அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
கம்பியில்லா முறையில் மின்சாதனங்களுக்கு மின்இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில், “மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் ஒயர் (கம்பி) இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும். மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அ…
-
- 2 replies
- 712 views
-
-
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று தெரியுமா? உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆண்டு வருமானம் பற்றி பலருக்கு தெரியும். காலாண்டு வருமானம் பற்றி கணக்கு வைத்திருப்பவர்களும் உண்டு. இந்நிலையில் அந்த நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?. இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். பிளாக்பெர்ரி நிறுவனம் நொடிக்கு ரூ.12,797 வருமானம் ஈட்டுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மத்தியிலும் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக் நிறுவனம் விநாடிக்கு ரூ.14,360 சம்பாதிக்கிறது. செல்போன் தயாரிப்பாளரான நோக்கியா விநாடிக்கு ரூ. 58,754 வருவாய் பெறுகிறது. ஐடி ஜாம்பவானான ஆரக்கிள் நிறுவனத்தின் ஒரு நொடிக்…
-
- 7 replies
- 899 views
-
-
சூரியனின் மத்திய பகுதியிலிருந்து கடந்த 7-ம் தேதி மிகப்பெரிய அளவிலான ஒளிக்கற்றைகள் பீய்ச்சி அடிக்கப்பட்டன. சூரியன் உமிழ்ந்த இந்த கிளரொளிக் காட்சிகளை நாசாவின் சோலார் டைனமிக் ஆய்வகம் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். 1944 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிளரொளியானது கடந்த பத்து வருடங்களில் காணப்படாத மிகப்பெரிய ஒன்று என்றும் நாசா கூறியுள்ளது. இந்த கிளரொளிக் காட்சியின் போது சக்திவாய்ந்த கதிர்கள் சூரியனிலிருந்து வெடித்து சிதறுகின்றன. இவ்வாறு வெடித்து சிதறிவரும் மனிதனுக்கு தீங்கிழைக்கூடிய கதிர்வீச்சுகள் பூமியின் காற்றுமண்டலத்திற்குள் நுழையமுடியாது. ஆனால் இது பூமிக்கு அருகில் செயல்பட்டு கொண்டிருக்கும் நமது தகவல் தொடர்பு சாதனங்களையும், செயற்கை கோள்களுக்கும் தீங்கிழைக்கக்கூடும். ம…
-
- 0 replies
- 490 views
-
-
-
- 15 replies
- 937 views
-
-
விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது, கடந்த மாதம் 29-ம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளது. 2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்து செல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படம் பிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது. 650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு, வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து …
-
- 0 replies
- 408 views
-
-
இங்கிலாந்தில் உள்ள விண்வெளி இயற்பியல் நிபுணர்கள் நாசாவின் ஹெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்கள் மற்றும் போட்டோக்களின் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். அதன் மூலம் பூமியின் இரட்டை வாயு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளன. அவற்றுக்கு ‘கே.ஓ.ஐ–314சி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகங்களின் விட்டம் பூமியை விட 60 சதவீதம் பெரியதாக உள்ளன. இந்த கிரகங்களில் பல நூறு மைல் சுற்றளவுக்கு நைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் சூழந்துள்ளன. அதனால் இவை எடையின்றி மிகவும் லேசாக உள்ளன. ஆனால் மிகவும் தடிமனான அளவில் இக்கிரகங்கள் உள்ளன. இங்கு எப்போதும் 104 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. அது உயிரினங்கள் வாழ தருதியற்ற தட்ப வெப்ப நிலையாகும். …
