All Activity
- Past hour
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
நான் எழுதியது உங்களுக்கு புரியவில்லையா? பொதுமக்கள் இல்லாமல் பாதுகாப்பு படையினரும் மாணவ மாணவிகளோடும் கொண்டாடி உள்ளனர் .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND IND PAK PAK USA Select NED Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! USA முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS AUS SL SL IRE Select ZIM Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ENG WI WI SCOT Select NEP Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ NZ SA SA AFG Select CAN Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 PAK 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 SA 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND IND AUS Select WI Select SA SA 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ENG NZ Select PAK PAK SL Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), IND 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, SA இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி SA உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ITA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Aiden Markram 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakravarthy 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SA 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Abhishek Sharma 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Marco Jansen 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Aiden Markram 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதை நான் சொல்ல வில்லை எனது அப்கானிஸ்தான் நண்பனே சொன்னான் இவங்கள் வயதை குறைச்சு கொடுத்து இருக்கினம் என ஆட்களை பார்த்தால் பெரிய ஆட்கள் ஆனால் வயதை பார்த்தால் குறைவு அப்கானிஸ்தான் நண்பன் முகத்தை பார்த்தே உண்மையை சொல்லி விட்டார்........... இந்த உலக கோப்பைக்கு தெரிவான பல வீரர்களுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ற தோற்றம் தெரியுது..............15வருடத்துக்கு முதல் விளையாடின அப்கானிஸ்தான் வீரர்களின் வயதில் அதிக குளறுபடிகள்..........................
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
நான் இங்கு தமிழரசுக்கட்சியே மக்களிடம் இருந்து அகற்றப்படவேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். யாரையும் பெயர் சொல்லி குறிப்பிடவில்லை. தமிழரசுக்கட்சி என்றால் சுமந்திரன் மட்டுந்தான் என நினைக்கும் சுமந்திரனின் அபிமானிகள், அனுதாபிகள் அதை விளங்கிக்கொள்ளவேண்டும். 2005ல் தேர்தல் புறக்கணிப்பே நடந்தது. எந்த சிங்கள கட்சிக்கும் வாக்களிக்கவில்லை. யாருக்கும் வாக்களிக்கச்சொல்லி மக்களுக்கு வேண்டுகோள் வைக்கப்படவுமில்லை, பிரச்சாரம் செய்யவுமில்லை.
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நானும் போட்டியில் கலந்து கொள்கின்றேன்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
முதலில் உங்கள் கண்ணாடியில் உள்ள அழுக்கை நீக்க முயலுங்கள். இப்படியே மல்லாந்து படுத்து கொண்டு துப்பிக்கொண்டே அதே நாற்றத்தை ரசித்தபடி இன்னும் எவ்வளவு காலம்????
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இந்தியாவால் மேற்கூறப்பட்டதனது எதிர்பார்ப்பை சிறிலங்காவில் நிறைவேற்றி இருக்க முடியாது என்று கருதுவது முட்டாள்த்தனமானது.இந்தியா உளப் பூர்வமாக நினைத்தால் இதைச் சுலபமாக நிறைவேற்றி இருக்க முடியும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்திய மலையாளிகள் தமிழர்களுக்கு கெளரவமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று அறவே விரும்பவில்லை.ஆனால் சிங்களம் யுத்தம் முடிந்ததும் இந்தியாவை ஓரம்கட்டி சீனாவை அணைத்துக் கொண்டது. அதன் பலாபலன்களை இந்தியா அனுபவிக்கப் போகின்றது.தமிழர்கள் அற்ப உரிமைகளைப் பெறக் கூடாது என்று செயற்பட்ட இந்தியா இப்பொழுது தன்னைச் சுற்றி சக்கர வியூகத்திற்குள் தானே விழுந்து விட்டது. கெடுவான் கேடு நினைப்பான்.ஒரு பிராந்திய வல்லரசு என்றால் தன்னைச்சுற்றியுள்ள நாடுகளை நட்பு நாடுகளாக வைத்திருக்க வேண்டும். இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாடும் இந்தியாவுக்கு நட்பு நாடு கிடையாது. இது இந்திய வெளியுறவுக் கொள்கையின் படு தோல்வி. யாழ்ப்பாணத்திற்கு வந்த சீனத்தூதுவர் இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்டது அவருக்கு தெரியாத விடை அல்ல. இந்தியாவை நாங்கள் நெருங்கி விட்டோம் என்பதை சூசகமாகச் சொன்னதுதான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அங்கு பிறப்புப் பதிவும் ....சான்றிதழ் எடுப்பதும் கஸ்டமோ அன்றி ...விளையாட்டு வீரனுக்கு கள்ள சர்ட்டிபிக்கட்டோ தெரியாது.....ரசீத்துக்கு 28 வயதோ.....ஹ..ஹ //ஹா
-
நடனங்கள்.
