Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. கள உறவுகள் யாவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! அமைதியும் அன்பும் பிறர் அன்பும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மலரட்டும்.
  3. நன்றி சுவைப்பிரியன் களத்தில் உங்களின் சேவைகளின் அர்ப்பணிப்பு, உங்களுக்குரிய அனுபவங்கள் எல்லோருக்கும் தெரியும். அவை யாழ் களத்தில் எங்கள் எல்லோருக்கும் உதவியாக இருக்கும் 🙏
  4. நல்ல விடையம் ஏராளன் மிகவும் சுறுசுறுப்பாகத் தகவல்களை சேகரித்துத் தந்துள்ளார். கோஷன் எழுதியதைப்போல முன்னோட்டமாக 10 வீடுகளுக்கான வசதி செய்து கொடுக்கலாம் 5 சுழிபுரம் , 5 காரைநகர் , இடையே திருத்த வேலைகள் பொன்னாலை யில் செய்யலாம். அடுத்த கட்டமாக முதலில் பொன்னாலையில் நடமாட முடியாத அந்தச் சகோதரர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய எவ்வளவு செலவாகும் என அறிய விரும்புகின்றேன் ஏராளன் அடுத்த கட்டமாக ஒரு வீட்டில் கழிவறை அமைத்துக் கொடுக்க என்ன செலவாகும் என்பதையும் அறியாத தந்தால் உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது ஒருவரிடம் மட்டுமல்லாது பலரிடம் கேள்விப் பத்திரம் மூலம் மொத்த செலவைக் கேட்டு ஒரு ஒப்பந்த அடிப்படையில் செயற்படுவதும் நல்லது என நினைக்கின்றேன் ஏராளன் ஏற்றுக் கொண்டால் அவரை இந்தத் திட்டத்திற்கான பொருளாளராக நான் பிரேரிக்கின்றேன் அவரால் கட்டாயம் நம்பிக்கையான முறையில் நிதி கையாளப்படும் உங்கள் அபிப்பிராயங்களையும் சொல்லுங்கள் உங்கள் ஆதரவிற்கு நன்றி தங்கை யாயினி கட்டாயம் நிழலி இந்தத் திட்டம் 2026 இல் யாழின் ஒன்றிணைந்த ஒரு உதவித் திட்டமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு .
  5. இந்த வளர்ச்சிக்கும், சீனாவின் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. இந்த வளர்ச்சியின் (தமிழ் நாடு உட்பட) ஒரு முக்கிய, பெரும் பங்கு , சீனாவில் தங்கியிருத்தலை குறைத்தல்,நீக்குதல் (decoupling) மற்றும் அப்படி தங்கி இருப்பதால் மேற்றுகின் பார்வையாக இருக்கும் ஆபத்துகளை நீக்குதல் (derisking). அனால், சீன வளர்ந்தது, வளர்ச்சிக்கான வாய்ப்பின் முழு இயந்திரமாக செயற்றப்படும் அடித்தள அமைப்பை கட்டி எழுப்பி. அது எந்த மட்டத்தில் பார்த்தாலும் clockwork துல்லியத்துடனும், கனகச்சிதமாகவும் செயற்படும் அமைப்பு. அப்படி வேறு எந்த நாட்டிலும் இல்லை, எனவே சீனாவை ஒருபோதும் தவிர்க்க முடியாது. இதனாலேயே, சீனாவை மேற்கு விரும்பியவாறு முடக்க முடியாமல் இருப்பது. உ.ம். அமெரிக்க முன்னாள் வர்த்தகம் அல்லது அதை போன்ற அமெரிக்கா அமைச்சின் முன்னாள் அமைச்சர் ஒப்புக்கொண்டது , ஹுவாவை ஐ தட்டி கொட்டி குழப்பிகுழப்பிகுழப்பி கட்டி முடக்குவதே (hobble ) அமெரிக்காவின் குறிக்கோள் (ஆக இருந்தது,), ஆனால் ஹுவாவேய் அதை எல்லாவற்றையும் எதிர்த்து நின்றது மட்டும் அல்லாமல், மீறி வளர்ந்த்தும் விட்டது. இந்த பெருமளவு வெளியார் முதலீட்டில் வளர்வது , வெளிநாடுகளுக்கு (மேட்ற்கு) இந்திய பொருளாதாரத்தில் பிடியை உருவாக்கும் (மேற்கு சீனாவில் இதை எதிர்பார்த்தது, அனல் சீன மேவிவிட்டது) சீன , 2018 இல் இரங்கி வந்ததன் காரணம், சீனா, அமெரிக்காவில் அதன் உணவான சோயாவுக்கு பெருமளவில் அந்த நேரம் தங்கி இருந்தது, இப்போது அமெரிக்கா சோயா வியாபாரம் படுத்து, பல சோயா துறை பண்ணைகள் , டதொழிற்றசாலைகள் மொடப்படுகிறது, டிரம்ப் க்கு சீன trump க்கு சீன trump (card) விளையாட்டு காட்டியதால்
  6. Today
  7. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 78 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 78 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை சில இலங்கை புராணக்கதைகள் கூறுவது போல், மகேந்திரன் [மகிந்த] மாயமாக பறக்காமல் தென்னிந்தியாவில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணம் செய்ததாக இந்த கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் மகேந்திரன் [மகிந்த] துறவியானதற்கான காரணம் என்னவென்றால்: பண்டைய இந்திய மரபில், ஒரு மன்னர் இறந்தால், அவரது மூத்த மகன் அரியணையைப் பெறுவார் என்றும் இளைய சகோதரர்கள் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்றும் பொதுவாக அவர்கள் துறவிகளாக மாற வேண்டியிருந்தது. ஏனெனில் அவர்கள் தங்கள் தாயகத்தில் தங்க அனுமதிக்கப் படுவதில்லை. எனவே தான் அசோகரின் ஒன்றுவிட்ட சகோதரரான மகேந்திரன் [மகிந்த], இந்த மரபைப் பின்பற்றி ஒரு புத்த துறவியானார். முக்கிய குறிப்புகள்: தென்னிந்தியாவிலிருந்து புத்த மதம் படிப்படியாக இலங்கைக்கு பரவியது. பௌத்தம் தமிழ்ப் பகுதிகளுக்கும் இலங்கைக்கும் பரவுவதில் பேரரசர் அசோகரும் அவரது குடும்பத்தினரும் முக்கிய பங்கு வகித்தனர். 