் படைகள் இதுவரை இரானின் எல்லையைத் தாண்டியுள்ளதாக வந்த செய்திகளை நிராகரித்தனர். இருப்பினும், இரானிய மண்ணில் ஏற்கனவே "குறிப்பிடத்தக்க" ஆயுதப் படைகள் இருப்பதாகவும், அவர்கள் செயல்பட சரியான தருணத்திற்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் பிஜேஏகே கூறுகிறது. "எங்கள் ராணுவ ஈடுபாடு அடுத்த சில நாட்களில் விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பொறுத்தது" என்று ஒரு தலைவர் பிபிசியிடம் கூறினார். அமெரிக்கா மீது சந்தேகம் பட மூலாதாரம்,Valentina Sinis மற்ற இரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், பல்வேறு வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாகவும் கூறுகின்றன. இரானிய குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியின் (KDPI) தலைவர் முஸ்தபா ஹிஜ்ரி, "மாற்றத்திற்குட்பட்ட காலத்தில் இரானிய குர்திஸ்தானை நிர்வகிப்பது" தங்கள் பணி என்று கூறுகிறார், மேலும் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய பழிவாங்கலில் இருந்து விலகி இருக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதற்கிடையில், சில குர்திஷ் போராளிகள் வரவிருக்கும் எந்தவொரு போரிலும் அமெரிக்க ஆதரவை நம்பியிருக்க முடியுமா என்று சந்தேகிக்கின்றனர். இரானிய குர்திஷ் போராளிகளை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் பிபிசியிடம் பேசுகையில், அமெரிக்க விமானப்படையின் உத்தரவாதமான ஆதரவு இல்லாவிட்டால், எதிர் குழுக்கள் தரையில் படைகளை நகர்த்தாது என்று கூறினார். இரானிய இராணுவம் வலுவாக உள்ளது என்றும், குர்திஷ் போராளிகள் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால் "நொறுக்கும்" விளைவை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் நம்புகிறார். பெண்கள் பாதுகாப்புப் படைகளின் பெண் போராளிகளுக்கு, அவர்கள் விரும்பும் 'சுதந்திரம்' வருவதற்கு நீண்ட காலம் ஆகிறது. டெலால் இப்போது பயிற்சி தளங்களை விட்டு வெளியேறி எல்லைக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளார். இரானின் இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான போரில் குர்துகள் இணைந்தால், எந்தப் போரும் எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை அறிய வழி இல்லை. வாலண்டினா சினிஸின் கூடுதல் செய்திகளுடன் பெண் போராளிகள் தங்கள் உண்மையான பெயர்களைக் கொடுக்கவில்லை, பாதுகாப்பை உறுதி செய்ய இராணுவ அழைப்பு அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. https://www.bbc.com/tamil/articles/cge8v9yx4qdo
-
செம்மணி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!
செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல் ஆரம்பம் Published By: Vishnu 13 Mar, 2026 | 05:02 AM செம்மணி மனிதப் புதைகுழியில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியன்று மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதியை வியாழக்கிழமை (12) மாலை யாழ்ப்பாணம் நீதிவான் உள்ளிட்ட அகழ்வு பணிகளில் ஈடுபடும் தரப்பினர் நேரில் கள விஜயம் செய்து பார்வையிட்டனர். இதன்போது அகழ்வு பகுதியில் நீரினுடைய அளவு மேற்பார்வையயிடப்பட்டு குறித்த நீரை அகற்றுகின்ற நடவடிக்கை மார்ச் மாதம் 28ஆம் திகதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்ததுடன் அகழ்வு பணிக்கான தற்போதைய திகதியாக ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அகழ்வு பணிகள் தொடர்பான வழக்கின் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஏப்ரல் மாதம் 8 ஆம் திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/240833
-
ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்க அனுமதி
ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்க அனுமதி Mar 13, 2026 - 06:41 AM ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, தற்போது கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்ய பல நாடுகளுக்கு 30 நாள் உரிமத்தை அமெரிக்கா வழங்கியுள்ளது நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் போரைத் தொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, அமெரிக்கா தனது மூலோபாய பெற்றோலிய கையிருப்பில் இருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை விடுவிக்கும் என்று அமெரிக்க எரிசக்தி துறை அறிவித்த நிலையில், குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிக உயர்வு ஒரு குறுகிய காலத்திற்கான இடையூறு மட்டுமே. இது நீண்ட கால அடிப்படையில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmo78u590001356p0iafwgbx
