Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உலகளாவிய தமிழ் இளையோர் அவையினரால் ஒழுங்கு படுத்தப்பட்ட உலகளாவிய தமிழ் இளையோர் ஒன்றுகூடல் மற்றும் கருத்தரங்கானது லண்டன் மாநகரில் சனி 07 .04 .2012 மற்றும் ஞாயிறு 08 .04 .2012 ஆகிய தினங்களில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. உலகத் தமிழ் இளையோர்கள் ஒன்றுகூடி தேசியம், தமிழ் மொழி, தமிழினப்படுகொலைகள் மற்றும் கலை கலாசாரம் பற்றி விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்கள். இவ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்த இளையோர்கள் வருகை தந்தார்கள் குறிப்பாக கனடா, ஜெர்மனி, இத்தாலி, நோர்வே, சுவீடன், சுவிஸ்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும் உரை நிகழ்த்தினார்கள். இவ் மாநாடு இரு பிரிவுகளாக தமிழர்களின் பூர்வீகம் தொடக்கம் தேசிய அடையாளங்கள் வரை சனிக்கிழமையும் தம…

  2. இலங்கை, இந்திய அரசாங்கங்கள் தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்படக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றன. ஆயுதப்போராட்ட காலத்திலும், தமிழீழ விடுதலைக்காக போராடிய ஆயுதக்குழுக்களை இந்திய இலங்கை அரசுகள் மோதவிட்டன. இன்றும் அந்த நிலைதான் தொடர்கிறது. உண்மையாக இதய சுத்தியுடன் தமிழ் தலைமைகள் ஒன்றுபடாவிட்டால் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதும் இல்லை, தமிழ் இனம் நிம்மதியாக வாழப்போவதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வவுனியாவில் நேற்று நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்….. தமிழினம் பெருந்துயரையும் அவலத்தையும் சந்தித்துள்ள இன்றைய நிலையிலும் எங்களுக்குள் ஒற்றுமை இல்லை. …

  3. உயிருக்கு போராடிய காகமும், காப்பாற்றிய மனிதரும் - நெருங்கிய நண்பர்களானது எப்படி? நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக 39 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசெல்வராஜ் மற்றும் அவரது நண்பரான காகம் ஒரு காகமும் ஒரு மனிதரும் நெருங்கிய நண்பர்கள். என்ன? நம்பும்படியாக இல்லையா? இக்கட்டுரையை படியுங்கள். புது…

  4. லிவிவ்: யூரோ கோப்பையின் பரபரப்பான போட்டியில் போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வீழ்த்தியது. இதன் மூலம் யூரோ கோப்பை தொடரில் ஜெர்மனி வெற்றி துவக்கத்தை பெற்றுள்ளது. மற்றொரு போட்டியில் நெதர்லாந்து அணியை டென்மார்க் வீழ்த்தியது. ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலையில் உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் 'குரூப் பி' பிரிவை சேர்ந்த போர்ச்சுகல், ஜெர்மனி அணிகள் மோதி கொண்டன. பரபரப்பான ஆட்டத்தில், துவக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்ட போதும், அவரால் ஒரு கோல் கூட…

  5. தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. கனடாவின் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர். இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர். ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுகள் உள்ளிட்டவைகளை ஞாபகம் வைத்து பின்னொரு நாளில் வெளிப்படுத்துவதில் பெண்களை காட்டிலும் ஆண்களே முன்னணியில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.நன்றி கனடா மிரர்

  6. [size=3] கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்விலும் வித்துடல் விதைப்பிலும் சுவிஸ் வாழ் எம் உறவுகள் கலந்து கொள்ளும் வகையில் சுவிசின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பேரூந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.[/size][size=3] [/size] WWW.Irruppu.com

  7. எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி! வவுனியா – நெடுங்கேணி, நைனாமடுப் பகுதியில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டி நேற்று இறந்து பிறந்துள்ளது. இதனைப் பார்வையிட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு அதிகமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/எட்டுக்கால்களுடன்-இறந்த/

