செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7156 topics in this forum
-
ஈரோடு: ஆண்மை குறைபாட்டை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக கணவன் உட்பட 4 பேர் மீது போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர் குமார் வயது 32. இவரது மனைவி பெயர் ஸ்ரீவித்யா 24. இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் வெகு விமர்சியாக திருமணம் நடந்தது. முதலிரவு அன்று குமார் ஸ்ரீவித்யாவை புறக்கணித்துள்ளார். கூச்ச சுபாவத்தால் தான் குமார் இப்படி நடந்து கொள்கிறார், போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று ஸ்ரீவித்யா இருந்திருக்கிறார். ஆனால் அதன்பிறகும் இரவில் ஸ்ரீவித்யாவை தினமும் குமார் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். இதில் வெறுத்துப்போன ஸ்ரீவித்யா ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். ஸ்ரீவித்யாவின் பெற்ற…
-
- 45 replies
- 5.7k views
-
-
சீனாவில் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் வேறு இடத்தில் பணி செய்ய செல்வதும், வெளிநாட்டினர் பலர் வேலை செய்ய சீனாவுக்கு வருவதும் அதிகரித்துள்ளது. இதுபோல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.இவர்கள் சொந்த ஊரை விட்டு பல மாதங்கள், பல ஆண்டுகள் வேலை செய்வதால் மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வேறு இடங்களில் வந்து சீனாவில் வேலை செய்யும் ஊழியர்கள், தற்காலிக திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாக…
-
- 2 replies
- 382 views
-
-
வேலை செய்யும் இடங்களில்,பல சுவாரசியமான சம்பவங்களை சந்தித்திருப்போம். அவற்றினைப் பகிர்வோமா. £250, 000 செலவு வைத்த ஈமெயில். இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னர் மேலை நாடுகளில் ஒரு பதட்டம். குறிப்பாக முஸ்லிம் பெயர் கொண்ட, அதிகமாக தமது மத நம்பிக்கைகள் குறித்து வெளிப்பாடாக பேசுவோர் குறித்த பதட்டம் கூடுதலாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்த 'Daimilar-Benz' கொம்பனியில் (அதுதான் நம்ம மேர்சீடிஸ் கார் கம்பெனி) ஒரு மத்திய கிழக்கு சேர்ந்த ஒருவர், help desk support ல் வேலை செய்து கொண்டிருந்தார். தமது மத நம்பிக்கைகள் குறித்து பீத்திக் கொண்டிருப்பார். அவரது முகாமையாளருக்கு, HR பகுதியில் இருந்து ஒரு மெயில் வந்து இருந்தது, குறித்த நபர் குறித்து கவனமாக இருக்குமாறும், எதற்கும் ஒரு கண் அவ…
-
- 0 replies
- 565 views
-
-
புதுடில்லி: வீட்டிற்கு வந்த மருமகளாக வந்தவள் குடும்பத்தில் ஒருவர் தான். மாறாக அவளை வீட்டு வேலைக்காரியாக நினைக்ககூடாது என, கணவன் கொடுமையால் மனைவி இறந்த வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு சிறை தண்டணையும் விதித்தது. திருமண பந்தத்தில் ஒன்றினைந்த் ஆண், பெண் ஆகியோர் குடும்பம் என் வட்டத்தில் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தில் சமூகத்தில் போற்றப்படுகின்றனர். ஆனால் இன்றோ கணவனால் மனைவி பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றாள். மனைவியை கணவனின் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரியாக பாவிக்கும் கொடூரம் நடந்து வருகிறது. மனைவியை பல வழிகளில் அடித்து சித்ரவதை செய்த சம்பவத்தில் அவர் மனதளாமல் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மனைவியின் பெற்ற…
-
- 4 replies
- 1.1k views
-
-
