All Activity
- Past hour
-
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
எப்படி கண்டுபிடித்தார்கள்?
-
ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
நானும் அரக்கபறக்க ஓடியாந்த பெரிய கதையாக உள்ளதே. இன்னொருநாள் பார்ப்போம்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
உண்மையாவா? உங்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை ஏன் உலகத்திற்கு தெரியாமல் போய்விட்டது?
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கையில் சில நாட்களுக்கு முன்பு நடை பெறவிருந்த பாகிஸ்தான் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இன்று இலங்கையில் நடைபெறவிருந்த அவுஸ்திரேலியா நெதர்லாந்துக்கு இடையிலான போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டது. மழை எத்தனை போட்டிகளை பாதிக்க போகுதோ??
-
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயம்!
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயம்! 05 Feb, 2026 | 11:13 AM (ஸ்டெப்னி கொட்பிறி) மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. “இந்திய கலாசார உறவுகளுக்கான சபை”யின் விசேட அழைப்பின் பேரில் டில்வின் சில்வா தலைமையிலான குழு இன்று வியாழக்கிழமை (5) இந்தியாவின் புதுடில்லி நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. இந்த குழு இந்தியாவின் குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் விஜயம் றே்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த குழு, இந்தியாவின் விவசாயம், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவுடன் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ஜானக அதிகாரி, பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதன், மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு பிரதிநிதி ஹேமதிலக கமகே மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுஷானீ ஆகிய தோழர் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/237855
-
ஏராளன் started following நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி , மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயம்! , துணைவேந்தர்கள் நியமனம்: இடைக்கால தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் - அடுத்து என்ன நடக்கும்? and 3 others
-
துணைவேந்தர்கள் நியமனம்: இடைக்கால தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் - அடுத்து என்ன நடக்கும்?
துணைவேந்தர்கள் நியமனம்: இடைக்கால தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் - அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம்,LokBhavanTamilNadu/Facebook படக்குறிப்பு,ஆளுநர் ஆர்.என்.ரவி (கோப்புப் படம்) கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 5 பிப்ரவரி 2026, 03:19 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சட்டத்திருத்தங்களின் செயல்பாட்டுக்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை புதன்கிழமையன்று (பிப்ரவரி 4) உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வில், 'இந்த வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டது ஏன்?' எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேற்கண்ட வழக்கைக் காரணம் காட்டி, 'துணைவேந்தர் நியமனத்துக்கு மாநில அரசு தேடுதல் குழுவை அமைத்திருப்பதை சட்டத்துக்கு முரணானது' என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருந்தார். இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் அடுத்து என்ன நடக்கும்? தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் மாநில அரசால் நடத்தப்படும் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 'வேந்தர்' என்ற இடத்தில் 'அரசு' என மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பினார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது. வழக்கின் முடிவில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் காரணமாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் வந்தது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆண்டு மே மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு இடைக்கால தடை விதித்தது. 'போதிய வாய்ப்பை வழங்கவில்லை' - உச்ச நீதிமன்றம் பட மூலாதாரம்,Getty Images உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்ஷி மற்றும் விபுல் பஞ்சோலி அமர்வு விசாரித்தது. "சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பாக, மாநில அரசுக்குப் போதுமான வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும்" என, வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி தலைமை நீதிபதி அமர்வு அல்லது பொருத்தமான அமர்வில் பட்டியலிடப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், 'சம்பந்தப்பட்டவர்களின் வாதங்களைக் கேட்க வேண்டும்' என உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் முடிவு வெளியில் வரும் வரை எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படக் கூடாது என உத்தரவிட விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "அதுவரை எந்த நியமனங்களையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை" எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை ஆறு வாரங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. முன்னதாக இதே வழக்கை மேற்கோள் காட்டி பிப்ரவரி 2 ஆம் தேதியன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 'விதிகளுக்கு மாறான குழுக்கள்' - ஆளுநர் ஆர்.என்.ரவி பட மூலாதாரம்,LokBhavanTamilNadu/Facebook கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உள்பட சில மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக தேடுதல் குழுவை அமைத்தும் சில பல்கலைக்கழகங்களில் தேடுதல் குழுவின் பதவிக் காலத்தை நீட்டித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 2 அன்று தமிழ்நாடு லோக் பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இவ்வாறு கூறப்பட்டிருந்தது. 'துணைவேந்தர் பதவிக்கு நியமனம் செய்யப்படும் நபர்களின் பெயர்ப் பட்டியலை பரிந்துரை செய்வதற்கான தேடுதல், தேர்வுக் குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இருக்க வேண்டும்' என, 2018 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளில் கூறப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறையை உச்ச நீதிமன்றம் (பேராசிரியர் ஸ்ரீஜித் எதிர் டாக்டர் ராஜஸ்ரீ வழக்கு) உறுதி செய்துள்ளதாகக் கூறியுள்ள ஆளுநர், 'ஜனவரி 31 ஆம் தேதி எஸ்.மோகன் எதிர் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தரின் செயலர் வழக்கிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக அமைக்கப்படும் தேடுதல் குழுவின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மாநில பல்கலைக்கழக சட்டங்களின்படி அதன் வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். இதனைக் குறிப்பிட்டுள்ள ஆர்.என்.ரவி, 'தேடுதல் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பேர் பட்டியலில் இருந்து ஒருவர் துணைவேந்தர் பதவியில் வேந்தரால் நியமிக்கப்படுகிறார்' எனக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் பல்கலைக்கழக சட்டத் திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் அமர்வு இடைக்கால தடை விதித்ததை ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கோள் காட்டியுள்ளார். 'உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள் சட்டத்துக்கு முரணானவை' என, லோக் பவன் தெரிவித்துள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுக்களின் காலத்தை வரும் மார்ச் 21 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ள ஆர்.என்.ரவி, "பெரியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு யுஜிசி பிரதிநிதி இல்லாமல் ஜனவரி 24, 27 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானதாக உள்ளதாக லோக்பவன் கருதுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இறுதி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் வரை துணைவேந்தர் தேர்வு மற்றும் நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு அரசை அவர் வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. யுஜிசி விதிகளை அமல்படுத்த முடியுமா? படக்குறிப்பு,கோப்புப் படம் "அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இடைக்கால தடையை நீதிபதிகள் ரத்து செய்துள்ளதாக கருதுகிறோம்" எனக் கூறுகிறார், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சுரேஷ். துணைவேந்தர் தேடுதல் குழுவை மாநில அரசு அமைத்திருப்பது குறித்துப் பேசிய சுரேஷ், "ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனி சட்ட விதிகள் உள்ளன. அதன்படியே துணைவேந்தர் தேர்வுக்கான குழுவை அமைக்க முடியும்" என்கிறார், இந்தக் குழுவில் ஆளுநர் பிரதிநிதி, மாநில அரசின் பிரதிநிதி, சிண்டிகேட் அல்லது செனட் பிரதிநிதி என மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. சில பல்கலைக்கழக சட்டங்களில் 'ஆளுநர் பிரதிநிதி' என்ற வார்த்தையே இல்லாமல் உள்ளதாகக் கூறும் சுரேஷ், "இதில் தங்கள் தரப்பு பிரதிநிதியை சேர்க்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு கூறியது. அவ்வாறு நியமிக்க வேண்டும் என்றால் பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளை மாற்ற வேண்டும்" என்கிறார். அவரது கூற்றுப்படி, "ஓர் ஆசிரியருக்கான தகுதி குறித்து பல்வேறு விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ளது. இதனை அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனால், ஆசிரியர் நியமனங்களை மாநில அரசு தான் மேற்கொள்கிறது". இதே கருத்தை முன்வைக்கும் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, "மாநிலப் பட்டியலில் கல்வி இருந்தபோது, பல்கலைக்கழக சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதனை மாற்றாமல் மானியக் குழுவின் விதிகளை செயல்படுத்த முடியாது" என்கிறார். 