செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
இணையதள தேடல் இயந்திர ஜாம்பவானான கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள ஆளில்லாமல் ஓடும் தானியங்கி கார் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரின் அருகே விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லா தேடல்களுக்கும் விடைதரும் ஜாம்பவானான கூகுள் கடந்த சில வருடங்களாகவே பல்வேறு தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது நீண்ட நாள் ஆய்வின் பலனாக தானியங்கி கார்களை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காரில் ஸ்டியரிங், ஆக்ஸிலேட்டர், பிரேக் என்று எதுவும் இல்லை, ஏனென்றால், இது எதுவும் இதற்குத் தேவையில்லை. எங்களது மென்பொருள் மற்றும் சென்சார்களே எல்லா வேலையையும் பார்த்துக் கொள்ளும். இந்த கார்கள் அமெரிக்காவின் சில பகுதிகளில் சோதனை முயற்சியாக இயக்கப்பட…
-
- 0 replies
- 326 views
-
-
‘சவக்குழிக்குள் குளவிக் கொட்டு; பெட்டியை காத்தது நாய்’ குளவிக் கொட்டுக்குப் பயந்து, சவப்பெட்டியை நடுரோட்டிலேயே வைத்துவிட்டு, தப்பியோடி சவக்குழிக்குள் குதித்தவர்கள் மீது குளவிகள் கடுமையாகக் கொட்டிய சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள், கலஹா மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடுவீதியில் அநாதரவாக கிடந்த சவப்பெட்டியை, குளவிக் கொட்டு, ஓயும் வரையிலும், நாயொன்று பாதுகாத்தும் உள்ளது. கம்பளை, புபுரஸ்ஸ, லேவலன் தோட்டத்தில், கடந்த 11ஆம் திகதியன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 79 வயதான…
-
- 0 replies
- 326 views
-
-
முள்ளிக்குளம் கிராமத்தை சுற்றிவர கடற்படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்-அதிர்ச்சித்தகவல்.மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளது. இடம் பெற்ற யுத்தத்தின் போது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உற்பட முசலியில் உள்ள அணைத்து கிராம மக்களும் இடம் பெயர்ந்து சென்றனர். இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்த நிலையில் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் கடந்த 2009 ஆம்2010 ஆம் ஆண்டுகளில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இதன் போது கரடிக்குளி…
-
- 0 replies
- 326 views
-
-
-
5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அடித்து கொலை! பாணந்துறை- மொரன்துட்டுவ பகுதியில் 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் சிறுமியின் உறவினர்களாளேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 45 வயதானவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறுமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வருகை தந்த சந்தேகநபர், அந்த சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். குறித்த சம்பவத்தை அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமன்மார் சந்தேகநபரை கொட்டனால் அடித்து கொன்றுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/5-வயது-…
-
- 0 replies
- 326 views
-
-
ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன. பாதுகாவலரால் தவறுதலாக மையத்தின் கதவு திறக்கப்பட்டதாகவும், இந்த குரங்குகள் தப்பிச் சென்றதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குறித்த பகுதியில் குரங்கு கூட்டத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கரோலினா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் தப்பியோடிய குரங்குகளைக் கண்டால், உடனடியாகத் தெரிவிக்…
-
- 1 reply
- 326 views
- 1 follower
-
-
