All Activity
- Past hour
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
வழங்கலாம் என்பது என் கருத்து. ஏனையோர் இருவரும் தம் கருத்தை சொல்லவும். 👍
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
தட் குடுமியை மறைக்க மறந்த தருணம்😂. நாதமுனியை நான் மிஸ் பண்ணுகிறேன். நீங்களுமா?😂 ஓ எல், ஏ எல் என எந்த பொது பரிட்சையும் இல்லாத நாடு கனடா என்பதை அறிந்த போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இது இன்னமும் அதிர்சியாக உள்ளது. இங்கே மாணவர் ஐடி கார்ட் இல்லாமல் பல்கலை கழக கட்டிடத்துக்குள், சில வளாகங்களுக்குள் கூட நுழைய முடியாது.
- Today
-
குடிநீரில் மலக்கழிவு !!
குடிநீரில் மலக்கழிவு !! நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் January 18, 2026 1 Minute அன்று ஞாயிற்று கிழமை அதிகாலை 5 மணிக்கே தொலைபேசி பலமுறை அலறி நித்திரையினை குலைத்தது. மறுமுனையில் அழைத்த நண்பன் என்னிடம் நீண்ட விளக்கம் ஒன்றினை எதிர்பார்த்தான். அதாவது அவன் தனது கிணற்று நீரினை தரக்கட்டுப்பாடு பரிசோதனை ஒன்றிற்கு உட்படுத்தி இருந்தான். அதன் முடிவில் அவனது கிணற்று நீரில் E. coli என அழைக்கப்படும் Escherichia coli பக்டீரியா இருந்தமையே ஆகும். எனது நண்பனின் கேள்வி இவ்வளவு நாளாகவும் இந்த நீரினை அருந்தியதினால் தனக்கும் குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? மற்றும் ஏன் பாதிப்பு ஏற்படவில்லை? என்பதே ஆகும். நீர் மனித வாழ்விற்கு அடிப்படை தேவையாகும். ஆனால் குடிநீர் மாசுபடும் போது அது உயிருக்கு ஆபத்தான நோய்களை உருவாக்கும். குடிநீரில் Escherichia coli (E. coli) கிருமி கண்டறியப்படுவது, அந்த நீர் மனித அல்லது விலங்கு மலத்தால் மாசடைந்துள்ளது என்பதற்கான முக்கிய சான்றாகக் கருதப்படுகிறது. ஆகவே, E. coli மாசுபாடு ஒரு தனி கிருமி பிரச்சினை அல்ல; அது முழு சுகாதார அமைப்பில் ஏற்பட்ட தோல்வியை வெளிப்படுத்துகிறது. தண்ணீர் E. coli மூலம் மாசடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மலக்குழி கசிவு , திறந்த வெளியில் மலம் கழித்தல், கால்நடை கழிவுகள், வெள்ளத்தின் போது கழிவுநீர் குடிநீருடன் கலப்பது, குடிநீர் குழாய்களின் உடைப்பு மற்றும் பாதுகாப்பில்லாத கிணறுகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். குறிப்பாக கிராமப்புற பகுதிகள், வெள்ளத்திற்குப் பிந்தைய சூழ்நிலைகள் அதிக ஆபத்தானவையாகும். யாழ் குடாநாட்டில் உள்ள மண்ணின் அமைப்பு மற்றும் பாறைகளின் அமைப்பு காரணமாக மலத்தினால் மாசடைந்த நீர் இலகுவாக கிணற்றினை சென்றடைகின்றது. மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு இதனை அதிகரித்து இருந்தது. முந்திய காலத்தில் கீழ்ப்பக்கம் திறந்த நிலையில் அமைக்கப்பட்ட மலக்குழிகள் இந்த ஆபத்தினை அதிகரித்து ஆனால் தற்பொழுது எல்லா பக்கமும் சீமெந்தினால் சீல் செய்யப்பட்ட குழிகளே அமைக்கப்டுகின்றன. E. coli என்பது இயல்பாக மனித குடலில் வாழும் கிருமியாகும். பெரும்பாலான E. coli இனங்கள் தீங்கற்றவையாக இருந்தாலும், குடிநீரில் அதன் இருப்பு சமீபத்திய மலம் சார்ந்த மாசுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் Salmonella, Shigella, Vibrio