Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. '499 ரன்கள், 34 சிக்ஸர்கள்' - இமாலய ஸ்கோர் அடித்தும் கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 5 மார்ச் 2026, 19:01 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மார்ச் 2026, 19:09 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது இந்திய அணி. கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் ரன் மழையாகப் பொழிய, மொத்தம் 499 ரன்கள் எடுக்கப்பட்டன. மொத்தம் 34 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய இந்திய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களைக் குவித்தது. பெரிய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து கடைசி வரை போராடி 246/7 என இன்னிங்ஸை முடித்தது. 89 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன், தொடர்ந்து இரண்டாவது போட்டியாக ஆட்ட நாயகன் விருது பெற்றார். பட மூலாதாரம்,Getty Images அதிரடியைத் தொடர்ந்த சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த சஞ்சு சாம்சன், இந்த அறையிறுதிப் போட்டியிலும் அதைத் தொடர்ந்தார். இந்தப் போட்டிக்கு முன்பாக ஆர்ச்சர் vs சாம்சன் யுத்தம் அதிகம் பேசப்பட்டது. அதிவேக பந்துகளுக்கு முன்பு சாம்சன் தடுமாறியிருக்கிறார் என்பதால், ஆர்சரை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஆனால், ஆர்ச்சர் பந்துவீச்சில்தான் தன் அதிரடியைக் கட்டவிழ்த்தார் சாம்சன். ஆர்ச்சர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து தன் ரன் கணக்கைத் தொடங்கியவர், அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்தார். மீண்டும் மூன்றாவது ஓவரில் ஸ்டிரைக்குக்கு வந்த சாம்சன், அந்த ஓவரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். வில் ஜேக்ஸ் வீசிய முந்தைய ஓவரின் கடைசிப் பந்தில்தான் அபிஷேக் ஷர்மா அவுட் ஆகியிருந்தார். அந்த நிலையில், அடுத்த பந்தில் ஆர்ச்சர் போன்றதொரு அதிவேக பௌலரை சந்தித்தபோதும், டிஃபன்ஸிவாக ஆட நினைக்காமல் அதிரடியையே தொடர்ந்தார் சாம்சன். பட மூலாதாரம்,Getty Images அந்த மூன்றாவது ஓவரில் சாம்சனின் விக்கெட்டுமே விழுந்திருக்கும். அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து கேப்டன் ஹேரி ப்ரூக் தவறவிட்டார். அதுவும் கூட சாம்சனின் நம்பிக்கையைக் குலைக்கவில்லை. இரண்டாவது பந்தில் கேட்ச் டிராப் ஆயிருந்தாலும், நான்காவது பந்திலேயே ஒரு பெரிய சிக்ஸர் அடித்தார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஆர்ச்சர் யார்க்கர் வீசினார். ஆனால், அதையும் மிகவும் துல்லியமாகக் கணித்து தேர்ட் மேன் திசையில் தொட்டு விட்டு பவுண்டரி அடித்தார் சாம்சன். அவருடைய கணிப்பு, பந்தை அடித்த அவரது 'டைமிங்', அவரது உறுதி அனைத்துமே அந்த மூன்றாவது ஓவரிலேயே தெளிவாக வெளிப்பட்டது. சாம்சனின் அந்த அதிரடி ஆட்டம் எந்த இடத்திலும் தொய்வடையாமல் தொடர்ந்தது. ஒவ்வொரு பௌலரின் பந்துவீச்சிலுமே அவர் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்துக்கொண்டே இருந்தார். அதிலும், குறிப்பாக ஒவ்வொரு பௌலரையும் தான் சந்திக்கும் முதல் பந்திலேயோ, இரண்டாவது பந்திலேயோவே பவுண்டரி/சிக்ஸர் அடித்து நெருக்கடி ஏற்படுத்தப் பார்த்தார் சாம்சன். ஆர்ச்சர் தவிர்த்து அனைத்து பௌலருக்கு எதிராகவும் அப்படித்தான் ஆடினார். ஜேக்ஸின் பந்துவீச்சில் தான் சந்தித்தந்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். சாம் கரண் தனக்கு வீசிய இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார். ஆதில் ரஷீத் இந்தப் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். லியாம் டாசன் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தன் அரைசதத்தை நிறைவு செய்தார். ஓவர்டன் தனக்கு வீசிய இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்தார். அதுமட்டுமல்லாமல், பெரும்பாலான ஓவர்களில் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவர் பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க முயற்சி செய்தார். இது ஒவ்வொரு பௌலரையும் ஆரம்பத்தில் இருந்தே நெருக்கடிக்குத் தள்ளியது. பெரும்பாலான போட்டிகளில் பவர்பிளேவில் ஆர்ச்சர் அல்லது ஜேக்ஸ் இருவரில் ஒருவரை மூன்று ஓவர்கள் வரை பயன்படுத்திக்கொண்டிருந்த ஹேரி ப்ரூக்கை உடனடியாக வேறு திட்டங்களுக்கு நகர வைத்தது. அந்த தொடர் அதிரடியின் காரணமாக பவர்பிளேவிலேயே 67/1 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா. தொடர்ச்சியாக 180+ ஸ்டிரைக் ரேட்டிலேயே ஆடிய சாம்சன் 26 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். அதன்பிறகும் தன் அதிரடியைத் தொடர்ந்த அவர், 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது, 13.1 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் 160/3. அப்போதே ஆட்டத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தியிருந்தது இந்தியா. இந்திய அணியின் முடிவும், வீரர்களின் பங்களிப்பும் பட மூலாதாரம்,Getty Images இந்தப் போட்டியில் இந்திய அணி எடுத்த ஒரு முடிவுமே அவர்கள் பெரிய ஸ்கோர் எடுப்பதற்குக் காரணமாக இருந்தது. பத்தாவது ஓவரில் ஆதில் ரஷீத் பந்துவிச்சில் இஷன் கிஷன் அவுட் ஆனதும், ஷிவம் துபேவை நான்காவது வீரராகக் களமிறக்கியது இந்தியா. வழக்கமாக அந்த இடத்தில் சூர்யகுமார் யாதவ்தான் ஆடுவார். ஆனால், துபே ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக விளையாடுவார் என்பதால், ரஷீத் ஓவரை டார்கெட் செய்யும் நோக்கோடு துபேவைக் களமிறக்கியது இந்தியா. துபேவும் இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது போலவே விளையாடினார். தன் முதல் இரண்டு ஓவர்களில் ரஷீத் 13 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்திருந்தார். இந்த இன்னிங்ஸில் இந்திய பேட்டர்களை கட்டுக்குள் வைத்திருந்த ஒரே இங்கிலாந்து பௌலரான அவரது மூன்றாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் துபே. ரஷீத்தின் நான்காவது ஓவரிலுமே கூட அவர் ஒரு சிக்ஸர் அடித்தார். அதுமட்டுமல்லாமல், சாம்சன் கொடுத்த அதிரடியான தொடக்கத்தை மற்ற வீரர்களுமே நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்களும் மற்றொரு பக்கம் அதிரடியைத் தொடர்ந்துகொண்டே இருந்ததால் இந்திய அணியின் ரன்ரேட் தொடர்ச்சியாக 11 ரன்களுக்கு மேலேயே இருந்தது. வந்த அனைத்து பேட்டர்களுமே முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடும் நோக்கத்தில்தான் ஆடினார்கள். அபிஷேக் ஷர்மாவைத் தவிர்த்து, அவுட் ஆன மற்ற 6 பேட்டர்களுமே 170+ ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆடினார்கள். அதேபோல், அபிஷேக் தவிர்த்து அனைவருமே குறைந்தபட்சம் ஒரு சிக்ஸராவது அடித்தார்கள். கடைசி இரு ஓவர்களில் திலக் வர்மாவும், ஹர்திக் பாண்ட்யாவும் சேர்ந்து 5 சிக்ஸர்கள் அடிக்க, அப்போது 36 ரன்கள் எடுக்கப்பட்டன. இங்கிலாந்து அணி இறுதியில் 7 ரன்களில் தான் தோற்றது எனும்போது, இந்த இரண்டு ஓவர்கள் இந்தியாவுக்கு எவ்வளவு சாதகமாக அமைந்தன என்பதை உணர முடியும். இந்த தொடர் அதிரடியின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது இந்திய அணி. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணி எடுத்த நான்காவது அதிகபட்ச ஸ்கோர் இது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ப்ரூக் தவறான ஷாட்கள் அடித்த இங்கிலாந்து பேட்டர்கள் மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. அதனால், தவறான ஷாட்கள் ஆடி அந்த அணியின் பேட்டர்கள் தொடர்ச்சியாக அவுட் ஆனார்கள். பெரும்பாலான ஓவர்களில் முதல் பந்திலேயே பெரிய ஷாட் ஆட நினைத்தவர்கள், பந்தை சரியாகக் கணிக்காமல் அடித்து வெளியேறினார்கள். இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரின் முதல் பந்து... ஹர்திக் பாண்ட்யா நன்கு ஆஃப் சைட் வெளியே வீசிய பந்தின் ஸ்விங்கை சரியாகக் கணிக்காமல் பெரிய ஷாட் ஆடச் சென்ற ஃபில் சால்ட் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார். அதேபோல், ஐந்தாவது ஓவரின் முதல் பந்து... பும்ரா இந்தப் போட்டியில் வீசும் முதல் பந்து. அந்த முதல் பந்திலேயே தூக்கி அடித்தார் இங்கிலாந்து கேப்டன் ஹேரி ப்ரூக். ஆனால், பும்ரா வீசிய 'ஸ்லோ பால்' அவரை ஏமாற்றியது. சரியாகக் கணிக்காமல் ப்ரூக் தூக்கி அடித்த பந்தை, அக்‌ஷர் பட்டேல் பின்னால் ஓடிச் சென்று மிகச் சிறப்பாகப் பிடித்தார். இதேபோலத்தான் ஒரு பெரிய ஷாட் அடிக்கப்போய் ஆட்டமிழந்தார் ஜாஸ் பட்லர். வருண் சக்கர்வர்த்தி வீசிய இன்னிங்ஸின் ஆறாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளிலுமே ஜேக்கப் பெத்தேல் சிக்ஸர்கள் அடித்தார். நான்காவது பந்தில் அவர் சிங்கிள் அடிக்க, ஸ்டிரைக்குக்கு வந்தார் பட்லர். ஏற்கெனவே அந்த ஓவரில் 19 ரன்கள் வந்திருந்தது. அதிலும், பவர்பிளேவின் கடைசி 2 பந்துகள். அப்படியிருந்தும் பட்லர் பெரிய ஷாட் ஆடச் சென்றார். வருண் சக்கர்வர்த்தியின் கூக்ளியை சரியாகக் கணிக்காமல் அவர் சுற்றிப் பந்தை விட ஸ்டம்புகள் தகர்ந்தன. பட மூலாதாரம்,Getty Images கடைசி வரை போராடிய ஜேக்கப் பெத்தேல் ஆட்டத்தின் ஐந்தாவது ஓவர் களத்துக்குள் வந்த ஜேக்கப் பெதெல், கடைசி ஓவர் வரை போராடினார். ஆட்டம், கடைசி கட்டம் வரை செல்வதற்கும் மிகமுக்கியக் காரணமாக இருந்தார். மிகவும் தைரியமாக ஆடிய பெத்தேல், பெரும்பாலான பேட்டர்கள் கவனமாக ஆடும் பௌலர்களை தைரியமாக அடித்து ஆடினார். தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே (பும்ரா வீசிய பந்து) சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் அவர். வருண் சக்கர்வர்த்தி போன்ற ஒரு மிஸ்டிரி பௌலர் இந்தப் போட்டியில் வீசிய முதல் மூன்று பந்துகளிலுமே சிக்ஸர் அடித்தார். ஹர்திக், வருண், அர்ஷ்தீப் என அனைத்து பௌலர்களின் பந்துவீச்சையுமே அடித்து ஆடினார். சீனியர் பேட்டர்கள், பந்துகளைத் தவறாகக் கணித்து ஒருபக்கம் அவுட் ஆகிக்கொண்டிருக்க, பெத்தேல் தன் ஆட்டத்தில் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ஓரிரு பவுண்டரிகள் தொடர்ச்சியாக அடிக்கும்போது, உடனடியாக ஸ்டிரைக்கை ரொடேட் செய்தார். எல்லா ஷாட்களையும் அவர் பலமாக அடிக்கவில்லை. எப்போதெல்லாம் இரு ஃபீல்டர்களுக்கு இடையே இடைவெளியைப் பார்த்தாரோ, அந்த இடங்களைக் குறிவைத்து பவுண்டரிகள் அடித்தார். 19 பந்துகளில் அரைசதம் கடந்த பெத்தேல் , 45 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நிலை வந்ததால் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு அவுட் ஆனார். மற்றபடி அவர் எந்த பௌலருக்கும் ஒரு வாய்ப்பு கூட உருவாக்கவில்லை. அந்த அளவுக்கு முழுமையாக இருந்தது அவருடைய ஆட்டம். இறுதியில் 48 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அவர். பட மூலாதாரம்,Getty Images பெரும் தாக்கம் ஏற்படுத்திய ஜஸ்ப்ரித் பும்ரா மொத்தம் 499 ரன்கள் இந்தப் போட்டியில் அடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சரிசரியாக ஓவருக்கு 12.475 ரன்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் பந்துவீசிய 12 பௌலர்களில் பத்து பேர் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் கொடுத்தனர். மீதமிருக்கும் இரு பௌலர்களில் ஒன்பதுக்கும் குறைவான எகானமி வைத்திருக்கும் ஒரே பௌலர் - பும்ரா தான். இந்தப் போட்டியில் அவர் வீசிய முதல் பந்திலேயே இங்கிலாந்தின் முக்கிய பேட்டரான ஹேரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தினார். அதுவே ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல், கடைசி 3 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 