Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. செத்த கிளியால் பனிபோரை எல்லாம் நடத்தும் அளவுக்கு இப்போ முடியாது. சுண்டக்காய் நாடுகள் கசகஸ்தானும், அசர்பைஜானுமே கிளிப்பேச்சை கேட்பதில்லை இப்போ. செத்த கிளியை நம்பி பிரயோசனம் இல்லை என உணர்ந்த ஆர்மீனியா, தனது சில நிலங்களை விட்டு கொடுத்து, அசர்பைஜானுடன் கிட்டதட்ட ஒரு சரணாகதி அமைதி உடன்படிக்கைக்கு தயாராகிறது. ஆபிரிக்கா, சிரியா, என போன இடத்தில் எல்லாம் கிளிக்கு ஒரே அடி. நம்பி இருந்தவர்களை கூட காப்பாற்ற மொஸ்கோவுக்கு கூட்டி போகும் நிலை. அணு ஆயுத மிரட்டலை கூட யாரும் கண்டு கொள்ளவில்லஒ. அதேபோல் அமெரிக்காவோடு பனிபோரில் இறங்கும் அளவு ஈரான் இல்லை. காசாவில் அடித்தது போல் அமெரிக்கா ஈரானை அடிக்கவில்லை. ஏன் எண்டால் அவர்களுக்கு தேவை ஆட்சி மாற்றம். ஆனால் அது இப்படி நெட்டிதள்ளி வராது என தெரிந்தால் நேரடியாக ஈரானின் உணவு பாதுகாப்பை அடிப்பார்கள். சீனா மட்டுமே அமரிக்காவுக்கு டஃப் கொடுக்க கூடிய ஒரே நாடு. ஆனால் அவர்களுக்கு இன்னும் அந்த தேவையில்லை. பிகு இன்னும் 30 நாளில் அவுசில் பெற்றோல் ஓவராமே? சைக்கிள் வச்சிருக்கிறியளோ?😂
  3. விஜை செய்தது சாதனை அல்ல. அவர் அரசியலில் ஒரு பிஸ்கோத்து. ஆனால் சினிமாவிலும் அரசியலிலும் சீமான் ஒரு nobody. விஜை அப்படி அல்ல. அப்படி பட்ட விஜையையே ஓடவிடுகிறது திமுக. அதைத்தான் சொன்னேன். உங்களுக்கு எப்படி பார்த்தாலும் அஸ்டமத்து சனிதான்😂. ஒன்றில் விஜை அதிமுக கூட்டணியில் சேர்ந்து அவர்கள் வெல்வார்கள். இல்லை எண்டால் விஜை தனிய நிண்டு திமுக வெல்லும். சீமான் வெல்வதுதான் உங்களை பொறுத்த வரை வெற்றியாக இருக்கும். என்னை பொறுத்தவரை… சீமான் வெல்லாதவரை வேறு யார் வெண்டாலும் எனக்கு வெற்றிதான்😂
  4. அமெரிக்காவிடம் இன்னும் சில வழிகள் கைவசம் உள்ளது. ஈரானின் அத்தனை துறைமுகத்தையும் கப்பல் உள்ளே போக இயலாதவாறு சிதைக்கலாம். தரை வழியே அயல்நாடுகளில் இருந்து உள்ளே வரும் சாலைகள் அனைத்தின் பாலங்களையும் தவிடு பொடியாக்கலாம். அதேபோல் ஈரானில் இருந்து எண்ணையோ வேறு எதுவுமோ வெளி செல்லாதபடி செய்யலாம். அப்படி செய்தால் உணவில் தன்னிறைவு இல்லாத ஈரான் உணவுக்காக நீரிணையை திறக்க வேண்டி வரும். உணவு பஞ்சம் வரும்போது ஆட்சியின் பொலிஸ் ஆமி கூட அவர்களுக்கு எதிராக திரும்பலாம். இந்த போர் இப்போதான் ஆரம்பிக்கிறது. பிகு சீனா தாய்வானை சுற்றுகிறதாம்.
  5. பவுடர் டப்பாவுக்கும் புளித்த மாவுக்கும் சண்டை…. டைம் போர் 🍿😂
  6. சீனா. வாராது. தேவையிமில்லை. சீனா. கப்பல்களுக்கு. தடையில்லை. மற்றவர்கள். பலம். இல்லாதவர்கள். புதின். மட்டும். ஒரு. சொல்லில். திறக்கக்கூடிய. மனிதன்.
  7. Today
  8. கவிஞர் வைரமுத்துவிற்கு வாழ்த்துக்கள்! எரிச்சல், பொறாமை மிகுந்த, சிறிய மனிதர்கள் நிறைந்தது இலக்கிய உலகம். தனக்கு பரிசு பாராட்டு, அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதை விட மற்றவனுக்கு கிடைக்கக்கூடாது என இங்கு நினைப்பவர்கள் பலர்.
  9. but இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு. திமுக காங்கிரஸ் கூட்டணி தோற்கணும்.
