Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, தென்னாபிரிக்கா அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அலிஷான் ஷரஃபு நிதானமான ஆடி 45 (38 பந்துகள்) ஓட்டங்கள் எடுத்திருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, டெவால்ட் பிறெவிஸின் வேகமான 36 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் றிக்கெல்டனின் அதிரடியான 30 (16 பந்துகள்) ஓட்டங்களுடனும் 13.2 ஓவர்களிலலேயே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 123 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா ஃபர்ஹானின் ஆட்டமிழக்காத புயல்வேக செஞ்சுரியான 100 (58 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சல்மான் அக்ஹாவின் அதிரடியான 38 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷடாப் கானின் ஆட்டமிழக்காத வேகமான 36 (22) ஓட்டங்களோடும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 17.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களையே பெற்று தோல்வியடைந்தது. இந்த ஓட்ட எண்ணிக்கை தற்போதைய அதிகுறைந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது. பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: பாகிஸ்தான் அணி 102 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, ஷிவம் டுபேயின் மின்னல்வேக 66 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சூரியகுமார் யாதவ்வின் நிதானமான 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் நிதானமான 31 (27 பந்துகள்) ஓட்ட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் வேகமான 30 (21 பந்துகள்) ஓட்டங்களோடும் விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அபிஷேக் சர்மா விளையாடிய மூன்று போட்டிகளிலும் முட்டை வாங்கி சாதனை படைத்துள்ளார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை எனினும் பலரின் பங்களிப்புடன் வேகமாக அடித்தாடி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 176 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலைகளில் மாற்றங்கள் எதுவுமில்லை!
  3. ௳ சிவமயம் வணக்கம் அன்பு தமிழ் மக்கள் !! தமிழனுக்கு வெற்றி ...அன்பு ௐ முருகா... மனிதனுக்கு விளக்கு...அன்பு திருவெந்தெழுத்து..புணிதமான நவீனமான அற்புதமான ரகசிமான நமசிவாயம் !!!!! வேற முருகனுக்கும் ருத்திரனுக்கும் வாற ௫ தான் அஞ்சுக்கு எண் குறியீடு ஆகும். சுகமா எண்ணும் எழுத்தும் ஒன்றாகும். அதுவில் நம் தமிழ் எழுத்தள் குறியீடு ஆகும். சிவ சிவ ஹர ஹர ௐ வீரவேல் ௐ முருகவேல் திருவைந்தெழுத்து நமசிவாயம் வாழ்க.
  4. Today
  5. prsSodteonfacu5 7i59tà947iHg09aea4185t:lc19 0rth1g680t001,ml · மெட்ராஸ்கார‌ர்களை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும்? கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக. பொருள்: க‌ஸ்மால‌ம், ஒயுங்கா ப‌டி, ப‌ட்ச‌து ப‌ட்சாமாறி ந‌ட்ந்துக்க‌டா, பேமானி. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. பொருள்: டேய், வூட்டுக்கு வந்த‌ விருந்தாளி கைல ந‌ல்லா‌ மூஞ்சி குட்து பேசுடா, இல்ல‌ன்னா ப‌ய‌ அனிச்ச‌ம் பூவ‌ மோந்தா மாரி வாடி வுடுவாண்டா . இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. பொருள்: சோமாறி, கொய்யாப் ப‌ய‌த்த‌ கைல‌ வ‌ச்சிக்கினு எவ‌னாவ‌து கொய்யாக்காவ‌ துண்ணுவானாடா? ந‌ல்ல‌ வார்த்தையா நாலு பேசுவியா, அத‌ வுட்டுப்புட்டு கெட்ட‌ கெட்ட‌ வார்த்தையா பேசிக்கினு கீற‌? காது கொய்யின்னுதுடா, கொய்யால‌. புறம் கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் பொருள்: ப‌ன்னாட‌, ஒர்த்த‌ன‌ப் ப‌த்திப் பின்னால‌ போட்டுக் குட்து பொய‌க்க‌ற‌தெல்லாம் ஒரு பொய‌ப்பாடா? அதுங்காட்டி நாண்டுகிட்டு சாவ‌லாம்டா, ச‌னிய‌ம் புட்ச்ச‌வ‌னே.. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். பொருள்: எவ‌ன் வேணா சும்மா உதார் உட‌லாம் ம‌ச்சி, ..சொன்னா மாரி செஞ்சிப்பாரு அப்ப‌ தெரியும் மேட்ட‌ரு, நெஞ்சில‌ கீற‌ ம‌ஞ்சா சோறு எகிறிப்பூடும் பாத்துக்க‌......!
  6. இப்படியே வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திக்கச் செல்வதும், வடையும் கோப்பியும் அருந்திவிட்டு வருவதும் தான் நாம் காலம் காலமாகச் செய்வது. இதனால் யாருக்கு என்ன இலாபம்? இங்கிலாந்தும் எதுவும் செய்யப்போவதில்லை, அமெரிக்காவும் செய்யப்போவதில்லை, இந்தியாவும் செய்யப்போவதில்லை. இவ்வாறான சந்திப்புக்கள் எல்லாமே தமிழ்க் கட்சிகள் "நாமும் இருக்கிறோம்" என்பதை தமிழ்ச் சனத்திற்குக் காட்ட நடத்தப்படுபவைதான். இதனால் ஆன பயன் எதுவும் இல்லை. ஏனென்றால் சிங்களத்தை மீறி, அவர்களை எதிர்த்து தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கைகளை வெளிநாடுகளிடம் வைக்கப்போவதுமில்லை, வெளிநாடுகளும் அவற்றைக் கேட்கப்போவதில்லை. அரசியலில் உதிரிகளாகச் சிதறிக் கிடந்தபடி, பேரினவாதிகளை மடிக்குள் வரவிட்டு விட்டு இன்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சென்று பார்த்துப் படமெடுத்துப் போடுவதால் மட்டும் எதுவுமே ஆகிவிடாது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட எவரிடமாவது இதன் மூலம் தமிழினத்திற்குச் சார்பான துரும்பைத்தன்னும் நகர்த்த முடிந்ததா என்று கேளுங்கள். அப்படியில்லை என்றால் எதற்காக இப்படியான சந்திப்புக்களில் கலந்துகொள்கிறீர்கள் என்றாவது கேளுங்கள்.
