அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
பஞ்சரே ஆகாத ரைனோ டயர் பற்றித் தெரியுமா? என்னதான் ட்யூப்லெஸ் டயர்கள் வந்தாலும், வாகன ஓட்டிகளுக்குப் பெரிய தலைவலி பஞ்சர் பிரச்னைதான். ட்யூப்லெஸ் டயர்களில் பெரிய ப்ளஸ் - பஞ்சர் ஆனாலும், 100 கி.மீ வரை காற்றடித்துவிட்டு ஓட்டலாம். அதையும் மீறி சில டயர்கள் வெடித்துவிடும் அபாயமும் நடக்கிறது. பஞ்சரே ஆகாத, அப்படியே ஆனாலும் காற்றே இறங்காத டயர்கள் வந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு டெக்னாலஜி, ரைனோ டயர் என்னும் பெயரில் வந்திருக்கிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த ரைனோ டயர்கள் ரொம்ப பிரபலம். ரைனோப்ளெக்ஸ் எனப்படும் பாலிமர் சேர்மம் கொண்ட ஜெல், டயர்களின் உள்பக்கம் அப்ளை செய்யப்படுகிறது. இது கூர்மையான ஆணி போன்ற பொருட்கள் இறங்கினால் ஏற்படும் ஓட்டைகளை, கிழிசல்களை உடனே…
-
- 5 replies
- 2.3k views
-
-
நீர் இல்லாமல். சத்தத்தை கொண்டு.. தீயை கட்டுப்படுத்த முடியும். இசையை கொண்டு... தீயை கட்டுப்படுத்த முடியும், என்கிறார்கள் விர்ஜினியாவை சேர்ந்த இரு பொறியாளர்கள். லோ-ஃப்ரீக்வன்சி சவுன்டு ஏற்படுத்தும் அலைகளை கொண்டு தீயினை கட்டுப்படுத்த முடியும் என இவர்கள் நிரூபித்துள்ளனர். இந்த ப்ரோடோடைப் எக்ஸ்டிங்யூஷரை கணினி பொறியாளர் மேஜர் வியட் ட்ரியான் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மேஜர் செத் ராபர்ட்சன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் முற்றிலும் ஒலியின் மூலம் ஏற்படும் அலைகளை சார்ந்தே இயங்குகின்றது. அதிக ஃப்ரீக்வன்சி இருக்கும் ஒலி தீயை வைப்ரேட் ஆக்கும், அதனால் குறைந்த ஃப்ரீக்வன்சிகளான 30 முதல் 60 ஹெர்ட்ஸ் சரியாக தீயில் இருக்கும் காற்றை திக்குமுக்காடச் செய்யும் …
-
- 0 replies
- 629 views
-
-
பிரபஞ்சத்தின் எல்லையில் ஒரு புகைப்படம் எழுதியது: சிறி சரவணா இரவு நேர வானை நீங்கள் அவதானித்து இருந்தால், பல உடுக்களை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ஒரு தெளிவான இரவு வானில், உங்களால் அண்ணளவாக 3000 தொடக்கம் 4000 வரையான உடுக்களை பார்க்கலாம். இந்த உடுக்கள் எல்லாம் எமது பால்வீதியில் இருப்பவைதான். கொஞ்சம் உன்னிப்பாக அவதானித்தால் அன்றோமீடா உடுப்பேரடையையும் வெறும் கண்ணால் பார்க்கலாமாம். அன்றோமீடா உடுப்பேரடை நமது பால்வீதியில் இருந்து கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. இதுதான் நமது பால்வீதிக்கு மிக அருகில் இருக்கும் உடுப்பேரடை. இந்த இரவு வானம் ஒரு அற்புதமான விடயம், நீங்கள் இரவு வானில் பார்ப்பது வெறும் உடுக்கள் அல்லது பொருட்கள் மட்டுமல்ல, நேரத்தையும்…
-
- 0 replies
- 733 views
-
-
இளம்பெண்ணின் தொடையில் உள்ள கொழுப்பைக் கொண்டு அந்தப் பெண்ணிற்கு மார்பகத்தை உருவாக்கி டெல்லியைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை புரிந்து உள்ளனர். மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் `போலந்து சிண்ட்ரோம்` என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். பிறவிக்குறைபாடு நோயான `போலந்து சிண்ட்ரோம்`, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு சிறுவயதில் இருந்தே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதிப்புக் காரணமாக சிறுமிக்கு மார்பகம் ஒருபுறம் வளர்ச்சி அடையாமல் இருந்தது. இதனால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அந்த இளம்பெண்ணுக்கு, அவருடைய தொடையில் உள்ள கொழுப்பினை எடுத்து மார்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, புதுடெல்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் பிளா…
