Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. உலகிலேயே அதிகம் மனிதாபிமானத்தைக் காக்கும் வல்லலரசு என்றவுடன் எனது மனதில் முதலாவதாக உதித்த நாடொன்றின் மனிதாபிமான நடவடிக்கைகளின் குறிப்பு. 1945க்கு பிறகு ரஷ்யா / சோவியத் நடவடிக்கைகளால் உயிரிழந்த பொதுமக்கள் (நாடு வாரியாக) நாடு சம்பவம் / போர் பொதுமக்கள் உயிரிழப்பு (மதிப்பீடு) Afghanistan Soviet–Afghan War (1979–1989) 562,000 – 2,000,000 பொதுமக்கள் Hungary Hungarian Revolution of 1956 சுமார் 2,500 பேர் Czechoslovakia Prague Spring invasion (1968) சுமார் 137 பொதுமக்கள் Lithuania Soviet suppression (1991 Vilnius events) சுமார் 14 பொதுமக்கள் Latvia Soviet crackdown (1991 Riga events) 5 பொதுமக்கள் Germany East German uprising suppression 300,000 +பேர் 240,000 பெண்கள் பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டனர் Poland Soviet-backed repression (1945–1950s) ஆயிரக்கணக்கான கைது, நூற்றுக்கணக்கான மரணங்கள் China Sino-Soviet border conflict (1969) நூற்றுக்கணக்கானோர் Afghanistan தனிப்பட்ட படுகொலைகள் (உதா: Laghman, Kunduz) சில நூறு முதல் ஆயிரம் வரை சோவியத் ஒன்றியத்துக்குள் (Russia உட்பட) பொதுமக்கள் மரணங்கள் இடம் சம்பவம் மதிப்பீடு Soviet Union (உள்ளக அடக்குமுறை) Gulag, அரசியல் அடக்குமுறை மில்லியன் கணக்கில் (பல்வேறு ஆய்வுகள்) Chechnya First Chechen War (1994–1996) 30,000–50,000 பொதுமக்கள் Chechnya Second Chechen War (1999–2009) சுமார் 30,000 பொதுமக்கள் முக்கிய நாடுகள் – மொத்தம் (rough estimate) நாடு பொதுமக்கள் உயிரிழப்பு Afghanistan 0.6 – 2 மில்லியன் Hungary ~2,500 Czechoslovakia ~137 East Germany 300,000 Lithuania 14 Latvia 5 Chechnya (Russia) ~60,000–80,000
  3. முழு ஆவணம்:
  4. இந்த கேள்விகளுக்கு முதலில் விடையளியுங்கள், பின்னர் தொடர்ந்து பேசலாம். 1. வத்திக்கான் எந்த நாட்டு மக்களை மத அடிப்படைவாதத்தினை வைத்து கொடுங்கோலாட்சி புரிகிறது? 2. ஆது எந்த நாட்டில் அணுவாயுத உற்பத்தியை உருஇவாக்க முயற்சிக்கிறது? 3. அது எந்த நாட்டினை உலக வரைபடத்திலிருந்து முற்றாக இல்லாதொழிப்போம் என்பதை தனது கொள்கையாகக் கொண்டு இயங்குகிறது? 4. அது எந்த மத அடிப்படைவாத அ,மைப்புக்களுக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கி இன்னொரு நாட்டிற்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுங்கள், அந்நாட்டு மக்களைக் கொல்லுங்கள் என்று உசுப்பெற்றி வருகிறது? 5. அது எந்த நாட்டினை அழிப்பதற்காக நீண்டதூர ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் தயாரித்து வருகிறது? 6. எந்த நாட்டினை பெரிய சாத்தான் என்று சிறிய சாத்தான் என்று அடையாளப்படுத்தி அந்நாடுகளுக்கு மரணத்தினை வழங்குவோம் என்று சூளுரைத்து வருகிறது? அது எந்த நாட்டில் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதி அடக்கி வருகிறது? அது எந்த நாட்டில் தனது குடிமக்களையே கொடுங்கோலாட்சிக்கெதிராக கோஷமிட்டதற்காக பல்லாயிரக்கணக்கில் கொன்றுகுவித்து வருகிறது?
