Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கடல்கள் இல்லாத பூமி என்ற அனிமேஷன் படத்தை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பூமியின் 70 விழுக்காடு பரப்பு கடல்களால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புயல், மழை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பெரும்பாலான இயற்கை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற விபரீத யோசனை நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. ஜேம்ஸ் ஓ டோனோகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி இந்த அனிமேஷன் படத்தை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளார். முதலில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொள்கிறது. இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் இந்தப் படத்தில் கா…

    • 0 replies
    • 530 views
  2. மெக்சிகோவில் 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகளை கொண்ட உலகின் முதல் குடியிருப்பு பகுதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மிகவும் அவதிக்குள்ளாகும் இவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்த நியூ ஸ்டோரி என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் ஐகான் என்ற கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. அதன்படி 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகள் மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஐகான் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ள வல்கன் 2…

  3. விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் நாளை (புதன்கிழமை) விண்ணில் செலுத்தப்படவுள்ளது. புவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோள் உதவவுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, நாளை காலை 9.28 மணிக்கு ரொக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. மேலும் 1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது. …

  4. கனடாவில் அறிமுகமானது உலகின் முதல் மின்சார விமானம்! முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் (electric-powered seaplane) கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வான்கூவரைச் சேர்ந்த ஹார்பர் எயார் சீபிளேன்ஸ் (Harbour Air Seaplanes) நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான மக்னி எக்ஸும் (magniX ) கூட்டாக இந்த விமானத்தை உருவாக்கியுள்ளன. 6 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானம், ரிச்மாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து குறித்த விமானம், கடல் பகுதியில் தனது முதல் ஒத்திகைப் பயணத்தை ஆரம்பித்தது. http://athavannews.com/கனடாவில்-அறிமுகமானது-நீர/

  5. விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள நீரேற்றும் மோட்டாரை இயக்குவதற்கு ஊராட்சி செயலரே வடிவமைத்திருக்கும் “சைக்கிள் படகு” பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பக்கத்திலுள்ள பெரிய ஏரியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஏரியில் தண்ணீர் இல்லாத காலத்தில், அதன் நடுவே அமைந்திருக்கும் மோட்டார் அறைக்குச் சென்று மோட்டாரை இயக்கி வந்தனர். அண்மையில் பெய்த மழை காரணமாக ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், மோட்டாரை இயக்குவது சவாலாக மாறியது. இதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், ஊராட்சி …

    • 2 replies
    • 1.2k views
  6. கொசுக் கடியிலிருந்து தப்பிக்க உதவும் கொசு வலை, போன நுாற்றாண்டு தொழில் நுட்பம். அதில் புதிய நுட்பத்தை சேர்க்கலாம் என்கின்றனர், பிரிட்டனைச் சேர்ந்த லிவர்பூல் மருத்துவக் கல்லுாரி விஞ்ஞானிகள். இந்த எளிய தொழில் நுட்பத்தின் மூலம், கொசுக்களை மட்டுமல்ல, இரவில் தொந்தரவு செய்யும் பூச்சிகளையும் கொல்ல முடியும் என்பதை சோதனைகளில் அவர்கள் கண்டறிந்துள்ளனர். கொசு வலைகளை கொசுக்கள் எப்படி அணுகு கின்றன என்பதை, 'வீடியோ கேமரா'க்களை வைத்து, பல மணி நேரம் லிவர்பூல் விஞ்ஞானிகள ஆராய்ந்தனர். அதில் தெரிய வந்த ஆச்சரியமான உண்மை என்ன தெரியுமா? உள்ளே உறங்கும் மனிதர்களை கடிக்க, வலையின் பக்கவாட்டில் முட்டி மோதும் கொசுக்கள், வலையின் மேற்புறத்தில் அமர்வதும், பின் அங்கும் இங்கும் பறப்பதும் வழக்கமாக …

  7. ‘இசிஎம்ஓ’ கருவியைக் கொண்டு மார்ஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணின் உடல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. அதனால் அவரது இதய இயக்கத்தை மீண்டும் தூண்டவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். படம்: VALL D'HEBRON/TWITTER 6 Dec 2019 21:12 மிகக் கடுங்குளிரில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் பெண்ணின் இதயத் துடிப்பு நின்று ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அவரது இதயத்தை ஸ்பெயின் மருத்துவர்கள் மீண்டும் இயங்க வைத்துள்ளனர். நேற்று (டிசம்பர் 5) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் பிழைத்தது அதிசயம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆட்ரே மார்ஷ் எனும் அந்தப் பெண் கடந்த மாதம் மூன்றாம் தேதி சுமார் 1 மணியளவில் அவரது கணவருடன் பைரெனீஸ் …

