All Activity
- Past hour
-
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்
போய் விட்டு திரும்பி வரும் போது நோபல் பரிசு பரிந்துரையோடு வருவார்.அல்லது யாருக்கும் குடுப்பதை தட்டிப் பறிப்பார்..🤭
-
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்
ட்ரம்ப் ஐயா... விண்வெளிக்குப் போக ரெடி. 😂
-
செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு!
செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு! செம்மணி சிந்துப் பாத்தி மனிதப் புதை குழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பூரணி மரியநாயகம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஏற்கனவே யாழ்ப்பாண திறந்த நீதிமன்றத்தில் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது. இதன்படி வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1471212
-
விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
ட்ரம்பின் எச்சரிக்கையுடன் 110 டொலர்களை விஞ்சிய எண்ணெய் விலை! ஒரே இரவில் ஈரானை முழுவதுமாக அழித்துவிட முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் இன்று (07) ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 110 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான விலையில் வர்த்தகமானது. அதன்படி, சர்வதேச எண்ணெய் விலை அளவுகோலான பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு, ஒரு சதவீதம் உயர்ந்து 111 டொலராக வர்த்தகமானது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 2.6 சதவீதம் உயர்ந்து 115.3 டொலர்களாக வர்த்தகமானது. போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு எதிரான தனது அச்சுறுத்தல்களை ட்ரம்ப் தீவிரப்படுத்தி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் எண்ணெய் விலை தொடர்பான கவலை அதிகரித்து வருகிறது. வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தொஹ்ரான் வொஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை காலக்கெடு விதித்தார். இல்லையெனில் ஈரானின், மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட குடிமை உள்கட்டமைப்புகள் மீது புதிய தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார். அந்த எச்சரிக்கையில் அவர், ஒரே இரவில் முழு நாட்டையும் தம்மால் செயலிழக்கச் செய்ய முடியும், அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம் என்றும் கூறினார். இந்த அறிவிப்புடன் செவ்வாயன்று ஆசியாவின் பங்குச் சந்தைகள் கலவையாகக் காணப்பட்டன. ஜப்பானின் நிக்கெய் குறியீடு மாற்றமின்றியும், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 1.1% உயர்ந்தும் இருந்தன, ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 0.7% சரிந்தது. பெப்ரவரியில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதிலிருந்து சந்தைகள் நிலையற்றதாக இருந்து வரும் நிலையில், இந்தப் போர் அதிக பணவீக்கத்திற்கும் மெதுவான உலகளாவிய வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா திங்கட்கிழமை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1471209
- Today
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
பொதுவாழ்வில் குறிப்பாக அரசியலுக்கு வருவோரின் தனிப்பட்ட வாழ்க்கை பேசு பொருளாவது தேவையானது என்பதே என் நிலை. மனிதர்களை அவர்களின் personality ஐ எடை போடுவது வாக்காளருக்கு முக்கியம். தனி வாழ்வில் அவர்கள் moral compass எப்படி செயல்பட்டது என்பதை வைத்து ஓரளவுக்கு அவர்கள் பொது வாழ்வில் எப்படி இருப்பார்கள் என்பதை ஊகிக்கலாம். விசர் தம்பர், சீமான் ஆகியோர் அண்மைய உதாரணங்கள். Integrity is doing the right thing, even when no one is watching. யாரும் பார்க்காதபோதும் சரியானதைச் செய்வதே நேர்மை. இதன் அர்த்தம் அவர்களின் படுக்கை அறையை எட்டி பார்க்க வேண்டும் என்பதல்ல. ஆனால் விஜி அண்ணியை சீமான் நடத்திய விதம், அவருக்கு தம்பிகள் யாழ் உட்பட்ட தளங்களில் கொடுத்த “பட்டம்” சீமானும் அவரது தம்பிகளும் எப்படி பட்ட ஆட்கள் என்பதை துல்லியமாக காட்டி நின்றது. இன்றைக்கு சீமான் தமிழக பெண் வாக்காளரை பார்த்து…. இலவசமா எல்லாம் தருவான்… பிள்ளையும் தருவான்… வாங்கிகொள்வாயா… என அருவருக்க தக்கவையில் பேசுவது… சீமானை விஜி விடயத்தில் எடை போட்ட என் போன்றோருக்கு அதிர்ச்சியே இல்லை. ஏன் என்றால் அவரின் தனி வாழ்க்கையில் பெண்களை நடத்திய விதம்… யானை வரும் முன்னே கேட்ட மணியோசை.
-
புதன்கிழமை அரச விடுமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்!
ஆமாம்..நாளை முதல் இந்த நடை முறை ரத்தாகி விட்டது என்று ஊரிலிருந்து எழுதுபவர்களுடைய பக்கங்களில் பார்க்க முடிகிறது.என்னைப் பொறுத்த மட்டில் நல்ல தீர்மானம்.
-
தாய்வான் அமெரிக்காவுடனா சீனாவுடனா சேர்ந்திருக்க வேண்டும்?
நாறிப்போன கிளியை நம்பி மோசம் போவதைவிட அயலவன் மேல், Hong Kong இன்னும் பழைய மாதிரி நன்றாக இருக்கு.
-
களைத்த மனசு களிப்புற ......!
