Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இந்தியாவில் தேர்தல் கணிப்புகள் தாயக் கட்டைகள் உருட்டி விடுவது போல. மக்கள் கருத்து கணிப்புகளை எடுப்பவர்களை உருட்டி விடுகின்றார்கள் என்றும் சொல்லலாம்.............🤣. பிரசாந்த் கிஷோர் இந்தியாவின் மிகப் பிரபலமான தொழில்முறை தேர்தல் ஆலோசனையாளர். கோடி கோடியாகக் கொடுத்து அவரை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. சில தேர்தல்களில் அவர் வெற்றிகளைப் பெற்றும் கொடுத்தார். 'எல் கே ஜீ' என்று ஒரு தமிழ்ப்படம் கூட இந்த கதையுடன் வந்தது. இன்று விஜய்யின் அரசியல், தேர்தல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி இருக்கின்றார். இவருக்கு முன்னால் பிரசாந்து கிஷோரே வருவதாக இருந்தது. இவர் மிகச் சரியாக கணக்கை மாற்றுவார் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. பிரசாந்த் பீஹார் தேர்தலில் அவரே நின்றார். ஒரு கட்சி ஆரம்பித்தார் என்றும் நினைக்கின்றேன். அந்த தேர்தலில் தோற்றால் அரசியலை விட்டே ஒதுங்குகின்றேன் என்று சவால்விட்டார். படு தோல்வி அடைந்தார். அப்படி எல்லாம் அரசியலை விட்டே ஒதுங்க முடியாது, நான் ஏன் ஒதுங்க வேண்டும் என்று பின்னர் கேட்டார். ஆனால் அவர் சொன்னதில் சிரிப்பான விசயம் என்னவென்றால் பாஜக கூட்டணி மக்களுக்கு காசு கொடுத்து வாக்குகளை வாங்கி விட்டது என்பதே.................. அடப்பாவி, உன்னையெல்லாம் ஒரு தேர்தல் வித்தகன் என்று நினைத்து இருந்தார்களே................🤣. அம்பானியே தேவையான பணத்தை இறக்கியதாக கிசுகிசுத்தார்கள். எல்லா கட்சிகளும் பணத்தை இறக்குவார்கள், இது ஒரு விசயமே இல்லை............... எடப்பாடியார் கூட டெல்லியில் அம்பானியை சந்தித்து இருந்தார். தமிழ் நாட்டிலும் பணம் கொட்டப் போகின்றது, அம்பானியின் பணமோ, அதானியின் பணமோ அல்லது செந்தில் பாலாஜியின் பணமோ, இப்படி பல பணங்கள். திமுக -- 40 - 45 அதிமுக -- 30 -35 விஜய் -- 15 சீமான் -- 5 என்று நான் உருட்டிய தாயக் கட்டைகள் சொல்லுகின்றது. விஜய்க்கு 15 வீதம் கிடைத்தால் அது வரலாறு காணாத ஒரு விடயம். இந்த தடவை அவருக்கு ஒரு சீட்டும் கிடைக்கப் போவதில்லை என்று நினைக்கின்றேன், ஆனால் ஐந்து வருடங்களின் பின் அவர் எதிர்பார்க்கும் திமுக எதிர் தவெக என்பது நிஜமாகும். அவர் ஐந்து வருடங்கள் அரசியலில் நிலைத்து இருப்பாரா என்பதே கேள்வி. சீமான் என்றும் இருப்பார்.