  8. விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே ரோபோ ஹோட்டல் ஒன்றை நாசா துவங்க உள்ளது. ரோபோக்களுக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்கள், உபகரணங்கள் இங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படவுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 19வது ரீசப்ளை திட்டத்தின் ரிட்ஸ் மூலம் இந்த பிரிவு துவங்கப்பட உள்ளது. சிறிய எரிகற்கள், கதிர்வீச்சுகள் உள்ளிட்டவற்றிலிருந்து இங்கு சேமிக்கப்படும் கருவிகள் பாதுகாக்கப்படும். சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்படும் கசிவுகளை கண்டறியும் ரெல் எனப்படும் ரோபோக்கள் இரண்டு, முதற்கட்டமாக இந்த பிரிவில் வைக்கப்படவுள்ளன. https://www.polimernews.com/dnews/91473/விண்ணில்-“ரோபோ-ஹோட்டல்”துவங்கும்-நாசா

    • 0 replies
    • 410 views
  9. தமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது? நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கவில்லை. சரியாக 2 கிமீ தூரம் வரை சென்ற விக்ரம் லேண்டர் அதன்பின் தொடர்பை இழந்தது. அதற்கு அடுத்து மூன்று நாட்க…

  10. 2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெச்.எல்-2எம் டோகாமாக் ((HL-2M Tokamak)) என்று செயற்கை சூரியனுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். செயற்கை சூரியனில் பொருத்தப்பட இருக்கும் காயில் அமைப்பு ஜூன் மாதம் அளிக்கப்பட இருக்கிறது. அது கிடைத்ததும், 2020ம் ஆண்டில் அதை வானில் நிறுவ முடிவு செய்துள்ளனர். நியூக்லியர் பியூசன் எனப்படும் அணுஇணைவு ((nuclear fusion)) மூலம் கட்டுப்படுத்தப்படும் செயற்கை சூரியனில், 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமும் வெளிச்சமும் உருவாகும் என்றும், அதிலிருந்து சுத்தமான மற்றும் அளவில்லாத எரிசக்தியை பெற முடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://www.polimernews.com/dnews/…

    • 0 replies
    • 350 views
  11. விண்வெளியில் இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் உள்ள காஸ்மிக் ரே டிடெக்டர் என்ற கருவியின் குளிரூட்டும் முறையை சரிசெய்து புதுப்பிக்கும் பணியில், சிறப்பு பயிற்சி பெற்ற ஆண்ட்ரூ மார்கன் மற்றும் லுகா பர்மிடனோ ஆகிய இரு விண்வெளி வீரர்கள் ஈடுபட்டனர். 6 மணி நேரம் 33 நிமிடங்கள் இந்த பணியானது நீடித்தது. அப்போது கத்திரிக்கோல், கம்பி வெட்டிகள் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, வெற்றிடத்தில் இரும்பு பொருட்களை வெட்டி அகற்றி கோளாறு சரிசெய்யப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. https://www.polimernews.co…

    • 0 replies
    • 325 views
  12. மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டுச் செடியாக வளரும் என்பதை தனது கண்டுபிட…

    • 1 reply
    • 518 views
  13. 1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பாரிய பனிக்கட்டியுடன் மோதி கடலில் மூழ்கியமை அனைவரும் அறிந்ததே.இக் கப்பலானது நீரில் மூழ்காத உலோகத்தினால் ஆனது என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் சுமார் இரண்டரை மணி நேரத்தில் முழுவதுமாக கடலில் மூழ்கியிருந்தது.இந்த பாதிப்பின் பயனாக சுமார் 100 வருடங்களின் பின்னர் உடைந்தாலும் அல்லது நொறுங்கினாலும் நீரில் மூழ்காத உலோகம் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். Rochester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை வடிவமைத்துள்ளனர்.இதனை வடிவமைக்கும் திட்டத்திற்கு அமெரிக்க கடற்படை, தேசிய விஞ்ஞான அறக்கட்டளை மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில்கேட்ஸ்ஸின் பில் அன்ட் மிலின்தா கேட்ஸ் அறக்கட்டளை என்பவற்றிடமிருந்து முதலீடுகள் கிடைத்துள்ளன.இவ் உல…