  5. ரஸ்ஸியாவின் மனிதாபிமானப் பட்டியலுடன் எமது சம்பாஷணையினை ஆரம்பிக்கலாம் அண்ணை. எங்கே அந்தப் பட்டியலை இங்கே இணையுங்கள் பார்க்கலாம்.
  6. Yesterday
  7. இந்த அமெரிக்கா, இஸ்ரேலை எந்த அமைப்பிலும் சேர்த்துக்கொள்ளாதீர்கள்!
  8. அமெரிக்கா ஒரு நாட்டுக்குள் நுழைய தீர்மானித்து விட்டால், அதற்கு காரணங்கள் தேவையில்லை, தானாகவே சுமத்தும். இரானுக்குள் அணு ஆயுதம் உற்பத்தி செய்கிறார்கள், மக்களுக்கு அங்கு சுதந்திரம் இல்லை என்று குற்றம் சாட்டியது. இதுவரை அங்கு அணு உற்பத்தி ஆலை இருப்பதை நிரூபிக்கவுமில்லை, அதன் மீது தாக்கவுமில்லை. இத்தனை அழிவுகளை சந்தித்தும் இரான் அப்படியொரு ஆயுதத்தை பாவிக்கவுமில்லை. இதிலிருந்தே அமெரிக்காவின் குற்றச்சாட்டு, பயம் ஆதாரமற்றது எனத்தெரிகிறது. நெதன்யாகு சொல்கிறார் ஈரான் தமக்கு எப்போதும் அச்சுறுத்தலாம். ஏன் இவர்கள் அப்படி நினைக்கவேண்டும்? அவர்கள் மற்றைய நாடுகளை அச்சுறுத்தலில் வைத்திருக்க இரான் தடையென நினைக்கிறார்கள். ஈரானில் அணு ஆயுதம், ஆலை தாக்கமுடியாத அளவில் பாதுகாப்பாக, இரகசியமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அது அமெரிக்காவிற்கு எப்படி தெரிந்தது? தாக்கமுடியாது என்று தெரிந்தும் ஏன் தாக்குதலை தொடங்கியது? தாக்குதலின் தொடக்கமே ஈரானின் முக்கிய தளங்கள், சிறுவர் பாடசாலை. அந்த குழந்தைகளின் சுதந்திரத்தை அமெரிக்கா, இஸ்ரேல் காத்ததா, மதித்ததா, மிதித்ததா? ஈரானின் மனித வளம், இயற்கைவளங்கள்தான் அமெரிக்காவின் பாஷையில் அணு ஆயுத ஆலையா? அமெரிக்கா அடிக்கப்போகுது, பிடிக்கப்போகுது என்று அலறிய சுரேன் ராகவன், சீலரத்ன பிக்கு, விமல் வீரவன்ச, இனவாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சிகாறர், பயந்தான்கொள்ளிகள், மனிதாபிமானமற்று தமிழரை அழித்தவர்களுக்கு தோல்வி. இனிமேல் வேறேதாவது காரணங்களை தேடுங்கள். நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் எல்லாம் அனுராவுக்கு சாதகமாகவே அமையும், ஆகவே அவர்மேல் குற்றச்சாட்டுக்களை தேடி சுமத்துவதை விட்டு உங்களை திருத்திக்கொள்ளுங்கள். உலக நாடுகளிடம் உதவி வேண்டி தமிழரை அழிக்கும்போது அந்த நாடுகள் ஒருநாள் இலங்கையை பிடிக்கும் என தோன்றவில்லை இவர்களுக்கு, இனவாத அரசை எச்சரிக்கவில்லை இவர்கள், இப்போ எதற்கு துடிக்கிறார்கள்? தாங்கள் அழிந்து விடுவோம் என்றா? இலங்கையை சிண்டு முடிந்து அனுராவை அழிக்க நினைத்திருக்குமோ இந்தியா?