-
- 0 replies
- 618 views
-
-
உலகின் மிகப் பெரிய விமானம் இவ்வருட இறுதியில் வெள்ளோட்டம்! நீங்கள் இலண்டனில் வானத்தை அண்ணாந்து பார்த்தால் மழை மேகங்கள், விமானங்கள் மற்றும் பறவைகளையே வழமையாகக் காண்பீர்கள்! ஆனால் இவ்வருட இறுதியில் இன்னொரு முக்கிய பொருளையும் நிச்சயம் காணும் வாய்ப்பைப் பெறுவீர்கள்! அது வேறொன்றுமில்லை! ஒரு உதைப் பந்தாட்ட மைதானத்தை விட நீண்ட அதாவது 302 அடி நீளமான ஏர்லேண்டர் 10 (Airlander 10) என்ற உலகின் மிகப் பெரிய விமானத்தினையே ஆகும். ஒரு பகுதி கப்பல், ஒரு பகுதி ஹெலிகாப்டர் மற்றும் ஒரு பகுதி விமானம் என்பவற்றின் கலவையான இந்த மிகப் பெரிய விமானம் உண்மையில் ஹீலியம் வாயுவினால் நிரப்பப் பட்ட ஓர் பறக்கும் விமானக் கப்பலே ஆகும். அமெரிக்க இராணுவத்தின் இராணுவக் கண்காணிப்புக்காக HAV எனப்படும…
-
- 3 replies
- 739 views
-
-
வேற்றுலக உயிரினங்களும் டிராக் சமன்பாடும் எழுதியது: சிறி சரவணா நாமறிந்து, இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை உயிரினம் என்று ஒன்று இந்தப் பூமியில் மட்டும்தான் உண்டு. அதாவது எம்மைப் போல, நம் உலகில் இருக்கும் உயிரினங்களுக்கு என்று ஒரு அடிப்படிக் கட்டமைப்பு மற்றும் பண்புகள் உண்டு, அவற்றை வைத்துத்தான் நாம் ‘உயிரினம் என்ற ஒன்றை வரைவிலக்கணப் படுத்தியுள்ளோம். சரி உயிரினம் என்றால் என்ன என்று உயிரியல் எப்படி வரைவிலக்கணப் படுத்தியுள்ளது என்று பார்க்கலாம். எதோ ஒன்று உயிருள்ளது என்று கருத அது பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று உயிரியல் கூறுகிறது. ஒரு ஒழுங்கான கலக்கட்டமைப்பு கொண்டு உருவாக்கி இருக்கவேண்டும். ஒரு கலமோ அல்லது பல கலங்கலாகவோ இருக்கலாம். தன் நிலையைப் பேன சக்தி…
-
- 1 reply
- 706 views
-
-
சீனாவின் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைப்பதற்காக அந்நாட்டு அரசு சமையல் எண்ணெய் மூலம் விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து நச்சுக்களை வெளியிடாத கழிவு சமையல் எண்ணெய் மூலம் ஓடும் முதல் விமானம் இன்று வெற்றிகரமாக பறந்தது. சீனாவின் வர்த்தக மையங்களான ஷாங்காய்க்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே ஹெனைன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் பறக்கத் தொடங்கியது. சீன தேசிய விமான எரிபொருள் மற்றும் எரிசக்தி நிறுவனமான சினாபெக் நிறுவனம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கான சமையல் எண்ணெய் கழிவுகள் சீன உணவகங்களில் இருந்து பெறப்படுகிறது. பெறப்படும் சமையல் எண்ணெய் போயிங் 737 விமானங்களில் 50-50 என்ற அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 50 சதவீத அளவு ஜெட் எரிப…
-
- 0 replies
- 869 views
-
-
உலகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஏரோமொபில் இதற்கான இறுதிகட்ட வடிவமைப்பு பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சாதாரண பெட்ரோலில் ஓடும் வகையில் தயாரிக்கப்படவுள்ள இந்த நவீன பறக்கும் கார்களில் இருவர் அமர்ந்து பயணம் செய்யலாம். மனிதர்களே ஓட்டும் வகையில் ஒரு மாடலும், தானியங்கி (ஆட்டோ பைலட் மோட்) முறையில் இயங்கும் மற்றொரு மாடலும் இதற்காக வடிவமைக்கப்பட்டு வருகின்றது. சில நூறு அடிகள் நீளத்தில் ஒரேயொரு செயற்கை புல்தரை பட்டை மட்டும் இருந்தால் போதும். சாதாரண கார்போல தரையில் வேகமாக ஓடி, பின்னர் குட்டி விமானம் போல் உயரக் கிளம்பி 400 மைல்…
