அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
நீங்கள் இறந்தப்பின் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தின் ஓனர் யார் என்பதை முடிவு செய்யும் வசதியை தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இணையத்தில் எல்லோராலும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரே சமூக வலைதளம் ஃபேஸ்புக். தினசரி வாழ்வில், எதை மறந்தாலும் சரி இந்த ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்த யாரும் மறப்பதில்லை. அப்படிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தை இறந்தப்பின் யார் பயன்படுத்துவது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்து வருகிறது. அந்த கேள்விக்கு விடை தரும் வகையில் தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் நாம் இறந்த பின் நம் ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரை இப்போதே முடிவு செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது. இந்த வசதி ‘Legacy Contact' என்ற பெயரில் கொடுக்கப்பட்…
-
- 0 replies
- 431 views
-
-
படத்தின் காப்புரிமை Nasa) 1969 ஜூலை 20 ஆம் தேதி மனிதன் நிலவில் கால்வைத்த மாபெரும் அறிவியல் தொழில்நுட்ப சாதனை நிகழ்ந்த நாள். ஆனால் அது நம்முடைய தினசரி வாழ்வைப் பாதித்த முக்கியமான மைல்கல்லாகவும் உள்ளது. இன்றைய பண மதிப்பில் 200 பில்லியன் டாலர்கள் செலவில் முன்னெடுக்கப்பட்ட அப்போலோ செயல்திட்டம், நீங்கள் ஒருபோதும் அறிந்திராத துறைகளில் ஆச்சரியம் ஏற்படுத்தும் முன்னேற்றங்களையும் தொடங்கி வைத்தது. அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம். படத்…
-
- 1 reply
- 431 views
-
-
நிலாவில் தரையிறங்கிய தனியார் விண்கலம் அமெரிக்கா கொண்டாடும் அளவுக்கு என்ன செய்யப்போகிறது? பட மூலாதாரம்,INTUITIVE MACHINES படக்குறிப்பு, அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலாவுக்கு செல்லாத குறையை, இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் போக்கியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் வணிக நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஹூஸ்டனை தளமாகக் கொண்ட இன்டுயடிவ் மெஷின்ஸ்(Intuitive Machines) நிறுவனம் அதன் ஒடிசியஸ்(Odysseus) ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் …
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
நவீன மனிதர்கள் ஆப்பிரிக் காவில்தான் தோன்றினர். சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்து ஐரோப்பா, ஆசியா, இந்தியா என உலகம் முழுவதும் படர்ந்து பரவிக் குடியேறினர் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏன் ஆப்பிரிக்காவிலிருந்து நமது மூதாதைகள் இடம் பெயர்ந்தனர்? நெருப்பின் முதல் பயன் சுமார் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்பு நவீன மனிதர்கள் பிறந்தனர் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மனிதச் சாயல் கொண்ட விலங்குகளிலிருந்து ராமாபிதிகஸ் (Ramapithecus), அஸ்திரலோ பிதிகஸ் (Australopithecus), ஹோமோ எரக்டஸ் (Homo erectus) நியண்டர்தால் (Neandertals) எனும் பல படிநிலைகள் முதல் இன்றைய நவீன மனிதர்கள் வரை பல பரிணாம வளர்ச்சிப்படிகள் இதுவரை நடந்துள்ளன. ஆயினும் இன்றைய மனித இனம் முழ…
-
- 0 replies
- 430 views
-
-
சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியன் சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை ஜேர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை, உயர் சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் உருவாக்கியுள்ளனர் ஜேர்மனி விஞ்ஞானிகள். இதற்காக 149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி உள்ளனர், இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8×8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை…