  10. கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் வசிக்கும் ஜேர்மனியின் Baden-Wuerttemberg மாநிலத்தில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் அரசியல் வட்டாரங்களில் சுவாரசியமான திருப்பங்களை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, Alliances 90/ The Greens கட்சி 30.3 சதவீத வாக்குகளையும், Christian Democratic Union கட்சி 29.7 சதவீத வாக்குகளையும் பெற்றன. இரு கட்சிகளுக்கும் மாநில நாடாளுமன்றத்தில் தலா 56 இருக்கைகள் கிடைத்ததால், மாநில நாடாளுமன்றம் இன்னும் சிக்கலானதாக மாறியிருக்கின்றது. ஆனால் இந்தத் தேர்தலைப் பற்றி அதிகமாக பேச வைத்தது வேறு ஒரு சம்பவம். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட Free Democratic Party(FDP) கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் Nicole Buettner (41), ஜனவரி மாதத் தொடக்கத்தில் Schwaebische Zeitung பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் மிகுந்த நம்பிக்கையுடன் ஒரு வாக்குறுதி அளித்திருந்தார். “இந்தத் தேர்தலில் எப்படியும் எங்கள் கட்சி மாநில நாடாளுமன்றத்தில் நுழையும். அப்படி நுழையாவிட்டால் நான் மொட்டையடித்துக் கொள்வேன்!” என்று அவர் தைரியமாகக் கூறியிருந்தார். தன் கட்சி குறைந்தபட்சம் ஒரு இருக்கையாவது கைப்பற்றும் என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கிருந்தது. ஆனால் அரசியல் கணக்கு எல்லாக் காலமும் எதிர்பார்த்தபடி இருக்காது. தேர்தல் முடிவுகள் வந்தபோது FDP கட்சி வெறும் 4.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பாரிய தோல்வியைச் சந்தித்தது. மாநில நாடாளுமன்றத்தில் அமர அவர்களுக்கு ஒரு இருக்கை கூடக் கிடைக்கவில்லை. பல அரசியல்வாதிகள் இத்தகைய சூழ்நிலையில் தங்கள் பழைய வார்த்தைகளை மறந்து விடுவது வழக்கம். ஆனால் Nicole Buettner அப்படி செய்யவில்லை. ஞாயிற்றுக்கிழமை (15.03.2026) மாலை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. அதில் அவர் விருப்பமில்லாத புதிய “முடி அலங்காரத்தை” அதாவது முழுக்க மொட்டையடித்த தலையை காட்டிக்கொண்டே,“நான் ஒரு பந்தயம் கட்டினேன். அதில் தோற்றுவிட்டேன். அந்தத் தோல்விக்காக என் தலைமுடியை தருகிறேன்,” என்று சிரித்தபடி கூறினார். அதோடு அவர் மேலும் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார், “நான் என் வார்த்தையில் உறுதியாக இருப்பவள். நான் நினைப்பதைச் சொல்கிறேன். நான் சொல்வதைச் செய்கிறேன். நான் சொன்னதை நிறைவேற்றுகிறேன். இப்போது என் புதிய சிகை அலங்காரத்தோடு அதையே நிரூபிக்கிறேன்.” அரசியலில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் கரைந்துவிடுவது புதிய விசயம் அல்ல. ஆனால் சொல்லியதைச் செய்து காட்டும் அரசியல்வாதிகள் அரிது. தமிழ்நாட்டிலும் மாநிலத் தேர்தல் வருகிறது. அதில் போட்டியிடும் ஒரு தலைவருக்காவது இப்படிப்பட்ட சவால் விடும் ‘தில்’ இருக்கிறதா?
  11. 100 ரூபா விருப்ப மனு வை வாங்கிய பல்லாயிரம் போர் அதை நிர்பிக் கொடுக்கவே இல்லையாம்.தேறிய 60 பேரிடம் 2 கோடி பஒம் கட்சிக்கு கொடுக்கச் சொன்னாங்களாம். வந்தவங்களும் எஸ்கேப்.இப்ப டெல்லியில் விசாரணைக்கு மட்டும் போகவில்லையாம்.டெல்லியில் பா(சி)ச பாஸகவுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையாம்.அணைத்து உடகங்களும் செய்தி போடுகின்றன. விஸ்யால் ஏன் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை. எடப்பாடியார் மறுப்புத் தெரிவித்து விட்டார். பின்னர் சேருவது வேறு விடயம்.இப்பொழுது விஜையால் ஒன்றும் செய்ய முடியாது பாஜகவுடன் கூட்டணிக்கு ஒத்துவராத ஆதவ்ஈ ஜான்பாண்டியனை ஒதுக்கி விட்டு விஜையே பேசுகிறார். அதனால்தான் மாவட்டச்செயலாளாளர்களை அழைத்து கருத்துககேட்பு நாடகம் நடத்தப்பட்டது. விஜை கேட்கும் எண்ணிக்கையில் எடப்பாடியார் தொகுதிகளைக் கொடுக்க மாட்டார். அந்த விடயத்தில் விஜை அறங்கிப் போகாவிட்டால் கூட்டணி முறியும். விஜை ஒரு மாற்று அல்ல ஏமாற்று.போட்டியே திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் என்ற நிலைக்கு விஜை தள்ளப்பட்டுவிட்டார். இதெல்லாம் ஒருசாதனையா? ஜெயலலிதாவின் மாமாங்கத் திருவிழாவில் எத்தனை பேர் இறந்தார்கள். இதுவெல்லாம் ஒரு அசிங்கம்.