-
- 7 replies
- 1.1k views
-
-
பூமி பாதிக்கு மேல் அழிந்துவிட்டது என்றும் மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும் என சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவீடனை சேர்ந்த பேராசிரியர் ஜான் ராக்ஸ்ரோம் தனது ஆய்வின் முடிவுகள் பற்றி கூறும்போது ‘‘பூமியின் சமநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பூமி மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும். பூமியின் சம நிலையை பேணுவதற்கு தேவையான 9 காரணிகளில் ஏற்கனவே 4-ஐ நாம் தாண்டி விட்டோம். பூமியின் சம நிலைக்கு காரணமான 9 காரணிகளில் காலநிலை மாற்றம், பல்லூயிர் சம நிலை, நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் பயன்பாடு, காடுகளின் அளவை 75 சதவீதமாக வைத்தியிருப்பது ஆகிய நான்கிலும் நாம் எற்கனவே அதிகபட்ச அளவை தாண்டிவிட…
-
- 0 replies
- 595 views
-
-
LIVE: http://www.bbc.co.uk/news/live/uk-31906556 யாழ்கள மட்டுறுத்தினருக்கு... newsfirst.lkஇலிருந்து இச்செய்தி இணைக்கிறேன். இவ்விணையத்தள செய்திக்கு இங்கு அனுமதி உண்டா எனதேரியாது. newsfirst.lkக்கு அனுமதி இல்லை எனில் தயவு செய்து நீக்கி விடவும். நன்றி. 16 வருடங்களின் பின்னர் தோன்றும் அபூர்வ சூரியகிரகணம்: பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது அபூர்வமானதொரு சூரிய கிரகணம் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர். இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999 ஆம் ஆண்டிலேயே இறுதியாக நடந்துள்ளது. 16 வருடங்கள் கழித்து அது தற்போது நிகழவுள்ளது. வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது. இது சிலவேளை 90 நிமிடங்கள் நீடிக்க…
-
- 2 replies
- 987 views
-
-
பொதுச் சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைத்த 100-வது ஆண்டும் பிரசுரித்த 99-வது ஆண்டும் இதுதான் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ ஈர்ப்பு விசையைப் பற்றி விளக்குகிறது. அந்தக் கோட்பாட்டை அவர் முன்வைத்துக் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டு காலத்தில் கணக்கற்ற தடவை இயற்பியலாளர்கள் இந்தக் கோட்பாட்டின் துல்லியத்தைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். ஒரு தடவைகூட இந்தக் கோட்பாடு பொய்த்துப்போனதில்லை. எனினும், கணக்கில்லாத எத்தனையாவதோ தடவையாக இன்னும் அந்தக் கோட்பாட்டின் கணிப்புகளைப் பரிசோதிப்பதில் இயற்பியலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொதுச் சார்பியல் கோட்பாட்டின் 100-வது ஆண்டான இந்த ஆண்டில், மேலும் துல்லியமான சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. ‘பொது…
-
- 0 replies
- 446 views
-
-
பிரித்தானியாவில் நடந்த ஆராய்ச்சியில் தாவரங்களின் மரபணுக்களை பெற்று மனிதர்கள் பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (Cambridge University) கடந்த 2001ம் ஆண்டு முதல் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணமான மரபணு குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மனிதர்கள் மரபணுக்களை தனது இனத்திடமிருந்து மட்டும் பரிமாற்றம் செய்துக்கொண்டனரா அல்லது வேறு இனத்திலிருந்தும் மரபணு பரிமாற்றம் நடந்துள்ளதா என தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் மனித இனமானது தாவரங்கள், நுண்ணிய தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளின் மரபணுக்களையும் பரிமாற்றம் செய்துகொண்டு பரிணாமம…
