செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
சமூக வலைத்தள மோகம் – மூக்கில் பாம்பிடம் கடி வாங்கிய இளம் பெண். சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்கள் வாழ்வில் நடைபெறும் செயல்களை வீடியோ எடுத்து பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவை சேர்ந்த ஷ்கோடலேரா என்ற இளம்பெண் பாம்பை கையில் வைத்து விளையாடிய காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவர் கையில் பாம்பை பிடித்து கொண்டு போஸ் கொடுப்பது போன்று வீடியோ தொடங்குகிறது. உற்சாகமிகுதியில் ஷ்கோடலேரா பாம்பை மேலே தூக்கிய போது திடீரென பாம்பு அவரின் மூக்கை கடித்தது. இதனால் வலியில் துடித்த ஷ்கோடலேரா பாம்பை தரையில் வைத்துவிட்டு தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. நெட்டிசன…
-
-
- 2 replies
- 357 views
- 1 follower
-
-
சிறையில் உள்ள கணவருக்கு ஜஸ் போதைப் பொருளைக் கொடுக்க முயன்ற மனைவி கைது! மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருட்களுடன் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்துக் கொடுக்க முயன்ற 27 வயதுடை பெண்ணை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை பார்ப்பதற்காக வருகை தந்திருந்த மனைவியே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொண்டுவந்திருந்த உணவுப் பொருளை சோதனையிட்ட போதே அதில் ஐஸ் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. இந்நிலையில் குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவட…
-
- 2 replies
- 215 views
-
-
அதிகாரிகளின் வீடுகளில், இனி போலீஸார் துணி துவைக்கக் கூடாது... டிஜிபி அதிரடி உத்தரவு. சென்னை: போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் காவலர்களை மீண்டும் போலீஸ் பணிக்கு அனுப்ப டிஜிபி அசோக் குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஏராளமான போலீஸார் தற்போது வீட்டு வேலை செய்து வருகின்றனர். காவலர்களான அவர்கள் வேலைக்காரர்கள் ரேஞ்சுக்கு நடத்தப்படுகின்றனர். காய்கறி வாங்குவது, நாயைக் குளிப்பாட்டுவது, தோட்டை வேலை பார்ப்பது, துணி துவைப்பது என்று பல வீட்டு வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர். நன்றி தற்ஸ் தமிழ்.
-
- 2 replies
- 1.3k views
-
-
நைஜரிலிருந்து சுமார் 80 ஆயிரம் பேர் சஹாரா பாலைவனத்தைக் கடக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது நைஜரில் சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது, இடைநடுவில் வாகனம் பழுதடைந்த காரணத்தால் குடிக்க நீரின்றி தாகத்தால் உயிரிழந்த 87 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக நைஜரிலுள்ள மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். சடலங்கள் பாலைவன ஓநாய்களால் குதறப்பட்டு, அழுகி உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். கேட்க02:18 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை இவ்வாறு பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது. நைஜரின் ஆர்லிட் நகரிலிருந்து செப்டெம்பரின் கடைசி அல்லது அக்டோபரின் தொடக்கத்தில் இவர்கள் புறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சஹ…
-
- 2 replies
- 454 views
-
-
மானிப்பாயில் வன்முறைக் கும்பல் அட்டகாசம்..! யாழ்ப்பாணம், மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம் வன்முறைக்கும்பல் ஒன்று அட்டகாசும் புரிந்துள்ளது . மானிப்பாய் கிறீன் மெமோறியல் வைத்தியசாலையின் பின்புற வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நான்கு உந்துருளிகளில் வருகைதந்த வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துமீறி வீட்டினுள் புகுந்து வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஹயஸ் ரக வாகனங்களை அடித்து சேதப்படுத்தியதோடு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கி, வீட்டின் முன்புற கதவின் தகரத்தின் மீதும் வாளால் வெட்டிய நிலையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதலும் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்…
-
- 2 replies
- 317 views
-
-
