All Activity
- Today
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நானும் இதை அறிந்திருக்கின்றேன்
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
நான் எப்பவும் சுவியருக்கு பின்னும் முன்னும் திரியறனான்.எப்படி இதை தவற விட்டேன் என்று தெரியவில்லை.அருமை.
-
பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
முழு ஆவணம்:
-
தண்டராம்பட்டை அடுத்த ராதாபுரம் கிராமத்தில் நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.jpg
-
முருகமங்கலம் ஏரியில் உள்ள ஒரு வீரனின் நடுகல்.jpg
-
தேவிகாபுரம் போளுர் செல்லும் சாலையில் வேடர் பறி மண்டபம் அருகே இந்நடுகல் உள்ளது.jpg
-
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் பெண்ணேஸ்வர மடம் என்ற ஊரில் உள்ள பெண்ணேஸ்வரர் கோயிலுக்கு அருகிலும் அந்த ஊரிலும் ஏராளமான நடுகற்கள் உள்ளன அந்த நடுகல்லில் இது ஒன்று.jpg
-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல் சிறுநாகலூர் - around 5th cent.jpg
-
ஆலம்பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள வேடியப்பன் கோயில்.jpg
-
img_1_1766844394856.jpg
-
img_2_1766844408694.jpg
-
kuththukkattaikal
-
iru muzhi.jpg
-
erumaikkompu.jpg
-
erumaikkompu..jpg
-
irular weapons.jpg
-
half moon weapon.jpg
-
aamarak kaththi.png
-
paazhaik kaththi.png
-
erikampu.jpg
-
main-qimg-f64641ffbe33ef462b59d8b24d84340c-pjlq.jpg
-
main-qimg-f969d1e6ae31cfd6fd48ab133e2bf852.jpg
-
main-qimg-f145a0bc2a226d315b4041f932c40740.jpg
-
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
சரி, இவர் கொடிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர உதவியவர், ஆகையால் அவர் அப்பாவிகள் மேல் நடத்திய இன்னொரு பயங்கரவாத செயலை காணாமல் விட்டு விட வேண்டுமா? இவர் செய்தார் என சந்தேகிக்கப்படும் தாக்குதல் பற்றி விசாரிக்க முன்னமேயே போர்க்கொடி தூக்கும் இவர்கள், போர் முடிவுக்கு வந்தவுடனேயே பொன்சேகா சிறையிலடைக்கப்படும்பொழுது ஏன் இந்த எதிர்ப்பை காட்டவில்லை? அவரும் போரை முடிவுக்கு கொண்டுவர முன்னின்று உழைத்தேன் என்கிறாரே? சுரேஷ் சலே என்ன அரசியல் வாதியா அவரை அனுரா பழிவாங்குவதற்கு? இராணுவ புலனாய்வே இந்த விசாரணையை நடத்தி இவரை கைது செய்திருக்கிறது, புலிகளையும் புலம்பெயர்ந்தோரையும் மகிழ்ச்சிப்படுத்த கைதுகள் நடைபெறுகின்றன என்று கூறுகிறார்களே, அப்புலிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட கொலைகள், கொள்ளைகள் வெளிவருவதனால் எல்லா அ நிஞாயங்களையும், புலிகளை புலம்பெயர்ந்தோரை சாட்டி தப்பித்துக்கொள்ளலாம் என்கிற பிழையான கலாச்சாரம், வரலாறு உருவாக்கப்பட்டதினாலேயே இன்று நாடு கொலைகளால் நிறைந்துள்ளது. முசுறுக்கூட்டை அனுரா குழப்பிவிட்டுள்ளார், இனி கலைந்த கூட்டம் அகப்பட்டவர்களை எல்லாம் தாக்கத்தான் செய்யும் தம்மை பாதுகாத்து கொள்வதற்காக. சலேயின் குற்றம் நிரூபிக்கப்பட்டால்; அவருக்கும் அவரின் எஜமானர்களுக்கும் மரணதண்டனை அளிக்கப்படவேண்டும். எத்தனை அப்பாவிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இவர்களின் அரசியலுக்காக அநிஞாயமாக பலிவாங்கப்பட்டிருக்கிறார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முன்பு இலங்கையில் இந்தியா அமைதிப்படை இருந்தகாலங்களில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்கும் போது அம்பிடும் அப்பாவி பொதுமக்களை அதிகமாக தாக்குவதாக சொல்லுவார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிச்சுமணி எனும் கோவில் மணி அடிக்கும் கரெக்டரில் இருக்கும் வடிவேலு தனக்கு அரச வேலை கிடைத்ததும் சொல்லுவார்… நான் அடிச்சமணி ஆண்டவனுக்கு கேட்டதோ இல்லையோ அரசாங்கத்துக்கு கேட்டிருக்கு… அது போல ஆப்கானிஸ்தான் “அடிக்கும்” என நீங்கள் சொன்னது தலிபானுக்கு கேட்டிருக்கு…😂 நேற்றிரவு எல்லையில் பாகிஸ்தான் ஆமிக்கு சப்பல் அடியாம்.