45 ரன்கள் தேவை என்ற நிலையில், 18-வது ஓவர் பந்துவீச வந்து வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார் அவர். கடைசி கட்டத்தில் அது இங்கிலாந்துக்கு பெறும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த அணி இறுதி இரு ஓவர்களில் இலக்கை எட்ட முடியாமல் போனதற்கு அது மிகவும் முக்கியக் காரணமாக அமைந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு '499 ரன்கள், 34 சிக்ஸர்கள்' - இமாலய ஸ்கோர் அடித்தும் கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது ஏன்?
  3. 2026 – 2030 ஐந்தாண்டுத் திட்டம் : உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா 05 Mar, 2026 | 05:13 PM வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய கொள்கை சமிக்ஞைகளை வெளியிடத் தயாராக உள்ளது. குறிப்பாக 2026 முதல் 2030 வரையிலான புதிய ஐந்தாண்டு வளர்ச்சி திட்டத்துக்கான வழிகாட்டி வரைபடம் இந்த அமர்வுகளில் பரிசீலிக்கப்பட உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் சீனா, வளர்ச்சியின் வேகத்தை மட்டும் அல்லாது அதன் தரத்தையும் முக்கியமாகக் கவனத்தில் கொண்டு முன்னேறி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2035ஆம் ஆண்டிற்குள் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட நவீனமயமான நாடாக மாறும் இலக்கை அடைவதற்கான முக்கிய கட்டமாக 15ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலப்பகுதி கருதப்படுகிறது. சீனாவின் ஆட்சிமுறையில் ஐந்தாண்டு வளர்ச்சி திட்டங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்டபோதிலும், நாடு தொடர்ந்து வளர்ச்சி இலக்குகளை அடைந்து சீன நவீனமயமாக்கல் பயணத்தில் நிலையான முன்னேற்றத்தை சாதித்துள்ளது. வரவிருக்கும் தேசிய மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் உயர்மட்ட அரசியல் ஆலோசனை அமைப்பின் கூட்டங்களில், உள்நாட்டு தேவையை அதிகரிக்கும் கொள்கைகள் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன. உள்நாட்டு சந்தையை வலுப்படுத்துவது, அறிவியல்-தொழில்நுட்ப புதுமைகளை மேம்படுத்துவது, பொருளாதார சீர்திருத்தங்களை ஆழப்படுத்துவது மற்றும் உயர்தர திறந்த பொருளாதாரத்தை விரிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும். சீன பொருளாதார வளர்ச்சியில் நுகர்வு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் இறுதி நுகர்வு செலவினங்கள் 52 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐந்து சதவீதம் அதிகமாகும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மக்களின் வருமானத்தை உயர்த்துதல், சேவை துறையின் நுகர்வை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனுடன், தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் முதலீட்டு செலவினங்களை அதிகரிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. உட்கட்டமைப்பு வளர்ச்சியுடனும் மனித வள முதலீட்டுடனும் இணைந்த இந்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற வசந்தகால பண்டிகை நிகழ்ச்சியில் மனித வடிவ ரோபோக்கள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சி, தொழில்நுட்ப அடிப்படையிலான எதிர்காலத்துக்கான சீனாவின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியதாக மதிப்பிடப்படுகிறது. அறிவியல்-தொழில்நுட்ப தன்னிறைவு மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்காக அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஆதரவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் உயர்தர வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த தேசிய சந்தை அமைப்பை உருவாக்குதல், மூலதன சந்தை முதலீடு மற்றும் நிதியமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. 