  7. உக்ரேன் மீதான் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போரினை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான பேச்சுக்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. ஆனால் இப்பேச்சுக்கள் தோல்வியடையும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் புட்டினுடன் நேரடியாக பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டி நேரலாம் என்றே மக்ரோன் கூறியிருக்கிறார். மக்ரோன் இப்படிக் கூறுவதன் காரணம் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போர் நியாயமானது என்பதற்காகவோ அல்லது அது போரில் வெற்றிபெற்று வருகிறது என்பதற்காகவோ அல்ல. மாறாக நீண்டு செல்லும் இந்த ஆக்கிரமிப்புப் போரினால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவுகள், உக்ரேனின் தற்காப்பு யுத்தத்திற்காக தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்டுவரும் ஆயுத உதவிகளால் இந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம், முடிவின்றித் தொடரும் ஆக்கிரமிப்புப் போர் இன்னும் எத்தனை வருடங்களுக்கு நீளப்போகிறது எனும் கரிசணை, ஐரோப்பாவின் எல்லைகளை இப்போர் அண்மிக்கும் தறுவாயில் அந்நாடுகளின் பாதுகாப்பிற்கான அச்சுருத்தல், ஐரோப்பாவினுள்ளும் இப்போர் விரிவடையும் பட்சத்தில் ஏற்படப்போகும் சிக்கல்கள், அசெளகரியமான சந்தர்ப்பத்தில் தவிர்க்கமுடியாதவாறு நேட்டோவும் இப்போரினுள் இழுத்துவிழப்படலாம் எனும் அச்சம், அணுவாயுதப் பாவனை நோக்கித் தள்ளப்படுதல் அல்லது அதற்கான நகர்வுகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுதல் எனும் ஆபத்து, கிழக்கு ஐரோப்பாவில் ஏற்படக்கூடிய நீண்டகால இஸ்த்திரத்தன்மையின்மை, அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள், பணவீக்கத்தினால் ஏற்படப்போகும் அழுத்தம், விநியோகச் சங்கிலியில் ஏற்படுத்தப்போகும் தாக்கம், சரித்திரத்தில் நீண்டகாலப் போர்கள் பேச்சுக்கள் ஊடாகவே முடிவிற்கோ அல்லது பனிப்பொர் எனும் நிலைமைக்கோ கொண்டுவரப்பட்டிருக்கின்றன எனும் பாடம் ஆகிய எல்லாமுமே சேர்ந்துதான் சில ஐரோப்பிய நாடுகளை ரஸ்ஸியாவுடன் பேசி இப்போரினை முடிவிற்கோ அல்லது குளிர் நிலைக்கோ கொண்டுவரலாம் எனும் நிலைப்பாட்டினை எடுக்க வைத்துள்ளன. . பிரான்ஸும், எஸ்ட்டோனியாவும் புட்டினுடன் பேசலாம் என்று சிந்திக்கும் அதேவேளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவையும், பின்லாந்து போன்ற நாடுகளும் பேச்சுக்களை எதிர்க்கின்றன. புட்டினுடனான பேச்சுக்கள் உக்ரேனினை பலவீனப்படுத்தும் என்பதும், ஆக்கிரமிப்பிற்கான பரிசாகவே பேச்சுக்கள் பார்க்கப்பட்டுவிடும் என்பதும் இந்நாடுகளுக்கு இருக்கும் இயல்பான கரிசணை. அதனாலேயே உக்ரேனின் விருப்பின்றி பேச்சுக்கள் நடப்பதை எதிர்க்கும் இந்நாடுகள், உக்ரேனின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் பேச்சுக்கள் அமைவது அவசியம் என்று கூறுகின்றன. இவை இப்படியிருக்க, கடந்த நான்கரை ஆண்டுகளாக புட்டின் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரில் கிரிமியா தீபகற்பம் அடங்கலாக உக்ரேன் எனும் இறையாண்மையுள்ள நாட்டின் 15 இலிருந்து 20 வீதத்தைத்தான் ரஸ்ஸியா கைப்பற்றியிருக்கிறது. ஆனால் உக்ரேனின் பிரதான நகரங்கள் இன்னமும் உக்ரேனின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதுடன், ரஸ்ஸியாவின் பெரும் எடுப்பிலான ஆக்கிரமிப்பைச் சமாளித்துக்கொண்டே ரஸ்ஸியாவின் உட்பகுதியிலும் ஊடுருவி கடுமையான சேதத்தினை உக்ரேன் ஏற்படுத்தியிருக்கிறது. போரில் வெற்றி அடைந்திருக்கிறது என்று கூறுமளவிற்கு ரஸ்ஸியா எதனையும் சாதிக்கவில்லை. ரஸ்ஸியாவுக்குச் சார்பான பத்தியாளர்களைத் தவிர்த்து, நடுநிலையான ஆய்வாளர்களைக் கேட்டால், ரஸ்ஸியா போரில் இதுவரை வெற்றியடையவில்லை என்றே கூறுகிறார்கள். நேற்று வெளிவந்த நான்கரை வருட ஆக்கிரமிப்புப் போரில் ஏற்பட்ட ரஸ்ஸிய இழப்புக்கள் என்று பட்டியல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள். மேற்கிற்குச் சார்பானது என்று பலர் இங்கே குறைகாணலாம் என்ப‌தனால் அதனை இணைப்பதைத் தவிர்க்கிறேன். புட்டின் ரசிகர் மன்றம் கருதுவதுபோல் ரஸ்ஸியாவின் போர் வெற்றியினாலேயே ஐரோப்பா அதனுடன் பேச எத்தனிக்கிறது என்பது கனவு மட்டுமே.
  8. dtSpsrnoeo012la0vfg3i9mer0iah2972tr :360,lg73éf1uu hmmai3ulf · “நீ எந்த கிளாஸ் படிக்கறே?” என்றார் அந்த மனிதர் சிறுவனிடம். “செக்கண்ட் ஸ்டாண்டர்ட். நீங்க?” “நான் படிச்சி முடிச்சிட்டேன்” “எந்த கிளாஸ் வரைக்கும் படிச்சீங்க?” “பி. ஹெச். டி” “அது செக்கண்ட் ஸ்டாண்டார்டை விட ஜாஸ்தியா?” அந்த மனிதர் சிரித்தார். “ஏய்.. அப்படியெல்லாம் கேக்கக் கூடாது” என்று அதட்டினார் பையனின் அப்பா. “இட்ஸ் ஓக்கே. ஈஸி” என்றார் அந்த மனிதர். சென்னையிலிருந்து மதுரை போகிற அந்த பஸ் ஏதோ ஒரு ஹோட்டல் வாசலில் சிற்றுண்டிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. மணி ராத்திரி இரண்டு. அந்நேரத்திலும் மசால் தோசை, பரோட்டா, சப்பாத்தி என்று ஐட்டங்கள் இருந்தது மாத்திரம் இல்லை, சாப்பிடவும் பயணிகள் இருந்தார்கள். “நீங்க எதுல டாக்டரேட்?” என்றார் சிறுவனின் அப்பா. “ஆட்டமோபைல் எஞ்சிநியரிங்” என்றார் அந்த மனிதர். “ஆட்டமோபைல் எஞ்சிநீரிங்ன்னா என்ன?” என்றான் சிறுவன். “ம்ம்.. அதெல்லாம் உனக்குப் புரியாது” மறுபடி அதட்டினார் அப்பா. “நோ.. நோ.. நோ.. இதான் நாம பண்ற மிஸ்டேக். நெவர் டிஸ்கரேஜ் சில்ரன் வென் தே