-
சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
நாட்டைக்கொள்ளையடித்து பதுக்கிய உலக மகா திருடர்களை பாதுகாத்துக்கொண்டு, ஏதோ சின்னஞ்சிறுசுகள் ஆசையில எடுத்த சொக்லெற்றுகளை பெரிய திருட்டுபோல படங்காட்டுகிறார்கள் போலீசார். இவர்கள் செய்யும் போதைப்பொருள் கடத்தலையும் வெளியிடவேண்டும். அந்த சிறுமிகளை பெற்றோரிடம் அல்லது விடுதி தலைவரிடம் ஒப்படைத்து பிரச்சனையை தகுந்த முறையில் சுட்டிக்காட்டி திருத்தியிருக்கலாம், ஏதோ நாட்டைக்கொள்ளையடித்துபோல் செய்தி. என்ன நாடு இது? "தலைவன் எவ்வழி குடிகள், குழந்தைகள் அவ்வழி."
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆப்கானிஸ்தான் இலங்கை, அவுஸ்திரேலியா விளையாடிய குழுவில் இருந்திருந்தால் கட்டாயம் சூப்பர் 8 க்கு சென்று இருக்கும். நானும் சிலவேளை ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தினை வெல்லலாம் என முதலில் நினைத்தேன். பிறகு நியூசிலாந்தினை தெரிவு செய்தேன்.
- Yesterday
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............... ஆப்கானுக்கு தாலி கட்டியது போல ஆகி விட்டது என் நிலை....................🤣. முடியவில்லை, இன்னும் இருக்கின்றது, அண்ணா.................. சூப்பர் எட்டில் ஒரு குரூப்பில் முதலாவதாக வருவார்கள் என்று கூட தெரிவு செய்திருக்கின்றேன்................🤭. .... புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய்ப் பாம்பாகி .... ... ஆப்கானை தெரிந்து.......................🤣.
-
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்
இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் தமிழர் கொல்லப்பட்டது ...கிரிஸ்தவ மதகுருவுக்கு தெரியும் ...அதுக்கு இதுவரை ஒரு கதையில்லை ..300 பேர் கொல்லப்பட்டதை (கண்டிக்கப்படவேண்டும்) விசுவரூபமாக்கி உலகத்துக்கு காட்டமுற்படுவது .....என்ன நியாயம்....தமிழர் மனித இனமில்லையா
-
நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்! - சரத் வீரசேகர விளாசல்
இரண்டு நாட்டிலும் பூட்டிய அறையில் பரீட்சை எழுதி சித்தி எய்திய கல்வியாளர் தொகை கூடிவிட்டதோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதென்றால் உண்மைதான். ஆனாலும். ஸிம்பாப்வே அவிஸ்ரேலியாவுடன் விளையாடின விளையாட்டுத்தான் உச்சக்கட்டம். சொல்லி அடிச்சாங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் சுற்று போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற போட்டிகள் பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக உதவி செய்கின்றது. சிம்பாவேயின் வெற்றியில் பந்து வீச்சாளர்களுக்கும் பங்கு உண்டு. இந்தியா மைதானங்கள் ( குறிப்பாக சென்னை) பந்து வீச்சுக்கு அண்மைக்காலங்களில் பெரிதாக உதவவில்லை. நேற்று சிம்பாவே தோற்றாலும் 184/6 எடுத்திருக்கிறது. முன்பு சூழல் பந்து விச்சுக்கு சாதகமான சென்னை மைதானம் சென்ற ஐபிஎல் போட்டிகளிலும் CSK அணிக்கு சாதகமாக அமையவில்லை. இந்தியா மைதானத்தில் நேபாள அணியுடன் தட்டு தடுமாறி வெற்றி பெற்ற இங்கிலாந்து பிறகு மேற்கு இந்தியா அணியுடனும் தோற்றது. ஆனால் இலங்கை மைதானங்களில் சிறப்பாக