செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகளின் சமூக வலைத்தள பதிவு இணையத்தில் வைரலாகி வருவதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு மறுமணம் என்பது இன்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்றைய இளைஞர்கள் சமூக சிந்தனையுடன் எடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்படுகின்றன. பெறும் வரவேற்பையும் பெறுகிறது. அப்படி பல சம்பவங்கள் சமீப காலங்களில் நடைபெற்று வருகின்றன. அண்மையில் தமிழ்நாட்டில் தனது தாயின் திருமணத்திற்கு மகன் தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் தனது தாய்க்கு, மகள் ஒருவர் வரன் தேடியதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. …
-
- 2 replies
- 405 views
-
-
லண்டன் இங்கிலாந்து நாட்டில் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் பிராட்போர்டு என்ற இடத்தில் வசிப்பவர்கள் கரம் சந்த் (வயது 110), கர்ட்டாரி (103) தம்பதியர். இந்தியாவை சேர்ந்த இவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியின்போது, 1925–ம் ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி பஞ்சாபில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 40 ஆண்டுகள் கழித்து அவர்கள் இங்கிலாந்து சென்று குடியேறினர். இந்த தம்பதியர் தங்களது 90–வது திருமண நாளை நேற்று முன்தினம் மகிழ்ச்சிகரமாக கொண்டாடினர். இவர்களுக்கு 8 குழந்தைகள், 27 பேரக்குழந்தைகள், 23 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்த நீடித்த மணவாழ்வு குறித்து கரம் சந்த் கூறும்போது, ‘‘திருமணம் என்பதே ஆணும், பெண்ணும் சமரசம் செய்து கொண்ட…
-
- 2 replies
- 404 views
-
-
சிறீலங்காவுக்கு தடுப்பு மருந்து உதவி – இந்தியா – சீனா போட்டி 47 Views கோவிட்-19 இற்கான தடுப்பு மருந்துகளை சிறீலங்காவுக்கு வழங்குவதில் இந்தியா மற்றும் சீனாவக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்கா அரச தலைவரின் வேண்டுகோளைத் தொடர்ந்து தடுப்பு மருந்தை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது அதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என சீனாவுக்கான சிறீலங்கா தூதுவர் பாலித கோகொனா தெரிவித்துள்ளார். அதேசமயம், சிறீலங்கா அரச தலைவரின் வேண்டுகோளைத் தொடர்ந்து தடுப்பு மருந்தை வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி முன்வந்துள்ளார். முன்னனி பணியாளர்களின் பாவனைக்காக இந்த மருந்துகள் வழங்கப்படவு…
-
- 2 replies
- 404 views
-
-
அமெரிக்காவில் மகாசூசெட்ஸ் மாகாணத்தில் சலீம் என்ற நகரில் ஒரு துரித உணவகத்தில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். திடீரென அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த நபர் உணவகத்தில் இருந்த பணப் பெட்டியை கொள்ளையடித்து சென்று விட்டார். இக்காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதற்கு முன்னதாக ஒரு அங்காடியில் புகுந்து வேறு ஒரு நபரின் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து இருக்கிறார். இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்ற…
-
- 0 replies
- 404 views
-
-
திரைப்படங்களில் வில்லன்கள் ஐபோன் உபயோகிக்கக் கூடாது என்ற ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய விதிமுறையை நைப்ஸ் அவுட் ஆங்கில திரைப்பட இயக்குநர் கசிய விட்டுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ரியான் ஜான்சன், திரைப்படங்களில் ஐபோன் பயன்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தங்கள் குறித்த சில சுவாரஸ்மான தகவல்களை வெளியிட்டார். மர்ம திரைப்படங்கள் எடுக்கும்போது மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஏனெனில் எதிர்மறை கதாபாத்திரங்கள் ஐபோன் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் ஜான்சன் குறிப்பிட்டார். மேலும், செல்போனை மையப்படுத்தி தற்போது மர்ம படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் இந்த தகவலால் தன்னை கடிந்துக்கொள்வார்கள் என நக…