அரியலூர்: சின்ன சின்ன சண்டைக்கெல்லாம் கொலை செய்தால் உலகம் என்னாவது?, அந்த வகையில் சரக்கடிக்க சைடிஸ்க்காக ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்துள்ளதுதான் வேதனை. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இடையகுறிச்சியை சேர்ந்தவர் குமார் (28). இவரது மனைவி அம்சவள்ளி (25). இவர்களுக்கு அர்ச்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. இவர் சேலத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான இடையக்குறிச்சிக்கு வந்தார். கடந்த 12ஆம் தேதி குமாரும் அவரது நண்பர் சக்திவேலும் இடையகுறிச்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். அப்போது, கடலூர் மாவட்டம் பிலாந்துறையை சேர்ந்த இளையராஜா என்பவர் இடையகுறிச்சியில் உள்ள தனது பெரியம்மா வீட்ட…
-
- 0 replies
- 427 views
-
-
சுயமரியாதைக்காக என் காதலியையே இழந்தேன்" என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். கோபாலபுரத்தில் கருணாநிதி நடத்தி வைத்த திருமண நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, இன்றைக்கு மே 14. இதே நாளில், செப்டம்பரில் 70 ஆண்டுகளுக்கு முன்பு என் திருமணம் நடைபெற்றது. கோபாலபுரம் இல்லத்தில் மாத்திரம் இதுவரை நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கு அதிகம். சென்னை தவிர பல பகுதிகளில் நான் நடத்தி வைத்த திருமணங்கள் என்று பார்த்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டிருக்கும். ஒரு காலத்தில் இப்படிப்பட்ட சுயமரியாதைத் திருமணங்களை நடத்திக் கொள்ள யாரும் முன் வர மாட்டார்கள். தற்போது அப்படி நடத்திக் கொள்ள முன் வருகிறவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே உள்ளது. என்னைப் பொறுத்தவரை 13-9-1944ல் …
-
- 9 replies
- 826 views
-
-
கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்றில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு தமது அந்தரங்கத்தைக் காட்டி தொந்தரவு செய்த நபரொருவரை மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக மாணவி ஏனைய பயணிகளுக்கு இது குறித்து தெரிவித்ததை அடுத்து பயணிகளும் பஸ் சாரதியும் சம்பந்தப்பட்ட நபரை நையப்புடைத்து மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர் மஹபாகே பொலிஸார் வத்தளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=4567
-
- 0 replies
- 376 views
-
-
தேனி: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மூடப்பட்ட அரசு மதுபானக் கடையைத் திறக்கக் கோரி குடிகாரர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடமலைக்குண்டு அருகே மூலக்கடை கிராமத்தில் அரசு மதுபான கடை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் இந்தக் கடையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். இதையடுத்து அடுத்த நாளே கடை மூடப்பட்டது. இதனால் குடிகாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இன்று காலை டாஸ்மாக் கடையைத் திறக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஆண்கள் பலர் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களைப் பார்த்து கோபத்துடன், ஏ…
-
- 6 replies
- 672 views
-
-
காதலனுடன் பதிவு திருமணம் செய்துக்கொண்ட ஒன்றை மணி நேரத்திற்குள் மணப்பெண்( காதலி) சாட்சியாளருடன் ஓடிப்போன சம்பவமொன்று கம்பளை மாவத்துற பகுதியில் இடம்பெற்றுள்ளது. கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது விசேட சித்திகளை (ஏ) பெற்ற மாணவியே இவ்வாறு ஓடிவிட்டார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கண்டியிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் பயின்று வந்த இந்த மாணவி கண்டியிலுள்ள மற்றுமொரு பிரபல பாடசாலையில் உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியை காதலித்துவந்துள்ளார். இருவரும் இரவொன்றை தனியாக கழிக்கவிரும்பினர் இந்நிலையில் காதலியின் நண்பி ஒருவரின் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர். வீட்டிலிருந்தவர்கள் இவர்கள் இருவரையும் தனியாக தங்கவைப்பதற்கு அனுமதிக்க மறுத்துள்ளதுடன் அதன் தா…