பந்து வீசி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது. சிம்பாவே மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலகுவாக பிடிக்க கூடிய பந்தினை நழுவ விட்டதால் ஹெட்மயர் 85 ஒட்டங்களை 34 பந்தில் எடுத்தார். பிடித்திருந்தால் 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து இருப்பார். மேற்கிந்தியா அணியும் 26-2 ஆக இருந்திருக்கும். சிம்பாவே வென்ற இரண்டு பெரிய நாடுகள் அவுஸ்திரேலியா, இலங்கை. இரண்டு நாடுகளும் T20 க்கு முன்பு நடைபெற்ற தொடர்களில் படுதோல்வி அடைந்தன. அவுஸ்திரேலியா பாகிஸ்தானிடம் 3-0 க்கும், இலங்கை இங்கிலாந்திடம் சொந்த மைதானத்திலேயே 3-0 க்கும் தோற்றது. இலங்கை சூப்பர் 8 இல் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடம் தோற்ற விதத்தினை பார்க்கும்போது மிகவும் பலமற்ற நாடக தோன்றுகிறது. பலமற்ற நாடுகளைத்தான் சிம்பாவே இத்தொடரில் வென்று இருக்கிறது போல தெரிகிறது. நான் இந்த போட்டியில் விடைகள் எழுதும்போது அவுஸ்திரேலியாவா தென்னாப்பிரிக்காவா, இலங்கையா நியூசிலாந்தா என்பதை பல முறை யோசித்து பிழையான முடிவுகளை தெரிவு செய்து இருக்கிறேன். இத்தவறான முடிவால் தற்போது போட்டியில் முன்னிலையில் இருக்கும் நான் போட்டி முடிவில் பின்னுக்கு செல்லப்போகிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாழ்த்துக்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவேயுடன் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 254 ஓட்டங்கள் எடுத்தது. சிம்பாவேயுடன் எதிர்த்து விளையாடிய இந்தியா அணியும் 256 ஓட்டங்கள் எடுத்திருக்கிறது. அடுத்து தென்னாப்பிரிக்கா அணி சிம்பாவேக்கு எதிராக விளையாடப்போகிறது. மருந்துகள் தவறாமல் எடுங்கோ. நன்றாக ஓய்வு எடுங்கள்
-
சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
எனது சந்தேகம் என்னவென்றால்; இவ்வளவையும் அந்த சிறுமிகள் எப்படி விடுதிக்குள் கொண்டுபோயிருப்பார்கள், எங்கே மறைத்து வைத்திருப்பார்கள்? பொலித்தீன் பைகளில் இத்தனை ஆயிரம் ரூபா தொகையான பொருட்களை கொண்டு செல்ல முடியுமா? அவர்களுக்கு இருப்பது இரண்டு, மொத்தம் ஆறு கைகள் தானே. வேறு கைகளும் இவர்களின் பின்னால் இருந்திருக்குமோ?
-
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்
விசாரணையை குழப்புபவர்கள் சந்தேக நபர்களை விசாரிக்கும்போது ஏன் குழம்புகிறார்கள்? அவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க உங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதே, அப்போது ஏன் கண்டுபிடிக்கவில்லை? இப்போ ஏன் தடைஏற்படுத்துகிறார்கள்? குற்றவாளி தண்டிக்கப்படக்கூடாது என்றா, விசாரணை நடைபெறக்கூடாது என்றா, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என்றா, இனிமேலும் இப்படியான குற்றங்கள் நிகழ்வதை தடுக்கக்கூடாது என்றா? தடை ஏற்படுத்துபவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட நபர் செய்யவில்லை என்றால், உண்மையான குற்றவாளியை இவர்களுக்கு தெரியும், அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியது இவர்களின் கடமை. அல்லது சட்டம் தன் கடமையை செய்ய வழிவிட வேண்டும்!
