Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு 27 Feb, 2026 | 11:51 AM தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இக்கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு
  3. 'ஸ்டாலின் அனைவரையும் அரவணைக்கிறார், எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி' - திமுகவில் இணைந்தபின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி 27 பிப்ரவரி 2026, 04:37 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வருபவருமான ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (பிப்ரவரி 27) சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். "அறிஞர் அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் பெரு மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னதாக, அவர் வெள்ளிக்கிழமை திமுகவில் இணையக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான அய்யப்பனும் திமுகவில் இணைந்தார். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். அதன்பிறகு, தலைமைச் செயலகம் சென்ற பன்னீர்செல்வம், தனது போடிநாயாக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினாதார். அவருடன் அய்யப்பனும் தனது உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ஓ.பன்னீர் செல்வம் கூறியது என்ன? இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "அறிஞர் அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் பெரு மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்" என்று கூறினார். "தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் அனைவரும் மீண்டும் இந்த ஆட்சியையே விரும்புகிறார்கள். உறுதியாக, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக்கும்" என்றும் அவர் கூறினார். "அரசியலில் ஒரு சர்வாதிகாரியாக, ஆணவப் போக்குடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெற முடியாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளார்" என்று கூறினார். "இன்றைக்கு அரசியலில் அண்ணா காட்டிய வழியிலும், கலைஞர் (கருணாநிதி) காட்டிய வழியிலும் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரு அரசியலை முதலமைச்சர் மேற்கொள்கிறார் என்பதை உணர்ந்து தான் நான் திமுகவில் இணைந்துள்ளேன்" என்று அவர் கூறினார். "திராவிட இயக்கத்தின் நூற்றாண்டில், அதை அழிப்பதற்கான பல முயற்சிகள் எந்தச் சூழலில், எப்படி ஏற்பட்டாலும் அதை தடுத்து, திராவிட இயக்கத்தை கட்டிக் காப்பதில், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் நின்று, திராவிட சித்தாந்தத்தை காப்பதில் முதலமைச்சர் முன்னிலையில் உள்ளார்." என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். "அதிமுகவில் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியில் சர்வாதிகாரத்தோடு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் அந்தப் பதவியில் அமர்ந்த பிறகு, அதிமுகவை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றுகொண்டிருக்கிறார். இதை நினைத்து தான் பல அதிமுக தொண்டர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொள்கிறார்கள். தென்மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு தலைவரும் வந்துவிடக்கூடாது என்பதில் பழனிசாமி கவனத்துடன் இருக்கிறார்" என்று அவர் கூறினார். "திராவிட இயக்கத்தை காக்க, திராவிட கொள்கையைக் காக்க, தமிழ்நாட்டைக் காப்பதற்கும், வளர்ச்சிக்கும் ஒரு தலைசிறந்த இயக்கமாக திமுக விளங்கி வருகிறது என்பதை உணர்ந்து தான், நான் இன்று திமுகவில் இணைந்துள்ளேன். என்னை அரவணைத்துக் கொண்ட முதல்வருக்கு நன்றி. நான் ஒரு தொண்டனாகவே இணைந்துள்ளேன்" என தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி. ரவீந்திரநாத், "வரும் சட்டப்பேரவை தேர்தலில், தளபதி ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன்" என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது என்ன? "முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பாஜகவுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர். அவரது வரவு நல்வரவாகட்டும்" என்றும் தனது பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg8ky3zmy2o
  4. அத தெரண கருத்துப்படங்கள்.