ஆஸ்க் கொஸ்ஸன்ஸ்” என்றார் பி. எச். டி. தொடர்ந்து, “நாம வந்தோமே பஸ்ஸு, அதுவும் ஒரு ஆட்டமோபைல். அது எப்படி வேலை செய்யுது தெரியுமா?” என்றார் சிறுவனிடம். “ம்ம்ஹூம்” “அதையெல்லாம் படிக்கிறதுதான் நான் படிச்ச கிளாஸ்” “எப்படி வேலை செய்யுதுன்னு சொல்லுங்க?” இப்போது அந்தச் சிறுவனை மடியில் அமர்த்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். ஆட்டோ சைக்கிள், டீஸல் சைக்கிள், டூ ஸ்ட்ரோக், ஃபோர் ஸ்ட்ரோக், ஸ்பார்க் இக்னிஷன், கம்ப்ரஷன் இக்னிஷன், ஸ்பீட், டார்க் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். பையனும் கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தான். இறுதியில், “உங்களுக்கு பஸ் பத்தி எல்லாமே தெரியுமா?” என்று கேட்டான். “ம்ம்ம்” என்றார் சிரிப்புடன். எல்லாரும் சாப்பிட்டு முடித்து வண்டியில் ஏறினார்கள். டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்தார், அது ஸ்டார்ட் ஆகவில்லை. டிரைவரும் கண்டக்டரும் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். “விழுப்புரம் டெப்போலேருந்து ஆள் வரணும்ன்னா மூணு அவர் ஆயிரும்” “இப்ப என்ன பண்றது?” “லோக்கல் மெக்கானிக் யாரையாவது கூப்பிடு” “மணி ராத்திரி ரெண்டே கால்” “பின்னே வெய்ட்டுதான் பண்ணணும்” இப்போது சிறுவன் கண்டக்டரிடம் போய், “இந்த அங்கிளுக்கு பஸ் பத்தி எல்லாமே தெரியும்” என்று சிபாரிசு செய்தான். கண்டக்டர் ஆச்சரியமாய், “சார் நீங்க மெக்கானிக்கா?” என்று கேட்க அவர், “ஐ ஆம் டாக்டர் ஆஃப் ஆட்டமோபைல் எஞ்சிநியரிங்” என்றார். “ஓ.. டாக்டரா.... சாரி சார்” சிறுவனுக்கு ஏமாற்றம். “அங்க்கிள் பஸ் ஏன் ஸ்டார்ட் ஆகல்லைன்னு சொல்லுங்க” என்றான். “சும்மா இரு விக்கி” அதட்டினார் அப்பா. அதற்குள் டிரைவர் ஆட்டோ மெக்கானிக் கடை வாசலில் தூங்கிக் கொண்டிருந்த அழுக்குப் பையன் ஒருத்தனை அழைத்து வந்து விட்டார். பஸ்ஸின் மூஞ்சியில் இருந்த ஜன்னலைக் கழட்டி வைத்துவிட்டு, “ஸ்டார்ட் பண்ணுங்கண்ணே” என்றான் அந்த அழுக்கு. சின்ன வால்வு மாதிரி இருந்த எதையோ சொடக்கு சொடக்கு சொடக்கு என்று பம்ப் அடித்தான். ம்ம்.. ம்ம்.. ம்ம்.... என்று உறுமி சட்டென்று ஸ்டார்ட் ஆயிற்று. டிரைவரண்ணே இனிமே எங்கியும் வண்டியை ஆஃப் பண்ணாதீங்க” என்றான். டிரைவர் கொடுத்த ஐம்பது ரூபாயை சந்தோஷமாய் வாங்கிக் கொண்டான். சிறுவனுக்கு ஆச்சரியம். அந்த அழுக்குப் பையனிடம் போய், “நீயும் பி. எச். டி படிச்சிருக்கியா?” என்றான். “அப்படீன்னா?” என்றான் அழுக்கு புரியாமல். “உனக்கு ஆட்டோ சைக்கிள், டீஸல் சைக்கிள் எல்லாம் தெரியுமா?” “எனக்கு பெடல் பண்ற சைக்கிள் மட்டும்தான் தெரியும்” “ஸ்பீடுக்கும் டார்க்குக்கும் இருக்கிற ரிலேஷன்?” “எனக்கு ரிலேஷன்ஸ் யாருமில்லை” “பஸ் பத்தி காலேஜ்ல படிச்சியா?” “நா பள்ளிக்கூடமே போனதில்லை கண்ணா” சிறுவன் கொஞ்ச நேரம் யோசித்தான். பிறகு சிரித்துக் கொண்டே ‘புரியுது’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். பிறகு வந்து சீட்டில் உட்கார்ந்து விட்டான். பி. எச். டி க்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. “என்ன புரிஞ்சது?” என்று அவனிடம் கேட்டார். “படிச்சவங்களுக்கு நிறைய சம்பளம் வருது. ஆனா அவங்களுக்கு தெரியாத விஷயங்கள் படிக்காதவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. ஆனா சம்பளம் இல்லை. சம்பளம் படிப்புக்குத்தான். தெரிஞ்சதுக்கோ, தெரியாததுக்கோ இல்லை...!!! படித்துப் பகிர்ந்தது.......!
  9. எம்பி இல்லை ஆனால் லமிக்கு அருகில் சுமன் நிக்கிறார். செயல்(படா) தலைவர் ஓரமாய்😂. பார் சிறி போன கூட்டத்தில் மிக்ஸர் இல்லையா..:: அநியாயம்
  10. அதயேன் கேக்கிறியள் - வீட்டோட நாயையும் சுவி அண்ணா அபேஸ் பண்ணீட்டார்😂
  11. கிருபன்ர கூகில் சீற் அப்பிடி. ஓடவும் முடியாது. ஒழியவும் முடியாது🤣
  12. கனிய கனிய மழலை பேசும் கண்மணி .......!
  13. இவர் எனக்கே ஃடப் கொடுப்பார் போல உள்ளது😂
  14. வணக்கம் வாத்தியார் .......! ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயே சென்னை செந்தமிழ் ஆண் : சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே நேந்திரம் பழமே நெய்மேனி நதியே மிளகு கொடியே ஆண் : சகியே உன் நிறம் ஹா….ஆ….ஆஅ…. ஹா….ஆ….ஆஅ…. ஹா ஆஆ……. சகியே உன் நிறம் செம்பருத்தி பூ நிறம் சகியே உன் நிறம் செம்பருத்தி பூ நிறம் சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம் உன்னை காணவே நிலவும் தோன்றிடும் குழு : தோம் தோம்தோம் தரிகிட ஆண் : ஆஅ … உன்னை காணவே நிலவும் தோன்றிடும் இத்தனை அழகா என்று தேய்ந்திடும் ஆண் : காதல் கதக்களி பெண் : என்றும் காண இன்னொரு சந்தம் நின் கான்முன்னே நட்சத்திரங்கள் கண்டு நான் என் பைங்கிளி ஆண் : காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன் காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன் திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன் பாக்கு மரங்களை…ஏய்…..ஏ… கழுத்தில் பார்க்கிறேன் பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன் பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன் ......! --- சென்னை செந்தமிழ் ---
  15. அந்தக் குடிகாரன் அடித்த அடியில்… அந்தப் பெண் இறந்து இருந்தால், அந்தச் சிறுவனுக்கு ஆதரவு இல்லாமல் போய் இருக்கும். இந்தச் சம்பவம்… அந்தச் சிறுவனுக்கு வாழ் நாள் முழுக்க மன உழைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கும்.
