அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
செவ்வாய் விண்கலப் போட்டி: ஓர் அசத்தல் ஒப்பீடு கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதியன்று செவ்வாய்க் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியது இந்தியா. இதற்குச் சரியாக 13 தினங்கள் கழித்து 2013 நவம்பர் 18ஆம் திகதி அமெரிக்காவின் கேப் கேனவரல் விண்வெளி ஆராய்ச்சி மையத் தளத்திலிருந்து இதே செவ்வாய் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மேவன்' என்ற விண்கலத்தை ஏவியது. IMAGE_ALT மேவன் விண்கலம் மங்கள்யான் செவ்வாய் சுற்றுப்பாதையை 2014 செப்ரெம்பர் 24 திகதி காலை 7.53 மணிக்கு அடைந்தது. மேவன் இரண்டு தினங்களுக்கு முன்னதாக செப்ரெம்பர் 21ஆம் திகதி இரவு 10.24 மணிக்கு செவ்வாய் சுற்றுப் பாதையை அடைந்தது. 15 நாள்கள் மங்கள்யானை விட மேவன் குறைவாகப் ப…
-
- 0 replies
- 646 views
-
-
நமது பால்வெளி அண்டத்திற்கு (Milky way galaxy) உள்ளே உள்ள வேறு ஏதேனும் பாகத்தில் இருந்து நமது பூமியில் உயிர் வாழ்க்கைக்கான கட்டமைப்புக்கள் வந்திருக்கலாம் என புதிய ஆதாரத்தின் மூலம் ஊகிக்கப் படுகின்றது. நியூயோர்க்கின் கோர்னெல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் நமது அண்டத்தின் நட்சத்திரக் கட்டமைப்புக்களுக்கு இடையே புதிய நட்சத்திரம் ஒன்று தோன்றும் பகுதியில் உயிர் வாழ்க்கைக்கான மூலாதாரத்தைக் கண்டு பிடித்துள்ளனர். அதாவது நமது பூமியில் இருந்து 27 000 ஒளி வருடங்கள் தொலைவில் பால் வெளி அண்டத்தின் மத்தியில் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான கார்பன் மூலக்கூறுகளான ஐசோப்ரொப்பைல் சையனைட்டு என்ற சிக்கலான மூலகம் இருப்பதை அவதானித்துள்ளனர். இதன் மூலம் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான மூலக் கூறுகள் பூமிக்கு இத…
-
- 2 replies
- 849 views
-
-
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் எத்தனையோ மனிதர்கள் பல்வேறு வகையில் சாதனை படைத்துள்ளனர். ஆனால், அந்தப் புத்தகத்தில் மனிதர்கள் மட்டும் தான் இடம் பெறுவது என்றே இல்லை. பல விலங்குகளும் கூட அதில் சாதனைகள் படைத்து ஓர் இடத்தைப் பெற்றுவிட்டன! அப்படி கின்னஸ் உலக சாதனை படைத்த ஓர் பறவை பற்றி நீங்கள் இந்த அறிவு டோஸில் தெரிந்துகொள்ளலாம். உலகிலேயே சிறிய பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? 5cm நீளம் மற்றும் 2g நிறையைக் கொண்ட Bee Hummingbird என்று அழைக்கப்படும் ஓர் ஓசனிச்சிட்டு வகை தான் பறவைகளில் மிகச் சிறிதானது ஆகும். வழக்கமாக கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்ற உலக சாதனையை படைத்ததும் இல்லாமல், உலகில் மிகச் சிறிய முட்டையை இடும் பறவை என்ற சாதனையையும்…
-
- 0 replies
- 776 views
-
-
