Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மனைவியிடம் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தவர்கள், மற்றும் மனைவியிடம் பாலியல் உறவு கிடைக்காதவர்கள் என கணக்கெடுத்து அவர்களுக்கு வலைவிரித்து அவர்களுக்கு அன்பாகவும் ஆதரவாகவும் இருக்கும் தொழில் ஒன்றை புரிந்து வந்திருக்கின்றார் Rebecca Dakin என்ற 37 வயது அமெரிக்க பெண். இவர் இதுவரை சுமார் 1000 ஆண்களுடன் செக்ஸ் உறவு கொண்டதாக கூறும் Rebecca Dakin, ஒவ்வொரு ஆண்களிடம் £700 வரை வசூல் செய்வாராம். அல்லது ஒரு மணி நேரத்திற்கு £125 வரை சார்ஜ் செய்வாராம். இவர் இந்த தொழிலை கடந்த 2009 முதல் செய்து வருகிறாராம். சுமார் 4 ஆண்டுகளில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தில் சமூக சேவையும், உறவினர்களின் பணத்தேவையை பூர்த்தி செய்ததாககூறும் இவர்,தற்போது கவுன்சிலராக இருக்கிறார் என்பதும் …

  2. உக்ரைன் நாட்டில் எதிர்பாராத ஒரு அதிசய சம்பவம் அரங்கேறியது. அங்குள்ள ரெய்னி நகரில் ஏஞ்சலா என்ற 97 வயது மூதாட்டி அடுக்குமாடி வீட்டில் வசிக்கிறார். இவர் ஜன்னல் கதவை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெளியே தவறி விழுந்தார். ஆனாலும் அவர் சுதாரித்துக்கொண்டு ஜன்னலுக்கு சற்று கீழ் அமைந்துள்ள ஏ.சி. எந்திரத்தை கெட்டியாக பிடித்து கொண்டு அந்தரத்தில் தொங்கினார். அவருக்கும், தரைக்கும் இடைப்பட்ட தூரம் 30 அடி இருந்தது. இதை சாலையில் சென்ற வழிப்போக்கர் பார்த்து தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தார். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏணியின் உதவி மூலம் ஏறி மூதாட்டியை பத்திரமாக மீட்டார்கள். அவர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்ததால் மருத்துவமனையில் கொண்டு போய்…

    • 2 replies
    • 378 views
  3. தூத்துக்குடி: பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த 7 நாட்கள் படம் பார்த்திருப்பீர்கள். தன் மனைவியின் காதலனைத் தேடிப் பிடித்து மனைவியை ஒப்படைக்க முயல்வார் ராஜேஷ். கிட்டத்தட்ட அதே பாணியில் தூத்துக்குடியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் க்ளைமாக்ஸ்தான் வேறு! தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே எம் கோட்டூர் கீழத்தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் மாயகண்ணன். இவருக்கும் சென்னை ஈச்சக்காட்டை சேர்ந்த ராமர் மகள் அழக்கம்மாள் என்பவருக்கும் கடந்த பிப் 17ம் தேதி திருமணம நடந்தது. இருவரும் கோட்டூரில் குடும்பத்துடன் வசி்த்து வந்தனர். திருமணத்திற்கு பின்னர் அழகம்மாள் சோர்வுடன் காணப்பட்டார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி அழகம்மாள் திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.…

  4. ரஷ்யாவில் உள்ள ஒரு திடீர் காதலர் தன்னுடைய காதலியின் வருகைக்காக ஒரு மாதமாக ஒரே பஸ்நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கின்றார். ரஷ்யாவின் Irkutsk, என்ற நகரத்தை சேர்ந்த Besotted Vitaly என்ற 33 வயது நபர், பஸ்நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது ஒரு பெண்ணை கண்டார்.இரண்டு நிமிடங்களே பார்த்த Besotted Vitaly, அந்த பெண்ணின் காதல் பார்வையில் வீழ்ந்தார். அந்த நேரம் பார்த்து பேருந்து வந்துவிடவே, அடுத்த நாள் காலை 8 மணிக்கு இதே பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுமாறு அவரிடம் அந்த பெண் கூறிவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் மிகவும் பொறுப்பாக காலை 8 மணிக்கு வந்த Besotted Vitaly, தன்னுடைய திடீர்க்காதலியை காணாமல் திடுக்கிட்டார். அதுமுதல் வீட்டுக்கே போகாமல் கடந்த இரண்டு மாதங்களாக அதே பஸ…