7 ஆம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் புத்த மதம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது, அதே நேரத்தில் இந்து மதமும் சமண மதமும் மிகவும் பிரபலமாக இருந்தன. அசோகரின் சகோதரர் மகேந்திரன் [மகிந்த], இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிகளில் அல்ல, தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு பயணம் செய்திருக்கலாம். மேலும், தமிழ் நாடுகள் பேரரசர் அசோகரின் ஆட்சியிலிருந்து சுதந்திரமாக இருந்தன. மேலும் மேற்கூறிய மரபின்படி அசோகரின் தம்பி மகேந்திரன் [மகிந்த] தமிழ் நாட்டை வசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது இயல்பானது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாடு அல்லது மகதத்தில் (Magadha) பன்னிரண்டு ஆண்டு பஞ்சத்தின் போது சமண மதம் தமிழ்நாட்டிற்கு வந்தது. மன்னர் சந்திரகுப்த [Chandragupta] கூட ஆட்சியைத் துறந்த பிறகு சமணராகி, மைசூருக்கு [Mysore] வந்து அங்கு இறந்தார். புத்த மதம் சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் நாட்டிற்கு வந்து, கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை கணிசமான காலம் நிலவியது. கி.பி 300 முதல் கி.பி 600 வரையிலான தென் இந்தியா தமிழ் மன்னர்களின் வரலாறு எதுவும் இல்லை. அதுமட்டும் அல்ல, பொது சகாப்தத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குக் கூட தமிழ் மன்னர்களின் விவரங்கள் தெளிவாக இல்லை. களப்பிரர் (Kalabhra dynasty) தென்னிந்தியாவை ஆண்ட அரசர்கள் ஆவார்கள். இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய பொ.ஊ. 250 – பொ.ஊ. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சைன சமயம், பௌத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்று பொதுவாக நம்பப்படுகிறது? இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. அதன் பின், ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் போர்க்குணமிக்க சைவ மதம் [militant Saivism] நிலவியது. கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கரர் அந்தக் காலகட்டத்தில் தனது பிராமண மத வடிவத்தைப் [Brahminical religion] பரப்பினார். ஏழாம் நூற்றாண்டில், சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறிய பாண்டிய மன்னரின் ஆட்சியில் சமண மதம் கடுமையான அடியைச் சந்தித்தது. அவரது பெயர் மாறவர்மன் அரிகேசரி [Maravarman Arikesari]. அரிகேசரி கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆவார். பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மகனான இவர் தன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டார். கி.பி.640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றார். திருவிளையாடல் புராணத்தில் இவன் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்று பெரிய சின்னமனூர்ப் பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளான். இந்த மன்னர் ஒரு வெறித்தனமான குணம் [fanatical character] கொண்டவர், முதலில் சமணத் துறவிகளின் தூண்டுதலின் பேரில் சைவர்களை சித்திரவதை செய்தார். பின்னர் அவர் சைவ மதத்திற்கு மாறி சமணர்களுக்கு எதிராக சமமான தீவிரத்துடன் இருந்தார். இவர் சுமார் எட்டாயிரம் சமணத் துறவிகளை உயிருடன் தூக்கிலிட்டார். இது மற்ற அனைத்து மதப் பின்பற்றுபவர்களுக்கும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியிருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பௌத்தர்கள் பெருமளவில் இலங்கைக்கு இடம்பெயர்ந்திருக்க வேண்டும், இருப்பினும், இந்த துயரமான மரணத்திற்குப் பிறகும் சமணர்கள் நீண்ட காலம் உயிர் பிழைத்தனர். மகாவம்சத்தில் தமிழர்களுக்கு எதிரான சார்பு இதனால்த்தான் தோன்றியிருக்கவும் ஒரு வாய்ப்பு உண்டு, ஆனால் தீபவம்சத்தில் வெளிப்படையாகக் அப்படி ஒன்றும் கூறப்படவில்லை. இந்தியாவில் மகாயான பௌத்தம் பரவுவதை கடுமையான தேரவாத பௌத்தத்தால் தாங்க முடியவில்லை என்பதும் இதற்குக் இன்னும் ஒரு காரணமாக இருக்கலாம். சமையலில் இருந்து வரும் சூடான புகையை தினமும் வெளிப்படுத்தாவிட்டால் ஓலை கையெழுத்துப் பிரதிகள் நீண்ட காலம் நிலைத்திருக்காது. புத்த துறவிகள் பொது மக்கள் கொடுக்கும் பிச்சையில் உயிர்வாழ வேண்டும் என்பதால் மடங்களில் சமையல் நடைபெறுவதில்லை. அதனால்த் தான் துறவிகள் எப்போதும் மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறார்கள். இதனால் அவர்கள் பிச்சை எடுக்கத் தேவையில்லை. சூடான புகைக்கு ஆளாகாத ஓலை கையெழுத்துப் பிரதிகள் நூற்று முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. குறிப்பாக சூடான ஈரப்பதமான சூழலில். எனவே, ஓலை கையெழுத்துப் பிரதிகள் நொறுங்கி நொறுங்குவதற்கு முன்பு அவற்றை கட்டாயம் ஒவ்வொரு நூற்று முதல் நூற்றைம்பது ஆண்டுகளில் நகலெடுக்க வேண்டும். இந்த தருணத்தில் தான் மூலப் பிரதிகளுக்குள் தமக்கு வேண்டியவற்றை செருகவும் மூல