Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு! செம்மணி சிந்துப் பாத்தி மனிதப் புதை குழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பூரணி மரியநாயகம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஏற்கனவே யாழ்ப்பாண திறந்த நீதிமன்றத்தில் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது. இதன்படி வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1471212
  3. ட்ரம்பின் எச்சரிக்கையுடன் 110 டொலர்களை விஞ்சிய எண்ணெய் விலை! ஒரே இரவில் ஈரானை முழுவதுமாக அழித்துவிட முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் இன்று (07) ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 110 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான விலையில் வர்த்தகமானது. அதன்படி, சர்வதேச எண்ணெய் விலை அளவுகோலான பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு, ஒரு சதவீதம் உயர்ந்து 111 டொலராக வர்த்தகமானது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 2.6 சதவீதம் உயர்ந்து 115.3 டொலர்களாக வர்த்தகமானது. போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு எதிரான தனது அச்சுறுத்தல்களை ட்ரம்ப் தீவிரப்படுத்தி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் எண்ணெய் விலை தொடர்பான கவலை அதிகரித்து வருகிறது. வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தொஹ்ரான் வொஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை காலக்கெடு விதித்தார். இல்லையெனில் ஈரானின், மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட குடிமை உள்கட்டமைப்புகள் மீது புதிய தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார். அந்த எச்சரிக்கையில் அவர், ஒரே இரவில் முழு நாட்டையும் தம்மால் செயலிழக்கச் செய்ய முடியும், அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம் என்றும் கூறினார். இந்த அறிவிப்புடன் செவ்வாயன்று ஆசியாவின் பங்குச் சந்தைகள் கலவையாகக் காணப்பட்டன. ஜப்பானின் நிக்கெய் குறியீடு மாற்றமின்றியும், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 1.1% உயர்ந்தும் இருந்தன, ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 0.7% சரிந்தது. பெப்ரவரியில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதிலிருந்து சந்தைகள் நிலையற்றதாக இருந்து வரும் நிலையில், இந்தப் போர் அதிக பணவீக்கத்திற்கும் மெதுவான உலகளாவிய வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா திங்கட்கிழமை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1471209
  4. பொதுவாழ்வில் குறிப்பாக அரசியலுக்கு வருவோரின் தனிப்பட்ட வாழ்க்கை பேசு பொருளாவது தேவையானது என்பதே என் நிலை. மனிதர்களை அவர்களின் personality ஐ எடை போடுவது வாக்காளருக்கு முக்கியம். தனி வாழ்வில் அவர்கள் moral compass எப்படி செயல்பட்டது என்பதை வைத்து ஓரளவுக்கு அவர்கள் பொது வாழ்வில் எப்படி இருப்பார்கள் என்பதை ஊகிக்கலாம். விசர் தம்பர், சீமான் ஆகியோர் அண்மைய உதாரணங்கள். Integrity is doing the right thing, even when no one is watching. யாரும் பார்க்காதபோதும் சரியானதைச் செய்வதே நேர்மை. இதன் அர்த்தம் அவர்களின் படுக்கை அறையை எட்டி பார்க்க வேண்டும் என்பதல்ல. ஆனால் விஜி அண்ணியை சீமான் நடத்திய விதம், அவருக்கு தம்பிகள் யாழ் உட்பட்ட தளங்களில் கொடுத்த “பட்டம்” சீமானும் அவரது தம்பிகளும் எப்படி பட்ட ஆட்கள் என்பதை துல்லியமாக காட்டி நின்றது. இன்றைக்கு சீமான் தமிழக பெண் வாக்காளரை பார்த்து…. இலவசமா எல்லாம் தருவான்… பிள்ளையும் தருவான்… வாங்கிகொள்வாயா… என அருவருக்க தக்கவையில் பேசுவது… சீமானை விஜி விடயத்தில் எடை போட்ட என் போன்றோருக்கு அதிர்ச்சியே இல்லை. ஏன் என்றால் அவரின் தனி வாழ்க்கையில் பெண்களை நடத்திய விதம்… யானை வரும் முன்னே கேட்ட மணியோசை.
  5. ஆமாம்..நாளை முதல் இந்த நடை முறை ரத்தாகி விட்டது என்று ஊரிலிருந்து எழுதுபவர்களுடைய பக்கங்களில் பார்க்க முடிகிறது.என்னைப் பொறுத்த மட்டில் நல்ல தீர்மானம்.
  6. நாறிப்போன கிளியை நம்பி மோசம் போவதைவிட அயலவன் மேல், Hong Kong இன்னும் பழைய மாதிரி நன்றாக இருக்கு.
  7. குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) மார்ச் 28, சனி, 14:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB 2) மார்ச் 29, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 3) மார்ச் 30, திங்கள், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் RR 4) மார்ச் 31, செவ்வாய், 15:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் GT 5) ஏப்ரல் 1, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG 6) ஏப்ரல் 2, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR 7) ஏப்ரல் 3, வெள்ளி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் CSK 8) ஏப்ரல் 4, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 9) ஏப்ரல் 4, சனி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 10) ஏப்ரல் 5, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH 11) ஏப்ரல் 5, ஞாயிறு, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் RCB 12) ஏப்ரல் 6, திங்கள், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் KKR 13) ஏப்ரல் 7, செவ்வாய், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் RR 14) ஏப்ரல் 8, புதன், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் DC 15) ஏப்ரல் 9, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR 16) ஏப்ரல் 10, வெள்ளி, 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 17) ஏப்ரல் 11, சனி, 11:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 18) ஏப்ரல் 11, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK 19) ஏப்ரல் 12, ஞாயிறு, 11:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் LSG 20) ஏப்ரல் 12, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 21) ஏப்ரல் 13, திங்கள், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 22) ஏப்ரல் 14, செவ்வாய், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 23) ஏப்ரல் 15, புதன், 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RCB 24) ஏப்ரல் 16, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் MI 25) ஏப்ரல் 17, வெள்ளி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 26) ஏப்ரல் 18, சனி, 11:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB 27) ஏப்ரல் 18, சனி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் SRH 28) ஏப்ரல் 19, ஞாயிறு, 11:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் KKR 29) ஏப்ரல் 19, ஞாயிறு, 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS 30) ஏப்ரல் 20, திங்கள், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 31) ஏப்ரல் 21, செவ்வாய், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் DC 32) ஏப்ரல் 22, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 33) ஏப்ரல் 23, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் MI 34) ஏப்ரல் 24, வெள்ளி, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் RCB 35) ஏப்ரல் 25, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் PBKS 36) ஏப்ரல் 25, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RR 37) ஏப்ரல் 26, ஞாயிறு, 11:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 38) ஏப்ரல் 26, ஞாயிறு, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 39) ஏப்ரல் 27, திங்கள், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 40) ஏப்ரல் 28, செவ்வாய், 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 41) ஏப்ரல் 29, புதன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI 42) ஏப்ரல் 30, வியாழன், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 43) மே 1, வெள்ளி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RR 44) மே 2, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 45) மே 3, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 46) மே 3, ஞாயிறு, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் GT 47) மே 4, திங்கள், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI 48) மே 5, செவ்வாய், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 49) மே 6, புதன், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் SRH 50) மே 7, வியாழன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 51) மே 8, வெள்ளி, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 52) மே 9, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் RR 53) மே 10, ஞாயிறு, 11:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG 54) மே 10, ஞாயிறு, 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் RCB 55) மே 11, திங்கள், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS 56) மே 12, செவ்வாய், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT 57) மே 13, புதன், 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 58) மே 14, வியாழன், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 59) மே 