அலங்கார செடிகளை தின்ற 8 கழுதைகளுக்கு 4 நாள் ஜெயில் தண்டனை. உத்தரப்பிரதேசத்தில் சிறை வளாகத்தில் இருந்த செடிகளைத் தின்றதற்காக 8 கழுதைகளுக்கு 4 நாட்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஜலாவூன் மாவட்டத்தில் உராய் சிறை வளாகத்தில் விலை உயர்ந்த செடிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றின் மதிப்பு ரூ5 லட்சம் என கூறப்படுகிறது. அழகுக்காக வைக்கப்பட்டிருந்த இந்த செடிகளை 8 கழுதைகள் மேய்ந்துவிட்டன. இதில் கடுப்பாகிப் போன சிறைத்துறை அதிகாரி கழுதைகள் மீது புகார் கொடுக்க போலீசாரும் 8 கழுதைகளை 'கைது செய்து' உராய் சிறைக்குள் அடைத்து வைத்தனர்.இதனிடையே கழுதைகளை காணாத உரிமையாளர் கமலேஷ் அவற்றை தேடி அலைந்துள்ளார். பின்னர் உராய் சிறையில் கழுதைகள் …
-
- 2 replies
- 326 views
-
-
களுத்துறை பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயது சிறுமியை சுமார் 30 நிமிட பிரயத்தனத்திற்கு பின்னர் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்னர். களுத்துறை கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார். பாடசாலையின் கழிவறை அமைப்புக்கும் சுவருக்கும் இடையே சிறுமி சிக்கிக் கொண்டதாகவும், களுத்துறை மாநகர தீயணைப்புத் துறையின் அவசர ஆம்புலன்ஸ் வந்து ஸ்பேடர் என்ற அதிநவீன கருவியின் உதவியுடன் சிறுமியை காப்பாற்றியதாகவும் தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/268308
-
- 2 replies
- 326 views
- 1 follower
-
-
தமிழினம் தங்களது வாழ் நாளிலேயே ஈகத்தின் உன்னதங்களையும், வீரத்தின் விளை நிலத்தையும், இலட்சியங்களின் உறுதியையும், அர்ப்பணிப்புக்களின் அணிவகுப்புக்களையும், கூடவே துரோகங்களின் குழிபறிப்புக்களையும், எதிரிகளின் கொடூரங்களையும் தரிசனம் செய்து வருகின்றது. எங்கள் ஈழத்தின் கல்லறைகள் யாவும் வரலாற்றின் பதிவுகளாக மட்டும் அல்லாமல், துரோகங்களின் பதிவுகளாகவும் சாட்சி பகர்கின்றன. தமிழீழ விடுதலைப் போரில் ஈகங்கள் மட்டுமல்ல, துரோகங்களும் கல்லறைகளற்ற பல புதை குழிகளையும், அடையாளம் அழிக்கப்பட்ட சாம்பல் மேடுகளையும் உருவாக்கியுள்ளன. வீழ்த்தப்பட்ட புலிகளுக்கும், கொலைக்களத்தில் சாய்ந்து போன மக்களுக்கும் எதிரிகள் மட்டும் காரணம் அல்ல, துரோகிகளும் கூடவே இருந்து குழிபறித்த வரலாறுகளும் உள்ளன. மரணங்…
-
- 0 replies
- 326 views
-
-
பசுபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் இளைஞர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Sam Cossman என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி எரிமலை குறித்து ஆய்வு செய்ய நவீன சாதனங்களுடன் பசுபிக் பகுதியில் உள்ள Ambrym என்ற தீவுக்குச் சென்றுள்ளார். மலைப்பகுதியில் அமைந்துள்ள Marum என்ற எரிமலைக்குள் இறங்கி ஆராய்ச்சி செய்வது தான் இந்தக் குழுவின் திட்டம். இது தொடர்பான வீடியோவில், சுமார் +1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற அந்த ஆராய்ச்சியாளார், தனது உடலில் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும் பாதுகாப்பு உடைகளை உடுத்திக்கொண்டு எர…
-
- 0 replies
- 326 views
-
-
கிராமத்தில் உள்ள கிணற்று நீரை தாழ்ந்த சாதி மக்களை குடிக்க விடாமல் தடுக்க உயர் சாதியை சேர்ந்த நபர் தண்ணீரில் பூச்சி மருந்து கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னூர் கிராமத்தில் மொத்தம் 7 கிணறுகள் உள்ளது. கிராமத்தில் உள்ள கிணற்று நீரை தாழ்ந்த சாதி மக்களை குடிக்க விடாமல் தடுக்க உயர் சாதியை சேர்ந்த நபர் தண்ணீரில் பூச்சி மருந்து கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னூர் கிராமத்தில் மொத்தம் 7 கிணறுகள் உள்ளது. இதில் ஒரு கிணறு ஊருக்கு வெளிப்புறமாக அமைந்துள்ளது. ஊருக்குள் உள்ள மற்ற 6 கிணறுகளை உயர் சாதியினர் பயன்ப்படுத்தி வரும் நிலையில், மீதமுள்ள ஒரு கிணற்றில் மட்டும் தாழ்ந்த சாதியி…
-
- 0 replies
- 326 views
-
-