உண்மை இல்லை என்று சொல்லப்பட்ட விடயங்கள் இன்று முற்றிலும் உண்மை என்று நிரூபிக்கப் பட்டுள்ளன, அதே போன்று தான் உண்மை என்று நம்பப்பட்ட எவ்வளவோ விடயங்கள் இன்று உண்மை இல்லை என்று கூறப்பட்டு இருக்கின்றன. இந்த அறிவு டோஸில் கூட, நாம் பொதுவாக உண்மை என ஏற்றுக்கொண்ட விடயம் ஒன்று தவறு என்பதை அறியத் தருகின்றேன்! சரி, உங்களிடம் உலகில் மிகப் பெரிய மலை எது என்று கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்? உடனடியாக உங்கள் பதில் எவரெசுட்டு சிகரம் (Mount Everest) என்று தானே இருக்கும்? 8.848 மீட்டர் கொண்ட இந்த மலை உண்மை சொல்லப்போனால் உலகின் மிகப்பெரிய மலையே இல்லை! இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்: ஓர் மலையின் உயரத்தை எங்கிருந்து எங்கு வரை அளக்கப்படுகிறது என்பது தான். கடல் மட்டத்தில் இருந்து …
-
- 8 replies
- 4k views
-
-
அறிவியலில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் இறந்தகாலத்தில் நடந்தன, நிகழ்காலத்தில் நடக்கின்றன, மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகின்றன. அது ஒரு நாளும் நின்று விடப் போவது இல்லை. இதில் என்ன விசேஷம் என்றால், இறந்தகாலங்களில் எவ்வளவோ திட்டமிடப்படாத கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது தான். என்ன புரியவில்லையா…? ஒரு விடயத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாக வேறு ஏதோ ஒரு விடயத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த அறிவு டோஸில் அப்படி தற்செயலாகக் கண்டு பிடித்த மிகப் பிரபலமான 5 கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறுகின்றேன். 1907ம் ஆண்டில் Leo Baekeland என்பவர் அரக்கு (Shellac) எனப்படும் ஒருவகை இயற்கைப் பிசினுக்கு பதிலாக செயற்கை பிசின் உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். ஆ…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர் ஒரு நாட்டின் மிகப் பெரிய பணக்காரராக முடியுமா? வித்தியாசமாக யோசித்தால் நிச்சயம் ஆகமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜாக் மா. அலிபாபா என்கிற இணையதளத்தின் ஐபிஓவை அமெரிக்காவில் வெற்றிகரமாக வெளியிட்டதன் மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஜாக் மா, பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்த நிலையை அடைந்திருக்கிறார். அவர் கடந்துவந்த பாதை இதோ... சீனாவின் ஸீஜியாங்க் பிராந்தியத்தில் உள்ள ஹங்க்சோவ் என்னும் ஊரில் அக்டோபர் 15, 1964-ல் பிறந்தார் ஜாக் மா. தனது 13-வது வயதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ஆங்கிலம் கற்கத் தொடங்கினார். இதற்காக காலை ஐந்து மணிக்கே எழுந்து 45 நிமிட சைக்கிள் பயணம் செய்து, சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு…
-
- 1 reply
- 637 views
-
-
செல்போன் விற்பனை... ஆன்லைன் Vs ரீடெயில் ச.ஸ்ரீராம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் இந்தியா முழுக்க பல இளைஞர்களும் பரபரப்பாக இருந்தார்கள். காரணம், சீனாவின் ஆப்பிள் என்றழைக்கப்படும் ஷியோமி நிறுவனம் தனது லேட்டஸ்ட் செல்போன்-ஆன ரெட்மீ 1எஸ் என்கிற போனை ஃப்ளிப்கார்ட் மூலம் அன்று புக்கிங் தொடங்கியது. சில லட்சம் எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்த போனை வாங்க பல லட்சம் பேர் கம்ப்யூட்டர் முன்பு பல மணி நேரம் காத்துக்கிடந்தனர். மிகச் சரியாக இரண்டு மணிக்குத் தொடங்கிய ‘புக்கிங்’ அடுத்த சில நொடிகளிலேயே முடிந்தது. இந்த சில நொடிகளில் போனை புக் செய்ய முடியாதவர்கள் அடுத்து எப்போது புக்கிங் அறிவிப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். புத்தம் புதிதாக சந்தைக்கு வரும் செல்போ…
