அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
நானோ டைஜஸ்ட் என்ற உலகளாவிய விஞ்ஞான இதழின் முதல் பக்கத்தில் தனது நான்கு சிறந்த நானோ கண்டுபிடிப்புக்களுக்காகக் கொண்டாடப்பட்டிருக்கிறார் தெய்வசாந்தி. இந்தியாவின் குக்கிராமம் ஒன்றில் வாழ்ந்து கொண்டு பல்லாயிரம் ரூபாய்கள் பெறுமானமுள்ள காப்பர், சில்வர் நானோ துகள்கள், கிராஃபைன் ஆகியவற்றைத் தயாரித்து ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்டோர்களுக்கு இலவசமாகவே வழங்கி உள்ளார். தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான சோதனையில் நோபல் பரிசு பெற விழையும் பேராசிரியை தெய்வசாந்தி இராஜபாளையத்துக்கு அருகில் உள்ள சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் 1978 ஆம் வருடம் பிறந்தவர். எங்கே பிறந்தாலும் சாதனை புரியலாம் என்பதற்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. கணவர் திரு. சங்கர். இயற்பிலில் முனை…
-
- 1 reply
- 800 views
- 1 follower
-
-
நியூயார்க்: மின்னிழை ஒன்று கடந்து சென்ற போது, சூரியன் புன்னகைப்பது போன்று ஏற்பட்ட அற்புதக் காட்சியை நாசா படமாக்கியுள்ளது. கோபம், சூடு என்றாலே முதலாவதாக உவமைக்கு சொல்லப் படுவது சூரியன் தான். குளுமைக்கு நிலாவை உதாரணமாக கூறுவார்கள். ஆனால், அந்த சூரியனையும் சிரிக்க வைத்துள்ளது மின்னிழை ஒன்று. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிகப் பரந்த மின்னிழை ஒன்று சூரியனின் கீழ் பகுதியைக் கடந்தது. அப்போது சூரியனில் கருப்புக் கோடு போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. அந்த இருண்ட வரி, சூரியன் சிரிப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியது. இந்த அரிய படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. இந்தப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட…
-
- 3 replies
- 594 views
-
-
பூமிக்கு அடுத்தபடி இன்செலடஸினில் உயிர்கள் வாழ முடியும் என்று எதிர்பார்ப்பு நாசாவினால் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட விண்ணோடம் ஒன்று, சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் சிறந்த காட்சியை படமெடுக்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன் இரவு, காசினி என்று அழைக்கப்படும் இந்த விண்ணோடம், சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் தென் துருவத்திலிருந்து பெருமளவு நிராவி வெளிப்படும் இடத்தை ஊடறுத்துச் செல்லவிருக்கிறது. அப்போது ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இன்செலடஸின் மேற்பரப்பை இந்த விண்ணோடம் காணமுடியும், படமெடுக்க முடியும். உறைநிலையில் இருக்கும் இன்செலடஸின் கோளின் மேற்பரப்புக்கு அடியில் திரவக் கடல் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது. சூரி…
-
- 2 replies
- 392 views
-
-
ஜேர்மனிய அணுசக்திப் பரிசோதனையின் போது அதி வெப்பமான ஹீலியம் பிளாஸ்மா வாயு தோற்றம் Published by Gnanaprabu on 2015-12-15 09:49:39 ஜேர்மனிய அணுசக்தி பரிசோதனையின் போது விசேடமான அதி வெப்பமான வாயு ஒன்று தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேற்படி வாயுவானது புதிய தூய மற்றும் மலிவான சக்தியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான நம்பிக்கையைத் தருவதாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஐதான முகில் போன்ற ஏற்றமுள்ள துணிக்கைகளைக் கொண்ட இந்த ஹீலியம் பிளாஸ்மா வாயுவானது ஒரு செக்கனில் பத்தில் ஒரு பங்கு நேரத்துக்கு மட்டுமே நீடித்துள்ளது. இதன்போது சுமார் ஒரு மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலை தோன்றி…
-
- 0 replies
- 382 views
-
-
பட மூலாதாரம், NASA படக்குறிப்பு, ஆர்டெமிஸ் II குழுவினர்: இடமிருந்து கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன் ரீட் வைஸ்மேன் (தளபதி), வலது ஜெரெமி ஹேன்சன். கட்டுரை தகவல் பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் 25 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குள்ளேயே விண்வெளி வீரர்களை நிலவைச் சுற்றி பத்து நாள் பயணத்துக்கு அனுப்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்தைத் தொடங்க உறுதி பூண்டிருந்த நாசா, இப்போது இந்தப் பணியை முன்கூட்டியே செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளது. 50 ஆண்டுகளாக எந்த நாடும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பயணத்தை மேற்கொண்டதில்…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