போன்ற ஆபத்தான கிருமிகளும், வைரஸ்கள் மற்றும் பராசைட்களும் குடிநீரில் இருக்கக்கூடும் என்ற அபாயம் ஏற்படுகிறது. எனவே, குடிநீரில் E. coli இருப்பது பொதுச் சுகாதார அவசர நிலையாகக் கருதப்படுகிறது. நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையின் பொழுது E. coli இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதே பரிசோதிக்கப்படுகின்றது. அத்துடன் அதன் எண்ணிக்கையும் பரிசோதிக்கப்படுகின்றது. ஆனால் முக்கியமாக E. coli இல் என்ன இனம் இருக்கின்றது என்பது குறித்து பரிசோதிக்கப்படுவதில்லை. ஏனெனில் E. coli இல் குறித்த சில இனங்களே மனிதருக்கு நோய்களை ஏற்படுத்துகின்றது. அவற்றின் விபரம் வருமாறு வகை நோய் முக்கியத்துவம் ETEC நீர் வயிற்றுப்போக்கு நீரிழப்பு மரணம் EPEC குழந்தைகளில் வயிற்றுப்போக்கு குழந்தை மரணம் EHEC (O157:H7) இரத்த வயிற்றுப்போக்கு, Hemolytic Uremic Syndrome (HUS) திடீர் மரணம் EAEC நீடித்த வயிற்றுப்போக்கு ஊட்டச்சத்து குறைபாடு மாசுபட்ட தண்ணீர் மூலம் உடலுக்குள் நுழையும் E. coli பலவகை நோய்களை ஏற்படுத்தக்கூடும். சில வகை E. coli கிருமிகள் நீர்வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, கடுமையான நீரிழப்பையும் மினரல் சமநிலையிழப்பையும் உண்டாக்குகின்றன. குழந்தைகளில் இந்த நிலை உயிரிழப்புக்கே வழிவகுக்கலாம். EHEC (O157:H7) போன்ற வகைகள் இரத்த வயிற்றுப்போக்கையும், Hemolytic Uremic Syndrome (HUS) எனப்படும் கடுமையான நிலையும் உருவாக்குகின்றன. இதில் சிறுநீரக செயலிழப்பு, மூளை வீக்கம் ஏற்பட்டு திடீர் மரணம் நிகழலாம். E. coli பக்டீரியாக்களில் பல இனங்கள் மனிதனுக்கு தீங்கு விளைவிக்காதவை அத்துடன் இவை மனிதனின் குடலிலும் இயற்கையான சூழலிலும் இருப்பவை. இதன் காரணமாக மனிதனுக்கு குறித்த நீரினை அருந்தும் பொழுது எவ்விதமான மாற்றமும் தெரிவதில்லை. ஆனால் நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையில் E. coli பக்டீரியா இருப்பது கண்டிபிடிக்கப்பட்டால் விரைவில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்தும் குறித்த நீரினை அருந்த கூடாது. E. coli மாசுபாட்டைத் தடுப்பது முழுமையாக சாத்தியமானதாகும். குடிநீரை காய்ச்சி அல்லது குளோரினேஷன் செய்து பயன்படுத்துதல், கிணறுகளை பாதுகாப்பாக அமைத்தல், கழிப்பறைகளையும் குடிநீர் ஆதாரங்களையும் போதிய இடைவெளியில் அமைத்தல், வெள்ளத்திற்குப் பின் உடனடி நீர் பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் பொதுச் சுகாதார கண்காணிப்பை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளாகும் முந்தைய காலத்தில் நாம் இவ்வாறு கிணற்று நீரினை பரிசோதனைக்கு உட்படுத்தி குடிப்பதில்லை என்ற பழமைவாதிகள் குற்றச்சாட்டுக்கான பதில் முன்பு சனத்தொகை குறைவாக இருந்த காரணத்தினால் கிணறு – மலக்குழி ஆகியவற்றுக்கு இடையே கணிசமான தூரம் இருந்தது ஆனால் தற்போதைய காலத்தில் அவ்வாறு அல்ல என்பதே ஆகும். நன்றி Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) https://tamilforensic.com/about/
-
ஏராளன் started following குடிநீரில் மலக்கழிவு !!