-
- 0 replies
- 404 views
-
-
அப்பல்லோவில் பரபரப்பு : பூலோகத்தை காக்க வந்த அவதாரமும் வைத்தியசாலையில் அனுமதி.! கடந்த ஒரு மாத காலமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலை பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், பொலிஸ் பாதுகாப்பும், தொண்டர்கள், கட்சியினர், தலைவர்கள் என ஒரே பரபரப்புடனேயே நகர்கிறது. இந்நிலையில் இன்னொரு பரபரப்பு மனிதரும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்பல்லோ களைகட்டுகிறது. கடவுள் விஷ்னுவின் பத்தாவது அவதாரம் நான் தான், பூலோகத்தை காக்க வந்த அவதாரம் நான் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய விஜயகுமாரும் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் கல்கி பகவான் ஆசிரமம் என்ற பெயரில் பல்…
-
- 3 replies
- 404 views
-
-
உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா? பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இது தினசரி கார் பயன்படுத்துவோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை கட்டுக்குள் வைத்திருக்க சில உபாயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியாவில் புதிதாக கார் வாங்குபவர்களும், கார் வைத்திருப்பவர்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்களில் எரிபொருள் சிக்கனம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக காரை வாங்கலாமா? வேண்டாமா? என முடிவு செய்வதில், மைலேஜ் மிக முக்கியமான காரணியாக உள்ளது. ஆனால் இந்திய சாலைகளில் நிலவும் கடு…
-
- 0 replies
- 404 views
-
-
தமிழகத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- "ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றிய மனித உரிமைகள் தீர்மானத்தில் வாக்களித்தமைக்காக இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் எமது நாட்டின் பிரமதர் மன்னிப்புக் கேட்டார் என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன்" என்று ராஜஸ்தான் ஜெயப்பூரைச் சேர்ந்த மனித உரிமைப் போராளியான கவிதா சிறிவஸ்றவா தெரிவித்தார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் சட்டமின்மையும் அரசின் தப்பிக்கும் போக்கும் மிதிபடும் ஜனநாகயமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் சட்டமின்மையும் சிறுபான்மையனிரும் என்ற தலைப்பில் பேசும் பொழுது ஈழத்து மக்களுக்கு எதிரான இந்தியாவின் இந்த நடவட…
-
- 0 replies
- 404 views
-
-
ஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை... 9 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார் என்று தெரியுமா? இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினை சேர்ந்த ஆர்டி ரிசால் என்ற குழந்தை ஒரு நாளைக்கு 40 சிகெரட் புகைப்பதாக கடந்த 2010ஆம் ஆண்டு புகைப்படத்துடன் செய்தி வெளியானது. 2வயது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆர்டி ரிசால், 40 சிகெரட் புகைப்பது குறித்து வெளியான புகைப்படம் மற்றும் காணொளி உலகம் முழுவதும் வைரலானது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த இந்தோனேஷிய அரசு , குழந்தைகள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குழந்தை ஆர்டி ரிசாலுக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த, சிறப்பு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கத் தொடங…
-
- 1 reply
- 404 views
-
-