நினைவாற்றலை மேம்படுத்துவது எப்படி? “நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”. நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை: 1. தன்னம்பிக்கை 2. ஆர்வம் 3. செயல் ஊக்கம் 4. விழிப்புணர்வு 5. புரிந்துகொள்ளல் 6. உடல் நலம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம். 1. தன்னம்பிக்கை (Self Confidence) “என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்…
-
- 12 replies
- 3.5k views
-
-
என் மூளையின் மீள் வடிவமைப்பு..! By Todd Sampson அண்மையில் கனேடிய தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து வியந்த நிகழ்ச்சி இது. கனடாவில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் ராட் சாம்ப்சன் தனது மூளையை வீரியப்படுத்தும் மூன்று மாத முயற்சியில் இறங்குகிறார். இதற்காக அவர் நியூரோ விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொள்ளும் பயிற்சிகளும், பெற்றுக்கொள்ளும் பெறுபேறுகளுமே இந்நிகழ்ச்சியின் மூலக்கரு. உதாரணத்திற்கு, பார்வையாலேயே ஒரு ரிமோட் கன்ட்ரோல் உலங்கு வானூர்தியை பறக்க வைக்க முடியுமா? முடியும் என்கிறது நவீன விஞ்ஞான முன்னேற்றங்கள். கண்டதும் ஒருகணம் ஆடித்தான் போனேன். இதை இங்கே இணைப்பதற்குக் காரணம் ஒன்றேதான். நாமெல்லாம் எங்கள் மூளைகளை சில சாதாரண பயிற்சிகளின்மூலம் செம்மைப்படுத்தி மேம்…
-
- 23 replies
- 1.3k views
-
-
ஆப்ரிக்க யானைகள் மனிதர்களின் குரலை வைத்தே அவர்கள் ஆணா, பெண்ணா, வயதானவர்களா, சிறுவர்களா என்பதையும், அந்த குரலுக்கு சொந்தமானவர்களின் இனக்குழுமத்தையும் கூட அடையாளம் காணும் திறமை யானைகளுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். ஆப்ரிக்க காட்டு யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள், Proceedings of the National Academy of Sciences என்கிற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வுகளை சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேரன் மெக்கம்ப் மற்றும் முனைவர் கிரேமி ஷானன் ஆகிய இருவர் தலைமையேற்று நடத்தினார்கள். ஆப்ரிக்க காட்டுயானைகளுக்கும் அந்நாட்டில் இருக்கும் மாடுமேய்க்கும் மாசாய் இன மக்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நடப்பது வழமை. மாசாய் இனமக…
-
- 0 replies
- 395 views
-
-
கிழக்கில் இரண்டு,மேற்கில் இரண்டு கிரகங்களைக் காணலாம் நமக்கு நன்கு பரிச்சயமான நான்கு கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க இது ஏற்ற சமயமாகும். இவற்றில் வெள்ளி, புதன் ஆகிய இரண்டு கிரகங்களை சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானில் காணலாம். செவ்வாய், சனி ஆகிய இரண்டு கிரகங்களையும் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் காணலாம். வானில் நம்மால் மொத்தம் ஐந்து கிரகங்களை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலே கூறியபடி நான்கு கிரகங்களை மட்டுமே இப்போது நம்மால் காண இயலும். ஐந்தாவதான வியாழன் கிரகம் இப்போது பகலில் சூரியனுக்கு அருகே அமைந்திருப்பதால் அதைக் காண இயலாது. அதிகாலையில் கிழக்கு வானை நோக்கினால் வெள்ளி கிரகம் கண்ணில் படாமல் போகாது. அது வைர மூக்குப் பொட்டு போல ஜொல…
-
- 2 replies
- 911 views
-
-
வானத்தை முழுவதுமாக ‘ஸ்கேன்’ செய்துவிட ‘டெஸ்’ செயற்கைக்கோளை ஏவியது நாசா YouTube சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள கிரகங்களை கண்டறிய, ‘டெஸ்’ என்றழைக்கப்படும் செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்ணில் செலுத்தி உள்ளது. பூமியைத் தவிர வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை அறிய பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்து வரு கிறது. தண்ணீர் இருக்கும் கிரகத்தை கண்டறிய நாசா தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், 337 மில்லியன் டாலர் செலவில் ‘டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே சாட்டிலைட்’ அல்லது ‘டெஸ்’ எனப்படும் செயற்கைக்கோளை நாசா நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது. அ…
-
- 1 reply
- 453 views
-
-
பலூன் தயாரிக்கும் முறை சின்ன பலுன் என்று நாம் நினைக்கும் விடயத்தை இவர்கள் எப்படி பாதுகாப்பு முறைகள் பின்பற்றி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள். பலூன் பெரும்பாலும் குழந்தைகளால் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவர்கள் அதற்காவே சுகாதாரத்த்திற்கு முன்னுரிமை கொடுத்து இந்த பலுனை தயார் செய்கிறார்கள்.