  8. மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் ஹெரோயினுடன் சிக்கிய பூனை கொழும்பு- மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து ஹெரோயின் மற்றும் சிம் அட்டைகளை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பூனையின் ஊடாக ஹெரோயின் கடத்தல் இடம்பெறுவதாக சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் நினைவக அட்டை (Memory card) ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிக்கும் பொருட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…

  9. லாசப்பலில் சிங்களவர் மீது தாக்குதல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> லாசப்பல் பகுதியில் சிங்களவர் மீது அடி உதை,வாள்வெட்டு 5பேருக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி. அவுஸ்ரேலியாவில் நடந்த வன்முறைக்கு பதிலடி என்று தெரிவிப்பு லாச்சப்பலில் சிங்களவர்கள் மீது கடுமையா... லாசப்பல் பகுதியில் சிங்களவர் மீது அடி உதை,வாள்வெட்டு 5பேருக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி. அவுஸ்ரேலியாவில் நடந்த வன்முறைக்கு பதிலடி என்று தெரிவிப்பு லாச்சப்பலில் சிங்களவர்கள் மீது கடுமையான தாக்குதல் மானத் தமிழர்களால் நடாத்தப்பட்டள்ளது. இதில் வெட்டு காயங்கள் மற்றும் தடியடி காயங்கள் ஏற்பட்டுள்ளத…

    • 7 replies
    • 1.5k views
  10. ஈழதேசம் இணையத்தை நிர்மூலமாக்க தீவிர சதி! விழித்து எழுந்தவுடன் கிடைப்பது அல்ல வெற்றி வீழ்ந்து எழுந்தவுடன் கிடைப்பது தான் வெற்றி என்பதை ஒவ்வொருதடவையும் நிரூபித்து இணையப்பணியாற்றிவரும் ஈழதேசம் இணையம் எட்டாவது முறையாக தொடர் சதிமுயற்சியில் தாக்குண்டுள்ளது. எட்டாவது முயற்சியிலாவது தமது இலக்கை எப்படியாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்பதில் சதிகாரர்கள் தீவிரமாக இருப்பதை தற்போதைய நொடிப்பொழுது கூட தொடர்ந்துவரும் நாசவேலைகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழ் மொழியானது இன்று எம்மவர்களது வேற்று மொழி மோகத்தினால் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் அதில் இருந்து தடுத்து நிறுத்தி வளர்ச்சிப்பாதையில் தமிழ் மொழியை வழிநடாத்திக் கொண்டிருக்கும் முக்கிய இடத்தில் தமிழ் இணையங்கள் செயற்பட்டு வருகின…

  11. மட்டக்களப்பில்.... இரு குழுக்களுக்கிடையில், மோதல்: இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை! மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மாலை, சந்திவெளி- பாலையடித்தோனா பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 21 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நிகழ்ந்தமைக்கு தனிப்பட்ட பிரச்சினை மற்றும் கருத்து மோதல் ஆகியவையே காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப…

  12. விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பற்களை உடைத்த பெண் பயணி - வீடியோ வாஷிங்டன் போஸ்ட்டின் தகவல்படி தாக்குதலில் இரண்டு பற்களை இழந்த விமான பணிப்பெண் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 04, 2021 12:57 PM வாஷிங்டன் தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாக்ரமென்டோவில் இருந்து சான் டியாகோ சர்வதேச விமான நிலையம் சென்றது விமானம் தரையிறங்க தயாரானது. விமான பெண் உதவியாளர் பயணிகளிடம் விமானம் தரையிறங்குவதற்கு தயாராகி வருவதால் பயணிகள் தங்கள் சீட் பெல்டை அணிந்து கொள்ளுமாறு கூறினார். அப்போது 28 வயதான விவியன்னா குயினோனெஸ் என்ற பெண் விமானப் பணிப்பேண்ணின் முகத்தில் குத்தி உள்ளார்.மற்றொரு பயணி விமானப் பணிப்பெண்ணைத் தாக்குவதைத் தடுக்க முயன்றார், ஆனால் அ…