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, புதிய மலசலகூடத்திற்கு காரைநகரில் ஏற்கனவே 5 பேருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள், நேற்று மேலும் 3 பேருக்கு அவசரமாக தேவை என்று கேட்டவர்கள். முதலில் ஒன்றைத் செய்து நடைமுறைச் செயற்பாடுகளைப் புரிந்துகொண்டு பின்னர் தொடருவோம் எனக்கூறி இருக்கிறேன். உண்மையில் வீட்டில் இருந்தபடி பொருத்தமானவர்களிடம் வேலைகளை ஒப்படைத்து செய்வித்த நான் ஒரு கருவி மட்டுமே. இந்தப்பணிகளைச் செய்ய தூண்டியது மட்டுமல்லாமல் நிதி உதவி அளித்த நல்லுள்ளங்களுக்குத் தான் மிகப்பெரிய நன்றிகளைத் தெரிவிக்கிறேன். @குமாரசாமி அண்ணை, @வாத்தியார்அண்ணை , @goshan_cheஅண்ணை வட்டு.தெற்கு திரு நா.பரராஜசிங்கம் ஐயாவிற்கு மேலும் ஒரு 50000 ரூபாவை வழங்கட்டுமா? மலசலகூட குழிக்கு கல்லு கட்டவேணும்.(குழிக்குள் தண்ணீர் இருக்குதே என்று கேட்டதற்கு இறைத்து இறைத்துக் கட்டுவதாக கூறினார் T/O) கணேஷா ஹாட்வெயார் கடைக்கு செலுத்தவேண்டி உள்ளது 84850-80000=4850 ரூபாவையும் வழங்குகிறேன். கம்பிகட்டி பிளேற் போட்ட கூலி, கொமட் பூட்டிய கூலி, அசிட் போட்டு சுத்தமாக்கிய கூலி(அசிற் காசும்) கொடுக்கிறேன். 35000 ரூபா கேட்டவர், எல்லாவற்றையும் விபரமாக எழுதி தரச்சொல்லி உள்ளேன். வேலைக்காசு கூட என்று ரT/O தம்பி கூறினார், செய்து தந்த சீலனிடம் கேட்டதற்கு பாவனையில் உள்ள மலசலகூடப்பணிகளை(துர்நாற்றம்) செய்வதற்கு பலரும் வரமாட்டினம் என்று கூறினார். புதிதாக செய்வதற்கு உள்ள சம்பளம் வாங்குவினமாம். காரைநகரில் புதியமலசலகூடம் கட்டுவதற்கான செலவுக்கணிப்பு விபரம் காரைநகரில் புதியமலசலகூடம் கட்டுவதற்கான செலவுக்கணிப்பு விபரம் கிடைத்துள்ளது. அதன்படி 279,408 ரூபா எனக்குறிப்பிட்டுள்ளார். இது முன்னர் வேறொரு T/O கூறியதை விட 80000 ரூபா அதிகமாக உள்ளது. இதனை மாதிரியாக கொண்டு வேறு சிலரிடம் பட்ஜட் எவ்வளவு வரும் என விசாரித்து பின்னர் தொடங்குவோம். பொன்னாலை வேலை செய்த சீலனிடம் கேட்டபோது பொருட்களை வாங்கித்தரட்டாம் சம்பளத்திற்கு(லேபர் கொன்றாக்ற்) செய்து தருகிறேன் என்று சொன்னவர். இன்று காரைநகர் சென்று பார்த்துவிட்டு கணக்கு தருகிறேன் என்று கூறியுள்ளார்.
-
இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது? — வீரகத்தி தனபாலசிங்கம் —
இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது? January 20, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசியப் பேரவை தூதுக் குழுவினர் தன்னைச் சந்தித்த ஒரு மாத காலத்திற்குள், தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் “இலங்கை தமிழர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியலமைப்புச் செயன்முறையை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தன்னை சந்தித்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போது தங்களது நாட்டில் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தமிழர்களுக்கு தோற்றுவிக்கப்போகும் ‘பாரதூரமான ஆபத்துக்களை’ சுட்டிக் காட்டியதாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர், சிறுபான்மை இனத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவ கோட்பாடுகளை பேணிப்பாதுகாக்கவும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கும் கூட்டாட்சி ஏற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அத்தகையதொரு அணுகுமுறையை புதுடில்லி கடைப்பிடித்தால் அது பிராந்திய அமைதியை உத்தரவாதம் செய்யும் நாடு என்ற இந்தியாவின் வகிபாகத்தை கௌரவிப்பதாக மாத்திரமல்ல, கூட்டாட்சியையும் மொழி மற்றும் இனத்துவ சிறுபான்மையினங்களையும் பாதுகாக்கும் இந்தியாவின் அரசியலமைப்பு விழுமியங்களுக்கு இசைவானதாகவும் அமையும் என்று கூறியிருக்கும் ஸ்ராலின், ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பது என்ற போர்வையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை துரிதப்படுத்தியிருக்கின்றது என்றும் உத்தேச கட்டமைப்பு அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் அபிலாசைகளை அலட்சியம் செய்வதன் மூலம் அவர்கள் மேலும் ஓரங்கட்டப்பட்டக்கூடிய அச்சுறுத்தலை தோற்றுவிக்கும் ஒற்றையாட்சி முறையை (ஏக்கியராஜ்ய) வலுப்படுத்துவதாக தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவின் அனுசரணையுடன் 1985 ஓகஸ்டில் பூட்டானில் அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்ப் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட ‘திம்புக் கோட்பாடுகள்’ தற்போதைய பின்புலத்தில் தொடர்ந்தும் பொருத்தமானவையாக இருப்பதாக தன்னைச் சந்தித்த தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தியதை பிரதமர் மோடிக்கு சுட்டிக் காட்டியிருக்கும் முதலமைச்சர் அந்த கோட்பாடுகளில் அடங்கியிருக்கும் அம்சங்களை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய அரசியலமைப்பும் அநீதி மற்றும் உறுதிப்பாடின்மையை தொடரச் செய்யும் என்பதுடன் மீண்டும் மோதல்களுக்கும் மனிதாபிமான நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். 