மரதன் ஓட்டம் ஓடிய பின் குழந்தையை பெற்றார் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரத்தில் இடம் பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் 27 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப்பெண் அம்பிய மில்லர் என்ற பெண்மணி பங்கேற்றார். கர்ப்பிணியான இவர் மரதன் ஓட்டத்தை முழுமையாக ஓடுவது பொருத்தமல்ல என்று மருத்துவர்கள் கூறியிருந்தும் இவர் போட்டியில் பங்கேற்றார். மொத்தம் 42.16 கி.மீட்டர் தூரத்தை இவர் 6 மணி 25 நிமிட நேரத்தில் ஓடி முடித்தார். இவர் ஓடும்போது ரசிகர்கள் கர்ப்பிணிப் பெண்ணே ஓடு ஓடு என்று பெரும் ஆரவாரமும் ஆதரவும் தெரிவித்தார்கள். ஓட்டம் முடிவடைந்த பின்னர் பிரசவ வலி எடுத்து 3.5 கிலோ நிறையுள்ள பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தனது குழந்தையை உலகப் புகழ் பெற்ற சாதனையுடன் பெற்றெடுத்து புகழடைந்து…
-
- 0 replies
- 404 views
-
-
யாழில், போதைக்கு அடிமையான... 17 வயது சிறுமி, கர்ப்பம் – மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை. யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த சிறுமி போதைப்…
-
- 1 reply
- 404 views
- 1 follower
-
-
செப் 20, 2012 மானிட தர்மத்திற்கு முற்றிலும் மாறாக தமிழ்த்தேசிய இனத்தை இனவழிப்பு மூலம் இலங்கைத் தீவிலிருந்து முற்றாக துடைத்தெடுக்க முயன்று கொண்டிருக்கும் இனப்படுகொலையாளி இராஜபக்சவின் இந்திய பயணத்திற்கெதிராக எமது தமிழ் நாட்டு உறவுகள் பலவகையான போராட்டங்களை இந்தியாவின் பலபாகங்களிலிலும் நடாத்தி வருகின்றனர். இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பளிக்க முன்வந்த இந்திய அரசின் தான்தோன்றித்தனமான செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கவும் இனப்படுகொலையாளியின் வருகையை தடுத்த நிறுத்த அனைவரையும் அணிதிரளுமாறு கோரியும் எமது தமிழக உடன் பிறப்பு ஈகத் தமிழன் விஜயராஜ் தனக்குள் எரியும் நெருப்பை தன்தேகத்தின் ம…
-
- 0 replies
- 404 views
-
-
யாழில்... வீடு புகுந்து, பெட்ரோல் திருட்டு! யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டார் நேற்று காலை வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போதே , மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு உள்ளமையையும் கண்டறிந்தனர். அதனை அடுத்து வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும், மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலையும் தி…
-
- 6 replies
- 404 views
-
-
மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFRICAN NEWS AGENCY (ANA) தென் ஆப்ரிக்காவில் கோசியாமி தமரா சித்தோல் என்ற பெண் ஒருவர் பத்து குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியில் உண்மை இல்லை என அதிகாரப்பூர்வ விசாரணையில் தெரிய வந்துள்ளது. குவாடெங் என்னும் அந்த மாகாணத்தில் எந்த மருத்துவமனையிலும் 10 குழந்தைகள் பிறக்கவில்லை என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிதோல் சமீபத்தில் கர்ப்பமாகவும் இல்லை என்றும் மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. சிதோலுக்கு 37 வயது. அவரின் மன நலம் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கதை எவ்வாறு …
-
- 0 replies
- 403 views
-
-
முல்லைத்தீவு முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் நேற்று பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார். குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர், அவரது காணிக்குள் நீர் பொருத்தும் பைப்லைன் செய்வது போல், கசிப்பு உற்பத்தி செய்து சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது இரு பரல் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்த முள்ளியவளை பொலிஸார், மீட்கப்பட்ட சான்று பொருட…
-
-
- 5 replies
- 403 views
- 1 follower
-
-
