செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7095 topics in this forum
-
தற்காலிக அகதிமுகாமில் அகதிக்கோரிக்கையாளர்கள் மீது தனியார் கண்காணிப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் சித்திரவதை. ஜேர்மனி புர்பாஹ் (Burbach/ Hagen / Arnsberg ) எனும் இடத்தில் இருக்கும் தற்காலிக அகதிகள் முகாமில் பல நாட்டையும் சேர்ந்த 700 அகதிகள் வசித்து வருகின்றனர். இந்த அகதி முகாமிலிருந்து அகதிகள் வேறு வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டு அங்கு குடியேற்றப்படுவார்கள். இந்த நிலையில் இந்த அகதி முகாமில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் தனியார் கண்காணிப்புக்குழு ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு பணியாளர்கள் அங்கு வாழும் அகதிக் கோரிக்கையாளரைச் சித்திரவதை செய்யும் காட்சி நிழற்படமாக்கப்பட்டு வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபர்கள் …
-
- 0 replies
- 642 views
-
-
உலகின் மிக அழகிய கிரிமினல் ; 114 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள கனேடிய யுவதி 2014-09-25 11:52:19 கனடாவைச் சேர்ந்த யுவதியொருவர் உலகின் மிக அழகிய கிரிமினல் என வர்ணிக்கப்படுகிறார். குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படும் நபர்களை அதிகாரிகள் புகைப்படம் பிடித்து வெளியிடும் வழக்கம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இத்தகைய படங்களில் ஒன்றை பார்த்த பலர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் என நம்ப முடியாத அளவுக்கு அவரின் தோற்றம் காணப்பட்டது. ஸ்டெஃபானி, பியோடொய்ன் எனும் யுவதி மருத்துவ தாதி மாணவியாவார். பார்வைக்கு மொடல் அழகிகள் போன்று காணப்படுகிறார். ஆனால், பெரும் கிரிமினல்களில் ஒருவர் அவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கனடாவில் பல…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, நியூயோர்க்கில் வைத்து ஹிந்தி நடிகை கஜோலை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டுள்ளார். நியூயோர்க்கில் இடம்பெற்ற அறப்பணி நிகழ்வொன்றிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/128646-2014-09-26-07-38-29.html
-
- 7 replies
- 699 views
-
-
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினரின் குத்தாட்டம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் 'காபி சேலஞ்ச்" என்ற சவாலை செய்த நிலையில் தற்போது 'குத்து சேலஞ்ச்" என்னும் சவாலை செய்துள்ளது. அதாவது சாரம் மற்றும் வேஷ்டியை அணிந்து கொண்டு குத்தாட்டம் போட்டுள்ளனர். சென்னை நகரின் 375ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் மீண்டும் வித்தியாசமான சவால் ஒன்றை செய்துள்ளனர். ஈஸ்வர் பாண்டே, பிரண்டன் மெக்கலம், அஷிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, பிராவோ மற்றும் டுபிளெஸிஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/09/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%A…
-
- 0 replies
- 690 views
-
-
நிறம் மாறும் சிவலிங்கத்தின் அதிசயம் Ca.Thamil Cathamil September 20, 2014 Canada பொதுவாக சிவன் கோவில்கள் அனைத்துமே ஏதாவது ஒரு சிறப்பை பெற்று திகழ்வதாகவே இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் குறுப்புடி என்னும் ஊரில் சோமேஸ்வரர் என்னும் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சோமேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட சிவலிங்கத்தை, சந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. இந்த சிவலிங்கம் நிறம் மாறும் தன்மை கொண்டது என்பதே இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது அமாவாசை நாளில் கோதுமை நிறத்தில் காணப்படும் இந்த சிவலிங்கம், பின்னர் சிறிது, சிறிதாக நிறம் மாறி பவுர்ணமி தினத்தில் வெண்மை நிறமாக காட்சியளிக்கிறது. - See more at: http://www.canadamirror.com/canada…