-
- 2 replies
- 430 views
-
-
ஆப்பிள் நிறுவன வருமானத்தில் வீழ்ச்சி தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள், 13 ஆண்டுகளில் முதல் முறையாக தனது வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அடுத்து என்ன எனும் எதிர்ப்பார்ப்புகள் அதிகரிப்பு காலாண்டு அடிப்படையிலான வருமானத்தில் முதல் முறையாக ஆப்பிள் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து சீனாவே ஐஃபோனுக்கு முக்கியமான சந்தையாக இருக்கும் நிலையில், அங்கு விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி, வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படவும் பகுதி அளவில் காரணமாகவுள்ளது. ஐஃபோன் தனது பிரபலத்தின் உச்சத்தை எட்டிவிட்டது போலத் தெரிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆப்பிளின் வருவாயை தூக்கி நிறுத்…
-
- 0 replies
- 430 views
-
-
ஆஸ்திராலோபிதெசஸ்’கள் எனப்படும் மனிதா்களின் முன்னோடி இனத்தவா்களைவிட, நவீன காலத்திய மனிதக் குரங்குகளின் மூளை புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அந்த ஆய்வை மேற்கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளதாவது: 32 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்த, மனிதா்களின் முன்னோடிகளான ‘ஆஸ்திராலோபிதெசஸ்’களுக்கும், நவீன மனிதக் குரங்குகளுக்கும் இடையிலான புத்திசாலித்தனத்தை மதிப்பீடு செய்யும் ஆய்வை மேற்கொண்டோம். மூளையின் புத்திசாலித்தனத்தை நிா்ணக்கும் பகுதிக்கு இரத்த ஓட்டம் பாய்ச்சும் துளைகள் மண்டையோட்டில் எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. …
-
- 1 reply
- 430 views
-
-
உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது. கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும். அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஜிஎஸ்எம், டபிள்யூ சிடிஎம்ஏ மற்றும் எல்டிஇ தொழில்நுட்பங்களின் கீழ் செயல்படும் இரண்டு மைக்ரோ சிம்கார்டுகளை இந்த போனில் பயன்படுத்த முடியும். இந்தப் போனில் மேற்கொள்ளும் உரையாடல…
-
- 1 reply
- 429 views
-
-
ஆரொவில் அருகே அகழ்ந்தெடுக்கப்பட்ட இரும்புக் கால தாழி புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில்லில் இரும்பு காலத்தைச் சேர்ந்த அதாவது கி.மு. 300ஐச் சேர்ந்த , இறந்தவர்களின் உடல் எச்சங்களைப் புதைக்கும் தாழிகள், கருவிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை நடந்த இந்த அகழ்வாய்வில், ஐந்து குழிகள் தோண்டப்பட்டன. இதில் 4 தாழிகள் கிடைத்துள்ளன. இந்த தாழிகளுக்குள் சிறு சிறு கிண்ணங்கள் போன்ற வேறு பொருட்களும் இருந்தன. இவை தவிர, 4 வாட்கள், ஈட்டி, கோடாலி போன்ற பொருட்களும் கிடைத்துள்ளன. அந்த இரும்புக் கோடாலி மரக் கைப்பிடியில் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது. மரம் மக்கிவிட, இரும்புக் கோடாலியும் கம்பியும் கிடைத்துள்ளன. இங்கிருந்…
-
- 0 replies
- 429 views
-
-
கனடாவில் அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும், இது போன்ற 2000 தட்டுகள் அந்நாட்டில் தென்பட்டுள்ளதாக இது குறித்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதம் அதிகமாகும். 2011ஆம் ஆண்டில், 986 தட்டுகள் இதுபோல் தெரிந்துள்ளன. சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 1981ஆக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஒண்டாரியோ மாகாணத்தில் 40 சதவிகிதமாகவும், மற்ற மாகாணங்களிலும், சஸ்கட்சவா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு தவிர, இது போன்ற ஒளித்தோற்றத்தையோ, பறக்கும் பொருட்களையோ மக்கள் அடிக்கடி பார்க்கின்றனர். முன்பிருந்ததைவிட, இப்போது கனடா மக்கள் அதிக அளவில் வானத்தைப் பார்க்கத் து…