  16. தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல் Published By: Vishnu 18 Feb, 2026 | 06:47 PM (வீ.பிரியதர்சன்) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நேற்று சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஆண்ட்றூ பற்றிக் உடனிருந்தார். கலந்துரையாடலின் போது நல்லிணக்கம், சர்வதேச நீதியியல் (Transnational Justice), மற்றும் தமிழர் சமூகங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் பிரதிநிதிகளின் குரல்கள் தொடர்ந்து கேட்கப்படுவதை உறுதிப்படுத்துவதிலும், நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்துவதிலும், அர்த்தமுள்ள முன்னேற்றத்துக்கு ஆதரவு வழங்குவதிலும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக பிரிட்டன் தரப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் நிலையான நல்லிணக்கமும், சமூக நீதி நடைமுறைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து இருதரப்பினரும் கருத்து பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/238989
  17. கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 1 பாகம் – 1 / “கடலின் உப்பில் கரைந்த வரலாறு” உடப்பூர் அல்லது உடப்பு (Udappu) என்பது இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இக்கிராம மக்கள் திரௌபதியைத் தெய்வமாக்கிக் கோயில் எழுப்பி வழிபடுவதுடன் நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் ஆலயத் திருவிழாக் காலங்கள் மற்றும் ஏனைய விழாக்களில் மேடையேற்றி தமிழ் 'இயல் இசை, நாடகத்தை' போற்றி பாதுகாத்து வருகிறார்கள். வடமேல் மாகாணத்தில் கற்பிட்டி தொடக்கம் நீர்கொழும்பு வரை தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதியாம். இப் பிரதேசங்கள் யாழ்பாண இராசதாணியின் கீழ் ஆட்சியில் இருந்தற்கு வரலாற்று ஆதாரங்கள் காணப்படுவதுடன் சரித்திர காலத்துக்கு முன்னே தமிழர்கள் வாழ்ந்த இடமாக உடப்பு காணப்படுகிறது. மேலும் கர்ண பரம்பரைக் கதைகளும் இங்கு காணப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களும் இதற்கு சான்றாகும். அப்படியான பெருமை கொண்ட உடப்பின் கடல் அன்று வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. உடப்பு வாசியும், பல்கலைக்கழக பட்டதாரி ஆசிரியருமான 'ஆதன்', காலையில் பள்ளிக்குச் செல்லும் முன், கடற்கரையில் நின்ற படியே தூரத்தில் தெரிந்த மீன்பிடி வலைகளைப் பார்த்தான். அந்த வலைகளில் இன்று மீன்களோடு சேர்ந்து, ஒரு தலைமுறையின் மொழியும் அடையாளமும் சிக்கிக்கொண்டது போல அவனுக்குத் தோன்றியது. “கடல் எல்லோருக்கும் பொதுவானது… ஆனா வரலாறு சிலருக்கே தனிப்பட்ட சொந்தமாகி விட்டதே…” ["The sea belongs to everyone… but history has become the private property of only a few."] என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். மகாவம்சம் என்ற புத்த குருவின் புராணம், இன்று, புத்தரின் போதனைகளை மறந்த தொல்பொருள் திணைக்களத்தின் வேத நூலாக இருப்பது அவனுக்கு பெரும் ஆச்சரியம் கொடுக்கவில்லை. அதைவிட அவனுக்கு வேதனை கொடுத்தது பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர் என்பது அண்மைய வரலாறாகும் [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese]. அவன் கையில் இருந்த நோட்டுப் புத்தகத்தில், யாரோ ஒருவர் தன் பெயரைக் குறிக்காமல் எழுதியிருந்தார்: “மொழி என்பது வெறும் எழுத்துக்கள் அல்ல... அது நினைவின் களஞ்சியம்.” ["Language is not just letters… it is a repository of memory."] ஆதன் கற்பித்த அந்த உயர்நிலைப் பள்ளி, ஊரின் ஒரே ஒரு அரசுத் தமிழ்ப் பள்ளி ஆகும். ஆனால், அதிகாரிகளிடமிருந்து தினசரி சுற்றறிக்கைகள் சிங்களத்தில் அதிகளவில் வந்தன. சிங்களம் மற்றும் தமிழ் இரண்டும் இலங்கையின் அதிகாரப்பூர்வ தேசிய மொழிகளாக இருந்தாலும், 1956 ஆம் ஆண்டின் "சிங்களம் மட்டும் சட்டம்" என்ற வரலாற்று மரபு, அதிக எண்ணிக்கையிலான சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை மற்றும் இருமொழிக் கொள்கையின் தொடர்ச்சியான செயல்படுத்தல் சவால்கள் காரணமாக அரசாங்க அறிவிப்புகள் முதன்மையாக சிங்களத்தில் வருகின்றன என்பது யாரும் அறிந்ததே. ஆனால், "இருமொழி" என்பது மெதுவாக கலாச்சார அழிப்பதைக் குறிக்கும் ஒரு கண்ணியமான சொல் என்பதை ஆதன் தனது அனுபவத்தாலும் மற்றும் சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்டு, பின் “பைபிளிலிருந்து தொடங்குங்கள்; அது தோல்வியுற்றால், வாளைப் பயன்படுத்துங்கள்.” - போர்த்துகீசிய மிஷனரி கொள்கை (காலனித்துவ பதிவுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது) - “Begin with the Bible; if that fails, apply the sword.” – Portuguese missionary policy (documented in colonial records) - என்ற, இலங்கை மகாவம்ச புத்த மதம் மாதிரி, மதம் தாண்டிய, மதத்துக்கு முற்றிலும் முரணான, தங்கள் கோட்பாட்டின் படி, கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் வரலாற்றாலும் உணர்ந்தான். இங்கு மதமாற்றம் தனிப்பட்ட சம்மதத்தின் அடிப்படையில் என்றும் நடக்கவில்லை. பதவி, பணம் , வசதிக்காகவும் மற்றும் அபராதம், உடல் தண்டனை, நிலம் பறிப்பு போன்ற பயத்தாலும் உருவாகியது என்பதே உண்மை. அதனால், தமிழ் பெயர், கிருஸ்துவ பெயராக மாற, சில பண்பாடுகள் மேலை நாட்டுடன் சேர, வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்ந்த பெரும்பாலான அந்த மக்களின் மொழியை மாற்றுவது இலகுவாகப் போனது என்பதே உண்மையாகும். இதை முதன்மையாக செய்தவரும் ஒரு கத்தோலிக்க மதகுருவே என்பது ஆச்சரியம் இல்லை, ஏனென்றால், மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய, மாயன் இனத்தவரின் வரலாற்று நூல்களை, கண்டு பிடிப்புகளை, ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள், அன்று எரித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. இது எந்த மதம் மேலும் உள்ள வெறுப்பால் அல்லது கோபத்தால், ஆதன், அப்படி நினைக்கவில்லை, ஆனால், வரலாற்றின் உண்மையை அவன் மனம் மீளாய்வு செய்தது. அவ்வளவுதான்! அதே நேரம், சிங்கள சமூகத்துடன் முதன்மையாக 20 ஆம் நூற்றாண்டில் இணைந்த கத்தோலிக்க தமிழர்கள் குடும்பத்தின் தலைமுறையில் பிறந்த, சிலாபத்தை சேர்ந்த செவிலியர் சமந்தி [Samanthi], சிலாபம் அரசு மருத்துவமனையில், ஒரு வயதான பெண்மணியின் கையை பிடித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அமைதி, சாந்தம், மற்றும் மணம் மிக்க பூவைக் குறிக்கும் அவளின் பெயர், மிகவும் பொருத்தமாக இருந்தது. “மகளே… நீங்களாவது தமிழில் பேசுங்க…” என்று அந்த மூதாட்டி கெஞ்சாமல் கெஞ்சிக் கொண்டு இருந்தாள். அந்த வார்த்தை சமந்தியின் மார்பில் குத்தியது. அவள் சிங்களத்தில் படித்தவள், இங்கிலீஷில் பொதுவாக பேசக் கூடியவள். ஆனால் கனவில் பாட்டியின் தமிழ் தான் அடிக்கடி வரும். பாட்டி அவளுக்கு வைத்த பெயர் செந்தூரி. ஆனால் பதியப்பட்ட பெயர் சமந்தி. உடப்புவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு விபத்து காரணமாக அவள் மருத்துவமனைக்கு மீண்டும் அழைக்கப்பட்டாள் . ஒரு மாணவனைக் காப்பாற்ற ஓடிய ஆசிரியர் ஆதன், தரையில் பலமாக விழுந்தான். மருத்துவமனை படுக்கையில் அவன் கண்களைத் திறந்தபோது, தமிழ் அரச மொழியாக இருந்த போதும், அவனிடம் முதலில் பேசப்பட்ட மொழி சிங்களம். அவன் முகத்தில் எள்ளலான சிரிப்பு: “எனக்கு வலியை விட … இந்த மொழித் திணிப்புத் தான் கொஞ்சம் அதிகமா குத்துதே…” என்றான். அந்தக் குரலைக் கேட்டவுடன் சமந்தி நின்ற இடத்திலேயே உறைந்து போனாள். ஏனெனில், அந்த உச்சரிப்பு அவள் பாட்டி பேசிய தமிழ். உண்மையில் அது வெறும் நினைவு திரும்புவது அல்ல. அவள் மறக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவளுடைய சுயம் [self], இப்போது ஒரு காலத்தில் தன் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட மொழியின் மூலம் திரும்பியது. அது வெறும் நினைவின் அதிர்ச்சி அல்ல; அது பறிக்கப்பட்ட சுயத்தின் திரும்புதல் - அழைப்பின்றி, மீண்டும் அவளைச் சந்தித்தது. "சாட்சிகள் இல்லாமல் தமிழர்கள் எப்படி மாறினர்." என்பதை இது படம் பிடித்து காட்டியது, ஒரு சாட்சியாக. மொழி இழப்பு, கலாச்சார அழிப்பு மற்றும் முறையான அழுத்தம் ஆகியவை அடையாளத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும், குரல் அல்லது மொழி போன்ற ஒரு சிறிய பகுதியை மீட்டெடுப்பது கூட ஒருவரை அவர்களின் உண்மையான சுயத்துடன் எவ்வாறு மீண்டும் இணைக்க முடியும் என்பதையும் தெளிவாகக் காட்டியது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 02 தொடரும் துளி/DROP: 2043 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 1 https://www.facebook.com/groups/978753388866632/posts/33877615588553654/?
