All Activity
- Past hour
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
30 நாட்களில் விற்க வேண்டிய பெற்றோலை மூன்றே நாட்களில் விற்றுத் தீர்த்துள்ளனர். பெற்றோல் நிலையங்களில் பெற்றோல் இல்லை ஆனால் ஒவ்வொருவர் வீடுகளிலும் பதுக்கப்பட்டுள்ளது.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இதில் இன்னமும் தெளிவில்லை. நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்.
-
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !
யாழ் மத்திய கல்லூரி 3 விக்கட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.👏🏆
-
அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு
இது சங்கிகளுக்கு மட்டும்
-
கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்
-
கருத்துப்படம் 07.03.2026
-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
-
அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர
நீங்கள்... விகாரைகளை கட்டி, "டமுக்கு" அடியுங்க. 😂
- Today
-
அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர
அமெரிக்கா உலகம் முழுவதுலும் உள்ள கடற்பரப்புகளை உயர் தொழில் நுட்பம் மூலம் தன்னால் முடிந்த அளவுக்கு கண்காணிக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் உள்ளது. இதில் என்ன பகீரங்கப்படுத்துவதற்கு உள்ளது.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
கடைசியாக கிடைக்கும் தகவல்கள் படி, இந்த கப்பல், கண்காட்சியில் வைத்து இலங்கை கொடுத்த அழைப்பை ஏற்று, இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளது. பாதி வழியில் இலங்கை அழைப்பை மீளப் பெற்றுள்ளது. அப்புறம் உள்ளே அனுமதிப்பதா இல்லையா என முடிவெடுக்க இலங்கை தாமதிக்க அந்த இடைவெளியில் கப்பலை அமெரிக்கா தாக்கியுள்ளது. சுய விருப்பில் இலங்கை நோக்கி புறப்பட்ட கப்பலை இந்தியா தடுத்திருக்க, பாதுகாக்க முடியாது. அதேபோல் விசாகபட்டனத்திலேயே இந்தியாவிடம் கப்பல் சரண் அடைத்திருந்தால் -ஏனைய இரு கப்பல்களை போல அதுக்கும் தஞ்சம் கிடைத்திருக்கும்.
-
இந்திய அனுமதியுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரான் போர்க்கப்பல்: பணியாளர்களுக்கு தங்குமிடம்
ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்! ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. IRIS Lavan கப்பலானது கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அடைக்கலம் கோரியிருந்த நிலையில், மார்ச் 1ஆம் திகதி அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1467512
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இவர்கள் கொல்லப்படும்போது அவரவர் நாட்டு மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இவர்கள் கேட்க முடியாது. ஒரு நாட்டில் பலாத்காரமாக உள்நுழைந்து, அவர்களது வளங்களை சுரண்டி, மக்களையும் அரசியற்தலைவர்களையும் கொன்று, நிர்வாகத்தை, நாட்டை சிதைத்து, செய்வது பயங்கரவாதம், சொல்வது மனிதநேயப்போர். அவர்கள் நாட்டிற்குள் அடாத்தாக புகுந்து இவ்வளவு கோரத்தையும் செய்யும் ட்ரம்ப் தன் நாட்டிற்குள் அவர்கள் வருவதற்கு தடை விதிக்கிறார், காரணம் பயம். அயத்துல்லா அலி கமெனி தங்கியிருந்த இடத்தில ஏவப்பட்ட குண்டு, தரையை தொட்டவுடன் வெடிக்காமல் பல அடி ஆழமுள்ள சீமெந்து மற்றும் பாறைகளை துளைத்துக்கொண்டு உள்ளே சென்ற பிறகுதான் வெடிக்குமாம். நிலத்துக்கடியில் மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு பிறகு தரைப்பகுதி உள்வாங்கப்படுமாம், இதற்கு பங்கர் பஸ்ரர் என்று பெயராம். போராட்டகாலத்தில், நமது ஊர், அண்டைய பல ஊர்களில் இப்படியான பல குண்டுகள் விடியற்காலையில் மக்கள் தூக்கத்திலிருக்கும்போது வீசப்பட்டன. தரை, பல அடி ஆழத்திற்கு கிணறு போல் தோன்றி நீரும் வந்துவிடும், அதற்குள் வீடு முழுதாக அமிழும். இது பல கிராமங்களில் நடந்திருக்கு. தூக்கத்திலிருந்தவர்கள் அதற்குள்ளேயே மாண்டனர். அப்போ, அந்த குண்டுகளை இலங்கைக்கு அளித்தது இஸ்ரேல்! வைத்தியசாலை, சிறுவர் விடுதிகளிற்கு குண்டுகளை வீசிவிட்டு, அங்கு பயங்கரவாதிகள் மறைந்திருந்ததனால் தாக்கி அழித்தோம் என்று கூறினார்கள். அதே சம்பவம் காஸா, ஈரானில் இஸ்ரேலால் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆலோசனையை இஸ்ரேலே வழங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. இன்று இஸ்ரேலை இலங்கை கண்டிப்பது, மனித நேயம் பேசுவது வியப்பாக இருக்கிறது. தன்னை புனிதன் என்று அறிவிக்கிறதா?