😍 ரசித்து பார்த்த Prabhu Deva 👏">என்னமா ஆடுறாங்கப்பா 😍 ரசித்து பார்த்த Prabhu Deva 👏.......! 😂
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
வீடியோக்களில் அடிக்கடி இஸ்லாமிய நபர்கள் தோன்றுகிறார்கள். இங்க சில பேருக்கு gasket போகப் போகுது இண்டைக்கு😂!
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
2005 இல் "சிங்களத் தேர்தல் எமக்கு வேண்டாம்" என்று புறக்கணித்து, மறைமுகமாக மகிந்தவை வெல்ல வைத்தவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்! வென்ற பிறகு "கொள்கையில் நாம் வேறு, ஆனால் யதார்த்த வாதியாகத் தெரிகிறார்" என்று மாவீரர் தின உரையில் குறிப்பிட்டதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்😂!
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
சரத் பொன் சேகாவுக்கு வாக்கு போடுமாறு கேட்ட போது சுமந்திரன் அரசியலுக்கு வரவில்லை. கஜேந்திரகுமார் , கஜேந்திரன் ஆகியோரும் இணைந்தே அந்த முடிவை எடுத்தனர். இருவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தனர். பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே எம்பி சீட் பிரச்சனையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறினர்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
ஆமா ..... சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள், எடுக்கும் முடிவுகள், கொடுக்கும் முண்டுகள், சந்திப்புகள் எல்லாம் தமிழ் மக்களின் நிலைப்பாடா? அல்லது தமிழ் மக்களுக்கு சாதகமானதா? எதற்கு உங்கள் சுயநல பதவியாசைக்கு மக்களை இழுக்கிறீர்கள்? ஜனாதிபதி தேர்தலின்போது மற்றைய கட்சிகளை கொலைகாரர், கொள்ளைக்காரர் என்று விமர்ச்சித்தவர், இன்று பதவிக்காக வேறொரு கருத்தை சொல்லி கைகோர்க்கிறார். அன்று சங்குச்சின்னத்திற்கு வாக்குப்போடும்படி மக்களை கேட்க மாட்டோம் என்றவர், இப்போ அவர்களோடு பேசுகிறார் எதற்காக? தனக்கொரு நிஞாயம், அடுத்தவருக்கு வேறொரு நிஞாயமா? இதுதான் சட்டப்புலமையா? அப்போ, சரத் பொன்சேகாவுக்கு வாக்கு போடும்படி மக்களை கேட்டுக்கொண்டது எப்படி நிஞாயமாகும்? தமிழரசுக்கட்சியையே மக்கள் மத்தியிலிருந்து அகற்ற வேண்டும்.
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
காலங்கள் ஓடிவிட்டது காட்சிகளும் மாறிவிட்டது. இறுதி யுத்தம் நடந்த வருடத்தில் 5 வயசு குழந்தையாக இருந்ததுக்கு இப்போ 22 வயசு வாலிப பருவம், அதற்கு இலங்கையில் என்ன நடந்தது என்றே தெரியாது எடுத்து சொல்லவும் சிங்கள படைகளுக்கும் நாலாம் மாடிக்கும் அஞ்சி எந்த உறவுகளுக்கும் துணிச்சல் இல்லை இன்றைய தலைமுறை ஓடி ஓடி இன்று பண்ணைக்கடலில் நடந்த சிங்க கொடிகளுடன் நடந்த படகுகளின் காணொலியை தரவேற்றி காசு பார்க்கிறார்கள். தமிழர் பிரதிநிதிகள் எனப்படுவோர் தமது வேலைகளில் பிஸி, இலங்கை பிரச்சனையில் பொறுப்புக்கூறல் என்று ஓரளவு நம்பிக்கை தந்த சர்வதேசமும் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை கவனிக்கவே நேரமில்லாமல் நமது பிரச்சனையை ஏறக்குறைய மறந்துவிட்ட நிலமை. தாயகம் பற்றி பொங்கியெழுந்த புலம்பெயர் உறவுகளின் எண்ணிக்கையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனமாதிரி 95% பேர் எப்போவாச்சும் நேரம் கிடைச்சால் மட்டுமே இலங்கை பிரச்சனைபற்றி பேசும் நிலமை எவரும் இனப்பிரச்சனைபற்றி பேசுவதாய் காணோம் இன்றைய பிரச்சனை பற்றியே பெரும்பாலானோரின் கவலை. எந்த ஆட்சி மாறினாலும் சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதிலும் மத அடையாளங்களை நிறுவுவதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் நிலை. கொழும்பிலிருந்து யாழுக்கும் யாழில் இருந்து கொழும்புக்குமென தமிழரும் சிங்களவரும் மாறி மாறி களியாட்டம். இனி, இலங்கை தமிழருக்கு இங்கே என்ன பிரச்சனை எதுக்கு குட்டையை குழப்புகிறீர்கள் என்று