இந்தியா, தன்னுடன் கண்காட்சியில் பங்குகொண்டு திரும்பிய அந்த வீரர்களை பாதுகாக்க, காப்பாற்ற, அடைக்கலம் கொடுக்க தவறியது அதன் மனிதாபிமானமற்ற செயல், அமெரிக்கா மீது அதற்கு உள்ள பயம், விசுவாசத்தை காட்டுகிறது. அவர்களை அழைத்து காட்டிகொடுத்திருக்கிறதா இந்தியா? அவர்களை அமெரிக்கா தாக்கியழிக்கும்போது மௌனம் காத்தது, ஈரானிய தலைவர் கொல்லப்பட்டபோது கூட இரங்கல் தெரிவிக்க மோடி விரும்பவில்லை. அதன் பின் அனுரா அந்த வீரர்களை காத்து அடைக்கலம் கொடுத்த விவகாரம் வெளியில் வந்து பாராட்டுக்கள் குவியும் போது, வேறொரு கதையை அவிழ்த்து விட்டது. முதலில் இந்திய ஊடகங்கள் சில மோடியின் செயலை பரிகசித்தன, சில, மோடிக்கு ட்ரம்ப் பணிந்தார், மோடி ட்ரம்ப் தலையில் குட்டி விட்டார் என்றெல்லாம் வெட்கமேயில்லாமல் புகழ்ந்தன. இப்போ இன்னொரு இரானிய கப்பலையும் அதிலிருந்த வீரர்களையும் இந்தியா காப்பாற்றியதாகவும் அதற்கு ஈரான் மிகுந்த நன்றியை தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளிவருகிறது, அது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை, அப்படி நடந்திருந்தாலும் அதற்கு முன்னோடி அனுராவின் துணிச்சலே. அவருக்கு கிடைக்கும் பாராட்டுகளை, துணிச்சலை பார்த்து மோடி வெட்கமடைதிருப்பாரோ என்னவோ? உங்களது சொந்த குடிமக்கள் அவர்களின் நாட்டுத்தலைவர்களால் ஈவு இரக்கமின்றி தாக்கப்படும்போது உந்த மனிதாபிமானம் எங்கே போயிருந்தது? அதற்கு பிறகு வருகிறேன், அது சம்பந்தமான திரியில். வாசகர்களுக்கும் கருத்தாளருக்கும் ஒரு அன்பான கோரிக்கை! எனது கருத்துக்கள் உங்களுக்கு வாசிப்பதற்கு சலிப்பை கொடுத்தால் கடந்து செல்லுங்கள், மினைக்கெட வேண்டாம். "நான் அனுராவுக்கு தூக்கு காவடி எடுக்கப்போகிறேன்."
  9. நான் இஞ்சை தான் நிக்கிறன்.😂 ஒரு அரசு ஐயர் அவர் தம் ஜோதிடம்,சாத்திரம்,ஒன்பது கிரக கணிப்புகள்,யோனிப்பொருத்தம்,அந்தப்பொருத்தம் இந்தப்பொருத்தம் எல்லாவற்றையும் வைத்து நடைபெற்ற திருமணத்தை அங்கீகரிக்கின்றது என்றால்.....அந்த அரசும்,சட்டங்களும் ஏற்றுக்கொள்கின்றது என்றால்......? 😁 மூட நம்பிக்கைக்கு வரவிலக்கணம் என்ன?
  10. சரியான இணைப்பை இணைத்திருக்கின்றீர்கள் புரட்சியர். அரசியலில் உண்மையும் உண்மையான விவாதங்களும் நடைபெற்று நீண்ட காலமாகிவிட்டது. இன்றைய அரசியலில் உண்மைகளை பேச அரசியல்வாதிகள் உட்பட யாரும் தயாரில்லை.