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) மார்ச் 28, சனி, 14:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB 2) மார்ச் 29, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 3) மார்ச் 30, திங்கள், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் RR 4) மார்ச் 31, செவ்வாய், 15:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் GT 5) ஏப்ரல் 1, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG 6) ஏப்ரல் 2, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR 7) ஏப்ரல் 3, வெள்ளி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் CSK 8) ஏப்ரல் 4, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 9) ஏப்ரல் 4, சனி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 10) ஏப்ரல் 5, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH 11) ஏப்ரல் 5, ஞாயிறு, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் RCB 12) ஏப்ரல் 6, திங்கள், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் KKR 13) ஏப்ரல் 7, செவ்வாய், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் RR 14) ஏப்ரல் 8, புதன், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் DC 15) ஏப்ரல் 9, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR 16) ஏப்ரல் 10, வெள்ளி, 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 17) ஏப்ரல் 11, சனி, 11:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 18) ஏப்ரல் 11, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK 19) ஏப்ரல் 12, ஞாயிறு, 11:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் LSG 20) ஏப்ரல் 12, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 21) ஏப்ரல் 13, திங்கள், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 22) ஏப்ரல் 14, செவ்வாய், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 23) ஏப்ரல் 15, புதன், 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RCB 24) ஏப்ரல் 16, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் MI 25) ஏப்ரல் 17, வெள்ளி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 26) ஏப்ரல் 18, சனி, 11:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB 27) ஏப்ரல் 18, சனி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் SRH 28) ஏப்ரல் 19, ஞாயிறு, 11:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் KKR 29) ஏப்ரல் 19, ஞாயிறு, 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS 30) ஏப்ரல் 20, திங்கள், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 31) ஏப்ரல் 21, செவ்வாய், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் DC 32) ஏப்ரல் 22, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 33) ஏப்ரல் 23, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் MI 34) ஏப்ரல் 24, வெள்ளி, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் RCB 35) ஏப்ரல் 25, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் PBKS 36) ஏப்ரல் 25, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RR 37) ஏப்ரல் 26, ஞாயிறு, 11:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 38) ஏப்ரல் 26, ஞாயிறு, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 39) ஏப்ரல் 27, திங்கள், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 40) ஏப்ரல் 28, செவ்வாய், 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 41) ஏப்ரல் 29, புதன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI 42) ஏப்ரல் 30, வியாழன், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 43) மே 1, வெள்ளி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RR 44) மே 2, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 45) மே 3, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 46) மே 3, ஞாயிறு, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் GT 47) மே 4, திங்கள், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI 48) மே 5, செவ்வாய், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 49) மே 6, புதன், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் SRH 50) மே 7, வியாழன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 51) மே 8, வெள்ளி, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 52) மே 9, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் RR 53) மே 10, ஞாயிறு, 11:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG 54) மே 10, ஞாயிறு, 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் RCB 55) மே 11, திங்கள், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS 56) மே 12, செவ்வாய், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT 57) மே 13, புதன், 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 58) மே 14, வியாழன், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 59) மே 15, வெள்ளி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் LSG 60) மே 16, சனி, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் KKR 61) மே 17, ஞாயிறு, 11:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 62) மே 17, ஞாயிறு, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 63) மே 18, திங்கள், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK 64) மே 19, செவ்வாய், 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR 65) மே 20, புதன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் KKR 66) மே 21, வியாழன், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் CSK 67) மே 22, வெள்ளி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 68) மே 23, சனி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் LSG 69) மே 24, ஞாயிறு, 11:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 70) மே 24, ஞாயிறு, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் KKR கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) அணி? RCB அணி? RR அணி? MI அணி? KKR 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) RCB #2 - ? (3 புள்ளிகள்) MI #3 - ? (2 புள்ளிகள்) RR #4 - ? (1 புள்ளி) KKR 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! அணி? RR 74) செவ்வாய் 26 மே 15:00 UK, Venue TBC - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team அணி? RCB 75) புதன் 27 மே 15:00 UK, Venue TBC - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team அணி? RR 76) வெள்ளி 29 மே 15:00, Venue TBC - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator அணி? KKR 77) ஞாயிறு 31 மே 15:00 UK, பெங்களூரு - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (7 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 அணி? RCB 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? CSK 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? GT 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? TIM DAVID. 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? RCB. 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? NOOR AHMAD. 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? RR. 