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஒரு பலமான போராட்டம் அழிவது துரோகிகளால் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. மொஸாட் கும்பலுக்கு முகவராக ஈரானின் படைத்தளபதியே செய்திகளை அனுப்பியுள்ளார். அந்த தகவலின்படியே இஸ்ரேல் துல்லியமாக தாக்குதலை நடத்தியுள்ளன. அயத்துல்லா அலி கமேனியுடன் கூட இருந்துகொண்டே குழி பறித்துள்ளார், கடைசி நிமிடத்தில் முகமது பக்போர் கூட்டத்திலிருந்து மாயமாகி செய்தி அனுப்பி தாக்குதலை நடத்தியிருக்கிறார். அவரும் கூட்டத்திற்கு பங்குபற்ற சென்றதால் அவரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அவர் இப்போ விசாரணையில் உள்ளாராம். ஈரான் மீது கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வைத்துப்பார்க்கும்போது இவர்தான் உளவாளியாக செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது, கடந்த ஆண்டே இவர்மீது விசாரணை ஆரம்பித்த போதும் அயத்துல்லா அலி கமேனியுடன் இவர் நெருக்கமாக இருந்த காரணத்தினால் அது தடைபட்டது அல்லது தடுக்கப்பட்டது, அது யாரால் என்கிற விசாரணையும் தொடர்கிறதாம். இவருக்குப்பின்னால் இன்னும் பலர் இருக்கலாம், இது ஈரானிய படையினரை சந்தேகிக்கும், சோர்வடைய செய்யும், பலவீனப்படுத்தும் செயலாகும்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
டிரம்ப் விவிவிலிய பிரார்த்தனையும், பிரளயத்தை மையமாக (second comimg) வைத்து சண்டையை விபரிப்பதும். இயேசுவின் மீள்வருகை (second coming) போதே புண்ணியம் செய்த சொற்றபமானவர்கள் எஞ்சி இருப்பார்கள் இயேசுவை காண - இதை வேறு திரியில் சொல்லி இருக்கிறேன். (முழு வீடியோ ஐ பார்க்கவும்)
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
nepodStros87hul80129f94c 4i3a138616c9lfmta50c3mai741c56uf755 · கேள்வியும் பதிலும் தமிழரைப் பொறுத்தவரை மனித வாழ்க்கைக்கு மிக முக்கிய தேவை என்ன? பெற்றோலும், டீசலும். யாழ். குடாநாட்டில் இப்போது அதிகம் காணக்கூடிய வாகனங்கள் எவை? பெற்றோல் பௌசர்கள் குடாநாட்டு மக்களின் பிரதான தொழில் என்ன? எரிபொருள் பதுக்குதல் அவரகளது பொழுதுபோக்கு....? பெற்றோல் செற் கியூவில் நிற்றல் இலங்கையில் அதிகம் எரிபொருள் பாவனையாளர்கள் யார்? குடாநாட்டு மக்கள்தான். யாழ்ப்பாணத்தின் வளம் என்ன? எரிபொருள் சேகரிப்பு இவ்வளவு யுத்தக் கலக்கத்திலும் நமது ஜனாதிபதி மனம் தளராமலிருப்பது எதனால்? குடாநாட்டிலுள்ள பெற்றோலை வைத்து இன்னும் பல ஆண்டுகள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கைதான்......!