  13. பாலியல் இலஞ்சம் கோரிய பிரதேச செயலாளர்- புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை! செங்கலடி பிரதேச செயலாளர் பாலியல் இலஞ்சம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பில் இருந்து வருகைதந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் பிரதேச செயலகத்திற்கு சேவை பெறச் சென்ற பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற்றமை மற்றும் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவரை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியமை தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் கொழும்பு பொலிஸ்மா அதிபர் திணைக்களத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்ணால் முறைப்பாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று கொழும்பில் இருந்து சென்…

  14. மன்னாரில்... திருட்டு பழி சுமத்திய, 14 வயது சிறுவன் தற்கொலை- கொலை என தாயார் சந்தேகம்! மன்னார் – கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருடைய சடலம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளியடியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முரண்பாட்டின் காரணமாவே குறித்த சிறுவன் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை காலை, கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி…

  15. மன்னாரில் கடும் மழை- மக்களின் இயல்புநிலை பாதிப்பு. October 4, 2021 மன்னாரில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலையும் கடும் மழை பெய்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாந்திபுரம், சௌத்பார், ஜிம்றோன் நகர் உள்ளிட்ட சில கிராமங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளமையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது. https://globaltamilnews.net/2021/166795

  16. மேற்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞர் ஒருவர் உயிரிழப்பு- பெண்னொருவர் ஆபத்தான நிலையில் அனுமதி! மேற்கு லண்டனில் உள்ள ப்ரென்ட்ஃபோர்டில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வயோதிபப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இச்சம்பவத்திற்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுதொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. சுமார் 20 வயதுடைய நபர், இரவு 8 மணியளவில் அல்பானி பரேடில் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஸ்கொட்லாந்து யார்ட் அதிகாரிகள், அவரது அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும், அவரது குடும்பத்திற்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார். சடலம் பிரே…

  17. இப்போதெல்லாம் ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட ‘’சிம்’’ களை வைத்து பேசுவது சர்வசாதாரணமாகிவிட்டது. நவீன உலகத்தில் இதுவெல்லாம் சகஜம் தான் என்றாலும் இந்த “சிம்” வசதிகளைப் பயன்படுத்தியே ஊரையும் தங்கள் வீட்டையும் ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது தான் வியப்பானது. சரி விடயத்துக்கு வருவோம். அன்று அந்த பஸ்ஸில் சனகூட்டம். எப்படியோ எனது நண்பருக்கும் ஒரு சீட் கிடைத்துவிட்டது. அருகில் ஒரு வாலிபமிடுக்கோடு பெண் ஒருவர் இருந்தார். நண்பருக்கோ பெண் என்றால் சற்று அலர்ஜி. இருந்தாலும் வழியில்லை. கொஞ்சம் அவரை அவதானிக்கவும் தவறவில்லை. பஸ்ஸில் சனக்கூட்டம் என்பதால் இடையிடையே அந்தப் பெண் மீது உரசவும் நேர்ந்தது. என்ன செய்வது நிலைமை அப்படி. இப்போது அந்தப் பெண் தனது பையிலிருந்த கைத் தொலைபேச…

  18. தெஹிவளை மிருககாட்சிசாலையில் பறவைகளின் கண்காட்சியொன்று இடம்பெற்றபோது அங்கிருந்து தப்பிச் சென்ற கிளியொன்று ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கம்பளை தொலுவ பிரதேசத்திலுள்ள அதன் உரிமையாளரது வீட்டைச் சென்றடைந்துள்ளது. கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தெஹிவளை மிருககாட்சிசாலையில் கண்காட்சியொன்று நடைபெற்ற போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது எழுந்த சப்தத்தால் கண்காட்சியிலிருந்த கிளியொன்று அச்சமுற்று அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது. எலெக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஏழு வயதுக் கிளி பறவைக் கண்காட்சியில் பல சாகசங்களைச் செய்துள்ளது. தப்பிச் சென்ற கிளி 5 மாதங்களின் பின்னர் கிளியை சிறு வயதில் வளர்த்த கம்பளை தொலுவ பிரதேசத்…

  19. கோப்பாயில், அதிகாலையில்... தொடரும் வழிப்பறி கொள்ளைகள்! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோப்பாய் வீதியில் அதிகாலை 4 மணியளவில் முகம் முகத்தினை மறைத்தவாறு தொப்பி அணிந்துகொண்டு கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நிற்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது…

  20. செத்தல் மிளாகாயை காயவைக்கும் இடத்தில், எத்தனை எலிகள் ஒடித் தெரிகின்றது என்பதை பார்த்தவுடன், மிளாகாய்த் தூள் போடாமலே... சமையல் செய்ய வேண்டும் போலுள்ளது. எலிகளின் சிறுநீர், கழிவுகளால் கடுமையான தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது!