பிரதியில் உள்ளவற்றை சிதைக்கவும் சரியான நேரமாக இருந்துள்ளது. இந்தச் செயல்பாட்டில் தான் தமிழ் எதிர்ப்பு உணர்வு மெல்ல மெல்ல மெதுவாக அங்கு சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்ற வாதமும் இன்னும் அறிஞர்களிடம் உண்டு. Part: 78 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 The earlier mentioned interesting passage, which shows how vivid the traditions of Asoka and his brother continued to be in the south after the lapse of nine centuries, and locates Mahendra in a monastery to the south of the Kaviri, within easy reach of Ceylon, goes a long way to support the hypothesis that Mahendra really passed over to the island from a southern port on the mainland. That hypothesis is much more probable than the Ceylonese story that he came by aerial flight through the air, ‘as flies the king of swans.’ Nor is it likely that his first discourse converted the king and forty thousand of his subjects…’ Unquote Quote from page 51 ‘The assumption of monastic robe by the emperor’s younger brother, or rather half brother on the mother’s side, was quite in accordance with the precedent and rule. ‘According to the laws of India, says Chinese historian, ‘when a king dies, he is succeeded by his eldest son (Kumararaja); the others leave the family and embrace a religious life, and they are no longer allowed to be in their native kingdom’. Unquote Tamil countries were independent of the Emperor Asoka’s rule and it was natural that Mahendra, Asoka’s younger brother elected to reside in Tamil Nadu as per the above-mentioned tradition. Jainism came to Tamil country around third century B. C. during a twelve-year famine in Magadha. Even the King Chandragupta became a Jain after abdicating, and came to Mysore to die. Buddhism came to Tamil country about a century later and prevailed for a considerable time, till about sixth century A. D. There is no history of Tamil kings from 300 A. D. to 600 A. D. The details of Tamil kings are sketchy even for the first three centuries of the Common Era. Around sixth to seventh century, militant Saivism came to exist in the south India. Adi Sankarar from Kerala propagated his form of Brahminical religion around that time. Around the seventh century, Jainism suffered a severe blow under the rule of a Pandyan king who converted from Jainism to Saivism. His name is Maravarman Arikesari, but he is also known as Koon Pandyan and Sundarapandiyan, and he reigned from 641 A. D. to 670 A. D. This king was a fanatical character and tortured Saivists first at the instigation of Jain monks. Then he was converted to Saivism and went against Jains with equal vehemence. He impaled about eight thousand Jain monks alive, and this must have sent shock waves through all other religious followers. The Buddhists must have shifted to Ceylon en masse during this time, however, the Jains survived for a long-time even after this tragic impaling. That is the anti Tamil bias in the Mahavamsa, which is not explicit in the Dipavamsa. It could also be that rigid Theravada Buddhism could not stand the spread of Mahayana Buddhism. Ola manuscripts will not survive long if it is not daily exposed to the warm smoke from cooking. No cooking takes place in monasteries as monks are supposed to survive on alms given by the common folks. That is why monks are always trying to win favour of kings and rulers so that they need not to go around for alms. Ola manuscripts not exposed to warm smoke would not last more than one hundred to one hundred and fifty years, especially in the warm moist environment. Ola manuscripts need to be copied before they become friable and crumbling. This is the opportune time to insert and corrupt the originals. The anti-Tamil sentiment must have slowly built up in this process. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 79 தொடரும் / Will follow துளி/DROP: 1966 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 78] https://www.facebook.com/groups/978753388866632/posts/33076511595330728/?