2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முக்கியமான 300க்கும் மேற்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை 2029ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்கு முன் கார்பன் டையாக்சைட் வெளியீட்டை உச்ச கட்டத்துக்கு கொண்டு வந்து பின்னர் குறைப்பதற்கான இலக்குடன், சீனா பசுமை ஆற்றல் மாற்றத்தையும் வேகப்படுத்த உள்ளது. சாமார்ட் மின்வலையமைப்பு, ஹைட்ரஜன் ஆற்றல் மற்றும் பசுமை எரிபொருள் தொழில்துறைகளை மேம்படுத்தும் முயற்சிகளும் இதில் அடங்கும். உலகளாவிய சவால்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையிலும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி முன்னேற்றத்தை அடையும் கொள்கையை சீனா தொடர்ந்து பின்பற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2026–2030 ஐந்தாண்டுத் திட்டத்தின் வழிகாட்டி ஆவணம் சீனாவின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசின் முன்னுரிமைகளை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் உலக பொருளாதார வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 – 2030 ஐந்தாண்டுத் திட்டம் : உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா
  4. சுகோய் போர் விமான விபத்து - 2 விமானப்படை வீரர்கள் பலி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுகோய் விமானம் (கோப்புப் படம்) இந்திய விமானப் படையின் சுகோய் (Sukhoi) விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது. இந்திய விமானப் படையின் கூற்றுப்படி, Su-30 MKI விமானம் பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தது. அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி அங்லாங் பகுதியில் அந்த விமானம் விபத்துக்குள்ளானது. அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து அந்த விமானம் புறப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது. இரவு 7:42 மணியளவில் அந்த விமானத்துடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பட மூலாதாரம்,@IAF_MCC/X இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஸ்குவாட்ரன் லீடர் அனுஜ், பிளைட் லெப்டினன்ட் பூர்வேஷ் துர்காகர் ஆகிய இருவரும் மரணமடைந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சுகோய் போர் விமானம் இந்திய விமானப் படையின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. சுகோய் போர் விமான விபத்து - 2 விமானப்படை வீரர்கள் பலி
  5. Today
  6. எடுத்ததற்கெல்லாம் பழமைவாதம் பேசும் நீங்எள் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய பதிவு திருமண முறையை மட்டும் ஏற்பதேனோ? இங்கு திரிக்கு திரிக்கு ஒரே விடயத்தை பலர் காவித்திரியும் போது இப்படி நீங்கள் அவர்களை கேள்வி கேட்டதில்லை. மாறாக அவர்களுடன் நீங்களும் இணைந்து லூட்டி அடித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றீர்களே! அது ஏன் சார்? அவர்கள் உங்கள் நண்பர்கள் என்பதாலோ?
  7. இங்கு எனது கருத்தில் இனம் மதம் எங்கு வந்தது? சீமான் என்ற மூன்றாந்தர அரசியல்வாதியுடன் சேர்ந்து அடுத்தவன் நாடுவரை எல்லை தாண்டிச் சென்று நீங்கள் தூவும் இனதுவேசம் என்ற விசம் கண்டிக்கத்ததல்லவோ!
  8. திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் திரிசா - விஜய் ஜோடியாக கலந்து கொண்டனர் - செய்தி எங்க தல க்கு தில்ல பாத்தியா..?
  9. படம் : இன்ஸ்பெக்டர் மனைவி ( 1973) பாடியோர் : ஜெயசந்திரன் & சுசீலா இசை : சங்கர் - கணேஷ்
  10. முழு ஆவணம்:
  11. வாழ்ந்தால் உங்களை போல் வாழ வேண்டும்.. படம் : சொந்தம் (1973 ) இசை :MSV பாடியவர் : ஜானகி வரிகள் :கண்ணதாசன்
  12. ஒரே பாலினத்தில் உருவான ஐயப்பன் கடவுளை இலங்கையில் இருந்து கும்பட இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதையும் இலங்கை அரசு தடைசெய்ய வேண்டும்.