  3. Today
  4. 87 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்தியா இராணுவம் பலாலி வீதி,காங்கேசன் துறை வீதி வழியாக செல் தாக்குதல்கள் செய்து கொண்டு வீதிகளில்,வீடுகளில் சென்ற இருந்த அப்பாவி பொதுமக்களை ( உ+ம் உரும்பிராய், கொக்குவில், குளப்பிட்டி சந்தி, யாழ் போதன வைத்தியசாலை) கொன்று குவித்து யாழ் நகரை கைப்பற்றினார்கள். நாங்கள் இணுவில் கந்தசுவாமி கோவிலில் அகதியாக இருந்தோம். தீபாவளி அன்று எங்களை போல அருகில் இருந்த இடங்களில் இருந்து தங்களது வீடுகள் பார்க்க சென்ற சிலர் இந்தியா படையினால் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் நாங்கள் இருந்த கோயிலுக்கு பின்னால் இருந்த பாடசாலை மைதானத்தில் எரியூட்டபட்டது. கிட்டத்தட்ட கோயிலில் 45 நாட்கள் இருந்தோம். இடையில் இருமுறை சில மணித்தியாலங்கள் வீடுகள் பார்க்க மக்களை அனுமதித்தார்கள். வீடுகளில் இருந்த கைக்கடிகாரங்கள், சப்பாத்துக்கள், கமராக்கள் உட்பட விலையுயர்ந்த பொருட்கள் களவாடப்பட்டன. டிசம்பர் மாதத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் வீடுகள் பார்க்க அனுமதித்தார்கள். நாங்கள் இணுவில் கந்தசாமி கோவில் முன்வாசல் வழியாக செல்லும் வீதியூடாக காங்கேசன் துறை வீதி ( KKS Road) நோக்கி சென்று கொண்டிருந்தோம். வரிசையில் மக்கள் நிற்க இரு இந்தியா இராணுவத்தினர் ஒவ்வொரு மக்களையும் ஒவ்வொன்றாக போக விட்டனர். அதில் சிக்கிய இராணுவ வீரர் ஒரு சில இளம் பெண்களின் முன்பக்கத்து உடைகளுக்குள் கை வைத்து குண்டுகள் இருக்குதா என்று தேடி கொண்டு இருந்தார். வரிசையின் கடைசியில் இருந்தவர்கள் கவலையுடன் இருந்தார்கள். அப்பொழுது இரண்டாவதாக நின்ற இராணுவ வீரர் தமிழில் ஏன் இந்த வழியாக வருகிறீர்கள், கோயிலுக்கு வலது பக்கத்தின் வழியாக உள்ள வீதியின் ஊடாகவும் செல்லாம் என்று உரத்து கூறினார். உடனே நாங்கள் உட்பட பலர் வலது பக்க வழியாக உள்ள வீதியுடாக சென்றோம். அந்த வீதியில் ஒரு இராணுவ வீரர்களும் இருக்கவில்லை.
  5. டிரம்ப் கூறிய கருத்துகளுக்கு பதிலாக, இங்கே பலத்த எதிர்வினைகளும், களத் தளபதிகளின் கடுமையான அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. சில நேரங்களுக்கு முன்பு, காத்தம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தளபதி மேஜர்-ஜெனரல் அலி அப்தொலாஹி கூறியதாவது: ‘அமெரிக்க மற்றும் சயோனிய எதிரி எந்த வகையான தாக்குதலையும் மேற்கொண்டால், அமெரிக்க “தீவிரவாத படை” பயன்படுத்தும் அனைத்து அடிப்படை வசதிகளையும், சயோனிய ஆட்சியின் அடிப்படை வசதிகளையும், எந்த வரம்பும் இன்றி தொடர்ச்சியான மற்றும் கடுமையான தாக்குதல்களுக்கு உட்படுத்துவோம்’ என்றார். அதற்கு முன்பும், காத்தம் அல்-அன்பியாவின் பேச்சாளர் எச்சரித்ததாவது: ‘உங்கள் தாக்குதல் விரிவடைந்தால், முழு பிராந்தியமும் உங்களுக்கு நரகமாக மாறும் என்பதை மறக்காதீர்கள்.’ மேலும், ‘இஸ்லாமிய குடியரசை தோற்கடிக்கலாம் என்ற உங்கள் மாயை, இப்போது நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு சதுப்புநிலமாக மாறியுள்ளது’ என்றார். அதாவது, அவர்கள் அடிப்படையில் அதே வகையான பதிலடி, அதே அளவிலான சேதம், அதே வகை வசதிகளுக்கு எதிரான தாக்குதல்கள்—பிராந்தியத்திலும், இஸ்ரேலிலும்—நடக்கலாம் என்று எச்சரிக்கிறார்கள். ஈரானுக்கு அந்த திறன்கள் உள்ளன, மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு துன்பம் ஏற்படுத்த முடியும் என்பதை தாங்கள் நிரூபித்துள்ளோம் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். Al Jazeera‘We got him’: Trump confirms rescue of missing US officer...Iran says US-Israeli attacks on the Mahshahr Petrochemical Zone have killed five and wounded 170.முன்னாள் ஓமான் ஷூரா கவுன்சில் துணைத் தலைவர் இஷாக் பின் சாலிம் அல்-சியாபி, அமெரிக்கா “தகராறுகளை தீர்த்து, அனைவருக்கும் நீடித்த அமைதியை ஏற்படுத்தும்” பேச்சுவார்த்தைகளில் “துரோகம்” செய்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அரசு “வெளிப்படையான, வெறுப்பூட்டும், அநியாயமான தாக்குதலை குற்றமற்ற மக்கள்மீது நடத்துகிறது; அவர்களின் ஒரே ‘குற்றம்’ — மரியாதையுடனும் அமைதியுடனும் வாழ விரும்புவது!” என்று அவர் கூறியுள்ளார். “இப்போது அனைத்து அமெரிக்கப் பொருட்களுக்கும் தடைகள் விதிக்க பல வலுவான காரணங்கள் உள்ளன!!!” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஈரான் அணு ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஓமான் ஒரு நடுவராக செயல்பட்டது. அதன் பின்னரும் பல முறை நடுவராக செயல்பட்டுள்ளது, ஆனால் இதுவரை அதே அளவிலான வெற்றியைப் பெறவில்லை.
