செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7154 topics in this forum
-
நூலகத்தில் பெற்ற புத்தகத்தை 49 வருடங்களின் பின் ஒப்படைத்த நபர் 2016-03-24 12:11:22 அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் நூலகமொன்றில் இரவல் வாங்கிய புத்தகமொன்றை 49 வருடங்களின் பின்னர் திருப்பிக் கொடுத்துள்ளார். ஜேம்ஸ் பிலிப்ஸ் எனும் இவர், ஒஹையோ மாநிலத்திலுள்ள டேய்ட்டன் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து 1967 ஆம் ஆண்டு இப் புத்தகத்தை இரவல் வாங்கியிருந்தார். அப்போது மேற்படி பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவராக அவர் இருந்தார். இப் புத்தகம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய நாள் கடந்து, வருடங்களும் கடந்து கொண்டிருந்தபோதிலும் அதை ஜேம்ஸ் பிலிப்ஸ…
-
- 4 replies
- 442 views
-
-
[size=2][size=4] உலகப் புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியானது சரிந்து வீழ்ந்துள்ளது. சீனாவின் வடபகுதியில் இச்சுவருக்கு முன்னால் அகழ்வு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் இச்சுவரின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்துள்ளது. ஹேபேய் மாகாணத்தில் ஸாங்ஜியாக்கோ பகுதிக்குக்கூடாக செல்லும் சீன சுவற்றின் 100 அடி அளவிலான பகுதி உடைந்து வீழ்ந்தது. இதனால் பல தொன் எடையுடைய கற்கள் மற்றும் சிதைவுகள் நேற்று காலை சரிந்து வீழ்ந்தன. இப்பெருஞ்சுவருக்கு முன்னால் நிர்மாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பல வாரங்களாக பெய்தபின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். சுவர் இடிந்து வீழ்ந்தமைக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற…
-
- 0 replies
- 442 views
-
-
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ______________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabol…
-
- 0 replies
- 442 views
-
-
அஜான் சிறீபன்னோ - த/பெ. அனந்த கிருஷ்ணன் !பாரதி தம்பி ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் என்கிற பெயர் அடிக்கடி அடிபடுவதைப் பார்த்திருப்போம். தொழிலதிபரான இவர், மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர். ஃபோர்ப்ஸ் பத்திரிகை மதிப்பீட்டின்படி இவரது சொத்து மதிப்பு சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய். உலகப் பணக்காரர்கள் பட்டியலில், வருடம் தவறாமல் இடம்பிடிக்கிறார் அனந்த கிருஷ்ணன். ஆனால் இவரது ஒரே மகன், புத்த துறவியாக மாறி, பிச்சையெடுத்துச் சாப்பிடுகிறார்... நம்ப முடிகிறதா? கட்டுமானம், எண்ணெய் விநியோகம், ஊடகத் துறை எனப் பல்வேறு துறைகளில் கோலோச்சும் அனந்த கிருஷ்ணன், ஓர் இலங்கைத் தமிழர். இவரது அப்பா காலத்திலேயே மலேசியாவில் செட்டில் ஆனவர்கள். மெல்போர்ன் …
-
- 0 replies
- 442 views
-
-
ஆஸ்திரேலியாவில் ஸ்கை டைவிங் செய்த போது 9000 அடி உயரத்திலிருந்து குதித்தபோது நிலைகுழைந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக மரணத்திலிருந்து தப்பித்தார். கிரிஸ்டோபர் ஜோன்ஸ் எனும் ஆஸ்திரேலியா வாலிபர், ஸ்கை டைவிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 9000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து டைவ் செய்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவர் திடீரென மயக்கமுற்றார். தரையை அடைய 30 விநாடிகளுக்கு முன்னதாக அதனை கவனித்துக் கொண்டிருந்த ஜோன்ஸின் பயிற்சியாளர் சாதூர்யமாக செயல்பட்டு மயக்கமுற்றிருந்த ஜோன்ஸிற்கு சுய நினைவை வரவழைக்க அவர் மீது தாக்குதல் நடத்தினார். எனினும் ஜோன்ஸின் அசைவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து பயிற்சியாளர் மேலும் தாமதிக்காமல், ஜோன்சின் பாராசூட்டை பிடித்து இழுத்து வ…