15, வெள்ளி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் LSG 60) மே 16, சனி, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் KKR 61) மே 17, ஞாயிறு, 11:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 62) மே 17, ஞாயிறு, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 63) மே 18, திங்கள், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK 64) மே 19, செவ்வாய், 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR 65) மே 20, புதன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் KKR 66) மே 21, வியாழன், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் CSK 67) மே 22, வெள்ளி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 68) மே 23, சனி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் LSG 69) மே 24, ஞாயிறு, 11:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 70) மே 24, ஞாயிறு, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் KKR கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) அணி? RCB அணி? RR அணி? MI அணி? KKR 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) RCB #2 - ? (3 புள்ளிகள்) MI #3 - ? (2 புள்ளிகள்) RR #4 - ? (1 புள்ளி) KKR 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! அணி? RR 74) செவ்வாய் 26 மே 15:00 UK, Venue TBC - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team அணி? RCB 75) புதன் 27 மே 15:00 UK, Venue TBC - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team அணி? RR 76) வெள்ளி 29 மே 15:00, Venue TBC - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator அணி? KKR 77) ஞாயிறு 31 மே 15:00 UK, பெங்களூரு - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (7 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 அணி? RCB 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? CSK 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? GT 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? TIM DAVID. 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? RCB. 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? NOOR AHMAD. 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? RR. 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? VIRAT KOHLI. 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? LSG. 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? ARSHDEEP SINGH. 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? CSK. 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? SAI SUDHARSAN. 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? CSK. 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? KKR. வெற்றியை நாளை போட்டிகள் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் . ......! 💥
  8. Today
  9. ரசோதரன், சினிமா, அரசியல், போன்றவற்றில் இருப்பவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் அவர்களது தனியுரிமை என்பது அடிப்படை உரிமை. பொதுவெளியில் பிரபலமானவர்களை உலகம் எவ்வாறு மதிப்பீடு செய்கிறது என்ற உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அந்தப் பிரபலங்களில் எத்தனை பேர் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வெளி உலகுக்குத் தெரியாமல், ஒழுக்கத்துடன் வாழ்கிறார்கள் என்பது நமக்குத் சரியாகத் தெரியாது. பல சமயங்களில், அவர்கள் நேரடியாக பதிலளிக்காமல், வார்த்தை விளையாட்டுகளின் மூலம் கேள்விகளைத் கடந்து போய் விடுகிறார்கள். உதாரணமாக, அறிஞர் அண்ணாவிடம் ஒரு நிருபர், “உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?” என்று கேட்டபோது, அவர் “பானுமதியும் படிதண்டா பத்தினியில்லை. நானும் முற்றிலும் துறந்த முனிவனுமில்லை” என்று சொல்லியிருந்தார். இந்தப் பதிலில் அவரது நகைச்சுவைத் திறமை, வார்த்தை ஜாலங்கள் இருந்தாலும், ஒரு குடும்பப் பெண்ணைக் குறிக்கும் விதத்தில் பேசப்பட்டுள்ள ஆணாதிக்கத்தையும் பார்க்கலாம். ஒரு குடும்பப் பெண்ணின் மரியாதை பாதிக்கப்படுவது போன்ற விளைவுகள் பற்றிய உணர்வு அவரது பதிலில் நான் காணவில்லை. இதே போன்ற பாணியைத்தான் அண்ணாவின் தம்பியும் சொன்னார் “எனக்கு துணைவி இருப்பது ஊருக்கெல்லாம் தெரியும். என் மனைவிக்கு மட்டும் தெரியாது” என்று. அரங்கமே ரசித்துச் சிரித்தது. சொன்னவரும் சிரித்தார். ஆக, இதுவும், நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும், அது சமூகப் பார்வையில் பெரிய கேள்வியாக எழவில்லை. நடிகர் விஜயின் நிலையைப் பார்க்கும்போது, அவர் மேற்கண்டவர்களைப் போல சிக்கலான கேள்விகளை திறமையாகத் தவிர்க்கும் அரசியல் அனுபவம் இன்னும் பெறவில்லை என்ற உண்மையை நான் ஒத்துக்கொள்கிறேன். சினிமாவில் ஒரு காட்சி சரியாக வரும்வரை பல முறை ‘ரீடேக்’ எடுக்கலாம். ஆனால் அரசியல் மேடை அப்படியல்ல. ஒருமுறை தவறாகச் சொன்ன வார்த்தை, தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒலிக்கும். அது மீம்ஸாகவும், அரசியல் எதிரிகளின் ஆயுதமாகவும் மாறிவிடும்.அரசியல் தளம் விஜய்க்குப் புதுசு. எனவே, அவர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. எனது பார்வையில், அவர் தனது குடும்ப விஷயங்களைத் தனிப்பட்ட விசயமாகக் கருதி, “இது என் தனிப்பட்ட பிரச்சினை,அதை பெரிதுபடுத்த வேண்டாம். நான் பார்ததுக் கொள்கிறேன்” என்று எளிமையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறாகப் போய்விட்டது. இன்னும் ஒன்றை குறிப்பிட வேண்டும். நடிகர் சிவகுமார், “நான் சினிமா நடிகன் என்பதால் யாரும் எனக்குப் பெண் தர முன்வரவில்லை. எனக்கு திருமணம் நடக்குமா என்றே சந்தேகப்பட்டேன்” என்று கூறியிருக்கிறார். ஒழுக்க சீலனாக அறியப்பட்டவருக்கே அந்த நிலை என்றால், சினிமா நடிகனுக்குப் பெண் கொடுக்கும் போதே யோசிக்கவும் வேண்டும். விஜயின் குடும்ப நிலைமைகள் பற்றிய முழுமையான உண்மை எங்களுக்குத் தெரியாது, ஆகவே அவரைப் பற்றிய நல்லது கெட்டது என்ற தீர்ப்புகளை கூற முடியாது. மேலும், தேர்தல் நேரத்தையொட்டி இப்படிப்பட்ட விவகாரங்கள் பொதுவெளியில் கொண்டு வரப்படுவது, அரசியல் நோக்கத்துடனான பழிவாங்கலாக இருக்கக்கூடும் என்பதையும் மறக்கக் கூடாது. முடிவாக, நல்லவர்கள் என்று கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை என்றால், கோசான் சொன்னது போல், சொத்தைகளில் நல்லதை தெரிந்து எடுக்க வேண்டும்.
  10. சிலருக்கு அர்ச்சுனா அவர்கள் றோசா, மலராகத் தெரிகிறார். வேறு சிலருக்கு முள்ளாகத் தெரிகிறார். முள்ளில் குத்துவாங்கி வைத்தியசாலை செல்லாமல் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய அவர்கள் தப்பிவிட்டார்.🤣
  11. இஸ்கா மேற்கின் பொய் பிரச்சாரம்.. குஸ்கா தனியே நல்லது இல்லை பிரியாணிக்கு லெக் பீஸ்… ல்து ஜ்யு அஸ்கு புஸ்கு புரியாதவன் ரத்தம் கக்கி சாவான்
  12. பவளக்கொடியிலே ......... எம் . ஜி . ஆர் & கே .ஆர் விஜயா ......! 😍
  13. வணக்கம் வாத்தியார் ........! ஆண் : { காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் } (2) ஆண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க ஆண் : { நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை } (2) ஹான் ஆண் : அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆ……. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல வா ஆண் : { என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் } (2) பொன்னிலே பூவை அள்ளும் ஆஆஆ……… பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா ......! ...... காதலின் தீபம் ஒன்று .......
  14. போட்டியில் கலந்துகொண்ட வசீ வெற்றிபெற வாழ்த்துக்கள்..🙌 இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே உங்கள் பதில்களை விரைவில் பதியுங்கள்
  15. Sathiya R ·tonerdoSps62ug271 cLm3a91f urfg6c09a3uu36àu:e49t771l1 lsf9 0 · *ஐயா காமராசரைப் பார்க்க சோ அவர்கள் ஒருமுறை சென்றபோது காமராசர் தயிர்சாதமும் கீரையும் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார், அப்போது காமராசர் சோவைப் பார்த்து ஏப்பா நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க வரும்போதெல்லாம், நான் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக் கிறேன், ஒருநாளாவது உன்னைச் சாப்பிடு என்று சொல்லியிருக்கேனா என்று கேட்டுள்ளார், அதற்கு சோ பரவாயில்லைங்க ஐயா நீங்க சாப்பிடுங்க என்று சொல்லி உள்ளார், ஆனால் காமராசர் விடவில்லை. இல்லை இல்லை சொல்லு, ஒருநாளாவது சொன்னேனா சொல்லு என்று அதட்டலாகக் கேட்க, இல்லைங்க சொல்லலை என்று கூறியுள்ளார், அதற்கு காமராசர் சொன்னாராம் ஏன் சொல்லலை தெரியுமா நான் சாப்பிடுற இந்தச்சோறே தமிழக மக்கள், எனக்குப்போடும் பிச்சைச்சோறப்பா இதில் நான் என்னத்த உனக்கு கொடுக்க என்றுதான் சொல்லாமலிருந்தேன் நீ தப்பா நினைச்சுக்காதே என்றாராம், இதைக்கேட்ட சோ தன்னையறியாமல் அழுதுவிட்டாராம், எப்படி தலைவர் என்று எண்ணிப், பாருங்கள், எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இப்படி ஒரு மாமனிதர் கிடைப்பாரா? இவரை போன்ற நல்லவர்களை தோற்கடித்த சாபத்தால் தான் இன்றைய தமிழகம் இப்படி அவதிப்படுகிறது, Voir la traduction.......!
  16. இந்திய ஜனாதிபதியே… அதிகாரம் எதுவும் இல்லாத அலங்கார பதவி. இதற்குள் துணை ஜனாதிபதி வந்து… என்ன செய்யப் போகிறார்.