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? VIRAT KOHLI. 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? LSG. 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? ARSHDEEP SINGH. 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? CSK. 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? SAI SUDHARSAN. 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? CSK. 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? KKR. வெற்றியை நாளை போட்டிகள் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் . ......! 💥- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ரசோதரன், சினிமா, அரசியல், போன்றவற்றில் இருப்பவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் அவர்களது தனியுரிமை என்பது அடிப்படை உரிமை. பொதுவெளியில் பிரபலமானவர்களை உலகம் எவ்வாறு மதிப்பீடு செய்கிறது என்ற உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அந்தப் பிரபலங்களில் எத்தனை பேர் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வெளி உலகுக்குத் தெரியாமல், ஒழுக்கத்துடன் வாழ்கிறார்கள் என்பது நமக்குத் சரியாகத் தெரியாது. பல சமயங்களில், அவர்கள் நேரடியாக பதிலளிக்காமல், வார்த்தை விளையாட்டுகளின் மூலம் கேள்விகளைத் கடந்து போய் விடுகிறார்கள். உதாரணமாக, அறிஞர் அண்ணாவிடம் ஒரு நிருபர், “உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?” என்று கேட்டபோது, அவர் “பானுமதியும் படிதண்டா பத்தினியில்லை. நானும் முற்றிலும் துறந்த முனிவனுமில்லை” என்று சொல்லியிருந்தார். இந்தப் பதிலில் அவரது நகைச்சுவைத் திறமை, வார்த்தை ஜாலங்கள் இருந்தாலும், ஒரு குடும்பப் பெண்ணைக் குறிக்கும் விதத்தில் பேசப்பட்டுள்ள ஆணாதிக்கத்தையும் பார்க்கலாம். ஒரு குடும்பப் பெண்ணின் மரியாதை பாதிக்கப்படுவது போன்ற விளைவுகள் பற்றிய உணர்வு அவரது பதிலில் நான் காணவில்லை. இதே போன்ற பாணியைத்தான் அண்ணாவின் தம்பியும் சொன்னார் “எனக்கு துணைவி இருப்பது ஊருக்கெல்லாம் தெரியும். என் மனைவிக்கு மட்டும் தெரியாது” என்று. அரங்கமே ரசித்துச் சிரித்தது. சொன்னவரும் சிரித்தார். ஆக, இதுவும், நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும், அது சமூகப் பார்வையில் பெரிய கேள்வியாக எழவில்லை. நடிகர் விஜயின் நிலையைப் பார்க்கும்போது, அவர் மேற்கண்டவர்களைப் போல சிக்கலான கேள்விகளை திறமையாகத் தவிர்க்கும் அரசியல் அனுபவம் இன்னும் பெறவில்லை என்ற உண்மையை நான் ஒத்துக்கொள்கிறேன். சினிமாவில் ஒரு காட்சி சரியாக வரும்வரை பல முறை ‘ரீடேக்’ எடுக்கலாம். ஆனால் அரசியல் மேடை அப்படியல்ல. ஒருமுறை தவறாகச் சொன்ன வார்த்தை, தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒலிக்கும். அது மீம்ஸாகவும், அரசியல் எதிரிகளின் ஆயுதமாகவும் மாறிவிடும்.அரசியல் தளம் விஜய்க்குப் புதுசு. எனவே, அவர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. எனது பார்வையில், அவர் தனது குடும்ப விஷயங்களைத் தனிப்பட்ட விசயமாகக் கருதி, “இது என் தனிப்பட்ட பிரச்சினை,அதை பெரிதுபடுத்த வேண்டாம். நான் பார்ததுக் கொள்கிறேன்” என்று எளிமையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறாகப் போய்விட்டது. இன்னும் ஒன்றை குறிப்பிட வேண்டும். நடிகர் சிவகுமார், “நான் சினிமா நடிகன் என்பதால் யாரும் எனக்குப் பெண் தர முன்வரவில்லை. எனக்கு திருமணம் நடக்குமா என்றே சந்தேகப்பட்டேன்” என்று கூறியிருக்கிறார். ஒழுக்க சீலனாக அறியப்பட்டவருக்கே அந்த நிலை என்றால், சினிமா நடிகனுக்குப் பெண் கொடுக்கும் போதே யோசிக்கவும் வேண்டும். விஜயின் குடும்ப நிலைமைகள் பற்றிய முழுமையான உண்மை எங்களுக்குத் தெரியாது, ஆகவே அவரைப் பற்றிய நல்லது கெட்டது என்ற தீர்ப்புகளை கூற முடியாது. மேலும், தேர்தல் நேரத்தையொட்டி இப்படிப்பட்ட விவகாரங்கள் பொதுவெளியில் கொண்டு வரப்படுவது, அரசியல் நோக்கத்துடனான பழிவாங்கலாக இருக்கக்கூடும் என்பதையும் மறக்கக் கூடாது. முடிவாக, நல்லவர்கள் என்று கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை என்றால், கோசான் சொன்னது போல், சொத்தைகளில் நல்லதை தெரிந்து எடுக்க வேண்டும்.- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 07.04.2026
-
கருத்துப்படம் 05.04.2026
-
கருத்துப்படம் 02.04.2026
-
கருத்துப்படம் 31.03.2026
-
கருத்துப்படம் 30.03.2026
-
கருத்துப்படம் 28.03.2026
-
கருத்துப்படம் 22.03.2026
-
கருத்துப்படம் 19.03.2026
-
கருத்துப்படம் 13.03.2026
-
கருத்துப்படம் 12.03.2026
-
கருத்துப்படம் 11.03.2026
-
கருத்துப்படம் 07.03.2026
-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
- கல்வி உரிமையை ஆளுநர்பறிக்கிறாரா: ? அர்ச்சுனா கேள்வி
சிலருக்கு அர்ச்சுனா அவர்கள் றோசா, மலராகத் தெரிகிறார். வேறு சிலருக்கு முள்ளாகத் தெரிகிறார். முள்ளில் குத்துவாங்கி வைத்தியசாலை செல்லாமல் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய அவர்கள் தப்பிவிட்டார்.🤣Paanch started following கல்வி உரிமையை ஆளுநர்பறிக்கிறாரா: ? அர்ச்சுனா கேள்வி- சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் - 'தி டைம்ஸ்'
இஸ்கா மேற்கின் பொய் பிரச்சாரம்.. குஸ்கா தனியே நல்லது இல்லை பிரியாணிக்கு லெக் பீஸ்… ல்து ஜ்யு அஸ்கு புஸ்கு புரியாதவன் ரத்தம் கக்கி சாவான்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பவளக்கொடியிலே ......... எம் . ஜி . ஆர் & கே .ஆர் விஜயா ......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! ஆண் : { காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் } (2) ஆண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க ஆண் : { நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை } (2) ஹான் ஆண் : அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆ……. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல வா ஆண் : { என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் } (2) பொன்னிலே பூவை அள்ளும் ஆஆஆ……… பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா ......! ...... காதலின் தீபம் ஒன்று .......- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- குட்டிக் கதைகள்.
Sathiya R ·tonerdoSps62ug271 cLm3a91f urfg6c09a3uu36àu:e49t771l1 lsf9 0 · *ஐயா காமராசரைப் பார்க்க சோ அவர்கள் ஒருமுறை சென்றபோது காமராசர் தயிர்சாதமும் கீரையும் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார், அப்போது காமராசர் சோவைப் பார்த்து ஏப்பா நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க வரும்போதெல்லாம், நான் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக் கிறேன், ஒருநாளாவது உன்னைச் சாப்பிடு என்று சொல்லியிருக்கேனா என்று கேட்டுள்ளார், அதற்கு சோ பரவாயில்லைங்க ஐயா நீங்க சாப்பிடுங்க என்று சொல்லி உள்ளார், ஆனால் காமராசர் விடவில்லை. இல்லை இல்லை சொல்லு, ஒருநாளாவது சொன்னேனா சொல்லு என்று அதட்டலாகக் கேட்க, இல்லைங்க சொல்லலை என்று கூறியுள்ளார், அதற்கு காமராசர் சொன்னாராம் ஏன் சொல்லலை தெரியுமா நான் சாப்பிடுற இந்தச்சோறே தமிழக மக்கள், எனக்குப்போடும் பிச்சைச்சோறப்பா இதில் நான் என்னத்த உனக்கு கொடுக்க என்றுதான் சொல்லாமலிருந்தேன் நீ தப்பா நினைச்சுக்காதே என்றாராம், இதைக்கேட்ட சோ தன்னையறியாமல் அழுதுவிட்டாராம், எப்படி தலைவர் என்று எண்ணிப், பாருங்கள், எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இப்படி ஒரு மாமனிதர் கிடைப்பாரா? இவரை போன்ற நல்லவர்களை தோற்கடித்த சாபத்தால் தான் இன்றைய தமிழகம் இப்படி அவதிப்படுகிறது, Voir la traduction.......!- இந்திய துணை ஜனாதிபதி இலங்கை விஜயம்!