-
- 0 replies
- 442 views
-
-
தாய்லாந்தின் யூரியூப் பிரபலத்திற்கு எதிராக முறைப்பாடு By VISHNU 31 AUG, 2022 | 03:39 PM தாய்லாந்தின் யூரியூப் பிரபலமான யுவதியொருவர் சுமார் 6,000 பேரிடம் சுமார் 200 கோடி தாய் பாத் (சுமார் 55 மில்லியன் டொலர்) பணத்தை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நேதாமொன் கோங்சக் எனும் இந்த யுவதி 'நட்டி' எனும் பெயரில் பிரபலமானவர். யூரியூப்பில் அவரை 8 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 300,000 இற்கு அதிகமானோர் பின்தொடர்கின்றனர். தன்னை பாடகி, நடனக் கலைஞராகவும் கோங்சக் கூறிக்கொள்வதுடன் நிறுவனமொன்றின் பிரதம …
-
- 5 replies
- 442 views
- 1 follower
-
-
[size=4]பருவநிலை மாற்றத்தால் 2100-ம் ஆண்டில் கடல் மட்டம் ஒரு அடி அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஊருக்குள் கடல் நீர் புகுந்து, பல நகரங்கள், கடலை ஒட்டிய சிறிய நாடுகள், தீவுகள் அழியும் ஆபத்து உருவாகிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[/size] [size=3][size=4]புவி வெப்பம் உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பருவநிலை மாறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையம் ஒரு ஆய்வு நடத்தியது. ஆராய்ச்சி மற்றும் இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:[/size][/size] [size=3][size=4]சுற்றுச்…
-
- 0 replies
- 442 views
-
-
யாழ். மயிலங்காடு வேம்படி ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மூலஸ்தான அம்மன் கடந்த வியாழக்கிழமை(21) மாலை திடீரெனக் கண் திறந்து பார்ப்பதாகத் தகவல் பரவியிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் குறித்த காட்சியை நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில் அம்மனின் கண்கள் மூடிப் பின்னர் மீண்டும் திறந்துள்ளதாக ஆலய நிர்வாகத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை(22) காலை-07 மணியளவில் மூலஸ்தானத் திருக்கதவு திறக்கப்பட்டு ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சோ. சத்தியமூர்த்திக் குருக்களினால் பிராயச் சித்த அபிஷேகம், பூசை வழிபாடுகள் நிகழ்த்தப் பெற்றன. அதனைத் தொடர்ந்து காலை-08 மணியளவில் அம்மனின் கண் மீண்டும் மூடப் பெற்றது. அன்றைய தினம் பிற்பகல்-03.30 மணி முதல் ஆ…
-
- 0 replies
- 442 views
-
-
இந்தோனேஷியாவில் கழுத்தில் சிக்கிய டயருடன் இருக்கும் முதலையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுலவாசி தீவின் தலைநகரான பலூவில் உள்ள ஆற்றில் சயாமிஸ் முதலைகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ ஒருவர் வீசியெறிந்த இருசக்கர வாகனத்தின் டயர் ஒன்று முதலையின் கழுத்தில் சிக்கிக் கொண்டது. உணவை வேட்டையாடி விழுங்கினாலும் அதன் தொண்டைப் பகுதியில் டயர் இறுக்கமாக இருப்பதால் முதலையால் உணவை சரிவர விழுங்க முடியாத நிலை உள்ளது. இதனால் குறிப்பிட்ட முதலை பட்டினியால் வாடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனைக் கண்ட இந்தோனேஷிய வனத்துறை அதிகாரிகள் முதலையைப் பிடித்து டயரை அகற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் https://www.polimernews.com/dnews/90104/இருசக்கர-வ…
-
- 0 replies
- 441 views
-
-
உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரை உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரையின் பாசத்தினை கண்டு மரணசடங்கில் கலந்துக்கொண்டவர்களும் கண்ணீர் விட்ட சம்பவம் பிரேஸிலில் இடம்பெற்றுள்ளது. செரினோ என்ற குதிரையும் அவரின் உரிமையாளரான 34 வயதுடைய வாக்னர் டே லிமா பிகுயிரோடோ என்ற நபரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 1 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் பிகுயிரோடோ உயிரிழந்துள்ளார். இவரின் இறுதி கிரிகையில் கலந்துக் கொண் ட அவரின் குதிரை பிகுயிரோடோவின் பிரிவினை தாங்காது கண்ணீர் விட்டு அழுதுள்ளது. இச்சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் குதிரையின் பாசத்தினை கண்டு வியப்பில்…
-
- 2 replies
- 441 views
-
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டு தாய்மார் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக அடுத்தடுத்த இரு தினங்களில் ஆறு குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. அம்பாறை ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நிசாந்தினி என்ற தாய் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார். அறுவைச் சிகிச்சை மூலமே குறித்த குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் மா.திருக்குமரன் தெரிவித்தார். இரு பெண்குழந்தைகளும் ஓர் ஆண்குழந்தையும் பிரசவிக்கப்பட்டன என்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இதேபோன்று ஏறாவூ…
-
- 0 replies
- 441 views
-
-
தனது சேமிப்பு பணத்தை... இலங்கை மக்களுக்கு, வழங்கிய சிறுமி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் தங்கை பையினாவின் மகள் பில்சா சாரா பள்ளி மாணவியான இவர் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை இலங்கை மக்களுக்காக கையளித்துள்ளார். இலங்கை மக்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை நேற்று (சனிக்கிழமை ) அவர் கையளித்துள்ளார் . இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதோடு,பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1280638 Category: இலங்கை கொழும்பு
-
- 2 replies
- 441 views
-
-
-
லொறியின் மீது ஏறி நிர்வாணமாக நடனமாடிய பெண்; அமெரிக்க நெடுஞ்சாலையில் பரபரப்பு 2016-03-09 14:54:37 அமெரிக்காவில் போக்குவரத்து நிறைந்த வீதியொன்றில் லொறியொன்றின் மீது பெண்ணொருவர் நிர்வாணமாக நடனமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள நெடுஞ்சாலையொன்றில் இப் பெண் செலுத்திச் சென்ற கார், வீதியிலுள்ள தடுப்புச் சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. அதையடுத்து, ஏற்பட்ட வாகன நெரிசலுக்கு மத்தியில் லொறியொன்றின் மேல் இப் பெண் ஏறிக்கொண்டு நிர்வாணமாக நடனமாடத் தொடங்கினார். கீழே இறங்கி வருமாற…
-
- 0 replies
- 441 views
-
-
வயாகரா ஐஸ் கிரீம் தயாரிக்கும் இங்கிலாந்து நிறுவனம் - பணக்கார வாடிக்கையாளருக்கு மட்டுமே விற்குமாம்! [Thursday, 2014-04-17 10:50:06] ‘ஐஸ் கிரீம்’ என்ற பெயரைக் கேட்டாலே சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நெஞ்சங்களில் ஒருவித ஆனந்த கிளுகிளுப்பு தோன்றுவது இயற்கையானது. அந்த ஐஸ் கிரீமில் ஆண்மை குறைப்பாட்டை சமன் செய்யும் ‘வயாகரா’வும் சேர்ந்தால்… இந்த நினைப்பே குடுகுடு கிழவரையும் கிளுகிளுப்புகுள்ளாக்கி விடுமல்லவா? இவ்வகையிலான இன்ப கிளுகிளுப்புக்கு ஆசைப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செல்வந்தர், அந்நாட்டின் பிரபல உணவு நிபுணரான சார்லி ஹார்ரி பிரான்சிஸ் என்பவரை தொடர்பு கொண்டார். ’லிக் மி- ஐ ஆம் டெலிஷியஸ்’ என்ற பெயரில் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான இருட்டில் கூட…
-
- 5 replies
- 441 views
-
-
