All Activity
- Past hour
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவுத் தலைவர் மஜித் காதெமி உயிரிழப்பு Published By: Digital Desk 3 06 Apr, 2026 | 02:15 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி இன்று (ஏப் 6) காலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்த முக்கிய விபரங்கள் பின்வருமாறு: இன்றைய தினம் அதிகாலை வேளையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை "அமெரிக்க-சியோனிச எதிரிகளின்" பயங்கரவாதத் தாக்குதல் என ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை வர்ணித்துள்ளது. மேஜர் ஜெனரல் மஜித் காதெமி, ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை அமைப்பு மற்றும் அதன் உளவு பாதுகாப்பு அமைப்பு ஆகிய இரண்டிற்கும் தலைமை வகித்து வந்தார். ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், காதெமி "தியாக மரணமடைந்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை உடனடித் தகவல்களோ அல்லது உறுதிப்படுத்தலோ வெளியாகவில்லை. 2025 ஜூன் மாதம் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட முகமது காசேமிக்கு பதிலாக மஜித் காதெமி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242875
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் தலைநகரில் குடியிருப்புக் கட்டடத்தின் மீது வான்வழித் தாக்குதல் - 13 பேர் உயிரிழப்பு 06 Apr, 2026 | 12:02 PM ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள குடியிருப்புக் கட்டடமொன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தெஹ்ரானின் தென்மேற்கு பகுதியில் கட்டடத்தில் இன்று திங்கட்கிழமை (6) அதிகாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் தலைநகரில் உள்ள ஷெரீஃப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள் மற்றும் அதன் வளாகத்துக்கு அருகில் உள்ள இயற்கை எரிவாயு விநியோகத் தளம் ஆகியவற்றின் மீதும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகமான ஃபார்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை இஸ்ரேலோ அமெரிக்காவோ பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது போர் இடம்பெற்று வருவதால் மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் எதை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரணைகள் தொடர்கின்றன. மேலும், தெஹ்ரானுக்கு தெற்கில் உள்ள கோம் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் நாளிதழொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242860
-
உயர்தரத்தில் '3 A' சித்திகளை பெற்ற மாணவன் உயிரிழப்பு !
மிகவும் கவலையான நிகழ்வு.ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏
-
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்
ஆர்டெமிஸ்-2: விண்கலத்தின் கழிப்பறையில் அடைப்பு - விண்வெளி வீரர்கள் என்ன செய்கிறார்கள்? 6 ஏப்ரல் 2026, 07:00 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் நாசா மனிதர்களை விண்வெளியின் முன்னெப்போதையும் விட ஆழமான பகுதிகளுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது; ஆனால், இதில் ஒரு தொழில்நுட்பக் கருவியில் மட்டும் இன்னும் சில குறைபாடுகள் நீடிக்கின்றன — அதுதான் ஓரியன் விண்கலத்தின் கழிப்பறை. புதன்கிழமை பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்டதிலிருந்து, ஆர்டெமிஸ் II திட்டத்தின் ஓரியன் விண்கலத்திலுள்ள நான்கு விண்வெளி வீரர்களும், தங்கள் கழிப்பறையில் விட்டுவிட்டு ஏற்படும் சில சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். சனிக்கிழமை ஒரு கட்டத்தில், கழிப்பறையின் காற்றோட்டக் குழாய் உறைந்துபோனதன் காரணமாக, அதனால் கழிவுகளை வெளியேற்ற இயலவில்லை என்று நாசா தெரிவித்தது. அதற்கு மாற்றாக, விண்வெளி வீரர்கள் ஒரு மாற்று அமைப்பைப் பயன்படுத்தினர்; இது, அவர்களின் சிறுநீரைச் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, மடித்து வைக்கக்கூடிய பிளாஸ்டிக் கொள்கலன்களை உள்ளடக்கியதாகும். கழிப்பறை தொடர்பான சில சிக்கல்கள் இருந்தபோதிலும், நிலவைச் சுற்றி மேற்கொள்ளப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க 10 நாள் பயணத்தின் ஐந்தாவது நாளை, 'ஆர்டெமிஸ் II' விண்கலம் வெற்றிகரமாக எட்டியுள்ளது. அதில் உள்ள நாசாவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி முகமையைச் சேர்ந்த ஜெர்மி ஹான்சன் ஆகியோர் சிறியளவிலான கேம்பர் வேனின் அளவே கொண்ட, வெறும் 5 மீட்டர் (15 அடி) அகலமும் 3 மீட்டர் (9 அடி) உயரமும் உடைய ஒரு சிறிய அறையில் உள்ளனர். வியாழக்கிழமை காணொளி இணைப்பு மூலம் உரையாடிய போது, விண்வெளிப் பயணச் சிறப்பு நிபுணர் கோச், கழிப்பறையில் ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். "என்னை ஒரு 'விண்வெளி பிளம்பர்' என்று அழைத்துக்கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்; விண்கலத்தின் உள்ளே இருக்கும் கருவிகளிலேயே இதுதான் அநேகமாக மிக முக்கியமான கருவி என்று சொல்ல விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். பின்னர், கழிவுநீர் வெளியேற்றக் குழாய் ஒன்று அடைத்துக் கொண்டதாக, நாசா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்தது. அடைப்பை நீக்க உதவும் வகையில், விண்கலத்தின் துவாரத்தைச் சூரியனை நோக்கித் திருப்புமாறு விண்கலக் குழுவினர் விண்கலத்தைச் சரிசெய்ய வேண்டியிருந்தது. இந்த நடவடிக்கை, அவர்களின் பயணப் பாதையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அந்த முகமை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,NASA அவர்களால் கழிவு மேலாண்மை அமைப்பின் தொட்டியில் இடத்தை காலி செய்ய முடிந்தது; ஆனால், அது பிரச்னையை முழுமையாகத் தீர்க்கவில்லை என்று நாசா (NASA) தெரிவித்துள்ளது. "குழாயை அடைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியமுள்ள பனியை உருக்குவதற்கு, பொறியாளர்கள் துவார வெப்பமூட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்," என்று நாசா தெரிவித்தது; அத்துவாரத்தை சூரியனை நோக்கித் திருப்பும் பணியைத் தாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது. "கழிவுநீர் தொட்டி நிரம்பவில்லை, கழிப்பறையும் செயல்பாட்டில் உள்ளது; இருப்பினும், தேவைப்பட்டால் இரவில் மாற்றுச் சேகரிப்புக் கருவிகளைப் பயன்படுத்துமாறு குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று நாசா தெரிவித்தது. ஆர்டெமிஸ் II திட்ட மேலாண்மைக் குழுவின் தலைவரான ஜான் ஹனிகட், சனிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, விண்வெளி கழிப்பறை மீதான பொதுமக்களின் ஆர்வத்தைச் சுருக்கமாக விவரித்தார். "கழிப்பறை குறித்த இந்த அதீத கவனம் ஒருவகையில் மனித இயல்பே என்று நான் கருதுகிறேன்," என்று அவர் கூறினார். "பூமியில் வாழும் நமக்கு அது எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விண்வெளியில் அதைக் கையாள்வது மிகவும் கடினமான ஒன்றாகும்." படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... சிஎன்என்-இன் ஸ்டேட் ஆஃப் தி யூனியன் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில் நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் கழிவுப் பிரச்னையைக் குறிப்பிட்டு, "தற்போது எங்களால் விண்வெளியில் பல அசாதாரணமான விஷயங்களைச் செய்ய முடியும், ஆனால் இந்தத் திறனை முழுமையாக்குவதில் நாங்கள் நிச்சயமாகப் பணியாற்ற வேண்டும்" என்று கூறினார். ஆர்டெமிஸ் II (Artemis II) தற்போது ஒரு வளைவுப் பாதையில் (loop) பயணித்து வருகிறது; இப்பாதை, அதில் பயணிக்கும் குழுவினரை நிலவின் மறுபக்கத்தைச் சுற்றி அழைத்துச் சென்று மீண்டும் திரும்பக் கொண்டுவரும். 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மனிதர்கள் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். நான்கு பேர் கொண்ட இந்தக் குழு நிலவில் தரையிறங்காமல், அதனைச் சுற்றி வரும்; இதன் மூலம், 1960 மற்றும் 70-களுக்குப் பிறகு முதன்முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்குவதற்கான களத்தை அமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது, ஓரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விண்வெளி வீரர்கள் சோதிப்பார்கள். இதன் ஒரு பகுதியாக, பூமியின் சுற்றுவட்டப்பாதையில் அந்த விண்கலத்தை மனிதர்களே இயக்கி விண்கலம் திரும்பும் விதத்தை சரிபார்ப்பதும் அடங்கும். படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.virakesari.lk/article/242860
-
யாழில் இடிமின்னலுடன் பலத்த மழை ; மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி வீடொன்று சேதம்
யாழில் இடிமின்னலுடன் பலத்த மழை ; மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி வீடொன்று சேதம் Published By: Digital Desk 3 06 Apr, 2026 | 04:48 PM யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று (06) திங்கட்கிழமை அதிகாலை வேளை பல இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்தது. இதன்போது, வடமராட்சி, கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் அருகில் நின்ற தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி கொண்டதுடன் , குறித்த மின்னல் தாக்கத்தால் வீட்டின் சுவர்களில் ஓட்டைகள் விழுந்துள்ளதுடன் , ஜன்னல் மற்றும் கதவு நிலைகளும் சேதமடைந்துள்ளன. இருந்த போதிலும் வீட்டில் இருந்தோர் காயங்கள் எதுவும் இன்றி தப்பித்துக்கொண்டனர். தென்னை மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி எரிவதனை கண்ட அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர் அதேவேளை குறித்த மின்னல் தாக்கத்தினால் அயலவர்களின் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள் சிலவும் சேதமடைந்துள்ளன. https://www.virakesari.lk/article/242887