-
- 8 replies
- 699 views
-
-
இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகளையும் இங்கே பதிந்துளேன். பின் வரும் தகவல்களை வைத்து யூத-விடுமுறை வரலாற்றை சுருக்கமாக கூறி விட முடியும் . ஏன் யூத எதிர்ப்பு பல நாடுகளில் மிகவும் பரவலாக உள்ளது அதுவும் பல கால கட்டங்களில் மற்றும் பல காரணங்களுக்காக?. இப்படி பல கேள்விகள் எழுந்ததால் மக்களும் ,"ஒருவேளை யூதர்கள் மற்றும் யூத மதத்தின் மீது தான் ஏதோ தவறு உள்ளது" என்று எண்ண தொடங்கினர். யூதர்களை மக்கள் வெறுப்பதற்கான காரணமாக வரலாற்றாசிரியர்கள் ஆறு காரணங்களை முன் வைக்கின்றனர்.ஆண்டுகள் 250 CE மற்றும் 1948 CE இடையே , கிட்டதட்ட 1,700 ஆண்டுகளுக்கு யூதர்கள் ஐரோப்பாவில் உள்ள எண…
-
- 3 replies
- 2.2k views
-
-
புதிய ஆங்கில இணைய தள பத்திரிகை ஒன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிணமாகத் தேவை என்ற தலைப்பிட்டு முழுப்பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ஒபாமாவின் படம் அச்சிடப்பட்டு அதில் மக்களை கொன்ற கொலைகாரன் பராக் ஒபாமா. பிணமாக மட்டும் தேவை. என்ற வாசகங்கள் உள்ளன. இந்த 80 பக்க பத்திரிகையில், உலகில் உள்ள இஸ்லாமியர்கள், அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களை தடுக்க முன்வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையின் பெயர் ஆசான் - எ கால் டு ஜிகாத் என்று உள்ளது. இதில் தலிபான் இன் குஹ்ரசன் என்ற வார்த்தையும் அனைத்து பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள குஹ்ரசன் என்ற வார்த்தை ஆப்கனிஸ்தான், வடமேற்கு பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற பகுத…
-
- 1 reply
- 2.7k views
-
-
கோபன்ஹேகன்: டென்மார்க்கில் தனியே வசித்து வந்த தாத்தா ஒருவரின் வீட்டு குளிர்சாதன பெட்டியில் 30 நாய்களின் உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. டென்மார்க்கின் வடக்கு பகுதியில் டோயரிங் நகரில் ஒரு வீட்டில் இருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் அடிக்கடி கேட்டு வந்ததால், இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், அந்த வீட்டில் தனியே வசித்து வரும் 66 வயது முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அக்கம்பக்கத்தினரின் அமைதியை கெடுக்கும் வகையில் இடையூறு செய்யும் வண்ணம் நடந்துகொண்டதற்காக அவருக்கு கோர்ட்டில் கடந்த மாதம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து நாய்கள் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அபராதம் செலுத்த அவர் மறுத்து வந்தார். இந்நிலையி…
-
- 0 replies
- 621 views
-
-
ஜெருசலம்: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட்,ஃபேஸ்புக், ட்விட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். நான் குளிக்கப் போகிறேன், சாப்பிடப் போகிறேன், தூங்கப் போகிறேன் என்று தாங்கள் செய்யும் அனைத்தையும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் மக்கள் தெரிவிக்கின்றனர். பலர் அலுவலகத்திலும் வேலைக்கு இடையே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு அவர்களால் இந்த சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மக்கள் மனநிலையை பாதிக்கிறது …