- Today
-
“காயங்களைத் தாண்டி” காபி மேசை நூல் வெளியீடு – இலங்கையில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சி
“காயங்களைத் தாண்டி” காபி மேசை நூல் வெளியீடு – இலங்கையில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சி Published By: Vishnu 13 Mar, 2026 | 01:30 AM Alliance Development Trust (ADT) நிறுவனம் தயாரித்த “Beyond the Scars” (காயங்களைத் தாண்டி) என்ற காபி மேசை நூல், கொழும்பு நகர மையத்தில் அமைந்துள்ள Courtyard by Marriott Colombo City Centre ஹோட்டலின் Sapphire Hall மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் வளர்ச்சி கூட்டாளர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் முக்கிய அம்சமாக, சுய உதவி குழு உறுப்பினர்களான இரண்டு பெண்கள் தங்களது உண்மை வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இவர்களில் ஒருவரின் கணவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்; அவர் மொரட்டுவை, எகொடாவுயானா பகுதியில் நடைபெறும் Egodauyana சுய உதவி குழு கூட்டங்களை வழிநடத்தி வருகிறார். தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் துணையாக இருந்து எதிர்கொண்ட அனுபவங்களை அவர் பகிர்ந்தார். மற்றொரு உறுப்பினர் நேரடியாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்; நரம்பு சேதம் மற்றும் மன அழுத்தத்தையும் எதிர்கொண்டுள்ளார். தன்னுடைய போராட்டங்களையும் மீட்பு பயணத்தையும் அவர் தைரியமாக பகிர்ந்தார். இவர்களின் உறுதி, தைரியம் மற்றும் விடாமுயற்சி நிறைந்த அனுபவங்கள் நிகழ்வில் கலந்து கொண்டோரின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த நிகழ்வில், இவ்விரு சுய உதவி குழு உறுப்பினர்களும் முதன்மை விருந்தினர்களாக கௌரவிக்கப்பட்டனர். NCEASL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கோட்ப்ரி யோகாராஜா அவர்களால் காபி மேசை நூலின் முதல் பிரதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த வெளியீடு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உறுதி, மரியாதை மற்றும் நம்பிக்கை நிறைந்த கதைகளை வெளிப்படுத்துவதோடு, அவர்கள் இன்னும் எதிர்கொள்ளும் சமூக குற்றப்பரப்பு மற்றும் பாகுபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்த காபி மேசை நூல் LKR 6,000 என்ற விலையில் வாங்குவதற்கு கிடைக்கப்பெற்றது. தேசிய கணக்கீடுகளின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 1,300 புதிய தொழுநோய் சம்பவங்கள் பதிவாகின்றன. உடல் பாதிப்புகளுக்கு மேலாக சமூக புறக்கணிப்பும் பலருக்கு இன்னும் சவாலாக உள்ளது. நிகழ்வில் உரையாற்றிய ADT பிரதிநிதிகள், தொழுநோயை எதிர்கொள்ள மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல், சமூக ஆதரவு, விழிப்புணர்வு மற்றும் உட்சேர்க்கை முக்கியமானவை என வலியுறுத்தினர். நிகழ்வின் இறுதியில், பங்கேற்பாளர்கள் ADT நிறுவனத்தின் பணிக்கு Goodwill Ambassadors ஆக இணைந்து விழிப்புணர்வு முயற்சிகளை ஆதரிக்க அழைக்கப்பட்டனர். பலர் இதில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்தனர். “தொழுநோய் என்பது சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு சமூக நீதி தொடர்பான பிரச்சினையும் ஆகும். இந்த வெளியீட்டின் மூலம் குற்றப்பரப்பையும் பாகுபாடுகளையும் அனுபவித்தவர்களின் குரல்களையும் கதைகளையும் சமூகத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்,” என ADT பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்த காபி மேசை நூல், உண்மை வாழ்க்கை கதைகள், புகைப்படங்கள் மற்றும் அனுபவங்களை இணைத்து, சமூகங்களில் அதிகமான புரிதலும் கருணையும் உருவாக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு விருந்தினர்கள் இடையிலான கலந்துரையாடலுடன் நிறைவடைந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வலுப்படுத்தவும், தொழுநோயற்ற இலங்கை என்ற இலக்கை அடையவும் கூட்டுப்பணியை மேம்படுத்துவது குறித்து கருத்துகள் பகிரப்பட்டன. Alliance Development Trust (ADT) பற்றி Alliance Development Trust என்பது இலங்கையில் செயல்படும் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கிய அபிவிருத்தி முயற்சிகள் மூலம் பாதிக்கப்படும் சமூகங்களை வலுப்படுத்துவதற்காக ADT பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. https://www.virakesari.lk/article/240831 https://www.adtlanka.org/
- நேசமணி புகழ்ந்த துபாய் துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்..