இந்திய ஜனாதிபதியே… அதிகாரம் எதுவும் இல்லாத அலங்கார பதவி. இதற்குள் துணை ஜனாதிபதி வந்து… என்ன செய்யப் போகிறார்.- பரீட்சை முடிவுகளும் ஆசிரியர்களின் வோல்டேஜ்ஜும் - நிலாந்தன்
பரீட்சை முடிவுகளும் ஆசிரியர்களின் வோல்டேஜ்ஜும் - நிலாந்தன் பரீட்சை முடிவுகள் வெளிவந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், சில வாரங்களுக்கு முன்னதாக ஈழத்தமிழ் சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே விவாதிக்கப்பட்ட ஒரு காணொளியை இங்கு குறிப்பிடவேண்டும். இக்காணொளி வெளிவந்து இரண்டு ஆண்டுகள். காணொளியில் பேசியிருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர். ஜெயந்தஸ்ரீ. அவர் சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இங்கு அவர் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கமூட்டும் உரைகளை ஆற்றியிருக்கிறார். தன்னுடைய யாழ் விஜயத்தின் விளைவாக அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில், தமிழ்நாடு, கோவையில் ஓரிடத்தில் உரையாற்றும்போது அவர் “யாழ்ப்பாணத்து ஆசிரியர்களுக்கு வோல்டேஜ் குறைவு” என்று கூறியிருக்கிறார். அதைக் குறித்து யாழ்ப்பாணம்,கோப்பாய் ஆசிரியர் கலாசாலையைச் சேர்ந்த ஒரு விரிவுரையாளர் அவரிடம் கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விக்கு ஜெயந்தஸ்ரீ கூறும் பதில் அக்காணொளியில் உண்டு. தனது உரையில் ஜெயந்தஸ்ரீ வோல்டேஜ் என்று தான் கருதுவது “அறிவு ரீதியான வோல்டேஜ் மற்றும் மொழி அறிவு ஆகிய இரண்டையும்” என்று கூறுகிறார். அதாவது தொடர்ச்சியாக வாசிப்பதன்மூலம் பரந்துபட்ட தளத்தில் தமது அறிவையும் மொழி அறிவையும் ஆசிரியர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். மேலும் “உங்கள் பிள்ளைகளை படித்த ஆசிரியர்களிடம் அனுப்பாமல்,படித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் அனுப்புங்கள்” என்றும் கூறுகிறார். அதாவது தன்னைத்தானே அப்டேட் செய்து கொள்ளும் ஆசிரியரிடம் அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார். உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்திருக்கும் இக்காலகட்டத்தில் தமிழ்ப் பகுதிகளில் பிள்ளைகள் பெற்ற வெற்றிகளைத் தொகுத்துப் பார்க்கும்போது ஆசிரியர்களின் வோல்டேஜ் கவலைப்படும் அளவுக்குக் குறையவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது அது பொருத்தமான வோல்டேஜ்ஜா என்று கேட்கலாமா ? நாட்டில் நடப்பில் இருப்பது ஒரு பரீட்சைமையக் கல்விமுறை. தேசிய அளவிலான போட்டிப் பரீட்சைகளை நோக்கி பிள்ளைகளைத் தயார்படுத்த வேண்டும். அதைப் பிள்ளைகள் மற்றும் பெற்றோரின் பிரயோக உளவியல் அர்த்தத்தில் சொன்னால், பந்தயக் குதிரைகளை பந்தயத்திற்குப் பழக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு பந்தயக் குதிரைகளை பழக்குவதற்கு தேவையான வோல்டேஜ்ஜும் பேராசிரியர் கூறும் வோல்டேஜ்ஜும் ஒன்றுதானா? இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞருடைய நேர்காணலை பல ஆண்டுகளுக்கு முன்னுக்கு வாசித்த ஞாபகம். அவருடைய பெயர் மறந்து விட்டது. அவர் ஒரு கவிஞரும் ஆசிரியரும் ஆவார். அவரை நேர்கண்டவர் கேட்கிறார், “நீங்கள் ஆசிரியராக இருக்க விரும்புகிறீர்களா அல்லது கவிஞராக இருக்க விரும்புகிறீர்களா?” என்று. அதற்கு அவர் பின்வரும் பொருள்பட பதில் கூறுகிறார்.”ஆசிரியராக இருப்பது என்பது தனக்குத் தெரிந்ததை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துவதற்காக, ஏனைய பல விடயங்களும் தனக்குத் தெரியும் என்பதுபோல ஒரு தோற்றத்தைக் காட்டுவது. ஆனால் கவிஞராக இருப்பது என்பது இயல்பானது. எனக்கு எது தெரியும் தெரியாது என்ற அவஸ்தை இன்றி இயல்பாக இருப்பது. எனக்கு தோன்றுவதைக் கூறுவது, எழுதுவது. எனவே நான் இயல்பாக இருப்பது என்ற அடிப்படையில் ஒரு கவிஞராக இருப்பதைத்தான் அதிகமாக விரும்புகிறேன்”என்று. ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி கூறுவார் “தெரியாததை தெரியாது என்று சொன்னால்தான் தெரிந்ததைச் சொல்லும்போது நம்புவார்கள்”என்று. பிள்ளைகளை ஆகர்சிக்கவும் அவர்களுடைய அகத்தைத் தூண்டவும் உயர்ந்த இலட்சியங்களை நோக்கி ஊக்கப்படுத்தவும் ஆசிரியர் பரந்தபட்ட அறிவைக் கொண்டிருக்க வேண்டும். ஜெயந்தஸ்ரீ கூறுவதுபோல சார்ஜ் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், இலங்கை போன்ற நாடுகளில் பரீட்சை மைய,போட்டிக் கல்விச் சூழலுக்குள் ஆசிரியர்கள் பரிட்சையை நோக்கித்தான் பிள்ளைகளை தயார்படுத்துவார்கள். பந்தயக் குதிரைகளை தயார்படுத்துவது போல. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இருந்து இந்தப் பந்தயம் தொடங்குகிறது. எனவே பந்தயக் குதிரைகளைத் தயார்படுத்தும் ஓர் ஆசிரியர் அந்தக்குதிரையை பரீட்சையை நோக்கித்தான் பயிறுவிக்கலாம். அதற்கு வெளியே போனால், சிறுவர் வகுப்புகளில்,பெற்றோர் அதை அனுமதிப்பார்களா? அல்லது வளர்ந்த பிள்ளைகளின் வகுப்புக்களில் பிள்ளைகள் அது பாடத் திட்டதுக்கு வெளியே போகிறது என்று கருதினால்? தனது கற்றல் வேளை வீணாக்கப்படுகிறது என்று முறைப்பாடு செய்தால்? அதுமட்டுமல்ல பந்தயக் குதிரைகளை அதிகம் பயிற்றுவிப்பது தனியார் கல்வி நிறுவனங்கள்தான். தேசியப் பரீர்ட்சைகளில் போட்டியிடும் பந்தயக் குதிரைகள் பெருமளவுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில்தான் தங்கியிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் குறைந்த அளவுக்கே பாடசாலைகளில் தங்கியிருக்கிறார்கள். சில பாடசாலைகளில் மிக அரிதான புறநடைகள் உண்டு. அங்கெல்லாம் சில ஆசிரியர்கள் பந்தயக் குதிரைகளை முழுமையாகப் பொறுப்பெடுத்து பரீட்சைகளுக்குத் தயார்படுத்துகிறார்கள். தங்களிடம் படிக்கும் பிள்ளைகளை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அவர்கள் அனுமதிப்பதில்லை. அதை ஒரு தவம்போல அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் ஆனால் அது ஒரு பொதுவான தோற்றப்பாடு அல்ல. இந்த ஆசிரியர்களும்கூட எந்தவகை வோல்டேஜ்ஜை கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி இங்கு முக்கியம். ஏனென்றால் நாட்டின் கல்வி முறைமை எதுவோ அதற்கு வேண்டிய வோல்டேஜ்ஜைத்தான் கல்விக் கட்டமைப்பு ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கும். அதுபோலவே மாணவர்களும் பெற்றோர்களும் அதாவது பந்தயக் குதிரைகளும் அவற்றின் பெற்றோரும் அந்த வால்டேஜ்ஜைக் கொண்டிருக்கும் ஆசிரியரைத்தான் தேடிப்போவார்கள். இங்கே எது பொருத்தமான வால்ட்டேஜ் என்பதனை கல்வியின் பிரயோக நோக்கந்தான் தீர்மானிக்கிறது. அதைமீறி ஆசிரியர்களால் அதைத் தீர்மானிக்க முடியுமா? பரீட்சை மைய,போட்டிக் கல்வியில் கரணம் தப்பினால் மரணம் என்று வாழ்க்கை வெறுத்துப் படிக்கும் பிள்ளைகள் பந்தயத்தில் எப்படி ஜெயிப்பது என்றுதான் சிந்திப்பார்களே தவிர ஒரு முழுமனிதப் பிறவியாக தமது ஆளுமையை முழுமையாகக் கட்டியெழுப்பும் விடயங்களைக் குறித்து சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் உண்டா? அவ்வாறு சிந்திப்பதற்கு கல்விமுறையும் பெற்றோரும் அவர்களை விடுவார்களா? இதில் விதிவிலக்கான பெற்றோரும் பிள்ளைகளும் உண்டு. அசாதாரணமான பிள்ளைகளும் உண்டு. அவர்கள் ஒரே சமயத்தில் பந்தயத்திலும் ஜெயிக்கிறார்கள்; வாழ்க்கைக்குத் தேவையான ஏனைய அறிவையும் திரட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இது ஒரு பொதுப்போக்கு அல்ல. இப்படிப்பட்டதோர் கல்விச் சூழலுக்குள் பந்தயக் குதிரைகளைப் பயிற்றுவிப்பதற்கும் குதிரைகளின் முழுமையான ஆளுமையைச் செதுக்குவதற்குமிடையில் எதோ ஒரு சமநிலையைக் கண்டுபிடிக்க வேண்டும். பாடசாலைகள்தான் முழு மனித ஆளுமையைச் செதுக்கத் தேவையான வாய்ப்புகளையும் வளங்களையும் கொண்டிருக்கின்றன. தனியார் கல்வி நிறுவனங்கள் அல்ல. தனியார் கல்வி நிறுவனங்கள் பெருமளவுக்கு வணிக நோக்கங்களைக் கொண்டவை. அங்கே குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்தயக் குதிரைகளைப் பழக்கி எடுக்க வேண்டும். அங்கே நோக்கம் பந்தயம்தான். ஆனால் பாடசாலையின் நோக்கம் அதுவல்ல. ஆனால் துயரம் என்னவென்றால் போட்டிக் கல்வி முறைமையானது பாடசாலைகளின் மதிப்பை பெருமளவுக்கு குறைத்துவிட்டது. அதாவது ஆசிரியர்கள் பந்தயக் குதிரைகளைப் பழக்கும் பயிற்றுவிப்பாளர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். கல்விமுறையின் தேவை அப்படித்தான் உள்ளது. மாறாக பரந்த தளத்தில் தனது அறிவைக் கட்டியெழுப்பி, தன்னை எப்பொழுதும் அப்டேட் செய்துகொண்டு தனது வோல்டேஜ்ஜை உயர்வாக வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு இந்தக் கல்விமுறையில் எவ்வளவு தேவை உண்டு? தமது பிள்ளைகள் தம்மைப் போலவே ஆசிரியர்களாக வர வேண்டும் என்று ஏன் பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவதில்லை? போட்டிக் கல்வி முறைமைக்குள் ஆசிரியருக்குள்ள மதிப்பு குறைந்து போய்விட்டது காரணமா? அல்லது சில தனியார் கல்வி நிறுவனங்களில் வெற்றிபெற்ற, கோடீஸ்வரர்களாக உள்ள ஆசிரியர்களைவிட ஏனைய பெரும்பாலான ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் போதாது என்பதனாலா? தன் பிள்ளை தன்னைப்போல ஆசிரியராக வரவேண்டும் என்று கனவு காணும் ஆசிரியர்களை அதிகமாகக் கொண்டிராத ஒரு கல்வி முறைமைக்குள் எது சரியான வால்ட்டேஜ்? இப்படிப்பட்டதோர் கல்விச் சூழலில் கடந்த வாரம் வெளிவந்த பரீட்சை முடிவுகளில் சில அரிதான புறநடைகளைத்தவிர பெரும்பாலான வெற்றிகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களும் காரணம். இதில் ஆசிரியரின் வோல்டேஜ் என்பது எது என்பதை போட்டிக் கல்விச்சூழல்தான் தீர்மானிக்கின்றது. பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால்,நமது ஆசிரியர்களின் வோல்ட்டேஜ் கவலைப்படுமளவுக்குக் குறையவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ளப்படும். போட்டிப் பரீட்சைதான் பிரதான இலக்கு என்றால் நமது ஆசிரியர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கல்வி முறைமையில் மாற்றத்தைச் செய்துவிட்டு புதிய அளவு கோல்களுடன் வரலாம். நாட்டை இப்பொழுது ஆட்சி செய்வது மாற்றத்தை வாக்களித்து வந்த ஓர் அரசாங்கம். அதில் பிரதமராகவும் கல்வி மந்திரியாகவும் இருப்பவர், அரசாங்கத்தின் லிபரல் முகமாகக் கருதப்படும் ஹரிணி அமரசூரிய. ஆனால் அவரால் இன்றுவரை பாடசாலைகளில் ஆசிரியைகளின் ஆடை விவகாரத்தில் காணப்படும் பால் அசமத்துவத்தை நீக்க முடியவில்லை. பிள்ளைகளின் உளவியலை பாரதூரமான விதங்களில் பாதிப்பது என்று கல்வி உளவியலாளர்களால் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையான தேசிய சித்திரவதையை நிறுத்த முடியவில்லை. இதுதான் அரசியல் சூழல் என்றால் ஆசிரியருக்கு எது பொருத்தமான வோல்டேஜ் என்பதனை போட்டிப் பரீட்சைக் கல்வி முறைமைதான் இனியும் தீர்மானிக்கும். https://www.nillanthan.com/8245/- யார் குற்றினால் அரிசியாகும்? யார் குற்றினால் மண்ணாகும்? - நிலாந்தன்