-
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இங்கே மேற்கு ரஸ்யா பற்றிய எனது நிலைப்பாட்டை குசா அண்ணை எடுக்க வேண்டும் என நான் சொல்லவில்லை. அந்த திரியில் அவர் ரஸ்யா உக்ரேன் மீது செய்ய ஆக்கிரமிப்பை, அது பிராந்திய நலனுக்கு தேவையானது என நியாப்படுத்தினார். அப்போ தமிழர்/புலிகள் விடயத்தில் இந்தியா நடந்து கொண்டதும் சரியா? என நான் கேட்ட போது…ஆம் என்றார். நம்ப முடியாமல் மீண்டும் கேட்ட போது. மீளவும் ஆம் என்றார். இரு புடம் போட்ட, கொள்கை மாறாத தமிழ் தேசியவாதி என தன்னை வெளிக்காட்டும் ஒருவருக்கு இது அப்பட்டமன கொள்கை பிறழ்வு நிலை. இதேபோல்… புலிகள் 87 இல் மாகாண சபையை ஏற்காமல் போராடியது சரி, இந்தியாவை, சிங்களவரை நம்பவே கூடாது எனும் நிலைப்பாட்டை பலதடவை யாழில் முன்வைத்த அவர்… கடைந்தெடுத்த இனவாதி அனுர, ஜேவியை நம்பி தமிழர் நடக்கலாம் என எழுதுவது இன்னொரு கொள்கை தப்புத்தாளம். இதைத்தான் நான் சுட்டுகிறேன்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
வாங்கோ….வாங்கோ…. தனியா வந்து கருத்தால் வெல்லமுடியாது போய்விட்டது… எனவே பழையபடி குழு சேர்ந்து முயற்சிக்கிறியள் போல…. ஜீவன் சிவா போன்ற அருமையான கருத்தாளர் வெளியேற நேரடி காரணம் நீங்கள்… கற்பகதரு என்ற படித்த, உயர் கல்வி துறை அனுபவம் மிக்க மனுசனை தாம் படிக்கவில்லை என்ற தாழ்வுசிக்கலால் கொத்தி, கொத்தி கலைத்தவர் இன்னொருவர்… யாழ்கள உறவுகளில் இந்திய மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்திய நேரடி அனுபவம் உள்ள அர்ஜூன் அண்ணாவை மிக கீழ்த்தரமாக விமர்சித்து வராது பண்ணியவர்கள் நீங்களும், உங்கள் குழுவினரும். துல்பன்? நவீனன்? உங்கள் குழுவின் ரவுடித்தனத்தால் யாழ் இழந்த அருமையான கருத்தாளர்கள் பலர். அனைவரும் விலகும் போது உங்களை சார்தோரை நேரடியாக குற்றம் சாட்டி விட்டே விலகினர். என் மீது ஒருவர் கூட அப்படி ஒன்றை இதுவரை சொன்னதில்லை. சீமான் ஆதரவாளர் ஒருவர் தோசை கடை போட்டு அதன்பால் பிசி என்பதால் வரவில்லை. நீங்கள் ஒரு முறை என்னை குற்றம் சொல்ல, அவரே வந்து அதை மறுத்து, மீண்டும் என்னோடு கருத்து மோதல் செய்தார். உங்கள் முகத்தில் அரை லோடு அசடு… அதையும் நாஞ்சில் சம்பத் பாணியில்… துடைச்சுகுவோம் என்று கடந்தீர்கள்😂. ஐரோபாவில் சக தமிழரின் கருத்து சுதந்திரத்தை வன்முறை கொண்டு அடக்கியதை சுவைத்து, சுவைத்து யாழில் எழுதி அதை ஊக்குவித்ததையும் ஒத்து கொண்டு பெருமையாய் வேறு சொன்னவர் நீங்கள். நீங்கள் இப்போ ஆட்கள் எழுதாமல் விட்டு விட்டார்கள் என முக்கால் அழுதவது…. சிலவேளை…. கர்மா வாக இருக்கலாம்😂
- Today
-
உயர்தரத்தில் '3 A' சித்திகளை பெற்ற மாணவன் உயிரிழப்பு !
ஆழ்ந்த இரங்கல்கள் .......!
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
எங்கள் அண்ணன், அதிபர், அன்னபான சர்வாதிகாரி சீமான் தானும் அப்படி ஒரு narcissistic leader என்பதை உணர்த்திய இன்னொரு தருணம் இது.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
உக்ரைன் சம்பந்தப்பட்ட திரியில் உங்களது அந்த கருத்தில் நானும் முரண்பட்டேன். ஆனால் அது மேற்கு மற்றும் ரசியா சம்பந்தமான உங்கள் நிலைப்பாடு. அதை நான் இன்றும் மதிக்கிறேன். ஒரே முழுமையான கருத்தை எல்லோரும் கொண்டிருக்கவேண்டும் என்பதே சர்வாதிகாரம். இந்த சர்வாதிகாரத்தை எம் மனதில் வைத்துக் கொண்டு எத்தனை உருட்டுதல்கள். எத்தனை துரத்துதல்கள். இதனால் இந்த பக்கமே வராமல் விட்டோர் பலர்.☹️
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
கூட்டம்? சில ஊர்களில் பஸ்ஸுக்கு இதை விட அதிக ஆட்கள் வெயிட் பண்ணுவார்கள். தான் ஷோ காட்டுவதற்காக…. தம்பிகளை நனைய விட்டால் பரவாயில்லை அவர்களுக்கு எருமைமாட்டில் மழை பெய்த கணக்குத்தான்…. ஆனால் பைத்தியகார பெற்றோர் கூட்டி வந்து மழையில் நனையவிட்ட ஒரு ஐந்து பள்ளி சிரார்களை காட்டுகிறார்கள். அதில் அந்த சிறுமி மழை குளிரில் நடுக்குவது அப்படியே தெரிகிறது. இதுதான் கிம், புட்டின், கிட்லர், தம்பர் போன்ற narcissist தமது சுய இமேஜுக்ஜும், அதனால் வரும் கிக்குக்கும் எந்த எல்லைக்கும் போவார்கள், எவரையும் பலி கொடுப்பார்கள் என்பதற்கு உதாரணம்.
-
உயர்தரத்தில் '3 A' சித்திகளை பெற்ற மாணவன் உயிரிழப்பு !
ஆழ்ந்த அனுதாபங்கள்
-
போர் அமைதியை விட அதிக லாபமா?
Trump delivers Hormuz ultimatum, reports emerge of potential US-Iran ceasefire terms | ABC NEWS
-
உயர்தரத்தில் '3 A' சித்திகளை பெற்ற மாணவன் உயிரிழப்பு !