  18. டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டெல்லியின் பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கிய ஏஐ உச்சிமாநாடு பிப்ரவரி 20 வரை நடைபெறும். 41 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் டெல்லியில் நடந்துவரும் ஏஐ உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் (திங்கள் கிழமை) கலந்துகொண்டவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசாங்கத்தின் "முழுமையான குழப்பம் மற்றும் கடுமையான நிர்வாகச் சீர்கேடு" என விமர்சித்துள்ளார். இந்த உச்சிமாநாட்டின் தொடக்கத்தின்போது நிரம்பி வழிந்த அரங்குகள், நீண்ட வரிசைகள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் நுழைவுக்கான அறிவுறுத்தல்களில் குழப்பமான நிலை ஆகியவை காணப்பட்டன. அதிகப்படியான கூட்டம் காரணமாகப் பாதுகாப்புப் பரிசோதனை செயல்முறையினாலும் மக்களுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன. பிரதமர் நரேந்திர மோதி மாநாட்டின் எக்ஸ்போவுக்கு வருவதற்கு முன்னதாக சில அரங்குகள் தற்காலிகமாக காலி செய்யப்பட்டன. குழப்பங்களுக்கு மத்தியில் சில பங்கேற்பாளர்கள் தங்களது பொருட்கள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டது குறித்தும் புகார் அளித்தனர். ரோபோ நாய் குறித்த சர்ச்சை தவிர, இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகம் ஏஐ உச்சிமாநாட்டில் ஒரு ரோபோ நாயைத் தன்னுடைய தயாரிப்பு என்று கூறிக்கொண்டது, ஆனால் அது சீனாவைச் சேர்ந்தது. இது குறித்தும் சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களுக்குப் பிறகு, அந்த ரோபோ நாயைத் தாங்கள் உருவாக்கவில்லை என்று கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தது. முன்பு வெளியான செய்தியை "தகவல் தொடர்பு பிழை" என்று கூறியது. மேலும் மாநாட்டில் இருந்த தனது ஸ்டாலில் இருந்து வெளியேறியது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது மோதி அழைப்பை ஏற்க வங்கதேச புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் தயங்குவது ஏன்? ஹசீனாவை தங்க வைத்துள்ள இந்தியா வங்கதேசத்தின் புதிய அரசுடன் உறவை எவ்வாறு பராமரிக்கும்? பாகிஸ்தானுக்கு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3 இந்தியர்கள் - 30 மாதங்கள் அங்கு என்ன செய்தனர்? பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சிறுமியை மீட்க துப்பறிவாளருக்கு 'செங்கல்' உதவியது எப்படி? End of அதிகம் படிக்கப்பட்டது நியோசேபியன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்சய் யாதவ் எக்ஸ் தளத்தில், பிரதமரின் வருகைக்கு முன்னதாகப் பாதுகாப்புப் பணியாளர்கள் அரங்கைக் காலி செய்யச் சொன்னதாகவும், பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளித்ததாகவும் எழுதியுள்ளார். பின்னர் நிறுவனத்தின் சில அணியக்கூடிய செயற்கை நுண்ணறிவுச் சாதனங்கள் திருடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். தனஞ்சய் யாதவ் எக்ஸ் தளத்தில், "யோசித்துப் பாருங்கள், நாங்கள் விமானம், தங்குமிடம் மற்றும் பூத் வரை அனைத்திற்கும் செலவழித்துள்ளோம். பலத்த பாதுகாப்பு இருந்த இடத்திலிருந்தே எங்களது அணியக்கூடிய சாதனங்கள் மாயமாகிவிட்டன. பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ குழுவினருக்கு மட்டுமே அனுமதி இருந்தது என்றால், இது எப்படி நடந்தது? இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். ரீஸ்கில் நிறுவனர் புனீத் ஜெயின் ஆரம்பக்கால குழப்பங்களை விமர்சித்து, பல பிரதிநிதிகள் தண்ணீர் மற்றும் தெளிவான அறிவுறுத்தல்கள் இன்றி வெளியே நின்று கொண்டிருந்ததாகக் கூறினார். இருப்பினும், செவ்வாய்க்கிழமை நிலைமை மேம்பட்டதை அவர் ஏற்றுக்கொண்டார். தொழில்முனைவோர் பிரியான்ஷு ரத்னாகர் என்பவரும் நீண்ட வரிசைகள், அரங்குகளை அணுகுவதில் சிரமங்கள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் பதிவு தொடர்பான சிக்கல்களைக் குறிப்பிட்டு, செயல்பாட்டை விட 'காட்சிப்படுத்தல்' (Show-off) அதிகமாக இருந்ததாகக் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்களிலும் விவாதம் இது ஒரு சர்வதேச நிகழ்வு மற்றும் இதில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், சர்வதேச ஊடகங்களின் பார்வையும் இந்த உச்சிமாநாட்டின் மீது உள்ளது. வெளிநாட்டு ஊடகங்களில் இந்த உச்சிமாநாடு பல காரணங்களுக்காக விவாதிக்கப்படுகிறது. அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க், "சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக உச்சிமாநாடு இந்த வாரம் குழப்பத்தில் சிக்கியது. திடீர் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி சிக்கித் தவித்தனர். ஏஐ துறையில் நாட்டின் முன்னேற்றத்தைப் பறைசாற்றுவதை நோக்கமாகக் கொண்ட அந்த நிகழ்விற்கு இது ஒரு பின்னடைவாகும்," என எழுதியது. "இந்தியா ஏஐ உச்சிமாநாட்டின் முதல் நாளில் நிலவிய குழப்பங்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை நிலைமை சீராவது தெரிந்தது. செவ்வாய்க்கிழமை பங்கேற்பாளர்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தின் பிரமாண்டமான கண்காட்சி வளாகத்தின் ஹால்களுக்கு இடையே தடையின்றி நடமாடுவதைக் காண முடிந்தது." ப்ளூம்பெர்க் தனது செய்தியில், "கென்யாவிலிருந்து வந்த மோசஸ் திகாவுக்கு இந்த உச்சிமாநாட்டின் அளவு வியக்கத்தக்கதாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் இருப்பு அவரைக் கவர்ந்தது. தொடக்க நாளில் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் பல மணிநேரம் வளாகத்திற்குள் அடைக்கப்பட்டு அல்லது வெளியே நிறுத்தப்பட்டதால் நிலவிய குழப்பங்கள் குறித்து அவருக்கு எந்த குறையும் இல்லை," என்று எழுதியுள்ளது. பிரதமர் நரேந்திர மோதி அங்கு வரும் வரை அனைத்தும் சீராக நடந்ததாக திகா கூறினார். மோதியுடன் வந்த பாதுகாப்புப் படை முழு வளாகத்தையும் சீல் வைத்தது. நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மோதி செல்லும் வரை தாங்கள் பல மணிநேரம் உணவு மற்றும் தண்ணீர் இன்றி உள்ளேயே இருந்ததாகப் பல பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,Getty Images 'திறன் குறித்து சந்தேகம்' ராய்ட்டர்ஸ் தனது செய்தியில், இந்தியா எந்த நோக்கத்திற்காக ஏஐ உச்சிமாநாட்டை நடத்தியதோ, அதற்கு