-
- 0 replies
- 428 views
-
-
"வைஃபையை பயன்படுத்தி வெடிகுண்டை கண்டுபிடிக்கலாம்" - அசத்தும் புதிய தொழில்நுட்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBORTONIA உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். "வைஃபையை பயன்படுத்தி வெடிகுண்டை கண்டுபிடிக்கலாம்" - அசத்தும் புதிய தொழில்நுட்பம் …
-
- 0 replies
- 428 views
-
-
-
மனிதர்களின் விண்வெளி பயணத்தில் முதன்முறையாக பெண் ஒருவரை தலைமை அதிகாரியாக நாசா நியமித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு சந்திரனுக்கு மனிதனை அனுப்ப தயாராகி வரும் நிலையில், மனித விண்வெளி ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூடர்ஸ் என்ற பெண் அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ட்விட்டரில் அறிவித்தார். 1992 ஆம் ஆண்டு நாசாவில் சேர்ந்த கேத்தி லூடர்ஸ், கடந்த மாதம் தனியார் குழுவின் விண்வெளி பயணத்தை திறன்பட நிர்வகித்ததால் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஸ்பேஸ்எக்ஸ், போயிங் மற்றும் நாசாவுடன் கூட்டு சேர்ந்துள்ள பிற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகளை சோதனை செய்து மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பும் பணியை பல ஆ…
-
- 0 replies
- 428 views
-
-
நியூராலிங்க்: மனித மூளையில் சிப் வைக்கும் எலான் மஸ்க்கின் திட்டத்தில் முன்னேற்றம் Getty Images மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தனது தொழில்நுட்ப திட்டத்தை நிரூபிக்கும் வகையில், மூளையில் ஒரு நாணய அளவில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பன்றியை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் பன்றியின் பெயர் 'கெர்ட்ரூட்'. "இது கைகளில் அணியும் ஃபிட்பிட், மூளைக்குள் சிறு வயர்களுடன் இருப்பதை போன்றது" என்று இணையம் வழியே நடந்த அறிமுக நிகழ்ச்சியில் எலான் மஸ்க் கூறினார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் இவர். நியூராலிங்க் என்னும் இவரது புதிய நிறுவனம் மனித மூளையை இயந்திரத்…
-
- 0 replies
- 427 views
-
-
-
- 1 reply
- 427 views
-
-
மனித கொழுப்பிலிருந்து காது, மூக்கு தயாரிப்பு: இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை [Thursday, 2014-03-06 12:09:00] பிறவியிலேயே சிலர் காது, மூக்கு இன்றி பிறக்கின்றனர். மேலும் விபத்துகளிலும் அவற்றை பறிகொடுக்கின்றனர். அது போன்ற குறை உள்ளவர்கள் இனி கவலைபட தேவையில்லை. அவர்களுக்காக தற்போது மனித கொழுப்பில் இருந்து மூக்கு, காது போன்ற உறுப்புகளை இங்கிலாந்து டாக்டர்கள் உருவாக்கியுள்ளனர். இச்சாதனையை லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்டிரீட் ஆஸ்பத்திரி மற்றும் யூ.சி.எல்.இன்ஸ்டியூட் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர்களும் படைத்துள்ளனர். மேற்கண்ட உடல் உறுப்புகள் தேவைப்படும் குழந்தைகளின் வயிற்றின் அடிப்பகுதியில் இருந்து சிறிதளவு கொழுப்பு எடுத்து அதில் இருந்து ஸ்டெம் செல்கள் பிரித்த…
-
- 0 replies
- 426 views
-
-