-
- 0 replies
- 380 views
-
-
தாவரங்கள் பாடும் பாடல் – புதிய கண்டுபிடிப்பு தாவரங்கள் எழுப்பும் ஒலியையும் மேலும் நாம் அவற்றோடு தொடர்பு கொள்ளும் பொழுது அவை எழுப்பும் ஒலியில் ஏற்படும் மாற்றத்தையும் பதிவு செய்து நிரூபித்துள்ளார் வால்ட் டிஸ்னியின் பிரபல விஞ்ஞானி இவான் போப்ரேவ். மொபைல் மற்றும் டேப்லெட்டுகளில் உள்ள டச் ஸ்க்ரீன்களுக்கு இருக்கும் தொடு உணர்ச்சி பற்றிய துறையின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியுள்ள பிரபலமான கணிப்பொறியியல் பேராசிரியரான இவான் போப்ரேவ், கார்னிக் மெல்லன் பல்கலைக்கழகத்தின் பிட்ஸ்பர்க் வளாகத்தில் இயங்கும் வால்ட் டிஸ்னி கம்பனியின் தலைமை ஆராய்ச்சி விஞ்ஞானி ஆவார். சென்ஸார்களின் பயன்பாடுகளை ஆராயும் ஒரு முயற்சியில் தாவரங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என உயிரியல் கண்ணோட்டம் இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
பள்ளிக்கூட மாணவர்கள் உருவாக்கிய சாட்டிலைட்டை விண்வெளிக்கு செலுத்திய நாசா நேற்றிரவு விர்ஜினியாவின் ஒரு தீவிலிருந்து நாசாவின் ராக்கெட் ஒன்று 29 சாட்டிலைட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதில் ஒன்று அம்மாகாணத்தின் ஒரு பள்ளிக்கூட மாணவர்களால் உருவாக்கப்பட்ட சாட்டிலைட் ஆகும் TJ3Sat என்றழைக்கப்படும் இந்த சாட்டிலைட்டே மாணவர்களால் உருவாக்கப்பட்டு விண்ணில் உலா வரும் முதல் சாட்டிலைட் ஆகும். இப்பொழுதே சற்று வெளியில் சென்று ஒரு சிற்றலை ரேடியோவில் 437.320 MHz என்ற அலைவரிசையில் இந்த சாட்டிலைட்டின் ஒலிபரப்பை நீங்கள் கேட்க இயலும். மாணவர்களையும் ஆசிரியர்களையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சாட்டிலைட் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள தாமஸ் ஜெஃப்ஃபர்…
-
- 0 replies
- 555 views
-
-
இன்னும் சில நிமிடங்களில், விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-டி5 ஸ்ரீஹரிகோட்டா: 2010ம் ஆண்டு இரண்டு முறை தோல்வியடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதுமான ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் இன்று விண்ணில் பாயத் தயாராகியுள்ளது. ஜிஎஸ்எல்வி டி5 ஏவப்படுவதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் டென்ஷனாக காத்துள்ளனர். இதன் கவுண்ட்டவுன் நேற்றே தொடங்கி விட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.18 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படவுள்ளது. இதுவரை அனைத்தும் பிரச்சினையில்லாமல் போய்க் கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் எந்திரம் பொருத்தப்பட்டது இந்த ஜி…
-
- 5 replies
- 673 views
-
-
மனிதர்களை மேலும் சோம்பேறிகளாக்கும் தொழில் நுட்பம் wi see
-
- 0 replies
- 592 views
-
-
சர்க்கரை – தித்திப்பும் கசப்பும் எம்.ஆர். ராஜ கோபாலன் சர்க்கரை என்கிற சொல்லைக் கேட்கும்போதே நம்மில் பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். நாம் சாப்பிடக்கூடிய இனிப்பான பண்டங்களையும், சாக்லேட்களையும், ஷர்பத் போன்ற குளிர் பானங்களையும் நினைவுபடுத்திக் கொள்வோம். இந்த சர்க்கரையின் சாத்திரம் பற்றியும் இதனால் விளைந்துள்ள சமுதாய மாற்றங்கள் – மனித இனத்தின் ஆரோக்கியம் எப்படியெல்லாம் பாதிப்படைகிறது என்பதையும் விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பே நியூகினி நாட்டில்தான் முதன் முதலாகக் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. மக்கள் கரும்பை அப்படியே கடித்து, அதன் சாற்றினை உறிஞ்சிவிட்டு சக்கையைத் துப்பி வந்தனர். அக்காலகட்டத்திலேயே கரும்பு ஒரு சர்வரோக சஞ்சீவினியாக…