மாறாகத் திங்கள்கிழமை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று எழுதியுள்ளது. பங்கேற்பாளர்கள் நீண்ட வரிசைகள், கூட்ட நெரிசல் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பான குறைபாடுகள் குறித்துப் பல புகார்களைத் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் எழுதியுள்ளது. "பிரதமர் நரேந்திர மோதி அரசாங்கத்திற்கு, சர்வதேச அளவிலான இந்த நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் என்பது வெறும் பிம்பம் சார்ந்த கேள்வி மட்டுமல்ல, மாறாக ஏற்பாட்டு ரீதியான குறைபாடுகள் இந்தியாவின் தொழில்நுட்பத் திறன் குறித்த செய்தியையும் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியது." ஏஐ வாய்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'போல்னா' வின் இணை நிறுவனர் மைத்ரேய வாக் எக்ஸ் தளத்தில், "வாயில்கள் மூடப்பட்டுள்ளன, எனவே ஏஐ உச்சிமாநாட்டில் எனது சொந்த பூத் வரை கூட என்னால் செல்ல முடியவில்லை. நீங்களும் வெளியே சிக்கியிருந்து போல்னா குழுவைச் சந்திக்க விரும்பினால், எனக்கு டிஎம் செய்யுங்கள்" என்று எழுதியுள்ளார். அவர் கிண்டலாக, "ஒருவேளை நாம் கன்னாட் பிளேஸில் உள்ள ஏதேனும் ஒரு கஃபேயில் ஒரு சிறிய மினி-பூத் அமைத்துக் கொள்ளலாம்" என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் குழப்பமான சூழல் நிலவியது. இந்தியா எதைச் சாதிக்க முடியும்? பைனான்சியல் டைம்ஸ் இந்தியாவின் ஏஐ குறிக்கோள்கள் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது. தனது செய்தியில், "இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவு கடந்த தசாப்தத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதத்திற்கும் கீழே வந்துவிட்டது, இது சீனாவின் 2.5 சதவீதம் மற்றும் அமெரிக்காவின் 3.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு" என்று எழுதியுள்ளது. "இதில் பெரும்பகுதி செலவு பாதுகாப்பு ஆராய்ச்சிக்குச் செலவிடப்படுகிறது, இதனால் மக்களுக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்குக் குறைந்த அளவிலான வளங்களே மிஞ்சுகின்றன. 2022-இல் மின்னணு அமைச்சகத்திற்கு ஒட்டுமொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே கிடைத்தது." "இந்தியாவின் தனியார் துறையும் ஏஐ விவகாரத்தில் மந்தமாகவே உள்ளது. கடந்த ஆண்டு வரை கூட தொழில்துறையின் சில மூத்த தலைவர்கள் இந்தியா தனது சொந்த பெரிய மொழி மாதிரிகளை உருவாக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினர் மற்றும் ஏஐ வளர்ச்சியை சிப் தயாரிப்பாளர்களால் பெரிதாக ஊதப்பட்ட பிரசாரம் என்று குறிப்பிட்டனர்.'' என எழுதியுள்ளது "இந்தியா உலகத் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டு வந்து வளர்ச்சிக்காக ஏஐ-யை ஆதரிக்க முடியும். ஆனால் நிகழ்வை நடத்துவதால் மட்டும் ஏஐ பந்தயத்தில் சமநிலையைப் பெற முடியாது," "ஏஐ உச்சிமாநாட்டை ஒரு ராஜீய காட்சியிலிருந்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், இந்தியா உறுதியான உள்நாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெளிநாட்டுத் தொழில்நுட்பச் சூழலைச் சார்ந்து இருந்துகொண்டு இந்தியா உலகளாவிய தெற்கு பகுதியில் செயற்கை நுண்ணறிவில் முன்ன்னிலையில் இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது." என பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,20 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் துணை அதிபர்கள் டெல்லி ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாட்டிற்கு வந்துள்ளனர் 'சவால் விடுவதற்கான ஒரு படி' சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் குரலாகக் கருதப்படும் ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸ், "அமெரிக்கா மற்றும் சீனாவுடனான ஏஐ இடைவெளியைக் குறைப்பதற்கான பந்தயத்தில், இந்தியா பெரிய அளவில் டிஜிட்டல் வளர்ச்சியை வேகப்படுத்த ஒரு பிரமாண்டமான புதிய 'டேட்டா சிட்டி' திட்டத்தைத் தீட்டி வருகிறது." என கூறியுள்ளது. பெய்ஜிங் தபால் மற்றும் தொலைத்தொடர்பு பல்கலைக்கழகத்தின் மனித-இயந்திர தொடர்பு மற்றும் அறிவாற்றல் பொறியியல் ஆய்வகத்தின் இயக்குநர் லியூ வெய் செவ்வாய்க்கிழமை குளோபல் டைம்ஸிடம், ''இந்த உச்சிமாநாடு உலகளாவிய ஏஐ போட்டியில் இந்தியாவின் தீவிரப் பங்களிப்பு முயற்சிகளையும் வேகத்தையும் பிரதிபலிக்கிறது மற்றும் வளர்ந்த நாடுகளின் நீண்டகால ஆதிக்கத்திற்குச் சவால் விடுவதற்கான ஒரு படியாகும்'' என்றார். "ஏஐ துறையில் இந்தியா இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது," என குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது, "இந்தியா ஈர்க்கக்கூடிய ஒரு செயல் திட்டத்தை முன்வைத்துள்ளது, ஆனால் அடிப்படை ஆராய்ச்சி, கணினி ஆதாரங்கள், திறமைகளின் ஆழம் மற்றும் சூழல் அமைப்பின் முதிர்ச்சி தொடர்பான சவால்கள் காரணமாகத் தனது முழுமையான ஏஐ திறனை அடையத் தொடர்ச்சியான முயற்சிகளும் சர்வதேச ஒத்துழைப்பும் தேவைப்படும்," என்று லியூ கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xy8jqpjyzo
  19. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 108 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 108 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் தேவநம்பியதீசனின் இளைய சகோதரர்கள் சூரதிச்சன் அல்லது சூரதிஸ்ஸன் [Suratissa] மற்றும் உபதிச்சன் அல்லது உபதிஸ்ஸன் [Upatissa] அனுராதபுரத்தில் தலா பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தனர். களனி மற்றும் மகமாவைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் [Rulers at Kelaniya and Magama] அனுராதபுரத்து மன்னருக்கு காணிக்கை செலுத்தினர். உத்திய அல்லது உத்தியன் மன்னரின் [king Uttiya] ஆட்சிக் காலத்தில், இரண்டு குதிரை சவாரி செய்பவர்கள் / வணிகர்கள் [horse riders / traders] உத்திய மன்னரைக் கொன்று இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அதன் பின் அசேல அல்லது அசேலன் [Asela] அவர்களைக் கொன்று பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஒரு சோழ இளவரசர் எல்லாளன் [Ellalan or Elara] மகாவலி முகத்துவாரத்தில் [mouth of Mahaveli] தரையிறங்கி அசேலாவைக் கொன்று நாற்பத்து நான்கு ஆண்டுகள் கொடுமையாக ஆட்சி செய்தார். எல்லாளன் பல புத்த