  6. கவிஞரே, நீங்கள் எந்த நடிகரினதும் ரசிகர் அல்ல என்பது எனக்கு நல்லதொரு விடயம். அதே போலவே நீங்கள் எந்த நாட்டின் தலைவர்களினதும் ரசிகர் இல்லை என்றே நினைக்கின்றேன். ஒருவரின் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடுவது அல்லது விவாதிப்பது எங்கள் தலையை நாங்களே சுவற்றில் மோதுவதற்கு சமம். தொடர்பில் இருக்கும் என்னுடைய நண்பர்களில் நான்கு பேர்கள் விஜய்யை ஆதரிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் நால்வருமே ஏலவே விஜய்யின் சினிமா ரசிகர்கள். கோர்வையாக ஒரு காரணம் சொல்ல முடியாதவர்கள். நானும் அவர்களுடன் விஜய்யின் அரசியல் பற்றி எதையும் விவாதிப்பதில்லை; மெதுவாக சிரித்து மழுப்பி விட்டு ஈரான், உக்ரேன் என்று வேறு எதையாவது பேசிக் கொண்டிருக்கின்றேன். ட்ரம்பின் ரசிகர்கள், புட்டினின் ரசிகர்கள், கொமெய்னிகளின் ரசிகர்கள் என்று அங்கேயும் ஆள் பார்த்து நழுவ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. உங்களின் அனுபவத்திற்கும், தெளிவுக்கும் நீங்கள் விஜய்யிடம் எதையோ காண்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். நான் விஜய்யிடம் அப்படி ஒன்றையும் இதுவரை காணவில்லை. ஏற்கனவே இரு கட்சிகள் தமிழக மக்களின் தலைகளில் குப்பைகளை கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மூன்றாவதாக விஜய்யும் அதே குப்பையை, அல்லது அதை விட மோசமான குப்பையை கொட்டுகின்றார் என்றே நான் நினைக்கின்றேன். இவர் ஒரு மாற்று கிடையாது என்பதை விடவும், இப்பொழுது இருப்பதை விடவும் சிறிதாவது நல்லதாக ஒன்று வருவதையும் இவர் இன்னும் நீண்ட காலத்துக்கு தடுத்து விடுவார் என்றே நினைக்கின்றேன். சேரனின் பெயரை நான் தவிர்த்திருக்க வேண்டும். சேரன் பிக்பாஸ் நிகழ்வில் நடந்து கொண்ட விதம் பற்றி அராத்து எழுதியிருந்த ஒரு ஆக்கத்தை நீங்களோ கோஷானோ படிக்கவில்லை போல............ தலைப்பாகை போய் விட்டது, ஆனால் என் தலை தப்பியது................ இங்கு ஒரு தமிழ்ச்சங்கத்தால் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று திட்டமிடப்பட்டது. அவர்கள் எல்லோரும் தமிழ் நாட்டவர்களே. செயற்குழு உறுப்பினர்கள் சிலர் என்னுடைய நண்பர்கள். பின்னர் இளையராஜா கேட்கும் தொகையும், வசதிகளும் எங்களால் முடியவே முடியாது என்று கைவிடப்பட்டது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழர் ஒருவர் இளையராஜாவுக்கு கொடுத்த முன்பணத்தால், அந்த நிகழ்வும் நடக்கவில்லை, வீடிழந்து போன கதையை நான் கேள்விப்பட்டிருந்தேன். அன்றைய சாதாரண பண்ணைபுரத்து ராசையா