-
- 5 replies
- 2.4k views
-
-
இலங்கையின் தெற்கில் உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை – நாசா அறிவிப்பு உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக இலங்கையின் தெற்கு பகுதியை நாசா அறிவித்துள்ளது. புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. உலகின் அனைத்து பாகங்களிலும் புவியீர்ப்பு விசை ஒரே அளவாக இருக்காதென்பதை நாசா கணித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் புவியீர்ப்பு விசையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்து, செயற்கைக்கோள் தரவுகள் மூலம் நீரின் அடர்த்தியை கணக்கிட்டு நாசாவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. உலகின் மிகக் குறைந்த ஈர…
-
- 16 replies
- 1.1k views
-
-
சூரியசக்தியில் இயங்கும் மொபைல் சார்ஜர் செர்பியாவில் சூரிய ஒளியினால் இயங்ககூடிய பொது பயன்பாட்டிற்கான மொபைல் தொலைபேசிக்கான 'சார்ஜர்' எனப்படும் மின்சக்தி ஊட்டுவானை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். செர்பிய பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த மின்சக்தி ஊட்டுவான் பெல்கிரேடுக்கு வெளியே உள்ள நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் உருவாக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கெளரவம் மிக்க பரிசு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்ரோனேவேக் நகரத்தில் எஃகுவினால் உருவாக்கப்பட்ட சுமார் 5 மீட்டர் உயரம் கொண்ட கம்பியின் மேல் சூரிய ஒளி தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. இங்கு உருவாகும் மின்சாரம் இந்த கம்பியின் கீழே உள்ள 16 வகையான ஒயர்கள் மூலம் வெவ்வேறு விதமான செல்லிடை தொலைபேசிகளுக்கு மின்சக…
-
- 1 reply
- 777 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை NASA அண்டார்டிகா பிரதேசத்தில் உள்ள வெட்டல் கடலில் மிதந்துவரும் செவ்வக வடிவ மாபெரும் பனிப்பாறை ஒன்றின் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. ஆய்வுக்காக அனுப்பப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. அந்தப் பனிப்பாறையின் கூர்மையான கோணங்களும், தட்டையான மேற்பரப்பும் அந்தப் பனிப்பாறை சமீபத்தில்தான் துண்டாகி வந்துள்ளதைக் குறிக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்டி…
-
- 0 replies
- 621 views
-
-
வணக்கம் சிறி அண்மையில் விற்பனைக்கு வந்த ஆப்பிளின் இல், பல விடயங்கள் முன்னைய தொலைபேசியை போலவே உள்ளது. ஒருவர் மட்டும் புதிதாக உள்ளார் - அவர்தான் சிறி. இவரின் அறிமுகம் ஒரு புதிய வரலாற்றை வரும் புது அறிமுகம்களில் படைக்கும் என நம்பலாம். சிறி - இவர் நீங்கள் பேசுவதை கேட்டு உங்களுக்கு பதில் சொல்லுபவர். அவர் அப்படி என்னதான் செய்வார்? உதாரணத்திற்கு: நீங்கள் : ஒரு சந்திப்பை திட்டமிடும் சிறி: எந்த நாளுக்கு நீங்கள் : வெள்ளிக்கிழமைக்கு சிறி: எத்தனை மணிக்கு நீங்கள் : மாலை ஐந்து மணிக்கு சிறி: சரி. உங்கள் ஐபோனின் நாட்காட்டியில் அது பதிவாகின்றது. http://www.youtube.com/watch?v=rNsrl86inpo
-
- 11 replies
- 1.9k views
-
-