  11. வத்திக்கானுடன் முரண்பட்டு பாருங்கள் சுயரூபம் தெரியும்.😎 கீழே இருக்கும் தரவுகளை பார்க்கலாம். எதற்காக அழிப்பதை தொழிலாக கொண்டுள்ளார்கள் என்பது புரியும்.அங்கே ஆன்மீகமும் இல்லை அண்டங்காககளும் இல்லை. மாறாக தமது பாதையில் குறுக்கே வருபவர்களை அழிப்பதுதான் அவர்கள் நோக்கம். அது அவர்களுக்கு சரியாக தெரிகின்றது.வல்லமையுள்ளவர்கள் எது செய்தாலும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியது வல்லமை இல்லாதவர்களின் உலக நிலை. இங்கே ஆன்மீகத்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றார்கள்.அவ்வளவுதான். மற்றும் படி அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை.ஜேர்மனியில் கூட ஆன்மீகத்தை அரசியலிருந்து அகற்ற முடியாது. வல்லரசு என்பது அழிப்பதில் முன்னிலை வகிப்பதல்ல. மாறாக மனிதாபிமானங்களும் வல்லரசுகளுக்கு சொந்தமானது. மற்றும் படி...... ரஷ்யாவின் மகிமை ஐரோப்பிய தொழிற்சாலைகளுக்கும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் நட்பு பேணியிருந்தால் இன்றும் அதாவது ஈரான் யுத்தத்தின் போதும் அதன் பொருளாதாரம் வலிமையுடன் இருந்திருக்கும்.
  12. ஆட்சிகளும் காட்சிகளும் மாறினாலும் சிங்களவனின் தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் திட்டங்கள் மட்டும் ஒருபோதும் மாறுவதில்லை. அகம் புலம் என அனைவருமே மண்ணையும் மக்களையும் ஏறக்குறைய மறந்து செயல்படும் இன்னாட்களில் இந்த காணொலியை பதிவு செய்யும் இளைஞர் அசாத்திய துணிச்சலுடன் காணொலி படுத்துகிறார், நிச்சயம் சிங்கள புலனாய்வுதுறையால் குறித்து வைக்கப்படுவார் என்ற அச்சமே முன்னாடி உள்ளது.
  13. ஓம் முந்தைய ஆட்சிகளில் இப்படி வழக்கே போட்டிருக்க மாட்டார்கள். ஆனால் மேற்கில் (டிரம் ஆட்சி அல்ல) இப்படி நடந்தால் குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் பதவி விலகுவர். இவர் அமைச்சராகவே தொடர்கிறார். https://srilankamirror.com/news/case-filed-against-kumara-jayakody-over-rs-8-8-million-corruption-allegations/?amp=1
  14. ஐயோ எனக்கு பேரப்பிள்ளை எல்லாம் இன்னும் இல்லை😂. இன்னும் அரை செஞ்சுரி கூட அடிக்காத பாலகன் ஐயா நான்😂. நான் சொன்னது நான் சிறுவயதில், சொன்ன, செய்த சில சம்பவங்கள் என எனக்கு சொல்லப்பட்டவை பற்றி. எல்லாமும் 5 வயதுக்கு முந்திய நிகழ்வுகள். பிகு அண்மையில் ஒரு கண்டுபிடிப்பு வெளியானது. வழமையாக ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையை விட ஐகியூ கூடியதாய் இருக்குமாம். ஆனால் மிலேனியள்சை விட ஜென் சீ க்கு சராசரி ஐகியூ குறைவாம்.
  15. நான் உங்களின் வயதை குறைத்து மதிப்பிட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்.முன்பு பிறக்கும் குழந்தைகளை விட இப்பொழுது பிறக்கும் குழந்தைகள் வயதுக்கு மீறிய அறிவுத்திறனைக்காட்டுகிறார்கள்.ஆனால் ஆராக்கியத்திலும் சுறுசுறுப்பிலும் பின்தங்கி இருக்கிறார்கள். பேரப்பிள்கைளகள் மீது அதிக பாசத்துடன் பழகவும் தாத்தா பாட்டி மாருக்கு கூடுதல் நெுரம் இருக்கிறது. ஐரோப்பி இயந்திர வாழக்கையில் பெற்றோர்களுக்கு நேரம் கிடைப்பது அரிதாகிறது.
  16. ஜயக்கொடியின் கொடியும் இப்படி விழுந்து போனதே.................. இந்த விடயத்தில் கட்சி பேதமின்றி நடக்கின்றார்கள் போல...........🫣 என் நண்பன் ஒருவன் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு மாற்றலாகிப் போனான். எனக்கு தெரிந்த வரையில் அவன் ஒருவனே சுத்தமானவன்............