சிங்களவர்கள் அல்ல இன்றைய இளைய தமிழ் சமுதாயமே கேட்கபோகும் ஜீரணித்தே ஆகவேண்டிய கசப்பு உண்மையை காலம் வாயில் திணிக்கும் நிலை, மிக அருகில் உள்ளது , கண்டிப்பாக விழுங்கியே ஆகவேண்டிய பரிதாபம்தான் என் வசம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா அணி கோப்பையை வென்று விடும் இந்த முறை இங்லாந்தும் நல்லா விளையாடுகினம் இந்தியா அணியில் நிறைய திறமையான இளம் வீரர்கள் ஜபிஎல்ல சென்னை அணிக்கு விளையாடின வீரர் தான் இந்தியா அணியின் கப்டன் ராஜஸ்தான் அணியில் விளையாடும் சிறுவனின் ஆட்டம் வியக்க வைக்குது............................. அப்கானிஸ்தான் வீரர்களுக்கு வயது கூட ஆனால் குறைச்சு கொடுக்கினம்............ ரசித் ஹான் 1998 பிறந்தவர் என்றால் யாரும் நம்புவினமா...........கிட்ட தட்ட எல்லா அப்கான் வீரர்களும் வயது விடையத்தில் கிளறுபடி செய்பவர்கள்......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அந்தப் பையனுக்கு யார்தான் விசிறியில்லை. இந்த சின்ன வயசிலேயே, எவ்வளவு பக்குவம். அதுவும், இந்தியாவில் இருக்கின்ற அழுத்தம். எல்லாவற்றையும் தாண்டி, விளையாட்டைக் காட்டவேணும் .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆப்கான் அன்டர் 19 போய்ஸ்...
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
ஆ...அப்படியா...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்களும் என்னைப்போல ..வைபவின் ரசிகர் போல...பெரிய ரி20 ரீம்போல ..கடைசிவரை வெளுத்து வாங்கக் கூடியவர்கள் ...எப்ப எவர் அடிப்பார்கள் தெரியாது ...பட்டாசு முதலில் வெடித்துவிட்டால் ...செம கொண்டாட்டம் ...பட்டாசு பீச்சிக்கிட்டாலும் ...5ம் 6ம் ஆளே வெளுத்து வாங்குவார்கள் .... அது பிச்சின் தன்மை போல இருக்கு...இரண்டுபக்கத்துக்கும் பொதுவாக இருந்தது ..என்றாலும் இந்தியாவின் வேகம் மிக அதிகம் ..ஆப்கானில் கள்ள சர்ட்டிபிக்கட் இலகுவாக எடுக்கலாம் போல கிடக்கு
-
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
எம்.பி.கமல்ஹாசன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்களவையில் அவர் ஆற்றும் முதல் உரை இது என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. ஆங்கிலத்தில் பேசிய அவர், ``இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள். கமல்ஹாசன் இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது. 'ஸ்பெல்' என்பது ஒரு சொல்லாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன, ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' என்றால் 'ஆங்கிலப் பயிற்சியாளர்கள்' (English Coaches) என்று அர்த்தமல்ல. பீகார் ஏற்கனவே பல 'வாழும் பிணங்களின்' (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது. இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் (தீதி) இதையேதான் புலம்புகிறார். இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனது தேசம் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த அவைக்குள் வந்து தங்கள் மக்களுக்காகப் பேசுவதற்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. எனக்கு அந்தத் திரைத்துறையின் வாயிலாக இந்தக் கதவு திறந்தது. பரமக்குடியிலிருந்து வந்த ஒரு குழந்தையைச் சினிமா புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தச் சினிமாதான் எனக்குத் தமிழ் வரலாற்றை அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வாக்குறுதிக்கும், யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நான் உணர்ந்தேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என். அண்ணாதுரை. 'துரை' (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969, பிப்ரவரி 3-ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். ஸ்டாலின், கமல்ஹாசன் இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். எனது அன்பு நண்பர் மு.