1976 ஆம் ஆண்டு மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டதை மேற்கோள் காட்டி இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இதனை ஆளுநர் மாளிகை புரிந்து கொள்ளத் தவறுவதாகவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். சபாநாயகர் அப்பாவு கூறியது என்ன? பட மூலாதாரம்,MAppavu/Facebook படக்குறிப்பு,சபாநாயகர் அப்பாவு (கோப்புப் படம்) ஆளுநரின் கருத்து தொடர்பாக, செவ்வாய் கிழமையன்று (பிப்ரவரி 3) செய்தியாளர் சந்திப்பில் சில விளக்கங்களை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அவர் பேசும்போது, "பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளின்படியே துணைவேந்தர் நியமனம் செய்யப்படுகிறார். இதற்கும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" எனக் கூறியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்பதற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் நீதிமன்ற தீர்ப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அந்தந்த மாநில அரசுகளின் உரிமை என நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. இதனை ஆளுநர் படித்துப் பார்க்க வேண்டும்" எனவும் அப்பாவு தெரிவித்தார். 'பல்கலைக்கழகங்களுக்கு கடும் பாதிப்பு' தமிழ்நாட்டில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக பல்கலைக்கழக பணிகளில் தொய்வு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மூன்று பேர் கொண்ட துணைவேந்தர் கமிட்டி ஒன்று செயல்படுகிறது. இந்தக் கமிட்டியை பல்கலைக்கழக சிண்டிகேட் குழு முடிவு செய்கிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக உயர் கல்வித்துறை செயலர், கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுகிறார். மற்ற இருவரும் சிண்டிகேட் குழுவில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். "இவர்கள் மூவரும் வெவ்வேறு இடங்களில் உள்ளனர். எந்தப் பணியாக இருந்தாலும் மூன்று பேரும் சேர்ந்து கையொப்பமிட வேண்டும். இதனால் பல்கலைக்கழகத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன" என்கிறார், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ். தொடர்ந்து பேசிய அவர், "துணைவேந்தர் இருந்தால் புதிய கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பது, புதிய படிப்புகளுக்கு அனுமதி அளிப்பது, ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் சம்பளத்தில் கையெழுத்திடுவது உள்பட அனைத்து வேலைகளையும் பார்க்க வேண்டும்" என்கிறார். துணைவேந்தர் இல்லாததால் ஆசிரியர், மாணவர், ஆசிரியர் அல்லாத ஊழியர் என அனைவரின் நலன்களும் பாதிக்கப்படுவதாகக் கூறும் அவர், "இணைப்புக் கல்லூரிகளுக்கு பாடப் புத்தகங்கள், தேர்வு ஆகியவற்றை பல்கலைக்கழகம் முடிவு செய்கிறது. துணைவேந்தர் இல்லாததால் இப்பணியில் பாதிப்பு ஏற்படுகிறது" எனக் குறிப்பிட்டார். 'தேடுதல் குழுவை அமைப்பது சட்டவிரோதம்' - பா.ஜ.க தமிழ்நாடு பா.ஜ.க தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் பேசியது. "பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளை மீறி தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கு தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவை அமைப்பது சட்டவிரோதமானவை" என்கிறார். தேடுதல் குழுக்கள் செயல்படுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனவும் ஆளுநர் அதிகார மீறல் செய்வதாக தமிழ்நாடு அரசு வாதிடுவதாகவும் அவர் விமர்சித்தார். ஆளுநரின் நிலைப்பாடு சட்டரீதியாக சரியாக உள்ளதாகக் கூறும் நாராயணன் திருப்பதி, விதிமுறைகளைப் பின்பற்றாமல் தேடுதல் குழுவின் பணி தொடர்ந்தால், இந்த நியமனங்கள் செல்லாதவையாக மாறிவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறு வாரங்களில் உத்தரவு வெளியாகும்போது துணைவேந்தர் நியமனம் தொடர்பான சர்ச்சைகளும் முடிவுக்கு வந்துவிடும்" எனக் கூறுகிறார், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70l2zj524go
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்? பட மூலாதாரம்,US Department of Justice படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன் 4 பிப்ரவரி 2026 ''நான் பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் நபர் அல்ல.. குற்றம் செய்த நபர் மட்டுமே. ஒரு கொலைகாரனுக்கும், ஒர் உணவுப்பொருளை திருடுபவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது இது" என்று 2011-ல் நியூயார்க் போஸ்ட் இதழிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கூறினார். பாலியல் தேவைகளுக்காக ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஜாமீன் கிடைக்காமல் காத்திருந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிர் இழந்தார். ஒரு சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதற்காக அவர் தண்டிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளியாக அவர் பதிவு செய்யப்பட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது. சிறுமிகளை பாலியல் உறவுக்காக பயன்படுத்தும் "பெரிய வலையமைப்பு" ஒன்றை நடத்தினார் என அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். நவம்பர் 2025-ல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 'எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தை' பெருமளவில் அங்கீகரித்தன. அதன் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மசோதாவில் கையெழுத்திட்டார். எப்ஸ்டீன் மீதான குற்றவியல் விசாரணைகள் தொடர்பான அனைத்து கோப்புகளையும் டிசம்பர் 19-க்குள் வெளியிடுமாறு நீதித்துறைக்கு அது உத்தரவிட்டது. ஜனவரி 30 அன்று, அமெரிக்க நீதித்துறை மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை வெளியிட்டது. அதில் ஒரு வீடியோவில், "நீங்கள் உங்களை ஒரு டெவில் என்று நினைக்கிறீர்களா?" என கேட்கப்பட்டபோது, "என்னிடம் ஒரு நல்ல கண்ணாடி இருக்கிறது" என்று எப்ஸ்டீன் கூறுவது பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட அந்த இரண்டு மணி நேர முழு வீடியோவில், அவர் நேர்காணல் செய்பவரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைக் காண முடிகிறது. ஆனால் அந்தக் கேள்விகளைக் கேட்பது யார், அந்த வீடியோ எப்போது, எதற்காகப் படமாக்கப்பட்டது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச், ''வெள்ளிக்கிழமை ஆவணங்கள் வெளியிடப்பட்டது, மிகவும் விரிவான ஆவண அடையாளம் காணுதல் மற்றும் மறுஆய்வு செயல்முறை முடிவுக்கு வந்ததை குறிக்கிறது." என்றார் ஆனால், முறையான காரணங்கள் இன்றி நீதித்துறை பல ஆவணங்களை மறைத்து வைத்திருப்பதாகப் போராட்டக்காரர்களும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த சிலரும் வாதிடுகின்றனர். அமெரிக்க அதிகாரிகளால் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்பட்ட தகவல்கள், மறைந்த எப்ஸ்டீன் மற்றும் அவரது உயர்மட்ட நட்பு வட்டாரத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளன. பட மூலாதாரம்,Getty Images எப்ஸ்டீனின் கடந்தகாலம் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த எப்ஸ்டீன், 1970-களின் நடுப்பகுதியில் அங்குள்ள டால்டன் என்ற தனியார் பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் கற்பித்தார். அவர் பல்கலைக்கழகத்தில் இந்த பாடங்களைப் படித்திருந்தாலும், பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. அவரது மாணவர் ஒருவரின் தந்தை எப்ஸ்டீனின் திறமையைக் கண்டு ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக, 'பியர் ஸ்டியர்ன்ஸ்' என்ற வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியின் மூத்த பங்குதாரரிடம் எப்ஸ்டீனை அவர் அறிமுகப்படுத்தினார். நான்கே ஆண்டுகளில் அங்கு எப்ஸ்டீன் ஒரு பங்குதாரராக உயர்ந்தார். 