-
- 11 replies
- 1.6k views
-
-
இறங்கி ஏறுவது நம் தலைவிதிப்பயனே! [ செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2014, 10:04.23 AM GMT ] 24 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்தேவி நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. யாழ்தேவியின் பரீட்சார்த்தமான வருகையென்பது, புகையிரதப்பாதை அமைப்பின் சரி பிழைகள் பற்றிய மதிப்பீட்டிற்கானது எனக் கருதும் அதேவேளை, புகையிரதக் கடவைகள் அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன தொடர்பிலும் ஆராய்வதாக இருக்கும். புகையிரத வண்டி யாழ்ப்பாணத்திற்கு வருவதென்பது எவ்வளவு முக்கியமான விடயமோ அதைவிட ஆயிரம் மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது பொதுமக்களின் பாதுகாப்பு என்ற உண்மையை உரியவர்கள் உணர்ந்தாக வேண்டும். எனினும் பாதுகாப்பான கடவைகள் அமைக்கப்படவில்லை என்ற குறைகள் இன்னமும் ஆங்காங்கே ஒலித்துக் கொண்…
-
- 4 replies
- 723 views
-
-
நம்பினால் நம்புங்கள்.. ஜாதகம் பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கும் ரஷ்யா! மாஸ்கோ: இதை நம்புவது சற்று கடினமாக இருக்கலாம். இந்தக் காலத்தில் போய் இப்படியா என்று கூட சிரிக்கலாம். ஆனால் உண்மை.. ரஷ்யாவில் பெரும்பாலான நிறுவனங்களில் வேலை கேட்டு வருவோரின் ஜாதகத்தைப் பார்த்துத்தான் ஆளே எடுக்கிறார்களாம். வேலை கேட்டு வருவோருக்கும், ஏற்கனவே அங்கு வேலை பார்ப்போருக்கும் இடையே ஒத்துப் போகுமா, ராசிப் பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பிறகுதான் வேலைக்கு ஆள் எடுக்கிறார்களாம். அதை விட முக்கியமாக சில வகை ராசிக்காரர்களை வேலைக்கே எடுப்பதில்லையாம். ஆதாரங்களுடன்... பொருத்தம் பார்த்து, ஜாதகம் பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கும் பழக்கம் ரஷ்யாவில் பரவலாக உள்ளதாம். இதை கிறிஸ்டோபர் ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
உடல் முழுவதும் 1 லட்சம் தேனீக்கள்: வாலிபரின் சாதனை குமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது முகம் மற்றும் உடலில் 1 லட்சம் தேனீக்களை ஏந்தி சாதனை படைத்துள்ளார். குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அருகே உள்ள சடையால்புதூரை சேர்ந்தவர் பிளவேந்திரராஜ். இவர் தேனீக்கள் வளர்த்து தேன் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (24). ஐடிஐ முடித்துவிட்டு பிளம்பிங் வேலை பார்க்கும் ராஜேஷிற்கு தனது சிறு வயது முதல் தேனீக்களை உடலெங்கும் விட்டு சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இந்நிலையில் சடையால்புதூரில் உள்ள சடையால்குளம் அருகே ஒரு முறிந்த தென்னையில் தேனீக்கள் இருப்பதாக பிளவேந்திரராசுக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து ராஜேஷுடன் சென்றிருந்த அவரது நண்பர்களும்…
-
- 0 replies
- 600 views
-
-
லாட்டரியில் 45 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் தெரு பெருக்கும் வேலைக்கு சென்ற கோடீஸ்வரர் வடக்கு லண்டனில் வசிக்கும் ஜோசப் வைட்டிங்(42) என்பவருக்கு தனது கண்களை தன்னாலேயே நம்ப முடியவில்லை. ’வெள்ளெழுத்து கண்ணாடி அணியாதபோது, சில வேளைகளில் நமது கண்கள் பிழையாக பொய் சொல்வதுண்டு’ என்பதை அறிந்து வைத்திருந்த ஜோசப், கண்ணாடியை எடுத்து மூக்கின் மேல் மாட்டிக் கொண்டு பார்த்தபோது, அவருக்கு அந்த விஷயம் உறுதியாகி விட்டது. உடனடியாக தாயாருக்கு போன் செய்து விபரத்தை கூறியபோது, ‘முட்டாப்பய மொவனே.., காலங்காத்தாலே ஜோக் அடிச்சு கழுத்தறுக்க ஆரம்பிச்சிட்டியா’ என்று அந்த அம்மையார் சலித்துக் கொண்டார். ‘அம்மா, நான் பொய் சொல்லல்லே.., உங்கொப்புரான சத்…