  12. இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய விருது இனி நம்மிடமிருந்து! ஜெயமோகன் jeyamohanMarch 16, 2026 இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும். இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது. “தமிழில் நவீன இலக்கியம் உண்டா?” என்று என்னிடம் பல மற்றமொழிக்காரர்கள் கேட்டிருக்கிறார்கள். அகிலனில் இருந்து தொடங்கி இந்திய மொழி அறிஞர்கள் நம் நவீன இலக்கியம் பற்றிய ஆழ்ந்த முன்முடிவுக்குள் சென்றுவிட்டனர். நம் நவீன இலக்கியத்தை உலகம் அறிந்தால்தான் இந்தியாவில் மதிப்பு என முடிவுசெய்தோம். இன்று அதை கொண்டுசெல்ல வாழும்தமிழ் இலக்கிய மாநாடு வழியாக பெருமுயற்சி எடுக்கிறோம். இன்று எந்த சர்வதேச இலக்கிய இதழ் ஓர் இந்திய இலக்கியச் சிறப்பிதழ் வெளியிட்டாலும் அதில் நம் படைப்பு உள்ளது. இந்தியா அதை திகைப்புடன் பார்க்கிறது. அந்த முயற்சிகள் அனைத்தையும் சீரழிப்பது வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்ட இந்த ஞானபீடப் பரிசு. தமிழிலக்கியத்தை நோக்கிக் காறித்துப்பியிருக்கிறார்கள். இதற்குமேல் உனக்கு மதிப்பில்லை என்கிறார்கள். இந்த அளவே உன்னை அளவிடுவோம் என குனிந்து நோக்கிச் சொல்கிறார்கள். அதை நான் நேரில் கண்டிருக்கிறேன். கேந்திர சாகித்ய அக்காதமி அரங்கில் வைரமுத்து அரை லட்சம் கவிதைகள் எழுதியுள்ளார், தாகூரை விட அதிகம் என அசோக் வாஜ்பாய் என்பவர் சொல்ல அரங்கே சிரித்தது. அந்தச் சிரிப்பின் பொருள் தெரிந்து நான் கூசிச் சிறுத்து அமர்ந்திருந்தேன். அந்த சிரிப்பு, அந்த இளக்காரம், அந்த போலிப்பெருந்தன்மை கொண்ட தட்டிக்கொடுத்தல், வேண்டுமென்றே நம்மில் சிறியவர்களை அங்கீகரித்து பிறரை அவரைவிடக் கீழ் என நிறுவும் சூழ்ச்சி– இது நூறாண்டுகளாக தமிழுக்கு எதிராக நிகழ்கிறது. இப்போதும் நிகழ்ந்துள்ளது. இவர்கள் யார் நம்மை மதிக்க? இவர்களிடம் ஏன் சென்று நிற்கிறோம்? இத்தனை சூழ்ச்சிகள் செய்து இவர்களிடம் ஏன் ஏற்பு பெற முண்டியடிக்கிறோம்? எண்ணக்கூசுகிறது. இந்த இரவு முழுக்க பெண்களின் அழைப்புகள். கண்ணீருடன், கொந்தளிப்புடன். ஏதோ தங்களுக்கு தனிப்பட்ட முறையில் அநீதி இழைக்கப்பட்டது போல. ஒரு தமிழ்ப்பெண்ணாகவே அவமானம் கொள்கிறார்கள் என்றனர். “ஏன் இந்த ஞானபீடைகளிடம் நாம் சென்று நிற்கவேண்டும்? நாம் உருவாக்குவோம் நமக்கான விருதை. அதை விட பெரிய விருதை. நான் என் நகைகளை முழுக்க தந்துவிடுகிறேன்” என்று பல பெண்கள் சொன்னார்கள். அவர்கள் கண்ணீருடன் சொன்னது ஓர் ஆணை. இதோ நாங்கள் அறிவிக்கிறோம், இந்திய வரலாற்றின் மிகப்பெரிய இலக்கிய விருது. உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் சாதனைப் படைப்புக்கான LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE . ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது டெல்லியிலும் நியூயார்க்கிலும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். விருதுத்தொகை இந்திய ரூபாயில் ஒரு கோடி. (ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர்) இந்த செய்தி டெல்லியிலும், சென்னையிலும், நியூயார்க்கிலும் முறையாக அறிவிக்கப்படும். https://www.jeyamohan.in/230197/
  13. தமிழுக்கு அவமானம் - ஜெயமோகன் jeyamohanMarch 15, 2026 சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று. ஆனால் விசாரித்தபோதெல்லாம் அப்படியில்லை என அவர்களில் சிலர் ஆக்ரோஷமாக மறுக்கவும் செய்தனர். வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத்துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான். அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்த தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஞானபீடத்தை அணுகிவிட்டார் என்பதை உள்வட்டம் வழியாகவே அறிந்தேன். கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தேன். நண்பர்களும் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது அந்த விருதை வைரமுத்துவுக்காகப் பரிந்துரைத்தவர் வெங்கையா நாயுடு. ஞானபீட நிறுவனம் அப்போது மறுத்தது. வைரமுத்துவுக்கு பின்னடைவு உருவானது.பிறகு அவர்மேல் வந்த பாலியல்குற்றச்சாட்டுக்களால் மேலும் பின்னடைவு. ஆனால் கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள்(பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக்கொண்டார். இந்திய துணைஜனாதிபதிக்கு ஞானபீடப்பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந்திருக்கலாம். இந்த தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்திருக்கலாம். இந்த ஞானபீட விருது அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம். நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம், உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அவமதிப்புக்கு தமிழர்களாகிய நாம் பொறுப்பேற்கவேண்டும். எந்த பேரிலக்கியவாதியையும் நாம் ஏற்றுக்கொண்டு முன்னிறுத்தியதில்லை. அவர்களை அவமதிக்கும் தருணங்களை தவறவிட்டதுமில்லை. ஞானபீடப்பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டிரள்ளது. இந்த விருதை ஏன் இப்படிக் கண்டிக்கிறோம்? அகிலனுக்கு அளிக்கப்பட்ட் ஞானபீடம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தமிழ் நவீன இலக்கியத்தையே இந்திய இலக்கியச் சூழலில் இருட்டடிப்பு செய்தது. அகிலனே இந்த தரம் என்றால் தமிழில் என்ன நவீன இலக்கியம் இருக்கப்போகிறது என்று சொல்லப்படுவதை ஏறத்தாழ இருபது மேடையிலாவது நானே என் காதால் கேட்டிருப்பேன். தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்றுதான் இன்றும் இந்தியச்சூழலில் பிற மொழியினரில் கணிசமானவர்கள் எண்ணுகிறார்கள். ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக மெல்ல மெல்ல அந்தச் சித்திரம் ஒரு சிறு வட்டத்தில் மாறுகிறது. ஆனால் இந்திய மொழிகளுக்கு செல்லும் மொழியாக்கங்களே இந்திய இலக்கியங்கள் பற்றிய சித்திரங்களை இந்தியச் சூழலில் உருவாக்குகின்றன. இங்கிருந்து செல்பவை நாம் பரிசளிக்கும் படைப்புகளே. வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம். இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும். நாம் மனம்தளராமலிருக்கவேண்டிய சூழல் இது. வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவார்கள் போவார்கள், சூழ்ச்சிகள் வழியாக அற்பவிருதுகளை ஈட்டுவார்கள், இலக்கியம் என்றும் வெல்லும். தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி. இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்துசெல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்கவேண்டியதில்லை. அருவருப்பும், கூச்சமும் நிறைகிறது உள்ளத்தில். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன்.அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார். https://www.jeyamohan.in/230180/ பழைய கட்டுரை (2017 ஆம் ஆண்டில் இருந்து) வைரமுத்துவுக்கு ஞானபீடமா? jeyamohanDecember 29, 2017 உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயிடுவை இதற்காகச் சந்திக்கவுள்ளனர் என்று கேள்விப்பட்டேன். பாரதிய ஜனதாக் கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பொறுப்பிலிருப்பவர்கள் சிலர் இதற்கான தனிமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தருண் விஜயை அழைத்துக் கூட்டம் நடத்தியது, மோடி கவிதைகளை வெளியிட்டது என அவர் சென்ற சில ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார். மோடி எதிர்ப்பில் அன்றாடம் குமுறும் நம் ஊடகங்கள் ,அறிவுஜீவிகள்கூட இச்செயல்களைப்பற்றி ஏதும் சொல்லாமல் அடக்கியே வாசித்தன. ஆகவே ஐயம் உறுதியாகிறது. இது வெறும் வதந்தியாக இருந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் தமிழ் இலக்கியம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சிறுமைகளில் ஒன்றாக இது இருக்கும். இன்று இந்திய இலக்கியச் சூழலில் தமிழுக்கு என எந்த மதிப்பும் கிடையாது. காரணம், நாம் தேசிய அளவில் முன்னிறுத்தும் படைப்பாளிகள் பெரும்பாலும் எவரும் இலக்கியப்பெறுமதி கொண்டவர்கள் அல்ல. அகிலன்,நா.பார்த்தசாரதி, சிவசங்கரி முதல் பாமா, பெருமாள் முருகன் வரை. ஆனால் அவ்வரிசையிலேயே கூட இறுதியாகச் சேர்க்கப்பட வேண்டியவரான வைரமுத்து ஞானபீடம் பெறுவார் என்றால் தமிழிலக்கியச் சூழல் தன்னைத்த்தானே அவமதித்துக்கொள்வதாகவே பொருள்படும். இது ஏன் நிகழ்கிறது என்று நாம் பார்க்கவேண்டும். இங்கே சமநிலையும் நேர்மையும் கொண்ட இலக்கிய விமர்சனம் இல்லை. வைரமுத்து ஒரு நல்ல படைப்பாளி அல்ல என அறியாத இலக்கியவாசகன் இல்லை. ஆனால் அவரைப்பற்றி அப்படி தெளிவாக மதிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு நல்ல விமர்சனக் கட்டுரை தமிழிலக்கிய சூழலில் இருந்து எழுதப்பட்டிருக்காது. அந்த மதிப்பீடுகள் செவிச்சொற்களாகவே சுழன்றுவரும். ஆனால் அசோகமித்திரன் பற்றியும் சுந்தர ராமசாமி பற்றியுமெல்லாம் பக்கம் பக்கமாக வசைகளும் நிராகரிப்புகளும் எழுதப்பட்டிருக்கும். அரிதாகவே நல்லசொற்கள் தென்படும். ஏனென்றால் நல்ல இலக்கியத்தை, அழகியல்மரபை நிராகரிக்கும் தெருமுனை அரசியல் எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கும் இலக்கியவாதிகளுக்கும் எதிராக சலிக்காமல் எழுதிக்குவித்திருப்பார்கள். இலக்கியத்திற்குள் இருக்கும் உள்குத்துகள் மற்றும் காழ்ப்புகளால் இலக்கியவாதிகளாலும் அவை எழுதப்பட்டிருக்கும். ஆனால் தமிழின் மையஓட்டமான அதிகார முகங்கள் பற்றி ஆழமான அமைதியே இருக்கும்.ஏன் வைரமுத்து குறித்து எதுவும் எழுதப்படுவதில்லை? ஏனென்றால் பொதுவாக தமிழ்ச்சூழலில் இலக்கியவாதிகளின் ஆவேசமெல்லாம் அதிகாரமேதுமில்லாத அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களை நோக்கியே திரும்பியிருக்கும். வைரமுத்து போன்ற அதிகாரத்திற்கு அணுக்கமானவர்களைப்பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. அந்த அதிகாரம் கும்பலதிகாரமாக இருந்தாலும் அப்படியே. உதாரணம், இன்குலாப் இவ்வருடச் சாகித்ய அக்காதமி விருதுபெற்றதற்கான எதிர்வினைகள். சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச் சிற்றிதழ்சார் இலக்கியமரபு இன்குலாபை ஓர் இலக்கியவாதியாக கருதியதில்லை. எந்த எழுத்தாளரும் அவரைப்பற்றி பேசியதில்லை. அவரே அதைப்பற்றி கசந்து கூறியிருக்கிறார். இப்போதும் அவருடைய கவிதையை தனிப்பேச்சில் ஏற்றுக்கொள்ளும் இலக்கியவாதியோ வாசகனோ இல்லை ஆனால் அவருக்கு சாகித்ய அக்காதமி கொடுக்கப்பட்டபோது நானறிந்து லட்சுமி மணிவண்ணனும் நானும் மட்டுமே எதிர்வினையாற்றினோம். மற்றவர்களின் நிலைபாடு ‘எதற்கு வம்பு’ என்பதே. வசைக்கும்பலைக் கண்ட அச்சமே காரணம். இந்த தயக்கத்திலிருந்தே வைரமுத்து போன்றவர்கள் மேலெழுந்து செல்கிறார்கள். அவருக்கு இங்கிருப்பவர்களின் இடமென்ன இயல்பென்ன என நன்றாகவே தெரியும். ஆகவே, வேறுவழியில்லாமல் என் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன். இவ்விருது அளிக்கப்பட்டால்கூட தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழல் அந்தரங்கமாக முணுமுணுத்துக்கொள்ளுமே ஒழிய வாய்திறந்து எதிர்ப்பைப் பதிவுசெய்யப்போவதில்லை. என் குரல் அகிலனுக்கு அளிக்கப்பட்ட ஞானபீடத்திற்கு எதிராக எழுந்த சுந்தர ராமசாமியின் குரலுக்கு ஒரு சமகாலநீட்சி