    • 2 replies
    • 542 views
  5. இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக போரிட்டு இறந்த இந்தியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த இங்கிலாந்து அரசு தீர்மானித்துள்ளது.உலக வரலாற்றையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் கி.பி. 1939 - 1945ம் ஆண்டுகளுக்கிடையே தொடர்ந்து 6 ஆண்டு காலம் நடைபெற்றது.பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓரணியாகவும் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் இந்த போரில் ஈடுபட்டன. இந்த போரில் சுமார் 7 கோடி பேர் பலியானதாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஒன்றிணைந்த இந்தியா, பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோது, இந்த போரில் சுமார் 12 லட்சம் இந்தியர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஈடுபடுத்தினர். இவர்களில் 74 ஆயிரம் பேர் பிரிட்டிஷ் ஆட்சியி…

  6. இறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் விபரீதமான இறுதிச்சடங்கு முறை சீனாவில் கடந்த பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்தது. அந்த பயங்கர இறுதிசடங்கு முறையை தற்போது ஒரு பிரிவினர் மீண்டும் கடைபிடிக்க தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இறந்தவர்களை எரிப்பது, புதைப்பது என்ற இரு நடைமுறைகளே உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ளது. கடல் பயணத்தின்போது இறப்பவர்களின் உடலை கடலிலேயே வீசி கடல் சமாதி என்று அறிவிக்கின்றனர். எரிந்த சாம்பலை நதிகளில் வீசுவது, அதை இன்னும் அதிக வெப்பத்தில் கிரிஸ்டல் நிலைக்கு கொண்டு சென்று உருட்டி மாலையாக்கி இறந்தவர்கள் நினைவாக வைத்துக் கொள்வது போன்ற சடங்குகளை சிலர் கடைபிடிக்கின்றனர். இறந்தவர்கள் என்றாவது ஒருநாள் திரும்ப வரு…

  7. வேர்ட்பிரஸ் பவானையாளர்கள் கடவுச் சொற்களை மாற்றிப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள வேர்ட்பிரஸ் இணையப் பக்கங்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடவுச் சொற்களை ஊடறுப்பதன் மூலம் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 64 மில்லியன் இணையத் தளங்கள் வேர்ட்பிரஸ் இணைய மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. உலகின் 17 வீதமான இணைய தளங்கள் வேர்ட்பிரஸ் மென்பொருளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. அண்மைய நாட்களாக வேர்ட்பிரஸ் மென்பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இணையத் தளங்கள் தாக்குதலுக்கு இலக்கி வருவதாகவும், வலுவான கடவுச் சொற்களைப் பயன்படுத்துமாறும் மென்பொருளின் ஸ்தாபகர் Matt Mullenweg கோரியுள்ளார். htt…

    • 0 replies
    • 322 views
  8. கென்யாவின் அதிபராவதே தன வாழ்நாள் லட்சியம் எனக் கூறிக் கொண்டு உலா வரும் இவர், வேறு யாருமல்ல அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த சகோதரர் மாலிக் ஒபாமா. 12 முறை திருமணம் செய்து கொண்டவர். கடந்த வாரம் நடந்த கென்ய தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ள இவர் பிரித்தானிய பிரபல ஊடகமான டெய்லி மெயிலுக்கு பேட்டியளித்துள்ளார். தனது தம்பி அமெரிக்க அதிபரானது போல தானும் ஒரு நாள் கென்யாவின் அதிபராவது உறுதி என்கிறார் மாலிக். கடந்த வாரம் கென்யாவில் நடைபெற்ற தேர்தலில் சியாயா பகுதி ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டிருந்தார் மாலிக். இவரால் வெற்றி பெற முடியவில்லை. இதுகுறித்து ஊடகத்திடம் பேசும் போது , இதனை தோல்வியாக தான் நினைக்கவில்லை என்றும் இதுவே கென்யாவின் அதிபராவதற்கு தனக்கு படிக்கட்டாய் அமையப…

  9. கடற்கரையை அவசர மலசலகூடமாக பயன்படுத்திய ஒருவர் 196,000 ரூபாவை பறிகொடுத்த சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது. காலி – தங்கெதர என்னும் இடத்தைச் சேர்ந்த வியாபாரியான இவர் கடந்த 14ஆம் திகதி புதுவருட வியாபாரத்திலிருந்து கிடைத்த பணத்தை காலி நகரிலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக வந்துள்ளார். இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் காலியிலிருந்தபோது அவசரமாக இயற்கைக் கடமையை நிறைவேற்றுவதற்காக கடற்கரைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இவர் தனது காற்சட்டையை பாறையொன்றின் மீது வைத்துவிட்டு சென்றபோது காற்சட்டைப் பையிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13…