என்ன இன்று என்ன இப்படி கேட்கின்றாரே என்ற எண்ணம் எனக்கு அன்று வரவில்லை. ஆனால் மனிதர்கள் காட்டும் வெளித் தோற்றத்துக்கும், அகத் தோற்றத்துக்கும் இருக்கும் இடைவெளியை அந்த நிகழ்வு மேலும் உறுதிப்படுத்தியது. சேரன் மற்றும் பலர் பற்றி கீழே கோஷானின் பதிவின் கீழ் தொடர்கின்றேன்........... நீங்கள் சொல்லியிருப்பதும் அவ்வளவும் நடந்தவையே. இவர்களுக்கு அறம் நேர்மை, தூய்மை, பொதுவாழ்வு பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது என்பதும் சரியே என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் நித்தி சொன்னார், ஜக்கி சொன்னார், பிரேமானந்தா சொன்னார், சாயிபாபா சொன்னார் என்று சொல்லும் இந்தச் சாமிகளின் பக்தர்களிடம் எல்லாம் நீங்கள் முன்வைத்திருக்கும் அதே வாதத்தையே நான் இன்றும் முன்வைக்கின்றேன். சினிமா துறையில் இருக்கும் எவரிடமாவது இந்த அருகதைகள் இருக்கின்றதா என்ற கேள்வி அடுத்ததாக வருகின்றது. சினிமாத் துறையில் இருக்கும் எவர் மேலாவது இவை போன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருக்கின்றதா என்றும் கேள்வி இருக்கின்றது. வரி ஏய்ப்பவர்களாக இருக்கின்றார்கள், பல தாரம் மணம் புரிபவர்களாக இருக்கின்றார்கள், பெண்களை ஏமாற்றுபவர்களாக இருக்கின்றார்கள். நடிகர் சிவகுமார் சுத்தமே என்று சொல்ல வந்தாலும், அவர் கூட அந்த ஒரு மனிதனின் கையில் இருந்த அலைபேசியை பறித்து எறிந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது. இப்பொழுது விஜய்க்கு வருவோம். வரி ஏய்ப்பது ஒரு விசயமே இல்லை. அதை எல்லோருமே செய்கின்றார்கள்; விஜய்யும் செய்கின்றார். இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கூட சினிமா மற்றும் அரசியல் உலகில் சாதாரணமே. எம் ஜிஆர், கருணாநிதி, கமல் என்று எல்லோரையும் சொல்லலாம். விஜய்யும் செய்கின்றார். ஆனால், இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து கொண்டு கட்டிய மனைவியை 'வொர்த்தே இல்லை..............' என்று இதற்கு முன் எவரும் சொன்னதில்லை. ஒரு பெண்ணை இப்படி எவரும் இழிவு செய்ததில்லை. அப்படியான விஜய் பொதுவாழ்வில் இருக்கலாமா............... இவரிடம் அறம், நேர்மை, தூய்மை எனபன இருக்கின்றதா.................
  7. இந்திய அரசியல்வாதிகள் மாதிரி… அனுதாபம் தேடும் முயற்சியாக இருக்கலாம். ட்ரம்பு… முழு முட்டாள் என்றாலும், நடிகன்(டா)…. 😂 🤣
  8. யாழ் இணையத்தின் அகவை இருபத்து எட்டிற்கான வாழ்த்து பாடல் மிக சிறப்பாக உள்ளது. நன்றி, வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!