  17. போட்டியை மிகச் சிறப்பாக, எப்போதும் போல, நடத்திய கிருபனுக்கு @கிருபன் மிக்க நன்றிகள் பல! போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் நன்றிகள்! முதல் இடங்களைப் பிடித்த @Newbalance , @கந்தப்பு , @நியாயம் ஆகியோருக்கு வாழ்த்துகள்.....................👍. பி.கு: ஆப்கானிஸ்தானில் எனக்கும், வாதாவூரானுக்கும் சிலைகளை திறப்பதாக முடிவெடுத்து இருந்த நேரத்தில் ஒரு உலகப் பிரச்சனை வந்துவிட்டது.................🤣.
  18. வளைகுடா, இலங்கை எண்டால்… ப்..ப..பா…பி….****ச்சல் மட்டும்தான்😂?
  19. பரிந்துரைக்கு நன்றி Dr.Justin. நீங்கள் குறிப்பிட்டுள்ளதில் Fexofenadine யேர்மனியில் கிடைக்கிறது. விலை சற்று அதிகம் €32.90. நான் பாவிப்பது Cetirizine ADGC 10mg, விலை அதிகமில்லை €8.00. நீங்கள் குறிப்பிட்ட Centrizine உம் நான் பாவிக்கும் Cetirizineஉம் ஒன்றா எனத்தெரியவில்லை. மேலும் நாளுக்கு ஒரு தடவை MomeAllerg Nasal Spray பாவிக்கிறேன். இன்னும் ஓரிரு வாரங்கள்தான் சமாளித்துவிடுவேன். மீண்டும் உங்கள் தகவல்களுக்கு நன்றி!🙏
  20. நடுக்கம், உதறல் எல்லாம் குளிருக்குள் மட்டும்தான் 😄
  21. நான் ஊரில் வசித்த காலத்தில்.... புண்ணுக்கு கட்டின பண்டேஜ் (Bandage)´ம் பாணுக்குள் இருந்ததாக... செய்தியில் வந்து இருந்ததை படித்தேன். அது... கைப் புண்ணுக்கு கட்டிய பண்டேஜா, கால் புண்ணுக்கு கட்டிய பண்டேஜா என்று தெரியவில்லை. 😂
  22. போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் க்கு நன்றியும் வாழ்த்துகளும்.
  23. நான் நினைக்கிறேன் பாணில், பணிசில் சின்ன வண்டு (கோதுமை மாவில் இருக்கும் வண்டு), பீடித் துண்டு போன்றவற்றை கண்டு அவற்றை அலாக்கா தூக்கி எறிந்து விட்டு மிச்ச பாணை சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நாங்கள் தான் போல...
  24. அதிகரிக்கும் வெப்பநிலை: சிறுவர்களுக்கு தோல் பிரச்சினை மற்றும் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை Published By: Digital Desk 3 09 Mar, 2026 | 02:40 PM நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் சிறுவர்களிடையே தோல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உடலில் நீர்சத்து இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக தோல் வெடிப்புகள், எரிச்சல், பூஞ்சை தொற்று போன்ற பொதுவான தோல் நோய்கள் ஏற்படக்கூடும். மென்மையான சருமம் கொண்ட சிறுவர்கள் மற்றும் வெளிப்புற சூழலில் அதிக நேரம் செலவிடும் சிறுவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு அதிகமாக ஆளாகக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிக வெப்பநிலையினால் சிறுவர்களில் நீர்சத்து இழப்பு அபாயம் அதிகரிப்பதுடன், தூக்கமின்மை, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முறையான மேற்பார்வையின் கீழ் நீரில் விளையாடுவதன் மூலம் சிறுவர்களுக்கு குளிர்ச்சியளிக்க முடியும் எனவும், இது வெப்பமான வானிலையில் உடல் வெப்பத்தை குறைக்க உதவும் எனவும் சுகாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், பல பாடசாலைகளில் ஆண்டு தோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளினால் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும் போது வெப்பச் சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விளையாட்டுகளின் போது அதிகமாக வியர்வை வெளியேறுவதால் சோடியம் மற்றும் பொற்றாசியம் போன்ற அத்தியாவசிய உடல் உப்புகள் இழக்கப்படலாம். இது மூளை மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, சிறுவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அத்தோடு, விளையாட்டு நடவடிக்கைகளின் போது இடைவேளைகளை எடுக்கவும், அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதை தவிர்க்கவும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளின் அதிக வெப்பநிலை காணப்படும் நேரங்களில் சிறுவர்களை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும், நீரேற்றமாக இருக்க அதிகளவு நீர் மற்றும் இயற்கை குளிர்பானங்களை குடிக்க ஊக்குவிக்கவும் சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/240533