-
- 2 replies
- 342 views
-
-
ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை மாற்றுவதற்காக, லாட்டரிச் சீட்டு வாங்கிய, ஓய்வு பெற்ற, நர்சுக்கு, 2.5 கோடி ரூபாயும், 101 சவரன் தங்க நகையும், பரிசாக கிடைத்துள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர், பொன்னம்மா. அங்குள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில், நர்சாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். சில தினங்களுக்கு முன், தன்னிடமிருந்த, 1,000 ரூபாய்க்கு சில்லரை மாற்றுவதற்காக, வீட்டுக்கு அருகேயுள்ள கடைக்கு சென்றார். அப்போது, அங்கு, சித்திரை விஷுவை முன்னிட்டு, ஒரு வாகனத்தில், லாட்டரிச் சீட்டு விற்பனை செய்து கொண்டி ருந்தனர். இதைப்பார்த்த, பொன்னம்மா, சில்லரை மாற்றுவதற்காக, கடைக்கு செல்லும் முடிவை கைவிட்டு, லாட் டரிச் சீட்டு விற்கும் வாகனத்துக்கு சென்றார்.தன்னிடமிருந்த, 1,000 ரூபாயை கொட…
-
- 3 replies
- 847 views
-
-
பிரான்ஸின் தென்பகுதியில் பிறந்த மேனியாக திரிந்து அவ்விடத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மடத்தில் இருந்த கன்னிகாஸ்திரிகளுக்கு சங்கடத்தைத் தந்த ஐரிஷ்காரர் ஒருவரை பொலிசார் கண்டித்துள்ளனர். ப்ரொவான்ஸ் பிராந்தியத்து மலைக்குன்றுகளில் அமைந்துள்ள கன்னிகாஸ்திரி மடம் ஒன்றுக்கு அருகே ஒரு ஆண் நிர்வாணமாக அலைகிறார் என்று பலமுறை பொலிசாருக்கு ஒரு கன்னிகாஸ்திரி புகார் கூறியிருந்ததாக அந்த மடம் சார்பாகப் பேசவல்லவர் கூறினார். காற்றாட நடப்பதற்காக தான் அவ்விடத்துக்குச் சென்றதாகக் கூறும் இந்த நாற்பத்து ஆறு வயது ஆண், தனது நடத்தைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மலைச்சாரலில் இருந்து இயற்கையை ரசிப்பது நான் மட்டும் அல்ல, அங்கு மற்றவர்களும் இருந்தார்கள் என்பதை அந்நேரம் தான் உணர்ந்திருக்கவில்லை என பொல…
-
- 0 replies
- 470 views
-
-
இணையத்தில் ஆபாச தளங்கள்: சுவாரஸ்ய தகவல்கள்! இணையத்தில் ஆபாச தளங்களை பார்வையிடுவோரின் எண்ணிக்கை தொடர்பில் புதிய தகவல்கள் சில வெளியிடப்பட்டுள்ளன. பெயிண்ட் பொட்டல் என்ற ஆபாச தளமொன்றே இவ் ஆய்வினை நடத்தியுள்ளது. குறித்த ஆய்வின் முடிவிலிருந்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் குறிப்பிடும் படியான சில முக்கியமான தகவல்கள், இணையத்தில் பரிமாற்றப்படும் 30% தரவுகள் ஆபாச தளங்களுடன் தொடர்புடையவை. ஆபாச தளங்களை பார்வையிடுவோரில் 70% ஆண்கள் என்பதுடன் 30% பெண்கள். சராசரியாக ஒருவர் 12 நிமிடங்களை இத்தகைய தளங்களில் செலவிடுவதுடன் மாதாந்தம் 7.5 தடவைகள் இவற்றை பார்வையிடுகின்றார். நெட்பிலிக்ஸ். கொம், அமேசன்.கொம், டுவிட்டர்.கொம் போன்ற தளங்களை விட ஆபாச தளங்களுக்கு வருகை தரும் ய…
-
- 7 replies
- 1.1k views
-
-
வெசாக் கொண்டாட்டத்தின் போது தானம் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாட இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கொலைச்செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவர் ஒருவரே சக மாணவனால் கத்தியால் குத்தி கொலைச்செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. பானாகொட கொம்பெலா பிரதேசத்தில் தானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பிலான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதன் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மாணவர்கள் சிலரிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். குறித்த மாணவன் வலுக்கி விழுந்தே மரணமடைந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்மாக பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 460 views