-
இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
மூஞ்சுரூ தான் போகவே வழிய காணோம்.. இதுல விளக்கு மாத்தை காவி திரிஞ்சதாம்
-
தமிழனின் சிற்பக் கலை.
வாய்க்குள் இறங்கும் கத்தி ரங்கநாதர் கோயில் - சிறி ரங்கம்
-
மலரும் நினைவுகள் ..
இந்த றம்பளரில் தேத்தண்ணி / கொப்பி உறிஞ்சி குடித்த அனுபவம் உண்டா.. ரெல் மீ..
-
நான் ரசித்த விளம்பரம் .
பொறுமை இருந்தால் சாப்பிட உட்காரவும்... இல்லையென்றால் கிளம்பி போய்ட்டே இருக்கவும் ..
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பாசி பருப்பு பூரி சாம்பார்.. உருளை கிழங்கை தவிர்க்க விரும்புபவர்களுக்கு ..- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பால் நிலவு நேரம்.. ( இனி அந்த கால கிளுகிளுப்பான பாடல்கள் பதிவேற்றம் செய்யப்படும் ) படம் : அன்பு ரோசா ( 1975 ) இசை: சங்கர் - கணேசு வரிகள்:கண்ணதாசன் பாடியோர்: SPB & P சுசீலா- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
பெண்ணல்ல நீ ஒரு.. படம் : சொந்தமடி நீ எனக்கு ( 1977 ) பாடியோர் : ஜெயசந்திரன் & சுசீலா இசை : V குமார்- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஏற்கெனவே கடைஞ்சா கூறியதும் இதுவே. ஆப்கானிஸ்தானில் நடந்ததும் இதுவே. போர் முடிய அமெரிக்கர்கள், அதன் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று பாப்போம்! இவரே ஆட்சியை இழக்கும் சந்தர்ப்பமும் ஏற்படலாம்.- இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
இந்தியாவே பெற்றோலுக்காக தள்ளாடுது. ரம்பைக் குசிப்படுத் ரசியாவை கையைவிட்டதன் பலன்.- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஈரானை ஆட்சிமாற்ற போய் மத்திய கிழக்கையும் கை விடுவதோ தெரியவில்லை. மக்களின் கிளர்ச்சியைப் பார்த்து தலைமையை அழித்துவிட்டால் ஆட்சி மாறிவிடும் என்று போட்ட கணக்கு தப்பாகிவிட்டது.- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
இந்தப்போரில், சீனா ஈரானுக்கு ஆதரவாக நேரடியாக இறங்குமென அமெரிக்கா கணக்கு போட்டிருக்கலாம், அதே நேரம் வெனிசூலாவைப்போல் ஈரானையும் தனது கடுப்பாட்டுக்குள் இலகுவாக கொண்டுவரலாமென கணக்குப்போட்டு போரை தொடங்கியிருக்கும். இப்போ, போரை தொடரவும் முடியாமல், முடிக்கவும் முடியாமல் சொதப்புது. ட்ரம்பின் ஆட்டம் முடிவுக்கு வரும் நேரமிது. ஈரானிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால், இந்தப்போரில் பாவித்திருக்குமே, இப்போ இல்லாமல் எப்போ பாவிக்கப்போகிறது என்று அமெரிக்காதான் நிரூபிக்க வேண்டும். அணு ஆயுதம் இருக்கிறது, மக்களை வதைக்கிறது என்று பொய் காரணங்களை சாட்டி போர் தொடுத்த ட்ரம்ப், அவர்களது ஆட்சி பற்றியோ, மதம் பற்றியோ அக்கறையில்லை, அவர்கள் எங்களோடு உடன்பட்டு ஆட்சி நடத்தவேண்டுமென்று உண்மையை கூறி விட்டார். நாங்கள் தான் இன்னும் அணு ஆயுதம் பற்றி கதைக்கிறோம். எல்லோருக்கும் நானே வல்லரசு என்கிற தலைக்கனமே ஆழ் கிணறில் தள்ளப்போகிறது. உலகை இருளிலும் வறுமையிலும் தள்ளியதே இப்போரின் முடிவு!- Yesterday
- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
போரை விரும்பாத எங்கள் தானை தலைவர் தம்பர்! வாழ்க!😂- இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
ஈரான் ஹோர்மூஸ் கடல்வழி பாதையில் கண்ணி வெடிகள் வைத்தால் , ஈரான் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அழிவை எதிர்கொள்ளும் : ட்ரம்ப் ! அதாவது அணுகுண்டு தாக்குதல் கூட நடத்துவோம் என்று மறைமுகமாக சொல்றார். அதுசரி , ஈரான் மீது ஏன் தாக்குதல் நடத்தினீங்க? ட்ரம்ப்: அது வந்து அவங்க அணு ஆயுதம் செய்யுறாங்க . அதனால் சூழல் மாசடைந்து உலகம் பாதிக்கப்படும் அதுதான். இந்த உலகம் விசித்திரமானது ! இந்த ஐ.நா சபையில் சிறுவர்களுக்கு என்று ஏதோ ஒரு பிரிவு இருக்குதே , அது ஈரானில் ஒரு பாடசாலையில் அத்தனை மாணவிகள் உயிரிழந்ததுக்கு ஏதாவது கருத்து சொல்லிச்சா ? இந்த உலகம் விசித்திரமானது! அமெரிக்காவை நம்பியதற்கு மத்தியகிழக்கு நாடுகள் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாலும் , அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையாவது கூறினார்களா ? அவர்கள் அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்க ரெடி . ஆனால் ஈரான் முன்னேறி விடக்கூடாது . காரணம் மத்திய கிழக்கில் புத்தி ஜீவிகளை அதிகம் கொண்ட நாடு ஈரான். குழப்பங்கள் அதிகம் ஏற்படாமல் விட்டால் , ஈரான் அறிவியலில் தங்களை வென்று விடுவார்கள் என்ற பயம் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு. அப்படி ஈரான் முன்னேற கூடாது என்று ஏன் நினைக்கிறார் என்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அதை சொன்னால் இந்த பதிவை மடை மாற்றி விடுவார்கள். இப்போதைய நிலையில் நாம் தனிப்பட்ட நபர்களாக நம்மை பார்த்துக்கொள்வதும் , பெற்றோல் புல் டேங் அடித்து வைப்பதும் , சாப்பாடு தட்டுப்பாடு வந்தால் சமாளிக்கூடிய அளவு ஏற்பாடு செய்து வைப்பதுமே செய்யக்கூடியவை. செய்திகள் வாசிக்கும் , தொகுக்கும் ஆர்வம் காரணமாக இரு பக்க செய்திகளை ஆராய்ந்து போலி செய்திகளை ஒதுக்கி உண்மையான செய்திகளை எழுதினால் சண்டைக்கு வருகிறார்கள். நேற்று அப்படி சண்டை பிடித்த ஏராளமானோரை ப்ளொக் பண்ணினேன். அதற்கு முன் அவர்களின் புரோபைலை பார்த்தால் அநேகமானோர் மத்தியகிழக்கு நாட்டில் வேலை செய்வோர். ஈரான் அடிக்கும் குண்டு அவர்கள் தலைமீது விழுந்து விடுமோ என்று ஊரில் உள்ள அவர்கள் வீட்டில் குடும்பத்தார் பயந்துகொண்டு இருப்பார்கள். அவர்களால் வெளிப்படையாக அவர்கள் வாழும் நாட்டை திட்ட முடியாது. அந்த ஆதங்கத்தை என்னைப் போன்றோரை