என சிலரேனும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். வைரமுத்து தமிழின் வளமான இலக்கியமரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத்தமிழிலக்கியத்தின் முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொதுவாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்று கருதப்படும் மொழியமைதி, வடிவ ஒருமை, அந்தரங்கநேர்மை, நுண்மடிப்புகள் கொண்டது அல்ல. செயற்கையாக செய்யப்பட்டவை அவை. ஞானபீடம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளான மூத்தபடைப்பாளிகளுக்கே இங்கு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. பிற இந்தியமொழிகளில் அவ்விருதைப்பெற்றவர்களின் பெரும்பாலானவர்கள் இந்திய இலக்கிய மேதைகள். அவ்வரிசையில் வைரமுத்து தமிழின் பிரதிநிதியாக வைக்கப்படுவாரென்றால் அது தமிழிலக்கியச்சூழலை சிறுமைசெய்வதாகவே அமையும். தமிழிலக்கியத்தையே அவரைக்கொண்டு பிறர் மதிப்பிட ஏதுவாகும். ஆகவே இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய முயற்சி. இது ஓர் அமைப்பு ஒருவருக்கு விருது அளிக்கிறது என்னும் தனிநிகழ்வு அல்ல. ஞானபீடம் தமிழின் ஒரு சித்திரக்குள்ளரை இந்தியாவின் பேருருவப் படைப்பாளிகளின் வரிசையில் நிற்கவைத்து தமிழில் இவ்வளவே இலக்கியம் உள்ளது, தமிழுக்கு இதுவே தரம் என்று சொல்கிறது என்பதே இவ்விருதின் உண்மையான அர்த்தம் . தமிழை மட்டுமல்ல ஞானபீடம் தன்னைத்தானேகூட இதன் வழியாக மட்டம்தட்டிக்கொள்கிறது. சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச்செல்கிறார் கி.ராவுக்கு ஞானபீடம் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் என நான் எழுதியபோது, அதற்கு கல்வித்துறையின் சிறிய ஆதரவு இருந்தால்கூடப்போதும் என்றபோது, தமிழ்ச்சூழலில் இருந்து சிறிய அளவில்கூட ஆதரவு எழவில்லை. இலக்கியவாதிகள்கூட குரலெழுப்பவில்லை. அதற்குப்பின்னாலிருப்பது இத்தகைய அரசியல் கணக்குகள், சாதிக்கணக்குகள். என்ன துயரம் என்றால் உள்ளே பல்வேறு அதிகார விளையாட்டுக்களுக்கு உடன்பட்டு இந்தமுயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களே வெளியே இலக்கியக்காவலர்களாகப் பேசிக்கொண்டும் இருப்பார்கள். இதில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் பெயர்களையும் வெளிக்கொண்டுவந்து இவர்களின் தரமென்ன என்று இலக்கியவாசகர்கள் முன் வெளிப்படுத்தவேண்டும். இவர்கள் தமிழுக்கு இயற்றிய அநீதி என்ன என்று அடுத்த தலைமுறை உணரும்படிச் செய்யவேண்டும் அனைத்துக்கும் மேலாக ஒன்றைச் சொல்லிக்கொள்வேன், இலக்கிய மதிப்பு என்பது அமைப்புகளின் அடையாளங்களால் அமைவதல்ல. ஞானபீடம் என்ன நோபல் கூட எவரையும் இலக்கியவாதியாக நிலைநாட்டுவதில்லை. அகிலனின் மதிப்பு இந்திய இலக்கியத்தில் என்ன? ஏன் தமிழில் அவருடைய இடம் என்ன? வைரமுத்து தமிழின் முகம் அல்ல என மிக எளிதில் வலுவான சில கட்டுரைகள் வழியாக தேசிய அளவிலேயே இலக்கியவாசகர்களிடம் நிறுவிவிடமுடியும். இதனால் அவருக்குக் கிடைப்பது இலக்கியத்துடன் சம்பந்தமற்ற ஒரு தற்காலிகப்புகழ் மட்டுமே. உண்மையான சோகம் என்பது இதன்மூலம் இந்தியாவின் பொதுவாசகனிடம் உள்ள தமிழைநோக்கிய இழிவான நோக்கு உறுதிப்படுத்தப்படும் என்பதும் , இவ்விருது வாழும் முன்னோடிகளை அவமதிப்பதாக ஆகும் என்பதும் மட்டுமே வைரமுத்து சிறந்த பாடலாசிரியர். நல்ல கவிஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் தமிழ்நவீன இலக்கியச் சூழலின் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி அல்ல. அதிகார அமைப்புகளினூடாகச் சென்று அவர் இவ்வங்கீகாரத்தைப் பெறுவார் என்றால் அது தமிழுக்கு இழிவு. இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், அதன்பொருட்டு கருத்துத்தெரிவிக்கும் துணிவுமுள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பை ஆங்கிலத்தில் எழுதி ஞானபீட அமைப்பின் செயலருக்கு அனுப்பவேண்டும். அதிகார விளையாட்டுக்களை இலக்கியம் எளிதில் கடக்க முடியாது. ஆனால் தமிழிலக்கியச்சூழலின் எதிர்ப்பை மீறியே இவ்விருது அளிக்கப்பட்டது என்பதைப் பதிவுசெய்வோம். இத்தருணம் கடந்தால் நம் தலைமுறைகள் முன் சிறுமையுடன் நின்றிருப்போம். https://www.jeyamohan.in/105208/
  14. தற்போதய அதிகார அரசியலுக்கு முன்னதான ஐரோப்பிய நாடுகளினிடையே அதிகார சமநிலை நிலவியதாக கூறுகிறார்கள், ஒவ்வொரு பெரிய அதிகார சக்திகளுக்கெதிராக வரலாற்றில் மற்றய நாடுகள் ஒருங்கிணைந்து அந்த பலசமனிலையினை உருவாக்கியுள்ளது இரண்ட்டாம் உலக யுத்தத்தின் பின்னர், பலச்சமனிலை அதிகார அரசியலுடன் இணைந்து காணப்பட்டாலும் பனிப்போரிற்கு பின்னரான காலகட்டத்தில் பலச்சமனிலைக்கு பதிலாக அதிகார அரசியல் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில் உக்கிரேன் இரஸ்சிய போரில் மீண்டும் இரஸ்சியாவிற்கெதிராக பலச்சமனிலை உருவாகியிருந்தது. ஆனால் தற்போதய ஈரான் யுத்தம் அதனை முற்றாக குழப்பியுள்ளது, ஜேர்மன் அதிபர் அமெரிக்க அதிபரின் இரஸ்சியாவிற்கெதிரான பொருளாதார தடை தொடர்பில் தனது அதிருப்தியினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரானிற்கெதிராக மற்ற ஐரோப்பிய நாடுகள் அணிதிரளவில்லை, ஆனால் மத்திய கிழக்கில் நிலவி வந்திருந்த அதிகார அரசியலில் ஒரு பெரிய அதிர்ச்சிகரமான தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தன்னிச்சையாக இந்தனை எதிர்கொள்ளும் நிலை ஒரு புதிய பலச்சமனிலையினை மத்திய கிழக்கில் உருவாகியுள்ளது, அது எதிர்காலத்தில் மத்திய கிழக்கில் ஒரு பனிப்போராக உருவாகலாம் அல்லது இஸ்ரேல் ஈரானிற்கெதிராக அணுவாயுதத்தினை பாவித்தாலும் ஆச்சரியப்பட தேவை இருக்காது என கருதுகிறேன்.