  5. சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு Feb 27, 2026 - 08:28 AM சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக இதுவரை 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டில் இவ்வாறான சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போதுள்ள அரச பொறிமுறையின் ஊடாக 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது. அதேபோன்று, சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் இன்றி, இன்று (27) அழைத்து வரப்பட்ட சந்தேக நபருடன் மொத்தம் 14 பேரை நாட்டிற்கு கொண்டு வர முடிந்துள்ளது. சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் இல்லாத நிலையில், அந்தந்த நாடுகளின் குடிவரவு குடியகல்வு குற்றங்கள் மற்றும் நாடுகடத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேரடி தலையீடு மற்றும் அந்த நாடுகள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்களை எம்மால் அழைத்து வர முடிந்தது. மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டில் இந்த சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அதிகபட்ச முயற்சி எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு
  6. இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை இலங்கை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2026 ஜனவரி மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோடு தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது. ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் ரூபா 16,730 வருமானம் அவசியமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு மாதமொன்றுக்கு ரூபா 18,044 தேவைப்படுகிறது. பணவீக்கம் மேலும் மொனராகலை மாவட்டத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு மாதமொன்றுக்கு ரூபா 15,997 போதுமானதாகும். வறுமைக் கோடு என்பது ஒரு நபர் தனது அடிப்படை உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான குறைந்தபட்ச செலவினைக் குறிக்கிறது. பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களுக்கு ஏற்ப இது மாதாந்தம் திருத்தியமைக்கப்படுகிறது. தரவுகள் மதிப்பீடு இந்த உத்தியோகபூர்வ வறுமைக் கோடானது 2012/13 ஆம் ஆண்டின் 'குடும்ப வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்பின்' (HI&ES) அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (NCPI) பயன்படுத்தி, மாவட்டங்களுக்கு இடையிலான விலை வேறுபாடுகளுக்கு ஏற்ப இந்தத் தரவுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை
  7. இந்த இடத்தில தான் கிளைமாக்‌ஸ் வருது.
  8. பிள்ளையானுக்கே இன்னும் விசாரனை பூர்த்தியாகவில்லை ...ஆகவே சாலே 72 மணித்தியாலத்தில் பிணையில் விடுவிக்கப்படலாம்....மரண தண்டனை வரை செல்ல மாட்டார்கள் ....அப்படி சென்றால் ஆட்சி ஆட்டம் காணும் ....
  9. Today
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  11. நானும் இதை அறிந்திருக்கின்றேன்
  12. நான் எப்பவும் சுவியருக்கு பின்னும் முன்னும் திரியறனான்.எப்படி இதை தவற விட்டேன் என்று தெரியவில்லை.அருமை.
  13. முழு ஆவணம்:
  14. சரி, இவர் கொடிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர உதவியவர், ஆகையால் அவர் அப்பாவிகள் மேல் நடத்திய இன்னொரு பயங்கரவாத செயலை காணாமல் விட்டு விட வேண்டுமா? இவர் செய்தார் என சந்தேகிக்கப்படும் தாக்குதல் பற்றி விசாரிக்க முன்னமேயே போர்க்கொடி தூக்கும் இவர்கள், போர் முடிவுக்கு வந்தவுடனேயே பொன்சேகா சிறையிலடைக்கப்படும்பொழுது ஏன் இந்த எதிர்ப்பை காட்டவில்லை? அவரும் போரை முடிவுக்கு கொண்டுவர முன்னின்று உழைத்தேன் என்கிறாரே? சுரேஷ் சலே என்ன அரசியல் வாதியா அவரை அனுரா பழிவாங்குவதற்கு? இராணுவ புலனாய்வே இந்த விசாரணையை நடத்தி இவரை கைது செய்திருக்கிறது, புலிகளையும் புலம்பெயர்ந்தோரையும் மகிழ்ச்சிப்படுத்த கைதுகள் நடைபெறுகின்றன என்று கூறுகிறார்களே, அப்புலிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட கொலைகள், கொள்ளைகள் வெளிவருவதனால் எல்லா அ நிஞாயங்களையும், புலிகளை புலம்பெயர்ந்தோரை சாட்டி தப்பித்துக்கொள்ளலாம் என்கிற பிழையான கலாச்சாரம், வரலாறு உருவாக்கப்பட்டதினாலேயே இன்று நாடு கொலைகளால் நிறைந்துள்ளது. முசுறுக்கூட்டை அனுரா குழப்பிவிட்டுள்ளார், இனி கலைந்த கூட்டம் அகப்பட்டவர்களை எல்லாம் தாக்கத்தான் செய்யும் தம்மை பாதுகாத்து கொள்வதற்காக. சலேயின் குற்றம் நிரூபிக்கப்பட்டால்; அவருக்கும் அவரின் எஜமானர்களுக்கும் மரணதண்டனை அளிக்கப்படவேண்டும். எத்தனை அப்பாவிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இவர்களின் அரசியலுக்காக அநிஞாயமாக பலிவாங்கப்பட்டிருக்கிறார்கள்.