கனடா- அல்பேர்ட்டாவிலுள்ள ஒரு சிறு கிராமத்தில் குடியிருப்பு மனைக்குரிய ஒரு துண்டு நிலம் 10 டொலர்களிற்கு வழங்கப்படுகின்றது.டெலியா என்ற இக்கிராமத்தில் தற்போதைய மக்கள் தொகை 186. சனத்தொகையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த விற்பனை இடம்பெறுகின்றது.டெலியா சிறிதாக இருந்தாலும் இங்கு நூல்நிலையம், பனி சறுக்கு ,உணவகங்கள் மற்றும் கிரடிட் யூனியன் போன்றன உள்ளன.இந்த சிறிய இடத்தில் வசிப்பதால் பெரிய நன்மைகள் உள்ளன என மேயர் டான் பன்குறொவ்ட் தெரிவித்துள்ளார்.பெற்றோர் தங்கள் பிள்ளைகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் தங்கள் சைக்கிள்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் அவர் கூறியுள்ளார். வாழக்கைத் தரமும் சிறந்த இடமாகும்.டெலியா மற்றய சில சிறிய கிராமங்கள் மற்றும் ரவுன்களை போன்று தனி…
-
- 5 replies
- 441 views
-
-
‘பிக் ஆப்பிள்’ என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. அந்த நகரில் வசிக்கும் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் ஆளுக்கொரு கதையைக் கூறுவார்கள். இதில் கூடுதலாக ஒரு தகவல். மிகச்சுத்தமான நகரம் என்று கருதப்படும் அமெரிக்க நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சம் எலிகள் உலாவுகின்றன. அதாவது, 8 பேருக்கு தலா 2 என்ற கணக்கில் எலிகள் இருப்பதாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஜோனாதன் அயூர்பாக் என்ற ஆராய்ச்சி மாணவர் பருவ இதழ் ஒன்றில் எழுதியுள்ள புள்ளி விவர கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120335&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 441 views
-
-
பிள்ளையாராக உருமாறிய கண்ணாடி போத்தல் ; மட்டக்களப்பில் அதிசயம் (சசி) மட்டக்களப்பு, வாழைச்சேனை சுங்காங்கேணி எழுச்சி கிராமத்தில் கிராமவாசியொருவரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடி போத்தலொன்று பிள்ளையார் உருவமாக மாறிய அற்புத நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. சுங்காங்கேணி கிராமத்தைச் சேர்ந்த க.யோகராணி என்பவரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தலே பிள்ளையார் உருவமாக மாறியுள்ளது. இச் சம்பவம் பற்றி வீட்டின் உரிமையாளர் க.யோகராணிதெரிவிக்கையில், கடந்த 27 வருடங்களாக கேராத கௌரி விரதம் அனுஷ்டித்துவருகின்றேன். ஒவ்வொரு வருடமும் கௌரி விரதம் முடிந்ததும் ஆலயத்தி…
-
- 1 reply
- 441 views
-
-
Sri Lanka police dog 'weddings' condemned by minister Police have insisted that the wedding was not in any way intended to resemble a Buddhist ceremony. சிறீலங்காவில் 9 சோடி பொலிஸ் நாய்களுக்கு பெளத்த முறைப்படி திருமணம் செய்து வைத்ததை பெளத்த நாட்டில் இது பெளத்தத்தை இழிவுபடுத்தும் செயல் என அதன் கலாசார அமைச்சர் கண்டித்துள்ளார். Culture Minister TB Ekanayake said that police officers had "contemptibly devalued" traditional weddings in a devoutly Buddhist country. பெண் நாய் வெள்ளைத் தொப்பியும்.. ஆண் நாய் சிவப்பு ரையும் கட்டி கலியாணம் செய்து கொண்டனவாம். கலியாணம் சிங்கள பெளத்த முறைப்படி நடந்ததாம். http://www.bbc.co.uk/news/world-asia-23849354
-
- 2 replies
- 441 views
-
-
வட்டுக்கோட்டையில்... பசுவின் காலை துண்டாடிய, விஷமிகள். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டு இருந்த பசு மாடொன்றின் கால் ஒன்றினை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். மூளாய் , முன்கோடை பகுதியில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வருகின்றார். அந்நிலையில் வழமை போன்று தனது பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் பசுவை மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார். மாடுகளை அவிழ்க்க சென்ற போது பசுவின் கால் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் மற்றுமொரு காலில் காயம் ஏற்படும் வகையில் த…