-
- 0 replies
- 585 views
-
-
உள்ளபடி செவ்வாய்க்கு விண்கலம் ஒன்றை அனுப்பும் திறன்படைத்த ராக்கெட் இந்தியாவிடம் கிடையாது. ஆனாலும்மங்கள்யானை அனுப்பி இந்தியா உலக சாதனைநிகழ்த்தியுள்ளது. இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ)தகுந்த உத்தியைப் பின்பற்றியதன் மூலமே இதுசாத்தியமாகியது. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மிக நம்பகமானது என்பது25 தடவைகளுக்கு மேல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்து நாம்உருவாக்கி வரும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் நம்பகத்தன்மைஇனி தான் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டினால் பொதுவில் ஒருவிண்கலத்தை மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில்பூமியைச் சுற்றி வரும்படி செலுத்த இயலும். ஒரு விண்கலம்பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு செவ்வாய் நோக்கி செல்லவேண்டுமானால் அது மணிக்கு…
-
- 1 reply
- 2.5k views
-
-
நாம் நிகழ்காலத்தில் வாழ்கின்றோம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இப்படி நிகழ்காலத்தில் வாழும் நாம் நமது கண்களாலும் நிகழ்காலத்தைத் தானா பார்க்கின்றோம்? இல்லவே இல்லை! நிகழ்காலத்தில் வாழும் நாங்கள் நமது கண்களால் இறந்தகாலத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்! என்ன குழப்பமாக இருக்கிறதா? இதோ வருகிறது எனது விளக்கம்… நமது கண்களால் ஒரு பொருளைப் பார்ப்பது என்றால் என்ன? உதாரணத்திற்கு சூரியனில் இருந்து அனுப்பப்பட்ட ஒளி, பூமியில் நமது சுற்றுப்புறத்தில் உள்ள பொருள் ஒன்றில் பட்டுத் தெறித்து நமது கண்களை அடையும்போது, அந்தப் பொருள் நமக்கு தெரிகின்றது என்கிறோம். ஆனால் இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், ஒளி ஒரு பொருளில் பட்டுத் தெறித்து நமது கண்களை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம…
-
- 0 replies
- 416 views
-
-
அலுமினிய பாத்திரம் எப்படி வனையப்படுகிறது? https://www.facebook.com/video/video.php?v=701569186601964
-
- 5 replies
- 1.1k views
-
-
இந்த உலகில் உயிரினங்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து வரும், அமெரிக்க நாட்டில் உள்ள ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் (Stanford University) பணி புரியும், பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ (Rodolfo Dirzo) என்பவர் தனது ஆய்வின் முடிவை 26.7.2014 அன்று வாஷிங்டன் நகரில் வெளியிட்டார். உலகில் உயிரினங்கள் தோன்றிய பிறகு, நிலச் சரிவு (Land slide), ஆழிப் பேரலை (Tsunami), விண்கற்கள் (Asteroid) மோதல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் காரணமாக இது வரையில் ஐந்து முறை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன என்றும், இப்பேரிடர்களின் காரணமாக டினோசார், மாபெரும் யானைகள் (Mammoth) போன்ற 320 உயிரினங்கள் சுவடே இல்லாமல் அழிந்து போய் விட்டன என்றும் அவர் கூறினார். இப்பேரழிவுகளில் இருந்து அழியாமல் தாக்குப் பிடித்த மற்ற உ…