சமீபத்தில், தனது சர்வதேச விண்வெளி நிலையத்தின் நேரடி ஒளிபரப்பில் எதோ ஒரு விசித்திரமான பொருள் காட்சியளிக்கவும் நேரலையை நாசா துண்டித்தது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது. பின் அது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட காரியமில்லை என்று நாசா விளக்கமளித்து இருந்தாலும் அதை பெரும்பாலான சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பவில்லை, இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றும் முதல்முறை நிகழவில்லை. நாசாவில் பணிபுரிந்த முன்னாள் விஞ்ஞானிகள் கூட ஏலியன் சார்ந்த உண்மைகள் அமெரிக்க அரசு மற்றும் நாசாவினால் மறைக்கப்படுவதாக தகவல்கள் அளித்துள்ளனர். ஆனால், எதற்கும் செவி கொடுக்காமல் தனது பணிகளையும் ஆய்வுகளையும் நாசா தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியாக, நாசா வேண்…
-
- 1 reply
- 358 views
-
-
ட்விட்டரில் புதிய வசதி! பதில் பதிவுகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது ட்விட்டர். இன்று முதல் இந்தப் புதிய வசதி ட்விட்டர் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு ட்விட்டர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அலைபேசியில் அனுப்பப்படும் செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 140ஆக இருந்தது. இதனால், ட்விட்டரும் அதையே தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும் ஃபேஸ்புக்கில் நீண்ட கட்டுரைகளைக் கூட எழுத முடிவதால், விஸ்தாரமான பதிவுகளை நாடும் பயனாளர்கள் ட்விட்டரைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு பதிவுக்குமான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக ட்விட்டர் கடந்த ஆண்டு அறி…
-
- 0 replies
- 351 views
-
-
அறிவியல் அதிசயம்: மனிதன் மரணத்தை வெல்வது சாத்தியமா? நீடித்த இளமையை நோக்கி முன்னேறும் மருத்துவம் நமசிவாயம் கணேஷ் பாண்டியன் துல்லிய மருத்துவ முறை ஆராய்ச்சியாளர், ஜப்பான் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஐந்தாவது கட்டுரை இது. (இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பி…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
- யாழ்ப்பாணத்திற்கொரு மணல் வீடு விகாரை வடிவத்தில் அமைக்கப்பட விருக்கும் வீட்டின், மணல் நிறைந்த சாக்குகளால் ஆக்கப்பட்ட, அத்திவாரம் மணல் நிறைந்த சாக்குகளால் ஆக்கப்படும் சுவர்கள், கதவுகள் ஜன்னல்கள்...உடன் வீடு கிட்டத் தட்ட முடிவுறும் நிலையில், கூரை கூட மணலில் ஆக்கப்பட்டுள்ளது ! மணல் விடு வசிப்பதற்குத் தயார் thnks to calearth.orgk இன்னும் ஒரு மணலில் கட்டப்டும் அரண்மனை பொறிஇயல், கட்டட நிபுனர்களே ! குண்டால அழிக்கமுடியாத, வெப்பதட்ப நிலைகளிலிருந்து பாதுகாக்கும், பழுதடைந்தாலும் இலகுவாக திருத்திக்கொள்ளக்கூடிய இந்த வீட்டை யாழ்ப்பாணத்தில் கடல் முழுக்க நிரம்பி வளியும் மணலால் யாரு…
-
- 12 replies
- 7.1k views
-
-
உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமா அப்ப இதை படிங்க..! [Wednesday, 2014-03-12 19:55:05] முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம். ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது. நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில் இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலாவருவோம். அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும். நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போ…
-
- 7 replies
- 873 views
-
-