  8. https://www.google.com/search?q=ipkf+operation+gurunagar&oq=IPKF+&gs_lcrp=EgZjaHJvbWUqBggBECMYJzIGCAAQRRg5MgYIARAjGCcyFAgCECMYExgnGIAEGIoFGPAFGJ4GMgYIAxBFGDsyBggEEEUYQDIJCAUQABgTGIAEMgkIBhAAGBMYgAQyCQgHEAAYExiABNIBCzUwODQ4M2owajE1qAIIsAIB8QXbeXB0ATCm7PEF23lwdAEwpuw&sourceid=chrome&ie=UTF-8
  9. சுழிபுரத்தில் நடந்த அறுவர் படுகொலையைக் குறிப்பிடுகிறீர்களா அண்ணை? https://padippakam.com/padippakam/document/ltte/fallencadres/Chulipuram01.pdf
  10. ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து நானும் என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
  11. சுழிபுரத்திலும் அரியாலையிலும் போட்டுத் தள்ளியது புளட் தான். மற்றைய விபரங்கள் தெரியவில்லை.
  12. 'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு Dec 31, 2025 - 10:00 PM 'டித்வா' புயலைத் தொடர்ந்து பேரழிவுக்குப் பின்னரான மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணியை நிறுவி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (31) மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவை இந்தச் செயலணி உள்ளடக்கியுள்ளது. இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்தச் செயலணி நிறுவப்பட்டுள்ளது. https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmju8fbj703czo29nxseozku9/documents/2469-09_T.pdf https://adaderanatamil.lk/news/cmju8fbj703czo29nxseozku9
  13. @கிருபன் , @புலவர் - புலவரின் 41 தொடக்கம் 73வரையான விடைகள். 76 மற்றும் 81க்கான விடைகளை புலவர்தான் சொல்ல வேண்டும். அவரின் விடைகளான வீரத் கோலியும் கேன் வில்லியம்சனும் அணியில் இடம்பெற மாட்டினம். முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI BAN Select BAN Select NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK PAK 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS WI AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK ENG 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL SL 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 WI SA SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS AUS 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ NZ 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL SL 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA AUS 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND WI IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS WI Select WI Select SA Select SA Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG NZ Select NZ Select PAK Select PAK Select SL Select SL SL 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), AUS SL AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, ENG IND IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS IND AUS
  14. இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு Dec 31, 2025 - 09:18 PM இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிதாரி தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். துப்பாக்கிதாரி தனது இலக்கைத் தவறவிட்டு சிறுமி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விசாரணைகளின் படி, குறித்த சிறுமி வசிக்கும் வீட்டிற்கு அருகில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் வசிப்பதுடன், அவர் 'படோவிற்ற அசங்க' எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது சிறையிலிருப்பதும் தெரியவந்தது. கடந்த 22ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்கு இவர் உதவியதாக, படோவிற்ற அசங்கவின் எதிர்தரப்பான 'அவிஷ்க ஏஷான்' என்பவர் சந்தேகித்துள்ளார். இதன் காரணமாகவே அவரது தாய் மற்றும் மைத்துனரை இலக்கு வைத்து நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய போது, "படோவிற்ற காரர்களுக்கு நீங்கள்தான் தகவல் கொடுக்கிறீர்கள்" என துப்பாக்கிதாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. குறித்த நபர் ஒருகாலத்தில் ஏஷான் என்பரின் தரப்பில் இருந்துவிட்டு, பின்னர் அத்தரப்பை விட்டு விலகி அவர்களின் வியாபாரத் தகவல்களை படோவிற்ற அசங்கவிற்கு வழங்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை, களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் மீது இன்று (31) காலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் திலீப் சதுரங்க என்ற 'ரஜவத்தே சதுவா' என பொலிஸார் தெரிவித்தனர். இவர் கடந்த 13ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். களுத்துறை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 29ஆம் திகதி ஏனைய கைதிகள் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் 'களுத்துறை நவீன்' எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதுடன், துப்பாக்கிச் சூட்டில் அவரது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmju6xyhz03cyo29ntnu66mvb