க ஸ்டாலினுக்கு எனது நன்றி. பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான், பொருளாதாரம் பற்றிப் பேசத் தகுதியற்றவன் என்று நீங்கள் சொல்லலாம். இருந்தாலும், ஒரு மாணவனாக எனக்கு ஒரு கருத்து உண்டு. கோபமில்லாமல் இந்தப் பேச்சை எழுத காந்தி உதவினார், தர்க்கத்தை (Logic) சேர்க்க பெரியார் உதவினார், இந்த அவையைப் புரிந்துகொள்ள அண்ணா உதவினார். கடைசியாக ஒன்று, மொழிப்போர் என்ற காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு (AI) வந்துவிட்டது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இப்போது உள்ளது. பாரதப் பிரதமர் காசி தமிழ்ச் சங்கமத்தில் பேசியபோது, அவரது பேச்சு ஐந்து நிமிடங்களில் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. எனவே, மொழியை வைத்து மோதலை உருவாக்க நினைப்பவர்கள் தங்களது சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்." என்றார். கமல்ஹாசன் தமிழில் உரையைத் தொடர்ந்தவர், ``நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்கிரீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன் (கமல் பேசியது அப்படியே). தமிழ் என்றும் வாழும் நலமுடன்." என்றார். ``வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ" - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் | "Will 'living corpses' be created, at least on paper?" - Kamal Haasan in Parliament - Vikatan
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
askar Jayraman Mookkammal est à Bhavani Homeo Pharmacy. · Suivre troSeospndi0: jm9a8i30g19u95mg20g,52716n5a0l9508g1hur 4e5vff · வீடு_வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான். அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை. “கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள். பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?” “கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள். “ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான். ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான். அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள். அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது. “இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!” அவளுக்கு கண்கள் பனித்தன. அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான். நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226) பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம்.......!
-
அதிசயக்குதிரை
(INTERESTING STORIES) படித்ததில் பிடித்தது · Balaji Srinivasan ·rspdoonetS 27405i9125a46famuih256i9164ahc0ac1ff786mi1a7g9502 · 1960-ல வாஷிங்டன்ல இருக்குற அந்த மருந்து கட்டுப்பாட்டு ஆபீஸ்க்குள்ள ஒரு சிங்க பெண்மணி கால எடுத்து வைக்குறாங்க, அவங்க பேருதான் டாக்டர் பிரான்சிஸ் கெல்சி. வேலைக்குச் சேர்ந்து முதல் நாளே அவங்க டேபிள்ல ஒரு ஃபைல் வந்து விழுது, அந்த ஃபைல்ல இருந்தது 'தாலிடோமைடு' அப்படிங்கிற ஒரு மருந்து. அவரோட கையெழுத்து அந்த ஃபைலக்கு தேவை அந்த நேரத்துல ஐரோப்பா முழுக்க அந்த மாத்திரை ஒரு 'மேஜிக் மருந்து' மாதிரி பேசப்பட்டுச்சு, குறிப்பா கர்ப்பமா இருக்குற பொம்பளைங்களுக்கு வர்ற அந்த வாந்தி, மயக்கம், அப்புறம் தூக்கம் வராம தவிக்கிற கஷ்டத்துக்கு இதுதான் பெஸ்ட்னு எல்லாரும் அடிச்சுக்கிறாங்க. அந்த மருந்து கம்பெனிக்காரங்க "ஏற்கனவே ஊர் முழுக்க வித்துக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துமஸ் குள்ள அமெரிக்காவுல கல்லா கட்டணும், சீக்கிரம் கையெழுத்தப் போடுங்கம்மா"ன்னு அவசரப்படுத்துறாங்க. ஆனா அந்த அம்மா சாதாரண ஆள் இல்ல, அவங்க கண்ணு அந்த ஃபைல்ல இருக்குற ஓட்டையக் கண்டுபிடிச்சிருச்சு. "எல்லாரும் விக்கிறாங்க சரி, ஆனா இந்த மருந்தால வயித்துல இருக்குற அந்தப் பச்சை மண்ணுக்கு என்ன ஆகும்னு நீங்க சரியா சொல்லலையே?"