1982-க்குள் அவர் 'ஜே எப்ஸ்டீன் அண்ட் கோ' என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள வாடிக்கையாளர்களின் சொத்துக்களை நிர்வகித்தது. இது அவருக்கு உடனடி வெற்றியைக் கொடுத்தது. விரைவிலேயே எப்ஸ்டீன் தான் சேர்த்த செல்வத்தைச் செலவிடத் தொடங்கினார். புளோரிடாவில் ஒரு மாளிகை, நியூ மெக்ஸிகோவில் ஒரு பண்ணை மற்றும் நியூயார்க்கிலேயே மிகப்பெரியது எனக் கூறப்படும் ஒரு தனியார் வீடு ஆகியவற்றை வாங்கினார். அதனைத் தொடர்ந்து, பிரபலங்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பழகத் தொடங்கினார். "எனக்கு ஜெஃப்பை 15 ஆண்டுகளாகத் தெரியும். அருமையான மனிதர். அவருடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். என்னைப் போலவே அவருக்கும் அழகான பெண்களைப் பிடிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு, அவர்களில் பலர் இளவயதுடையவர்கள்" என்று 2002-ல் எப்ஸ்டீன் பற்றிய ஒரு கட்டுரைக்காக நியூயார்க் இதழிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். "இதில் சந்தேகமே இல்லை" ஜெப்ரி தனது சமூக வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்" என்றும் டிரம்ப் அப்போது குறிப்பிட்டிருந்தார். ஆனால், எப்ஸ்டீன் முதன்முதலில் கைது செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2000-களின் தொடக்கத்தில் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகப் பின்னாளில் டிரம்ப் கூறினார். எப்ஸ்டீன் விவகாரத்தில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என அவர் கூறுகிறார். "தனது கிளப்பில் வேலை செய்த பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டதால்", பல ஆண்டுகளுக்கு முன்பே எப்ஸ்டீனை டிரம்ப் அங்கிருந்து வெளியேற்றிவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. தனது 'மார்-ஏ-லாகோ' கடற்கரை கிளப் ஸ்பாவில் பணிபுரிந்த இளம் பெண்களை எப்ஸ்டீன் "திருடிச் சென்றார்" என்றும், அதன் பிறகு அவரோடனான உறவு முடிந்துவிட்டது என்றும் டிரம்ப் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1997ஆம் ஆண்டு டிரம்ப் உடன் ஜெஃப்ரி எப்ஸ்டீன் முக்கியப் பிரமுகர்களுடன் நட்பு டிரம்பைத் தவிர, இன்னும் பல முக்கியப் பிரமுகர்களுடன் எப்ஸ்டீன் நட்பு பாராட்டியுள்ளார். ஆனால், அவருடன் நட்பாக இருந்த காரணத்தினாலேயே அவர்கள் அனைவரும் தவறு செய்தவர்கள் என்று அர்த்தமல்ல. 2002-ல், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், நடிகர்கள் கெவின் ஸ்பேசி மற்றும் கிறிஸ் டக்கர் ஆகியோரை ஒரு பிரத்யேக தனியார் விமானத்தில் எப்ஸ்டீன் ஆப்பிரிக்காவிற்கு அழைத்துச் சென்றார். 2003-ல், திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுடன் இணைந்து நியூயார்க் இதழை வாங்க அவர் முயற்சி செய்து தோல்வியடைந்தார். அதே ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு 3 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தார். முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோர், எப்ஸ்டீன் குறித்த விசாரணையில் சாட்சியம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். ஜெஃப்ரி எப்ஸ்டீன் பிரிட்டன் அரசியல்வாதி பீட்டர் மண்டெல்சனுடனும் நட்பாக இருந்தார். இந்த நட்பிற்காக தான் வருந்துவதாக மண்டெல்சன் தெரிவித்தார். இந்த உறவின் காரணமாக, 2025-ல் அமெரிக்காவிற்கான தூதர் பதவியையும் அவர் இழந்தார். பின்னர் மண்டெல்சன் தொழிலாளர் கட்சியிலிருந்தும் விலகினார். தற்போது ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, மண்டெல்சன் மீது பிரிட்டன் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர் 2009-ல் வர்த்தகச் செயலாளராக இருந்தபோது, அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களை எப்ஸ்டீனுக்குக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்தபோதிலும், எப்ஸ்டீன் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைக்கவே முயன்றார். அவர் பொது நிகழ்ச்சிகளையும் உணவகங்களில் நடக்கும் விருந்துகளையும் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. மிஸ் ஸ்வீடன் பட்டம் வென்ற ஈவா ஆண்டர்சன் டுபின் மற்றும் பதிப்பாளர் ராபர்ட் மேக்ஸ்வெல்லின் மகள் கிஸ்லேன் மேக்ஸ்வெல் போன்ற பெண்களுடன் அவர் பழகினார். ஆனால் அவர்களைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. டிஃப்பனி அண்ட் கோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரோசா மங்க்டன், 2003-ல் வேனிட்டி ஃபேர் இதழுக்கு அளித்த பேட்டியில், எப்ஸ்டீன் "மிகவும் புதிரானவர்" மற்றும் "மர்மமானவர்" என்று கூறினார். "அவரை உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைப்பீர்கள், ஆனால் ஒரு வெங்காயத்தின் தோலை உரிப்பது போல அடுத்தடுத்த அடுக்குகளைப் பிரிக்கும்போது, அடியில் இன்னும் வியக்கத்தக்க விஷயங்கள் இருக்கும். நீங்கள் எப்ஸ்டீனிடம் எதைப் பார்க்கிறீர்களோ அது உண்மை அல்ல" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,US Department of Justice தண்டனை மற்றும் ஒப்பந்தம் 2005-ஆம் ஆண்டு, 14 வயது சிறுமியின் பெற்றோர் புளோரிடா காவல்துறையிடம் ஒரு புகாரை அளித்தனர். எப்ஸ்டீன் தனது பாம் பீச் இல்லத்தில் வைத்து தங்கள் மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர்கள் கூறினர். அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, வீடு முழுவதும் சிறுமிகளின் புகைப்படங்கள் இருப்பதை காவல்துறை கண்டறிந்தது. சிறுமிகளுக்கு எதிரான எப்ஸ்டீனின் அத்துமீறல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதாக மியாமி ஹெரால்டு இதழ் செய்தி வெளியிட்டது. "இது 'ஒரு தனிப்பட்ட நபர் இன்னொருவர் மீது சுமத்திய குற்றம்' அல்ல," என்று பாம் பீச் காவல்துறை அதிகாரி மைக்கேல் ரெய்டர் அந்த நாளிதழுக்குத் தெரிவித்தார். "இது 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஒருவருக்கு எதிராகக் கொடுத்த புகார். மேலும் அந்தச் சிறுமிகள் அனைவரும் அடிப்படையில் ஒரே மாதிரியான தகவல்களையே கூறினர்"என்றும் அவர் குறிப்பிட்டார். எப்ஸ்டீன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, 2007-ல் நியூயார்க் இதழுக்காக எழுதிய கட்டுரையில், "அவர் அந்தச் சிறுமிகளைப் பற்றி ஒருபோதும் ரகசியம் காத்ததில்லை" என்று கட்டுரையாளர் மைக்கேல் வுல்ஃப் குறிப்பிட்டார். "அவருக்குப் பிரச்னைகள் தொடங்கிய ஒரு கட்டத்தில், அவர் என்னிடம் பேசும்போது, 'எனக்குச் சிறுமிகளைப் பிடிக்கும்' என்றார். அதற்கு நான், 'ஒருவேளை நீங்கள் ' இளம் பெண்களைப் பிடிக்கும்' என்று சொல்லலாமே' என்றேன்," என வுல்ஃப் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், 2008-ல் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எப்ஸ்டீனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதன் மூலம், அவருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தரக்கூடிய கடுமையான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் தப்பினார். அதற்குப் பதிலாக அவருக்கு 18 மாதச் சிறைத் தண்டனை கிடைத்தது. அந்தத் தண்டனையின் போது கூட, வாரத்தில் ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தனது அலுவலகத்திற்குச் சென்று வர "பணி நிமித்தமான விடுப்பு" அவருக்கு வழங்கப்பட்டது. 13 மாதங்களுக்குப் பிறகு அவர் நிபந்தனையுடன் வெளியே வந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன்–வின்ட்சர், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். அரசு வழக்கறிஞர் அலெக்சாண்டர் அகோஸ்டா, எப்ஸ்டீனின் குற்றங்களின் அளவை மறைக்கும் வகையிலும், இதில் தொடர்புடைய மற்ற சக்திவாய்ந்த மனிதர்கள் அல்லது பாதிக்கப்பட்ட கூடுதல் நபர்கள் உள்ளார்களா என்பது குறித்த எப்.பி.ஐ விசாரணையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலும் இந்த ஒப்பந்தத்தைச் செய்ததாக மியாமி ஹெரால்டு செய்தி வெளியிட்டது. அந்தப் பத்திரிகை இதனை "நூற்றாண்டின் மிகப்பெரிய ஒப்பந்தம்" என்று விவரித்தது. இந்த ஊழல் தொடர்பாக ஜூலை 2019-ல் அகோஸ்டா ராஜினாமா செய்தார். 2008 முதல், நியூயார்க் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் எப்ஸ்டீன் 'நிலை 3' பட்டியலில் சேர்க்கப்பட்டார். இது அவர் மீண்டும் குற்றம் செய்ய அதிக வாய்ப்புள்ளவர் என்பதைக் குறிக்கும் வாழ்நாள் அடையாளமாகும். ஆனால், தண்டனைக்குப் பிறகும் எப்ஸ்டீன் தனது சொத்துக்களை பராமரித்து வந்தார். டிசம்பர் 2010-ல், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூன்றாவது மகனான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் (அப்போது இளவரசர் ஆண்ட்ரூ என்று அறியப்பட்டவர்), நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நவம்பர் 2019-ல் பிபிசி-க்கு அளித்த நேர்காணலில், 1999 முதல் எப்ஸ்டீனைத் தனக்குத் தெரியும் என்றும், 2010-ல் அந்த நட்பை முறித்துக் கொள்வதற்காகவே தான் நியூயார்க் சென்றதாகவும் ஆண்ட்ரூ கூறினார். அங்கு இருந்தபோது எப்ஸ்டீன் வீட்டில் தங்கியதற்காகத் தான் வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், ஆண்ட்ரூ முன்பு ஒப்புக்கொண்டதை விட அதிக காலம் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தார் என்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த 2011-ஆம் ஆண்டின் மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளால், 2025-ல் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் பறிக்கப்பட்டன. எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய விர்ஜினியா ராபர்ட்ஸ் (பின்னர் விர்ஜினியா ஜூஃப்ரே என அறியப்பட்டவர்), தான் 17 வயதாக இருந்தபோது 2000-களின் தொடக்கத்தில் ஆண்ட்ரூவுடன் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினார். ஆண்ட்ரூ இதனை திட்டவட்டமாக மறுத்தார். மேலும், லண்டனில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது குறித்து தனக்கு எதுவும் நினைவில்லை என்றும் கூறினார். ஆனால் ஆண்ட்ரூ 