-
- 1 reply
- 580 views
-
-
-
- 0 replies
- 680 views
-
-
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாப நோக்கின்றி செயல்படும் மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமான மனிதக் குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு குடியேற 62 பேர் இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விருப்பமுள்ள ஆர்வலர்களுக்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதற்கு பதில் அளித்து 140 நாடுகளில் இருந்து 2,00,000 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர். இவர்களில் இருந்து ஸ்பேஸ்.காம் அமைப்பு 1,058 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் 297 பேர் அமெரிக்காவிலிருந்தும், 75 பேர் கனடாவிலிருந்தும், 62 பேர் இந்தியாவிலிருந்தும், 52 பேர் ரஷ்யா…
-
- 1 reply
- 478 views
-
-
நாம் அனேகமா பிரபல hollywood Predators படம் பார்திருப்பம் ஆனால் தற்போது உன்மையாகியுள்ளது மனிதர்களை மறையபன்னும் உடுப்பை us சேர்ந்த Bill Jordan,எனும் நபர் ஒருவர் வித்தியாசமான பச்சோந்தி இராணுவ சீருடைகளை உருவாக்கியிருக்கிறார். அதாவது இவர் உருவாக்கியுள்ள இராணுவச் சீருடைகள் அந்தந்த வனப்பகுதிகள், காலநிலைக்கு ஏற்றது போல் மிகவும் நுணுக்கமான அதே வடிவம், நிறத்துடன், வடிவமைக்கப்பட்டுள்ளன. A hunter has created a new range of camouflage gear which is so effective the wearer blends perfectly into the scenery, just like a real-life Predator from the Hollywood films. In terrifying news for unsuspecting fauna, American company Realtree has launched the latest in a line of state-of-th…
-
- 5 replies
- 5.4k views
-
-
How to save the world(One Man,One Cow,One Planet) http://youtu.be/_uhVUbABCpI
-
- 0 replies
- 597 views
-
-
பெங்களுருவில் பார்கிங் என்பது மிகவும் கடினமாகி வருகிறது, அங்கு மட்டுமா... உலகில் எல்லா இடத்திலும்தான். பார்கிங் தேடி அலைவதிலேயே பாதி பெட்ரோல் காலியாகிவிடும். இன்று பெட்ரோல் விற்கும் விலையில் இப்படி செலவழிக்க முடியுமா ? ஒவ்வொரு துளி பெட்ரோலும் இன்று பூமியை பாதுகாக்கும் இல்லையா..... அதற்க்கு தென்கொரியாவில் ஒரு புதிய ஐடியா கண்டு பிடித்து இருக்கிறார்கள். சிங்கப்பூரில் பார்கிங் என்பது மிகவும் கஷ்டம், அங்கு எல்லா ஷாப்பிங் மால்களிலும் கார் நிற்கும் இடத்தின் மேலே ஒரு சென்சார் இருக்கும். ஒரு லாட் ப்ரீ என்றால் நீங்கள் உள்ளே நுழையும் முன் இடம் இருக்கிறதா என்று காட்டும். தென் கொரியாவின் டெக்னாலஜி முன் இதை பார்க்கும்போது ரஷ்யர்கள் நிலவுக்கு செல்லும்போது பென்சில் உபயோகித்த கதைதா…
-
- 2 replies
- 695 views
-
-