காயமடைந்த மூளையின் நினைவுகளை மீட்டெடுக்க புதிய முறையை அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி அமைப்பு கண்டறிந்துள்ளது. இதற்காக அந்த அமைப்புக்கு 4 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.240 கோடி) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு நவீன ஆய்வுத்திட்ட முகாமை (டிஏஆர்பிஏ), நினைவுகள் மீட்டெடுப்பு திட்ட மேலாளர் ஜஸ்டின் சான்செஸ் கூறியதாவது... கடந்த 2000 வது ஆண்டிலிருந்து இதுவரை 27 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களும், ஆண்டு தோறும் 17 லட்சம் அமெரிக்க மக்களும் மூளை காயமடைவதால் தங்களின் நினைவுகளை இழக்கின்றனர். அவர்களின் நினைவுகளை மீட்டெடுப்பது அவசியம். குறிப்பாக ராணுவ வீரர்களுக்கு இதுபோன்ற சூழல்களில் அடிப்படை நிகழ்வுகள், இடங்கள் உள்ளிட்ட நினைவுகள் மங்கிவிடுகின்றன. தேசத்துக்காக உ…
-
- 1 reply
- 493 views
-
-
பட மூலாதாரம்,THAT கட்டுரை தகவல் எழுதியவர், ஆலிஸ் ஹெர்னாண்டெஸ் பதவி, பிபிசி முண்டோ 50 நிமிடங்களுக்கு முன்னர் பூமியின் மேற்பரப்பிலேயே மிகத்தாழ்ந்த பகுதி எங்கே இருக்கிறது தெரியுமா? இந்தியப் பெருங்கடலில். இவ்விடத்தில்தான் பூமியின் புவியீர்ப்பு விசை மிகக் குறைவாகவும் உள்ளது. அது ஏன் தெரியுமா? இரு இந்திய ஆய்வாளர்கள் இதற்கான ஒரு புதிய விளக்கத்தை அளித்திருக்கின்றனர். பூமி சுழலும் அச்சு 80 செ.மீ. கிழக்கில் நகர இந்தியர்களும் ஒரு காரணம் - எப்படி தெரியுமா?4 ஜூலை 2023 கருந்துளை என்றால் என்ன? விண்வெளியின் பெரும் ரகசியம் கண்டுபிடிக்க…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
பிரபஞ்சம் கமலக்குமார் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது? யார் எல்லா உயிரினங்களையும் உருவாக்கினார்கள்? என்ற கேள்வி எல்லா மனிதர்களுக்கும் என்றாவது ஒரு சில தருணங்களில் எழுந்திருக்கலாம். இது எனக்குள்ளும் ஒரு தீராத வினாவாகவே இருந்து வந்தது. இதற்கான விடை தேடும் முயற்சியில் இறங்கிய போது, நான் படித்த, பிரமித்த, விளக்கங்களை ஓர் அறிவியல் ஆய்வுக் கட்டுரையாக எழுத முயற்சிக்கலாம் என்று தோன்றியது. பல பில்லியன் ஆண்டுகள் அடங்கிய பரிணாம வளர்ச்சியை ஒரு சில பக்கங்களுக்குள் முடக்கிவிட விரும்பவில்லை. உங்களின் சில மணித்துளிகளை ஒரு நீண்ட விண்வெளிப் புரிதலுக்கு முன்பதிவு செய்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். பாகம் 1: இந்த பூமி தோன்றிய காலத்தையும், உயிர்களின் ஆதாரம், மூலம் கடவுள…
-
- 1 reply
- 2.2k views
-
-
சதுரமாகத் துளையிட ஒரு கருவி - காணொளி ================================ இருபத்தியாறு வருடங்களுக்கு முன்னதாக எரித்திரியாவில் இருந்து அகதியாக வந்த மைக்கல் செபட்டுவின் கண்டுபிடிப்பு அவருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கியுள்ளது. சுவரை வட்ட வடிவடிவில் துளையிடும் கருவியை பார்த்திருப்பீர்கள், ஆனால் இவர் கண்டுபிடிப்போ சுவரை சதுர வடிவில்கூட துளையிடும். BBC
-
- 0 replies
- 448 views
-
-
செவ்வாய் கிரகத்தில் 2030 இற்குள் மனிதர்களை குடியேற்ற முடியாது – நாசா செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்யும் திட்டம் 2030 இற்குள் சாத்தியமில்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் உள்ள சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உள்ளது. மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் சாத்தியமாகும் பட்சத்தில் அங்கு மனிதர்களை அனுப்பி பரிசோதனை செய்வது மற்றும் எதிர்காலத்தில் மனிதர்களை அங்கு குடியேற்றம் செய்வது குறித்த திட்டமும் நாசாவின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலைய…
-
- 0 replies
- 358 views
-