  15. வணக்கம் வாத்தியார் . ........! இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா ஆண் : ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு புட்டு புட்டு சொரா புட்டு தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா பெண் : ஹோ கட்டு கட்டு ஒரம் கட்டு முத்தமிட்டு மல்லு கட்டு ஜல்லி கட்டு போல முட்டு ஓ பாப்பையா ஆண் : கட்டு கட்டு புல்லு கட்டு கன்னுக்குட்டி கன்ன கட்டு அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு ஓ பாப்பம்மா பெண் : வரவா தரவா என் வெக்கத்த விட்டு புட்டு ஆண் : ஹேய் வாடி வாடி வாடி வாடி பட்டாஸ் பாக்கெட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் ஒத்த ராக்கெட்டு ஹே பெண் : ஹேய் வாடா வாடா வாடா வாடா சூப்பர் மார்கெட்டு வாங்கிகிறேன் வாங்கிகிறேன் பம்பர் டிக்கெட்டு ஆண் : ஹே பல்லு மொளைச்சா அட புட்டி பாலு புள்ளைக்கு அந்த வகையில் நான் யோகக்காரண்டி பெண் : ஹே பல்ல உடைப்பேன் அட சொல்லும் படி நீ கேளு அத்து மீறினா நான் ஏடாகுடம்டா ஆண் : ஹே மிசையில மண்ணு பட்டா கோழையின்னு பேரு வரும் மிசையில பொண்ணு பட்டா வீரம் தானடி பெண் : பொட்டபுள்ள வெக்கபட்டா பூமி மேல கண்ணு படும் கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா கண்ணே முடும்டா ஆண் : ஹேய் வாடி வாடி வாடி வாடி சைனா சிக்லெட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் ஜப்பான் ஜாக்கெட்டு பெண் : ஹேய் வாடா வாடா வாடா வாடா வாட்டர் பாக்கெட்டு காத்திருக்கு காத்திருக்கு காலி பக்கெட்டு பெண் : தன்னம் தனியா அட கொல்லையில தென்னமரம் கள்ளு எறக்கு அட போத வரும்டா ஆண் : ஹேய் ஒத்தையிலதான் அட காய்ச்சிருக்கு நெல்லிமரம் கில்லி பறிச்சா அடி கண்ணீர் விடுமா பெண் : வாழமரம் பழுத்திருக்கு பாரத்தில சரிஞ்சிருக்கு சாஞ்சாலும் சாஞ்சுபுடும் தாங்கிக்கொள்ளடா ஆண் : ஆலமர விழுதிருக்கு ஆடிக்கால பொழுதிருக்கு ஆசையில காத்திருக்கு உன்ன தொடத்தான் ஆண் : வாடி வாடி வாடி வாடி வாடி வாடி வாடி வாடி பிஞ்சு கேரட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் லண்டன் லாக்கெட்டு பெண் : ஐ ஐயைய வாடா வாடா வாடா வாடா ஒண்டே கிரிக்கெட்டு ஆடிபுட்டா காலி ஆகும் ரெண்டு விக்கெட்டு ஹோய்.......! --- ஹே கட்டு கட்டு கீர கட்டு ---
  16. தென்றலே வாராயோ இன்பசுகம் தாராயோ ........ படம் : வாழ்விலே ஓர் நாள் ........சிவாஜி & ஜி . வரலட்சுமி .......! 😍
  17. நகைசுவைக்காணொளியாக போட்டிருக்கிறார்கள், ஆனால் நிலமை மோசமாக போகிறதோ என தெரியவில்லை!