  25. அமெரிக்கா - இரானின் ஆயுத கையிருப்பு குறைந்தால் போர் எப்படி மாறும்? பட மூலாதாரம்,US Navy via Getty Images கட்டுரை தகவல் ஜோனாதன் பீல் பாதுகாப்பு செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டிடம் முக்கியமான ஆயுதங்கள் 'கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் உள்ளன' என்று கூறியுள்ளார். மறுபுறம், அமெரிக்கா திட்டமிட்டதை விட நீண்ட காலம் 'எதிரியை எதிர்த்து நிற்கும் திறன்' எங்களிடம் உள்ளது என்று இரானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுத கையிருப்பு மற்றும் விநியோகம் மட்டும் இந்த மோதலின் முடிவை தீர்மானிக்காது. யுக்ரேன் நீண்ட காலமாக ரஷ்யாவைவிட குறைந்த வீரர்கள் மற்றும் குறைந்த ஆயுதங்களுடனும் போராடி வருகிறது. இருப்பினும் ஆயுதங்கள் ஒரு முக்கிய அம்சமாகும். தொடக்கத்திலிருந்தே இந்த ராணுவ நடவடிக்கைகளின் வேகம் மிக அதிகமாக உள்ளது. உற்பத்தி செய்யப்படுவதை விட வேகமான விகிதத்தில் இரு தரப்பினரும் ஏற்கனவே தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். டெல் அவீவை சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மதிப்பீட்டுப்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே 2,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒவ்வொரு தாக்குதலிலும் பல்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரான் ஏற்கனவே 571 ஏவுகணைகளையும் 1,391 டிரோன்களையும் ஏவியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியது. அவற்றில் பல இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கலாம். போர் நீண்ட காலம் நீடிக்கும் பட்சத்தில், இரு தரப்பிற்கும் இந்த அளவிலான மோதலை தொடர்ந்து பராமரிப்பது கடினமான ஒன்றாக மாறும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் பாதிப்பை காட்டும் படம் இரான் நிலை என்ன? இரான் ஏவும் ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை ஏற்கனவே கவனித்துள்ளதாக மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். போரின் முதல் நாளில் நூற்றுக்கணக்கில் இருந்த ஏவுகணைகள் தற்போது டஜன் கணக்காக குறைந்துள்ளன. போருக்கு முன்னதாக, இரானிடம் 2,000-க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் கையிருப்பில் இருந்ததாக மதிப்பிடப்பட்டது. எதிரிகளை குழப்பத்தில் வைத்திருப்பதற்காக இத்தகைய புள்ளிவிவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், எந்தவொரு ராணுவமும் தங்களிடம் உள்ள ஆயுதங்களின் துல்லியமான எண்ணிக்கையை வெளியிடுவதில்லை. இந்த போர் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28 முதல் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல்கள் 86% குறைந்துள்ளதாக அமெரிக்க மூத்த தளபதி ஜெனரல் டான் கெய்ன் புதன்கிழமையன்று கூறினார். போருக்கு முன்னதாக பல்லாயிரக்கணக்கான 'ஷாஹெத்' டிரோன்களை இரான் தயாரித்ததாகக் கருதப்படுகிறது. இந்த வடிவமைப்பு ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது ரஷ்யா தனது சொந்த ஷாஹெத் பதிப்பை பயன்படுத்தி யுக்ரேனில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா கூட இந்த வடிவமைப்பை நகலெடுத்துள்ளது. ஆனால் மோதல் தொடங்கிய