2022-ல் அவர் ஜூஃப்ரேயிடம் பல மில்லியன் டாலர்களை வழங்கி ஒரு சமரசத்திற்கு வந்தார். ஆண்ட்ரூ தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஜூஃப்ரே தாக்கல் செய்திருந்த வழக்கைத் தொடர்ந்து இந்தச் சமரசம் ஏற்பட்டது. நியூயார்க்கில் கைது பாரிஸிலிருந்து தனது தனி விமானத்தில் திரும்பி வந்தபோது, 6 ஜூலை 2019 அன்று நியூயார்க்கில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். எப்ஸ்டீனின் குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படும் அவரது நியூயார்க் வீட்டை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பறிமுதல் செய்ய முயன்றதாகத் தகவல்கள் தெரிவித்தன. எப்ஸ்டீன் எப்போதும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றே கூறி வந்தார். மேலும் தம்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுத்ததையடுத்து, அவர் நியூயார்க்கின் பெருநகர சீர்திருத்த மையத்தில் வைக்கப்பட்டிருந்தார். ஜூலை மாதம் அவருக்குக் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டு சிறிது காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இது குறித்து சிறை அதிகாரிகளோ அல்லது அவரது வழக்கறிஞர்களோ அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஜூலை 31 அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, அவர் ஒரு வருடம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்பதும், 2020 கோடைக்காலத்திற்கு முன்பாக விசாரணை நடக்காது என்பதும் உறுதியானது. ஆனால், வழக்கை தாமதப்படுத்தாமல் விரைவாக நடத்துவது பொது நலனுக்கு உகந்தது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். எப்ஸ்டீன் ஒருபோதும் விசாரணையை எதிர்கொள்ளவில்லை. மேக்ஸ்வெல் விசாரணை எப்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு, அவரது முன்னாள் காதலி கிஸ்லேன் மேக்ஸ்வெல் கவனத்துக்கு வந்தார் எப்ஸ்டீன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதற்காக பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிந்தும் சிறுமிகளை அனுப்பியது மற்றும் அவர்களைத் தயார்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஜூலை 2020-ல் அவர் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 2021-ல், நியூயார்க் நீதிமன்றத்தில் அவர் மீதான ஆறு குற்றச்சாட்டுகளில் ஐந்து நிரூபிக்கப்பட்டன. இதில் பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்காக கடத்தியது உள்ளிட்ட மிகக் கடுமையான குற்றச்சாட்டும் அடங்கும். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டில் படித்த மேக்ஸ்வெல் தான், பில் கிளிண்டன் மற்றும் ஆண்ட்ரூ போன்ற பல செல்வந்தர்களையும் சக்திவாய்ந்த நண்பர்களையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேக்ஸ்வெல் மற்றும் எப்ஸ்டீன் இடையிலான காதல் சில ஆண்டுகளே நீடித்தாலும், அதன்பிறகு நீண்ட காலம் அவர் எப்ஸ்டீனுடன் இணைந்து பணியாற்றியதாக நண்பர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தண்டனை உறுதியான பிறகு மேக்ஸ்வெல் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். "ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு" என்று அவர் கூறினார். எப்ஸ்டீனின் பாம் பீச் மாளிகையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள், மேக்ஸ்வெல்லை அந்த வீட்டின் மேலாளராக விவரித்தனர். அவர் ஊழியர்களைக் கவனிப்பது, நிதி விவகாரங்களைக் கையாளுவது மற்றும் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளைச் செய்து வந்துள்ளார். 2003-ல் வெளியான வேனிட்டி ஃபேர் இதழின் கட்டுரையில், மேக்ஸ்வெல் தனது சம்பளம் பெறும் ஊழியர் அல்ல என்றும், மாறாக தனது "சிறந்த நண்பர்" என்றும் எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார். வழக்கு விசாரணையின் போது, எப்ஸ்டீனின் பாலியல் தேவைகளுக்காக மேக்ஸ்வெல் சிறுமிகளை கண்டறிந்து, அவர்களைத் தயார் செய்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், எப்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு அவரது குற்றங்களுக்காகத் தன்னை ஒரு பலிகடாவாக ஆக்குகிறார்கள் என்று மேக்ஸ்வெல் தரப்பு வாதிட்டது. தண்டனை உறுதியான பிறகு மேக்ஸ்வெல் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். "ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு ," என்று அவர் கூறினார். "ஆனால் இன்றைய நாள் எப்ஸ்டீனைப் பற்றியது அல்ல. இன்று, எனக்கு தண்டனை வழங்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் என்னிடம் நேரடியாக பேசுவதற்குமான நாள். உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான். நீங்கள் அனுபவித்த வலிக்கு நான் வருந்துகிறேன். எனது தண்டனையும் சிறைவாசமும் உங்களுக்கு ஒரு நிம்மதியைத் தரும் என்று நம்புகிறேன்," என அவர் குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேக்ஸ்வெல்லின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கக் கூடாது என்று அவர்கள் வாதிட்டனர். ஆனால், அந்த மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இறுதியில் நிராகரித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62vy172znvo
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
ஒரு பெரும் பண்பாட்டுச் சிதைப்பை அமைதியாக செய்து முடித்திருக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம். ஈழத்தமிழர்களின் இன இருப்பு வழிபாட்டிடங்கள் பண்பாடு என பலதளங்களிலும் ஒரு பெரும் அழிவுச்சுட்டியை ஶ்ரீலங்காவின் அரசும் அதன் கட்டமைப்புகளான தொல்லியல் திணைக்களம் வன வளத்திணைக்களம் என ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு ஈழத்தமிழர்கள் மீதும் அவர்களின் மரபு பண்பாட்டுக்கூறுகள் மீதும் திணித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தானும் முந்தியிருக்கிறது யாழ்ப்பாண மாவட்ட செயலகம்.
-
தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுச் சிதைப்பு திட்டமிட்டு நடைபெறுகிறதா?
கூட்டம் கூட்டமாக கண்டிய நடனமாடித்திரிகிறது யாழ்ப்பாணச்சமூகம் ஒரு பெரும் பண்பாட்டுச் சிதைப்பை அமைதியாக செய்து முடித்திருக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம். ஈழத்தமிழர்களின் இன இருப்பு வழிபாட்டிடங்கள் பண்பாடு என பலதளங்களிலும் ஒரு பெரும் அழிவுச்சுட்டியை ஶ்ரீலங்காவின் அரசும் அதன் கட்டமைப்புகளான தொல்லியல் திணைக்களம் வன வளத்திணைக்களம் என ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு ஈழத்தமிழர்கள் மீதும் அவர்களின் மரபு பண்பாட்டுக்கூறுகள் மீதும் திணித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தானும் முந்தியிருக்கிறது யாழ்ப்பாண மாவட்ட செயலகம். கடந்த 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு உலகக் கிண்ணம் எடுத்துவரப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட உலக்கிண்ணத்திற்கு யாழ் மாவட்ட செயலகத்தால் அமோகமான வரவேற்பளிக்கப்பட்டது. கண்டிய சிங்கள நடனம் , சிங்களவர்களின் பாணியிலான காவடி நடனம் என யாழ்ப்பாணத்தின் பண்பாட்டிற்கு சிங்கள முலாம் பூசி மகிழ்ந்திருந்தனர். யாழ் மாவட்ட செயலாளரும் அதிகாரிகளும்! ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரம் என்று கொண்டாடப்படும் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் சார்பில் ஏன் சிங்கள நடனம் வரவேற்பிற்கு பயன்படுத்தப்பட்டது? யாழ்ப்பாணத்தில் பண்பாட்டுக் கூறுகளுக்கு பஞ்சமா? வரவேற்பை வழங்கக்கூடிய கலைகள் யாழ்ப்பாணத்தில் இல்லையா? ஒரு தமிழ் மாவட்ட செயலாளர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்து யாழ்ப்பாண பண்பாட்டின் முகமாக சிங்கள நடனங்களை காட்சிப்படுத்தினார்? அரசு சார்பில் மாவட்ட செயலாளருக்கு இப்படியான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதா? ஏற்கனவே திட்டமிட்டு பாரிய குடிப்பரம்பல் மாற்றம் செய்யப்படப்போகிறது என தமிழ் மக்கள் கொதித்துக்கொண்டிருக்கும் ஒரு காலப்பகுதியில் ஏன் இப்படியான ஒரு செயற்பாடு அரங்கேற்றப்பட்டது? ஒரு இனத்தை அழிப்பதற்கு அதன் பண்பாட்டை அழித்தால் போதுமென்பார்கள், இனம் தானாக தன்னை அழித்துக்கொள்ளும் அல்லது திரிபடைந்துகொள்ளும். ஆக யாழ்ப்பாணத்தை இலக்கு வைத்து இப்படி ஒரு சதித்திட்டம் அரங்கேற்றப்படுகிறதா? அல்லது இந்த சிங்கள நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றும் அரசுக்கான தனது விசுவாசத்தை இப்படி ஒரு வகையில் காட்ட முற்படுகிறாரா யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்? இப்படி ஒரு ஆபத்தான திரிபை அரச கட்டமைப்புகள் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திக்கொண்டிருக்க உலகக் கிண்ணத்தை நல்லூர் தேவஸ்தானம் தனது எல்லைக்குள் இருந்து அப்புறப்படுத்தியது சரியா? பிழையா? என்று வேலிச்சண்டையிட்டு வன்மங்களை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறது யாழ்ப்பாணச்சமூகமும் அதன் ஊடகக்கலாசாரமும். உலகில் எங்கு சென்றாலும் தமிழரின் பண்பாடு என கேட்க யாழ்ப்பாணத்தை கைகாட்டுவார்கள், ஆனால் யாழ்ப்பாணத்தில் பண்பாட்டு வரவேற்பென கண்டிய சிங்கள நடனத்தை ஆடிக்காட்டியிருக்கிறார் யாழ் மாவட்ட செயலாளரும் அவரது நிருவாகமும்! ஏற்கனவே தமிழ்த்தேசிய எழுச்சியின் அடையாளமாக பலரின் உணர்வூற்றில் மையப்படுத்தப்படும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் கோலாகலமாக சிங்களச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு கண்டிய நடனமாடிக்களித்த நிலையில் அந்த சூடு ஆறுமுன்பே மாவட்ட செயலகமும் ஆடிக்காட்டியிருப்பது ஏதோ ஒரு மறைமுகமான செய்தியை ஈழ்த்தமிழ் சமூகத்திற்கு சொல்லி நிற்கிறது. பண்பாடு அழிக்கப்பட்டால் இனம் பாழ்விழுந்துபோம் என்ற அடிப்படை அறிவை எப்போது இந்த சமூகம் புரிந்துகொள்ளப்போகிறது. https://ibctamil.com/article/jaffna-community-performs-kandyan-dance-1770130957