    • 0 replies
    • 389 views
  14. கடலில் 20 மைல் (32 கி.மீ) சுற்றளவுள்ள மிதக்கும் வணிக விண்கல துறைமுகங்களை உருவாக்க எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளார். அதில் இருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகள் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்ணில் செலுத்த முடியும். விண்கல துறைமுகம் போன்ற கடற்கரையிலிருந்து தொலைதூர இடமானது அடிக்கடி ஒலி-மாசுபடுத்தும் விண்ணில் ஏவப்படும் ஏவுகலன்கள் யாரையும் தொந்தரவு செய்யாது என்பதை உறுதிப்படுத்த தேவைப்படும் இடம் என்று அவர் ட்வீட் செய்துள்ளார். ஸ்டார்ஷிப் எனப்படும் பிக் பால்கான் ராக்கெட் (பிஎஃப்ஆர்), ஸ்பேஸ்எக்ஸின் திட்டமிடப்பட்ட நீண்ட கால சரக்கு மற்றும் பயணிகள் விண்கலம் ஆகும். இந்த ஒளிரும் வெள்ளி ராக்கெட் 100 பயணிகளை சுமக்கும் திறன்கொண்டது . 387 அடி நீளமுள்ள இந்த விண்கலம் சூ…

    • 0 replies
    • 323 views
  15. ஆஸ்திராலோபிதெசஸ்’கள் எனப்படும் மனிதா்களின் முன்னோடி இனத்தவா்களைவிட, நவீன காலத்திய மனிதக் குரங்குகளின் மூளை புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அந்த ஆய்வை மேற்கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளதாவது: 32 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்த, மனிதா்களின் முன்னோடிகளான ‘ஆஸ்திராலோபிதெசஸ்’களுக்கும், நவீன மனிதக் குரங்குகளுக்கும் இடையிலான புத்திசாலித்தனத்தை மதிப்பீடு செய்யும் ஆய்வை மேற்கொண்டோம். மூளையின் புத்திசாலித்தனத்தை நிா்ணக்கும் பகுதிக்கு இரத்த ஓட்டம் பாய்ச்சும் துளைகள் மண்டையோட்டில் எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. …

  16. பூமியில் உயிர்வாயுவாக திகழும் ஒக்சிசன்.. செவ்வாயின் வளிமண்டலத்திலும் காணப்படுவதாகவும் குறிப்பாக செவ்வாயின் இளவேனில் காலம் மற்றும் கோடைகாலங்களில் இதன் அளவு குறிப்பிடத்தக்க அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்க அவதானிக்கப்பட்டுள்ளது.இந்த இயல்புக்கான காரணங்கள் சரியாக அறியப்படவில்லை ஆயிலும் அங்குள்ள நுண்ணுயிர்களின் பங்களிப்பு இதில் இருக்கக் கூடும் என்ற கருத்து நிராகரிக்கப்படவில்லை.செவ்வாயின் வளிமண்டலதில் கபனீரொக்சைட் அதிகம் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. http://kuruvikal.blogspot.com/

  17. உலகின் அதிவேக விமானத்தை மீண்டும் தயாரிக்கிறது அமெரிக்கா உலகின் அதிவேக விமானமான SR-71 Blackbird விமானத்தை மீண்டும் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1950ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவுடனான பனிப்போரின் போது SR-71 Blackbird என்ற விமானத்தை அமெரிக்கா தயாரித்தது. குறித்த விமானம் இதுவரை தயாரிக்கப்பட்ட விமானங்களிலேயே அதிக வேகமாகவும், அதிக உயரமாகவும் பறக்கும் திறன் கொண்டது. 80 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு மூவாயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட குறித்த விமானம் கருப்பு வண்ணப் பூச்சுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1960ஆம் ஆண்டு அமெரிக்காவின் உளவு விமானமான ‘யு-2’ என்ற விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து SR-71 Blackbird விமானத்தின் பயன்பாட்டை…

  18. புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் அரிதான வானியல் நிகழ்வு இன்று நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழும். புதன் கிரகம் சூரியனை, கடந்து செல்லும் போது, புதனின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும். இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது என்றும தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வை இன்று காணலாம். அடுத்த நிகழ்வு வரும் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதிதான் மீண்டும் நிகழும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். https://www.polimernews.com/dnews/882…