  15. முன்பு இலங்கையில் இந்தியா அமைதிப்படை இருந்தகாலங்களில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்கும் போது அம்பிடும் அப்பாவி பொதுமக்களை அதிகமாக தாக்குவதாக சொல்லுவார்கள்.
  16. பிச்சுமணி எனும் கோவில் மணி அடிக்கும் கரெக்டரில் இருக்கும் வடிவேலு தனக்கு அரச வேலை கிடைத்ததும் சொல்லுவார்… நான் அடிச்சமணி ஆண்டவனுக்கு கேட்டதோ இல்லையோ அரசாங்கத்துக்கு கேட்டிருக்கு… அது போல ஆப்கானிஸ்தான் “அடிக்கும்” என நீங்கள் சொன்னது தலிபானுக்கு கேட்டிருக்கு…😂 நேற்றிரவு எல்லையில் பாகிஸ்தான் ஆமிக்கு சப்பல் அடியாம்.
  17. நாட்டைக்கொள்ளையடித்து பதுக்கிய உலக மகா திருடர்களை பாதுகாத்துக்கொண்டு, ஏதோ சின்னஞ்சிறுசுகள் ஆசையில எடுத்த சொக்லெற்றுகளை பெரிய திருட்டுபோல படங்காட்டுகிறார்கள் போலீசார். இவர்கள் செய்யும் போதைப்பொருள் கடத்தலையும் வெளியிடவேண்டும். அந்த சிறுமிகளை பெற்றோரிடம் அல்லது விடுதி தலைவரிடம் ஒப்படைத்து பிரச்சனையை தகுந்த முறையில் சுட்டிக்காட்டி திருத்தியிருக்கலாம், ஏதோ நாட்டைக்கொள்ளையடித்துபோல் செய்தி. என்ன நாடு இது? "தலைவன் எவ்வழி குடிகள், குழந்தைகள் அவ்வழி."
  18. ஆப்கானிஸ்தான் இலங்கை, அவுஸ்திரேலியா விளையாடிய குழுவில் இருந்திருந்தால் கட்டாயம் சூப்பர் 8 க்கு சென்று இருக்கும். நானும் சிலவேளை ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தினை வெல்லலாம் என முதலில் நினைத்தேன். பிறகு நியூசிலாந்தினை தெரிவு செய்தேன்.
  19. Yesterday
  20. 🤣............... ஆப்கானுக்கு தாலி கட்டியது போல ஆகி விட்டது என் நிலை....................🤣. முடியவில்லை, இன்னும் இருக்கின்றது, அண்ணா.................. சூப்பர் எட்டில் ஒரு குரூப்பில் முதலாவதாக வருவார்கள் என்று கூட தெரிவு செய்திருக்கின்றேன்................🤭. .... புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய்ப் பாம்பாகி .... ... ஆப்கானை தெரிந்து.......................🤣.
  21. இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் தமிழர் கொல்லப்பட்டது ...கிரிஸ்தவ மதகுருவுக்கு தெரியும் ...அதுக்கு இதுவரை ஒரு கதையில்லை ..300 பேர் கொல்லப்பட்டதை (கண்டிக்கப்படவேண்டும்) விசுவரூபமாக்கி உலகத்துக்கு காட்டமுற்படுவது .....என்ன நியாயம்....தமிழர் மனித இனமில்லையா
  22. இரண்டு நாட்டிலும் பூட்டிய அறையில் பரீட்சை எழுதி சித்தி எய்திய கல்வியாளர் தொகை கூடிவிட்டதோ?