ஆற்றில் குளித்ததை படம் எடுத்த வாலிபரை, மாணவிகள் அடித்து துவைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த மாணவிகள் சிலர் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினத்துக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர். இதனை ஒரு வாலிபர் மரத்தில் மறைந்து இருந்து தனது செல்போனில ஆபாச கோணத்தில் படம் எடுத்துள்ளார். மேலும், ஆற்றில் குளித்துவிட்டு ஒரு மாணவி மரத்தின் மறைவிடத்தில் உடை மாற்றி இருக்கிறார். அதையும் அந்த வாலிபர் படம் பிடித்து உள்ளார். அப்போது, இதை அந்த மாணவி எதேச்சையாக பார்த்திருக்கிறார். உடனே அந்த மாணவி கூச்சல் போட்டுள்ளார். அதிர்ச்சியில் அந்த மாணவி போட்ட கூச்சலை, அந்த கிராம மக்களும் மற்ற மாணவிகளும் கேட்…
-
- 2 replies
- 561 views
-
-
மீண்டும் பாம்புடன் இரவு நாயகி கொள்ளுப்பிட்டியிலுள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில் நாகபாம்புடன் நடனமாடிய யுவதியிடமிருந்து மீட்கப்பட்ட பாம்பு மீண்டும் அப் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை யுவதி ஒருவர் நாகபாம்புடன் நடனமாடிக்கொண்டு இரவு களியாட்ட விடுதியில் இருக்கின்ற ஏனையோரை அச்சம்கொள்ளச் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து களியாட்டவிடுதிக்குச் சென்ற பொலிஸார் யுவதியைக் கைதுசெய்ததுடன் பாம்பையும் பிடித்துச்சென்றனர். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டபோது போதையில் இருந்த குறித்த யுவதி மயங்கிவிழுந்தார். இதனையடுத்து அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். எனினும் அவர் போதையில் இருந்தமையினால் பாம்பின் விஷம் …
-
- 2 replies
- 547 views
-
-
-
தலை வழுக்கைக்கு முடிவா? ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் ஒரு வித மரபணு சிகிச்சை மூலம் எலிகளில் மயிர் வளர்க்கப்பட்டுள்ளது. மனிதர்களிலும் சாத்தியமாகுமா? Researchers successfully grow hair on bald mouse: Humans next? Great news for bald men men and women: Scientists in Japan have successfully regrown hair on a bald mouse. Even though the technological advancement only happened on a rodent, this new development may mean that humans could look forward to a hair-filled future. Not only were Japanese scientists able to regrow hair in the study, which was published April 17 in Nature Communications, but they were able to manipulate the de…
-
- 2 replies
- 546 views
-
-
75 ஆண்டுகளுக்கு முன் மாயமான அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2ம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பேர்ல் (Pearl) துறைமுகத்தில் ஜப்பான் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்து 500 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஜப்பான் மீது தாக்குதல் நடத்துவதற்காக 80 பேருடன் யுஎஸ்எஸ் கிரேபேக் எஸ்எஸ் 208 என்ற நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது. இறுதியாக அந்தக் கப்பலில் இருந்து கடந்த 1944ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதிக்குப் பின்னர் எந்த சமிக்ஞையும் வராததால் அதனைத் தேடும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது. தற்போது வரை நடந்த இந்தத் தேடுதல் பணியின் விளைவாக ஜப்பானின் ஒஹினாவா கடல் பகுதியில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிக்கிடப…
-
- 2 replies
- 413 views
-
-
வீட்டில்... கஞ்சா செடிகளை வளர்த்து, விற்க... தாய்லாந்து அனுமதி! தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கிய பிறகு, தாய்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து அந்த பயிரை விற்கலாம். தென்கிழக்கு ஆசியாவில், கடுமையான போதைப்பொருள் சட்டங்களுக்கு பெயர் பெற்ற நாடு, அத்தகைய நடவடிக்கையை முதன்முதலில் முன்னெடுத்த நாடாக மாறியுள்ளது. எனினும், பொழுதுபோக்கு பயன்பாடு இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது. உள்ளூர் கஞ்சா வர்த்தகத்தை வளர்ப்பது விவசாயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. இது குடிமக்களுக்கு ஒரு மில்லியன் கஞ்சா நாற்றுகளை வழங்குவதை ஊக்குவிக்கிறது. ‘கஞ்சா மற்றும் கஞ்சா தொழிற்து…
-
- 2 replies