-
- 0 replies
- 518 views
-
-
இறப்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே பயம் வருகிறது. ஜெர்மனியில் ஒரு மனிதன் சராசரியாக 77 வருடங்கள் உயிருடன் இருப்பான் என்று புள்ளிவிபரத்தில் பார்க்கலாம். ஆகவே, நாங்கள் எல்லோருமே ஒரு முடிவை நோக்கித் தான் சென்றுகொண்டிருக்கிறோம். இறப்பு என்பது நிச்சயம்…! அது, சரி தானே…? இல்லவே இல்லை என்று விஞ்ஞானம் கூறுகின்றது! Google நிறுவனத்தில் Director of Engineering ஆக பணிபுரியும் Ray Kurzweil என்பவர் ஒரு நம்ப முடியாத விடயத்தைக் கூறியிருக்கிறார். இதில் அதிசயம் என்னவென்றால், இவர் கடந்த காலங்களில் கூறிய அதிகமான விடயங்கள் உண்மையாகவே நடந்து விட்டன! ஆகவே, இதுவும் சும்மாஅறிவியல் புனைவு (Scince Fiction) என்று சொல்லிவிட்டுப் போக முடியாது! சரி, அவர் அப்படி என்ன தான் கூறியிருக்கிறார் என்று பா…
-
- 3 replies
- 877 views
-
-
அமெரிக்க நாசா நிறுவனம் செவ்வாய்க்கு அனுப்பி வைத்த தானியங்கி ரோபோவான கியுரியாசிட்டி (Curiosity) செவ்வாய் மேற்பரப்பில்.. சதுப்பு பாறைகள் நடுவே ஓர் இடத்தில் (Mount Sharp in Gale Crater இன் அடிப்பாகத்தில்) குறிப்பிடத்தக்க ஆழத்திற்கு வெற்றிகரமாக குழிதோண்டி உள்ளது. இது இப்பணியை கிட்டத்தட்ட கடந்த 5 மாதங்கள் எடுத்து நிறைவு செய்துள்ளது. [கியுரியாசிட்டி தோண்டிய குழி] இந்தக் குழியில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை.. செவ்வாயின் மண் படைகளை.. கியுரியாசிட்டி மூலம் ஆய்வு செய்து.. பெறப்படும் பெறுபேறுகளை வைத்து செவ்வாயின் கடந்த கால சூழலியல் வரலாற்றை எதிர்வுகூற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒரு தொன் எடையுள்ள கியுரியாசிட்டி நாசாவால் செவ்வாய்க்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்…
-
- 3 replies
- 662 views
-
-
60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்? சராசரியாக 100 மீட்டர் நடக்க முடியும். ஒரு வாழைப்பழத்தை உரித்து சாப்பிட முடியும். சரி தானே…? ஆனால், இதே 60 நொடிகளில் இணையத்தில் (Internet) என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா…? தற்போது இணையத்தில் கிட்டத்தட்ட 2.700.000.000 பேர்கள் இணைக்கப் பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நிமிடமும் 150 பேர்களால் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோருமே Skype ஊடாக உங்கள் உறவுகளுடன் பேசியிருப்பீர்கள். இதில் 60 நொடிகளில் மட்டும் 1.400.000 உரையாடல்கள் நடைபெறுகின்றன. இதுவே ஜெர்மனியில் இருக்கும் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான மியூனிக்கில் வாழும் அனைவருமே, ஒரே நெரத்தில் பேசுவது போல் இருக்கும். மேலும் 60 நொடிகளில் 204.000.000 மின்னஞ்ச…
-
- 0 replies
- 565 views
-
-