மிகவும் கவலைக்குரிய நிகழ்வு. அந்த மாணவனின் ஆந்தா சாந்தி அடைய பிரார்திக்கிறேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
-
டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!
At least 34 people have been killed, including six children, as the United States and Israel carried out massive attacks across Iran, targeting a top university as well as residential areas, after US President Donald Trump set a Tuesday deadline for Tehran to fully reopen the Strait of Hormuz or face strikes on its power plants and bridges. The Fars news agency reported on Monday that an air attack killed 23 people, including four girls and two boys aged below 10 years, in Tehran province’s Baharestan County. Al JazeeraIran’s top university bombed as US, Israel intensify atta...Tehran says it will respond 'in kind' to attacks on its infrastructure, accuses Trump of inciting 'war crimes'.ரம் கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடங்கிவிட்டாரா?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அரசியலுக்கு அப்பால் இது ஒரு சிறப்பான செய்தி . ........வரலாறு தெரிந்து கொள்வோம் ........! 👍
-
இனித்திடும் இனிய தமிழே....!
ensdotoSrph1a78l68m505l891801423a0hf2h42i5hmu08l 67h276i5268 · புதுவையின் கவிவரிகளில்எழுதப்பட்ட கவிவரிகள் {பாடல் }SBP #உந்தனின் வாசலில் வந்து நின்றேனடி ஏனடி பார்க்கவில்லை - என்னை கண்டுகொள்வாய் என காத்திருந்தேனடி புன்னகை பூக்கவில்லை திருநெல்வேலி ஊரில் மழை பொழியும் பத்திரகாளி தினந்தோறும் உந்தன் காலில் அருள் பெருகும் பத்திரகாளி காலையிலே திரை விலகும் வேளையிலே வருகிறேன் கண்மலர்ந்து நீ சிரிக்க நானிருந்து உருகிறேன் ராவினிலே நீ துயிலும் பாயினையும் கழுவுறேன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை ஆதலினால் அழுகிறேன் பத்திரகாளியே நித்திரையோ? - என்னை பார்க்க தடையான உத்தரவோ? இத்தனை சொல்லியும் நீ இரங்காவிடில் என்னிலே என்னடி குற்றமதோ ? பூசை மணி காதில் விழ வாசலிலே பூக்கிறேன் பொங்கல் அன்று உன் பொலிவை கண் குளிர பார்க்கிறேன் தேரில் வரும் நாளினிலே ஊறி உடல் வேர்க்கிறேன் தேவி பதில் ஏதுமன்றி போக உயிர் போக்கிறேன் பத்திர காளியே நித்திரையோ?- இந்த பாவி அழுவது கேட்கலையோ? பித்தனை போலவும் பேயனை போலவும் கத்துவதே எனக்கானதுவோ? Voir la traduction......! புதுவையின் கவி வரிகளில் ..... அம்மனுக்கு அர்ச்சனை ......! 🙏
-
கருத்து படங்கள்
- பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி எப்பொழுது? நிலாந்தன்!
பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி எப்பொழுது? நிலாந்தன்! கடந்த வியாழக்கிழமை,பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கிறிஸ்தவ கோவில்களில் படையினர் அல்லது போலீசாரின் பிரசன்னத்தைக் காண முடிந்தது. துப்பாக்கிகளோடு ஆலய வாசலில் அல்லது அதன் சூழலில் காணப்பட்டார்கள். ஈஸ்டர் குண்டுகள் வெடித்து கிட்டத்தட்ட 7,ஆண்டுகள் ஆகிவிட்டன.அந்தக் குண்டுகளின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்களும் உண்டு.அதுதொடர்பாக பல்வேறு வகைப்பட்ட வாக்குமூலங்களும் உண்டு.நாடு போரில் இருந்து மீண்டு விட்டதாக கூறிக்கொள்கிறது. நாட்டில் இனவாதம் இல்லை என்று இப்போதுள்ள அரசாங்கம் கூறுகின்றது.ஆனால் துப்பாக்கிகள் அற்ற பாதுகாப்பான ஈஸ்டர் எப்பொழுது கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்கும் ? ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னணியில்,உள்நாட்டில் தமது வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்ட சக்திகள் இருந்ததாக சந்தேகங்கள் உண்டு.பேராயர் மல்கம் ரஞ்சித் அதுதொடர்பாக தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். ஆனால் இங்கே ஓர் அடிப்படை உண்மையை மறந்து விடக்கூடாது. யார் பின்னாலிருந்து கையாண்டாலும் கையாள விட்டாலும் தங்கள் உடல்களைக் குண்டுகளாக மாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது, குறிப்பாக அதிகளவு தமிழர்கள் கலந்து கொள்ளும் பிரார்த்தனை நேரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. தன்னுடைய மத அரசியல் நம்பிக்கைகளுக்காக தன்னையே வெடிகுண்டாக்கி வெடித்துச் சிதறுவது என்பது சாதாரணமானது அல்ல.அவ்வாறு செய்வதற்கு ஒரு வைராக்கியம் வேண்டும்.தமது இலட்சியத்தின் மீது ஆழமான பற்றுறுதி இருக்கவேண்டும்.தனது நம்பிக்கைகளை தனது உயிரினும் மேலாக கருதும் ஒருவரால்தான் அவ்வாறு குண்டாக மாறி வெடித்துச் சிதற முடியும். அவ்வாறு தன் உயிரைக் கொடுத்து தன் மத நம்பிக்கையைப் பாதுகாப்பதற்குத் தயாராக கொஞ்சம் பேர் நாட்டில் இருந்தார்கள் என்பது உண்மை.