கட்டிடங்களை இடித்ததாக இராசவலிய [Rajavaliya] கூறுகிறது. இது மற்ற இரண்டு முன்னைய நாளாகமங்களில் எல்லாளனைப் பற்றி கொடுக்கப்பட்ட விபரங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது. அரச வம்சத்தின் விதை களனி மற்றும் மகமாவில் தொடர்ந்ததாக [seed of the Royal dynasty continued in Kelaniya and Magama] இராசவலிய கூறுகிறது. இதன் மொழிபெயர்ப்பாளர் 'சிங்களவர்கள்' என்ற வார்த்தையை அடைப்புக்குறிக்குள் சேர்த்தார்; இருப்பினும், அது மூல உரையில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி, காக்கவன்னதிஸ்ஸனின் அல்லது கவந்திஸ்ஸனின் (Kakkavannatissa or Kavantissa) உயிரியல் மகன் அல்ல. மேலும் மகாவம்சத்தின்படி அரச வம்சத்தின் தொடர்ச்சி இங்கே முடிவடைகிறது. இராசவலியத்தில் ஒரு ரொட்டி அல்லது ரொட்டியா [Rodi or Rodiya / என்பது இலங்கையின் சிங்கள மக்களிடையே உள்ள ஒரு தீண்டத்தகாத சமூகக் குழு அல்லது சாதி ஆகும்.] பற்றிய ஒரு கதை உள்ளது, இது மற்ற இரண்டு நாளாகமங்களில் கொடுக்கப்பட்டுள்ள கதைகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது. தேவநம்பிய தீசனின் தம்பிகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ள ஆட்சிகளின் வரிசை மற்ற இரண்டு நாளாகமங்களுடன் பொருந்தவில்லை. கெளனிதீசனின் அல்லது களனி தீசனின் [Kelanitissa] தம்பி ராணியுடன் உறவு வைத்திருந்ததும், ஒரு தேரர் சந்தேகிக்கப்பட்டதும் மற்ற இரண்டு நாளாகமங்களில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களுடன் பொருந்தவில்லை. "பாத்திரத்தை எண்ணெயால் நிரப்பி, நெருப்பினால் சூடாக்க முடியவில்லை , அதாவது, தீயில் வைத்தாலும் எண்ணெய் காயவில்லை அல்லது சூடாகவில்லை என்றும் கூறுகிறது. இவை உண்மையான நிகழ்ச்சி அல்ல, அது அதிகமாக அளவு கடந்த கற்பனை, கதையை வியப்பாகக் காட்ட உருவாக்கப்பட்ட embellishment (அழகாக்கம்) தான் என்று நினைக்கிறேன்! மேலும் மன்னார் மற்றும் தூத்துக்குடிக்கு [Mannar and Tuttukudiya] இடையே இராவணனுக்கு இருபத்தைந்து அரண்மனைகளும் நான்கு இலட்சம் தெருக்களும் இருந்ததாக இராசாவலிய கூறுகிறது. அவை இராவணனின் துன்மார்க்கத்தால் [கெட்ட நடத்தையால்] கடலில் மூழ்கடிக்கப்பட்டன என்று இராசாவலிய கூறுகிறது. எனவே இராசாவலிய இராவணனை ஒரு துன்மார்க்கனாகக் இங்கு கூறுகிறது. மன்னார் மற்றும் தூத்துக்குடிக்கு இடையே இருபத்தைந்து அரண்மனைகளும் நான்கு லட்சம் தெருக்களும் இருந்தது என்றால், குரங்கு படை மற்றும் அணிலின் உதவியுடன் இராமர் ஏன் இராமர் பாலம் (Rama's Bridge) அல்லது ஆதாமின் பாலம் (Adam's Bridge) என்ற ஒரு பாலத்தைக் கட்டினார் என்று எவரும் யோசிக்கலாம் என்று எண்ணுகிறேன்? கதை என்னவென்றால், களனி தீசன் ஒரு பிக்குவை சூடான எண்ணெய் குளியலில் உயிருடன் எரிக்க முயன்றதால், இலங்கையின் தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான பகுதி, இலங்கைக்கும் இன்றைய இந்தியாவின் தெற்கு முனைக்கும் இடையில் உள்ள நிலம், கடலுக்குள் மூழ்கியது என்கிறது. அது மட்டும் அல்ல, களனி தீசன் நரகத்தின் தீப்பிழம்புகளில் மூழ்கடிக்கப்பட்டார். இதன் செய்தி என்னவென்றால், பிக்குகள் உயர்ந்தவர்கள், அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யக் கூடாது என்பதுதான்!. மேலும் களனி தீசன் தனது மகளை ஒரு மூடப்பட்ட படகில் ஏற்றி, களனி தீசன் என்ற மன்னனின் மகள், கடலுக்கு பலியாகக் கொடுக்கப்பட்டார் என்ற செய்தியுடன், தனது துரதிர்ஷ்டத்தை சந்திப்பதற்கு முன்பு அதை மிதக்கச் செய்தார்; கடல் தெய்வமான மணிமேகலை [Mani-Mekhala] படகை தெற்கே உருகுணைவில் [Ruhuna] உள்ள மகமாவுக்கு [Magama] எடுத்துச் சென்றது. இறுதியில் மகமாவின் மன்னர் காவன்தீசன் அல்லது காகவண்ண தீசன் [காகத்தை போல் நிறம் உள்ளவன் / Kavan Tissa, also known as Kaha Wan Thissa (Golden-coloured Tissa) and Kaka Wanna Tissa (Crow-coloured Tissa)] அவளை தனது ராணி மனைவியாக [queen consort] ஆக்கினார். இந்த விவரம் மகாவம்சத்தில் உள்ளவற்றுடன் ஒத்துப்போகவில்லை. தமிழ் மொழியில் இரண்டாவது மிகவும் பிரபலமான காவியமான மணிமேகலையின் (மணி-மேகலா) கதாநாயகியும் மணிமேகலை என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தக் காவியத்தின்படி மணிமேகலை என்பது கடல் தெய்வத்தின் பெயர் ஆகும். இராசாவலியவும் மணிமேகலை ஒரு கடல் தெய்வம் என்றே கூறுகிறது. நாயகி மணிமேகலை, தேரி சங்கமித்தாவைப் போலவே ஒரு பௌத்த கன்னியாஸ்திரியும் ஆவார். மேலும் மிகவும் பிரபலமான தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகியின் மகளும் ஆவார். மணிமேகலை காவியம் தமிழில் உள்ள ஒரு பௌத்த காவியமாகும். எனினும் சிலர் இது சமண காவியம் என்றும் கூறுகின்றனர். இங்கு மணிமேகலை, சவன்ன மலைக்கு (சமன்ன மலை - சமன்ன குட்டா / Savanna Malai (Samanna hill- Samanna Kutta)) விஜயம் செய்தார். இந்த இரண்டு காவியங்களான மணிமேகலை மற்றும் இராசாவலிய இலங்கையுடனும் பௌத்தத்துவத்துடனும் உள்ள தொடர்புகள், அவை இலங்கையின் வரலாற்று நூல்களுடன் மறைமுகமாக தொடர்புடையவை என்பதைக் காட்டுகிறது எனலாம். இராணியை கண்டு எடுத்த இடத்தில் ஒரு விகாரை கட்ட மன்னன் ஏற்பாடு செய்தார், இதன் காரணமாக அவள் பின்னாளில் விகார மகா தேவி என்று அழைக்கப்பட்டாள். பின், இராணி ஒரு குழந்தையை கருத்தரித்தாள், கர்ப்பத்தின் காரணமாக அவளுக்கு மூன்று ஆசைகள் இருந்தன. இராணியின் விருப்பத்தை நிறைவேற்றும் பணியை மன்னன் வேலுசுமணனிடம் [Velusumana] ஒப்படைத்தார். வேலுசுமணன் எல்லாளனின் தொழுவத்திற்குள் [குதிரைகள் வைக்கப்படும் ஒரு கட்டிடம்] சென்று, தான் தான் வீரன் வேலுசுமணன் என்று சத்தமாக அறிவித்து, முடிந்தால் என்னைப் பிடிக்குமாறு அவர்களை கேலி செய்து, மிக வேகமாக ஒரு குதிரையின் மீது சவாரி செய்தான். ஒரு தமிழ் வீரன் அவனைப் பின்தொடர்ந்தான். வேலுசுமணன் குதிரையிலிருந்து கீழே குதித்து, சரியான நேரத்தில் தனது வாளை அவனது தலைக்கு நேராக நீட்டினான். அப்பொழுது, தமிழ் வீரனின் தலை அவனது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டது. பின்னர் வேலுசுமணன் விகாரமாகாதேவியிடம் அந்த தலையை வழங்கினான். எனினும் இந்தக் கதை தீபவம்சத்தில் விவரிக்கப்படவில்லை. என்றாலும், இந்தக் கதை மகாவம்சத்தில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல கொடூரமானது அல்ல. அதாவது, மகாவம்சத்தில் ஒரு