நம்மைக் கடித்தாலோ அல்லது நமது உணவுப்பொருளில் தென்பட்டாலோ தான் நாம் எறும்பைப் பற்றி யோசிப்போம். இப்படி நாம் சிறிதும் சிந்திக்கத் தவறுகின்ற, உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடை எவ்வளவு என்று தெரியுமா, நண்பர்களே? இந்த அறிவு டோஸைத் தொடர்ந்து படியுங்கள், அதற்குறிய விடை உங்களுக்குத் தெரியவரும்! மொத்தம் 10,000 வகையான எறும்புகள் உள்ளன. இவை 100 மில்லியன் ஆண்டுகளாக எமது புவியில் வாழ்ந்து வருகின்றன. இவை இப்படி அதிக ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன என்றால் அதற்குக் காரணம் இவற்றின் பகிர்ந்துண்ணும் பண்பு தான், அதாவது இவை ஒன்றாக ஒரே காலனிகளில் வசித்து, அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து உழைப்பதால், எல்லா எறும்புகளுக்கும் தேவையான இரை கிடைத்துவிடுகிறது. அதனால் இவை இரையினைப் பகிர்ந்துகொள்ள முடிகி…
-
- 1 reply
- 519 views
-
-
பெரும்பாலோனர் மத்தியில் அனலிடிக்ஸ் குறித்து ஒரு பிரம்மாண்டமான எண்ணம் இருக்கின்றது. அனலிடிக்ஸ் ஒரு மேஜிக்கான விஷயம் - கிட்டத்தட்ட அலாவுதீனின் அற்புத விளக்கைப்போன்ற ஒரு விஷயம். அதை உபயோகித்தால் நினைத்த காரியம் அனைத்திலும் ஜெயமே! எனவே, எப்பாடுபட்டாவது அனலிடிக்ஸ்தனை நம்முடைய கம்பெனிக்குள் நடைமுறைக்கு கொண்டுவந்துவிடும் பட்சத்தில் பணம் கொட்டோகொட்டு என்று கொட்டிவிடும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு தவறான நினைப்பே! முதலில் ஒரு பிசினஸ் அனலிடிக்ஸை உபயோகித்து என்னென்ன விஷயங்களை அறிந்துகொள்ள முடியும் என்பதை நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிசினஸின் ரிஸ்க்குகள், பிசினஸில் இருக்கும் வாய்ப்புகள், பிசினஸ் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் ஏமாற்று வேலைகள் மற்றும் நம்முடைய பிசினஸ் தரும் பொர…
-
- 0 replies
- 399 views
-
-
நாம் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எஸ்பிரஸ், பறக்கும் ரயில் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் நிஜமாகவே ஒலியை விட வேகமாக ஓடும் ஒரு ரயிலை எலான் மஸ்க் (Elon Musk) வடிவமைத்து இருக்கிறார். இந்த ரயில் நீர், நிலம், ஆகாயம் என இப்போது இருக்கும் போக்குவரத்து வசதிகளின் இன்னொரு பரிமாணத்தைப் பிடிக்கும் என எதிர்பார்கிறார் மஸ்க். ஒரு மணி நேரத்துக்கு 750 கிலோ மீட்டர் வேகம் என்பது வேகமோ வேகம். இது அதி வேகத்துக்குப் பெயர் பெற்ற புல்லட் ரயிலைவிட, மூன்று மடங்கு வேகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஹைப்பர் லூப் ரயிலில் பயணிப்பவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ வரையிலான 360 கிலோமீட்டர் தூரத்தை ஜஸ்ட் 30 நிமிடங்களில் அடைந்து விடலாம் என்றால் ரயிலின் வேகத்தை …
-
- 1 reply
- 633 views
-
-
விண்வெளி பயணத்தில் ஒளியை மிஞ்ச முடியுமா? – லட்சுமி கணபதி பயணம் மனிதனுக்கு பயணம் அவசியமானது. ஆதி மனிதன் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் நடை பயணம் மூலமாகவே சென்று சேர்ந்தான். பயணப்பட பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய ஆதாரத் தேவைகளில் ஒன்று “உறைவிடம்”. இந்த உறைவிடத் தேடல் நமக்கு பூமியில் மட்டுமில்லாது நமது பிரபஞ்சம் நோக்கியும் திரும்பியது என்னவோ சென்ற நூற்றாண்டில் தான். நமது பிரபஞ்சத்தின் பல நட்சத்திரத் திரள்களையும், விண்மீன்களையும் அவற்றைச் சுற்றி வரும் கோள்களையும் நோக்கிப் பயணம் செய்ய அறிவியல் உலகம் பல முயற்சிகளை எடுத்தது. நிலவில் மனிதனை இறக்கிய பின் மனித குலம் இந்த தேடுதலை உற்சாகத்துடன் தொடர்ந்தது. நமது சூரிய குடும்பத்தில் …