  21. பேஸ்புக்' கில் இணைந்திருந்த போது இடையூறு விளைவித்த குழந்தையை கொன்ற தாய், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அமெரிக்க வட புளோரிடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் ' பேஸ்புக் ' இணையத்தளத்தினை உபயோகிக்கும் போது இடைஞ்சலாக இருந்த தனது குழந்தையைக் கொல்ல நேரிட்டதாக, தனது குற்றத்தைத் தானே நேற்று ஒப்புக் கொண்டார். அலெக்ஸேண்ரா டொபியஸ் எனும் இப்பெண் 'பேஸ்புக்'கில் உள்ள ' பார்ம்வெளி ' எனும் பிரபல கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்துள்ளார். அந்நேரத்தில் இவரது 3 மாதங்களேயான குழந்தை அழுதுள்ளது. இதன்போது கோபமடைந்த இவர் ஆத்திரத்தில் குழந்தையைத் தூக்கி வேகமாக குலுக்கவே, அதன் தலை கணினியில் மோதி குழந்தை உயிரிழந்ததாக அலெக்ஸேண்ரா தெரிவித்துள்ளார். இவருக்கான தீர்ப்பு எதிர்வரும் டிச…

  22. வரலாறு: மிளகாய் 'அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரு?'னு கேட்டா... சட்டுனு 'கொலம்பஸ்' பேரைச் சொல்லிடுவீங்க. அதுவே, 'மிளகாயை அறிமுகப்படுத்தினது யாரு?'னு கேட்டாக்கா... மண்டை காயாதீங்க. அதுவும் கொலம்பஸ்தான்! செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி! குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு. 7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாய…

    • 2 replies
    • 1.3k views
  23. இந்தியாவில் எட்டு வயது சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு உயிரிழந்துள்ளது. சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பந்த்ராபத் கிராமத்தில் எட்டு வயது சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு ஒன்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜஷ்பூர் மாவட்டத்தில் தீபக் என கூறப்படும் 8 வயது சிறுவன் அவரது வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீபக்கை கடித்த நாகப்பாம்பு, அவரது கையைச் சுற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. சிறுவன் தனது கையை உதறிப்பார்த்தார், ஆனால் பாம்பு அவனது கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாத நிலையி…

  24. பதவியிலிருந்து ஓய்வு பெறும் புடின் – கருங்கடலில் இரகசிய மாளிகை உக்ரைனுடனான போரை தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய அதிபர் புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் என அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். புடின் ஆற்றும் உரைகளை எழுத்துவடிவமாக்கும் பதவியிலுள்ள Abbas Gallyamov என்பவர், புடின் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவார் என தெரிவித்துள்ளார். ஓய்வுக்குப் பின், கருங்கடலில் அமைந்துள்ள, கவர்ச்சி நடனங்களைக் கண்டுகளிக்கும் வசதியுடைய தனது இரகசிய மாளிகையில் தனது கடைசிக்காலத்தை செலவிட புடின் திட்டமிட்டிருப்பதாகவும் Abbas தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்ட…

  25. நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழவுபடுத்தி, முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த அவ்வதிபருக்கு உயர்குருதியமுக்க நோய் ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. இதேவேளை, குறித்த பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ள சிலர், அங்கிருந்த ஆசிரியர் ஒருவரை கடுமையாகப் பேசி, அவர் மீது தாக்குதல் நடத்தியதில், அவ்வாசிரியையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விரு சம்பவங்கை அடுத்து, குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அமைதியற்ற நிலைமை உருவாகியுள்ளது. இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து, அவர்கள் நேற்று நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.