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
மக்களின் வேட்கை, கௌரவமாக வாழ்வது, theoretically அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதை எடுத்தாளவேண்டிய தலைமைகள் இப்படி வருடாந்த கொண்டாட்டங்கள், வெற்று சுலோகங்களை தமது அரசியல் நலனுக்காக மட்டும் பாவித்துவருவதும், நம்பியிருந்த மக்களை பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற மனநிலைக்கு கொண்டுவந்த தலைமைகளது செயற்பாடுகள் மேலும் மக்கள் வாழ்வை எதிர் மறையிலேயே( அவர்கள் வாழ்வை அல்ல) செல்லல வைக்குமேயொழிய எந்த முன்னேற்றத்தையும் காணப்போவதில்லை. இப்போதைய நிலையில் தாயகத்தில் படித்து அங்கு தொழில் செய்யலாம், சுய வியாபாரங்களைச் செய்யலாம் என்ற மன நிலையை அங்குள்ள படித்துக்கொண்டிருக்கும் இளவயதினரிடைநே துளிர் விட தொடங்கியுள்ளதை அங்கு சென்ற போது அவதானித்தேன். அதையும் கெடுத்து அவர்களையும் வெளிநாடு நோக்கி படையெடுக்க வைத்து டயஸ் போரா தமிழ் தேசியத்தை கட்டியெழுப்புவது (சிறு திருத்தம் கொத்து ரொட்டி தமிழ் தேசியம் என்றும் அழைக்கலாம்😂) ஒரு சிலருக்கு வாழ்வை வளமாக்கவும் உதவுமேயொழிய எதுவும் நடக்கப்போவதில்லை.
-
ஆர்ட்டெமிஸ்-2: மீண்டும் நிலவை நோக்கி பயணிக்கும் மனிதகுலம்
ஆர்ட்டெமிஸ்-2: மீண்டும் நிலவை நோக்கி பயணிக்கும் மனிதகுலம் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, ஆர்ட்டெமிஸ்-2 குழுவினர்: இடதுபுறம் கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன்புறம் ரெய்ட் வைஸ்மேன் (கமாண்டர்), வலதுபுறம் ஜெரிமி ஹன்சென் கட்டுரை தகவல் பல்லப் கோஷ் & ஆலிசன் ஃபிரான்சிஸ் பிபிசி நியூஸ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்திற்குப் பிறகு மீண்டும் மனிதர்கள் நிலவை நோக்கி பயணிக்கும் திட்டத்தை மார்ச் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாசா ஏவக்கூடும். சுமார் 10 நாட்கள் நீடிக்கும் ஆர்ட்டெமிஸ்-2 திட்டம், அதன் விண்வெளி வீரர்களை இதுவரை எவரும் சென்றிராத தூரத்திற்கு விண்வெளியில் அழைத்துச் செல்லும். 1960கள் மற்றும் 70களின் அப்பல்லோ பயணங்களுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் மனிதர்கள் தரையிறங்குவதற்கான ஒரு தளத்தை அமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆர்ட்டெமிஸ்-2 எப்போது ஏவப்படும்? மிகச் சமீபத்தில் சாத்தியப்படக்கூடிய ஏவுதல் தேதி மார்ச் 6. அந்த மாதத்தின் முதல் பாதியில் மேலும் நான்கு வாய்ப்புகளும், ஏப்ரல் முதல் வாரத்தில் ஐந்து கூடுதல் வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளன: மார்ச்: 6, 7, 8, 9 & 11 ஏப்ரல்: 1, 3, 4, 5 & 6 பிப்ரவரியில் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறு, 'வெட் டிரஸ் ரிஹர்சல்' எனப்படும் ஏவுதலுக்கு முந்தைய சோதனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. ஏவுதள கோபுரத்தை ராக்கெட்டுடன் இணைக்கும் உம்பிலிகல் இணைப்பிலிருந்து ராக்கெட் எரிபொருள் கசிந்ததால் இந்தச் சோதனை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதைத் தாண்டி, நிலவு அதன் சுற்றுப்பாதையின் பொருத்தமான பகுதியில் இருக்கும் வரை திட்டமிடுபவர்கள் காத்திருக்க வேண்டும். எனவே ஏவுதலுக்கான காலம் அதற்கேற்ப தீர்மானிக்கப்படுகின்றன. நடைமுறையில், இது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் ராக்கெட்டை சரியான திசையில் செலுத்தக்கூடிய சுமார் ஒரு வார காலத்தையும், அதைத் தொடர்ந்து ஏவுவதற்கான வாய்ப்புகள் இல்லாத சுமார் மூன்று வார காலத்தையும் உருவாக்குகிறது. ஆர்ட்டெமிஸ்-2 குழுவினர் யார்? ஆர்ட்டெமிஸ்-2வின் நான்கு பேர் கொண்ட குழுவில் நாசா கமாண்டர் ரெய்ட் வைஸ்மேன், விமானி விக்டர் க்ளோவர், திட்ட நிபுணர் கிறிஸ்டினா கோச் ஆகியோர் உள்ளனர். இரண்டாவது திட்ட நிபுணராக கனேடிய விண்வெளி முகமையின் ஜெரிமி ஹன்செனும் இதில் இருப்பார். அமெரிக்க கடற்படையில் 27 ஆண்டுகள் பணியாற்றிய மூத்த வீரரான வைஸ்வேன், ஒரு விமானி மற்றும் பொறியாளர். அவர் மேரிலாந்தின் பால்டிமோரில் வசிக்கிறார். அவர் 2009இல் நாசாவால் விண்வெள் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். 2014இல் எக்ஸ்பெடிஷன் 41 திட்டத்திற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் விமானப் பொறியாளராகப் பணியாற்றினார். க்ளோவர், 2013இல் நாசா விண்வெளி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் இதற்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-1 திட்டத்தின் விமானியாகப் பணியாற்றினார். அவர் மூன்று முதுகலை பட்டங்களைப் பெற்றுள்ளார். கலிஃபோர்னியாவில் பிறந்த அவருக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். மிச்சிகனில் வளர்ந்தவரான கோச், 2013இல் விண்வெளி வீரர் ஆனார். அவர் 2019இல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றினார். ஒற்றை விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் முற்றிலும் பெண்களைக் கொண்ட முதல் விண்வெளி நடையிலும் பங்கேற்றார். ஹன்சென் போர் விமானியாகப் பணியாற்றிய பிறகு 2009இல் கனேடிய விண்வெளி முகமையில் சேர்ந்தார். நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர் பயிற்சிக்குத் தலைமை தாங்கிய முதல் கனேடியரான இவர்தான், நிலவு பயணத்தில் இடம்பெறும் முதல் கனேடியரும்கூட. நிலவுப் பயணத்தின்போது ஆர்ட்டெமிஸ் குழுவினர் என்ன செய்வார்கள்? நாசாவின் பிரமாண்டமான ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் என்றழைக்கப்படும் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலன் ஆகியவற்றுடன் மனிதர்களை நிலவை நோக்கி அனுப்பும் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பாக சுற்றுப்பாதையில் நுழைந்தவுடன், ஓரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விண்வெளி வீரர்கள் சோதிப்பார்கள். நிலவில் தரையிறங்குவதற்குச் சாதகமான வகையில் விண்கலனை திருப்புவது மற்றும் வரிசைப்படுத்துவதை பயிற்சி செய்ய, பூமியின் சுற்றுப்பாதையில் ஓரியன் விண்கலனை கைமுறையாக (Manual) இயக்குவதும் இதில் அடங்கும். பின்னர் அவர்கள் ஓரியனின் உயிர் காக்கும் அமைப்பு, உந்துவிசை, சக்தி, வழிசெலுத்தல் அமைப்புகளைச் சரிபார்க்க நிலவுக்கு அப்பால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு புள்ளிக்குச் செல்வார்கள். குழுவினர் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவோராகவும் செயல்படுவார்கள். அவர்கள் தொலைதூர விண்வெளியில் இருந்து தரவுகள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவார்கள். அவர்கள் எடையற்ற நிலையில் ஒரு சிறிய அறையில் வேலை செய்வார்கள். பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட கதிர்வீச்சு அளவு அங்கே அதிகமாக இருக்கும், ஆனால், அது பாதுகாப்பானதாகவே இருக்கும். பூமிக்குத் திரும்பும்போது, விண்வெளி வீரர்கள் வளிமண்டலத்தின் வழியாக ஒரு கரடுமுரடான பயணத்தை எதிர்கொள்வார்கள். அதோடு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுவார்கள். ஆர்ட்டெமிஸ்-2 நிலவில் தரையிறங்குமா? இல்லை. இந்தத் திட்டம் ஆர்ட்டெமிஸ்-3 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதாகும். ஆர்ட்டெமிஸ்-3 திட்டத்தை ஏவுவது 2028க்குள் நடைபெறும் என்று நாசா கூறுகிறது. ஆனால், நிபுணர்கள் இது மிகவும் சாத்தியமற்ற ஒரு காலக்கெடு என்கிறார்கள். விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும் விண்கலன் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இது ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் லேண்டர் அல்லது ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் வடிவமைத்த விண்கலனாக இருக்கும். அமெரிக்க நிறுவனமான ஆக்சியம் தயாரிக்கும் புதிய விண்வெளி சீருடைகளும் இன்னும் தயாராகவில்லை. ஆர்ட்டெமிஸ்-3 இறுதியாக ஏவப்படும்போது, விண்வெளி வீரர்கள் நிலவின் தென் துருவத்திற்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு, நிலவில் மனிதர்களின் நீடித்த இருப்பைக் கொண்டிருப்பதே இதன் நோக்கமாகும். ஆர்ட்டெமிஸ்-4 மற்றும் 5 நிலவைச் சுற்றி வரும் கேட்வே என்ற சிறிய விண்வெளி நிலையத்தை உருவாக்கத் தொடங்கும். அதைத் தொடர்ந்து அதிக நிலவு தரையிறக்கங்கள், கேட்வேவில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்படுவது, மேற்பரப்பில் செயல்படும் புதிய ரோபோடிக் ரோவர்கள் ஆகியவை இடம்பெறும். நிலவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீண்ட காலத்திற்கு மக்கள் வாழ்வதையும், வேலை செய்வதையும் தொடர்வதை உறுதி செய்வதற்குப் பல நாடுகள் ஈடுபடுத்தப்படும். நிலவுத் திட்டம் கடைசியாக எப்போது முன்னெடுக்கப்பட்டது? கடைசியாக மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்பட்ட திட்டம் அப்பல்லோ 17 ஆகும். இது 1972 டிசம்பரில் நிலவில் தரையிறங்கியது, அந்த மாதத்தின் பிற்பகுதியில் பூமிக்குத் திரும்பியது. ஒட்டுமொத்தமாக, 24 விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் பயணம் செய்துள்ளனர். அவர்களில் 12 பேர்தான் அதன் மேற்பரப்பில் நடந்துள்ளனர். இவையனைத்தும் அப்பல்லோ திட்டத்தின்போது நடந்தவை. நிலவுக்குச் சென்ற 24 பேரில், ஐந்து பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர். அமெரிக்கா முதலில் 1960களில் நிலவுக்குச் சென்றது. முதன்மையாக சோவியத் யூனியனை வீழ்த்தி தனது புவிசார் அரசியல் மற்றும் தொழில்நுட்ப மேலாதிக்கத்தை நிலைநாட்டவே சென்றது. அந்த இலக்கு எட்டப்பட்டவுடன், அரசியல் ஆர்வமும் பொது மக்களின் ஈடுபாடும் குறைந்தன. அதோடு, எதிர்கால நிலவுத் திட்டங்களுக்கான நிதியும் குறைந்தது. ஆர்ட்டெமிஸ் திட்டம் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் விருப்பத்தில் இருந்து உருவானது. ஆனால், இந்த முறை புதிய தொழில்நுட்பம் மற்றும் வணிகக் கூட்டாண்மைகளைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட நீண்டகால இருப்புக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் பிற நாடுகளுக்கு உள்ளதா? மற்ற பல நாடுகள் 2030களில் மக்களை நிலவுக்கு அனுப்பும் லட்சியங்களைக் கொண்டுள்ளன. ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் பிந்தைய ஆர்ட்டெமிஸ் திட்டங்களில் சேரவுள்ளனர், ஜப்பானும் இடம்பெறவுள்ளது. சீனா தனது சொந்த விண்கலனை உருவாக்கி வருகிறது. 2030க்குள் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் முதல் தரையிறக்கத்தை மேற்கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளது. ரஷ்யா தொடர்ந்து விண்வெளி வீரர்களை மேற்பரப்புக்கு அனுப்பி 2030 மற்றும் 2035க்கு இடையில் ஒரு சிறிய தளத்தை உருவாக்குவது பற்றிச் சிந்தித்து வருகிறது. இருப்பினும், தடைகள், நிதி அழுத்தங்கள், தொழில்நுட்ப பின்னடைவுகள் காரணமாக அதன் கால அட்டவணை மிகவும் கடினமானது எனக் கருதப்படுகிறது. இந்தியாவும் ஒரு நாள் தனது விண்வெளி வீரர்கள் நிலவில் நடப்பதைக் காணும் லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 2023இல் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான்-3இன் வெற்றிகரமான தரையிறக்கத்தைத் தொடர்ந்து, இந்தியா விண்வெளி ஆய்வு மையம் 2040க்குள் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இது அதன் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கு அப்பால் நகர்த்துவதற்கான ஒரு முயற்சியின் பகுதியாகும். கூடுதல் தகவல்கள்: கெவின் சர்ச் & எமிலி செல்வதுரை - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg5gj50n7rlo
-
நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி
நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி Published By: Vishnu 05 Feb, 2026 | 04:38 AM ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தவகையில் ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பெறுவதனாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களும் வலுப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திரநாளினை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் 04.02.2026 புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் வருடாவருடம் இதேநாளில் எமது போராட்டம் தொடர்சியாக இடம்பெற்றுவருகின்றது. இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாகக் கருதி அதிகாரங்களை முறையாகப் பகிர்ந்தளித்தாருந்தால் இவ்வாறான போராட்டங்களே இடம்பெற்றிருக்காது. ஆனால் நாட்டின் ஆட்சியாளர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பரப்புக்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பது, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்வது, பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பது, வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடுவதென அனைத்து வழிகளிலும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரையோகித்துவந்தனர். இவ்வாறு தமிழர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த காலங்களில் எம்மவர்கள் அகிம்சைவழியில் போராட்டங்களை மேற்கொண்டதுடன், அந்த அகிம்சைவழிப் போராட்டங்கள் பயனற்றுப்போன நிலையில் எமது இளையோர் ஆயுதங்களை ஏந்திப் போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு புள்ளிவிபரத்தை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் 222006 ஏக்கர் காணிகளே வனவளத்திணைக்களத்திடம் காணப்பட்டது. ஆனால் தற்போது வனவளத்திணைக்களத்திடம் 432000 ஏக்கருக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் வன இலாகாவிடம் மாத்திரமுள்ளன. குறிப்பாக்தமிழர் தாயகப் பரப்புகளில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, படையினர் உள்ளிட அரச இயந்திரங்களைப் பயன்படுத்தி மிகப்பாரிய அளவில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எமக்கு நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை. தமிழர்களின் நிலங்கள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டால் அந்த நிலங்களுக்குரிய தமிழ் மக்கள் எங்கு போவது. தமிழர்களுக்கு உதவிகளைச்செய்கின்றோமென ஆட்சியாளர்கள் ஒருபுறம் நாடக நடிகர்களைப்போல செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழர்களின் காணிகளை ஆட்சியாளர்கள் கபளீகரம் செய்கின்றனர். எமது கடற்பரப்புக்களில் எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாத நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துகின்றனர். நில அபகரிப்புக்களின்மூலம் எமது தமிழ் மக்கள் சுதந்திரமாக விவசாயத்தை மேற்கொள்ளமுடியாதநிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துவதுடன், கால்நடை வளர்ப்பாளர்களுக்குரிய மேச்சல் தரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால் நடைவளர்ப்பாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆட்சியாளர்கள் உரிய கவனஞ்செலுத்துவதில்லை. இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் தவறிவருகின்றனர். இவ்வாறாக வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் வாழும் எமது தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் ஆட்சியாளர்களால் துன்பப்படுகின்றனர். தற்போது தமிழர்தாயகப் பரப்பில் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அளவில் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே தமிழர் தாயகப்பரப்பில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இவ்வாறான திட்டமிடப்பட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அங்கு திட்டமிட்டு சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தியதன்மூலம் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை பெரும்பான்மையினத்தவர்களின் ஆதிக்கத்தின்கீழ் தற்போது ஆட்சியாளர் கொண்டுவந்துள்ளனர். ஆட்சியாளர்களின் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களின் அடுத்தகட்ட செயற்பாடுகள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை நோக்கி நகர்கின்றன. எனவே இவ்வாறாக தமிழர்களுக்கு ஆட்சியாளர்களால் அநீதி இழைக்கப்படும்போது நாம் அதற்கெதிராக நீதிக்குரல் எழுப்பாமல் இருக்கமுடியாது. இவ்வாறு தமிழர்கள்மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும்போது, இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் தமிழர்களால் எவ்வாறு பங்கேற்கமுடியும். ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது இவ்வாறாக அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றபோது, தமிழ் மக்கள் அதற்கெதிராக போராடுவதற்காக வீதிக்கு இறங்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே ஆட்சியாளர்கள் தமிழர்களை இந்தநாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கவேண்டும். ஆட்சியாளர்களால் இவ்வாறு பலவழிகளிலும் தமிழர்கள்மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றநிலையில், சிலஅமைச்சர்கள் வேடிக்கையான கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். தமிழ் மக்களுக்கு நன்மைகளைச் செய்வதாகவும், உதவிகளைச் செய்வதாகவும் பாரிய பொய்களைக் கூறிவருகின்றனர். தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் இல்லை. எனவே தமிழ் மக்களுக்குரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளியுங்கள். தமிழர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வைவழங்க முன்வாருங்கள். உரிமைகளை வழங்குங்கள். கடந்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்குங்கள். தமிழ் மக்களை இந்தநாட்டில் சுதந்திரமாகவாழவிடுங்கள். இந்தநாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக இல்லை. ஆட்சியாளர்களால் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதாலேயே இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களால் வீதியில் இறங்கி இவ்வாறான மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப் பரப்பில் தமிழ் மக்கள் தமக்குரிய அதிகாரங்கள், உரிமைகளுடன் எப்போது தன்நிறைவுபெற்று சுதந்திரமாக வாழ்கின்றார்களோ அன்று தான் தமிழ் மக்களுக்கு சுதந்திரநாள் - என்றார். https://www.virakesari.lk/article/237840
-
அந்த... நூறு பேர், யார்?
வாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம். இந்த நூறு பேர் யார்? நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம். நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்காக எழுந்தது அல்ல அந்த நூறு பேரின் முன்னிலையில் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற பயத்தினால் உருவானது. கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய கொள்ளுத் தாத்தாவின் பெயரோ, அவர் வாழ்ந்த விதம் பற்றியோ இன்று நமக்குத் தெரியுமா? அவர் அன்று யாருக்கெல்லாம் பயந்தாரோ, அந்த ஊரும் அந்த மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள்? காலச்சக்கரம் சுழலச் சுழல, ஒரு காலத்தில் மிகப் பெரியதாகத் தெரிந்த பல பிம்பங்கள் இன்று சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன. இன்னும் ஒரு நூறு வருடங்கள் கழித்து நம்முடைய நிலையும் இதுதான். நாம் இன்று யாருக்காகப் பயந்து நம் சந்தோஷங்களைத் தொலைக்கிறோமோ, அன்று அந்த நூறு பேரும் இருக்க மாட்டார்கள் நாமும் இருக்க மாட்டோம். அப்படியிருக்க, இன்றைய பொழுதை மற்றவர்களின் திருப்திக்காகத் தியாகம் செய்வது எவ்வளவு பெரிய அறியாமை? வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்த ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. இதில் நாம் எடுக்கும் முடிவுகளும், நாம் அடையும் வெற்றிகளும், ஏன் நாம் சந்திக்கும் தோல்விகளும் கூட நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும். மற்றவர்களின் கைதட்டலுக்காகவோ அல்லது விமர்சனங்களுக்காகவோ நாம் நம் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் காயப்படுத்தாமல், எவரையும் ஏமாற்றாமல், நம் மனசாட்சிக்கு உண்மையாக வாழ்வதே ஒரு மனிதன் அடையும் ஆகச்சிறந்த வெற்றியாகும். நம்முடைய வாரிசுகள் என்றாவது ஒருநாள் நம் புகைப்படத்தைப் பார்க்கும்போது, “இவர் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்து பயந்து வாழ்ந்தவர்” என்று சொல்லாமல், “இவர் தனக்குப் பிடித்த மாதிரி, யாருக்கும் அஞ்சாமல், மிக நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்” என்று சொல்ல வேண்டும். அதுதான் நாம் விட்டுச் செல்லும் உண்மையான சொத்து. எனவே அன்பானவர்களே, அந்த நூறு பேரின் விமர்சனங்களுக்குச் செவிசாய்க்காமல், உங்கள் மனதின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள். உங்களது தனித்துவமான வாழ்க்கையை முழுமையான மகிழ்ச்சியோடு வாழுங்கள். ஏனெனில், உங்கள் கதையில் நீங்களே நாயகன். Balaji Srinivasan
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
எப்படிவது தமிழ்நாட்டில் பாஜாகவை ஆட்சிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக மலையாள செபஸ்டியான் கொண்டுவந்த தந்திரம் அது தோல்வி அடைந்த மும்பை சிவசேனாவின் கொப்பி.
-
இதுவும் ஒரு தமிழீழ மருத்துவக் கதை தான்…
இதுவும் ஒரு தமிழீழ மருத்துவக் கதை தான்… 1992 கார்த்திகை 23 ஆம் நாள் ஒரு பெரு வீரன் எம்மை விட்டு விதையாகிய நாள். லியோ என்றும் மலரவன் என்றும் நாமம் கொண்ட வேங்கை அந்த மகாவீரன். பசீலன் -2000 என்ற விடுதலைப்புலிகளினால் தமிழீழத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி அணி ஒன்றின் அணித்தலைவன். யாழ்கோட்டை, மணலாறு, முல்லைத்தீவு, கொண்டச்சி, மாங்குளம் சிலாவத்துறை காரைநகர் என்று பல முகாம்களின் வெற்றிக்கு வலுச்சேர்த்த அந்த அணியின் திறன் வாய்ந்த அணித்தலைவன். யாழ் மாவட்டத்தின் மாணவரமைப்புப் பொறுப்பாளர். அப்படி பலவற்றை சொற்களால் அடுக்கி அவன் வீர வரலாற்றை மேலெழுப்பிக் கொண்டே செல்லலாம். மணலாற்றுக் காட்டில் இருந்து 1991 கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி ஆரம்பித்த மாங்குளம் முகாம் மீதான் முற்றுகை மற்றும் கைப்பற்றல் நடவடிக்கைக்காக தனது பீரங்கிகளுடனும் தனது அணியோடும் பயணித்த ஒரு பெரும் பயணத்தை இலக்கியப்படைப்பாக்கி அதற்குள் மக்களின் நடைமுறை வாழ்வியலை, போராளிகளின் வீரதீரங்களை, அவர்கள் படும் வேதனைகளை, பிரிவுகளை, வெற்றிகளை “போருலா” என்று பெயரெடுத்து போர்ப்புதினமாக எமக்குத் தந்த இலக்கிய வீரன். பணியில் சிரத்தையும் தேசம் மீது கடுமையான பாசமும், தமிழீழ மண்மீட்பில் நம்பிக்கையும், அண்ணன் மீது அளவில்லாத நேசமும் கொண்டவர். தனது நண்பர்கள் ஒவ்வொருவராய் வீழ்வது கண்டு துடித்துப்போகும் ஒவ்வொரு தடவைகளிலும் அவரது கரங்களின் ஒன்று இறுகப்பற்றியது துப்பாக்கிப் பிடிகளை. மறுகரம் இறுகப்பற்றிக்கொண்டது எழுத்து எனும் பெரும் ஆயுதத்தை உருவாக்கும் பேனாவை. அதனால் எம் மனங்களில் என்றென்றும் நேசத்துக்குரிய மகாவீரனாகிவிட்டார். 1992 ஆம் வருடம் பலாலி இராணுவமுகாமை சுற்றி இருந்த 150 காவலரண்களை தகர்க்கும் சண்டையை திட்டமிட்ட போது, களமுனையின் ஒரு பகுதி அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது பசீலன் அணியில் இருந்து அரசியல்துறைக்கு பிரிவு மாற்றப்பட்டிருந்தார் மலரவன். அந்த நிலவொளி கூட இல்லாத வெற்று இருட்டுக்குள் சண்டை தொடங்கியது. அதற்குள் இருந்துகொண்டு வெற்றிகளை சுவைத்துக்கொண்டிருந்த எமது அணிகள். பகைவன் தமது நிலைகளை விட்டு ஓடத்தொடங்கினான். பகையணிகளிடம் இருந்து கைப்பற்றும் ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் உடனடியாக பின்னால் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் போராளிகள். அதற்காக விநியோக அணி வெகு சிரமத்தின் மத்தியிலும் தமது உயிரைத் துச்சமென மதித்து ஓடிக்கொண்டிருந்தன. சண்டையணிகளுக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் இந்த அணியை வழிநடாத்துபவனாக மலரவன் ஓடித்திருந்தார். பிரிகேடியர் தமிழ்செல்வனின் கட்டளையை ஏற்று நடப்பதாலோ என்னவோ களமுனையின் முன்னிலைக்கு செல்வதற்கு அவனால் முடியவில்லை. சண்டையணிகளோடு பயணிக்க அனுமதி அவரால் மறுக்கப்பட்டிருந்தது. தன்னுடனே நிற்குமாறு தமிழ்செல்வன் பணித்திருந்தார். பணிக்கப்பட்ட கட்டளையை மீற முடியாது வரும் ஆயுத தளபாடங்களை பின்னணிக்கு பாதுகாப்பாக அனுப்பும் பணியை செய்து கொண்டிருந்தார் மலரவன். அதே நேரம் களமுனையின் பின்னணியில், களமருத்துவர்களை ஒருங்கிணைத்தபடி ஒரு வேங்கை பிரதான மருத்துவநிலையில் இருந்தார். வைத்திய கலாநிதியான சுஜா என்ற அந்த புலிவீரன் விழுப்புண்ணடைந்து வரும் வேங்கைகளின் குருதி மண்ணுக்கு உரமாகிவிடாமலும் அவர்களின் உயிர்கள் பிரிந்து விதையாகிவிடாமலும் இருக்க தன் மருத்துவத்திறனை பயன்படுத்திக் கொண்டிருந்தார். விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் முக்கிய பொறுப்பாளரும் போராளி