யார் குற்றினால் அரிசியாகும்? யார் குற்றினால் மண்ணாகும்? - நிலாந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், ஊடக அமையத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது கிட்டத்தட்ட 20பேர் கலந்துகொண்ட அந்தச் சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. சந்திப்பை ஒழுங்குபடுத்தியது யாழ். ஊடக அமையம். இச்சந்திப்பில் அரசியல் மற்றும் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டார்கள். கடந்த சுமார் ஒரு மாத காலப் பகுதிக்குள் இனப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட மூன்றாவது நகர்வு இதுவாகும். ஏற்கனவே கொழும்பு தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைப்பு அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அதன்பின் தமிழ் ஆயர்களின் அமைப்பு அப்படி ஒரு முயற்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறது. அதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளிவந்தது. இப்பொழுது யாழ் ஊடக அமையம் அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறது. சட்டத்தரணிகள் சங்கத்தின் முயற்சிக்குப் பின்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஈடுபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்க இடம் உண்டு. சட்டத்தரணிகள் சங்கத்தில் பிரதான பொறுப்புகளில் இருப்பவர்கள் அல்லது தீவிரமாக செயல்படுகிறவர்கள் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே முன்னணிக்கு நெருக்கமாகக் காணப்படுகின்ற சிவில் சமூகங்களுக்கு நெருக்கமாகக் காணப்பட்டவர்கள். எனினும் இந்த முயற்சிக்கு, தான் முழுமையாக ஆதரவு தரப்போவதாக சுமந்திரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடகச் சந்திப்பில் தெரிவித்திருந்தார். கடந்த வார இறுதியில் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வழமையான மாதாந்தச் சந்திப்பு அது என்று கூறப்பட்டது. சந்திப்பின் முடிவில் நடந்த ஊடகச் சந்திப்பிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அதாவது சட்டத்தரணிகள் அமைப்பின் செயற்பாட்டுக்கு தாங்கள் முழுமையான ஒத்துழைப்பைத் தரப்போவதாகவும், இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் ஒரு பொது நிலைப்பாட்டை அடைவதற்காக தமிழரசுக் கட்சி உழைக்கும் என்பதையும் அவருடைய பதிலிலிருந்து விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. மேலும் சட்டத்தரணிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தரும் தகவல்களின்படி சுமந்திரன் இந்த விடயத்தில் ஆர்வமாக இருப்பதாகவும் அவர்களுக்கு எந்த விதமான தடையுமின்றி ஒத்துழைப்பதாகவும் தெரிகிறது. அதேசமயம், சட்டத்தரணிகளின் முயற்சிக்கு ஆதரவாக முன்னணியில் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையும் ஒரு பொது ஆவணத்தைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே சில கிழமைகளுக்கு முன் நடந்த இளங் கலைஞர் மன்றச் சந்திப்பின்போது குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழுவுக்குள் அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், அரசியல் விமர்சகர்கள், அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். அந்தக் கட்டமைப்பு விரைவில் ஒரு பொது ஆவணத்தைத் தயாரிப்பதற்கான வேலைகளில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான் ஆயர்களும் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் இறங்குவதற்கு ஆர்வமாகக் காணப்படுகிறார்கள். இப்பொழுது யாழ் ஊடக அமையம் அந்த வேலைகளில் இறங்கியிருக்கிறது. இந்த நகர்வுகள் தன்னியியல்பாக முன்னெடுக்கப்படுகின்றவையா? அல்லது இவற்றின் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்று தமிழ்ப் பொது மனம் சந்தேகிக்கும். அந்தச் சந்தேகம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சிகளின் பின்னணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருக்கலாம் என்று பொதுவாக ஊகிக்கப்படுகின்றது. அதனால் ஆயர்களின் சங்கம் மற்றும் யாழ்.