  10. முகநூல்: தனி மனிதன் உருவாக்கிய கருத்துக்களம்: 1,360 ஏக்கர் காடு! யார் இந்த மாமனிதர்? உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துக்கொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...! யார் இவர் ? அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்…

  11. ”விஜய்யுடன் ஒரு ஃபோட்டோ” - கியூவில் நின்ற ஆஸ்திரேலிய மக்கள்!(வீடியோ) தமிழ்த்திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் விஜய்க்கு இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பிற்குச் செல்லும் போது அங்குள்ள ரசிகர்களுடன் ஃபோட்டோவிற்கு போஸ் கொடுப்பது, ஆட்டோகிராஃப் போட்டு கொடுப்பது போன்றவற்றின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கிறார். சமீபத்தில் ‘தலைவா’ படப்பிடிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்ற விஜய், அங்குள்ள ரசிகர்களை சந்தித்திருக்கிறார். அந்தந்த நாடுகளில் வாழும் விஜய் ரசிகர்கள் விஜய் நடிக்கும் படங்கள் ரிலீஸாகும் போதும் அவற்றிற்கு மாபெரும் வரவேற்பு தருகிறார்கள். http://www.nakkheeran.in/#

    • 2 replies
    • 732 views
  12. திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 5வது ரக தலைமுடி ஏலம் போகாததால் 260 டன் தேங்கியுள்ளது.இதனால் விலையை குறைத்து ஏலம் விட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்படி சுவாமிக்கு தலைமுடிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த தலைமுடிகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. இருப்பினும் உலக சந்தையுடன் மதிப்பிடும்போது இந்த விலை குறைவு என கருதி ஆன்லைனில் ஏலம் விடமுடிவு செய்யப்பட்டது. அதன்படி மும்பையில் உள்ள எம்.எஸ்.டி.சி. நிறுவன உதவியுடன் ஆன்லைனில் கடந்த ஆண்டு ஏலம் விட்டது. இதில் ஆண்டுக்கு ரூ.150 கோடி கூடுதல் லாபத்துடன் ரூ.200 கோட…

  13. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்கிறது ஓர் முதுமொழி. ஆனால், இந்த திருமணத்தைப் பற்றி கற்பனை செய்து பார்க்கப்போனால், ‘சொர்க்கம் என்ற ஒன்று உண்டா?’ என்ற சந்தேகம் சிலருக்கு தோன்றக் கூடும். லண்டன் நகரில் வசித்தவர் மார்ஃபிட் (56). சிறுவனாக இருந்தபோது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், லெஸ்லி. இரண்டு மனைவியின் மூலமாக 5 குழந்தைகளைப் பெற்ற இவருக்கு 50 வயதில் ஓர் விபரீத ஆசை தோன்றியது. விபரீதத்தின் விளைவாக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்ட இவர், பெண்ணாக மாறி, தனது பெயரை ஹெலன் மார்ஃபிட் என்று மாற்றிக்கொண்டார். இதேபோல், கேட்டி என்ற பெயருடன் 5 குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்த 46 வயது பெண்ணையும் விபரீத ஆசை உந்தித் தள்ளியதன் விளைவாக அவரும் பாலியல் ஆபரேஷன் மூலம் ஆண…

  14. பிரிட்டனில், 35 ஆண்டுகளுக்கு முன் தவற விட்ட பணப்பை, தற்போது உரியவரிடம் கிடைத்து உள்ளது. பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் ஷையர் பகுதியைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் லேன், 58. இவர், 1978ம் ஆண்டு, பொழுதுபோக்கு நிலையத்தில், தன்னுடைய பணப்பையை தவற விட்டார். "இனி அது கிடைக்காது' என, முடிவு செய்தார் ரிச்சர்ட். சமீபத்தில், கேம்பிரிட்ஜ் ஷையர் பகுதியில் உள்ள, பொழுதுபோக்கு நிலையம் இடிக்கப்பட்டு, புது கட்டடம் கட்டப்பட்டது. அப்போது, லிப்ட் அருகே, ஒரு பணப்பை கிடப்பதை பார்த்த கட்டட கான்ட்ராக்டர், அதை போலீசிடம் ஒப்படைத்தார். அவர்கள், இந்த பணப்பை குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பை, ரிச்சர்ட்டின் தாயார் கேட்டார். உடனே, மகனுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தினார். பணப்பையை பெற்று கொண்ட ரிச்சர்ட்டு…