  17. பரீட்சை முடிவுகளும் ஆசிரியர்களின் வோல்டேஜ்ஜும் - நிலாந்தன் பரீட்சை முடிவுகள் வெளிவந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், சில வாரங்களுக்கு முன்னதாக ஈழத்தமிழ் சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே விவாதிக்கப்பட்ட ஒரு காணொளியை இங்கு குறிப்பிடவேண்டும். இக்காணொளி வெளிவந்து இரண்டு ஆண்டுகள். காணொளியில் பேசியிருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர். ஜெயந்தஸ்ரீ. அவர் சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இங்கு அவர் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கமூட்டும் உரைகளை ஆற்றியிருக்கிறார். தன்னுடைய யாழ் விஜயத்தின் விளைவாக அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில், தமிழ்நாடு, கோவையில் ஓரிடத்தில் உரையாற்றும்போது அவர் “யாழ்ப்பாணத்து ஆசிரியர்களுக்கு வோல்டேஜ் குறைவு” என்று கூறியிருக்கிறார். அதைக் குறித்து யாழ்ப்பாணம்,கோப்பாய் ஆசிரியர் கலாசாலையைச் சேர்ந்த ஒரு விரிவுரையாளர் அவரிடம் கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விக்கு ஜெயந்தஸ்ரீ கூறும் பதில் அக்காணொளியில் உண்டு. தனது உரையில் ஜெயந்தஸ்ரீ வோல்டேஜ் என்று தான் கருதுவது “அறிவு ரீதியான வோல்டேஜ் மற்றும் மொழி அறிவு ஆகிய இரண்டையும்” என்று கூறுகிறார். அதாவது தொடர்ச்சியாக வாசிப்பதன்மூலம் பரந்துபட்ட தளத்தில் தமது அறிவையும் மொழி அறிவையும் ஆசிரியர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். மேலும் “உங்கள் பிள்ளைகளை படித்த ஆசிரியர்களிடம் அனுப்பாமல்,படித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் அனுப்புங்கள்” என்றும் கூறுகிறார். அதாவது தன்னைத்தானே அப்டேட் செய்து கொள்ளும் ஆசிரியரிடம் அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார். உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்திருக்கும் இக்காலகட்டத்தில் தமிழ்ப் பகுதிகளில் பிள்ளைகள் பெற்ற வெற்றிகளைத் தொகுத்துப் பார்க்கும்போது ஆசிரியர்களின் வோல்டேஜ் கவலைப்படும் அளவுக்குக் குறையவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது அது பொருத்தமான வோல்டேஜ்ஜா என்று கேட்கலாமா ? நாட்டில் நடப்பில் இருப்பது ஒரு பரீட்சைமையக் கல்விமுறை. தேசிய அளவிலான போட்டிப் பரீட்சைகளை நோக்கி பிள்ளைகளைத் தயார்படுத்த வேண்டும். அதைப் பிள்ளைகள் மற்றும் பெற்றோரின் பிரயோக உளவியல் அர்த்தத்தில் சொன்னால், பந்தயக் குதிரைகளை பந்தயத்திற்குப் பழக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு பந்தயக் குதிரைகளை பழக்குவதற்கு தேவையான வோல்டேஜ்ஜும் பேராசிரியர் கூறும் வோல்டேஜ்ஜும் ஒன்றுதானா? இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞருடைய நேர்காணலை பல ஆண்டுகளுக்கு முன்னுக்கு வாசித்த ஞாபகம். அவருடைய பெயர் மறந்து விட்டது. அவர் ஒரு கவிஞரும் ஆசிரியரும் ஆவார். அவரை நேர்கண்டவர் கேட்கிறார், “நீங்கள் ஆசிரியராக இருக்க விரும்புகிறீர்களா அல்லது கவிஞராக இருக்க விரும்புகிறீர்களா?” என்று. அதற்கு அவர் பின்வரும் பொருள்பட பதில் கூறுகிறார்.”ஆசிரியராக இருப்பது என்பது தனக்குத் தெரிந்ததை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துவதற்காக, ஏனைய பல விடயங்களும் தனக்குத் தெரியும் என்பதுபோல ஒரு தோற்றத்தைக் காட்டுவது. ஆனால் கவிஞராக இருப்பது என்பது இயல்பானது. எனக்கு எது தெரியும் தெரியாது என்ற அவஸ்தை இன்றி இயல்பாக இருப்பது. எனக்கு தோன்றுவதைக் கூறுவது, எழுதுவது. எனவே நான் இயல்பாக இருப்பது என்ற அடிப்படையில் ஒரு கவிஞராக இருப்பதைத்தான் அதிகமாக விரும்புகிறேன்”என்று. ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி கூறுவார் “தெரியாததை தெரியாது என்று சொன்னால்தான் தெரிந்ததைச் சொல்லும்போது நம்புவார்கள்”என்று. பிள்ளைகளை ஆகர்சிக்கவும் அவர்களுடைய அகத்தைத் தூண்டவும் உயர்ந்த இலட்சியங்களை நோக்கி ஊக்கப்படுத்தவும் ஆசிரியர் பரந்தபட்ட அறிவைக் கொண்டிருக்க வேண்டும். ஜெயந்தஸ்ரீ கூறுவதுபோல சார்ஜ் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், இலங்கை போன்ற நாடுகளில் பரீட்சை மைய,போட்டிக் கல்விச் சூழலுக்குள் ஆசிரியர்கள் பரிட்சையை நோக்கித்தான் பிள்ளைகளை தயார்படுத்துவார்கள். பந்தயக் குதிரைகளை தயார்படுத்துவது போல. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இருந்து இந்தப் பந்தயம் தொடங்குகிறது. எனவே பந்தயக் குதிரைகளைத் தயார்படுத்தும் ஓர் ஆசிரியர் அந்தக்குதிரையை பரீட்சையை நோக்கித்தான் பயிறுவிக்கலாம். அதற்கு வெளியே போனால், சிறுவர் வகுப்புகளில்,பெற்றோர் அதை அனுமதிப்பார்களா? அல்லது வளர்ந்த பிள்ளைகளின் வகுப்புக்களில் பிள்ளைகள் அது பாடத் திட்டதுக்கு வெளியே போகிறது என்று கருதினால்? தனது கற்றல் வேளை வீணாக்கப்படுகிறது என்று முறைப்பாடு செய்தால்? அதுமட்டுமல்ல பந்தயக் குதிரைகளை அதிகம் பயிற்றுவிப்பது தனியார் கல்வி நிறுவனங்கள்தான். தேசியப் பரீர்ட்சைகளில் போட்டியிடும் பந்தயக் குதிரைகள் பெருமளவுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில்தான் தங்கியிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் குறைந்த அளவுக்கே பாடசாலைகளில் தங்கியிருக்கிறார்கள். சில பாடசாலைகளில் மிக அரிதான புறநடைகள் உண்டு. அங்கெல்லாம் சில ஆசிரியர்கள் பந்தயக் குதிரைகளை முழுமையாகப் பொறுப்பெடுத்து பரீட்சைகளுக்குத் தயார்படுத்துகிறார்கள். தங்களிடம் படிக்கும் பிள்ளைகளை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அவர்கள் அனுமதிப்பதில்லை. அதை ஒரு தவம்போல அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் ஆனால் அது ஒரு பொதுவான தோற்றப்பாடு அல்ல. இந்த ஆசிரியர்களும்கூட எந்தவகை வோல்டேஜ்ஜை கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி இங்கு முக்கியம். ஏனென்றால் நாட்டின் கல்வி முறைமை எதுவோ அதற்கு வேண்டிய வோல்டேஜ்ஜைத்தான் கல்விக் கட்டமைப்பு ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கும். அதுபோலவே மாணவர்களும் பெற்றோர்களும் அதாவது பந்தயக் குதிரைகளும் அவற்றின் பெற்றோரும் அந்த வால்டேஜ்ஜைக் கொண்டிருக்கும் ஆசிரியரைத்தான் தேடிப்போவார்கள். இங்கே எது பொருத்தமான வால்ட்டேஜ் என்பதனை கல்வியின் பிரயோக நோக்கந்தான் தீர்மானிக்கிறது. அதைமீறி ஆசிரியர்களால் அதைத் தீர்மானிக்க முடியுமா? பரீட்சை மைய,போட்டிக் கல்வியில் கரணம் தப்பினால் மரணம் என்று வாழ்க்கை வெறுத்துப் படிக்கும் பிள்ளைகள் பந்தயத்தில் எப்படி ஜெயிப்பது என்றுதான் சிந்திப்பார்களே தவிர ஒரு முழுமனிதப் பிறவியாக தமது ஆளுமையை முழுமையாகக் கட்டியெழுப்பும் விடயங்களைக் குறித்து சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் உண்டா? அவ்வாறு சிந்திப்பதற்கு கல்விமுறையும் பெற்றோரும் அவர்களை விடுவார்களா? இதில் விதிவிலக்கான பெற்றோரும் பிள்ளைகளும் உண்டு. அசாதாரணமான பிள்ளைகளும் உண்டு. அவர்கள் ஒரே சமயத்தில் பந்தயத்திலும் ஜெயிக்கிறார்கள்; வாழ்க்கைக்குத் தேவையான ஏனைய அறிவையும் திரட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இது ஒரு பொதுப்போக்கு அல்ல. இப்படிப்பட்டதோர் கல்விச் சூழலுக்குள் பந்தயக் குதிரைகளைப் பயிற்றுவிப்பதற்கும் குதிரைகளின் முழுமையான ஆளுமையைச் செதுக்குவதற்குமிடையில் எதோ ஒரு சமநிலையைக் கண்டுபிடிக்க வேண்டும். பாடசாலைகள்தான் முழு மனித ஆளுமையைச் செதுக்கத் தேவையான வாய்ப்புகளையும் வளங்களையும் கொண்டிருக்கின்றன. தனியார் கல்வி நிறுவனங்கள் அல்ல. தனியார் கல்வி நிறுவனங்கள் பெருமளவுக்கு வணிக நோக்கங்களைக் கொண்டவை. அங்கே குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்தயக் குதிரைகளைப் பழக்கி