-
- 0 replies
- 3.1k views
-
-
நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை யானைகள் தங்கள் மோப்ப சக்தியை பயன்படுத்தி கண்டுபிடிப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக வெடிப்பொருட்களை கண்டறிவதற்கு போலீஸ் மற்றும் ராணுவத்தில் நாய்கள்தான் பயன்படுத்தப்படும். ஏனெனில் அவற்றை கண்டுபிடிக்கும் திறன் அதற்கு அதிகமாக காணப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா நாடான அங்கோலாவில் நடைபெற்ற போரின்போது அங்கிருந்து வெளியேறிய யானைகள் மீண்டும் தங்கள் காட்டிற்கு திரும்பியபோதுதான் யானைகளாலும் கண்ணி வெடிகளை மோப்பம் பிடிக்க முடியும் என்பதை கண்டறிந்தார்கள். கண்ணி வெடிகளை மறைத்து வைத்து யானைகளை கொண்டு கண்டுபிடிக்கும் சோதனையை தென் ஆப்பிரிக்காவின் வடக்கு தலைநகரான பிரிட்டேரியாவில் விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள். இதில் யானைகள் 96 ச…
-
- 3 replies
- 676 views
-
-
உலக அளவில் மாணவர்கள்.. மாணவிகளை விட கல்வியில் பிந்தங்கக் காரணம் என்ன என்ற ஆய்வில்.. வெளிப்பட்டுள்ள உண்மைகள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 1. மாணவிகள்.. வகுப்பில் நல்ல பிள்ளைக்கு நடந்து கொள்வதாலும்.. வீட்டுப் பாடங்களை அதிக சிரத்தை எடுத்துச் செய்வதாலும்.. அதே மாணவிகளுக்கு சமதரமுள்ள மாணவர்களைக் காட்டிலும் ஆசிரியர்கள் அதிக புள்ளிகளை வழங்குவதால்.. மாணவிகளின் நல்ல பெறுபேறுகள் மாணவர்களினதை விட அதிகரிக்க காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனை "gender bias"... ''பால் சார்பு நிலை'' என்று அழைக்க விளைகிறார்கள். 2. மேற்கில் மாணவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் பிரகாசிக்க.. அதே திறமை உடைய மாணவிகள்.. பொதுத் தேர்வுகளில் அடையும் வெற்றியோடு கணிதம்.. விஞ்ஞானத்துக்கு ரா ரா காட்டி விட…
-
- 3 replies
- 997 views
-
-
574f2dae7c13dab28cf68b32ccd4369a
-
- 2 replies
- 973 views
-
-
பெருந்துளை இந்த கருந்துளை.. 1200 கோடி சூரியன்களின் நிறையைக் கொண்டஆகப் பெரிய ராட்சசக் கருந்துளை ஒன்றைக் கண்டு பிடித்தஆச்சரியத்தில் விஞ்ஞானிகள் மூக்கில் விரல் வைத்து உள்ளனர். . சமீபத்தில் பீகிங் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ஷு பிங் வு (Xue-Bing Wu) இனம் கண்ட கருந்துளை . இதுவரை நாம் பார்த்ததில் மிக மிக அதிக நிறை கொண்ட கருந்துளை. நம் சூரியனைப் போல 1200 சூரியன்களை உள்ளே வைக்கலாம்.அந்த அளவு பெருந்துளை.இந்த கருந்துளை. க[பெ]ருந்துளையைப் பற்றி பீகிங் பல்கலைக்கழகம் உருவாக்கிய வரை படம். நாம் வாழும் பூமியில் புவிஈர்ப்பு விசை உள்ளது. அதனைச் சார்ந்து நாம் பொருள்களை எடைபோடுகிறோம். எடை வேறு. நிறை வேறு. நிறை (Mass) என்றால் ஒரு பொருளில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் ஆறு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயில் நீர் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதே பல ஆண்டுகளாக விவாதத்திற்குள்ளானதாக இருக்கும் நிலையில் அங்கு கடல் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா இந்நிலையில் செவ்வாயில் கடல் இருப்பதற்கான போதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. அங்கு பூமியில் உள்ள ஆர்டிக் பெருங்கடலைவிட பெரிதான அளவில் கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளாகவே இக்கடலானது அக்கிரகத்தின் வடதுருவத்தில் இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளனர்.அங்கு இரண்டு…