அரச அரண்மனைகளில்... நூற்றுக்கணக்கான, குற்றங்கள் பதிவு! கடந்த மூன்று ஆண்டுகளில் அரச அரண்மனைகளில், ஆயுதங்கள், போதைப்பொருள், வன்முறை மற்றும் கொள்ளை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2019ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பக்கிங்ஹாம் அரண்மனை, கென்சிங்டன் அரண்மனை, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸ் ஆகிய இடங்களில் மொத்தம் 470 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. தீ வைப்பு மற்றும் குற்றச் சேதம், கொள்ளை, ஆயுதங்களை வைத்திருந்தல் மற்றும் குற்றங்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றின் அறிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான திருட்டுகளும் அவற்றில் அடங்கும். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிடப…
-
- 5 replies
- 403 views
-
-
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908ஆம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக புதிராகவே நீடிக்கிறது. துங்குஸ்கா நிகழ்வு என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப்படாததே இதற்குக் காரணமாகும். 1908ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் கண்டனர். நீண்ட வால் போன்ற அமைப்புடன் எரிந்து கொண்டிருந்த அப்பொருளானது மிக வேகமாக வானின் குறுக்கே கடந்து சென்றது. நிலத்திலிருந்து சுமார் 5 லிருந்து 10 கி.மீ உயரத்தில் அது காணப்பட்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பொருள் …
-
- 0 replies
- 403 views
-
-
டென்மார்க் 19.08.2011 வெள்ளி நேற்று முன்தினம் எஸ்.ஏ.எஸ் விமானம் சுவீடன் ஸ்ரொக்கோமில் இருந்து அமெரிக்காவின் சந்தியாகோவிற்கு புறப்பட இருந்தவேளை திடீரென விமானம் இடைநிறுத்தப்பட்டது. விமானத்தின் உள்ளே ஓர் எலி ஓடியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எலியைப் பிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் உடனடியாக முடியவில்லை, எலி விமானிகளுக்கு டிமிக்கிவிட்டு விமானத்தின் உள்ளே நுழைந்துவிட்டது. எலி விமானத்தில் இருப்பது பாரிய ஆபத்தான விடயம். விமானத்தை இயக்கும் உயிர்நாடியான கேபிள்களை வெட்டி அவற்றை குப்புற வீழ்த்திவிட எலிகளால் முடியும். எலியை பிடித்த பின்னரே விமானம் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைக்கு எறும்புபோல விமானத்திற்கு எலி எதிரியாக இருக்கிறது. குண்டு வீச்சு விமானங்கள…
-
- 0 replies
- 403 views
-
-
தாயார் போதையில் வாகனம் செலுத்துவதாக வேனின் பின் ஆசனத்திலிருந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்த 9 வயது சிறுவன் கனடாவைச் சேர்ந்த 9 வயதான சிறுவனொருவன், தனது தாயார் மதுபோதையில் வாகனம் செலுத்துவதாக பொலிஸாருக்கு அக்காரின் பின் ஆசனத்திலிருந்த நிலையில் தகவல் கொடுத்துள்ளான். கடந்த புதன்கிழமை இச்சம்பவம் நடைபெற்றதாக கனடாவின் யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சிறுவன் தனது தாயாருடன் வேன் ஒன்றில் பயணம் செய்தபோது, பின் ஆசனத்திலிருந்தவாறு தனது செல்லிடத் தொலைபேசி மூலம் 911 எனும் கனேடிய அவசரசேவை இலக்கத்தின் மூலம் பொலிஸாரை அழைத்தான். இச்சிறுவன் அச்சத்துடன் உரையாடியபோதிலும் தனது…
-
- 0 replies
- 403 views
-
-
இங்கிலாந்தில் உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கையரின் மரணத்துக்கு காரணம் நிர்வாண புகைப்படங்களாம்! 29 FEB, 2024 | 02:42 PM இங்கிலாந்தில் வசித்த 16 வயது இலங்கையர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் டினால் த அல்விஸ் என்ற 16 வயது இளைஞராவார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அன்று உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இளைஞரது நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக கூறி அச்சுறுத்தி ஒருவர் கப்பம் கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் தொடர்பில் எந்தவித தகவல்களும் …
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