எடுக்க வேண்டும். அங்கே நோக்கம் பந்தயம்தான். ஆனால் பாடசாலையின் நோக்கம் அதுவல்ல. ஆனால் துயரம் என்னவென்றால் போட்டிக் கல்வி முறைமையானது பாடசாலைகளின் மதிப்பை பெருமளவுக்கு குறைத்துவிட்டது. அதாவது ஆசிரியர்கள் பந்தயக் குதிரைகளைப் பழக்கும் பயிற்றுவிப்பாளர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். கல்விமுறையின் தேவை அப்படித்தான் உள்ளது. மாறாக பரந்த தளத்தில் தனது அறிவைக் கட்டியெழுப்பி, தன்னை எப்பொழுதும் அப்டேட் செய்துகொண்டு தனது வோல்டேஜ்ஜை உயர்வாக வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு இந்தக் கல்விமுறையில் எவ்வளவு தேவை உண்டு? தமது பிள்ளைகள் தம்மைப் போலவே ஆசிரியர்களாக வர வேண்டும் என்று ஏன் பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவதில்லை? போட்டிக் கல்வி முறைமைக்குள் ஆசிரியருக்குள்ள மதிப்பு குறைந்து போய்விட்டது காரணமா? அல்லது சில தனியார் கல்வி நிறுவனங்களில் வெற்றிபெற்ற, கோடீஸ்வரர்களாக உள்ள ஆசிரியர்களைவிட ஏனைய பெரும்பாலான ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் போதாது என்பதனாலா? தன் பிள்ளை தன்னைப்போல ஆசிரியராக வரவேண்டும் என்று கனவு காணும் ஆசிரியர்களை அதிகமாகக் கொண்டிராத ஒரு கல்வி முறைமைக்குள் எது சரியான வால்ட்டேஜ்? இப்படிப்பட்டதோர் கல்விச் சூழலில் கடந்த வாரம் வெளிவந்த பரீட்சை முடிவுகளில் சில அரிதான புறநடைகளைத்தவிர பெரும்பாலான வெற்றிகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களும் காரணம். இதில் ஆசிரியரின் வோல்டேஜ் என்பது எது என்பதை போட்டிக் கல்விச்சூழல்தான் தீர்மானிக்கின்றது. பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால்,நமது ஆசிரியர்களின் வோல்ட்டேஜ் கவலைப்படுமளவுக்குக் குறையவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ளப்படும். போட்டிப் பரீட்சைதான் பிரதான இலக்கு என்றால் நமது ஆசிரியர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கல்வி முறைமையில் மாற்றத்தைச் செய்துவிட்டு புதிய அளவு கோல்களுடன் வரலாம். நாட்டை இப்பொழுது ஆட்சி செய்வது மாற்றத்தை வாக்களித்து வந்த ஓர் அரசாங்கம். அதில் பிரதமராகவும் கல்வி மந்திரியாகவும் இருப்பவர், அரசாங்கத்தின் லிபரல் முகமாகக் கருதப்படும் ஹரிணி அமரசூரிய. ஆனால் அவரால் இன்றுவரை பாடசாலைகளில் ஆசிரியைகளின் ஆடை விவகாரத்தில் காணப்படும் பால் அசமத்துவத்தை நீக்க முடியவில்லை. பிள்ளைகளின் உளவியலை பாரதூரமான விதங்களில் பாதிப்பது என்று கல்வி உளவியலாளர்களால் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையான தேசிய சித்திரவதையை நிறுத்த முடியவில்லை. இதுதான் அரசியல் சூழல் என்றால் ஆசிரியருக்கு எது பொருத்தமான வோல்டேஜ் என்பதனை போட்டிப் பரீட்சைக் கல்வி முறைமைதான் இனியும் தீர்மானிக்கும். https://www.nillanthan.com/8245/
  18. யார் குற்றினால் அரிசியாகும்? யார் குற்றினால் மண்ணாகும்? - நிலாந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், ஊடக அமையத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது கிட்டத்தட்ட 20பேர் கலந்துகொண்ட அந்தச் சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. சந்திப்பை ஒழுங்குபடுத்தியது யாழ். ஊடக அமையம். இச்சந்திப்பில் அரசியல் மற்றும் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டார்கள். கடந்த சுமார் ஒரு மாத காலப் பகுதிக்குள் இனப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட மூன்றாவது நகர்வு இதுவாகும். ஏற்கனவே கொழும்பு தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைப்பு அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அதன்பின் தமிழ் ஆயர்களின் அமைப்பு அப்படி ஒரு முயற்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறது. அதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளிவந்தது. இப்பொழுது யாழ் ஊடக அமையம் அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறது. சட்டத்தரணிகள் சங்கத்தின் முயற்சிக்குப் பின்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஈடுபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்க இடம் உண்டு. சட்டத்தரணிகள் சங்கத்தில் பிரதான பொறுப்புகளில் இருப்பவர்கள் அல்லது தீவிரமாக செயல்படுகிறவர்கள் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே முன்னணிக்கு நெருக்கமாகக் காணப்படுகின்ற சிவில் சமூகங்களுக்கு நெருக்கமாகக் காணப்பட்டவர்கள். எனினும் இந்த முயற்சிக்கு, தான் முழுமையாக ஆதரவு தரப்போவதாக சுமந்திரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடகச் சந்திப்பில் தெரிவித்திருந்தார். கடந்த வார இறுதியில் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வழமையான மாதாந்தச் சந்திப்பு அது என்று கூறப்பட்டது. சந்திப்பின் முடிவில் நடந்த ஊடகச் சந்திப்பிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அதாவது சட்டத்தரணிகள் அமைப்பின் செயற்பாட்டுக்கு தாங்கள் முழுமையான ஒத்துழைப்பைத் தரப்போவதாகவும், இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் ஒரு பொது நிலைப்பாட்டை அடைவதற்காக தமிழரசுக் கட்சி உழைக்கும் என்பதையும் அவருடைய பதிலிலிருந்து விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. மேலும் சட்டத்தரணிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தரும் தகவல்களின்படி சுமந்திரன் இந்த விடயத்தில் ஆர்வமாக இருப்பதாகவும் அவர்களுக்கு எந்த விதமான தடையுமின்றி ஒத்துழைப்பதாகவும் தெரிகிறது. அதேசமயம், சட்டத்தரணிகளின் முயற்சிக்கு ஆதரவாக முன்னணியில் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையும் ஒரு பொது ஆவணத்தைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே சில கிழமைகளுக்கு முன் நடந்த இளங் கலைஞர் மன்றச் சந்திப்பின்போது குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழுவுக்குள் அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், அரசியல் விமர்சகர்கள், அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். அந்தக் கட்டமைப்பு விரைவில் ஒரு பொது ஆவணத்தைத் தயாரிப்பதற்கான வேலைகளில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான் ஆயர்களும் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் இறங்குவதற்கு ஆர்வமாகக் காணப்படுகிறார்கள். இப்பொழுது யாழ் ஊடக அமையம் அந்த வேலைகளில் இறங்கியிருக்கிறது. இந்த நகர்வுகள் தன்னியியல்பாக முன்னெடுக்கப்படுகின்றவையா? அல்லது இவற்றின் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்று தமிழ்ப் பொது மனம் சந்தேகிக்கும். அந்தச் சந்தேகம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சிகளின் பின்னணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருக்கலாம் என்று பொதுவாக ஊகிக்கப்படுகின்றது. அதனால் ஆயர்களின் சங்கம் மற்றும் யாழ்.