மருத்துவரும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பழைய மருத்துவ மாணவனும் மருத்துவக் கலாநிதியுமாகிய அந்த சகோதரனும் மலரவனும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள். இரு சகோதரர்களும் ஒரே களமுனையில் வேறு வேறு பணியில் சோர்வின்றி தமது பணிகளை செய்து கொண்டிருப்பார்கள். அன்றும் அப்படித்தான். இருவரும் தம்பணி செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று எதிரியின் பல எறிகணைகள் பிரிகேடியர் தமிழ்செல்வனின் அணியிருந்த இடத்தில் வீழ்ந்து வெடித்தன. மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தார்கள். பலர் விழுப்புண் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பின்னணி மருத்துவநிலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அதில் மலரவனும் படுகாயமடைந்து பின்நிலைக்கு அனுப்பப்படுகிறார். ஆனால், மருத்துவ நிலைக்கு கொண்டு செல்ல முன்பே மலரவனின் உயிர் பிரிந்து விதையாகிவிட்டது. வோக்கிகள் மலரவனின் பெயர் தாங்கி சோகச் செய்தியை போராளிகளிடையே கொண்டுபோய் சேர்க்கிறது. பலநூறு போராளிகளின் உயிரைக் காத்த அந்த மருத்துவ சகோதரனுக்கும் அச்செய்தி வந்து சேர்கிறது. அவர் எத்தனையோ உயிரற்ற போராளிகளின் உடலங்களைப் பார்த்திருக்கிறார். சிதறிப்போன மக்களின் வெறும் தசைத்துண்டங்களைப் பார்த்திருக்கிறார். அவற்றில் எல்லாம் அவர் திடமாக உறுதி பெற்றிருக்கிறார். அடுத்த கணமே கலங்கிய விழிகளைத் துடைத்துவிட்டு அடுத்த போராளியைக் காப்பாற்றிவிட துடித்திருக்கிறார். அப்படியானவருக்கு தன் தம்பியும் உயிரற்ற உடலாக வந்திருப்பது பெரும் அதிர்ச்சி தான். ஒருவேளை சாவு மலரவனை அணைத்திருக்காவிட்டால் சுஜா அண்ணன் தன் தம்பியை நிச்சயமாக காப்பாற்றி இருப்பார். பல ஆயிரம் போராளிகளின் உயிர்களைக் காத்த அந்த கரங்கள் மலரவன் உயிரையும் நிச்சயம் காப்பாற்றி இருக்கும். இருந்தாலும் அதற்கு முன்பே மலரவன் விதையாக வீழ்ந்து விட்டார். மருத்துவ சகோதரனின் அடிமனதில் உள்ள பல ஆயிரம் வேதனைகளோடு தம்பியின் பிரிவு வேதனையும் இணைந்து கொள்கிறது. அவரது கரங்கள் மருத்துவக் கருவியை இறுகப்பற்றிக்கொள்கின்றன. கால்கள் இன்னொரு போராளியின் உயிரைக்காப்பாற்ற வேகம் கொள்கின்றன. விழிகள் மட்டும் தம்பிக்காக பலமணி நேரங்கள் கரைந்து கொண்டிருந்தன. ஏனெனில் அவரும் எம்மைப்போன்ற சாதாரண மனிதப்பிறவியாக புவியில் உதித்துத் தானே விடுதலை எனும் பெருவிருட்சத்தை தாங்கும் விழுதுகளில் ஒரு மூத்த மருத்துவக்கலாநிதியாக உருவாகியிருந்தார். அவருக்கும் உள்ளே வலித்திருக்கும். விழிகள் உதிரும் நீரை அவர் யாரும் அறியாவண்ணம் எத்தனை தடவை துடைத்திருப்பார். அப்படியே இன்றும் அவர் துடித்துப்போனார். ஆனால் “கடமை அவரை அழைத்துவிட நினைவுகளில் அவரின் தம்பி அமர்ந்து கிடக்க. விடுதலைப்போராட்டத்தின் இறுதி நாள்வரை ஓயாது ஓங்கி இருந்த அவரின் கரங்கள் மீண்டும் கரத்தில் தெலஸ்கோப்பினை இறுகப்பற்றிக்கொண்டன. நினைவோடு இ.இ.கவிமகன் நாள்: 04.02.2026
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
தலைவன் பேச்சு போட்டில களம் இறங்கிட்டான்… இனி ராஜசபால ஒவ்வொருத்தனும் சட்டையை பிச்சி கிட்டு பைத்தியமா அலைய வேண்டியதுதான்😂
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
சக மனிதனாக, என் சொந்த மண்ணில் கெளரவமாக வாழ வேண்டும் என்ற உந்தல்… சுதந்திரவேட்கை….என்றும் போரடிக்காது. ஆனால் ஈரச்சாக்கால் மூடி மழுங்கடிக்கலாம்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
அந்த தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் மக்கள் மத்தியில் உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரணில் என்கிற நரி புலிகளோடு ஓரளவு நட்பு பாராட்டிக்கொண்டு புலிகளுக்கெதிராக ஒரு சர்வதேச வலைப்பின்னலையே ஏற்படுத்தியிருந்தார். தேர்தல் பிரச்சார மேடையில் மிலிந்த மொரகொடவும், நவீன் திஸாநாயக்காவும் தங்கள்கட்சி தேர்தலில் வெல்லும் அதன்பின் இலங்கை இராணுவம் புலிகளுடன் போரிடாது, அமெரிக்க இந்திய இராணுவமே நேரடியாக போரிடும் என்கிற ரகசியத்தை போட்டுடைத்தனர். அதனாலேயே மக்கள் ரணிலுக்கு வாக்குபோடுவதில் இருந்து பின்வாங்க வைக்கப்பட்டனர். அது மஹிந்தவுக்கு சாதகமானது. ரணில், புலிகள் மீது வன்மம் கொண்டார். அந்த தேர்தலில் ரணில் வென்றிருந்தாலும் தமிழ் மக்கள் அழிவு என்பது தடுக்க முடியாது. மஹிந்தரும் அதையே செய்தார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு அவர்மேல் உள்ளது. ரணில் வந்திருந்தால் அந்த குற்றச்சாட்டு இலங்கை அரசு மீது வந்திருக்காது தந்திரமாக தவிர்க்கப்பட்டிருக்கும்.
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
தமிழ் கட்சிகள் மீது வெறுப்பு என்பதால், யூ என் பி, சஜித், வேறு யாருக்கும் போடவில்லை அல்லவா? இலங்கையின் சுதந்திர நாளுக்கு அரச அதிகாரிகள் கூப்பிட்டால் போகவேண்டும் என்பது நியதிதான். ஆனால் ஒட்டு மொத்த பெற்றாரும் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என முடிவெடுத்தால்? மக்கள் இயல்பாகவே சிறிலங்கன் என உணர தலைப்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்டது. வடகிழக்கு எங்கும். ஆனால் ஏனைய மாவட்டங்களை விட யாழில் இந்த காவடி ஆட்டம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. இதை சொல்ல அப்புகாத்து தேவையில்லை. ஊருக்கு போய் அவதானித்தாலே போதும். நிலமை கைமீறி போய்விட்டதாகவே எனக்கு தெரிகிறது.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
"ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே " என்னும் கோணத்தில் கதை போயிருக்கு ........ F பாதரின் குறிதான் அழுக்காய் இருந்திருக்கு ........!- ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
இந்தத் தலைப்புக்காகவே... 1000 பேர் இந்தப் பக்கத்தை பார்வையிட வருவார்கள். 😂- கருத்து படங்கள்
- யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!
யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்! தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 04.02.1957 அன்று சிறீலங்காவின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது. 1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின் துப்பாக்கி சூட்டில் உயிரந்த திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செய்து மாலை அணிவித்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர். https://athavannews.com/2026/1463307 - ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
Important Information
By using this site, you agree to our Terms of Use.