ன்னு கேட்டு அந்த ஃபைலை தூக்கி எறிஞ்சாங்க. அவ்வளவுதான், அந்த மருந்து கம்பெனிக்காரங்களுக்கு உச்சந்தலையில கோவம் ஏறிடுச்சு, "எங்ககிட்டயே வேலையைக் காட்டுறியா?"ன்னு இறங்குறாங்க. அவங்க மேலதிகாரிகளுக்குப் போன் போடுறது, அந்த அம்மாவை "உனக்கு ஒண்ணும் தெரியாது, நீ ஒரு லூசு, நீ ஏதோ பவர்ல இருக்கோம்னு ஆட்டம் போடுற"ன்னு அசிங்கப்படுத்துறதுன்னு இறங்குனாங்க. இன்னைக்கு இருந்தா கூட ஒரு பொண்ணு ஒரு பெரிய கம்பெனியை எதிர்த்து நிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு யோசிச்சுப் பாருங்க, அன்னைக்கு 1960-ல அந்த சிங்க பெண்மணி சுத்தி இருந்ததெல்லாம் ஆம்பளைங்க அதிகாரம், அவங்க கொடுத்த டார்ச்சர்ல அந்த அம்மா நினைச்சிருந்தா "போனா போகுது, எல்லாரும் கையெழுத்து போடுறாங்க நாமளும் போட்டுருவோம்"னு ஒதுங்கியிருக்கலாம். ஆனா அந்த அம்மாவுக்குத் தன்னோட படிப்பு மேலயும், அந்த நேர்மை மேலயும் இருந்த நம்பிக்கை பெருசு. "நீ என்ன வேணா பண்ணு, எனக்குச் சரியான பதில் கிடைக்கிற வரைக்கும் பேனா முனையைக் கூட அசைக்க மாட்டேன்"னு ஒத்தக் கால்ல நின்னாங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷம் அந்த கம்பெனியோட மிரட்டலைத் தாங்கிக்கிட்டு அந்த ஃபைலை லாக் பண்ணி வச்சாங்க. 1961-ல ஜெர்மனியில இருந்து வந்த அந்த நியூஸ் உலகத்தையே நடுங்க வச்சிருச்சு. அந்த மருந்தைச் சாப்பிட்ட தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் கை, கால் இல்லாம, வெறும் முட்டி மட்டுமோ இல்ல சின்னதா மீன் துடுப்பு மாதிரி வளர்ந்த உறுப்புகளோட பிறக்க ஆரம்பிச்சது. பத்தாயிரம் குடும்பம் உருக்குலைஞ்சு போச்சு, பாதி குழந்தைங்க பிறந்த சில நாளுலயே செத்துப் போச்சு. அந்த நேரத்துலதான் அமெரிக்காவுக்கு உறைச்சது, அந்தப் பெண் சிங்கம் மட்டும் அன்னைக்கு மிரட்டலுக்குப் பயந்து கையெழுத்துப் போட்டிருந்தா, இன்னைக்கு அமெரிக்காவுல எத்தனையோ குடும்பம் கண்ணீர்ல மிதந்திருக்கும். அன்னைக்கு அவங்க தடுத்தது ஒரு பேப்பர் இல்ல, ஒரு தலைமுறையோட அழிவை. இதைக் கேள்விப்பட்ட உடனே அதிபர் கென்னடி அந்த பெண்மணி கூப்பிட்டு மெடல் கொடுத்து கௌரவிச்சாரு. பிரான்சிஸ் கெல்சி 90 வயது வரை அதே துறையில் பணியாற்றி, லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றினார், இது நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடம், அதாவது ஊரே ஒரு பக்கம் போனாலும், நாம் செய்வது சரி என்று நமக்குத் தெரிந்தால், அந்த நேர்மைக்காகப் போராடத் தயங்கக்கூடாது. இன்று அமெரிக்காவில் ஆரோக்கியமாக விளையாடிக்கொண்டிருக்கும் எத்தனையோ தலைமுறையினர், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தப் போராட்ட குணமிக்கப் பெண்ணுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள், நிஜமான வீரம் என்பது சண்டை போடுவது மட்டுமல்ல, தர்மத்திற்காகத் தனித்து நின்று 'வேண்டாம்' என்று சொல்லும் அந்தத் துணிச்சல்தான் என்பதை அவர் நிரூபித்துவிட்டார். இவ்வளவு பெரிய அநியாயத்துக்கு அப்புறம்தான், உலகத்துல ஒரு மருந்து மார்க்கெட்டுக்கு வரணும்னா அது எவ்ளோ கடுமையான டெஸ்ட்டுகளைத் தாண்டணும்ங்கிற அந்த 'எஃப்.டி.ஏ' (FDA) சட்டமே இன்னும் ஸ்ட்ராங் ஆச்சு. ஒரு தனி மனுஷியோட பிடிவாதம், இன்னைக்கு நாம சாப்பிடுற ஒவ்வொரு மாத்திரையோட பாதுகாப்புக்கும் அஸ்திவாரமா இருக்கு. அந்த அம்மா 101 வயசு வரைக்கும் வாழ்ந்துட்டு 2015-ல தான் இயற்கை எய்தினாங்க, நிஜமாவே அவங்க ஒரு நடமாடும் தெய்வம் தான். வணக்கம் பாலாஜி ஸ்ரீனிவாசன்.....!