  15. 2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள் பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025-ல் விளையாட்டு உலகில் பல முக்கியமான தருணங்கள் அரங்கேறியிருக்கின்றன. வெற்றிகள், தோல்விகள், சாதனைகள் என பல்வேறு தருணங்களில் பல்வேறு உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கிரிக்கெட், கால்பந்து, தடகளம் என பல்வேறு போட்டிகளில் ரசிகர்களைக் கவர்ந்த சில புகைப்படங்களின் தொகுப்பு இங்கே பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்ததும் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தியாவின் இரண்டு முன்னணி வீரர்கள் இருக்க, பின்னால் ஸ்கிரீனில் 100 என்ற மிகப் பெரிய எண்கள் தெரிவது போன்று எடுக்கப்பட்ட படம் இரு வீரர்களின் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,செளதி ப்ரோ லீக் தொடரில் அல் கலீஜ் அணிக்கெதிராக பைசைக்கிள் கிக் மூலம் கோலடித்தார் 40 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்தப் போட்டியில் 4-1 என ரொனால்டோவின் அல் நசர் அணி வெற்றி பெற்றது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் முறையாக பெண்கள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், அந்த கோப்பையை வென்றதும் தனித்துவமாகக் கொண்டாடினார். நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உலக தடகள சாம்பியன்ஷிப்பின்போது போல் வால்ட்டில் 6.3 மீட்டர் தூரம் தாண்டி, தன்னுடைய முந்தைய உலக சாதனையை மீண்டும் முறியத்தார் ஸ்வீடன் வீரர் அர்மாண்ட் டுப்ளான்டிஸ். அந்த சாதனை படைத்ததும் கேலரியில் இருந்த ரசிகர்களோடு அவர் அதைக் கொண்டாடினார் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல ஐபிஎல் கோப்பையை ஏந்த காத்திருந்த கோலி, அந்தக் கனவு நனவானதும் தன் உணர்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டெல்லியில் நடந்த பாரா உலக சாம்பியன்ஷிப் தடகளத்தில் F46 ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்றார் கியூபாவைச் சேர்ந்த கியார்மோ வரோனா கொன்சாலஸ். எறிவதற்கு முன்பாக அவர் இப்படித் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியின்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணியின் ரசிகர்கள் வைத்த பேனர் இது. அந்த அணி மேனேஜர் லூயிஸ் என்ரீக்கேவின் மகள் ஜானா 2019-ஆம் ஆண்டு இறந்தார். 9 வயதான ஜானா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஜானா பிஎஸ்ஜி அணியின் ஜெர்ஸி அணிந்திருப்பதுபோன்று வடிவமைத்து தங்கள் மேனேஜரை ரசிகர்கள் நெகிழவைத்தனர். இந்த இறுதிப் போட்டியில் இன்டர் மிலன் அணியை வீழ்த்தியது பிஎஸ்ஜி. அவர்களின் நீண்ட நாள் லட்சியத்தை, என்ரீக்கே பதவியேற்ற பிறகே அவர்களால் அடையமுடிந்தது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,14 வயதில் சதம் அடித்து, மிக இளம் வயதில் ஐபிஎல் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிவேக சதத்தையும் அன்று பதிவு செய்திருந்தார் வைபவ். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்ததைக் கொண்டாடும் விராட் கோலி. இது கோலியின் 52வது ஒருநாள் போட்டி சதம். இதன்மூலம், ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள்) கோலி முறியடித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஸ்டீபிள் சேஸ் தகுதிச் சுற்றின்போது நியூசிலாந்து வீரர் ஜார்டி பீமிஷ் தடுமாறி கீழே விழ, பின்னால் ஓடிவந்த வீரரின் ஷூ அவரது முகத்தில் பட்டது. இருந்தாலும், மீண்டும் எழுந்து ஓடி தகுதி பெற்ற பீமிஷ், இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கமும் வென்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பெண்கள் உலகக் கோப்பை அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேஸிங்கில் உலக சாதனை படைத்து வெற்றி பெற்றது இந்தியா. கடினமான அந்தப் போட்டியில் சதமடித்து இந்தியா வெற்றி பெறக் காரணமாக இருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். அந்தத் தொடரின் பாதியில் அணியிலிருந்தே நீக்கப்பட்டிருந்தவர், அதன்பிறகு மீண்டும் வாய்ப்பு பெற்று இப்படியொரு ஆட்டத்தையும் கொடுத்தார். இந்தியாவை வெற்றி பெற வைத்த பிறகு கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி கூறினார் ஜெமிமா. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவில் நடந்த முதல் கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் செல்சீ சாம்பியன் பட்டம் வென்றது. வழக்கமாக கோப்பையை அணியிடம் அளிப்பவர்கள், அதன்பிறகு விலகிவிடுவார்கள். ஆனால், செல்சீ அணிக்குக் கோப்பையைக் கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கேயே சில நேரம் இருந்து அந்த அணியின் கொண்டாட்டத்தோடு பங்கெடுத்தது பரவலாகப் பேசப்பட்டது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெகுகாலம் ஐசிசி கோப்பைக்காகக் காத்திருந்த தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. கேப்டன் டெம்பா பவுமா தலைமையில் தோல்வியே அடையாமல் ஆதிக்கம் செலுத்தி தங்கள் நீண்ட நாள் கனவை பூர்த்தி செய்தது தென்னாப்பிரிக்க அணி. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்த டியோகோ ஜோடா, ஜூலை மாதம் நடந்த ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவருடைய முன்னாள் அணியான வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸுக்கு எதிரான போட்டியின்போது ஜோடாவின் குழந்தைகளை மைதானத்துக்குள் அழைத்து வந்தார் லிவர்பூல் அணியின் கேப்டன் வேன் டைக். இரு தரப்பு ரசிகர்களும் அவர்களுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின்போது பந்து ஸ்டம்பை நோக்கிச் செல்ல, அதைத் தடுக்க கால்பந்து வீரரைப் போல் காலை நீட்டி உதைத்தார் இங்கிலாந்து பேட்டர் ஜேமி ஸ்மித். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crrkryxpr5zo
  16. நான் போய் கத்தினா தான் புது வருசமே பிறக்கும் - சகலகலா வல்லவன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
  17. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 31 Dec, 2025 | 08:00 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். இலங்கை வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பதில் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி வை.ஏ. ஜயதிலக, பிரதான நிதி அதிகாரி எம்.பி. ருவன் குமார மற்றும் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி சமீர தில்ஷான் லியனகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234890
  18. ஊர் ஒன்று கூடியிருக்கிறது. அடுத்தது என்ன தேரை ஓன்று கூடி இழுப்பதுதானே. குமாரசாமி, நீங்கள் குறிப்பிட்ட நூறு பேர்களோடு நூற்றியொன்றாக என்னையும் சேர்ததுக் கொள்ளுங்கள். “நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்”🙏
  19. @goshan_che @Sasi_varnam @ஈழப்பிரியன் நீங்கள் மூவரும் கூறியதை வைத்து மாவீரர் பட்டியலினுள் தேடிப் பார்த்தேன். மொத்தம் 16 போராளிகள் புளட், இ.என்.டி.எல்.எஃவ்., மற்றும் ரெலோ ஆகிய தேசவிரோத கும்பல்களால் வீரச்சாவடைந்துள்ளனர். அவர்களில் புளட் என்ற கூலிப்படையைச் சேர்ந்தவர்களாலையே அதிகளவான போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஓகஸ்ட் 5ம் திகதி புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே - ஆயுதமற்றவர்களா பயணித்த போது - இவ்விந்திய கூலிப்படைகளால் தேசத்திற்கு விரோதமான முறையில் கொல்லப்பட்டனர். புலிகள் ஆயுதங்களைக் களைந்த பின்னர் இவர்களிற்கு இந்தியப் படையினர் ஆயுதங்களை வழங்கி புலிகளைக் கொல்ல தூண்டிவிட்டுள்ளனர். ஆக மொத்ததில் இந்தியா நரி வேலை செய்துள்ளது. இதையும் அறியாமல் இந்த இந்தியக் கூலிப்படைகள் தமது சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் ஆயுதமற்றவர்களாக இருந்தபோது கொன்றுள்ளனர். வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல்! இவர்களை பின்னாளில் புலிகள் வேட்டையாடியதில் எந்தத் தவறும் இல்லை. (இவர்கள் தவிர இன்னும் 6 போராளிகள் இதே காலகட்டத்தில் வீரச்சாவடைந்துள்ளனர். எனினும் அவர்களில் நால்வர் எதிர்பாராத வெடி நேர்ச்சிகளிலும் இருவர் தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையுடனான சமரிலும் வீரச்சாவடைந்துள்ளனர். மொத்தம் 22, ஈழப்பிரியன் அவர்களின் கணக்குச் சரியே.) இந்திய நரிவேலையால் மாவீரரான போராளிகள்: வீரவேங்கை