-
- 1 reply
- 557 views
-
-
(வத்துகாமம் நிருபர்) குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் இருவருக்கு தோசம் கழிக்கும் தோரனையில் பாலியல் வல்லுறபுரிந்த பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிங்கிரிய ஹதபான்கொடை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணம் முடித்த இரு பெண்களுக்கு நீண்டகாலமாக குழந்தைப் பேறு இல்லாதிருந்துள்ளது. இதனையடுத்து பூசாரியின் உதவியை நாடடி உள்ளனர். அவர் இவர்களுக்கு தோசம் ஒன்று பிடித்திருப்பதாகவும் அதனை தீர்த்துவைத்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கு மென்றும் கூறியுள்ளார். ஆதற்கான தோசம் கழிக்கும் எற்பாடுகள் செய்யப்பட்ட போது பூசகரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பூசகர் மாத்தறை பிரதேசத்தைச்…
-
- 0 replies
- 460 views
-
-
டி.பீ.யின் சப்பாத்துக்கு ரூ.13,200 கோடி கேள்வி ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டெம்பர் 2014 14 'என்னுடைய சப்பாத்து ஜோடியை, இங்கிலாந்திலுள்ள நிறுவனமொன்று 1,000 மில்லியன் டொலர்களுக்கு (13,200 கோடி ரூபாய்) கேட்கிறது. இது தொடர்பில், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் எனக்கு அறிவித்தது. இருப்பினும், அவற்றை கொடுப்பதா, இல்லையா என்று நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை. இந்த சப்பாத்தை ஏலத்தில் விட்டால், நல்லதொரு வருமானத்தை ஈட்டலாம்' என்று கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார். அமைச்சரின் இந்த சப்பாத்து ஜோடி உலகப் பிரபலம் பெற்றுள்ளது. அடிகள் கலன்றுள்ள இந்த சப்பாத்தை அணிந்தே, கடந்த சில தினங்களுக்கு முன், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீன ஜனாதிபதி முன்னிலையில் அமைச்…
-
- 0 replies
- 500 views
-
-
லஞ்சம் வாங்கும் சிறிலங்கா காவல்படை https://www.facebook.com/video/video.php?v=1409466872672261
-
- 0 replies
- 432 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமாரபுரம், கணுக்கேணி பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பசு மாடு ஒன்று கடித்ததில் மூவர் மாஞ்சோலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்; ஒருவர் விடுதியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தப் பசுமாட்டின் கடிக்கு இலக்கான மூவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் திருமதி வரதராசா சுசீலா (வயது 60), திருமதி பேரானந்தம் பொன்னுக்கிளி மற்றும் ஒருவருமே காயமடைந்துள்ளனர். அந்த மாடு ஒருவருக்கு முகத்திலும் மற்றையவர்களிற்கு கை கால்களிலும் கடித்துள்ளது. அத்துடன் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் கடித்து கிழித்துள்ளது. சம்பவம் பற்றி கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் அறிந்தவுடன் குறித்த மாட்டினைப் பிடிப்பதற்கு கடந்த மூன்று நாட்களாக முயற…
-
- 6 replies
- 604 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் சாவடைந்த குழந்தை ஒன்று மீண்டும் உயிருடன் மீண்டதாக கூறப்படும் சம்பவத்தால் மானிப்பாயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மானிப்பாய் புதுமடம் பகுதியில் 9 மாதக் குழந்தை ஒன்று கடந்த 27 நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் குறித்த குழந்தை இறந்து விட்டதாக நேற்று வைத்தியர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து குழந்தையின் இறுதிக் கிரியைகளை பெற்றோர் நடத்திக் கொண்டிருந்த போது குழந்தையின் உடலில் அசைவை அவதானித்தனர் இதனை அடுத்து தமது குழந்தை உயிரோடு இருப்பதாக எண்ணிய பெற்றோர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு குழந்தையை எடுத்து சென்றனர். அங்கு குறித்த குழந்தை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு ஒரு மணிநேரத்தின்…