-
நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்! - சரத் வீரசேகர விளாசல்
அப்போ, போர்க்குற்ற விசாரணையை தவிற்பதையும் இந்தக்கோணத்தில் நோக்கலாமா? நீதியான விசாரணையை, அதன் கேள்விகளை, எதிர்கொள்ள திராணியற்ற இலங்கை அரசு அதை எதிர்க்கிறது என்பதை சரத் ஏற்றுக்கொள்வாரா? ஒரு இந அழிப்பை செய்த, செய்கிற, போர்க்குற்ற விசாரணையை எதிர்க்கிற குடும்பம் எப்படி நல்லிணக்கம் பற்றிய கேள்விகளுக்கும் அதுபற்றிய கலந்துரையாடல்களிலும் பங்கு பற்றி உண்மையான நீதியான கருத்துக்களை தெரிவிக்க முடியுமென சரத் எதிர்பார்க்கிறார்? றக்பி வீரர் வசீம் அக்ரத்தின்படுகொலையில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர் சட்டத்தரணிகள் பரீட்ச்சையில் மோசடி செய்தவர் அதன் சாட்சிகளை அச்சுறுத்தியவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற தகுதியுள்ளவரா? நாட்டில் நீதியும் சமத்துவமும் நிலைக்க முடியாமல் தடுக்கும் பிரிவினைவாத அரசியல்வாதிகள், மதவாதிகளான பிக்குகளுக்கு அடிபணிந்து நாட்டையும் ஒரு இனத்தையும் அழிப்பது வேதனைக்குரியது, வெறுப்பிற்குரியது சரத் வீரசேகர அவர்களே. முதலில் உங்களை திருத்துங்கள், நாட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நாமலை பதில் சொல்லச்சொல்லுங்கள், அவருக்கெதிராக வழக்குகளை திசை திருப்பாமல் எதிர்கொள்ளச்சொல்லுங்கள், பின்னர் லண்டனுக்கு போய் பதில் சொல்லலாம். தன் விசாரணையை எதிர்கொள்ள முடியாமல் அரசியல் பழிவாங்கல் என்று திசை திருப்பி கதைப்பவர், லண்டன் போறாராம் பதில் சொல்ல, அதில லண்டன் மாணவர் பயந்து விட்டார்களாம். யாரோ எழுதியதை பாடமாக்கிக்கொண்டு பெரிய கனவோடு போயிருப்பார், எல்லாம் கலைந்தது வருத்தந்தான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி 27 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இங்கிலாந்து (Y1) எதிர் நியூஸிலாந்து (Y2) ENG. எதிர் NZ 17 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும் நான்கு பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் ENG ஏராளன் ENG வசீ NZ புலவர் ENG சுவைப்பிரியன் ENG அல்வாயன் ENG ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் ENG வாத்தியார் NZ கறுப்பி ENG வாதவூரான் ENG வீரப் பையன்26 NZ சுவி ENG கிருபன் ENG கோஷான் சே ENG அஹஸ்தியன் ENG கந்தப்பு ENG நியாயம் ENG எப்போதும் தமிழன் ENG ரசோதரன் AFG பிரபா ENG நிலாமதி AFG நந்தன் NZ இப்போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையா சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம். நன்றாக ஓய்வெடுத்து விட்டு வரவும். எங்களின் பம்பலுக்காக வருத்தத்துடன் வந்து குத்தி முறிய வேண்டாம். பையன் இல்லாத போட்டி போர் அடிக்கும் என்றாலும் பரவாயில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியபோதும், றொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டமிழக்காமல் அதிரடியாக 52 (37 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேஸன் ஹோல்டர் வேகமாக எடுத்த 49 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடி எய்டன் மார்க்ரம் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 82 (46 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக் அதிரடியாக எடுத்த 47 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் றிக்கெல்டன் வேகமாக ஆட்டம் இழக்காமல் எடுத்த 45 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும் 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான். அயர்லாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான 55 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியா மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 50 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் வாணவேடிக்கையாக ஆட்டமிழக்காமல் எடுத்த 44 (16 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் வேகமான 38 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், சூரியகுமார் யாதவ் விரைந்து எடுத்த 33 (13 பந்துகள்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதுவே தற்போதைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது! பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணியின் வீரர்களில் பிரயன் பென்னிட் அதிரடியாக ஆட்டமிழக்காமல் எடுத்த 97 (59 பந்துகள்) ஓட்டங்கள், சிகண்டர் ராஸா வேகமாக எடுத்த 31 (21 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர பிறர் நிலைத்து வேகமாக ஆடாததால் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 72 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றில் விளையாடாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த எட்டு பேருக்குப் புள்ளிகள் கிடையாது!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் அந்த வீடியோவை பார்க்க முயலவில்லை, வசீ, ஆனால் அவர்கள் நிற்கும் நிலைகளைப் பார்த்தாலே அவர்களின் போக்குகள் புரிகின்றன........... பொதுவாகவே எவ்வகையான கடும் போக்காளர்களிடமும் அவர்களுக்கு சார்பானவற்றை அன்றி வேறு எவற்றையும் பேச முடிவதில்லை............ அவர்களும் இறுதி வரை தாண்டி வெளியே வருவதில்லை................
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாலை தண்ணீரில் கழுவி சுத்தமாக விற்கிறார்.
-
நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்! - சரத் வீரசேகர விளாசல்
நாமலை இந்தியாவில் ஏதோ கல்வி சார் அமைப்பு விருந்தினராக அழைத்திருந்தது, தற்போது இங்கிலாந்து? என்ன ஆச்சு இந்த கல்வி சமூகத்திற்கு?