1987 இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை உட்பட வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதிக்கும் நீதிக்குமாக நீண்டகால அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டிருக்கிறது என்றும் ஸ்டாலின் எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் இந்த கடிதத்தை இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் முயற்சிகளில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு தமிழ்நாடு மூலமாக நெருக்குதலை பிரயோகிப்பதற்கு தங்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு கிடைத்த முக்கியமான ஆரம்பக்கட்ட வெற்றியாக தமிழ் தேசிய பேரவை கருதுகிறது. கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த அரசியல் கருத்தரங்கில் கஜேந்திரகுமார் நிகழ்த்திய உரை இதை தெளிவாக உணர்த்துகிறது. தங்களது தமிழ் தேசியவாத நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அலையொன்று ஏற்படும் என்பதில் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார், இலங்கை தமிழரசு கட்சியையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியையும் இணைத்துக்கொண்டு இந்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வரைக்கும் அந்த இரு கட்சிகளும் தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறுவதில் தவிர்க்க முடியாத சக்திகள் என்பது அவரது நிலைப்பாடாக இருக்கிறது. தனியொரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட தமிழ் தேசிய பேரவை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலமாக இத்தகைய முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்றால், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்ட ஏனைய தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டாக செயற்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் ஆதரவு அலையை உருவாக்குவதில் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்த முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு சென்று அரசியல் கட்சிகளை சந்தித்த பிறகு இதைக் கூறுகின்ற கஜேந்திரகுமார், முன்கூட்டியே தமிழரசு கட்சியுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் கலந்தாலோசித்து ஒரு கூட்டு நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஏன் முயற்சிக்கவில்லை என்று தெரியவில்லை. தமிழ் தேசியவாத அணிகளைப் பொறுத்தவரை, அவர்கள் தாங்களாக ஒரு நிலைப்பாட்டை எடுத்த பிறகு மற்றைய அணியினர் தங்களுடன் இணைந்துசெயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற வழமையான நடைமுறையின் தொடர்ச்சியாகவே இதை நோக்க வேண்டியிருக்கிறது. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியவாத கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றென்றைக்குமே கானல் நீராகவே இருக்கும் போன்று தெரிகிறது. தமிழ்நாட்டு முதலமைச்சர் தனது கடிதத்தில் ‘ஏக்கியராஜ்ய’ என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. 2015 – 2019 காலப்பகுதியில் அன்றைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைக்கு பிறகு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் இலங்கை அரசின் தன்மை ‘ஏக்கியராஜ்ய’ வாக அமையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கைவிடப்பட்ட இடத்தில் இருந்து அந்த அரசியலமைப்புச் செயன்முறை முன்னெடுக்கப்பட்டு தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அநுர குமார திசநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதை அடிப்படையாக வைத்துக் கொண்டு கஜேந்திரகுமார் ‘ஏக்கியராஜ்ய’ அரசியலமைப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவந்துவிடும் என்று நம்புகிறார் போலும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி திசநாயக்க பிறகு கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக பதிய அரசியலமைப்பு குறித்து எதையும் பேசவில்லை. மூன்று வருடங்களுக்கு பிறகு அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்று பதவிக்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது அதைப் பற்றி பெருமளவுக்கு மௌனத்தைச் சாதிக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய புதிய அரசியலைமைப்பின் மூலமாக மாத்திரமே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படும் என்று கூறினார். ஆனாலும், அவர் காலவரையறை எதையும் கூறவில்லை. இலங்கையில் நிலைவரம் இவ்வாறு இருக்கும்போது தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் செயன்முறைகள் துரிதப்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார். அதனால், இலங்கை அரசியல் நிலைவரம் தொடர்பான ஸ்ராலினின் புரிதல் குறித்து சந்தேகம் எழுகிறது. எது எவ்வாறிருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மீண்டும் அவர் அக்கறை காண்பிக்க தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளை, தமிழ்நாடு சட்டசபை தேர்தல்கள் நெருங்கும் நிலையில், தனது மாநிலத்தின் மற்றைய அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை கையிலெடுப்பதற்கு முன்னதாக பிரதமருக்கு கடிதம் எழுதியதன் மூலம் ஸ்ராலின் முந்திக் கொண்டார் என்ற விமர்சனமும் உண்டு. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலம் இருக்கின்ற போதிலும், அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரயம் செய்கிறது என்ற அபிப்பிராயம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக குரல்கொடுத்து வந்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசியலமைப்பு சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுத்திருக்க வேண்டும் என்பதே பரந்தளவில் சிவில் சமூக அமைப்புக்களின் கருத்தாக இருக்கிறது. புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அரசாங்கத்தின் பதவிக் காலத்தின் முதல் வருடங்களே பாதுகாப்பான காலப் பகுதியாகும். அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உற்சாகமான பிரதிபலிப்பு வெளிப்படாமல் இருப்பது அரசியலமைப்பு ரீதியான அல்லது ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிறுவும் திசையில் அது நகரத் தொடங்கியிருக்கிறது என்ற விமர்சனம் ஏற்கெனவே எதிரணியினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் முன்னணி அரசறிவியல் நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சி குறித்து அண்மையில் எழுதிய ஆய்வு ஒன்றில் இந்த அரசியலமைப்பு மாற்ற விவகாரம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் ; ” இலங்கையின் அரசியல் புதிய வருடத்திலும் அதற்கு பின்னரும் பெரும்பாலும் மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் பதற்றம் நிறைந்ததாகவும் இருக்கப்போகிறது என்பதற்கான சகல அறிகுறிகளும் தெரிகிறது. முக்கியமான எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் இது உண்மையில் நல்ல செய்தி அல்ல. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை தாமதிப்பது தேசிய மக்கள் சக்தியின் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு குறிப்பாக, அதன் நம்பகத்தன்மைக்கு பாதகமானது. ” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதுடன் பாராளுமன்ற — அமைச்சரவை எதேச்சாதிகாரத்தை தடுப்பதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி தவறுமானால், இலங்கை ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்கு இன்னொரு மக்கள் கிளர்ச்சி தேவையாக இருக்கலாம்.” https://arangamnews.com/?p=12614
-
வெள்ளை மாளிகையில் ஓராண்டு நிறைவு : சர்ச்சைகளும் சாதனைகளும் - அதிரடி காட்டிய டொனால்ட் ட்ரம்ப்!
வெள்ளை மாளிகையில் ஓராண்டு நிறைவு : சர்ச்சைகளும் சாதனைகளும் - அதிரடி காட்டிய டொனால்ட் ட்ரம்ப்! Published By: Digital Desk 3 21 Jan, 2026 | 10:17 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை (ஜன 20) வெள்ளை மாளிகையில் ஊடக சந்திப்பை நடத்தினார். அதில், தனது ஓராண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் ஒரு பெரிய கோப்பை (Binder) ட்ரம்ப் காண்பித்தார். அத்துமீறிய குடியேற்றத்தைக் குறைத்தது முதல் கழிப்பறைகள் மற்றும் ஷவர் ஹெட்களின் (shower heads) தரத்தை மேம்படுத்தியது வரை பல்வேறு சாதனைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இந்த கோப்பின் க்ளிப் (binder clip) தனது விரலை காயப்படுத்தியிருக்கலாம் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், "நான் வலியை வெளிப்படுத்தமாட்டேன்" என்றார். குடியேற்றம் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் தனது உரையின் பெரும்பகுதியை குடியேற்றக் கொள்கைகள் குறித்துப் பேச ஒதுக்கினார்: மினசோட்டாவில் (Minnesota) ஐஸ் (ICE) அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிடிபட்டவர்களின் புகைப்படங்களைக் காண்பித்து, அவர்களை "குற்றவாளிகள்" என சாடினார். சோமாலிய குடியேற்ற வாசிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அவர், அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மினசோட்டா மற்றும் பிற ஜனநாயகக் கட்சி ஆளும் நகரங்களில் இராணுவத்தை நிலைநிறுத்துவதை ஆதரித்துப் பேசினார். "இராணுவ வீரர்கள் இருக்கும்போது நகரம் அழகாகத் தெரியும்" என அவர் குறிப்பிட்டார். ஊடக சந்திப்பில் வழக்கமான பாணியில் ட்ரம்ப் பல ஆச்சரியமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். 'Gulf of Mexico' என்ற பெயரை 'Gulf of Trump' என மாற்றப்போவதாக கிண்டலாகத் தெரிவித்தார். சர்ச்சைக்குரிய ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் (Hells Angels) மோட்டார் சைக்கிள் குழுவான இவர்களைப் பாராட்டிய ட்ரம்ப், "அவர்கள் எனக்கு வாக்களித்தனர்" என்றார். தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், அதற்கு ஈடாக கிரீன்லாந்தை (Greenland) வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார். அமெரிக்காவில் பணவீக்கம் இல்லை என அவர் வாதிட்டார் (இருப்பினும் புள்ளிவிவரங்கள் விலைவாசி உயர்வையே காட்டுகின்றன). கடந்த தேர்தலில் ஜோ பைடனிடம் தான் தோற்கவில்லை எனவும், அந்தத் தேர்தல் திருடப்பட்டது எனவும் மீண்டும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த ஊடகச் சந்திப்பைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் டாவோஸில் (Davos) நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்க ட்ரம்ப் புறப்பட்டுச் சென்றார். https://www.virakesari.lk/article/236572