-
-
தேசப்பிதா மகாத்மா காந்தியின் ஒரு துளி ரத்தம் பத்து இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டனில் உள்ள முல்லோக் மையத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய 50 நினைவு பொருட்கள், வரும் 21ம் திகதியன்று ஏலம் விடப்படவுள்ளது. இவற்றில் காந்தியின் தோல் செருப்புகள், மிகவும் விரும்பி அணியும் நீண்ட துண்டு, போர்வை, கோப்பை, கரண்டி, முள்கரண்டி மற்றும் கப் உள்ளிட்டவையும் அடங்கும். இவை தவிர காந்தியின் ரத்த துளியும் கூட ஏலம் விடப்படவுள்ளது. இந்த ரத்தத்துளி அவர் தானம் செய்வதற்கு முன்பு எடுத்து பரிசோதிக்கப்பட்டதாகும். கடந்த 1924ம் ஆண்டு சுமதி முகர்ஜி என்பவருக்கு காந்தி ரத்த தானம் செய்தார். அப்பொழுது அவரது ரத்தம் ஒரு கண்ணாடி சிலேடில் எடுத்து மைக்ராஸ் கோப்பில் வ…
-
- 0 replies
- 362 views
-
-
லண்டன்: சமையலுக்கு பயன்படுத்த வாங்கி வந்த கத்திரிக்காயில் ஒன்று யானை முக வடிவத்தில் விநாயகர் கடவுள் போன்று இருந்ததால் அதை மக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லிசெஸ்டர் என்ற இடத்தை சேர்ந்த பிரபுல் விஸ்ராம் (61) என்ற தொழில் அதிபர், சமையல் தொழிலும் செய்து வருகிறார். இவர் சமையலுக்கு பயன்படுத்த வாங்கி வந்த கத்தரிக்காயில் ஒன்று யானை முக வடிவத்தில் விநாயகர் கடவுள் போன்று இருந்ததாம். அதை அவரது மனைவி ரேகா பார்த்து விஸ்ராமிடம் தெரிவித்துள்ளார். விஸ்ராம் குடும்பத்தினர் அந்த கத்தரிக்காயை பயபக்தியுடன் வணங்கினர். மேலும் அதை அருகில் இருந்த கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்துள்ளனர். இதற்கிடையே அதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியில் தங்கியிருக்கும் …
-
- 21 replies
- 2.7k views
-
-
சாப்பாட்டு பொதியில் 'அவித்த நத்தை' இருந்தமையினால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எல்பிட்டிய நீதவான் 3000 ரூபா தண்டம் விதித்துள்ளார். எல்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் நீல் குமாரவிற்கே எல்பிட்டிய நீதவான் கேசர சமர தீவாகர மேற்கண்டவாறு தண்டம் விதித்துள்ளார். நீதிமன்றில் ஆஜராகிய எல்பிட்டிய சுகாதார பரிசோதகர் யு.கே.டி ரஞ்சித் வைத்தியசாலையிலுள்ள குறித்த சிற்றுண்டிச்சாலையில் தாதியொருவர் 40 ரூபாவிற்கு உணவு பொதியை கொள்வனவு செய்துள்ளார். அந்த உணவு பொதியில் சுமார் 30-35 கிராம் நிறையில் அவித்த நத்தையொன்று இருந்தது என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/65900--3000-.html
-
- 2 replies
- 469 views
-
-
கேரளா திருவனந்தபுரம் கே.எப்.சி. கோழியில் புழு இருந்ததாக வந்த புகாரை அடுத்து அங்கு வந்த உணவு ஆராய்ச்சி அதிகாரிகள் அங்குள்ள கோழிகளில் புழுக்கள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கைப்பற்றிதோடு ஐந்து மாதத்திற்கு மேற்பட்ட கோழிகள் இருந்ததற்கும் ஆதாரத்தைக் கைப்பற்றினர். அத்துடன் கேரளா திருவனந்தபுரம் கே.எப்.சி.யை இழுத்து மூடியுள்ளார்கள். மேலும் இந்தியா முழுவதும் உள்ள கே.எப்.சிக்களில் சோதனைகள் நடைபெற ஆரம்பித்துள்ளன. இது மிக வேகமாக இந்திய மக்களிடையே பிரபல்யம் அடைந்து வந்த கே.எப்.சி நிறுவனத்திற்கு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளது. http://www.manithan.com/news/20130502106789
-
- 57 replies
- 3.9k views
-
-