- 470 views
- 1 follower
-
-
அதிர்ஷ்ட குலுக்கலில் பரிசு விழுந்ததை அடுத்து ஒரே நாளில் லட்சாதிபதியானார் துபையில் வசிக்கும் 5 வயது இந்தியச் சிறுவன் ஒருவன். இப்ராஹிம் ஃபகிமுதீன் ஷேக் என்ற அந்தச் சிறுவனுக்கு துபையின் தேசிய கடன் பத்திர கழகத்தின் சார்பில் பரிசுச் சீட்டுக்கான பிப்ரவரி மாத குலுக்கலில் இந்தப் பரிசு விழுந்துள்ளது. இவரது குடும்பம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. இவரது பெயரில் தந்தை ஷேக் கடன் பத்திரக் கழகத்தில் பத்திரங்களை வாங்கியுள்ளார். அவ்வாறு வாங்கியவர்களில் குலுக்கல் முறையில் மாதா மாதம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பெரும் தொகை பரிசாக அளிக்கப்படும். பிப்ரவரி மாத குலுக்கலில் ஃபகிமுதீனுக்கு பரிசு விழுந்துள்ள தகவல் அவரது தந்தைக்கு அந்த நிறுவனத்தால் தொலைபேசியில் சொல்லப்பட்…
-
- 2 replies
- 1k views
-
-
பயிர்செய்கைகளை நாசம் செய்யும் குரங்குகளை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட எம்.பி சுஜித் சஞ்சய பெரேரா அரசுக்கு ஆலோசனை வழங்கினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025 வரவு- செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலைஆலோசனை வழங்கிய அவர் மேலும் பேசுகையில், காட்டு விலங்குகளினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பு நாளாந்தம் தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குரங்குகள் வருடாந்தம் 90 மில்லியன் அளவிலான தேங்காய்களை நாசம் செய்வதாக விவசாயத்துறை அமைச்சு குறிப…
-
-
- 2 replies
- 317 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
2022 ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையால் சான்றளிக்கப்பட்ட வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114 வயதில் செவ்வாய்க்கிழமை காலமானதாக அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். “ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா 114 வயதில் நித்தியத்தை கடந்துவிட்டார்” என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சமூக ஊடக தளமான X இல் தெரிவித்துள்ளார். பெரெஸ் பெப்ரவரி 4, 2022 அன்று உயிருடன் இருக்கும் மிக வயதான மனிதராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார். 2022 நிலவரப்படி 11 குழந்தைகளின் தந்தையான அவருக்கு 41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். விவசாயியான இவர் மே 27, 1909 இல் தச்சிராவில் உள்ள…
-
- 2 replies
- 284 views
- 1 follower
-
-
இக்கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதற்கான பதில் நாம் "உயிர்" என்பதற்கு கொடுக்கும் வரைவிலக்கணத்தில் தங்கியுள்ளது. இப்போது சொல்லக்கூடிய பதில்: "இருக்கு ஆனால் இல்லை".உயிருள்ளவற்றின் பண்புகளையும் உயிரற்றவைகளின் பண்புகளையும் பெற்றுள்ளதால் வைரஸ்கள், இன்றளவும் உயிரியல் வல்லநர்களுக்கு பெரிய புதிராகவே உள்ளன.எனவே வைரஸ்களுக்கு வகைபாட்டியலில் தனி இடம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. மிக நுண்ணிய, இலத்திரனியல் நுண்ணோக்கியினால் (Electron Microscope) மட்டுமே காணக்கூடிய, தொற்றக்கூடிய வேறு உயிருள்ள கலன்களுக்குள் வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் என்று தற்போது வைரஸ்கள் வரையறுக்கப்படுகின்றன.வைரஸ்களின் மிக நுண்ணிய அளவின் காரணமாக அவைகளைப் பற்றிய அறிவு உயிரியல் வல்லுநர்களுக்கு நீண்ட காலமாக இல்லாமலேயே இ…
-
- 2 replies
- 918 views
-
-
காதலியுடன் செல்பி எடுக்க முற்பட்டவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழப்பு! நெலுவ, தூவிலி எல்லயில் தனது காதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் அங்குள்ள கல் ஒன்றின் மீது ஏறி ´செல்பி´ எடுக்க முற்பட்ட போது கால் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளவத்த பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ரத்னராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் காதலி கொழும்பில் பிரதான வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/காதலியுடன்-செல்பி-எடுக்க/
-
- 2 replies
- 548 views
-
-
அடுத்த சந்ததிக்கு எதை தான் விட்டு செல்கிறோம்??