இங்கு பாரம்பர்ய விதைகள் இலவசம்!' - பாரம்பர்யம் காக்க உதவும் இளைஞர் இங்கு பாரம்பர்ய விதைகள் இலவசம்!' - பாரம்பர்யம் காக்க உதவும் இளைஞர் #Seeds இ.கார்த்திகேயன்துரை.நாகராஜன்முத்துராஜ் இராஅருண்குமார் பழனிசாமிGopinath Rajasekar ஒவ்வொரு காய்கறி ரகங்களும் அந்தந்த ஊரின் மண்ணைப் பொறுத்துச் சிறப்புப் பெற்று, தனிச்சுவையுடன் வலம் வருகிறது. அது அடுத்தடுத்த ஊர்களுக்கும் பரவலாகி, தற்போது விவசாயிகள் மீண்டும் இதை நோக்கித் திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் பாரம்பர்ய விதைகளின் சேமிப்பும் பரவலாக்கமும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் பாரம்பர்ய விதைகளைச் சேகரித்துத் தேவைப்படுவோருக்கு இலவசமாக அளித்துப் பரவலாக்கம் செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த சரவண…
-
- 0 replies
- 426 views
-
-
விரைவில் வருகிறது ஆண் கருத்தடை மாத்திரைகள்! படத்தின் காப்புரிமைGETTY IMAGES பல வருடங்களாக பேசப்பட்டு வந்த விஷயம் இது. தற்போது, ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் வெகு விரைவில் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மாத்திரை என்பது, உண்மையில் ஊசி மருந்து வடிவில் உள்ளது. இதை ரிஸுக் என்றழைக்கிறார்கள். ஆணுறைகளை போன்று பயன் தரும் என்றும், தற்போது நடைமுறையில் உள்ள கருத்தடை வழிமுறைகளை காட்டிலும் மிகவும் மலிவானன கருத்தடை வழி இது என்றும் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது மீளெடுக்கக்கூடியது. இந்த ஆண்டு சுகாதார கட்டுப்பாட்டாளர்களிடம் சமர்பிக்கப்பட உள்ளது. இதற்காக, உடன…
-
- 0 replies
- 426 views
-
-
மீண்டும் பயன்படுத்தவல்ல ராக்கெட்டின் சோதனை தள்ளிவைக்கப்பட்டது திரும்பத்திரும்ப பயன்படுத்தவல்ல முதல் ராக்கெட் என்று பரவலாக வர்ணிக்கப்படும் ராக்கெட்டை விண்ணில் ஏவும் முயற்சி கடைசி நிமிடத்தில் தள்ளிப்போடப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் அமெரிக்காவின் கேப் கனவரல்லில் உள்ள ஏவுதளத்தில் இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கடைசி கட்டம் வரை சென்ற நிலையில் திடீரென இந்த முயற்சி இடை நிறுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டை ஏவும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஏவப்படும் ராக்கெட்டின் பூஸ்டர் என்றழைக்கப்படும் உந்தகப்பகுதி ராக்கெட்டின் மற்ற பகுதிகளை விண்ணுக்கு அனுப்பியபிறகு மீண்டும் பூமியை நோக்கி வந்து அட்லாண்டிக் கடலில் மிதக்கும் மிதவையில் சரியாக விழச்செய்யும் முயற்சியில் ஈடுப்ப…
-
- 0 replies
- 426 views
-
-
மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய செயற்கை கரத்தை பொருத்திக் கொண்ட முதலாவது பிரித்தானியர் என்ற பெயரை ஆப்கானிஸ்தானில் சேவையாற்றும் போது தாக்குதலுக்கு இலக்காகி கையொன்றை இழந்த அந்நாட்டு படைவீரர் பெறுகின்றார். தென் ரைனிசைட்டைச் சேர்ந்த அன்ட்றூகார்த்வெயிட் என்ற மேற்படி நபர் ஆப்கானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் பணியாற்றிய வேளை தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளாகி கையொன்றை இழந்தார். இந்நிலையில் அவருக்கு ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மேற்படி மனதால் செயற்படுத்தக்கூடிய செயற்கை கரத்தை பொருத்தியுள்ளனர். மேற்படி அறுவைச்சிகிச்சைக்கு 7 மணித்தியால நேரம் செலவிடப்பட்டுள்ளது. அன்ட்றூ தனது செயற்கை கரத்தை எவ்வாறு அசைப்பது என நினைக்கும் போது அவரது மூளைய…
-
- 0 replies
- 426 views
-
-
புளூட்டோவின் பெயரிடப்படாத இரண்டு நிலாக்களுக்கு பெயர் வைக்கும் போட்டியை லண்டன் விண்வெளி விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கிரக்கம் மற்றும் ரோமானிய புராண பெயர்களாக இவை இருக்க வேண்டும் என்றும், தற்போது 12 பெயர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த போட்டி பிப்ரவரி 25ம் தேதி வரை நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://www.plutorocks.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B3-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-010600778.html