-
- 0 replies
- 511 views
-
-
ஒஸ்ரியாவை சேர்ந்த 81 வயதான முதியவர் ஒருவர் 24 வயதான இளம் வயது மொடல் அழகியை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ௮௧ வயதான ரிச்சர்ட் லுங்கர் என்ற முதியவர், ப்ளேபாய் பத்திரிகையின் மொடல் அழகியான ௨௪ வயதான கேதி என்ற பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். சுமார் 7 மாத காலமாக காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த 13ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த வயது வரம்பை மீறிய திருமணம் ஒஸ்ரிய தலைநகர் வியானாவில் உள்ள ரிச்சர்டின் அரண்மனையில் அரங்கேறியுள்ளது. மேலும் இது ரிச்சர்ட்க்கு ஐந்தாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=6917#sthash.9zG0zqIm.dpuf
-
- 32 replies
- 2.5k views
-
-
சீன அதிபர் பெயரை 'லெவன் ஜின்பிங்' என்று சொன்ன தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நீக்கம்! இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் டெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் பெயரை லெவன் ஜின்பிங் என்று தவறாக உச்சரித்த தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் குறித்து பிற ஊடகங்களை போலவே மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது. சீன அதிபர் பெயரை 'லெவன் ஜின்பிங்' என்று சொன்ன தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நீக்கம்! தூர்தர்ஷனின் புதன்கிழமை செய்தி வாசித்த பெண் செய்தியாளர் ஒருவர், சீன அதிபர் குற…
-
- 0 replies
- 497 views
-
-
பிரியாணிக்காக சண்டை போட்டு நட்சத்திர ஹோட்டலை காலி செய்த டோணி! ஹைதராபாத்: வீட்டில் செய்த பிரியாணியை சாப்பிட அனுமதிக்காத ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டலுக்கு எதிராக கடும் கோபத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, தனது அணி வீரர்களுடன் வேறு ஹோட்டலுக்கு இடம் பெயர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் கடந்த புதன்கிழமை ஹைதராபாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பங்கேற்க வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிராண்ட் ககாடியா என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்தன. அம்பத்தி ராயுடு வீட்டு பிரியாணி ஹைதராபாத்தில் பிரியாணி மிகவும் பேமஸ் என்பது அனைவ…
-
- 0 replies
- 726 views
-
-
-
உணவு சாப்பிட முடியாமல் தவித்த தங்க மீனுக்கு மெல்போர்ன் டாக்டர்கள் ஆஸ்திரேலிய மருத்துவமனையில் வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 10 வயதான இந்த தங்க மீனுக்கு 45 நிமிடம் அறுவை சிகிச்சை நடந்தது. தண்ணீரில் வாடிய இந்த தங்க மீன் இப்போது மறுவாழ்வு பெற்று தண்ணீரில் நீந்தி மகிழ்கிறது. இன்னும் 20 ஆண்டுகள் வரை இந்த தங்க மீன் உயிர்வாழும் என்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=128914
-
- 8 replies
- 791 views
-
-
டெல்லி: ஹாங்காங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது செய்யப்படாத உறுதிப்படுத்தப்படாத தகவலை http://www.lankann.com/ என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது பொட்டம்மான் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் அந்த நாடும் ராணுவமும் தெரிவிக்காமல் இருந்தது. பொட்டம்மான் இறுதி நேரத்தில் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் http://www.lankann.com/ என்ற இணையதளம் இன்று ஹாங்காங்கில் பொட்டம்மான் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக செல்ல இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் உடனே இலங்கைக்கு சிறப…