ஊடக அமையும் என்பவற்றின் பின்னணியில் யாராவது உண்டா என்ற சந்தேகம் இயல்பாகவே தோன்றும். கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த சந்திப்பின் பின் யாழ். ஊடக அமையம் வெளியிட்ட அறிக்கையின் மொழிநடை அந்தச் சந்தேகத்தை அதிகப்படுத்துவது. யாரும் பின்னணியில் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் தமிழ் அரசியல் சக்தியை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது அவசியம். அதுவும் அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்க முயற்சித்தால்-கவனிக்கவும் முயற்சித்தால்- தமிழ்மக்கள் அதை எதிர்கொள்ளத் தேவையான தயாரிப்புகளோடு காணப்பட வேண்டும். இந்த அடிப்படையில் தற்போது லண்டனில் இருந்து செய்யப்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச்செயற்பாட்டாளர் ஒருவரின் ஊக்குவிப்போடு முன்னெடுக்கப்படுகின்ற திருமலைப் பிரகடனமும் அதன் பின்னரான கருத்தரங்குகளும் அவசியமானவை. மேற்படி புலம்பெயர்ந்த தமிழ்ச் செயல்பாட்டாளர் அப்படி ஒரு பொது ஆவணத்தைத் தயாரிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த ஆவணம் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணும் நோக்கத்தை பிரதானமாக கொண்டிருக்க வேண்டும். அதாவது புதிய யாப்பை நோக்கி அந்தமுயற்சி முன்னெடுக்கப்பட்டால் நல்லது. மாறாக, முன்னணிக்கு ஆப்பு வைப்பது என்று சிந்தித்துச் செயற்படாமல் இருந்தால் சரி. திருமலைப் பிரகடனம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் பின்னணியில், சட்டத்தரணிகள் அமைப்பு ஒருங்கிணைப்பு முயற்சிகளைக் கையில் எடுத்தது. சட்டத்தரணிகள் அமைப்பு கட்சித் தலைவர்களை அழைத்து முதலாவது சந்திப்பை நடத்தியிருந்த பின்னணிக்குள், தமிழ் ஆயர்கள் சங்கம் அந்த முயற்சியில் இறங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. ஆயர்கள் சங்கத்தின் அறிவிப்பு ஊடகங்களில் வெளிவந்திருந்த ஒரு பின்னணிக்குள், கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.ஊடக அமையும் இந்த விடயத்தைக் கையில் எடுத்திருக்கிறது. ஒரு புதிய யாப்பை நோக்கி மட்டுமல்ல, வரக்கூடிய மாகாண சபைத் தேர்தலை நோக்கியும் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைப்பது நல்லது. பல்வேறு தரப்புக்களும் தங்கள் சக்தியைப் பிரயோகித்து கட்சிகளை ஒரு மேசைக்குக் கொண்டுவர முடிந்தால் அது மிகவும் நல்லது. ஆனால் இந்த முயற்சிகள் தங்களுக்கு இடையே பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும். இந்த விடயத்தில் யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்று கூறிக்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால்,இப்பொழுது நான்கு உரல்களில் நான்கு விதமாக அரிசி குத்தப்படுகிறது. இதில் ஒரு உரல்,தான் குத்துவதுதான் அரிசியாக வரும் அடுத்தவர் குத்துவது மண்ணாக வரும் என்று கூறாமல் இருக்க வேண்டும். அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருமா என்பது சந்தேகந்தான். சில சமயம் அரசாங்கம் அந்த முயற்சியைத் தொடங்கலாம். ஆனால் அதை இழுத்திழுத்துக் கொண்டுபோய் ஒன்றில் தனது ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் அதை முடுக்கிவிடலாம். அல்லது அடுத்த முறையும் ஆட்சி செய்ய வேண்டும் என்று கருதினால் அதை மேலும் ஒத்தி வைக்கலாம். டித்வா புயல்,மேற்காசியப் போர் போன்றவற்றின் பின்னணியில், பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தடங்கல்களுக்கு உள்ளாகியுள்ளன. போரை ஒரு காரணமாக முன்வைத்து அரசாங்கம் யாப்புருவாக்க முயற்சிகளை ஒத்திப்போடும் வாய்ப்புகள் உண்டு. யாப்புருவாக்க முயற்சி என்பது ஒரு வாழ்வா சாவா பிரச்சினை. அதில் இப்பொழுது கையை வைத்து தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தை இழப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்குமா ? ஆனால் மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் விரைந்து நடத்தக்கூடும். ஏனென்றால் இந்தியாவை சந்தோஷப்படுத்த வேண்டும். இப்பொழுது மேற்காசியப் போரின் பின்னணியிலும் இந்தியா அரசாங்கத்துக்கு அதிகம் உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே இந்தியாவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டி வரலாம். அப்படி நடந்தால், அத்தேர்தலை தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ளத் தவறினால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த விளைவுகள்தான் கிடைக்கக்கூடும். அதாவது தமிழ்க் கட்சிகள் ஆளுக்காள் வாக்குகளைப் பங்கிடடால், தமிழ் வாக்குப் பலம் சிதறடிக்கப்படலாம். மாகாண நிர்வாகத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பது சவால்கள் மிகுந்ததாக மாறலாம். மாகாண சபைத் தேர்தலில் அவ்வாறு வாக்குச் சிதறும் வாய்ப்புகள் அதிகரித்தால், அது அரசாங்கத்துக்கு அனுகூலமாக அமையும். நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்ததுபோல ஒரு ஆணை அங்கு கிடைக்குமாக இருந்தால் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்மக்கள் தனக்கும் ஆணை வழங்கியிருப்பதாகக் கூறும். எனவே மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான ஒருமைப்பாடும் அவசியம். அந்த ஒருமைப்பாட்டை அடுத்த கட்டமாக யாப்புருவாக்க முயற்சியை நோக்கியும் திருப்பலாம். எதைச் செய்தாலும் எல்லாருமாகச் சேர்ந்து ஒரே பெரிய உரலுக்குள் அரிசியைப் போட்டு இடிப்பதுதான் தமிழ் மக்களுக்கு நல்லது; கட்சிகளுக்கும் நல்லது. https://www.nillanthan.com/8246/
  19. இந்திய துணை ஜனாதிபதி இலங்கை விஜயம்! செவ்வாய், 07 ஏப்ரல் 2026 03:21 AM ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பூர்வாங்கத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய துணை ஜனாதிபதி , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார். மேலும், தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள இந்திய உதவித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆலோசகர் மைத்ரே குல்கர்னி (Maitrey Kulkarni), அரசியல் ஆலோசகர் மற்றும் சான்சரி பிரிவுத் தலைவர் கலாநிதி ராம்பாபு சி. ( Rambabu C.) மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். https://jaffnazone.com/news/56092
  20. சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் - 'தி டைம்ஸ்' April 7, 2026 11:55 am அமெரிக்க – இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தற்போது சுயநினைவற்ற நிலையில் புனித நகரமான கோமில் (Qom) மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தூதரகக் குறிப்பொன்றை மேற்கோள் காட்டி, 56 மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், கடுமையான மருத்துவ நிலைக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவரது இருப்பிடம் வெளிப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். மத்திய நகரமான கோம், தெஹ்ரானுக்கு தெற்கே 87 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஷியா இஸ்லாத்தில் புனிதமானதாகக் கருதப்படுவதுடன் இஸ்லாமியக் குடியரசின் மதத் தலைநகராகவும் அறியப்படுகிறது. இந்நிலையில் “மொஜ்தபா கமெனி தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார், ஆட்சியில் எந்தவொரு முடிவெடுக்கும் செயலிலும் அவரால் ஈடுபட முடியாது,” என அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. இந்த ஆவணம், வளைகுடா நட்பு நாடுகளுடன் பகிரப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத் தகவல்களின் அடிப்படையில் அமைந்ததாக நம்பப்படுகிறது. உச்ச தலைவரின் இருப்பிடம் குறித்த தகவல் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு நிறுவனங்களுக்கு அண்மைய நாட்களில் மாத்திரமே தெரிந்திருந்ததாகவும், ஆனால் அது இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மொஜ்தபா காமேனி எந்தவொரு பொதுவெளியிலும் தோன்றவில்லை என்பதுடன் அவர் கூறியதாகக் கூறப்படும் செய்திகளை மட்டுமே ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதனிடையே, மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா கமேனியின் உடலை கோமில் அடக்கம் செய்யத் தயாராகி வருவதாக ‘த டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. https://oruvan.com/iran-supreme-leader-unconscious-not-involved-in-decision-making-report/