-
📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்! adminJanuary 21, 2026 மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் தமது கட்சி பிரதிநிதிகளை கொண்டு வந்து சேர்ப்பது என்பது சட்டவிரோதமான செயல் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரஜாசக்தி என்கிற அடிப்படையிலே கிராம மட்டங்களிலே ஜேவிபியானது தனது கட்சி பிரமுகர்களை நியமித்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எல்லோரையும் ஓரங்கட்டி தனது பிரதிநிதிகளை நியமிக்கின்ற போக்கு இருக்கிறது. உள்ளூராட்சி சபைகள் என்பது அடிப்படையிலே நேரடியாக மாகாண சபைகளுக்கு உட்பட்ட விடயமாகும். இவை அனைத்தும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கை. அவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மாத்திரம் அல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களையோ பாராளுமன்ற உறுப்பினர்களையோ அரச உத்தியோகத்தில் இருப்பவர்களையோ பலருக்கும் தெரியாமல் ஒரு பிரதிநிதியை நியமித்து தமது கட்சி பிரதிநிதி ஊடாக கொழும்பிலிருந்து கொண்டு எல்லாவற்றையும் வழி நடத்தலாம் என்று யோசிக்கிறார்கள். அவ்வாறான விடயம் தவறானது. ஜனநாயக வினோதமானது என்ற அடிப்படையில் நாங்கள் அவற்றை முற்றுமுழுதாக நிராகரித்து அவை நடைபெறக்கூடாது என்று விரும்புகிறோம். அவை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான சில முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளவிருக்கிறோம். ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து பலாலியில் நடை பயணத்தை மேற்கொண்டார். ஆனால் அந்த பலாலியில் இருக்கக்கூடிய காணிகள் என்பது அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் கூட விடுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் எவ்வளவு தூரம் காணிகள் விடுவிக்கப்பட்டது என்று சொன்னால் இரண்டு வீதிகளை தவிர காணிகள் விடுவிக்கப்பட்டதாக இல்லை. மாறாக காணிகள் சுவிகரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறுபட்ட இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அமைதியான சூழல் காணப்படுகிறது. பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது. மேலதிகமான காணிகள் பிடிக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுடைய காணிகள் அவர்கள் வசம் இருக்கிறது. காணிகளை அவர்கள் விடுவிக்க வேண்டும். மக்களுடைய மீள்குடியேற்றத்துக்கு உதவியாக அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும். இராணுவம் தேவையற்ற விதத்தில் காணிகளை தம் வசம் வைத்திருக்கிறார்கள். வருகின்ற போது அவர்கள் கூறியபடியே அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று விடயத்தை கூறினார்கள். ஆனால் இதுவரையிலே யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பல தடவை வந்தாலும் கூட எதுவும் நடந்ததாக இல்லை. சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களிலே புத்த கோயில்களை கட்டுகிற வேலையைத்தான் தொடர்ந்து செய்கிறார்கள். வடக்கிலோ கிழக்கிலோ அது தான் நடக்கிறது. இந்த விடயங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பது மாத்திரம் அல்லாமல் காணிகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஏற்கனவே ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையிலும் கூட காணி விடுவிப்பு நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். புதிய அரசியல் சாசனம் வரவிரிக்கின்ற நிலையில் தமிழ் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திருத்தம் ஒன்றை முன் வைப்பதாகவும் முடிவு செய்திருக்கிறோம். எமது கூட்டம் என்பது தொடர்ந்து மாதாந்தம் நடைபெறும் என்பது மாத்திரமல்ல ஆக்கபூர்வமாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய முன்மொழிகளை கொண்ட பல்வேறு விடயங்களை எதிர்காலத்தில் கொண்டு நடத்துவதாகவும் தீர்மானித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2026/227001/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
திருமதி மோ. சுமதி (பூமா) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு
-
கருத்து படங்கள்
2nd Hand Nobel Prize. 😂
-
வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!
வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு! 2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தக் காலக்கட்டத்தில் பதிவான வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 113 ஆகும். இந்த விபத்துக்களில் 216 பேர் படுகாயமடைந்தனர், அதே நேரத்தில் 490 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர குறிப்பிட்டார். விபத்துக்களில் அதிகளவில் உயிரிழந்தவர்கள் மோட்டார் சைக்கிளின் சாரதிகள் ஆவார் (45), அதேநேரம் மோட்டார் சைக்களின் பின் இருக்கையில் இருந்து பயணித்த 07 பேரும் உயிரழந்துள்ளனர். இது தவிர விபத்துக்களில் பாதசாரிகளும் அதிகளவில் (33 பேர்) உயிரிழந்துள்ளனர். அதிகரித்து வரும் விபத்துக்களைக் கட்டுப்படுத்த, குறிப்பாக பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களைத் தடுக்க, சாலைப் பாதுகாப்பு அமுலாக்கம் மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1460762
-
தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
கிரீன்லாந்து மீதான ட்ரம்பின் மோகத்தால் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது புதன்கிழமை (21) 4,800 அமெரிக்க டொலர்களையும் விஞ்சியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கிரீன்லாந்து மீதான நாட்டம் ஐரோப்பாவுடன் மீண்டும் ஒரு வர்த்தகப் போர் அச்சுறுத்தலை தூண்டியுள்ள நிலையில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை காலை GMT நேரப்படி 02.26 மணியளவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 1.2% உயர்ந்து 4,821.26 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதேநரேம், பெப்ரவரி மாதத்திற்கான அமெரிக்க தங்க எதிர்காலம் 1% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,813.50 ஆக இருந்தது. பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மையின் போது பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும் தங்கத்தின் விலை 2025 ஆம் ஆண்டில் 64% உயர்ந்தது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மேலும் 10% அதிகரித்துள்ளது. அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்புகளும் இந்த உலோகத்தின் ஏற்றத்திற்கு துணைபுரிந்துள்ளன. அதேநேரம்,செவ்வாய்க்கிழமை 95.87 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனை அளவை எட்டிய பின்னர் ஸ்பாட் வெள்ளி ஒரு அவுன்ஸ் புதன்கிழமை (21) 1% குறைந்து 93.59 அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஸ்பாட் பிளாட்டினம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 0.7% குறைந்து $2,445.96 ஆகவும், பல்லேடியம் 0.5% குறைந்து $1,857.19 ஆகவும் பதிவானது. இலங்கை நிலவரம்; கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (21) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 380,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 351,500 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1460802
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மொறு மொறு பாசி பயிறு தட்டை
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம்: இருவர் உள்ளம் (1963) இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி பாடியவர்: TMS வரிகள்: கண்ணதாசன் கண்ணேதிரே தோன்றினாள்..
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
படிக்க ஆர்வம் உள்ள பிள்ளை எங்க இருந்தாலும் படிக்கும் ... ஏகலைவன் தூர நின்று துரோணரின் கலையை பயின்றதும், ஆபிரகாம் லிங்கன் தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்ததும் போல இந்த பிள்ளை எதோ செய்ய ட்ரை பண்ணி இருக்கு போல. இங்கு எந்த ஒரு பல்கலை கழக விரிவுரையிலும் யாரும் போய் உட்கார்ந்து இருந்து படிப்பிப்பதை கேட்டுக் கொண்டு இருக்கலாம். ஈத் கார்டு பார்த்து உள்ளே அனுப்புவதில்லை. மாணவ விடுதிக்கு எப்படி போனார் என்பது தான் பெரிய கேள்வி?