ஊடக அமையும் என்பவற்றின் பின்னணியில் யாராவது உண்டா என்ற சந்தேகம் இயல்பாகவே தோன்றும். கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த சந்திப்பின் பின் யாழ். ஊடக அமையம் வெளியிட்ட அறிக்கையின் மொழிநடை அந்தச் சந்தேகத்தை அதிகப்படுத்துவது. யாரும் பின்னணியில் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் தமிழ் அரசியல் சக்தியை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது அவசியம். அதுவும் அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்க முயற்சித்தால்-கவனிக்கவும் முயற்சித்தால்- தமிழ்மக்கள் அதை எதிர்கொள்ளத் தேவையான தயாரிப்புகளோடு காணப்பட வேண்டும். இந்த அடிப்படையில் தற்போது லண்டனில் இருந்து செய்யப்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச்செயற்பாட்டாளர் ஒருவரின் ஊக்குவிப்போடு முன்னெடுக்கப்படுகின்ற திருமலைப் பிரகடனமும் அதன் பின்னரான கருத்தரங்குகளும் அவசியமானவை. மேற்படி புலம்பெயர்ந்த தமிழ்ச் செயல்பாட்டாளர் அப்படி ஒரு பொது ஆவணத்தைத் தயாரிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த ஆவணம் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணும் நோக்கத்தை பிரதானமாக கொண்டிருக்க வேண்டும். அதாவது புதிய யாப்பை நோக்கி அந்தமுயற்சி முன்னெடுக்கப்பட்டால் நல்லது. மாறாக, முன்னணிக்கு ஆப்பு வைப்பது என்று சிந்தித்துச் செயற்படாமல் இருந்தால் சரி. திருமலைப் பிரகடனம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் பின்னணியில், சட்டத்தரணிகள் அமைப்பு ஒருங்கிணைப்பு முயற்சிகளைக் கையில் எடுத்தது. சட்டத்தரணிகள் அமைப்பு கட்சித் தலைவர்களை அழைத்து முதலாவது சந்திப்பை நடத்தியிருந்த பின்னணிக்குள், தமிழ் ஆயர்கள் சங்கம் அந்த முயற்சியில் இறங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. ஆயர்கள் சங்கத்தின் அறிவிப்பு ஊடகங்களில் வெளிவந்திருந்த ஒரு பின்னணிக்குள், கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.ஊடக அமையும் இந்த விடயத்தைக் கையில் எடுத்திருக்கிறது. ஒரு புதிய யாப்பை நோக்கி மட்டுமல்ல, வரக்கூடிய மாகாண சபைத் தேர்தலை நோக்கியும் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைப்பது நல்லது. பல்வேறு தரப்புக்களும் தங்கள் சக்தியைப் பிரயோகித்து கட்சிகளை ஒரு மேசைக்குக் கொண்டுவர முடிந்தால் அது மிகவும் நல்லது. ஆனால் இந்த முயற்சிகள் தங்களுக்கு இடையே பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும். இந்த விடயத்தில் யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்று கூறிக்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால்,இப்பொழுது நான்கு உரல்களில் நான்கு விதமாக அரிசி குத்தப்படுகிறது. இதில் ஒரு உரல்,தான் குத்துவதுதான் அரிசியாக வரும் அடுத்தவர் குத்துவது மண்ணாக வரும் என்று கூறாமல் இருக்க வேண்டும். அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருமா என்பது சந்தேகந்தான். சில சமயம் அரசாங்கம் அந்த முயற்சியைத் தொடங்கலாம். ஆனால் அதை இழுத்திழுத்துக் கொண்டுபோய் ஒன்றில் தனது ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் அதை முடுக்கிவிடலாம். அல்லது அடுத்த முறையும் ஆட்சி செய்ய வேண்டும் என்று கருதினால் அதை மேலும் ஒத்தி வைக்கலாம். டித்வா புயல்,மேற்காசியப் போர் போன்றவற்றின் பின்னணியில், பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தடங்கல்களுக்கு உள்ளாகியுள்ளன. போரை ஒரு காரணமாக முன்வைத்து அரசாங்கம் யாப்புருவாக்க முயற்சிகளை ஒத்திப்போடும் வாய்ப்புகள் உண்டு. யாப்புருவாக்க முயற்சி என்பது ஒரு வாழ்வா சாவா பிரச்சினை. அதில் இப்பொழுது கையை வைத்து தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தை இழப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்குமா ? ஆனால் மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் விரைந்து நடத்தக்கூடும். ஏனென்றால் இந்தியாவை சந்தோஷப்படுத்த வேண்டும். இப்பொழுது மேற்காசியப் போரின் பின்னணியிலும் இந்தியா அரசாங்கத்துக்கு அதிகம் உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே இந்தியாவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டி வரலாம். அப்படி நடந்தால், அத்தேர்தலை தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ளத் தவறினால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த விளைவுகள்தான் கிடைக்கக்கூடும். அதாவது தமிழ்க் கட்சிகள் ஆளுக்காள் வாக்குகளைப் பங்கிடடால், தமிழ் வாக்குப் பலம் சிதறடிக்கப்படலாம். மாகாண நிர்வாகத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பது சவால்கள் மிகுந்ததாக மாறலாம். மாகாண சபைத் தேர்தலில் அவ்வாறு வாக்குச் சிதறும் வாய்ப்புகள் அதிகரித்தால், அது அரசாங்கத்துக்கு அனுகூலமாக அமையும். நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்ததுபோல ஒரு ஆணை அங்கு கிடைக்குமாக இருந்தால் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்மக்கள் தனக்கும் ஆணை வழங்கியிருப்பதாகக் கூறும். எனவே மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான ஒருமைப்பாடும் அவசியம். அந்த ஒருமைப்பாட்டை அடுத்த கட்டமாக யாப்புருவாக்க முயற்சியை நோக்கியும் திருப்பலாம். எதைச் செய்தாலும் எல்லாருமாகச் சேர்ந்து ஒரே பெரிய உரலுக்குள் அரிசியைப் போட்டு இடிப்பதுதான் தமிழ் மக்களுக்கு நல்லது; கட்சிகளுக்கும் நல்லது. https://www.nillanthan.com/8246/- இந்திய துணை ஜனாதிபதி இலங்கை விஜயம்!