-
- 2 replies
- 786 views
-
-
சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் மீடியாக்களில் பரபரப்பாக எழுதப்பட்டன. உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை பெரும் பணக்காரர் ஒருவருக்காக, ஆடம்பர வசதிகளுடன் மாற்றப்படுவதாக அந்த தகவல்கள் கூறின. அந்த விமானத்தில் இருந்த வசதிகள், யாருக்காக கட்டப்பட்டது உள்ளிட்ட பல சுவையானத் தகவல்களை ...... ஏர்பஸ் ஏ380 விமானம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. அந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுக்காக கூடுதலாக 200 மில்லியன் டாலர் செலவிட முடிவு செய்யப்பட்டது.இந்த விமானத்தில் வெறும் எக்கானமி கிளாஸ் இருக்கைகளுடன் அமைத்தால் 853 பேர் பயணிக்க முடியும். ஆனால், இந்த விமானத்தை சவூதி இளவரசர் தனத…
-
- 2 replies
- 811 views
-
-
பாடசாலை மாணவர்கள், மாணவிகள் போதை மருந்து பாவனை – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்... அனாமதேய துண்டுப்பிரசுரம். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று ஆவா குழு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “புதுக்குடியிருப்பில் நடந்துகொண்டிருக்கும் சிலதவறுகள் தண்டிக்கப்படவேண்டியவை சில தவறுகள் எமது குழுவினால் கண்டறியப்பட்டுள்ளன. தவறுகள் யாதெனில்.. பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை உடைகள் இன்றி புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அவர்களை வெருட்டி படுக்கைக்கு அழைப்பதும், பணம் பறிப்பதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அறிவுறுத்தியும் யாரும் கருத்தில் கொள்ளவில்லை என்பதால் தற்போது PTK 001 …
-
- 2 replies
- 593 views
- 1 follower
-
-
கனடாவின் ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கோர்ப்பரேஷன் மூலம் கடந்த 6ஆம் திகதி நடத்தப்பட்ட சீட்டிழுப்பின் போது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் ஜெயசிங்க என்பவர் பெருந்தொகை பரிசை பெற்றுள்ளார். அவருக்கு 35 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. தமக்கு வாய்ப்பு வரும் என்று தாம் எப்போதும் நம்பியதாக பரிசு கிடைத்தன் பின்னர் டொராண்டோவில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜெயசிங்க தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத் தொழிலாளியான ஜெயசிங்க, தமது குடும்பத்திற்காக ஒரு புதிய வீட்டை கொள்வனவு செய்யவும், தனது மகளின் கல்விக்கு செலவிடவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/259728
-
- 2 replies
- 423 views
- 1 follower
-
-
கேகாலை, புளத்கொஹுபிட்டியவின் ஊடாகப் பல கிராமங்களுக்குப் பயணிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலமொன்று, இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களால், இரு முறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களாலேயே, இந்தப் பாலம் இரண்டு முறை திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யடியந்ததோட்டை தொகுதி அமைப்பாளரும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஸ்ரீ லால் விக்கிரமசிங்க, பொதுஜன பெரமுனவின் பிரதேச சபையின் உறுப்பினர் அளவததுரே ரதன வங்ஷ தேரர் உள்ளிட்டோர் இவ்வீதியை வெள்ளிக்கிழமை (03) திறந்து வைத்துள்ளனர். இதனையடுத்து நேற்று (04), முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசீம், ஐ.தே.கட்சிய…
-
- 2 replies
- 491 views
-
-
அழிந்து போன நகரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடை கண்டுபிடிப்பு! இத்தாலியிலுள்ள புராதான நகரமான பொம்பேயியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட குறித்த கடையில் முழுமையான அளவில் பானைகளும், சில உணவுப் பொருட்களின் தடயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடையின் முன்புறம் சேவல் மற்றும் வாத்து உருவங்கள் இடம் பெற்றுள்ளதால் இது இறைச்சிக் கடையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தநிலையில் இது ஒரு அசாதாரண கண்டுபிடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கி.பி. 79ல் எரிமலைச் சீற்றத்தினால் அழிந்து போன பொம்பேயி நகரத்தில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது…
-
- 2 replies
- 688 views
-
-
-
ரஸ்யாவில் இளம் பெண்களின் இரத்தத்தைச் சுவைத்த மர்ம நபர் கைது _ வீரகேசரி இணையம் 2/10/2011 10:06:44 AM ரஸ்யாவில் இளம் பெண்களின் கழுத்தின் பின்புறத்தினை கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்தி அவர்களின் இரத்தத்தை குடித்து வந்த மர்ம நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் 18 முதல் 28 வயது வரையிலான பெண்களின் கழுத்தின் பின் பகுதியினை கூரிய ஊசி, சவர அலகு போன்றவற்றால் காயப்படுத்தி வந்துள்ளார். பின்னர் அவர்களின் இரத்தத்தை நக்கி சுவைத்ததன் பின்னர் கூட்டத்தினுள் சென்று மறைந்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான சுமார் 15 பெண்களும் எச்.ஐ…
-
- 2 replies
- 716 views
-