  15. வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள், கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமானது. இங்கிலாந்தில் வசிக்கும் 19 வயது யுவதியான பொப்பி ஒரு பிரச்சினையால் மிகவும் குழப்பமடைந்திருந்தாள். அவளது தாய் தந்தையரின் உடல் நிறமோ வெள்ளை. அவளுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே வெள்ளை நிறம். ஆனால், அவள் மட்டும் கறுப்பு. பொப்பி சட்ட கல்லூரி மாணவி. இங்கிலாந்தில் மென்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தாள். தன் நிற வேற்றுமையைக் கண்டு குழப்பமடைந்த அவள், இது தொடர்பில் தனது பெற்றோரிடம் முறையிட்டாள். மகளின் கேள்வியால், அவளது தாய் ஜெனியும், தந்தை கிளிப்பும் திகைத்து போனார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில் அவளிடம் உண்மையை கூறினார்கள். நீ எங்களுடைய சொந்த குழந்தையில்…

  16. பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் இதுவரை 700 கிலோ எடை கொண்ட 19.50 லட்சம் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு தங்க சங்கிலியில் மட்டுமே 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. ஏ முதல் எப் வரை பெயரிடப்பட்டுள்ள இந்த அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன. பி அறையை தவிர மற்ற 5 அறைகளும் திறக்கப்பட்டு அவற்றில் உள்ள பொக்கிஷங்களை உச்ச நீதிமன்றம் நியமித்த 6 பேர் அடங்கிய குழு மதிப்பீடு செய்து வருகிறது. இதன் விவரம் பற்றி 4 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, இதுவரை செய்யப்பட்ட மதிப்பீட்டின் விவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தி…

  17. டொரண்டோவில் மிகவும் பிரபலமாக இயங்கிக்கொண்டிருக்கும் Big Pete’s Swimming School, உரிமையாளர் பாலியல் குற்ற வழக்கில் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டார். இவர் 15 வயது பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் டொரண்டோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Peter Thimio என்ற 33 வயது நபர் Big Pete’s Swimming School என்ற நீச்சல் பள்ளியின் உரிமையாளர். இவர் GTA பகுதிகளில் நான்கு இடங்களில் நீச்சல் குள பள்ளியை வைத்து திறம்பட நடத்தி வருகிறார். இவரிடம் வேலை பார்த்த 15 வயது பெண் ஒருவர் நேற்று டொரண்டோ காவல்நிலையத்தில் அளித்த புகார் ஒன்றில், Peter Thimio தன்னை ஜூலை 2010 முதல் ஜுலை 2011 வரையான ஒரு ஆண்டு காலத்தில் பலமுறை பாலிய…

    • 0 replies
    • 567 views
  18. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய கனடிய பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு மார்பகங்களையும், சர்ஜரி மூலம் அகற்றி உயிர் பிழைத்தார். ஆனால் தனக்கு மார்பகங்கள் இல்லை என்ற குறையை போக்குவதற்காக மார்பகம் இருந்த இடத்தில் டாட்டூ வரைந்து அந்த இடத்தை அழகிய வண்ணங்களால் பூர்த்தி செய்தார். அவருடைய டாப்லெஸ் புகைப்படம் பேஸ்புக்கில் வெளிவந்து கிட்டத்தட்ட 90,000 நபர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். Kelly Davidson என்ற 34 வயது ஒண்டோரியோ பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் இருந்ததாக மருத்துவ பரிசோதனை மூலம் தெரிய வந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு மார்பகங்களையும் நீக்கினால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க முடியும் என்று வலியுறுத்தியதால், தன்னுடைய இரண்டு மார்ப…

    • 0 replies
    • 735 views
  19. தர்மபுரி: தர்மபுரி பேருந்து நிலையத்தில் பஸ்சில் அமர்ந்திருந்த தனது காதலியின் கழுத்தை திடீரென கரகரவென அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார் காதலன். கண் இமைக்கும் நேரத்தி்ல நடந்து விட்ட இந்த பயங்கர சம்பவத்தால் பேருந்து நிலையமே பரபரப்பாகிப் போனது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் சாம்ராஜ் (23). இதே பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்கிற அம்புலி. இவரது மகள் சந்தியா (23). இவர்கள் இரண்டுபேரும் அரியர் தேர்வு எழுத தர்மபுரி அரசு கலைகல்லூரிக்கு வந்துள்ளனர். தேர்வு முடிந்ததும் சந்தியா தர்மபுரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பென்னாகரம் வழியாக மேட்டூர் செல்லும் பஸ்சின் பின்பக்க சீட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். அப்போது நேற்…