லண்டனில் தேவையற்ற கெட்ட நினைவுகளை நீக்கும் மின் அதிர்வு சிகிச்சையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்தில் உள்ள நிஜ்மெகன் ராட்பட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, மார்ஜின் குரோஸ் மற்றும் அவரது சகாக்கள் இணைந்து, மின் அதிர்வு சிகிச்சையின் மூலம், தேவையற்ற நினைவுகளை நீக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். நினைவுகள் நிரந்தரமானதல்ல என்பதன் அடிப்படையிலும், நினைவுகளை நிரந்தரமாக வைக்க மூளை சேமிப்பு பெட்டியல்ல என்பதன் அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எலக்ரோகன்வல்சிவ் (இசிடி) என்னும் மின் அதிர்ச்சி சிகிச்சையில், நோயாளியின் தலையில் மின் பட்டைகளை பொருத்தி, மின்சாரம் மூளைக்கு செலுத்தப்படுகிறது. இதற்காக, 42 பேருக்கு மின் அதிர்வு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; கார் விபத்…
-
- 2 replies
- 599 views
-
-
டேப்லட், ஸ்மார்ட் கைப்பேசிகள் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Octafire எனப்படும் இச்சாதனம் 100-240V, 47-63Hz மின்சாரத்தில் செயற்படக்கூடியதாகவும், 2.1A / 5V வெளியிடக்கூடியதாகவும் காணப்படுகின்றது. இதன் மூலம் அதிகபட்சமாக 8 வெவ்வேறு வகையான மொபைல்களை சார்ஜ் செய்ய முடியும். http://www.seithy.com/breifNews.php?newsID=100084&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 346 views
-
-
சூரிய மண்டலத்துக்கு வெளியே மிகப் பெரிய சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரேடேம் பல்கலைக்கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.சக்தி வாய்ந்த டெலஸ் கோப்புகள் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது பூமியில் உள்ள சந்திரனை விட 70 மடங்கு அதிக வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது. இது வியாழன் கிரகத்தை விட 4 மடங்கு பெரியதாகவும், பூமியை விட அரை மடங்கு அளவும், நமது சந்திரனை விட பல மடங்கு பெரியதாகவும் உள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=99810&category=WorldNews&language=tamil
-
- 11 replies
- 853 views
-
-
அறிவியலில் சிக்கலான பல விதிகள் இருப்பது தெரியும்.அவை குறிப்பிட்ட பொருள் அல்லது விளைவிற்கு தான் பயன்படும்.வாழ்க்கையின் பல நிகழ்வுகளில் பொருந்தக்கூடிய ஒரு எளிய சுவாரஸ்யமான விதி ஒன்று உள்ளது அதை பற்றி தெரியுமா?. 80:20 என்பது தான் அந்த விதி.அதாவது இந்த விதிப்படி பொதுவாக 80 சதவீத விளைவுகள் 20 சதவீத காரணங்களால் ஏற்படுகின்றன.இந்த விதிக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஒரு கம்பெனியின் 80 சதவீத லாபம் 20 சதவீத வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் வருகின்றது. இந்த விதியை வெளியிட்டவர் இத்தாலியை சேர்ந்த பொருளாதார வல்லுநர் வில்ப்ரெட் பேரட்டோ.1906 ஆம் ஆண்டு இத்தாலியில் 80 சதவீத நிலங்கள் 20 சதவீத மக்களிடம் இருப்பதை பேரட்டோ கண்டார். அதே போல் அவரது பட்டாணி தோட்டத்தில் 80 சதவீத பட்டாணி விள…
-
- 3 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வியாழன் கிரகத்தை நோக்கி ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியது. ஆனால் அந்த விண்கலம் வியாழனை நோக்கிப் பாதி தூரம் சென்று விட்டு மேற்கொண்டு செல்லாமல் பூமியை நோக்கித் திரும்பியது இது குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில் அந்த விண்கலம் பூமியை நோக்கித் திரும்பிவரும் என்று அவர்களுக்குத் தெரியும் அப்படி பூமி நோக்கித் திரும்பும்படி ஏற்பாடு செய்ததே அவர்கள் தான். அது ஏன்? ஜூனோ விண்கலம் அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து உயரே செலுத்தப்பட்ட போது அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வியாழனை நோக்கிக் கிளம்பியது. ஜூனோ விண்கலம். அதன் பி…