  13. கேன்வில்சியம்சன் அணியில் இல்லா விட்டாலும் அந்த குழந்தை முக்துக்காகவாது நீயுஸ் வெல்ல வேணும்.
  14. உண்மை தான் விஜயலட்சுமியே நீதிமன்றம் ஏறி நீதி கேட்டுள்ளார் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி living together வாழ்ந்து விட்டு ஏமாற்றுவது என்பது எல்லோரும் செய்யும் மோசடி அல்ல.அதுவும் அந்த மோசடியை செய்தது முஸ்லின் மதத்தின் கடைசி இறைதுதர் முகமது போன்று தமிழ் இனத்தின் கடைசி நம்பிக்கை தமிழ் இனத்தின் அடையாளம் வெளிநாட்டு ஈழதமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் சீமான். அவர் பாலியல் வன்கொடுமை குற்றம் செய்தாலும் அது தவறில்லை என்ற நிலை.
  15. அனுரா அம்மான் ஒர் ராஜதந்திரி நிச்சயம் சுழிச்சு ஓடி எங்களை நல்லூரானின் திருவடியை வணங்க வைப்பார் ...
  16. நீதி நியாயத்தை விட பலம் வலிமையானது என்பதை நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள். நன்றி.
  17. ரஷ்யாவும் இனிமேல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தன் எரிசக்திகளை விற்க தடை என ஆணித்தரமாக கூறிவிட்டது. மயான காண்ட கூத்து ஆரம்பமாகுகின்றது என நினைக்கின்றேன்.
  18. இந்த விதிக்கு பெற்றோல் மட்டும் விதிவிலக்கெல்லோ அண்ணை?
  19. நீங்கள் சொல்லும் மூட நம்பிக்கை திருமணங்களை நீதிமன்றம் என வரும்போது சட்ட பூர்வமாக ஏற்பதில்லை. 😎 இந்த கோசான் ஏன் தான் இன்னும் ஆலமரத்துக்கு கீழ இருக்கிற பஞ்சாயத்து கல்லில குந்தியிருக்கிறார் எண்டு எனக்கு விளங்கேல்லை. 🤣
  20. இது இந்தியாவின் நான்காவது இறுதிப் போட்டி. நியுசிலாந்தின் இரண்டாவது. இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து மூன்று முறை இறுதிப் போட்டிக்குப் போயிருக்கினம்.
  21. விலை ஏறின பொருள் என்றும் என்றும் விலை குறைந்த வரலாறே இல்லை. நேற்றில் இருந்து… முதல் முறையாக ஒரு லீற்றர் பெற்றோல் 2 ஐரோவை தாண்டியது.
  22. Yesterday
  23. எம்டன், எம்டன் மகன் என்ற பெயரே ஆழ்கடலில் நின்று விட்டு, இலங்கை, தென்னிந்திய நகர்களை புயல் போல் உள்ளே வந்து தாக்கி, பின் ஓடி விடும் ஜப்பானிய கப்பலின் பெயர்தானாம். ஆனால் மீன் பிடி படகை எல்லாம் குறிவைக்க மாட்டார்கள். மல்டி டே டிரோலர்கள் கூட வளைகுடா வரை போவதில்லை என நினைக்கிறேன்.
  24. முற்றிலும் உண்மை. ஆனால் எது எப்படியோ இந்த திராவிட தலைவர்கள் துணைவியையும், மனைவியையிம் கண்கலங்காமல் பார்த்து கொண்டு, பொது மேடைகளிலும் ஏறினர். ஆனால் ஒரு பெண் கோர்ட் படி ஏறி கண்ணை கசக்கியது. நம்ம அண்ணன் தம்பிகள் விடயத்தில் மட்டுமே. இதே போல் ஒரு பலமான கட்சியான பிஜேபியின் தயவில்தான் அண்ணன் கடைசியாக விஜி அண்ணியின் வாயை அடைத்தார். உச்ச நீதிமன்று போய், பிஜேபி ஆஸ்தான வக்கீலை வைத்து - இப்படித்தான் விஜி அண்ணி வாயையும் அடைத்தார்கள். நாமே அறியோம் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.