-
- 7 replies
- 441 views
-
-
1960களில் இந்தியாவுக்கு ஆதரவாக சீனா மீது அணுகுண்டு வீச அமெரிக்கா திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபராக 1961- 1963 வரை பதவி வகித்தவர் ஜான் எஃப்.கென்னடி. அவரது பதவிக்காலத்தின்போது வெள்ளை மாளிகையில் பதிவான அவரது பேச்சுகள், சந்திப்புகள் ஆகிய ரகசியத் தகவல்களைத் தொகுத்து 'Listening In: The Secret White House Recordings of John F Kennedy' என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகம் அண்மையில் வெளியாகியுள்ளது. இப்புத்தகத்தை கென்னடியின் மகள் கரோலின் கென்னடி மற்றும் டெட் விட்மர் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கின்றனர். இதில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விஷயம், இந்தியா மீது சீனா 1962ல் போர் தொடுத்தது. அதற்கு 6 மாதங்களுக்குப் பிறகு, 1963 மே-ந் தேதி, அப்போதைய அமெரிக்க அதிபர் கென…
-
- 0 replies
- 441 views
-
-
யாவுமே திட்டமிடலா? வெளியாகும் அமெரிக்க அதிபர்களின் ரகசியம் 2 days agoஅமெரிக்கா 6.4k SHARES விளம்பரம் Topics : #Donald Trump#Hillary Clinton உலகில் எதாவது ஒரு விடயம் பரபரப்பாக பேசப்படும் போது தான் அது பற்றிய பல சுவாரசிய தகவல்கள் வெளிப்படும். அந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பழைய தகவல் ஒன்று மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இது வரையில் அதிபராக அங்கம் வகித்த 43 பேர்களில் ஒபாமாவை தவிர்த்த ம…
-
- 1 reply
- 441 views
-
-
பன்றியையும் அழைத்துச் செல்ல முற்பட்டதால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பெண் பயணிகள் விமானத்தில் தனது செல்லப்பிராணியான பன்றியொன்றையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்ற பெண்ணொருவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கனக்டிகட் மாநிலத்தின் பிராட்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யூ.எஸ். எயார்வேஸ் நிறுவனத்தின் விமானமொன்றில் பெண்ணொருவர் பன்றியொன்றுடன் ஏறினார். சக பயணிகள் பலர் அதை ஒரு பை என்றே முதலில் எண்ணினராம். ஆனால், அதிக துர்நாற்றம் எழுந்ததால் அது பன்றி என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்துகொண்டனர். அப்பன்றி பின்னர் விமானத்துக்குள் ஓடித்திரிந்ததாகவும் அதன் உரிமையாளரான பெண் விமானத்தில் அழுக்கேற்பட்ட இடங்களை சுத்தப்படு…
-
- 0 replies
- 440 views
-
-
-
- 0 replies
- 440 views
-
-
எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் பதவியேற்பு! கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பதற்றம்! [ வியாழக்கிழமை, 03 செப்ரெம்பர் 2015, 06:09.35 PM GMT ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இன்று எதிர்கட்சி தலைவராக தெரிவாகியதன் பின்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செல் நம்பர் J பிரிவில் அடைக்கப்பட்ட கணிசமான தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதைக்குட்பட்டுள்ளனர். அப் பகுதிக்கு இன்று மாலை 4:00 மணியளவில் குறித்த J பிரிவுக்கு சென்ற சிறைக் காவலர்கள் எதிர்க் கட்சி தலைவராக உங்கள் தலைவரா தெரிவாகியுள்ளார் எனக் கேட்டு தாக்கியதோடு, இது எங்களுடைய நாடு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எனக் கேள்விகளைக் கேட்டவாறே அரசியல் கைதிகளை நிர்வாணப்படுத்தியதுடன் அடைமழைக்குள் அவர்களை தள்…
-
- 7 replies
- 440 views
-