அவர்களை வெவ்வேறு நோக்கு நிலைகளிலிருந்து வெவ்வேறு சக்திகள் கையாண்டு இருக்கலாம்.ஆனால் அவ்வாறு கையாண்டவர்கள் மனிதக் குண்டுகளை உற்பத்தி செய்யவில்லை. அவர்களால் அது முடியாது. எனவே மனிதக் குண்டுகளை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு மத அரசியல் சூழல் நாட்டில் இருந்தது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இதை இன்னும் ஆழமான வார்த்தைகளில் சொன்னால், நாட்டில் மதங்களுக்கு இடையிலும் இனங்களுக்கு இடையிலும் பிரச்சினைகள் ஏற்கனவே இருந்தன என்பதுதான் மூல உண்மை.ஏற்கனவே இருந்த பிரச்சினைகளை ஏனைய சக்திகள் கையாண்டன என்பதுதான் இரண்டாவது உண்மை.எனவே வெளிச் சக்திகள் கையாண்டதால் மனிதர்கள் குண்டுகள் ஆவதில்லை.குண்டுகளை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு மத அரசியல் சூழல் ஏற்கனவே இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஈஸ்டர் குண்டுவெடிப்பில் மட்டுமல்ல இனப்பிரச்சினையிலும் அதுதான் உண்மை.ஏற்கனவே இருக்கும் ஒரு பிரச்சினையைத்தான் ஏனைய சக்திகளும் வெளிச் சக்திகளும் கையாளலாம். எனவே ஏற்கனவே ஒரு பிரச்சினை இருந்தது என்பதுதான் அடிப்படை உண்மை. உதாரணமாக,ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை வளர்த்தெடுத்தது அமெரிக்கா.ஆனால் ஏற்கனவே இருந்த சோவியத் எதிர்புணர்வுக்கு,இஸ்லாமிய தீவிர நிலைப்பாடுகளுக்குக் அமெரிக்கா ஆயுதம் கொடுத்து வளர்த்துவிட்டது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை வளர்த்துவிட்டது அமெரிக்காதான் என்று கூறுவார்கள்.அங்கேயும் ஏற்கனவே இருந்த அடிப்படை வாதத்தை,வெறுப்பை, போராட்டத்துக்கான தேவையை அமெரிக்கா கையாண்டது என்பதுதான் சரி. இப்படிப் பார்த்தால் ஈஸ்டர் குண்டு வெடிப்பும் உட்பட உலகில் பெரும்பாலான இனப்பிரச்சினைகள்,மதப் பிரச்சினைகள் போன்றவை வெளிச்சக்திகளால் வளர்த்தெடுக்கப்படுகின்றனவே தவிர வெளிச்சக்திகளால் உற்பத்தி செய்யப்படவில்லை.அவை ஏற்கனவே உள்நாட்டில் இருந்தன.ஏற்கனவே இருந்த ஒரு பிரச்சினையை வெளிச் சக்திகள் தங்கள் தங்கள் நோக்கு நிலைகளில் இருந்து கையாளுகின்றன. ஈஸ்டர் குண்டுவெடிப்பை முன்னெடுத்த மனிதக் குண்டுகளை உள்நாட்டுச் சக்திகள் தங்கள் தேர்தல் நோக்கத்துக்காகக் கையாண்டார்கள் என்ற சந்தேகம் பொதுவாக உண்டு.அதுபோலவே இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இந்திய புலனாய்வுத்துறை இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் ஏற்கனவே இருந்த ஒன்றைத்தான் யாரும் கையாண்டிருக்கலாம் என்ற விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால்,வெளிச் சக்திகளால் கையாளப்படத்தக்க இன,மதச் சூழல் ஒன்று நாட்டில் இருந்தது என்பதே மூல காரணம் ஆகும். இந்தியா ஏன் இதில் சம்பந்தப்பட வேண்டும்?இலங்கையில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தலையெடுத்து விட்டது என்பதை எடுத்துக்காட்டி அதன்மூலம் இந்திய அரசாங்கம் தனது இந்துத்துவா நிலைப்பாட்டை நியாயப்படுத்தவும் இந்துக்களின் வாக்குகளைத் திரட்டவும் முடியும் என்பதற்காகவே இந்தியா அதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பது அந்த ஊகம் ஆகும். ஆனால் இத்தாக்குதல்கள் தொடர்பான எச்சரிக்கையை இலங்கைக்கு முதலில் வழங்கிய தரப்புகளுக்குள் இந்தியாவும் அடங்கும்.அத்தாக்குதல்களால் இந்தியாவுக்கு நன்மை கிடைக்கும் என்று சொன்னால்,அதைத் தடுத்து நிறுத்தக்கூடிய விதத்தில் இந்தியா இலங்கையை எச்சரித்திருக்காது.ஒரு தாக்குதலில் சம்பந்தப்பட்ட வெளிநாடு அந்தத்தாக்குதலை தடுத்து நிறுத்தக்கூடிய எச்சரிக்கையை குறிப்பிட்ட நாட்டுக்கு முன்கூட்டியே வழங்குமா? இந்தியா எச்சரித்தது மட்டுமல்ல,இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கும் முன்கூட்டியே தகவல்கள் கிடைத்தன என்று கூறத்தக்க ஆதாரங்கள் நிறைய உண்டு.அப்போதிருந்த ரணில் மைத்திரி அரசாங்கம் ஆனது உட் பூசல்களால் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டது.ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளில் ஒருவர் ஆகிய மைத்திரிபால சிறிசேன யாப்புச்சதி முயற்சி ஒன்றின்மூலம் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை குறைத்து விட்டிருந்தார்.அவர் முன்னெடுத்த 52 நாள் யாப்புச்சதிப் புரட்சியானது அரசாங்கத்தின் செயல் திறனை பெருமளவுக்குப் பாதித்திருந்தது.அப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் தான் குண்டுகள் வெடித்தன. ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்கு முன்னதாக அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மைத்திரிபால சிறிசேன முக்கிய கட்சி தலைவர்களை தன்னுடைய இடத்துக்கு அழைத்து இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பாக முன்கூட்டியே எச்சரித்து இருக்கிறார்.இரவுச் சாப்பாட்டோடு நடந்த அந்தச் சந்திப்பில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் பிரசன்னத்தைக் குறிக்கும் காணொளிகளும் காட்டப்பட்டுள்ளன.