  18. வீதியோரம் . மலர் . ......... 11. புத்தமதத்தவர்களுக்கு புனிதமான போயாதினம். இல்லறத்தைத் துறந்த கௌதமன் சொல்லறமாகிய ஞானத்தை பெற்றதாக கொண்டாடும் தினம். இன்று மாலையிலேயே சந்திரன் பூரண சந்திரனாய் முழுப் பிரகாசத்துடன் வானில் வலம் வரும் பௌர்ணமி தினம். அதிகாலையிலேயே அயல் கிராமத்தவர் வந்து விநோதனையும் மணிமேகலையையும் அலங்கரிக்கும் பொருட்டு அழைத்துச் சென்றுவிட்டனர். அந்த புத்தவிகாரையும் காகிதப்பூக்களாலும் வெளிச்சக்கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கு. அன்று கடையில் வருபவர்க்கெல்லாம் இலவசமாக சைவ, அசைவ உணவுகள்,குளிர்பானங்கள் மற்றும் மிதமான மதுவகைகள் எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தபடியால் அந்தப் பொறுப்பு முழுவதையும் அந்தப் பெண்கள் இருவரும் மற்றும் இளைஞனும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அண்ணாச்சியும் தகவல் தெரிந்து தனது குடும்பத்துடன் வந்து கலந்து கொள்கிறார். யுகேந்திரன், சுஜிதா, அயலவர்கள் மற்றும் விகாரையைச் சேர்ந்த மாணவர்கள் என எல்லோரும் கூடி தங்கள் தங்களுக்கென ஒவ்வொரு வேலைகளையும் பொறுப்பெடுத்து மிக நேர்த்தியாக செய்துகொண்டிருக்கின்றனர்.அங்கிருந்து கடைவரை வீதியோரங்களில் எல்லாம் வண்ண வண்ண ரிசு பேப்பர்கள் முக்கோணமாய் கத்தரித்து கயிறுகளில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.கூடவே வெளிச்சக்கூடுகளும். கம்பங்களில் குலையுள்ள வாழைகளாலும் தென்னம் பாலைகளாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன.ஒலிபெருக்கியில் இரைச்சலின்றி மென்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ், சிங்களப்பாடல்கள் ஒலிக்கின்றன.வண்ணங்களாலான டியூப் லைட்டுகளும் ஒளிவீசுகின்றன. அதிகாலையிலேயே மணமக்களை அழைத்துச் சென்றபடியால் இந்த ஆரவாரமெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. காலை 10:00 மணியளவில் விகாரையினுள் அந்தப் பிரமாண்டமான பொன்னிறப் பகவான் புத்தரின் முன் தண்ணீர் தாம்பாளத்தில் தாமரைப்பூக்கள் நிறைந்திருக்க , தீபங்கள் ஒளிவீசிக்கொண்டிருக்க விஷேசமாக வருகை தந்திருந்த வணக்கத்துக்குரிய பிக்குமார்கள் எல்லோரும் கையில் விசிறிகளுடன் வரிசையாய் வெண்துகில் விரித்த ஆசனங்களில் கம்பீரமாய் வீற்றிருக்கின்றார்கள். வெளியே வெடிச்சத்தங்கள் அதிர, தாரை தப்பட்டைகள் முழங்க பட்டுத் துணிப் பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு பென்னம் பெரிய யானைகள் வருகின்றன. அவற்றின் மேலிருக்கும் அம்பாரியில் விநோதனும் மணிமேகலையும் சர்வ அலங்காரங்களுடன் அமர்ந்திருக்கின்றனர்.கடந்த சில வருடங்களாக அந்த விகாரையிலோ, அயல் கிராமங்களிலோ இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறவில்லையாதலால் அனைவரும் திரண்டு வந்து தங்கள் வீட்டு விஷேசமாக இதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த யானைகள் தங்கள் துதிக்கையைத் தூக்கி ஒருமுறை பிளிறிவிட்டு முன்னங்கால்களை மடித்து மணமக்கள் இறங்குவதற்கு வாகாய் அமருகின்றன. அவர்களும் அம்பாரியை விட்டிறங்கி செங்கம்பளத்தின் மீது நடந்து வர இருமருங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூமாரி பொழிய அவர்கள் மடாலயத்துக்குள் நுழைகின்றனர். அங்கு சென்று பகவான் புத்தரை வணங்கி விட்டு அங்கு வீற்றிருந்த கௌரவ பிக்குமார்களை சேவித்து நிற்க அவர்களும் கைகளை உயர்த்தி ஆசீர்வதிக்கின்றனர். விநோதன் பொன் சரிகைகளுடன் கூடிய சாம்பல்நிற பட்டுவேட்டியை பஞ்சகச்சமாய் முன்னால் பல சுருக்குகள் வைத்தபடி இருக்க உடுத்தியிருக்கிறான். கால்களில் வெள்ளை சாக்ஸ்கள், இடுப்பில் அகலமான தோல்பெல்ட் அதில் பொன்னாலான பொத்தான்கள்.நடுவில் பெரிய சதுரமான நவரத்தினங்கள் பதித்த கொழுக்கி மின்னுகிறது. பக்கத்தில் அலங்கரித்த உறையுடன் போர்வாள் ஒன்று. உடலில் கருப்பு நிறத்தில் பொன் பூக்களுடன் அரை கோட் போன்ற அன்றைய அரசர்காலத்து உடை, அதனுடாக மார்பின் உரோமங்கள் தெரிய தலையில் சிறிய வில்லை படுக்க வைத்ததுபோல் அலங்காரமான பட்டுக் கிரீடம். கை மணிக்கட்டில் அகலமான கங்கணம். விரல்களில் இரத்தினக்கற்கள் பதித்த கணையாளிகள், கழுத்தில் இரு பெரிய பதக்கம் சங்கிலிகள்.அதில் ஒன்று இடுப்புக்கும் கீழே இறங்கி அடிவயிறு வரை தொங்குகிறது. மணிமேகலையும் பொன்னிறப் பூக்கள் பொறித்த வெள்ளை நைலான் சேலை அணிந்திருக்கிறாள். அது கண்ணாடிபோல் உடலின் வனப்பை காட்டுகின்றது. வெள்ளை ப்ளவுஸிலும் பொன் பூக்கள் அவைகள் தெரியும்படி மெல்லிய துணியில் அணிந்த கவர் முழங்கையில் இருந்து இறங்கி சிறிது கீழே நீண்டிருக்கு. கழுத்துக்கு கீழே ப்ளவுஸ் நீள்வட்டமாய் இறங்கி இருப்பதாலும், விலாப்பக்கங்கள் நெருக்கமாய் இறுக்கி இருப்பதாலும் மார்பகங்கள் மேற்பக்கமாய் விம்மி புடைத்திருக்கின்றன. பார்ப்பவர் கண்களைக் கவரும் பொருட்டு மார்புகளின் செழுமையான மேற்பகுதிகளில் பொன்னாலான பூ ஸ்டிக்கர்கள் மின்னுகின்றன. முழுநிலவின் பாதியை முகில் மறைத்திருப்பதைப் போல் மார்பெழிலின் பாதியில் துகில் படர்ந்திருக்கு. பவுனாலான