  21. சவூதி – பஹ்ரைன் இணைக்கும் முக்கிய பாலம் திடீரென மூடப்பட்டது : ஈரானியத் தாக்குதல் அச்சுறுத்தலால் போக்குவரத்து முடக்கம் Published By: Digital Desk 3 07 Apr, 2026 | 11:38 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) சவூதி அரேபியாவையும் பஹ்ரைன் தீவு நாட்டையும் இணைக்கும் மிக முக்கியமான கிங் ஃபஹ்ஹத் பாலம் ஈரானியத் தாக்குதல் அச்சுறுத்தலினால் இன்று (ஏப் 07) அதிகாலை முதல் மூடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக" வாகனப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிங் ஃபஹ்ஹத் பால அதிகாரசபை அறிவித்துள்ளது. 25 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலமே, அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு அமைந்துள்ள பஹ்ரைனை ஏனைய அரபு நாடுகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப் பாதையாகும். இந்தப் பாலத்திற்கு எதிராக நேரடி மிரட்டல்கள் விடுக்கப்படாத போதிலும், ஈரானின் சில தீவிரவாதக் குழுக்கள் இதனை ஒரு சாத்தியமான இலக்காக அடையாளம் கண்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானில் உள்ள பாலங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாக விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் இந்தப் பாலத்தைத் தாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. https://www.virakesari.lk/article/242945
  22. காலக்கெடு இன்றுடன் நிறைவு ; உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஒரே இரவில் ஈரானை அழித்துவிடுவேன் - ட்ரம்ப் மிரட்டல் 07 Apr, 2026 | 11:54 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) “ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவுக்குள் உடன்படிக்கைக்கு வராவிட்டால், ஈரான் நாட்டை ஒரே இரவில் அழித்துவிடுவேன்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று திங்கட்கிழமை (6) வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ட்ரம்ப் இதனை தெரிவித்தார். “ஒரே இரவில் ஒட்டுமொத்த ஈரானையும் என்னால் அழித்துவிட முடியும். அந்த இரவு நாளைய இரவாகவும் (இன்று செவ்வாய்க்கிழமை) இருக்கலாம்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானின் தெற்குப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட F15 போர் விமானத்தின் இரண்டு வீரர்களை அமெரிக்க படைகள் மீட்ட சில நாட்களில் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உள்ளிட்டோருடன் இணைந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து ட்ரம்ப், தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். மேலும், ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் சமூக ஊடக தளத்தில், “நாளையுடன் (இன்று செவ்வாய்க்கிழமையுடன்) ஈரானுக்கான காலக்கெடு முடிகிறது” என்றும் “ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானிடம் மின் நிலையங்களே இருக்காது” என்றும் மிரட்டலாக பதிவிட்டுள்ளார். போரை நிறுத்துமாறும் அமெரிக்க நட்பு நாடுகளுக்காக மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணையை திறந்துவிடுமாறும் ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் காலக்கெடு விதித்திருந்தார். ஆனால், அவரின் எச்சரிக்கை மற்றும் காலக்கெடுவை ஈரான் நிராகரித்தது. எகிப்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் தலைவர் முஜ்தபா ஃபிர்தௌசி பூர், “நாங்கள் வெறுமனே ஒரு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம். மீண்டும் நாங்கள் தாக்கப்படமாட்டோம் என்ற உத்தரவாதங்களுடன் மட்டுமே போர் முடிவுக்கு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப மிகக் கடுமையாக ஈரானை உடன்படிக்கைக்கு வருமாறு எச்சரித்திருக்கிறார் https://www.virakesari.lk/article/242948
  23. ரஷ்யாவில் போர்க்கால வளர்ச்சி மந்தமான வளர்ச்சி, வரி உயர்வுகள் மற்றும் பொதுச் சேவைகளில் நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளது. இது உக்ரைனில் நடக்கும் மோதலைப் பாதிக்குமா? அலெக்ஸ் கிளார்க் வெள்ளி 6 பிப்ரவரி 2026 17.00 AEDT 2022-ல் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தபோது, மேற்கத்தியத் தலைவர்கள் அதீத நம்பிக்கையுடன் இருந்தனர் . போர் தொடங்கி ஒரு மாதம் கழித்து, மார்ச் மாதம், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ரஷ்யப் பொருளாதாரம் பாதியாகச் சுருங்கும் நிலையில் உள்ளது,” என்று கூறினார் . இந்தப் படையெடுப்பிற்கு முன்பு அது உலகின் 11வது பெரிய பொருளாதாரமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டது – விரைவில் அது முதல் 20 இடங்களுக்குள் கூட இடம்பெறாது. அவரது கணிப்பு தவறாக இருந்தது. 2022-ல் விதிக்கப்பட்ட தடைகளால் ஏற்பட்ட உடனடி அதிர்ச்சிக்குப் பிறகு, ரஷ்யாவின் இராணுவச் செலவினங்கள் பெருமளவில் அதிகரித்து, பொருளாதாரம் செழித்தது. முதல் 20 இடங்களிலிருந்து வெளியேறுவதற்குப் பதிலாக, 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, ரஷ்யா கனடா மற்றும் பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்குச் சற்றுப் பின்னால் உலகின் ஒன்பதாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது. ஆனால், மேலும் முன்னேற்றம் இப்போது சாத்தியமில்லை எனத் தெரிகிறது. 2026-ல், ரஷ்யப் பொருளாதாரம் இறுதியாகத் தடம் புரள்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. மேற்கத்திய நாடுகள் கணித்திருந்த பெரும் சரிவு ஏற்படாமல் போகலாம் என்றபோதிலும், கிரெம்ளின் தனது பீரங்கிகள் முதன்முதலில் உக்ரைனுக்குள் நுழைந்ததிலிருந்து இல்லாத அளவுக்கு மிகவும் அபாயகரமான பொருளாதார நிலையை எதிர்கொள்கிறது. ரஷ்யப் பொருளாதாரம் தேக்கமடையத் தொடங்கியுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பு, காலாண்டு வாரியான ஆண்டுக்கு ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (%) -4%0%4%8%20222022202320232024202420252025West applies sanctions after invasion of UkraineRecessionBoomStagnation கார்டியன் வரைபடம். ஆதாரம்: ரஷ்ய கூட்டாட்சி அரசு புள்ளிவிவர சேவை அரசாங்க வருவாயின் முக்கிய ஆதாரமான எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் முன்னர் அதிக பாதுகாப்புச் செலவினங்களால் மறைக்கப்பட்டிருந்த நீண்டகால மக்கள்தொகை அழுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியில், வளர்ச்சி மிகவும் மந்தமடைந்துள்ளது. நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக, சாதாரண ரஷ்யர்கள் வரி உயர்வுகளையும், நலத்திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டு, போருக்காகவே மாற்றியமைக்கப்பட்ட ஒரு அரசையும் எதிர்கொள்கின்றனர். ரஷ்யாவின் போர் பொருளாதாரத்தின் செலவு ரஷ்யக் கூட்டமைப்பில், 2021 மற்றும் 2025-க்கு இடையில், கூட்டாட்சி வரவு செலவுத் திட்டத்தில் செலவினப் பங்கில் ஏற்பட்ட சதவீதப் புள்ளி மாற்றம். Defence+17Paying off debt+1.9Healthcare-0.7Education-1.2Law enforcement-3.2Economy (infrastructure, subsidies)-5Welfare (benefits, pensions)-10 கார்டியன் வரைபடம். ஆதாரம்: 2025 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் , மாரெக் டாப்ரோவ்ஸ்கி எழுதிய ' நான்கு வருடப் போருக்குப் பிறகு ரஷ்யாவின் பொருளாதாரம் எவ்வளவு மீள்திறன் கொண்டது?' ( டிசம்பர் 2025) என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் ரஷ்ய நிதி அமைச்சகத்திடமிருந்து எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களும் திட்டமிடப்பட்ட செலவினங்களைக் குறிக்கின்றன. இதற்கிடையில், முக்கிய நட்பு நாடுகளுடனான வர்த்தகம் மந்தமடைந்துள்ளது, பெருநிறுவனங்களின் திவால்நிலை அதிகரித்து வருகிறது மற்றும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த மந்தநிலை உக்ரைனில் நடக்கும் மோதலை எவ்வாறு பாதிக்கும் என்பது, ரஷ்யாவின் சமீபத்திய பேரியல் பொருளாதார நடவடிக்கைகளையும், உலக நிகழ்வுகள் தொடர்ந்து எண்ணெய் விலைகளைக் குறைக்குமா என்பதையும் பொறுத்தது என நிபுணர்கள் கூறுகின்றனர். எண்ணெய் வருவாய் குறைவதால் வளர்ச்சி மதிப்பீடு குறைக்கப்பட்டது. தற்போதைய கண்ணோட்டம் சாதகமற்றதாக உள்ளது. ஜனவரி மாதம், சர்வதேச நாணய நிதியம் (IMF) ரஷ்யாவின் வளர்ச்சி குறித்த தனது கணிப்புகளை, 2025-ல் வெறும் 0.6% ஆகவும், 2026-ல் 0.8% ஆகவும் இருக்கும் என மதிப்பிட்டுத் தரம் குறைத்தது. 