-
குட்டிக் கதைகள்.
pSroosnedtgfHtg01u2àut5g328ig66ll6r03:16i89g9uu03et 9 i050,i · ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள். கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார். அங்கிள்... அங்கிள்.... என்னம்மா????? கடைக்காரர் பரிவுடன் கேட்டார்.... அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்.... திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள் prescription கொண்டுவந்தாயா குழந்தை???? அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது.... அப்படின்னா???? எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள். "காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது. சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன????? குழந்தை மென்று விழுங்கி சொன்னது " மெரிக்கள்" கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார். நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு????? மெரிக்கள் அங்கிள்... அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது????? குழந்தை கண்ணீருடன் சொன்னது.... டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகை ஆரம்பித்தது. அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார். அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார். வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம் விவரத்தை கேட்டு அறிந்தார். அக் குழந்தைக்கு இருதயத்தில் 5 இடங்களில் block இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்..... டாக்டர்.... நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர். அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கிறேன். விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா???? மருத்துவ செலவை முழுவதும் நானே ஏற்றுக்கொள்கிரேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பெற்றவர்கள் கண்ணீர் மல்க ஆண்டவர் தான் உங்கள் ருபத்தில் வந்து என் குழந்தையை காப்பாற்றினார். என்று கூற அதற்க்கு மருத்துவர் இதற்க்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான் காரணம். டாக்டர் உங்களிடம் ஏதாவது MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை, குழந்தை அந்த miracle என்ற வார்த்தையை மருந்து தான் என்று நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம். எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று. அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார்........!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடேங்கப்பா இவ்வளவு விதிகள் உள்ளனவா ....... எல்லாம் எங்கள் தலைவிதி . ......!
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
முதலில் இந்தியாவின் பெயர் இல்லை. இப்போது சேர்த்து விட்டார்களா? விருந்தாளி விசாகப் பட்டணத்தில் நிற்கும் போதே சண்டை தொடங்கியதால் இந்தியா இவர்களை பத்திரமாக கையாண்டு இருக்கலாம்.
-
அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு
அப்ப உங்க வாக்கு திமுகவுக்கே. நல்லது.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
தெளிவான, விடயம் அறிந்த தலைமை
-
ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள் - பிரதமர் அந்தோணி அல்பானிஸ்
ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள் - பிரதமர் அந்தோணி அல்பானிஸ் Published By: Vishnu 07 Mar, 2026 | 06:40 AM இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஈரானியப் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் மூன்று அவுஸ்திரேலிய கடற்படை வீரர்கள் இருந்ததை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானிஸ் வெள்ளிக்கிழமை (06) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், ஈரானுக்கு எதிரான அந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய வீரர்கள் எவரும் "நேரடியாகப் பங்கெடுக்கவில்லை" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 'IRIS Dena' கப்பலைத் தாக்கும் நடவடிக்கை தொடங்கியபோது, அதில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் அந்தச் செயல்பாட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக பிரதமர் தெரிவித்தார். "அவுஸ்திரேலிய வீரர்கள் எவரும் ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை" என்று அவர் ஸ்கை நியூஸ் தளத்திற்குத் தெரிவித்தார். தாக்குதலை நடத்திய நீர்மூழ்கியின் பெயரை அமெரிக்கா வெளியிடவில்லை என்றாலும், அது 'USS Minnesota' என்ற வெர்ஜீனியா ரக நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கலாம் என இராணுவ இணையதளங்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியா தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கான ஆயத்தப் பணிகளுக்காக, சுமார் 50-க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் தற்போது அமெரிக்க நீர்மூழ்கிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவுஸ்திரேலிய அரசின் இந்த நிலைப்பாட்டை பசுமைக் கட்சி செனட்டர் டேவிட் ஷுப்ரிட்ஜ் கடுமையாகச் சாடியுள்ளார். "இந்தத் போர் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியா இதில் நேரடியாக ஈடுபடவில்லை என்று தொழிலாளர் கட்சி கூறிவருவது ஒரு பொய். டொனால்ட் டிரம்ப்பின் சட்டவிரோதப் போரில் அவுஸ்திரேலியா இப்போது உடந்தையாகியுள்ளது," என அவர் குற்றம் சாட்டினார். இராணுவ ஆய்வாளர் மால்கம் டேவிஸ் கருத்துப்படி, நீர்மூழ்கியின் கப்டன் தாக்குதலுக்கான முடிவை எடுத்தவுடன், பயிற்சியில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் தார்மீக மற்றும் சட்ட ரீதியான காரணங்களுக்காகத் தங்களது அறைகளுக்குத் திரும்பிச் சென்றிருப்பார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க கடற்படை ஒரு போர்க்கப்பலை டார்பிடோ மூலம் அழித்தது இதுவே முதல் முறையாகும் எனத் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள் - பிரதமர் அந்தோணி அல்பானிஸ்