யோகன் - 16.08.1987 வேப்பங்குளம் பகுதியில் புளொட் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு வீரவேங்கை அருச்சுனா, வீரவேங்கை ரஞ்சன், வீரவேங்கை கில்மன் - 26.08.1987 நானானட்டான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு வீரவேங்கை டென்சில் - 02.09.1987 பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு கப்டன் தனம், 2ம் லெப்டினன்ட் கண்ணன் - 04.09.1987 குருமன்காட்டுச் சந்தியில் புளொட் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு 2ம் லெப்டினன்ட் கைலை, வீரவேங்கை இரத்தினம் (சிவகுமார்) - 04.09.1987 பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு வீரவேங்கை அமீர் (அமல்) - 07.09.1987 குளவிசுட்டான் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு லெப்டினன்ட் கொலின்ஸ் (லூக்) - 07.09.1987 தம்பனை பகுதியில் புளொட் கும்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு வீரவேங்கை ராஜேந்தர் - 12.09.1987 கிளிநொச்சி பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு வீரவேங்கை அமலதாஸ் - 26.09.1987 ரெலோ கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு வீரவேங்கை தாஸ் - 02.10.1987 கற்கபுரம் பகுதியில் புளொட் கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு வீரவேங்கை பாபு - 07.10.1987 கற்கபுரத்தில் புளொட் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு 2ம் லெப்டினன்ட் விக்கி - 08.10.1987 10ம் வாய்க்கால் பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
  20. ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் 31 Dec, 2025 | 07:24 PM நாட்டின் ஒழுக்க விழுமியங்களையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில், ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கில மொழிப் பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை தொடர்பான விடயங்கள் சூட்சுமமாகப் புகுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பூஜ்ய யெவெல பஞ்ஞாசேகர தேரர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறியதாவது, ஒரு ஒழுக்கமான நாட்டில் நிலவ வேண்டிய நற்பண்புகள் மற்றும் கல்வி முறைமை குறித்தே நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையில் பாலினக் கல்வி என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களால் பலமுறை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான நிலையில், தற்போது ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடக் கையேட்டை வெளியிட்டு, அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். அத்துடன் மேலதிகக் கற்றலுக்காக 'சமதியாவ' எனும் இணையத்தளத்தைப் பயன்படுத்துமாறு ஒரு வழிகாட்டி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தின் ஊடாகச் சிறுவர்களுக்கு ஓரினச்சேர்க்கை கல்வி தொடர்பான கருத்துக்களே திணிக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் பாரிய பொருளாதார இலாபங்கள் இருக்கலாம் எனவும், சிறுவர்களை இவ்வாறான விடயங்களில் ஆர்வம் கொள்ளச் செய்யும் ஒரு நுட்பமான தந்திரமே இது எனவும் நாம் கருதுகின்றோம். இது எமது நாட்டின் பண்பாட்டுக்கும் ஒழுக்க விழுமியங்களுக்கும் முற்றிலும் முரணான செயலாகும். ஆகவே, குறித்த பாடக் கையேட்டை உடனடியாக மீளப்பெற வேண்டும். முறையான தெளிவுபடுத்தல்கள் இன்றி மாணவர்களை இவ்வாறான தளங்களுக்கு வழிநடத்தியவர்கள் யாரென உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 'நாங்கள் இதனை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டோம்' என்று கூறிவிட்டுப் பொறுப்பில் இருந்து எவரும் நழுவிவிட முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/234877
  21. மீன் வருகின்ற பாதையை தடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - மீனவர் சங்க பிரதிநிதி தெரிவிப்பு! 31 Dec, 2025 | 05:00 PM ஊர்காவற்துறைக்கு செல்கின்ற நீரோட்டம் கீழ் கடலில் இருந்து தங்குவாய்க்கால் ஊடாகத்தான் வரும். அவை எல்லாம் தற்போது தடைப்பட்டுள்ளது. இந்த தடைகளை நீக்கினால் தான் மீன் உற்பத்திகள் அதிகரிக்கும் என நாங்கள் பலமுறை கூறினோம். அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் இராஜச்சந்திரன் தெரிவித்தார். நேற்றையதினம் நடைபெற்ற காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை இறால் உற்பத்தியானது 10 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வழமையாக மாரி காலத்தில் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ளுகின்ற எங்களுக்கு இம்முறை எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளே. தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் குறித்து பலமுறை கடற்றொழில் அமைச்சரிடம் கூறினோம். 