திட்டி தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த யுத்தத்தால் , யாராவது வந்து நான் வசிக்கும் இடத்தில் குண்டு போட்டால் மட்டுமே எனக்கு பாதிப்பு வரும். மற்றப்படி எனக்கு பெரிய பாதிப்பு இல்லை. பொருட்கள் விலை உயர்வோ , பெற்றோல் விலை உயர்வோ என்னைப் பாதிக்கப்போவதில்லை. ஆனால் சின்ன விலை உயர்வைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத பெருமளவு மக்கள் தொகை உள்ளது. உலகம் பூராக அப்படியொரு மக்கள் கூட்டம் உள்ளது. அந்த வீட்டு பிள்ளைகளை நினைத்தால்தான் பாவம். யுத்தம் காரணமாக அமெரிக்கா பிள்ளை இறக்காது. இஸ்ரேல் மீது எத்தனை குண்டு போட்டாலும் , அந்த நாட்டு பிள்ளைகள் நிலக்கீழ் அறையில் பாதுகாப்பாக இருக்கும். இந்த யுத்தத்தில் ஈரான் எவ்வளவு பதிலடி கொடுத்தாலும் இஸ்ரேலில் ஒரு குழந்தையாவது இறந்ததா ? ஆனால் ஈரானில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளாவது இறந்திருக்கும். காசாவில் எத்தனை குழந்தைகள் இறந்தன? ஒரு காலத்தில் யுத்தம் என்றால் யுத்தப் பிரகடனம் செய்து குழந்தைகள் , முதியோர்களை எல்லாம் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடு செய்துதான் யுத்தம் நடக்கும்..அரச காலத்தில் இருந்த அந்த நாகரீகம் கூட இப்போது இல்லை. இதையெல்லாம் நாம் மாற்ற முடியாது. உலகத்தின் நியதி இதுதான். அமெரிக்கா அடி வாங்குது , இஸ்ரேல் அடிவாங்குது என்று சந்தோசப்பட என்னால் முடியாததுக்கு காரணம் அதுதான். மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் தாக்குதலால் வந்த இழப்பு அந்த நாட்டு தலைவர்கள் , அரசர்களின் பொக்கட் மணி. அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் செலவு என்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள முதல் 10 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2200 பில்லியன். அதாவது அமெரிக்காவின் பத்து பணக்காரர்களின் பொருளாதார பலம் இலங்கை நாட்டின் மொத்த உற்பத்தியைவிட 25 மடங்கு அதிகம். இந்த நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை திருப்பி அடிக்க பயமென்றால் ஆட்சியை என்னிடம் தாருங்கள் என்று சஜித் காமெடி பண்ணிட்டு இருக்கார். நாமும் அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் நட்டம் என்று சந்தோசப் பட்டுடுட்டு இருக்கம். யுத்தம் முடிய ட்ரம்ப் வந்து இலங்கை பொருட்களுக்கு இறக்குமதி வரியை கூட்டப் போறேன் என்றால் , உங்கட வரி காசில் இலங்கை அரசில் இருந்து கொஞ்சம் பேர் போய் ட்ரம்பின் காலில்தான் விழனும் -whatsapp-- மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி
நான் அறிந்த வரையில் இரு பெரு மதங்கள் உருவாகிய பூமியில் என்றும் கலவரமும் இரத்தக்களரியும் தான்..... - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.