  9. Yesterday
  10. சிலதை கவனிக்க தவறுகிறீர்கள். இந்த லோக்போல் அமைப்பு போன வருட பீகார் தேர்தலில் காங்கிரஸ் லாலு கூட்டமைப்பு அதீத வெற்றி என்றது நடந்ததோ அதற்கு சரி எதிராக. இதேபோல்தான் சதீஸ்கர் இன்னும் 2 வட மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டு வெல்லும் என பிழையாக கணித்தத்து இந்த அமைப்பு. இந்தியாவின் first past the post அமைப்பில் சதவீத கணக்கு தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்து தொகுதி பங்கீடு செய்தால் மட்டுமே பலன் கொடுக்கும். தேர்தல் முடிந்த பின் சீட் கணக்குத்தான் செல்லும். இந்த கணிப்பின் படி அதிமுக 42 விஜை 10 எண்டாலும் கூட பெரும்பான்மையை நெருங்க கூட முடியாது. திமுக தனி கட்சியாக மெஜாரிட்டி ஆட்சி அமைக்கும். இந்த கணிப்பு சரியானால். அண்ணனை அடிப்பதில் அப்படி ஒரு அலாதி இன்பம் என வைத்து கொள்ளுங்கள் 😂. கேட்ட ஆதாரம் எல்லாம் தந்தவுடன், பதில் இல்லாமல் புலம்பலுக்கு தாவி விட்டீர்கள் போல் உள்ளது. பிகு சீமானுக்கு மட்டும் ஏன் ஸ்பெசல் டிரீஎட்மெண்ட் என்ற கேள்வி பலதடவை யாழில் கேட்க பட்டு பலதடவை பதில் கொடுக்கப்பட்டுள்ளது. புலவருக்கு கூட முன்னர் இதையிட்டு விரிவாக பதில் எழுதியுள்ளேன். 2nd shy சோதனை எழுதும் போது, past papers வினா விடை கொத்தை படித்து விட்டு வரவும் 😂
  11. வரும் தேர்தலில் நாதக 4.5 வீதத்துக்கு மேல் கிடைக்காது என்றும் நம்பும் சீமான் எதிர்ப்பாளர்கள் சீமானை கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம் எதற்காக சீமானை விமர்சிக்கிறார்கள் என்று விளங்கவில்லை.0.5 வீத வாக்குகளை வைத்திருப்பவர்களே பதவியையும் பெட்டியையும் தொகுதிகளையும் பெறும்போது வராத கோபம் சீமான் மேல் வருகிறது?சித்தாந்த வேறுபாடுதான் அவர்களை கொமுப்படைய வைக்கிறது.4வீதத்திற்கும் குறைவாகப் பெறும் சீமானால் ஒரு மாற்றமும் வராது அதைதியாக தூங்குங்கள். தமிழக தேர்தலில் கருத்துக்கணிப்பு நடத்திய TV க்களில் CCTV தவிர மற்றயவை எல்லாம் திமுக அமோக வெற்றிபெறும் என்றும் தவெக 20 வீத்ததுக்கு மேல் பெறும் என்றும் எதிர்வு கூறியுள்ளன.1 மாத்தில் எல்லாம் தெரிய வரும்.
  12. இன்னுமொரு கருத்து கணிப்பு, தவெக 23.9% வாக்குகள் பெறும் கட்சி என எதிர்வு கூறியுள்ளார்கள், தவேக அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் விஜய் துணை முதலமைச்சராக வர வாய்ப்புள்ளது, நாதக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்பதில்லை எனும் முடிவு இந்த நிகழ்வால் மாற வாய்ப்பில்லை என கருதுகிறேன் அதனால் அதிமுக + த வெ க கூட்டணி ஆட்சியினை பிடிக்க வாய்ப்புள்ளது போல காணப்படுகிறது.
  13. தமிழ்நாட்டு தேர்தலில் இதுவும் ஒரு முக்கியமான செய்தி.
  14. வெற்றியும் பலமும் யார்பக்கம் நிற்கின்றதோ அந்தப்பக்கம் நிற்பதே மதில் மேல் பூனைகளின் வழக்கம்
  15. படம் பார்க்கவில்லை. ஆனால் ரானா ஒரு தெலுங்கன்…எனவே படம் பார்க்க கூடாது என ஒரு குரூப் சொல்லி திரிகிறது. எனது கருத்து: இந்தியாவில் இருந்து வரும் எந்த படமும், எமது போராட்டத்தில் இந்தியனின் நரித்தனத்தை காட்டாது. இந்தியன் ஆமி, இலங்கை ஆமியை விட மோசமான பாலியல் வல்லுறவாளர் என காட்டாது. காட்ட அவர்களின் இந்திய பாசம் விடாது. அப்படியே காட்டினாலும் சென்சார் விடாது. இந்தியாவின் கோரமுகத்கை காட்டாத எம்மை பற்றிய எந்த படமும், குறிப்பாக 87-90 காலப்பகுதியில் நடந்த கதைகளம் எனில், அது வெள்ளை அடிப்பு என்ற வகையில்தான் அடங்கும். வழமை போல் எம்மை இன, போர் வெறியராக, பயங்கரவாதிகளாக சித்தரிக்காமல் விட்டார்களே என நிம்மதி வேண்டுமானால் அடையலாம்.