தமிழ் வீரனின் தலையை வெட்டப் பயன் படுத்தப்பட்ட வாளிலிருந்து கழுவப்பட்ட இரத்தக் கறை படிந்த தண்ணீரைக் குடித்த இராணியை விட, இங்கு விகார மகா தேவியை சிறந்த வெளிச்சத்தில் சித்தரிக்க இராசாவலிய முயன்று உள்ளது புலனாகிறது. மற்ற இரண்டு ஆசைகள் எந்த முக்கியத்துவமும் இல்லாதவை, மேலும் அவை இங்கே விரிவாகக் கூறப்படவில்லை. Part: 108 / APPENDIX – "Summary of Rajavaliya" Devenipetissa’s younger brothers Suratissa and Upatissa ruled for ten years each at Anuradhapura. Rulers at Kelaniya and Magama paid tributes to the king at Anuradhapura. During the reign of king Uttiya, two horse riders/traders killed the king Uttiya and ruled for twenty-two years. Asela killed them and ruled for ten years. A Soli prince Elala landed at the mouth of Mahaveli, killed Asela, and ruled wickedly for forty-four years. Rajavaliya claims that Elala demolished many Buddhist buildings. This is in sharp contrast with the accounts given about Elara in the other two chronicles. Rajavaliya claim that the seed of the Royal dynasty continued in Kelaniya and Magama. The translator added the word Sinhalese within the brackets; however, it is not in the text. Dutthagamani was not a biological son of Kakkavannatissa (Kavantissa), and the continuation of royal line is ended here as per the Mahavamsa. There is a tale about a Rodiya in the Rajavaliya which is quite different from the tales given in the other two chronicles. The order of the reigns given about the Devenipetissa’s younger brothers does not tally with the other two chronicles. The story of Kelanitissa’s younger brother having affairs with the queen, and a Thera being suspected also does not tally with the accounts given in the other two chronicles. The fire could not make the cauldron full of oil to heat up is another tale of embellishments. Rajavaliya says that Ravana had twenty-five palaces and four hundred thousand streets between Mannar and Tuttukudiya, and these were submerged by sea because of the wickedness of Ravana. Rajavaliya, therefore, considers Ravana a wicked fellow. One may wonder why Rama built the bridge, Adams Bridge with the help of the monkey brigade and a squirrel if there were twenty-five palaces and four hundred thousand streets between Mannar and Tuttukudiya! The story is that there was a submergence of land between Lanka and the southern tip of the present day India. More than ninety percentage of Lanka was submerged under sea because Kelanitissa tried to burn the Bhikkhu alive in a hot oil bath. Kelanitissa was engulfed in flames of hell. The message is that the Bhikkhus are supreme and do not do any harm to them. Kelanitissa set his daughter in a covered boat and set it drift before he met with his ill fate with the message on the boat; the daughter of the king Kelanitissa offered as a victim to the sea. The Sea Goddess Mani-Mekhala carried the boat down south to Magama in Ruhuna. Eventually the king of Magama, Kavantissa, made her his queen consort. The detail is not corroborating with those from the Mahavamsa. It is interesting to note that the heroine of the second most popular epic in Tamil language, Mannimegalai (Mani-Mekhala), is also Mannimegalai. Mannimegala is also a name of the sea goddess as per this epic. Rajavaliya too says Mannimeghalai is a sea goddess. The heroine Mannimeghalai is also a Buddhist nun, same as Theri Samghamitta, and the daughter of Kannaki, the heroine of the most popular Tamil Epic Silappathikaram which some claim a Jain epic. The Epic Mannimeghalai is a Buddhist epic in Tamil. Mannimeghalai visited Savanna Malai (Samanna hill- Samanna Kutta). The connection of these two epics with Lanka and the Buddhism is dealt with elsewhere, with the indirect connection to the chronicles of Ceylon. The king caused a Vihara to be constructed at the place where the queen was found, and she is called Vihara Maha Devi because of this. The queen conceived a child and in the cause of the pregnancy she had three desires. The king assigned the task of fulfilling the desire of the queen to the champion Velusumana. Velusumana went into the Elala’s stable and loudly proclaimed that he was the champion Velusumana and taunted them to catch him if they could, and rode on a horse very fast. He was pursued by a Tamil champion. Velusumana jumped down from the horse and stretched his sword at the correct time that the head of the Tamil champion was severed from his body. Then he presented the object to Viharadevi. This story is not narrated in the Dipavamsa. This story is not as gory as the one that is narrated in the Mahavamsa. Rajavaliya tried to portray Vihara Maha Devi in a better light than the woman who drank the blood stained water washed off the sword which was used to behead a Tamil champion in the Mahavamsa. The other two desires are of no significance and not detailed here. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 109 தொடரும் / Will follow துளி/DROP: 2044 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 108 https://www.facebook.com/groups/978753388866632/posts/33877924931856053/?
  20. இவர் யார் என்றே தெரியாமல் இருந்தது நான் செய்த பாக்கியம் 2-3 மாதங்களில் ஐபிஎல் வருகிறது. இப்பவே பெயரை பாடமாக்குங்கள். மரவேலை சோதனை மாதிரி இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.