  19. நாசா அனுப்பிய வாயேஜர் 2 விண்கலம் சூரிய குடும்பத்தை கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றது.சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 1977 ஆம் வருடம் ஆகஸ்டு 20 ஆம் தேதி வாயேஜர் 2 விண்கலத்தை நாசா அனுப்பியது. சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கிரகங்களையும் மிக அருகில் நெருங்கி சென்று ஆய்வு செய்த முதல் விண்கலம் இதுவாகும்.தற்போது இந்த விண்கலம் சூரியனின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி ‘இண்டர்ஸ்டெல்லார்’ எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றுள்ளது. இந்த பகுதியானது அண்டவெளி கதிவீச்சு, நட்சத்திர தூசு, அணு, அயனி மற்றும் மூலக்கூறு வடிவிலான வாயுக்…

  20. சூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இது தான் மிகச்சிறியது எனத் தெரிவித்துள்ளனர். உருவில் பெரிய நட்சத்திரமானது தனது ஆற்றலை இழந்து உருக்குலைந்து வெடித்துச் சிதறும் போது அதீத ஈர்ப்பு விசையைக் கொண்ட கருந்துளையாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேவேளையில் வெடித்துச் சிதறும் போது நியூட்ரான் நட்சத்திரங்களாவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரியனுடன் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு மட்டுமே அளவில் பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். https://www.polimernews.com/dnews/87434/மிகச்சிறிய-அளவில்கருந்துளையைக்கண்…

    • 0 replies
    • 266 views
  21. படத்தின் காப்புரிமை mikiell / getty நிலவின் வளிமண்டலத்தில் 'ஆர்கான்' என்ற வாயுவின் சமதானியை சந்திரயான்-2இன் உட்கருவி ஒன்று கண்டறிந்துள்ளது. இந்தத் தகவலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது நிலவில் கண்டுபிடிக்கட்டுள்ள ஆர்கான்-40 எனப்படுவது ஆர்கான் வாயுவின் சமதானியாகும் ஒரு தனிமத்தின் அணுக்கருக்களில் ஒரேயளவு எண்ணிக்கையான புரோட்டான்களையும், வேறுபட்ட எண்ணிக்கையில் நியூட்ரான்களையும் கொண்டிருந்தால் அது அந்தக் குறிப்பிட்ட தனிமத்தின் சமதானி ஆகும். நிலவை சுற்றியுள்ள மெல்லிய காற்று மண்டலத்தை 'நிலவின் புறவெளி மண்டலம்' (lunar exosphere) என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இந்த காற்று மண்டல…

  22. அமெரிக்க விமானப்படையின் சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட ரகசிய ஆளில்லா விமானம், 780 நாட்கள் புவிவட்டப்பாதையில் சுற்றி ஆய்வு செய்துவிட்டு வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. சிறிய விண்கலம் போல் காட்சியளிக்கும் எக்ஸ்-37பி என்ற அந்த ஆளில்லா விமானம்தான், ரகசிய ராணுவ சோதனை திட்டங்களிலேயே மிக நீண்ட நேரம் விண்ணில் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்க விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானம் என்னென்ன ஆய்வுகளை மேற்கொண்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் விண்கலங்களில் பயன்படுத்தப்பட்ட பாகங்களை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவதில் இருக்கும் ஆபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்க விமானப்…

    • 0 replies
    • 808 views
  23. புதிய மின்கருவி கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் சாதனை! புதிய மின்கருவியினை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். லண்டனிலுள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பொலிமர் பிலிம்கள் மூலம் புதிய டை எலெக்ட்ரிக் கெபாசிடர் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது குறித்த ஆய்வு கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. பொலிமர் பிலிம்கள், டை எலெக்ட்ரிக் கெபாசிடரை சுற்றி பல அடுக்குகளாக சுற்றப்பட்டு அழுத்தப்பட்டுள்ளன. தற்போது, சந்தையில் கிடைக்கும் டை எலக்ட்ரிக் கெபாசிடரை விட, பொலிபர் பிலிம்கள் சுற்றப்பட்ட டை எலெக்ட்ரிக் கெபாசிடர் 30 மடங்கு அதிகமாக மின்சாரத்தினை சேமிக்கிறது. சூரிய மின்சக்தி, மற்றும் காற்றாலை மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க …

    • 1 reply
    • 717 views
  24. பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் உள்ள காலே கிரேட்டர்((Gale crater)) எனப்படும் 95 மைல் அகலமுள்ள பாறை படிமத்தை க்யூரியாசிட்டி ரோவர் என்ற கருவி உதவியுடன் நாசா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தை விண்கல் தாக்கி உருவான இந்த படிமத்தில், பல உப்பு ஏரிகள் இருந்ததை டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். மேலும், காலப்போக்கில் இந்த ஏரிகள் வறண்டு குளங்களாக மாறியதாகவும், அதன்பின் செவ்வாய் கிரகம் தனது காந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.