முதல் நாளில் இருந்து இரானின் டிரோன் ஏவுதல்கள் 73% குறைந்துள்ளதாக கெய்ன் கடந்த வாரம் கூறினார். இரான் தனது செயல்பாடுகளின் வேகத்தை தக்கவைக்க போராடி வருவதாகத் தெரிகிறது. இந்த வியத்தகு சரிவு, கையிருப்புகளை பாதுகாக்கும் ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். ஆனால் உற்பத்தியைத் தொடர்வது இனி கடினமாகவே இருக்கும். பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,இரானில் பாதிப்பை காட்டும் படம் வான்வழி தாக்குதல் வரம்புகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் இப்போது இரான் மீது வான்வழி ஆதிக்கத்தை பெற்றுள்ளன. இரானின் பெரும்பாலான வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது இரான் விமானப்படையும் வலிமையாக இல்லை. போரின் அடுத்த கட்டம் இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்களை அழிப்பது மற்றும் ஆயுதக் கிடங்குகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அழிப்பதில் கவனம் செலுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. இரானின் போர் புரியும் திறனைக் குறைப்பது இப்போது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எளிதாக இருக்கலாம். ஆனால் அதன் அனைத்து ஆயுதக் கிடங்குகளையும் அழிப்பது கடினமாக இருக்கும். இரான் ஒரு பெரிய நாடு. ஆயுதங்களை மறைக்க இன்னும் வாய்ப்புகள் உள்ளன. சமீபத்திய வரலாறு வான்வழியாக நடத்தப்படும் போர்களின் வரம்புகளையும் காட்டுகிறது. இராண்டு ஆண்டுகள் நடத்திய தீவிர குண்டுவீச்சுக்கு பிறகும் காஸாவில் ஹமாஸை இஸ்ரேல் ராணுவம் இன்னும் அழிக்கவில்லை. ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஒரு வருட கால அமெரிக்க குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தப்பிப்பிழைத்தனர். அவர்களின் சில ஆயுதங்களும் அவ்வாறே தப்பின. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் தாக்குதலால் மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்ட பாதிப்பு அமெரிக்கா அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவமாகத் தொடர்கிறது. அதன் ஆயுத கையிருப்பு மற்ற எந்த நாட்டையும் விட அதிகமானதாக இருக்கும். ஆனால் அமெரிக்க ராணுவம் பெரும்பாலும் விலையுயர்ந்த நவீன ஆயுதங்களையே நம்பியுள்ளது. அவை குறைந்த அளவில் தயாரிக்கப்படுகின்றன. உற்பத்தியை விரைவுபடுத்துமாறு வலியுறுத்துவதற்காக பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களை டிரம்ப் சந்தித்தார். இந்த போர் அமெரிக்க ஆயுத வளங்களில் அழுத்தத்தை உண்டாக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். அமெரிக்காவிற்கு இப்போது நெருக்கமான தூரத்தில் இருந்து தாக்குதல்களை நடத்துவதற்கு சுதந்திரம் கிடைத்துள்ளதால், அந்த அழுத்தம் ஓரளவு குறைந்திருக்கலாம். டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகள் போன்ற அதிக விலை கொண்ட மற்றும் அதிநவீன நீண்ட தூரம் செல்லும் ஆயுதங்களான "ஸ்டாண்ட்-ஆஃப் ஆயுதங்களை" பயன்படுத்துவதை அமெரிக்கா ஏற்கனவே நிறுத்திவிட்டதாக கெய்ன் கூறினார். அமெரிக்க விமானப்படை இப்போது குறைந்த விலையிலான "ஸ்டாண்ட்-இன்" ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. அதாவது, இவை இலக்கின் மீது நேரடியாக வீசக்கூடிய ஜே.டி.ஏ.