-
- 3 replies
- 1.9k views
-
-
சூரிய ஒளியில் இயங்கும் விமானம் சர்வதேச அளவில் பறக்க தயார் நிலையில் உள்ளது. ஐக்கிய அரபு நாடுகள் சூரிய ஒளியில் பறக்கும் விமானத்தை தயாரித்துள்ளது. பெட்ரோலுக்கு மாற்றாக இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தின் சோதனை ஓட்டம் 2 தடவை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச அளவில் பறக்க விடுவதற்காக சமீபத்தில் 3வது முறையாக சோதனை ஓட்டம் நடந்தது. இது ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எல்படீன் விமான நிலையத்தில் நடந்தது. இந்த முறையும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. மேக மூட்டம் இன்றி வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் திட்டமிட்டபடி அது தனது பயணத்தை தொடங்கும் என விமானத்தை உருவாக்கிய விஞ்ஞானி பெர்ட்ரான்ட் பிக்கார்டு தெரிவித்துள்ளார். http://seith…
-
- 1 reply
- 532 views
-
-
பச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீம் பச்சை குத்தியதை அழிக்க முடியாததையும், அழிக்க முயன்றால் வலியால் துடிப்பதையும் நாம் பார்த்து இருக்கிறோம். இதற்கு எளிய தீர்வாக, பச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீமை கனடா நாட்டின் டல்ஹவுஸ் பல்கலைக்கழகத்தின் பிஎச்.டி. மாணவர் அலெக் பாகனகம் கண்டுபிடித்துள்ளார். பச்சை குத்தியவுடன், அந்த மையில் உள்ள வண்ணப்பொருள், நமது தோலுக்குள் சென்று சேர்ந்து விடும். பிறகு அது, ‘மேக்ரோபேஜஸ்’ என்ற வெள்ளை ரத்த அணுக்களால் ஈர்த்துக் கொள்ளப்படும். அந்த மாணவர் கண்டுபிடித்துள்ள கிரீம், வண்ணப்பொருளை ஈர்த்து வைத்துள்ள மேக்ரோபேஜசுக்கு எதிராக செயல்புரியும் ஆற்றல் கொண்டது. இதனால், பச்சை வலியின்றி அழிந்து விடுவதாக தெரியவந்துள்ளது. http://www.dailyth…
-
- 6 replies
- 17.3k views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் ‘சிந்திக்கும் தொப்பி’ ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பெயர் சிந்திக்கும் தொப்பி என்றாலும் இது தானாக சிந்திக்காது. இந்தத் தொப்பியை அணிந்துகொண்டால் வேகமாக எதையும் கற்றுக்கொள்ளவும் விரைவாக முடிவெடுக்கவும் முடியும் என்கிறார்கள். ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத் திணறுகிறவர்களுக்கும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் திணறுகிறவர்களுக்கும் தொப்பியை அணிவித்து, குறைந்த அளவு மின்சாரம் மூளைக்குள் செலுத்தினார்கள். அப்பொழுது மிகச் சரியாக முடிவெடுத்துவிடுகின்றனர் ,வேகமாகக் கற்றுக்கொள்கின்றனர் . இதுவரை 60 மனிதர்களிடம் இந்தச் சோதனையை நடத்தி, 75 சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இன்னும் பல சோதனைகளுக்குப் பிறகுதான் இந்தத் தொப்பி வெளிவரும் என்…
-
- 0 replies
- 806 views
-
-
என் நண்பரும் ஊடகவியலாளருமான எஸ். சரவணன் தன் முகநூலில் இணைத்து இருந்த இக் காணொளி ஒரு நல்ல திட்டம் ஒன்றை பற்றி சுருக்கமாக சொல்லிச் செல்கின்றது. இத் திட்டம் எம் தாயகத்துக்கு ஒத்துவரக் கூடிய ஒரு அருமையான திட்டம். முதலீடும் பல இலட்சங்களில் தேவைப்படாது. 5dddcc2f699408c8a21967d0492ceb1c இது தொடர்பாக உங்களின் ஆரோக்கியமான கருத்துகளையும் தாருங்கள்.