-
குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்?
நல்ல காலம் பல்துலக்கும் பொருள் ஒன்று தொண்டையை அறுக்கும் வாளாக மாற இருந்தது ........! 😚
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
அதிகூடிய வெற்றி இலக்கைக் கடந்த அணி என்ற சாதனையுடன் 19இன் கீழ் உலகக் கிண்ண அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா Published By: Vishnu 04 Feb, 2026 | 09:13 PM (நெவில் இந்தியா) ஹராரே, குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்றைய தினம் (04) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்களால் மிக இலகுவாக இந்தியா வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் பெப்ரவரி 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்த்தாடவுள்ளது. ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 311 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 41.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 311 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய வெற்றி இலக்கை விரட்டிக்கடந்த அணி என்ற சாதனையை இந்தியா நிலைநாட்டியது. இலங்கையில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 305 ஓட்டங்களை நியூஸிலாந்து விரட்டிக்கடந்து ஈட்டிய வெற்றியே முந்தைய விரட்டிக்கடக்கப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. இன்றைய போட்டியில் ஆரம்ப வீரர்களான ஆரோன் ஜோர்ஜ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன் மூன்று பெறுமதி வாய்ந்த இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கினார். ஆரம்ப விக்கெட்டில் வைபவ் சூரியவன்ஷியுடன் 57 பந்துகளில் 90 ஓட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டில் அணித் தலைவர் அயூஷ் மஹாத்ராவுடன் 101 பந்துகளில் 114 ஓட்டங்களையும் மூன்றாவது விக்கெட்டில் விஹான் மல்ஹோத்ராவுடன் 79 பந்துகளில் 96 ஓட்டங்களையும் ஆரோன் ஜோர்ஜ் பகிர்ந்தார். மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஆரோன் ஜோர்ஜ் 104 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 115 ஓட்டங்களைக் குவித்தார். வைபவ் சூரியவன்ஷி எப்போதும் போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களையும் அயூஸ் மஹாத்ரா 59 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களையும் பெற்றனர். விஹான் மல்ஹோத்ரா 38 ஓட்டங்களுடனும் வேதாந்த் திரிவேதி 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 310 ஓட்டங்களைக் குவித்தது. ஆப்கான் சார்பாக இருவர் சதங்கள் குவித்தனர். 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண நொக் அவுட் வரலாற்றில் ஒரே அணியைச் சேர்ந்த இருவர் சதங்கள் குவித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் பைசால் ஷினோஸதா 110 ஓட்டங்களையும் உஸைரூல்லா நியாஸாய் ஆட்டம் இழக்காமல் 101 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 148 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களை விட ஆரம்ப வீரர்களான ஒஸ்மான் சதாத் 39 ஓட்டங்களையும் காலித் அஹ்மத்ஸாய் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கனிஷ்க் சௌஹான் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்பேஷ் தேவேந்திரன் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஆரோன் ஜோர்ஜ் https://www.virakesari.lk/article/237838
-
அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர
அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர 04 Feb, 2026 | 06:13 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார். கொழும்பில் புதன்கிழமை (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்று காலங்களில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களை சிங்கள மன்னர்களும், தலைவர்களும் தோற்கடித்து நாட்டை பாதுகாத்தார்கள். 1948 ஆம் ஆண்டு காலணித்துவ ஆட்சியில் இருந்து நாடு முழுமையாக சுதந்திரமடைந்தது. நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுதமேந்தி போராடினார்கள். 30 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர் 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உரிமை தியாகம் செய்து நாட்டை பாதுகாத்தனர். 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு நாடு இரண்டாவது தடவையாக சுதந்திரமடைந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினருக்கும், தேசியத்துக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காகவே செயற்படுகிறார். 78 ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், மற்றும் போர் வாகனங்கள் சுதந்திர தினத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை. அதேபோல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237826