-
- 0 replies
- 426 views
-
-
சிவகங்கை பொறியியல் மாணவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 'ரதம்'- 11 யூனிட் மின் சக்தியில் 400 கி.மீ. செல்லலாம் 11 யூனிட் மின்சக்தியில் 400 கி.மீ. தூரம் ஓடும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ‘ரதம்’ என்ற அதிநவீன வசதிகள் உடைய இருசக்கர வாகனத்தை பொறியியல் மாணவர் ஒருவர் உருவாக்கி உள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மறவர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் அமுதா. இவர்களின் இளைய மகன் மணிகண்டன் (21). இவர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பொறியியல் கல்வி (மெக்கானிக்கல்)படிக்கிறார். இவர், பிளஸ் 2 படித்தபோதே வாகன விபத்தை கட்டுப்படுத்தும் கருவி, பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்து ஆட்சியர், எஸ்பியிடம் பாராட்டு பெற்றுள்ளார். பொறியியல் படிப்பில் சேர்ந்த பின்னர், பெண்கள் தற்கா…
-
- 0 replies
- 425 views
-
-
விண்வெளி அறிவியல் அதிசயம்: பால்வெளிக்கு வெளியே முதல் கோளைக் கண்டுபிடித்த நாசா பால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி இணைய செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ESO / L. CALÇADA படக்குறிப்பு, கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரம் என்று கருதப்படும் எக்ஸ்-ரே பைனரி அருகே இருக்கும் நட்சத்திரம் ஒன்றின் வாயுவை தனக்குள் ஈர்க்கிறது. பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான சில அறிகுறிகளை வானியல் வல்லுநர்கள் கண்டுள்ளனர். அது ஒரு கோள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது பால்வெளிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளாக இருக்கும். நமது சூரிய மண்ட…
-
- 0 replies
- 425 views
- 1 follower
-
-
மனித உடலுறுப்புக்களை விலங்குகளில் வளர்த்து அறுவடை செய்தல் | மரபணு மாற்றத்தில் சீனாவின் பரிசோதனைகள் குரங்கின் மரபணுக்களைப் பன்றியில் உட்புகுத்தி உறுப்புக்களை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி குரங்கின் உறுப்புகளிக் கொண்ட பன்றிக் குட்டி வியாதிகளைக் குணப்படுத்தும் முயற்சிகளில், சமீப காலங்களில், மரபணுக்களில் மாற்றம் செய்யும் பரிசோதனைகளைப் பல நாடுகளிலுமுள்ள விஞ்ஞானிகள் செய்துவருகிறார்கள். ‘மரபணுப் பரிசோதனைகள்’ செய்யப்படுவது இது தான் முதல் தடவையல்ல. சிறந்த மனித இனத்தை உருவாக்கவேண்டுமென்பதற்காக (இதன் பின்னால் ஒளிந்திருக்கும் இனவாதம் பற்றி இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்) 1883 இல் சேர் பிரான்சிஸ் கால்ற்றன் ‘சிற…
-
- 0 replies
- 425 views
-
-
ஸ்நாப்சொட் நிறுவன உரிமம் கூகுளுக்குக் கிடைக்கவில்லை கூகுள் நிறுவனம் 2016ஆம் ஆண்டில் ஸ்நாப்சொட் நிறுவனத்தை 3,000 கோடி அமெரிக்க டொலர்களுக்கு வாங்க திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. எனினும் ஸ்நாப்சொட் தலைமை செயல் அதிகாரியான எவான் ஸ்பெய்கெல் திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில், ஸ்நாப்சொட் நிறுவனத்தை 3,000 கோடி அமெரிக்க டொலர்களுக்கு கைப்பற்றுவது தொடர்பாக கூகுள் மற்றும் ஸ்நாப்சசொட் நிறுவனங்களிடையே கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஸ்நாப்சொட் நிறுவனத்தின் இறுதி நிதிநிலை பேச்சுவார்த்தைகளின் போது இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. நிறுவனத்தைக் கைப்பற்றும் போது எவான் ஸ்பெய்கெலிற்கும் அதிகப்படியான சலுகைகளை வழங…
-
- 0 replies
- 424 views
-