-
- 2 replies
- 800 views
-
-
இருபதாம் நூற்றாண்டின் பத்து இணையற்ற பிசினஸ்மேன்களைப் பற்றிய பட்டியல் போட்டால், அவற்றில் நிச்சயமாக இடம் பிடிப்பவர் ஸ்டீவ் ஜாப்ஸ். கம்ப்யூட்டர் பயன்படுத்தல் ராக்கெட் சயின்ஸ் அல்ல, சாதாரண மனிதனுக்கும் கைவரும் கலை என்று பயன்படுத்தலை எளிமைப்படுத்தியவர். ஐ பாட் (iPod), ஐ போன், ஐ பேட் (iPad) என வகை வகையான அழகு கொஞ்சும் தயாரிப்புகளை உருவாக்கி, மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்து, எல்லாத் தயாரிப்புகளையும் மாபெரும் விற்பனை அடைய வைத்தவர். கண்டுபிடிப்புத் திறமை, தொலை நோக்கு, அழகுணர்வு, வடிவமைப்பு நுணுக்கம், தான் விரும்பியது கிடைக்கும்வரை சமரசமே செய்யாத கச்சிதப் போக்கு என ஸ்டீவ் ஜாப்ஸின் புகழ் பல பரிமாணங்களில் ஜொலிக்கிறது. இது மட்டுமா? டீல்கள் முடிப்பதில் அவர் மன்னன். 2000 கால கட்டம்…
-
- 0 replies
- 588 views
-
-
‘இது கூடத் தெரியாதா உனக்கு? போய் கூகுள் பண்ணுப்பா’ என்று அறிவுறுத்துகிற புதிய வழக்கு உருவாகிவிட்டது. தேடுதல் என்ற வார்த்தைக்குச் சமமாக இன்று கூகுள் என்ற இணையத் தேடுபொறி மாறிவிட்டது. 2006 -ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியிலும் அந்தச் சொல் சேர்ந்து விட்டது. கூகுள் சாம்ராஜ்யம் எந்த ஒரு விசயத்தைப் பற்றி நாம் கேட்டாலும் அதனை கோடிக்கணக்கான இணையதளங்கள் செயல்படுகிற கணினிகளில் இருந்து தேடி எடுக்கிறது கூகுள். நல்லது,கெட்டது,சரி,தவறு எல்லாவற்றையும் நம்முன் படைக்கிறது. அதிலிருந்து அன்னப்பறவை போல உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய இணைய உலகில் கூகுள் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதார தகவல் மையங்களை அது வைத…
-
- 0 replies
- 685 views
-
-
சின்ன மீனை போட்டால் பெரிய மீனை பிடிக்கலாம் கீழே கிடந்தால் செங்கற்கள்; எடுத்து அழகாக அடுக்கினால் சுவர். சின்ன சின்ன வேலைகளை சேர்த்து செய்தால் அருமையான கட்டிடம். மேலே சொன்ன வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. சிறிய செயல்களை சரி வர செய்தால் பெரிய செயல்கள் தானே நேரும் என்ற கொள்கையின் அடிப்படையில் டான் காபோர் எழுதிய புத்தகம் இது. சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி கொள்வதற்கு முதலில் மனதளவில் விருப்பம் இருக்க வேண்டும். ஒரு நிகழ்வை நீங்களே நினைத்து பாருங்கள். ஒரு கூட்டத்தில் அல்லது ஒரு வகுப்பில் நீங்கள் சென்று அமர்ந்த பிறகு உங்களை யாராவது வேறு இடத்துக்கு மாறி உட்காரும்படி சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?. இதே நிகழ்வை நான் ஒரு வகுப்பில் கூறிய பொழுது பாதிக்கு மே…
-
- 1 reply
- 616 views
-
-