-
- 4 replies
- 1k views
-
-
தொலைபேசி வலையமைப்பில் தற்போது அதிவேகம் கொண்ட வலையமைப்பு வகையாக 4G தொழில்நுட்பம் காணப்படுகின்றது. இதன் வேகத்தையும் மிஞ்சும் வகையில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் முகமாக ஆராய்ச்சிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் Surrey பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5G ஆராய்ச்சி மையத்தில் Tbps வேகத்தில் தரவுகளை அனுப்பி புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். இது தற்போது உள்ள தரவுப்பரிமாற்றத்தை விடவும் 1000 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை 5G தொழில்நுட்பம் 2018ம் ஆண்டளவில் பொதுமக்களின் பாவனைக்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamilseithy.net/21091
-
- 0 replies
- 739 views
-
-
அபூர்வமானதொரு சூரிய கிரகணம் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர். இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999 ஆம் ஆண்டிலேயே இறுதியாக நடந்துள்ளது. 16 வருடங்கள் கழித்து அது தற்போது நிகழவுள்ளது. வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது. இது சிலவேளை 90 நிமிடங்கள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை சுமார் 84 சதவீதமான சூரிய ஒளி மறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வடக்கு நோர்வே மற்றும் பரோயே தீவுகளில் முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. மீண்டும் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் 2026 ஆம் ஆண்டில் தான் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். http://newsfirst.lk/tamil/2015/02/16-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF…
-
- 1 reply
- 3.3k views
-
-
வாஷிங்டன் செவ்வாய் கிரகம், நமது பூமி கிரகத்தைப் போன்று நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் படங்களையும், தகவல்களையும் ‘நாசா’வுக்கு அனுப்பி வருகிறது.அவற்றை இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி அஸ்வின் வாசவதா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள ‘மவுண்ட் ஷார்ப்’ பள்ளத்தில் மோஜோவி பகுதியில், இருந்து விண்கலம் செவ்வாய்கிரகத்துடன் சேர்த்து தனது செல்பி படத்தை எடுத்து அனுப்பி உள்ளது.இந்த பகுதியில் கியூரியா…
-
- 0 replies
- 531 views
-
-
பரிசோதனை நிலையத்தில் உருவாக்கப்படும் ஸ்மார்ட் பேண்டேஜ்உடலில் ஏற்படும் காயம் மற்றும் புண்களுக்கு போடப்படும் பேண்டேஜ்கள், அந்த காயங்கள் மோசமானால் தாமாகவே மருத்துவருக்குத் தெரியப்படுத்தி உடனடியாக அவரை எச்சரித்து சிகிச்சையளிக்கச் செய்யவல்லனவாக உருவாகிவருகின்றன. இன்றைய நிலையில் காயம் மற்றும் புண்களை ஆராய்ந்து, கண்காணித்து, குணப்படுத்தவேண்டுமானால் நீங்கள் முதலில் மருத்துவமனைக்கு நேரில் செல்லவேண்டும். அங்கே காத்திருந்து, முதலில் மருத்துவ தாதியரைப் பார்க்கவேண்டும். அவருக்கு அடுத்து மருத்துவர் பார்த்து மருந்துகளை பரிந்துரைப்பார். ஆனால் இதற்கு பதிலாக காயம் மற்றும் புண்களின் தன்மையை தானே ஆராயவல்ல, தொடர்ந்து கண்காணித்து குணப்படுத்தவல்ல ஸ்மார்ட் பேண்டேஜ்கள், அதாவது புத்திசாலி பேண்டே…
-
- 2 replies
- 691 views
-