அதில் ஒருபகுதி காணொளிகள் தமிழில் காணப்பட்டன என்று அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கொழும்புமைய தமிழ் கட்சித் தலைவர் ஒருவர் இக்கட்டுரையாளருக்குத் தெரிவித்தார். எனவே ஒரு பாரதூரமான தாக்குதலை முன்கூட்டியே ஊகித்துத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கைகள் அரசாங்கத்திற்கு ஏற்கனவே கிடைத்திருந்தனவா?அரசாங்கம் அந்த முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில் தற்காப்பு நடவடிக்கைகளை,பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தது என்பதும் உண்மையா? கடந்தவாரம் இதுதொடர்பான ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய உதய கமன்பில எழுதிய “ஈஸ்டர் குண்டு வெடிப்பும் அதன் சூத்திரதாரிகளும்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் முன்வரிசையில் ராஜபக்சக்கள் மட்டும் காணப்படவில்லை.சஜித் பிரேமதாசவும் காணப்பட்டார்.அது சிங்களத்தில் எழுதப்பட்ட ஒரு நூல்.அதை வாசிக்க இக்கட்டுரையாளரால் முடியாது.எனினும் கொழும்புமைய அரசியல் பிரமுகர் ஒருவர் மும்மொழிகளிலும் ஆளுமை உடையவர்,அந்த நூலின் உள்ளடக்கம் தொடர்பாக ஒரு சுருக்க விளக்கத்தைத் தந்தார். அந்த விளக்கத்தின்படி ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் இந்தியா இருந்தது என்ற குற்றச்சாட்டை உதய கமன்பில மறுப்பதாகக் கூறப்படுகிறது. அந்தத் தாக்குதல்களின் வேர் இஸ்லாமிய அடிப்படை வாதம்தான் என்ற வாதமும் அங்கே முன்வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அது ஏற்கனவே இக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் ஒரு பிரச்சினையைத்தான் வெளியில் இருப்பவர்கள் கையாளலாம். இக்கட்டுரையின் மையப்பொருளும் அதுதான்.இஸ்லாமிய அடிப்படை வாதத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஓர் இன,மத சூழல் நாட்டில் ஏற்கனவே இருந்தது என்பதுதான்.இப்பொழுதும் அதுஇல்லை என்று கூறலாமா? இல்லையென்றால் ஏன் ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு தேவாலயங்களுக்கு முன் ஆயுதம் தரித்த படையினரும் போலீசாரும் நிறுத்தப்படுகிறார்கள்? அப்படிப்பட்ட தாக்குதல்களை எதிர்பார்த்துத்தான் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் புதுப்பிக்க முற்படுகிறதா? இக்கட்டுரை ஈஸ்டர் குண்டு வெடிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அக்குண்டு வெடிப்பை திட்டமிட்டவர்களின் மத அடிப்படை வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.ஏனைய மதத்தவர்களை கொல்வதன்மூலம் தன்னுடைய மத நம்பிக்கைகளை மகிமைப்படுத்த முடியும் என்று கருதும் புனிதப் போர்களை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் தனது இறை நம்பிக்கையின் பெயரால் தனது உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருப்பது என்பது சாதாரணமானது அல்ல.இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் மேற்காசியப் போரில் அமெரிக்க இஸ்ரேலிய தொழில்நுட்பங்கள் வெற்றி கொள்ள முடியாமல் இருக்கும் இடம் அதுதான். எனவே ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்கான மூலகாரணம் ஏற்கனவே நாட்டுக்குள் இருந்தது.கடந்த பல தசாப்த காலமாக குறிப்பாக, 2009க்குப்பின் முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட,திட்டமிட்ட தாக்குதல்களின் விளைவு அது.இது முதலாவது காரணம்.இரண்டாவது காரணம்,உலகம் முழுவதிலுமான இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் எழுச்சி.அது இலங்கைத்தீவிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது.எனவே ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு உள்நாட்டுப் பரிமாணமும் உண்டு;அனைத்துலகப் பரிமாணமும் உண்டு. அந்த உள்நாட்டுப் பரிமாணம் முழுமையாக நீக்கப்பட்டு விட்டதா?அது நீக்கப்படவில்லை என்ற பயத்தால்தான் துப்பாக்கிகள் இல்லாத பெரிய வெள்ளியை இலங்கை கிறிஸ்தவர்களுக்கு உறுதிப்படுத்த முடியவில்லையா ? ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.ஆனால் அதற்கு முன்பிருந்தே வடக்கு கிழக்கில் உள்ள படைத்தளங்களில் உள்ள பௌத்த விகாரர்களுக்கு படையினர் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.அண்மை ஆண்டுகளாக தையிட்டி விகாரைக்கும் அதுதான் கதி. நான்கு மதங்களும் செழித்தோங்கி காணப்படும் இச்சிறிய தீவில் ஏன் ஒரு பகுதி ஆலயங்களை அல்லது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆலயங்களை ஆயுதம் தாங்கிய போலீசாரும் படையினரும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 16 ஆண்டுகளின் பின்னரும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 7ஆண்டுகளின் பின்னரும் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் மொழிகளுக்கு இடையிலும் பதட்டம் உண்டு. சந்தேகம் உண்டு.பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் உண்டு. ஏனென்றால் இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை,பல்சமயச் சூழலை, பல்மொழிச் சூழலை ஏற்றுக்கொண்டு எல்லா இனங்களும்,மதங்களும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதத்தக்க ஒரு தீர்வை இனப்பிரச்சனைக்கான தீர்வைக் கொடுப்பதற்கு கடந்த ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலாக இந்த நாட்டை ஆட்சி செய்த எந்தவோர் அரசாங்கமும் தயாராக இருக்கவில்லை. மாற்றத்தை வாக்களித்து வந்த தேசிய மக்கள் சக்தியால் அதைச் செய்ய முடியுமா?அரசாங்கம் கூறுகிறது,இப்பொழுது இனவாதம் இல்லை என்று. ஆனால் இனவாதம் இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதனால் அது இல்லாமல் போய்விடாது.மாறாக இச்சிறிய தீவில் இனவாதம் இல்லை என்பதனை தமிழ் மக்கள் எப்பொழுது ஏற்றுக்கொள்வார்கள் என்றால்,இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வு வழங்கப்படும் போது மட்டும்தான். தமிழ் மக்கள் இந்தச் சிறியதீவு தங்களுக்கு பாதுகாப்பானது என்று நம்ப வேண்டும்.தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால்,இச்சிறிய தீவில் சிங்கள மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை;முஸ்லிம் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத்தான் கடந்த மூன்று நாட்களாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு முன்பாக துப்பாக்கிகளோடு உஷார் நிலையில் நிற்கும் போலீசாரும் படைத்தரப்பும் உணர்த்துகின்றன. https://athavannews.com/2026/1471037- காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்! காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மூவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (05) பதிவாகியுள்ளது. இந்த உயிரிழப்புகள் அனுராதபும், எப்பாவல மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் பதிவானதாக பொலிஸார் தெரிவித்தனர். எப்பாவலா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனுகோலே பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் எப்பாவல 36, 48 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் அமுனுகோலே குளக்கரை அருகே சடலமாக மீட்கப்பட்டார். மற்றைய நபர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த நிலையில் நெல் வயல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதனிடையே, மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெவகெதர பகுதியில் பதிவான மற்றொரு சம்பவத்தில் தனது இல்லத்தின் முன்பாக காட்டு யானை தாக்கியதில் 79 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான அவர், படுகாயங்களுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவங்கள் தொடர்பாக எப்பாவல மற்றும் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1471065- நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை! செவ்வாய்க்கிழமை அன்று தான் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் தெஹ்ரான் ஒரு உடன்பாட்டை எட்டாமலும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காமலும் இருந்தால், ஈரான் மீது கடும் கடும் தாக்குதலை நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தினார். அதேவேளையில், ஈரானின் உட்பகுதியில் இருந்து மிகுந்த ஆபத்து நிறைந்த ஒரு மீட்புப் பணியில் விமானப்படை வீரர் ஒருவரை மீட்ட அமெரிக்க சிறப்புப் படைகளையும் அவர் பாராட்டினார். ஈரானின் அணு ஆயுத மேம்பாட்டுத் திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணைக் கிடங்கு மற்றும் பிராந்திய மறைமுகப் போராளிக் குழுக்களுக்கான ஆதரவு ஆகியவற்றால் ஏற்படும் உடனடி அச்சுறுத்தல் என்று தாங்கள் கருதியதை அழிப்பதற்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐந்து வாரங்களுக்கும் மேலாக ஏவுகணைகள், வான்வழித் தாக்குதல்கள் மூலம் ஈரானைத் தாக்கி வருகின்றன. பதிலுக்கு, உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கிற்கான வழித்தடமான ஹார்முஸ் நீர்வழியை தெஹ்ரான் திறம்பட மூடியுள்ளதுடன், வளைகுடாவைச் சுற்றியுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் பிற இலக்குகளையும் தாக்கியுள்ளது. இன்று (06) காலை தெஹ்ரானில் வெடிப்புகள் நிகழ்ந்தன. மேலும், நகரின் தெற்கே உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லபபட்டதாக ஒரு அதிகாரி ஈரானிய அரசு ஊடகத்திடம் தெரிவித்தார். இதேவேளை, தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை இட்ட பதிவொன்றில், ஈரானிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அச்சுறுத்தினார். இது ஒரு போர்க்குற்றமாக அமையும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆதரவாளர்கள், எதிரிகள் மற்றும் நிதிச் சந்தைகள் என அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள முரண்பட்ட செய்திகளுக்கு மத்தியில், ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திங்கட்கிழமைக்குள் ஒரு உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார். அதேநேரம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சாத்தியமான 45 நாள் போர்நிறுத்தத்தின் நிபந்தனைகள் குறித்து அமெரிக்கா, ஈரான் மற்றும் பிராந்திய மத்தியஸ்தர்கள் விவாதித்து வருவதாக, பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்த நான்கு அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிராந்திய வட்டாரங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டனது. மத்தியஸ்தர்கள் இரண்டு கட்ட ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக அந்த அறிக்கை தெரிவித்தது. முதல் கட்டமாக 45 நாள் போர் நிறுத்தம்; இரண்டாம் கட்டமாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஆகியவை அமையும். எனினும், இது தொடர்பில் வெள்ளை மாளிகையும் அமெரிக்க வெளியுறவுத் துறையும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. https://athavannews.com/2026/1471078- கொழுந்துவிட்டு எரியும் இஸ்ரேல் கப்பல்.. சுற்றிவளைத்து அடிக்கும் ஈரான்..! PTD
ஆஹா.... ஈஸ்டர் விடுமுறை காலையில் கிடைத்த, இனிப்பான செய்தி. 😂 வெல்டன் ஈரான். இன்ன்ன்னும் நிறையய... எதிர் பார்க்கின்றோம். 🤣 பகிர்விற்கு நன்றி @உடையார் . 👍- அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
விமானிகள் பாதுகாப்பாக மீட்டெடுத்தது மகிழ்ச்சியான செய்தி, இந்த போர் தொடருமாயின் அமெரிக்காவின் வளைகுடா ஆதிக்கம் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்படும், அது அமெரிக்காவின் தற்போதய மேலாண்மை நிலையிலிருந்து கீழிறக்கிவிடும், பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இந்த வளைகுடா பகுதியினை பேணுவதற்கு அமெரிக்காவிற்கு போர் எந்த வகையிலும் உதவ போவதில்லை மாறாக பாதிப்பினையே ஏற்படுத்தும். ஈரானை பொறுத்தவரை அவர்கள் பெற்றுள்ள இந்த மேலாதிக்க நிலையினை தக்கவைக்க ஒரு அரசியல் ரீதியான வெற்றிகளை பெறுவதன் மூலம் மீண்டும் உலக அரங்கில் தடைகளை கடந்து வர சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது, தொடர்ந்தும் போரினை தொடர்ந்தால் புதிதாக எந்த இலாபமும் ஏற்படபோவதில்லை. அமெரிக்காவினால் போரினை தொடர முடியாத நிலையில் மேலும் மேலும் ஒரு சூதாடி போல போரினை தொடருவது ஒரு ஆபத்தான முடிவினை நோக்கியே அமெரிக்காவினை தள்ளிவிடும் போரிற்காக செலவழிக்கும் காசு தற்போது உள்ள நிலையில் ஈரானிற்கு ஏற்பட்ட சேததிற்கான நட்ட ஈட்டினை குறைந்த செலவுடனேயே முடித்துக்கொள்ளலாம், ஆனால் போரினை தொடர்ந்து அதிகமாக செலவழித்து விட்டு நட்ட ஈட்டினை கொடுக்கும் நிலை ஏற்படுவது முட்டாள்தனமான முடிவாக இருக்கும். ஈரானினது போர் பற்றிய மிகைப்படுத்தல்களை கடந்து பார்த்தாலும் அவர்கள் ஒரு மிக புவியியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலமான நிலையில் உள்ளார்கள், அவர்களினது பலம் இங்கு விடயமே இல்லை ஆனால் அதற்கெதிரான போர் என சுவரில் தலையினை மோதுவது முட்டாள்தனமானது. அமெரிக்காவினை வகையாக கோர்த்துவிட்டு பிபி காணாமல் போய்விட்டார், இந்த நிலையில் அமெரிக்கா தொடர்ந்தும் போரிடுவது அமெரிக்காவினை உலக அரங்கிலேயே பலவீனமாக்கிவிடும் நிலமையே காணப்படுகிறது. இருதரப்பும் விட்டுக்கொடுத்து ஒரு போர் நிறுத்தத்திற்கு வரவேண்டும், அத்துடன் வெல்ல முடியாத போர் என தெரிந்துள்ள நிலையில் இனி ஒரு போர் நடாத்தி ஈரானை வெல்ல முடியாது எனில் அவர்கள் வைக்கும் நிபந்தனையான பாதுகாப்பு உத்தரவாதத்தினை கொடுக்கலாம், அதன் மூலம் அணு ஆயுத தேவையினை ஈரானுக்கு இல்லாமல் செய்வதன் மூலம் ஈரானின் அணுவாயுத உற்பத்திக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.- உயிர்த்த ஞாயிறு விசாரணை: உண்மை விரைவில் வெளிவரும் – ரில்வின் சில்வா
திருடரின் கூட்டத்திற்கு பங்குதாரிகள் போகத்தான் செய்வார்கள். இனிமேல் கம்மன்பில தனித்து விடப்படுவார். சஹ்ரானுடன் சேர்ந்து இயங்கியவர்கள் முந்நூறு பேர் இன்னும் நாட்டில் உள்ளனராம், அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்வு கூறுகிறார் கம்மன்பில, அது எப்படி இவருக்குத் தெரியும்? அவர்களை அடையாளம் காட்ட வேண்டியது கம்மன்பிலவின் பொறுப்பு. இல்லையென்றால் இன்னொரு குண்டுவெடிப்பிற்கு கம்மன்பில தயாராகிறார் என்பது வெள்ளிடைமலை.- டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!
நல்ல மகிழ்ச்சியான தகவல், செய்தியினை இணைத்துவிடுங்கள். - பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி எப்பொழுது? நிலாந்தன்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.