ஐஸ்வர்யா - அபிஷேக் பச்சன் அபிஷேக் பச்சனுக்கு இப்போது 37 வயதாகிறது. இவர் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை விட இரண்டு வயது இளையவர். ஐஸ்வர்யா – தனுஷ் சூப்பர் ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா தன்னை விட மூன்று வயது குறைவான தனுஷை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஃபாராகான் - சிரிஷ் பிரபல இயக்குநர் ஃபாராகான் தன்னைவிட 8 வயது குறைவான சிரீஷ் ஐ திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை விட மூன்று மாதங்கள் மூத்தவராம். ஆனால் இருவருக்கும் இடையே பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியாது. அஞ்சலி - சச்சின் டெண்டுல்கர் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவியை விட 5 வயது இளையவராம் ரோ…
-
- 5 replies
- 4.1k views
-
-
அமெரிக்காவின் கிராமப் பகுதியான கென்டக்கியில், 5 வயது சிறுவன், தனது 2 வயது சகோதரியை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வன விலங்குகளை வேட்டையாடுதல், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மக்கள் வசிக்கும் கென்டக்கியில், பிள்ளைகள் வளர்ந்து 5 வயது ஆவதற்குள், அவர்களுக்கு என்று குடும்ப உறுப்பினர்கள் துப்பாக்கியை வாங்கிக் கொடுத்து பயிற்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில், கிறிஸ்டியன் என்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கி எதிர்பாராத விதமாக அவனது கையில் கிடைத்தது. அவன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது சகோதரியை விளையாட்டாக சுட, அந்த துப்பாக்கியில் இருந்து வெளியே வந்த குண்டு, சிறுமியின் நெஞ்சை துளைத்துச் சென்றது. இந்த சம்பவத்தால், அவரது குடும்பத…
-
- 4 replies
- 423 views
-
-
ராணுவ வீரரை கடத்திச் சென்று 4 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த பெண்கள் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 19ம்தேதி நள்ளிரவு மாணிக்காலாந்து மாகாணத்தில் உள்ள முடாரே நகரில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி 'லிப்ட்' கேட்டார். காரினுள் இருந்த ஒரு ஆணும், 2 பெண்களும் அவரை ஏற்றிக்கொண்டனர். சற்றுதூரம் சென்றதும் கார் வேறு வழியாக செல்வதைக் கண்ட ராணுவ வீரர், தன்னை இறக்கிவிடும் படி கூறியபோது, காரை ஓட்டிய நபர் கத்தியைக் காட்டி மிரட்டினார். பெண்களில் ஒருத்தி அவரது கண்ணை துணியால் கட்டினாள். அடையாளம் தெரியாத இடத்தில் தனிமையான ஒரு வீட்டிற்கு ராணுவ வீரரை அவர்கள் கடத்திச் சென்றனர். அங்கு அவரது ஆடைகளை கழற்றி, நிர்வாணப்படுத்தி செல்போன், ப…
-
- 26 replies
- 2.3k views
-
-
ஜெய்ப்பூர்: இணையதளம் மூலமாக அறிமுகமாகி திருமணம் செய்த காதல் ஜோடி, கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான அடுத்த நாளே, பிரிந்த, பரபரப்பான சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர் லால். அசாமில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், ராஜஸ்தானை சேர்ந்த, சீமா என்ற இளம் பெண்ணுக்கும், ஒரு மாதத்துக்கு முன், திருமண ஏற்பாடுகளை செய்து தரும், இணையதளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது.இதையடுத்து, ஒருவரை ஒருவர், நேரில் பார்க்காமலேயே, சமூக வலைத் தளங்கள் மூலமாக, தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அடுத்த சில நாட்களிலேயே, இருவருக்கும், காதல் மலர்ந்து விட்டது. இதையடுத்து, திருமணம் செய்ய, முடிவு செய்தனர்.இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில், சமீபத்தில், ஒரு கோவிலில், இருவரும் திருமண…
-
- 16 replies
- 3.4k views
-