இந்தியாவின் "செவ்வாய் கிரகப் பிரவேசத்திற்கு" இன்னும் 2 நாட்களே.... பெங்களூர்: உலகமே இந்தியா மீது தனது கவனத்தை முழுமையாக திருப்பியுள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியா அனுப்பியுள்ள மங்கள்யான் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரக ஆய்வு விண்கலம், இன்னும் 2 நாட்களில் அதாவது செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் பிரவேசிக்கவுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய சாதனையாகும். அதை விட முக்கியமாக, சீனாவை இந்த விஷயத்தில் இந்தியா தோற்கடிக்கப் போகிறது என்பதுதான். எப்படி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தரை மார்க்கத்தில் கடும் போட்டி நிலவுகிறதோ அதேபோல விண்வெளிக்கு அப்பாலும் இரு நாடுகளும் கடுமையான போரில் ஈடுபட்டுக் கொண்டுள்ளன. அதில் தற்போ…
-
- 21 replies
- 1.8k views
-
-
1. வாசிப்பு மொழி வளத்தை அதிகரிப்பதால் சரளமாக பேசுவதற்கு உதவும். என்னுடைய வகுப்பில் பல மாணவர்கள் தமிழில் கூட நினைத்ததை சொல்ல முடியாது திணறுவதை பார்க்கிறேன். ஆனால் வாசிப்பு பழக்கம் உள்ள மாணவர்கள் சரளமாக தன்னம்பிக்கையாக பேசுகிறார்கள். 2. மொழியின் இயக்கம் ஒரு தர்க்கத்தை சார்ந்து இருக்கிறது. நன்றாக வாசிக்கிறவர்கள் எந்த துறை பற்றியும் புத்திசாலித்தனமாக எதையாவது பேசுவார்கள். இது வாசிப்பு தரும் தர்க்க அறிவினால் வருவது. 3. உரைநடை வாசிப்பை நான் ஒரு உரையாடலாக பார்க்கிறேன். உதாரணமாக நல்ல கட்டுரைகளை அதிலுள்ள கருத்துக்களுடன் மனதளவில் வாதிட்டபடியே தான் படிக்க முடியும். இது வாதத் திறனையும் அதிகப்படுத்தும். இன்னொரு பக்கம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். 4. புனைவு வாசிப்பு நம்…
-
- 0 replies
- 396 views
-
-
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் குரியன்ஜோசப், 50. பி.ஏ., பட்டதாரியான இவர், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 35 ஏக்கர் செம்மண் தரிசு நிலத்தை வாங்கினார். மெயின் ரோட்டில் இருந்து இங்கு செல்லவே 5 கி.மீ., நடக்க வேண்டும். மலையடிவாரத்தின் முதல் நிலம் இதுதான். ரசாயன கலப்பு இல்லாமல், இயற்கை முறையில் பழங்கள் சாகுபடி செய்து உலக மார்க்கெட்டில் விற்பனை செய்வதே இவரது லட்சியம். இதற்காகவே இவர், ரசாயனம் எந்த வகையிலும் எட்டிப்பார்க்காத நிலத்தை தேர்வு செய்தார். அந்த நிலம் கடினமான கற்கள் நிறைந்த செம்மண் பூமியாக இருந்தது. அதனை பற்றி கவலைப்படவில்லை. எளிதாக கிடைத்த சான்று: அங்கு ""ஹார்வஸ்ட் பிரஷ்'' என பெயரிட்டு பழப்பண்ணை அமைத்தார். முதலி…
-
- 0 replies
- 2.7k views
-
-
வணக்கம் தொழில் நுட்ப அறிவு சார்ந்த நண்பர்களே . எனது கம்போர்சிங் ,இசை அமைப்பு ஆகியவற்றிற்கு CUBASE 5 என்னும் மென்பொருளை பாவித்து வருகிறேன் .தற்போது ஓடியோ ஒலிப்பதிவிற்கு மட்டுமல்ல வீடியோ ஒளிபபதிவிற்கு கூட அதை பயன்படுத்தும் வழி கண்டு ஆனந்தமடைந்தேன் .மிக இலகுவாக வீடியோ காட்சிக்கான இசையினை வழங்க கூடியதாய் உள்ளது .........நானாகேவே இந்த விடயத்தை கண்டு பிடித்தேன் ..ஆனால் வீடியோ இசை முடிந்தபின் அதை வீடியோ காட்சியுடன் சேர்த்து மிக்ஸ் டௌன் [mixdown ] செய்ய முயற்சித்துப்பார்த்தேன் ..முடியவில்லை .ஓடியோ மட்டுமே மிக்ஸ்டவுன் ஆகுது .இது சம்பந்தமாக யாருக்காவது தெரிந்திருந்தால் அறியத்தாருங்கள் நன்றி .
-
- 1 reply
- 652 views
-