-
- 14 replies
- 3.6k views
-
-
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் பாரிய கட்டிடம் Cupertino வில் விண்வெளிக் கப்பல் போன்ற வடிவில் பாரிய கட்டிட வேலைகளை செய்துவருகின்றது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் மிக அண்மைய பெரியதொரு திட்டமென்றால் அது இதுதான். ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான அலுவலகத்தை இங்கே அமைக்கவோ அல்லது கல்வித்தளமொன்றை உருவாக்கவோ இதை வடிவமைத்து வருவதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் இதன் வெளித்தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை மேலிருந்து வீடியோவாக JMCMINN என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்கள். http://4tamilmedia.com/knowledge/useful-links/25538-apple-s-new-spaceship-hq
-
- 0 replies
- 446 views
-
-
இந்தோனேஷியாவிலுள்ள ஒரு வகை கோழிகள் முற்றிலும் கறுப்பு நிறமாக காணப்படுகின்றன. இவற்றின் தலைமுதல் கால் நகம் வரை கறுப்பு நிறமானவையாக உள்ளன. கண்கள், வாய் ஆகியனவும் கறுப்புதான். சிறகுகள் மாத்திரம் வெளிச்சத்தின்போது ஓரளவு பச்சை நிறமானவையாக தென்படுகின்றன. இக்கோழிகளின் இறைச்சியின் விலை மிக அதிகமாகும். தலா 2500 டொலர் விலைக்கு இக்கோழிகள் விற்பனையாகின்றன. அதிக விலையுள்ள கோழிகளாதலால் இவற்றை லம்போர்கினி கோழிகள் என மக்கள் அழைக்கின்றனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=6822#sthash.WiIL5V8H.dpuf
-
- 5 replies
- 865 views
-
-
பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றும் பெண்ணொருவர் போல் டான்ஸிங் நடனத்திலும் தேர்ச்சி பெற்று பிரித்தானிய போல் டான்ஸிங் சுற்றுப்போட்டியொன்றிலும் முதலிடம் பெற்றுள்ளார். அமி கொவல்ஸ் எனும் இப்பெண் பிரட்டனின் கீலே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசியர் ஆவார். 30 வயதான அமி கொவெல்ஸ் பகல் வேளையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விஞ்ஞானம் கற்பிப்பார். விஞ்ஞான இளமானி (பி.எஸ்.சி) மாணவர்களுக்கு தடயவியல் துறை சார்ந்த பாடங்களை கற்பிப்பவர் இவர். ஆனால், இரவு நேரங்களில் முற்றிலும் வேறொரு பாத்திரத்துக்கு அமி கொவெல்ஸ் மாறி விடுவார். போல் டான்ஸிங் எனும் கவர்ச்சி நடனத்திலேயே இரவு நேரங்களை அவர் செலவிடுகிறார். சற்று ஆபத்தான நடன வகையான போல் டான்ஸிங்கில் ஈடுபடுவதற்கு சிறந்;த பயிற்சி வேண்டும…
-
- 1 reply
- 638 views
-
-
செய்தி 1. நடிகை சென்ற விமானத்தில் கோளாறு ஐதராபாத்தில் இருந்து திருப்பதி சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதை பைலட் அறிந்தார். இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஐதராபாத்திற்கு வந்து தரையிறங்கியது. இந்த விமானத்தில் நடிகையும், எம்.எல்.ஏ.,வுமான ரோஜாவும் பயணம் செய்தார். விமானம் தரையிறக்கப்பட்டதன் காரணம், பின்னர் தான் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=128607
-
- 2 replies
- 712 views
-
-
திருவனந்தபுரம்: விளையாட்டு போட்டியில் தொண்டைக்குள் இட்லி சிக்கி, 55 வயதுடைய ஒருவர் பலியான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இட்லி சாப்பிடும் போட்டியும் நடைபெற்றது. பாலக்காட்டை சேர்ந்த கந்தமுதன் என்ற 55 வயதுடைய ஆண் ஒருவர் இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு இட்லியை வெளுத்து வாங்கியுள்ளார். போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று வேக வேகமாக இட்லியை விழுங்கியுள்ளார். அப்போது அவரது தொண்டைக்குள் இட்லி சிக்கிக் கொண்டது. மூச்சுத் திணறிய அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே கந்தமுதன் உயிரிழந்துவிட்டார். மிகவும் உ…
-
- 3 replies
- 727 views
-