2014-ல் கிரிமியாவை இணைத்ததன் மீதான தடைகளால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு, 2020-22-ஆம் ஆண்டுகளின் பெருந்தொற்றுக் காலங்களைத் தவிர்த்து, ரஷ்யாவின் மிகக் குறைந்த வருடாந்திர வளர்ச்சி விகிதங்கள் இவைதான். மேலும், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரங்கள் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளை விட இவை குறைவாக உள்ளன. ரஷ்யாவின் போர் இயந்திரத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் சரிந்து வரும் அதே நேரத்தில், இந்த பொருளாதார வேக இழப்பும் ஏற்பட்டுள்ளது. 2022-ல், ரஷ்யாவின் கூட்டாட்சி வரவுசெலவுத் திட்டத்தின் நிதியுதவியில் சுமார் 40% புதைபடிவ எரிபொருட்களின் மீதான வரி வருவாயாக அமைந்தது; இது போருக்கான செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதை விட அதிகமாகும். ஆனால், 2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளுக்கான பூர்வாங்க மதிப்பீடுகள், இந்தப் பங்கு 25% ஆகக் குறைந்துள்ளதைக் காட்டுகின்றன. விலை வீழ்ச்சியும் இதற்கு ஒரு பகுதி காரணமாகும் – உலகளாவிய எண்ணெய் விநியோக உபரிக்கு மத்தியில், யூரல் எண்ணெயின் விலை 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பீப்பாய் சுமார் $90 (£66) ஆக இருந்தது, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு பீப்பாய் $50 ஆகக் குறைந்துள்ளது . ஆனால், புதிய வாங்குபவர்களைக் கண்டறிய ரஷ்யா மேற்கொள்ளும் முயற்சிகள் இருந்தபோதிலும், மேற்கத்திய நாடுகளின் தடைகளும் ஒரு பங்கை வகிக்கின்றன. படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி கடுமையாக சரிந்ததால், சீனா, இந்தியா மற்றும் ஓரளவிற்கு துருக்கி ஆகிய நாடுகள் தங்களது கொள்முதல்களை அதிகரித்தன. ஆனால் 2026 ஆம் ஆண்டு நிலவரப்படி, போருக்கு முந்தைய காலகட்டத்தில் தடைகளை விதித்த நாடுகள் வாங்கிய அளவோடு ஒப்பிடுகையில், அவற்றின் ஒருங்கிணைந்த வணிகம் மிகவும் குறைவானதாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வர்த்தக வரி அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்தியா குறிப்பாக சமீப மாதங்களில் தனது கொள்முதல்களைக் குறைத்துள்ளது . ஆற்றல் மற்றும் தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சி மையத்தின் கொள்கை ஆய்வாளரான ஐசக் லெவி கூறியதாவது: “கடுமையான தடைகள், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள், அதன் எரிவாயு ஏற்றுமதிக்கு புதிய சந்தைகளைக் கண்டறிவதில் உள்ள சிரமம் மற்றும் குறைந்த உலகளாவிய எண்ணெய் விலைகள் ஆகியவற்றால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக, 2025-ஆம் ஆண்டில் ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருள் ஏற்றுமதி வருவாய், போருக்கு முந்தைய நிலைகளை விட 13% குறைவாக இருந்தது.” இந்த அழுத்தங்கள், மாஸ்கோ தனது போருக்கு நிதியளிக்க நம்பியிருக்கும் வருவாயை படிப்படியாகக் குறைத்து வருகின்றன – ஆனால் கிரெம்ளினின் போர் நிதிக் களஞ்சியத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த, உக்ரைனின் கூட்டாளிகள் இன்னும் கடுமையாகச் செயல்பட வேண்டும். கொடியற்ற கப்பல்களைத் தடுத்து நிறுத்துவது உட்பட, ரஷ்யாவின் மறைமுகக் கப்பற்படையைக் குறிவைப்பது, அதன் எண்ணெய் ஏற்றுமதி அளவையும் வருவாயையும் கடுமையாகக் கட்டுப்படுத்தும். நீண்டகால அழுத்தங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை குறிப்பாக 2026-ல் எண்ணெய் விலைகள் மீளத் தொடங்கினால், விளாடிமிர் புதினின் எண்ணெய் தொடர்பான பிரச்சனைகள் ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே இருக்கலாம். ஆனால், நீண்டகால மக்கள்தொகை சார்ந்த அழுத்தங்களும் தற்போது ரஷ்யப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. ரஷ்யாவின் மக்கள்தொகை 2019 முதல் தொடர்ந்து குறைந்து, 2024-ல் 145.5 மில்லியனிலிருந்து 143.5 மில்லியனாக இருக்கும். குறைந்துவரும் கருவுறுதல் விகிதங்கள், போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் குடிபெயர்வு ஆகியவற்றின் கூட்டு விளைவே இதற்குக் காரணம். மேற்கத்திய நாடுகளிலும் கருவுறுதல் விகிதங்களில் இதேபோன்ற சரிவுகள் காணப்பட்டாலும், அவை அந்த அளவுக்குப் பெரியவையாக இல்லை, மேலும் குடியேற்றம் மக்கள்தொகை தொடர்ந்து உயர்வதற்கு உதவியுள்ளது. ரஷ்யா மக்கள் தொகைப் பிரச்சினையை எதிர்கொள்கிறது. ஆண்டுவாரியான மக்கள்தொகை, 1960 முதல் 2024 வரை 1960198020002020120m144mRussia 1960198020002020181m340mUS 196019802000202052m69mUK 196019802000202047m69mFrance 196019802000202073m85mGermany கார்டியன் வரைபடம். ஆதாரம்: உலக வங்கி. ஜெர்மனியைத் தவிர, மற்ற தகவல்கள் 'அவர் வேர்ல்ட் இன் டேட்டா' (Our World in Data) தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. "ரஷ்யாவிடம் விரைவான வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் இல்லை," என்று பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட ப்ரூகல் என்ற சிந்தனைக் குழுவின் ஆய்வாளர் டாக்டர் மாரெக் டாப்ரோவ்ஸ்கி கூறினார். போர் தொடர்பான வணிகச் சூழல் நிச்சயமாக இந்தக் கதையின் ஒரு பகுதிதான், ஆனால் இங்குள்ள முக்கியக் கதை நீண்டகால மக்கள்தொகையியல்தான். அது மாறவில்லை. இதன் பொருள், ரஷ்யாவில் தொழிலாளர் பற்றாக்குறை இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது என்பதாகும். இந்த உண்மையை, அந்நாட்டின் வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த வேலையின்மை விகிதமான வெறும் 2% இல் காணலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். கிரெம்ளின் தனது நிதி நிலையை வலுப்படுத்த பல கடுமையான வரி உயர்வுகளை அமல்படுத்தியுள்ளது. 2025-ல் அது பெருநிறுவன வரியை 20%-லிருந்து 25%-ஆக உயர்த்தியதுடன், உயர் வருமான வரி வரம்புகளையும் அறிமுகப்படுத்தியது. மேலும், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மதிப்புக்கூட்டு வரி (VAT) 20% இலிருந்து 22% ஆக உயர்த்தப்பட்டது, இது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் அல்லது ஜெர்மனியை விட அதிகமாகும். ரஷ்ய அரசாங்கம் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளித்திருந்தாலும், ரஷ்யாவில் நிலவும் தொடர்ச்சியான பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், அதன் மீதே இந்த மதிப்புக்கூட்டு வரி உயர்வு வந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் பணவீக்கத்தின் மீது போரின் தாக்கம் குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டாலும், ரஷ்யா மிக நீண்ட காலமாகவே மிக அதிக பணவீக்கத்தைச் சந்தித்து வருகிறது. இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள், பொருளாதார மந்தநிலையை மேலும் அதிகரித்துள்ளன. பொருளாதார நிபுணரும், ஐரோப்பாவில் பகுப்பாய்வு மற்றும் உத்திகளுக்கான மையம் என்ற சிந்தனைக் குழுவின் இணை நிறுவனருமான டாக்டர் விளாடிஸ்லாவ் இனோசெம்ட்சேவ் கூறினார்: “பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, 2023-ஆம் ஆண்டில் 'பொருளாதாரத்தைக் குளிர்விக்க'த் தொடங்கிய மத்திய வங்கியும் நிதி அமைச்சகமும் ஒரு பொறுப்பற்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றன.” இதன் காரணமாக, மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 21% வரை உயர்த்தியுள்ளது, அரசாங்கம் தனது மானிய வீட்டுக் கடன் திட்டத்தைக் கைவிட்டது, மேலும் வங்கிகள் கடன்களைக் குறைக்கவும் வட்டி விகிதங்களை அதிகரிக்கவும் தொடங்கின; இவற்றில் பெரும்பாலானவை நிலையான வட்டியாக இல்லாமல், மாறுபடும் வட்டி விகிதங்களாக இருந்தன. கிரெம்ளின் ஏன் அத்தகைய கொள்கையை ஆதரித்தது என்பது எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. இராணுவச் செலவினங்கள் குறைவதால் நம்பிக்கை தணிந்து வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி சாதாரண ரஷ்யர்களின் மன உறுதியைக் குலைத்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ரஷ்யாவில் கேலப் நடத்திய கருத்துக் கணிப்பின்படி , போர்க்கால பொருளாதார ஏற்றத்திற்கு மத்தியில், உக்ரைன் மீதான படையெடுப்பு ஆரம்பத்தில் ரஷ்யப் பொருளாதாரம் குறித்த நம்பிக்கையை அதிகரித்தது. 2021 ஜூலையில், பெரும்பாலான ரஷ்யர்கள் பொருளாதாரம் மோசமடைந்து வருவதாக நம்பினர், ஆனால் 2022 நவம்பரில் இந்த நிலைமை தலைகீழாக மாறி, பெரும்பாலானோர் நிலைமைகள் மேம்பட்டு வருவதாக நம்பினர். ஆயினும், ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, இந்த நம்பிக்கை தணிந்துள்ளது; 2022-ல் 29% ஆக இருந்த பொருளாதார நிலைமைகள் மோசமடைந்து வருவதாகக் கூறும் ரஷ்யர்களின் எண்ணிக்கை, தற்போது 39% ஆக உயர்ந்துள்ளது. நான்கு வருடப் போருக்குப் பிறகு பொருளாதார நம்பிக்கை தணிந்து வருகிறது. பொருளாதார நிலைமைகள் மேம்பட்டு வருகின்றன , மோசமடைந்து வருகின்றன , அல்லது அப்படியே இருக்கின்றன என்று நம்பும் ரஷ்யர்களின் பங்கு . ஜூலை 2021 40%9%50% பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது நவம்பர் 2022 44%15%29% ஜூலை 2023 56%9%34% அக்டோபர் 2024 52%13%33% ஆகஸ்ட் 2025 48%10%39% கார்டியன் வரைபடம். ஆதாரம்: கேலப். கேள்விக்கான பதில்கள்: 'தற்போது, நீங்கள் வசிக்கும் நகரம் அல்லது பகுதியின் பொருளாதார நிலைமைகள் ஒட்டுமொத்தமாக மேம்பட்டு வருகின்றனவா அல்லது மோசமடைந்து வருகின்றனவா?'. 'தெரியாது' என்பது வெற்று இடத்தால் குறிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தனது இராணுவச் செலவினங்களின் அதிகரிப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்பதுதான் உக்ரைனுக்கான முக்கியக் கேள்வி. போர் நடந்த காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரஷ்யாவின் இராணுவச் செலவினத்தின் பங்கு இரட்டிப்பாகி, 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அது, அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% செலவிடுவதை விட இரண்டு மடங்கு அதிகம், மேலும் நேட்டோவின் எந்தவொரு தனிப்பட்ட உறுப்பு நாட்டை விடவும் அதிகமாகும். ஆனால், போரின் முதல் சில ஆண்டுகளில் ஏற்பட்ட செலவின உயர்வு தற்போது குறைந்துள்ளது, 2024 மற்றும் 2025-க்கு இடையில் வெறும் 0.1 சதவீதப் புள்ளி அதிகரிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தனது போர் நிதி இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பொறுத்தவரை ரஷ்யா ஒரு தனித்துவமான நிலையில் உள்ளது. ரஷ்யாவிடம் ஒப்பீட்டளவில் குறைந்த கடன் சுமை இருப்பதால் கடன் வாங்குவது சாத்தியமாகிறது – இருப்பினும், படையெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்த தடைகளுக்குப் பிறகு சர்வதேச சந்தைகளுக்கான அணுகல் துண்டிக்கப்பட்டுள்ளது – மேலும் வரிகள் மீண்டும் உயர்த்தப்படலாம். மேலும், எண்ணெய்க்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தே பல விஷயங்கள் அமைகின்றன. விலைகளில் மேலும் சரிவு ஏற்பட்டால், அது நிலையற்ற தன்மையை அதிகரிக்கக்கூடும்; ஆனால் அதே சமயம், விலை உயர்வுகள் நிலைத்தன்மையைக் குறிக்கவும் கூடும். எனவே, குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்காவது, ரஷ்யாவால் போருக்கான செலவைத் தொடர்ந்து செலுத்த முடியும் என்று நிபுணர்கள் முடிவு செய்கிறார்கள். "புதின் மத்திய வங்கியைப் பணம் அச்சிட ஊக்குவிப்பார்; அவர் தொடர்ந்து வரிகளை உயர்த்துவார், அரசுச் சொத்துக்களை விற்பார் மற்றும் வணிக நிறுவனங்களைத் தேசியமயமாக்குவார்," என்று இனோசெம்ட்சேவ் கூறினார். இது, 2026-ஆம் ஆண்டுக்கும், பெரும்பாலும் 2027-ஆம் ஆண்டுக்குமான போரை நடத்துவதற்குத் தேவையான பணத்தைப் பெற அவருக்கு உதவும். ரஷ்யாவில் அதிகரித்து வரும் பொருளாதார அதிருப்தி, அரசியல் அதிருப்தியாகவும் மாறுமா என்ற கேள்வியும் உள்ளது. ஆனால், கடந்த சில வாரங்களில் கிரெம்ளினின் சிந்தனை மாறியிருப்பதற்கான சான்றுகள் வெளியாகியுள்ளன. பல மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. இவ்வாரம் அபுதாபியில் அமெரிக்காவின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. உக்ரைனின் பேச்சுவார்த்தையாளர்களுக்கு இப்போது ஒரு முக்கிய காரணி முக்கியத்துவம் பெறுகிறது: ரஷ்யாவின் போர்க்காலப் பொருளாதாரம் பலவீனத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறது, மேலும் அது என்றென்றும் நீடிக்க முடியாது. https://www.theguardian.com/world/ng-interactive/2026/feb/06/the-russian-economy-is-finally-stagnating-what-does-it-mean-for-the-war-and-for-putin#:~:text=The%20current%20outlook%20is%20unfavourable,for%20economies%20in%20the%20west.
  24. பாக்கு நீரிணையை 11 மணி நேரத்தில் நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி 07 Apr, 2026 | 10:25 AM பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடலை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே மற்றும் அருணா கமலேஷ் பாண்டே தம்பதியினரின் 17 வயதுடைய மகள் ஈஸ்வரி 11ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பிறவியிலேயே முழுமையாக பார்வையற்றவராக இருந்த போதிலும், தனது விடாமுயற்சி, துணிவு மற்றும் திறமையால் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும், இதற்கு முன்பு கடலில் நீந்தி தனது திறனை நிரூபித்துள்ளார். இந்நிலையில் நீந்துவதற்கு பார்வை தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலுமான சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்கு நீரிணை கடலை நீந்துவதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர். அனுமதி கிடைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர். திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து ஈஸ்வரி நீந்தத் தொடங்கி, பிற்பகல் 03.15 மணியளவில் அரிச்சல்முனை கடற்பகுதிக்கு வந்தடைந்தார். தொடர்ந்து 11 மணி , 15 நிமிடங்களில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தி உள்ளார். இதன் மூலம் பார்வை திறன் அற்ற மாற்றுத்திறனாளியாக கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை ஈஸ்வரி படைத்துள்ளார். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளியான ஈஸ்வரிக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக் நீரிணை கடற்பகுதியை 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்துள்ளார். மேலும், சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான புவி ஆற்றல் என்பவர் கடந்த 05.10.2025 அன்று பாக் நீரிணையை நீந்தி கடந்த உள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242934

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.