2026ஆம் ஆண்டுக்குள் தடை செய்யப்பட்ட தொழில்களை அகற்றுவதாக அவர் உத்தரவாதமளித்தார். ஆனால் இன்னமும் அது தீர்க்கப்படவில்லை. எங்கள் பகுதியில் 10 கடற்றொழில் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 4 சங்கங்கள் தரவைக் கடலை நம்பியும், 10 சங்கங்கள் ஆழ்கடலை நம்பியும் தொழில் செய்கின்றன. ஆழ்கடல் தொழில் செய்யும் மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட தொழில் முதல்கள் இந்தியன் இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்படுகின்றன. 50 ரோலர்கள் வந்தால் கடற்படையினர் ஒரு ரோலரையே பிடிக்கின்றனர். அவர்களது கப்பல் பெரிய கப்பல்கள் என்றும், அதனை பிடிப்பதற்கு பெரிய கப்பல்கள் தங்களிடம் இல்லை என்றும் கடற்படையினர் கூறுகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளால் படிப்படியாக கடற்றொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவடைதல், அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லல், அந்த பிரதேசங்களை விட்டு செல்லல் போன்ற துன்பியல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. கடற்றொழிலாளர் வர்க்கமே இல்லாமல் போகின்ற சூழல் ஏற்படுத்தப்படுகிறது என்றார். இது குறித்து நீரியல்வள திணைக்கள அதிகாரி கருத்து தெரிவிக்கையில், அந்த பாலத்தில் இருந்து 50 மீட்டர்கள் தொலைவில் கொடி கட்டினோம். அதற்குள் எவரும் வலை விட வேண்டாம் என்று நாங்கள் சங்கங்களுக்கு கடிதமும் வழங்கினோம். அப்படி இருந்தும் அதற்குள் வலைகளை விடுகின்றார்கள். நவம்பர் மாதம்தான் பருவகாலம். ஆகையால் நவம்பர் மாதம் அங்கு இருக்கின்ற வலைகளை அகற்றுவதற்கு திட்டமிட்டோம். இருப்பினும் டித்வா புயலால் அந்த வலைகளை அகற்ற முடியவில்லை. ஜனவரி அல்லது பெப்ரவரிக்குள் இவற்றை சீர் செய்வோம் என்றார். https://www.virakesari.lk/article/234873
  22. நியூசிலாந்து அவுஸ்திரேலியா Australia New Year Cerebration: Sydney Welcomes 2026 with Jaw-Dropping Midnight Fireworks | AQ1G சிட்னி துறைமுகத்தில் கொண்டாடப்பட்ட புத்தாண்டு பட மூலாதாரம்,EPA ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தில் வானவேடிக்கைகளோடு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சமீபத்தில் சிட்னி கடற்கரைத் தாக்குதலைத் தொடர்ந்து நகரம் முழுவதும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் விதமாக புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பட மூலாதாரம்,DAN HIMBRECHTS/EPA/Shutterstock பிரதமர் ஆன்டணி ஆல்பனீஸி தனது 'நியூ இயர்ஸ் ஈவ்' உரையில், வழக்கமாகப் புத்தாண்டின் தொடக்கத்தில் உணரப்படும் மகிழ்ச்சியானது, கடந்த ஆண்டின் சோகத்தால் தணிக்கப்பட்டதாக அவர் கூறினார். https://www.bbc.com/tamil/live/c70r0qyrrk7t?post=asset%3A9f37d491-1247-4e44-b997-22459aa626d3#asset:9f37d491-1247-4e44-b997-22459aa626d3
  23. தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்! Dec 31, 2025 - 03:57 PM தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று (31) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி காணி தொடர்பாக, நீண்டகாலமாக தீர்க்கப்படாத விடயங்களுக்கான ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் என்பதே இக் கலந்துரையாடலின் நோக்கம் எனத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார். இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் - ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாட்டினை தெரிவித்தனர். இதன்போது அரசாங்க அதிபர் கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் விடுவிக்க முடியும் எனத் தெரிவித்து, காணி உரிமையாளர்களுடன் விடுவிக்கக் கூடிய காணிகளின் சாத்தியப்பாடுகள் மற்றும் எல்லைகள் தொடர்பாக ஆராய்ந்தார். இக் கலந்துரையாடல் ஆக்கபூர்வமான நடைபெற்றதுடன், கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்க அதிபர் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்தார்கள். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjtvgj3y03cfo29nwqune9sh

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.