  20. அரை நிர்வாணப் பெண்களின் ஆர்ப்பாட்டம்: அசராமல் வேடிக்கை பார்த்த புடின் ஜெர்மனி நாட்டின் ஹெனோவர் நகரில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியொன்றுக்கு வருகை தந்த ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடினை எதிர்த்து அரை நிர்வாண கோலத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டம் நடந்தபோது அந்த இடத்தில் ஜெர்மனியின் சான்செலர் ஏஞ்சலொ மேர்க்கலும் அருகிலிருந்தார். பெமன் என்ற பெண்கள் உரிமைகள் குழுவைச் சேர்ந்த 3 பெண்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று பேரும் மேலாடை எதையும் அணியவில்லை. புடின் உள்ளிட்ட குழுவினர் கண்காட்சி அரங்கத்திற்கு வந்தபோது திடீரென மூன்று பேரும் அவர்களை நோக்கிப் பாய்ந்தனர். அவர்களைப் பிடிக்க பொலிஸார் கடும…

  21. நெல்லை: செல்போனில் மலர்ந்த காதலியை தேடி பரிசு பொருட்களுடன் ஆலங்குளம் வந்த சென்னை வாலிபருக்கு இளம் பெண் டிமிக்கி கொடுத்தார். இதனால் அந்த வாலிபர் பரிதாபத்துக்கு உள்ளானார். திருச்சி புதூர் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் விஜய். இவர் சென்னையில் உள்ள ஐடி பார்க் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணில் விஜய் தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் பேசியவர் இளம்பெண் என்பது தெரிய வந்தது. அவரது வசீகர குரலில் மயங்கிய விஜய் அந்த பெண்ணுடன் பேசி காதலை வளர்த்தார். அவரை நேரில் பார்க்க துடித்த விஜய் தனது ஆசையை இளம் பெண்ணிடம் தெரிவித்தார். அதற்கு அந்த பெண் தான் ஆலங்குளத்தில் வசிப்பதாகவும், நீங்கள் அங…

  22. இங்கிலாந்து இளவரசர் வில்லயம், தற்போது கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவி கேட்டின் முதல் பிரசவத்தை வீடியோ எடுக்க முடிவு செய்துள்ளார். இளவரசர் வில்லியம் அவரது முதல் குழந்தை இந்த உலகில் பிறக்கும் இனிய தருணத்தை வீடியோவில் பதித்து அதை பல்லாண்டுகளுக்கு பாதுகாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருக்கிறார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் கேட் மிடில்டன், பிரசவ வீடியோவால் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனை வரக்கூடும் என்னும் அச்சத்தில் வில்லியமின் இந்த வினோத ஆசைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/08/1130408054_1.htm

  23. கர்நாடக மாநிலத்தில் தலைமை மடாதிபதி தற்கொலை செய்த மனவேதனை தாங்காமல், 3 இளைய மடாதிபதிகள் இன்று யாக குண்டம் தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் பழமையான சவ்லி மடம் உள்ளது. இது ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்களின் மடம். தலைமை மாடதிபதியாக கணேஷ் அவதூத மகாசுவாமி இருந்தார். இளைய மடாதிபதியாக இருந்த ஜீவானந்த சுவாமி கடந்த ஜனவரி மாதம் மடத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாடதிபதி தான் அவரை கொலை செய்துவிட்டார் என்று பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மறுப்பு தெரிவித்தும் பக்தர்கள் ஏற்கவில்லை. இதனால் மனம் உடைந்த தலைமை மடாதிபதி, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு …

  24. கமலா ஹாரீஸ் பற்றி கமென்ட்... மன்னிப்பு கேட்டார் ஒபாமா அட்டர்னி ஜெனரல் கமலா ஹரீஸ் பற்றி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகப் பணிபுரிந்து வருபவர் இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ். வியாழன் அன்று, வாஷிங்டனில் அதிபர் ஒபாமாவுடன் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, ஒபாமா அவரது பணியாற்றும் திறமையையும், அழகையும் புகழ்ந்தார். சமூக வலைத்தளங்கள், இணையதளங்களிலும் உடனடியாக இது தொடர்பான செய்திகள் வெளியாகின. முக்கிய பொறுப்பில் இருப்பவரின் அழகை அதிபர் வெளிப்படையாக புகழ்ந்தது தவறான செயலாகும் என்ற கருத்து எழுந்தது. பொது மேடையில் பெண்களின் அழகை வர்ணிப்பது அதிபர்…

    • 9 replies
    • 804 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.