-
- 0 replies
- 777 views
-
-
வியாழன் கிரகத்தின் பனி நிறைந்த துணைக் கிரகமான யூரோப்பாவில் உயிர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இருப்பதற்கான மேலும் ஆதாரங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் கண்ணாடி மூலம் பிரதிபலிக்கும் தொலைநோக்கி ஒன்றின் பிம்பங்களில் காணப்பட்ட, யூரோப்பாவின் படங்களில், அதன் மேற்பரப்பில் காணப்படுகின்ற தண்ணீர் தெறிப்புகள், அங்கு நுண்ணிய உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதற்கான ஒரு சமிக்ஞையாகும். சான்பிரான்ஸிக்கோவின், ''அமெரிக்க ஜியோபிசிக்கல் யூனியனின்'' வருடாந்த மாநாட்டில் இந்தக் கண்டுபிடிப்பு குறித்த தகவல் அறிக்கையிடப்பட்டது. ஆகவே யூரோப்பாவுக்கு பயணித்து ஆராய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார…
-
- 3 replies
- 756 views
-
-
சிவப்பு கிரகமான செவ்வாயில் நிரந்தரமாக குடியேற உலகம் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் 20,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தைச் சேர்ந்த, ‘மார்ஸ் ஒன்’ என்ற அமைப்பு செவ்வாய் கிரகத்துக்கு 2023ம் ஆண்டில் மனிதர்களை குடியேற்றப்போவதாக கூறி வருகிறது. இதற்காக 2018ம் ஆண்டில், ரோபோவை அனுப்பி வைக்கப்போவதாகவும் அது தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான குடியிருப்புகளை அமைக்கப் போவதாகவும், அங்கு சென்று தங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சமீபத்தில் அது அறிவிப்பு வெளியிட்டது. இந்த விண்ணப்பத்துக்கான இறுதி நாள் நேற்றுடன் முடிந்தது. விண்ணப்பங்கள் குறித்து அந்நிறுவனத்தினர் கூறியதாவது: செவ்வாய் …
-
- 10 replies
- 883 views
-
-
மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய செயற்கை கரத்தை பொருத்திக் கொண்ட முதலாவது பிரித்தானியர் என்ற பெயரை ஆப்கானிஸ்தானில் சேவையாற்றும் போது தாக்குதலுக்கு இலக்காகி கையொன்றை இழந்த அந்நாட்டு படைவீரர் பெறுகின்றார். தென் ரைனிசைட்டைச் சேர்ந்த அன்ட்றூகார்த்வெயிட் என்ற மேற்படி நபர் ஆப்கானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் பணியாற்றிய வேளை தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளாகி கையொன்றை இழந்தார். இந்நிலையில் அவருக்கு ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மேற்படி மனதால் செயற்படுத்தக்கூடிய செயற்கை கரத்தை பொருத்தியுள்ளனர். மேற்படி அறுவைச்சிகிச்சைக்கு 7 மணித்தியால நேரம் செலவிடப்பட்டுள்ளது. அன்ட்றூ தனது செயற்கை கரத்தை எவ்வாறு அசைப்பது என நினைக்கும் போது அவரது மூளைய…
-
- 0 replies
- 423 views
-
-
தமது பாலியல் இச்சையை தீர்க்க முடியாத ஆண் ஈக்கள் அற்பாயுசில் இறக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க ஆய்வாளர்கள் செய்த பரிசோதனைகளின் முடிவில், பாலியல் இச்சை தூண்டப்பட்டு, ஆனால் பாலியல் கலவியில் ஈடுபடமுடியாமல்போன ஆண் ஈக்களின் ஆயுள்காலம் 40 சதவீதம் குறைவதாக தெரியவந்திருக்கிறது. மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆப் சயன்ஸ் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. சாதாரணமாக வீடுகளில் காணப்படும் வீட்டு ஈக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது, விஞ்ஞானிகள் பெண் ஈக்களின் ஹார்மோன்களை செயற்கையாக ஆண் ஈக்கள் மத்தியில் பரவச்செய்தனர். அந்த ஹார்மோன்களால் தூண்டப்பட்ட ஆண் ஈக்கள் கலவிக்காக…
-
- 0 replies
- 1.2k views
-