உள்ளாடை மன்னன் சிக்கினார் 16 வருடங்களாக பெண்களின் உள்ளாடைகளை மிகவும் சூட்சுமமாக திருடிவந்த நபரை சுவிஸ் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். சுவிஸில் பெண்கள் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து உள்ளாடைகளை சூட்சுமமாக திருடுவதில் வல்லவனாக வலம் வந்த 45 வயதுடைய நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் 1999 ஆம் ஆண்டு முதல் குறித்த செயற்ப்பாட்டில் ஈடுபட்டுவந்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இவர் வீடுகள் புகுந்து 100 க்கும் மேற்பட்ட பெண்களை துன்புறுத்தி, உள்ளாடைகளை திருடிச் சென்றதாகவும் மேலும், குறித்த நபர் 20 வயது முதல் 30 வயதிற்கிடைப்பட்ட கவர்ச்சியான பெண்களையே குறிவைத்து இச் செயலில் ஈடுபட்டதாகவும், மேலும் ப…
-
- 0 replies
- 403 views
-
-
"என் தாய்க்கு மதிப்பு கொடு" ; வாடிக்கையாளரை வெளுத்து வாங்கிய மெக்டொனால்ட் பணிப்பெண் (காணொளி இணைப்பு) மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணிப்புரியும் ஒரு பெண் அங்கு வந்த வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நெவாடாவை சேர்ந்த மேரி தயக்கின் என்பரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் தயக்கின் 'சம்பவத்துடன் தொடர்புடைய வாடிக்கையாளர் ஒரு தண்ணீர் குவளையினை கேட்டார், மேற்பார்வையாளர் சோடா இயந்திரத்தை மூடிவிட்டார், ஏனென்றால் அவளுக்கு ஒரு இலவச சோடா பெற்றுக்கொள்கின…
-
- 0 replies
- 403 views
-
-
மைசூரில் யானைகள் சண்டையை தடுக்க முயன்ற பாகனும், அவர் வளர்த்த யானையும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மைசூர் தசரா விழாவில் பங்கேற்கும் யானைகள் சாம்ராஜ்நகரில் உள்ள முகாமில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு, கஜோந்திரா, ஸ்ரீராமா என்ற இரு யானைகளும் உள்ளன. நேற்று இந்த இரு யானைகளும் திடீரென்று சண்டையிட்டுக் கொண்டன. இரண்டும் ஒன்றையொன்று தந்தத்தால் குத்திக் கொண்டன. சண்டையை பார்த்த ஸ்ரீராமா யானையின் பாகன் கணபதி, சண்டையை விலக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால், கடும் ஆத்திரமடைந்த கஜேந்திரா யானை, பாகன் கணபதியை தந்தத்தால் ஆவேசத்துடன் குத்தியது. இதில், சம்பவ இடத்திலேயே பாகன் கணபதி பலியானார். தொடர்ந்து ஆத்திரம் தணியான கஜேந்திரா யானை, ஸ்ரீராமா யானையை மேலும் த…
-
- 0 replies
- 402 views
-
-
மருத்துவமனையில் சிறுமி மரணம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 49 Views விபத்து காரணமாக காயமடைந்த சிறுமி ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியசாலை அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு -------த்தீவு பிரதான வீதி பகுதியில், நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் விபத்து நிலையினை எக்ஸ்ரே படம் எடுப்பதற்கு முடியாத நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று மூன்று மணித்தியாலங்கள் கழித்து எக்ஸ்ரே எடுக்கப்பட்டதால் குறித்த ச…
-
- 0 replies
- 402 views
-
-
சுற்றுலாப் பயணிகளை கவர கண்ணாடி கழிவறை ; மற்றவர் கழிவறையை பயன்படுத்துவதையும் பார்வையிட முடியுமாம் (வீடியோ இணைப்பு) சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க, வெளிப்படையாக தெரியும் கண்ணாடி சுவர்களை கொண்ட கழிவறைகளை சீனா நிர்மாணித்துள்ளது. சீனாவின் தென் பகுதி மாகாணமான ஹூனான் மாகாணத்தில் ஷியான் என்ற குளத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இந்த கழிவறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கழிவறையில் இருந்தபடி காட்டின் இயற்கையை ரசிக்க முடியும் என்பதுடன் வேறு ஒருவர் கழிவறையை பயன்படுத்துவதையும் காணமுடியும். கண்ணாடி பெட்டிகள் போல் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கழிவறைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு…
-
- 4 replies
- 402 views
- 1 follower
-