இந்திய துணை ஜனாதிபதி இலங்கை விஜயம்! செவ்வாய், 07 ஏப்ரல் 2026 03:21 AM ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பூர்வாங்கத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய துணை ஜனாதிபதி , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார். மேலும், தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள இந்திய உதவித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆலோசகர் மைத்ரே குல்கர்னி (Maitrey Kulkarni), அரசியல் ஆலோசகர் மற்றும் சான்சரி பிரிவுத் தலைவர் கலாநிதி ராம்பாபு சி. ( Rambabu C.) மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். https://jaffnazone.com/news/56092- சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் - 'தி டைம்ஸ்'
சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் - 'தி டைம்ஸ்' April 7, 2026 11:55 am அமெரிக்க – இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தற்போது சுயநினைவற்ற நிலையில் புனித நகரமான கோமில் (Qom) மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தூதரகக் குறிப்பொன்றை மேற்கோள் காட்டி, 56 மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், கடுமையான மருத்துவ நிலைக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவரது இருப்பிடம் வெளிப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். மத்திய நகரமான கோம், தெஹ்ரானுக்கு தெற்கே 87 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஷியா இஸ்லாத்தில் புனிதமானதாகக் கருதப்படுவதுடன் இஸ்லாமியக் குடியரசின் மதத் தலைநகராகவும் அறியப்படுகிறது. இந்நிலையில் “மொஜ்தபா கமெனி தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார், ஆட்சியில் எந்தவொரு முடிவெடுக்கும் செயலிலும் அவரால் ஈடுபட முடியாது,” என அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. இந்த ஆவணம், வளைகுடா நட்பு நாடுகளுடன் பகிரப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத் தகவல்களின் அடிப்படையில் அமைந்ததாக நம்பப்படுகிறது. உச்ச தலைவரின் இருப்பிடம் குறித்த தகவல் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு நிறுவனங்களுக்கு அண்மைய நாட்களில் மாத்திரமே தெரிந்திருந்ததாகவும், ஆனால் அது இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மொஜ்தபா காமேனி எந்தவொரு பொதுவெளியிலும் தோன்றவில்லை என்பதுடன் அவர் கூறியதாகக் கூறப்படும் செய்திகளை மட்டுமே ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதனிடையே, மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா கமேனியின் உடலை கோமில் அடக்கம் செய்யத் தயாராகி வருவதாக ‘த டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. https://oruvan.com/iran-supreme-leader-unconscious-not-involved-in-decision-making-report/- ரஷ்யப் பொருளாதாரம் இறுதியாகத் தேக்கமடைந்துள்ளது. இது போருக்கும் புதினுக்கும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
- சவூதி – பஹ்ரைன் இணைக்கும் முக்கிய பாலம் திடீரென மூடப்பட்டது : ஈரானியத் தாக்குதல் அச்சுறுத்தலால் போக்குவரத்து முடக்கம்
சவூதி – பஹ்ரைன் இணைக்கும் முக்கிய பாலம் திடீரென மூடப்பட்டது : ஈரானியத் தாக்குதல் அச்சுறுத்தலால் போக்குவரத்து முடக்கம் Published By: Digital Desk 3 07 Apr, 2026 | 11:38 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) சவூதி அரேபியாவையும் பஹ்ரைன் தீவு நாட்டையும் இணைக்கும் மிக முக்கியமான கிங் ஃபஹ்ஹத் பாலம் ஈரானியத் தாக்குதல் அச்சுறுத்தலினால் இன்று (ஏப் 07) அதிகாலை முதல் மூடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக" வாகனப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிங் ஃபஹ்ஹத் பால அதிகாரசபை அறிவித்துள்ளது. 25 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலமே, அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு அமைந்துள்ள பஹ்ரைனை ஏனைய அரபு நாடுகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப் பாதையாகும். இந்தப் பாலத்திற்கு எதிராக நேரடி மிரட்டல்கள் விடுக்கப்படாத போதிலும், ஈரானின் சில தீவிரவாதக் குழுக்கள் இதனை ஒரு சாத்தியமான இலக்காக அடையாளம் கண்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானில் உள்ள பாலங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாக விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் இந்தப் பாலத்தைத் தாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. https://www.virakesari.lk/article/242945- காலக்கெடு இன்றுடன் நிறைவு ; உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஒரே இரவில் ஈரானை அழித்துவிடுவேன் - ட்ரம்ப் மிரட்டல்
காலக்கெடு இன்றுடன் நிறைவு ; உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஒரே இரவில் ஈரானை அழித்துவிடுவேன் - ட்ரம்ப் மிரட்டல் 07 Apr, 2026 | 11:54 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) “ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவுக்குள் உடன்படிக்கைக்கு வராவிட்டால், ஈரான் நாட்டை ஒரே இரவில் அழித்துவிடுவேன்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று திங்கட்கிழமை (6) வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ட்ரம்ப் இதனை தெரிவித்தார். “ஒரே இரவில் ஒட்டுமொத்த ஈரானையும் என்னால் அழித்துவிட முடியும். அந்த இரவு நாளைய இரவாகவும் (இன்று செவ்வாய்க்கிழமை) இருக்கலாம்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானின் தெற்குப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட F15 போர் விமானத்தின் இரண்டு வீரர்களை அமெரிக்க படைகள் மீட்ட சில நாட்களில் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உள்ளிட்டோருடன் இணைந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து ட்ரம்ப், தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். மேலும், ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் சமூக ஊடக தளத்தில், “நாளையுடன் (இன்று செவ்வாய்க்கிழமையுடன்) ஈரானுக்கான காலக்கெடு முடிகிறது” என்றும் “ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானிடம் மின் நிலையங்களே இருக்காது” என்றும் மிரட்டலாக பதிவிட்டுள்ளார். போரை நிறுத்துமாறும் அமெரிக்க நட்பு நாடுகளுக்காக மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணையை திறந்துவிடுமாறும் ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் காலக்கெடு விதித்திருந்தார். ஆனால், அவரின் எச்சரிக்கை மற்றும் காலக்கெடுவை ஈரான் நிராகரித்தது. எகிப்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் தலைவர் முஜ்தபா ஃபிர்தௌசி பூர், “நாங்கள் வெறுமனே ஒரு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம். மீண்டும் நாங்கள் தாக்கப்படமாட்டோம் என்ற உத்தரவாதங்களுடன் மட்டுமே போர் முடிவுக்கு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப மிகக் கடுமையாக ஈரானை உடன்படிக்கைக்கு வருமாறு எச்சரித்திருக்கிறார் https://www.virakesari.lk/article/242948 - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.