-
ஏராளன் started following ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சர்வதேச விசாரணையை நடத்தினால் சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்! , ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள் - பிரதமர் அந்தோணி அல்பானிஸ் , வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானிக்கவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர் and 1 other
-
வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானிக்கவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர்
வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானிக்கவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர் 06 Mar, 2026 | 02:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பின் போது சகல விடயங்களும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்ததன் பின்னரே காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தித்வா புயல் தாக்கம் ஏற்பட்டவுடன் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பேரிடரை முகாமைத்துவம் செய்வதற்கும் 2025.11.28 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைகளின் பிரகாரம் அவசரகால சட்டம் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டது. சட்டத்தின் உறுப்புரையின் பிரகாரம் அமுல்படுத்தப்பட்ட அவசரகால காலம் ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பதற்ற நிலைமையை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (நேற்று முன்தினம்) கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.இதற்கமைவாகவே இம்முறையும் அவசரகால சட்டத்தின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தவில்லை. மக்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை. வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார்கள். யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. குறுகிய அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடே இது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கப்படும் போது சகல காரணிகளும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி தான் காணிகள் விடுவிக்கப்படுகின்றன. காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். என்ற கொள்கையை நெருக்கடிக்குள்ளாக்கவே ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக கட்டமைப்பு குறித்து எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் 5 ஆண்டுகால கொள்கைத் திட்டத்தை உள்ளடக்கி மூன்று தடவைக்கு செயற்படுத்தியிருந்தால் நாடு முன்னேற்றமடைந்திருக்கும், பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்பெற்றிருக்கும் என்றார். வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும்
-
கருத்து படங்கள்
- இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பு: பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர் வரவு!
இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பு: பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர் வரவு! இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களிடமிருந்து 729 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் (548.1 மில்லியன் டொலர்) ஒப்பிடுகையில் 180.9 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லது சுமார் 33 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஜனவரி மாதத்தில் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகப் பதிவாகியிருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது பெப்ரவரி மாதத்தில் பணப்பரிமாற்றத்தில் சிறிய அளவிலான வீழ்ச்சி காணப்பட்டாலும், வருடாந்த அடிப்படையில் இது ஒரு பாரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஜனவரி மற்றும் பெப்ரவரி) மொத்தமாக 1.48 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக இலங்கைக்குக் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 32 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முதுகெலும்பாக விளங்கும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் இவ்வாண்டு ஆரம்பத்திலேயே பில்லியன் கணக்கில் அதிகரித்திருப்பது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது. https://athavannews.com/2026/1467446- அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் - சுஜீவ சேனசிங்க
அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் - சுஜீவ சேனசிங்க 06 Mar, 2026 | 05:17 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஈரான் கப்பல் விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட கருத்துக்களை முன்னிலைப்படுத்தி ஆளும் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது அமெரிக்கா தாக்கப்பட்டமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் இலங்கை மீதும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கத்திடம் பலமுறை கேட்டும் இதுவரையில் அந்த ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இலங்கை கடற்பரப்பில் தாக்குதல் நடத்தும் போது இலங்கை அமைதியாக இருக்க வேண்டும், தாக்குதலுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அதேபோல் இந்தியாவுடன் 08 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்களும் இதுவரையில் பகிரங்கப்டுத்தப்படவில்லை. அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான ஒப்பந்தங்களின் இரகசியத்தன்மையை பாதுகாப்பதன் பின்னணி என்ன? என்று கேள்வியெழுப்பினார். அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் - சுஜீவ சேனசிங்க- ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சர்வதேச விசாரணையை நடத்தினால் சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!
சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்! Mar 2, 2026 - 09:51 AM இந்த அரசாங்கத்தினால் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு விசாரணையை நடத்தினால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கை தமிழரசு கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்குட்பட்ட ரமேஷ்புரம், கணபதி நகர், ஐயன்கேணி ஆகிய அறநெறி பாடசாலைகளில் கல்வி கற்கும் 6 ஆம் தரத்திற்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (01) நடைபெற்றது. ரமேஷ்புரம் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான செல்வகுமார் நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று நகரசபை உறுப்பினர் ரகு உட்பட ஆலய நிர்வாக சபையினர், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்க, மற்றும் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது மேலும் கருத்துதெரிவித்த அவர், உத்தியோகபூர்வமாக அவர்களுடன் சேர கூறி எங்களுடைய கட்சியிடம் பேசியதாக நான் அறியவில்லை. அவ்வாறான ஒரு அழைப்புகள் வந்தால் அது கட்சியினுடைய உயர்மட்ட குழுக்கள் மத்திய செயற்குழுக்கள் தான் அந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். இருந்த போதும் என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கை தமிழரசு கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பு இருக்கும் என நான் நம்பவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆனால் இது தொடர்பாக கட்சியினுடைய உயர்மட்டம்தான் முடிவு எடுக்க வேண்டும். அரசாங்கத்தை பொருத்தவரையில் இந்த சுரேஷ் சலேனுடைய கைது சம்பந்தமாக உண்மையில் நான் 2023 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பல விடயங்களை நாங்கள் வெளிப்படுத்தி இருந்தோம். சர்வதேச விசாரணை வந்தால் தான் எங்களுடைய சாட்சியங்களை சர்வதேச விசாரணை இடம்பெற்றால் ஒப்படைக்கலாம் என்று இன்றும் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட இன்றும் சாட்சிகள் வழங்குவதற்கு பலர் இருக்கின்றார்கள். சுரேஷ் சலே கைதுக்கு பின்னர் இலங்கை வரலாற்றில் நடக்காதவாறு நடந்திருக்கின்றது. அரசாங்கத்தில் இந்த நல்ல விடயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், நல்ல விடயங்களை நாங்கள் மறுப்பது அல்ல அந்த வகையில் சுரேஷ் சலே போன்று உயர்மட்ட ராணுவ புலனாய்வுத்துறை ராணுவ அதிகாரிகளை கைது செய்வது இந்த அரசாங்கம் செய்துள்ள பெரியதொரு விடயம். ஆனால் இன்னமும் பலர் இருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் நினைக்கின்றேன் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அதோடு அதனை தொடர்ந்து ராணுவ புலனாய்வுத்துறை செய்த பல விடயங்கள் தொடர்பாக பலர் கருத்துக்கள் முன் வைத்திருக்கின்றார்கள். நாங்களும் பாராளுமன்றத்தில் இந்த விடயங்களையும் கூறி இருக்கின்றோம். இந்த விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச மேற்பார்வையுடன் ஒரு விசாரணையை இந்த அரசாங்கம் செய்யுமாக இருந்தால் அரசுக்கு ஒரு நிரந்தரமான வெற்றி கிடைக்கும், அது ஒரு புறம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் சர்வதேச அங்கீகாரத்துடன் ஒரு விசாரணையை நடத்தினால். அந்த வகையில் இவ்வாறான ஒரு பின்னணியில் நான் ஏன் கூறுகின்றேன் என்றால் மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் சுரேஷ் சலே இராணுவ வீரர் தமிழ் மக்களை அழித்ததில் அவருக்கும் பங்கு இருக்கின்றது என்கின்ற போது தமிழரசு கட்சி இவ்வாறான ஒரு கூட்டணியில் சேருமா என்ற கேள்வி கேட்பது பிழை என்பதை சொல்லுவதற்காகதான் கூறுகின்றேன் என தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!- யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது! யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் தினேஷ் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தூய தேன் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேன் போத்தல்களுக்குள் சீனிப்பாணியே காணப்பட்டதை கண்டறிந்து 19. 3/4 போத்தல் சீனிப்பாணி கரைசல்களை கைப்பற்றியுள்ளார். அதேவேளை தூய நெய் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8, 1/4 போத்தல் நெய் போத்தல்களும் கலப்படம் நிறைந்தது என அவற்றையும் கைப்பற்றியுள்ளார். கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி கரைசல் மற்றும் கலப்பட நெய் என்பவற்றை விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பில் விற்பனையாளரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்ய பொது சுகாதார பரிசோதகர் , விற்பனையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். https://athavannews.com/2026/1467474 - இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பு: பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர் வரவு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.