எம் குண்டுகள் போன்றவை. மார்க் கான்சியன் என்ற முன்னாள் அமெரிக்க கடற்படை கர்னல், உத்தி மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார். ''ஆரம்பத்தில் தொலைதூரத்திலிருந்து தாக்குதல் நடத்திய பிறகு, இப்போது அமெரிக்க ராணுவம் அதிக விலை உள்ள நீண்ட தூர ஆயுதங்களுக்கு பதிலாக குறைந்த செலவான ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை பயன்படுத்த முடியும்.'' என்றார் மார்க் கான்சியன் அமெரிக்காவால் இந்த அளவிலான போரை "கிட்டத்தட்ட காலவரையின்றி" தொடர முடியும் என்று அவர் தெரிவித்தார். போர் நீண்ட காலம் நீடிக்கும் போது, இலக்குகளின் பட்டியலும் சிறியதாகிறது. அதாவது செயல்பாடுகளின் வேகம் படிப்படியாகக் குறையும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் தாக்குதலால் பஹ்ரைனில் ஏற்பட்ட பாதிப்பு வான் பாதுகாப்பு அமெரிக்காவிடம் பல்லாயிரக்கணக்கான ஜே.டி.ஏ.எம் குண்டுகள் இருப்பதாகவும், ஆனால் விலையுயர்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளின் இருப்பு குறைவாக இருப்பதாகவும் கான்சியன் கூறுகிறார். மோதலின் ஆரம்ப கட்டங்களில், இரானின் பதிலடி தாக்குதல்களின் அச்சுறுத்தலை முறியடிக்க அவை அவசியமாக இருந்தன. பேட்ரியாட் ஏவுகணைகளுக்கு அதிக தேவை உள்ளது. அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அதன் அரபு நட்பு நாடுகளுக்கும் யுக்ரேனுக்கும் கூட அதிகமான தேவை உள்ளது. ஒவ்வொரு இடைமறிப்பு ஏவுகணையும் 4 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக செலவாகும். மேலும் அமெரிக்கா தற்போது ஆண்டுக்கு சுமார் 700 ஏவுகணைகளை உற்பத்தி செய்வதாக நம்பப்படுகிறது. இரானால் இன்னும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ முடிந்தால், அது இந்த வரையறுக்கப்பட்ட கையிருப்புகளை குறைக்கும். அமெரிக்காவிடம் சுமார் 1,600 பேட்ரியாட் ஏவுகணைகள் கையிருப்பில் இருக்கலாம் என்று கான்சியன் மதிப்பிடுகிறார். ஆனால் சமீப நாட்களில் அவை பயன்படுத்தப்பட்டதால் குறைந்து இருக்கலாம். வானிலிருந்து தரையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலை அமெரிக்கா "நீண்ட காலம்" தொடர்ந்து நடத்த முடியும் என அவர் கூறுகிறார். ஆனால் எதிரியின் தாக்குதலில் இருந்து காக்கும் வான்வழி பாதுகாப்பு என்பது "சற்றே உறுதியற்றதாக" உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். "அதிபர் டிரம்ப் பேட்ரியாட் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்த முடிவெடுத்தால், இரானியர்களை விட அமெரிக்காவால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இதனைச் செய்வதில் ஒர் அபாயம் உள்ளது. அப்படி செய்தால், பசிபிக் பகுதியில் ஏற்படக்கூடிய மற்றொரு சாத்தியமான மோதலை சமாளிக்க அமெரிக்காவிடம் குறைவான பேட்ரியாட் ஏவுகணைகளே இருக்கலாம்'' ஆனால்,"இரானால் எங்களை விட நீண்ட காலம் நீடிக்க முடியாது" என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிபடக் கூறுகிறார். இதுகுறித்து அவர் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம். https://www.bbc.com/tamil/articles/cj988kexznjo
  26. G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி Mar 9, 2026 - 12:48 PM உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 2022-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரையும் தாண்டியுள்ளது. இது குறித்து விவாதிக்க G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விலை உயர்வுக்குத் தீர்வாக, அவசரகால எரிபொருள் இருப்புகளை சந்தையில் வெளியிடும் முன்மொழிவு குறித்து அவர்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா ஏற்கனவே தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் G7 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. எவ்வாறாயினும், இந்தச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாயர் ஒன்றின் விலை 117.65 அமெரிக்க டொலரில் இருந்து 104 டொலராக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmmiumjwx000h356puipnd3it

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.