  16. உக்ரேன் கருத்து வெற்றிக்காக அமெரிக்காவும் மேற்குலகும் தெய்வம் என்ற குரல்கள் இன்று அமெரிக்காவையும் திட்டி தீர்க்கின்றன.😎
  17. இதென்ன பிரமாதாம் பொட்டம்மான் என்ன முடியா என கேட்ட தமிழ் தேசியவாதிதான் இந்த சீமான். அண்மையில் ஒரு காணொளியில் தூசண துரைமுருகன் பச்சை தூசணத்தில் மேடையில் பேசி விட்டு… நான் பிரபாகரன் பிள்ளைடா எங்கிட்ட வச்சுகாதே என்கிறார்… தலைவரை இதைவிட வேறு எந்த அமைப்பும் அவமானபடுத்தியதில்லை.
  18. இந்திய ராணுவத்துக்கு வெள்ளை பெயின்ட அடிச்சு படம் எடுத்திருக்கிறாங்கள்... கல்யாணப் பொம்பளைய இந்திய ராணுவம் வன்புணராமல் விட்டுவைத்ததா🙄😒😏 வரலாற்று திரிபுகள் பல....
  19. இதிலே பெரியவன் அல்லாஹ்வின் கைவரிசைகள் ஒன்றும் இல்லையா அல்லாகு அக்பர் முழக்கங்கள் கேட்கின்றனவே
  20. சேரன் எல்லாம் ஒரு ஆளே இல்லை… மகள் சாதி மாறி திருமணம் செய்த விடயத்தில், இயக்குனர் பாலா என்கிற ரவுடியை கூட்டி கொண்டு போய் அராஜகம் பண்ணியவர்தான் இந்த சேரன். பாலா, சேரன், அமிர் எல்லாரும் சீமானை போல சினிமா குட்டையில் ஒன்றாக ஊறிய மட்டைகள்தான். இவர்கள் அனைவரினதும் பிதாமகன் சட்டை மாற்றுவது போல் பெண்களை மாற்றும், தான் 60 வயது தாண்டிய பின் 18 வயதும் ஆகாத மோனிஷாவோடு சேர்ந்து வாழ்ந்த பாலுமகேந்திரா. பாலுமகேந்திராவின் செத்தவீட்டில் கூட அந்த பெண்ணை இழிவுபடுத்திய கூட்டம். இவர்களுக்கு அறம், நேர்மை, தூய்மை, பொதுவாழ்வு பற்றி கதைக்க எந்த அருகதையும் இல்லை.
  21. இந்த பாண்டே ஒரு தீவிர பிஜேபி பிரசாரகர். H. ராஜா ஷர்மா என்று ஒரு பிஜேபிகாரரும் சீமானை ஆதரித்து பேசி இருக்கின்றார்.சீமானுடைய கொடுக்கபட்ட பணி பெட்டியை வாங்கி கொண்டு தமிழ்நாட்டை குழப்பி அடித்து பிஜேபி தேர்தலில் வெல்வதற்கு வழி அமைத்து கொடுப்பதே . ஆனால் பாண்டே சீமான் Ideologically driven செய்கின்றார் என்று சொல்லி கேலி கூத்தாகிவிட்டார் எங்களை சுயமரியாதையுடன் வாழ கற்று தந்த தலைவன் தந்தை பெரியார். தள்ளாத வயதில் முதுமையின் காரணமாக முதுகு முறிந்த போது கூட எங்களை நிமிர வைத்தவனடா எங்கள் அய்யா என்று மேடையில் கத்தி பேசிவிட்டு இப்போது பெரியார் எனக்கு மண் என்பது தான் அவருடைய கொள்கை பாதை
  22. தம்பர் வைத்தியசாலையில் அனுமதிப்பு என்கிறன சில எக்ஸ் கணக்குகள்.
  23. இந்த படத்தைப் பற்றி நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. தியேட்டரில் போய்ப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்காது. எப்போதாவது OTTயில் வெளிவரும் போது பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.