கொண்டைப்பூக்களில் இருந்து பிரியும் சிறு சங்கிலிகள் காதுகளின் இரு பக்கத்தாலும் வழிந்து வந்து தலையின் நேர் வகிட்டில் ஏறி ஊர்ந்து முன் நெற்றியில் தங்க அதில் இருந்து சிறு பதக்கம் ஒன்று முன் நெற்றியில் தொங்கிகின்றது. மூன்று சங்கிலிகளுடன் கூடிய கழுத்தில் ஒட்டியபடி இருக்கும் ஒரு நெக்லெஸ். மற்றது சரிந்து மார்பில் விழுந்து அங்கே வசதியாய் தங்குகின்றது. அடுத்தது இடைத் தாவணியையும் தாண்டி கீழிறங்கி அவளது ஆவணியுடன் லாவணி பாட இன்னொன்று நூலிடையின் கீழே இறங்கி வர அதன் நவரத்தினங்கள் பதித்த பெரிய பதக்கம் அடிவயிற்றின் கீழ் வந்து மேகலையாய் அசைகின்றது. அந்த ப்ளவுசுக்கும் சேலைக்கும் இடையில் உள்ள செழுமையான இடையை மறைக்க மனமின்றி முந்தானையும் இடதுபக்கமாய் ஒதுங்கி அங்கவஸ்திரம்போல் மேலேறி தோள்வழியாக பின்னால் மறைகின்றது. இரு கைகளின் வளையல்களில் இருந்து சிறு சங்கிலிகள் புறங்கை வழியாக இறங்கி “தவழ்ந்தோடும் மழலைகளைப் பிடித்திழுக்கும் தாய்போல்” மோதிரங்களைப் பற்றியிருக்கின்றன. அவளது கைகளில் வெண்ணிற மலர்களினாலான பெரிய மலர்க்கொத்து இருக்கின்றது...... மலர் . ......... 💫 11.
  19. அண்டத்தில் பல சூரிய குடும்பங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள் நம்ம வான் ஆராய்சியாளர்கள் அங்கு ஒரு சூரிய குடும்பத்தில் எங்கள் பூமியைப் போன்று ஒரு கோளும் உள்ளதையும் கண்டுள்ளார்கள். அக்கோளில் 40 மாதங்கள் ஒரு வருடம்போல் தெரிகிறது. அங்கு இந்தியர்களே முதலில் குடியேறுவார்கள் என ஏராளன் அவர்களும் தற்போது கண்டுபிடித்ததுள்ளார்.😂
  20. சீமானை விடுங்கோ…ஒரு தோல்வி பட இயக்குனர்…சீசனுக்கு சீசன் வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் நாலம்தர அரசியல்வாதி…. தமிழ் திரை உலகின் முடி சூடா மன்னன், 41 பேர் நெரிசலில் சாகும் அளவுக்கு சனம் கூடும் ஒரு நபர்…. அவரையே டெல்லிக்கு கொள்கை எதிரி வரை ஓட விட்டிருக்கிறார்கள்… அது மட்டும் அல்லாமல், தூசண துரைக்கும், சீமானுக்கும் சபரீசன் மூலம் சில பெட்டிகளை கொடுத்து அவர்களை கொண்டே விஜையை வெளுக்கிறார்கள். திருட்டு திமுக எண்டால் சும்மாவா😂
  21. சொந்தக்கட்சிக்காரனுக்கே இப்படிச் செய்யும் திமுக மாற்றுக்கட்சிக்காரனுக்கு அதுவும் திமுகவை கடுமையாக எதிர்க்கும் சீமானுக்கு எதிராக என்ன செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆட்சியில் இருக்கும் போது வழக்குகளைப் போட்டு அடக்கப் பார்க்கும் ஊழல்வழக்குககைளப் போட முடியாதவர்கள் மேல் பாலியல் வழக்கைச் சோடித்து அவதூறைப் பரப்பி அடக்கப்பார்க்கும் . சவுக்கு சங்கரைக் கூப்பில்வைத்த தீமுக தேர்தல் தேpதி அறிவித்தவுடன் சவுக்கு மீண்டும் வருகிறார் என்பதிலிருந்து புரிகிறது.
  22. வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து! 14 Mar 2026, 6:43 PM கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஞானபீட அமைப்பு வைரமுத்துவுக்கு ஞான பீட விருதை இன்று அறிவித்துள்ளது. சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு தமிழில் 1975-ல் அகிலனுக்கும், 2002-ல் ஜெயகாந்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து வைரமுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு ஞானபீட விருது கிடைத்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த விருதைவிட, தமிழ் மொழிக்குக் கிடைத்த மகுடமாகவே கருதுகிறேன்” என்றார். கடந்த காலங்களில் ஞானபீட விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது குறித்துத் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை குறிப்பிட்டு பேசிய வைரமுத்து, “தகுதியுள்ள படைப்புகள் இருந்தும் காலதாமதம் ஆனது வருத்தமளித்தாலும், இப்போது வழங்கப்பட்டிருப்பது நீதி நிலைநாட்டப்பட்டதாக உணர்கிறேன். இந்த விருது என் பேனாவுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே என் எழுத்துக்கள் இயங்கும்” என்றார். இந்நிலையில் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். ” தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது! காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது! தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்துவை வாழ்த்துகிறேன்!” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வைரமுத்து 7 முறை தேசிய விருதுகளையும், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதையும், மற்றும் மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/jnanpith-award-for-vairamuthu/
  23. https://web.facebook.com/photo/?fbid=26386733690956285&set=pcb.26386735687622752 காலில் மண்படாமல் சமயகிரியை செய்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்.
  24. சண்டை தொடங்கிய நேரம் எங்கேயும் எப்போதும் பறப்போம் அடிப்போம் என்று அமெரிக்கா கூறியதே பொய்யா கோப்பாலு.
  25. கடந்த வருடம் சீனா சோளம் எதையும் வாங்கவில்லை என்றும் இதனால் பல பில்லியன் நஸ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.