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
இவர்கள் விட்ட தவறே, அனுரா கட்சி வடக்கில் நுழைந்ததும் பொங்கல் விழா கொண்டாடியதும் என்பதையும் ஏற்க முடியவில்லை, அனுரா பொங்கல் கொண்டாடியதை பொறுக்கவும் முடியவில்லை. இவர்கள் இல்லாவிட்டால் என்ன? அவர் மக்களோடு பொங்கல் கொண்டாட வந்தார், கொண்டாடினார், போனார். இவர் ஏன் புலம்புகிறார்? உங்களுக்கு அங்கு என்ன வேலை? உங்களது மரியாதை அவ்வளவுதான். உங்களை கூட்டி வைத்து கும்மாளம் அடித்தவர்கள் எதை சாதித்தார்கள் மக்களுக்கு? அல்லது நீங்கள்தான் எதை சாதித்தீர்கள்? நீங்கள் நிஞாயமாக நடந்திருந்தால் மக்கள் உங்களை தவிர்த்து அனுராவுடன் பொங்கல் கொண்டாடியிருப்பார்களா? மக்களே உங்களை மதிக்கவில்லை, அனுரா ஏன் அழைக்கப்போகிறார்? சிவஞானத்தின் அறிவு அவ்வளவுதான்! இவர்கள் எல்லாம் கட்சி கொள்கை திட்டத்தின் படி அங்கீகாரம் பெற்றா பதவிகளை பெற்றுக்கொண்டார்கள்? மக்கள் இவர்களை விட்டு வெகுதூரம் சென்றதே அனுரா வடக்கிற்கு வரக்காரணம் என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை பாவம் இவரால். கட்சிப்பிரச்சனை கட்சிக்குள் இருந்திருந்தால் யாரும் விமர்சிக்கப்போவதில்லை. கட்சிப்பிரச்சனை வெளியில் வந்தால், நீதிமன்றம் வந்தால் யாரும் விமர்சிக்கத்தான் செய்வார்கள். நீங்களே உங்கள் உறுப்பினர்களை பகிரங்கமாக விமர்ச்சிக்கிறீர்கள், அவர்கள் மேல் சேறடிக்கிறீர்கள், தெற்கிற்கு செய்தியனுப்பி விசாரணை செய்யச்சொல்லி கேட்க்கிறீர்கள், உங்கள் தவறுகளை மறைத்துக்கொண்டு மற்றவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கிறீர்கள், ஒரு கட்சியை விமர்சித்து விட்டு உங்கள் தேவைக்காக அந்தக்கட்சியை தேடிச்சென்று கட்டி தழுவுகிறீர்கள், காரணம் என்ன? மக்கள் உங்களை நிராகரித்து விட்டதனாலேயே. இதற்குள் தமிழரசுக்கட்சிக்குள் மறைந்திருந்து போட்ட அட்டகாசம் எல்லாம் போதும். குந்தியிருந்த வீட்டை பூட்டிவிட்டு வேறு எங்கே போய் குந்தப்போகிறார்கள்? சிவஞானத்திற்கு தன் முதுகிலுள்ள அழுக்கும் தெரியவில்லை, கட்சியிலுள்ள சர்வாதிகாரமும் புரியவில்லை, இதற்குள் மற்றவர்களை சாட வெளிக்கிட்டு தலைகுனியப்போகிறார்.
-
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை
இன்றைய திகதிக்கு உலக அரங்கின் நிகழ்வுகளுக்கு மத்தியில் இப்படியான உரையை நான் வாக்களித்த கட்சியின் பிரதமர் ஒருவர் உரையாற்றினார் என்ற பெருமையோடு...
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
சகல கலா வாண்டுகள்
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
ம், அவ அனுமதி பெறாமல் கற்றிருக்கிறார், இவர்கள் அனுமதி கொடுக்காமல் அவரின் பெயரை சரி பார்க்காமல் கற்பித்திருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் மாணவர் தொகை, வருகை சரிபார்க்காமல் கற்பிப்பார்களோ? அது இருக்க, இப்போ மருத்துவ கற்கை சித்தியெய்திய சான்றிதழ் இல்லாமற்கூட தனியார் மருத்துவ நிலையம் நடத்துகிறார்களாம், அவர்கள் பிடிபட்டவுடன் போலி வைத்தியர் என்கிறார்கள்.
-
மலரும் நினைவுகள் ..
- நான் ரசித்த விளம்பரம் .
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- Yesterday
- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
என்னைப் பொறுத்த மட்டில் உங்கள் செயல்பாடுகள் எதற்கும் நான் தடங்கலாக இருக்க போவதில்லை.என்னால் முடியும் போது ஏதாவது செய்வேன் அவ்வளவு தான்.பயளாளிகளை கஸ்ரப்படுத்தாமல் இருந்தால் சரி.நன்றி. - நான் ரசித்த விளம்பரம் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.