  23. அதென்றால் உண்மைதான். ஆனாலும். ஸிம்பாப்வே அவிஸ்ரேலியாவுடன் விளையாடின விளையாட்டுத்தான் உச்சக்கட்டம். சொல்லி அடிச்சாங்கள்.
  24. முதல் சுற்று போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற போட்டிகள் பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக உதவி செய்கின்றது. சிம்பாவேயின் வெற்றியில் பந்து வீச்சாளர்களுக்கும் பங்கு உண்டு. இந்தியா மைதானங்கள் ( குறிப்பாக சென்னை) பந்து வீச்சுக்கு அண்மைக்காலங்களில் பெரிதாக உதவவில்லை. நேற்று சிம்பாவே தோற்றாலும் 184/6 எடுத்திருக்கிறது. முன்பு சூழல் பந்து விச்சுக்கு சாதகமான சென்னை மைதானம் சென்ற ஐபிஎல் போட்டிகளிலும் CSK அணிக்கு சாதகமாக அமையவில்லை. இந்தியா மைதானத்தில் நேபாள அணியுடன் தட்டு தடுமாறி வெற்றி பெற்ற இங்கிலாந்து பிறகு மேற்கு இந்தியா அணியுடனும் தோற்றது. ஆனால் இலங்கை மைதானங்களில் சிறப்பாக பந்து வீசி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது. சிம்பாவே மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலகுவாக பிடிக்க கூடிய பந்தினை நழுவ விட்டதால் ஹெட்மயர் 85 ஒட்டங்களை 34 பந்தில் எடுத்தார். பிடித்திருந்தால் 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து இருப்பார். மேற்கிந்தியா அணியும் 26-2 ஆக இருந்திருக்கும். சிம்பாவே வென்ற இரண்டு பெரிய நாடுகள் அவுஸ்திரேலியா, இலங்கை. இரண்டு நாடுகளும் T20 க்கு முன்பு நடைபெற்ற தொடர்களில் படுதோல்வி அடைந்தன. அவுஸ்திரேலியா பாகிஸ்தானிடம் 3-0 க்கும், இலங்கை இங்கிலாந்திடம் சொந்த மைதானத்திலேயே 3-0 க்கும் தோற்றது. இலங்கை சூப்பர் 8 இல் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடம் தோற்ற விதத்தினை பார்க்கும்போது மிகவும் பலமற்ற நாடக தோன்றுகிறது. பலமற்ற நாடுகளைத்தான் சிம்பாவே இத்தொடரில் வென்று இருக்கிறது போல தெரிகிறது. நான் இந்த போட்டியில் விடைகள் எழுதும்போது அவுஸ்திரேலியாவா தென்னாப்பிரிக்காவா, இலங்கையா நியூசிலாந்தா என்பதை பல முறை யோசித்து பிழையான முடிவுகளை தெரிவு செய்து இருக்கிறேன். இத்தவறான முடிவால் தற்போது போட்டியில் முன்னிலையில் இருக்கும் நான் போட்டி முடிவில் பின்னுக்கு செல்லப்போகிறேன்.
  25. சிம்பாவேயுடன் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 254 ஓட்டங்கள் எடுத்தது. சிம்பாவேயுடன் எதிர்த்து விளையாடிய இந்தியா அணியும் 256 ஓட்டங்கள் எடுத்திருக்கிறது. அடுத்து தென்னாப்பிரிக்கா அணி சிம்பாவேக்கு எதிராக விளையாடப்போகிறது. மருந்துகள் தவறாமல் எடுங்கோ. நன்றாக ஓய்வு எடுங்கள்
  26. எனது சந்தேகம் என்னவென்றால்; இவ்வளவையும் அந்த சிறுமிகள் எப்படி விடுதிக்குள் கொண்டுபோயிருப்பார்கள், எங்கே மறைத்து வைத்திருப்பார்கள்? பொலித்தீன் பைகளில் இத்தனை ஆயிரம் ரூபா தொகையான பொருட்களை கொண்டு செல்ல முடியுமா? அவர்களுக்கு இருப்பது இரண்டு, மொத்தம் ஆறு கைகள் தானே. வேறு கைகளும் இவர்களின் பின்னால் இருந்திருக்குமோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.