இட்லியைப் பற்றி இப்படி பேசுவதா? - டுவிட்டரில் வைரலான சூடான விவாதம் இட்லி, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் பெரும்பாலோரால் எப்போதும் விரும்பப்படுகிற உணவு என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது. அரிசி மாவையும், உளுந்த மாவையும் பக்குவமாக கலந்து, இட்லி தட்டில் ஊற்றி, நீராவியில் வேக வைத்து சுடச்சுட ஆவி பறக்க எடுத்து, வாழை இலையில் பரிமாறி, அதை சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் குழப்பிய மிளகாய் பொடி, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு எதுவாக இருந்தாலும் தொட்டுச் சாப்பிட்டால், அதன் சுவையே தனி; அலாதி. அப்படிப்பட்ட இட்லியை ஒருவர் விமர்சித்தால், அவரை சும்மா விட்டு விட முடியுமா? அதான் டுவிட்டரில் சமூக ஊடக ஆர்வலர்கள் வி…
-
- 0 replies
- 326 views
-
-
கண்முன்னே திடீரென மயங்கிய நபர்; ஓடோடி வந்த Doctor.
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
புதிய இயக்கமா? தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பேரா.கல்யாணசுந்தரம் உரை
-
- 0 replies
- 326 views
-
-
இராவணனிடம் விமானம் இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்ததாகவும் ராமாயணத்தில் உள்ள குறிப்புகள் குறித்து இலங்கை அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதில், இந்தியாவும் இணைந்து பங்கேற்க அந்நாட்டு ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கையின் அரசனான இராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், இராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன. இராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், இராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இலங்கையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, இராவணன் ஆட்சியின் போது இலங்கையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு மேற்…
-
- 0 replies
- 326 views
-
-
கொட்டிய காபியை தானே சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர்: வைரலாகும் வீடியோ YouTube சுத்தம் செய்யும் மார்க் ரூடே நெதர்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தவறுதலாக காபியை கொட்டிய அந்நாட்டு பிரதமர் மார்க் ரூடே அதை அவரே சுத்தம் செய்யும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே மிகவும் எளிமையானவர். அவரது நடவடிக்கைகளால் அடிக்கடி சமூக ஊடகங்களில் பாராட்டை பெற்று வருகிறார். பல இடங்களுக்கு அவர் சைக்களில் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள், பிரதமர் மார்க் ரூடே வந்தார். கையில் காபி கோபையுடன் நுழைந்தார். அப்போது தவறுதலா…
-
- 0 replies
- 325 views
-
-
அதிக போதை மாத்திரைகளை உட்கொண்ட, கட்டுவன் இளைஞன் உயிரிழப்பு! போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட அவர், நேற்றிரவு உயிரிழந்தார். சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டது. மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து போதை மாத்திரைகளை இருவர் வாங்கியுள்ளனர். தண்ணீரில் நனைந்த போதை மாத்திரைகள் பல ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு காணப்பட்டுள்ளது. அவற்றை ஒரேயடியாக உயிரிழந்த இளைஞன் உட்கொண்டார் என விசார…
-
- 2 replies
- 325 views
-
-
யாழ்ப்பாணத்தின் வலிகாமம்-வடக்குபகுதியில் உள்ள மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகின்றபோதிலும் வலிகாமம் வடக்கின் கரைஓரப்பகுதி மக்களின் சுமுகமான அன்றாட வாழ்வுக்கு சிறீலங்கா கடற்படை இடையூறாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். கரையோரப்பகுதிகளில் மக்கள் பற்றைகளுக்குள்,பாம்புகளுடனும், பூச்சிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.சாதாரணமாக குப்பைகளை தீயிடுவதற்கும், மரம்வெட்டுவதற்கும் கூட கடற்படையின் அனுமதிக்காக காத்திருக்கவேண்டிய நிலையில் காணப்படுவதாகவும், குறிப்பிட்ட பிரதேசத்தில் மக்களுக்கான அடிப்படைவசதிகள் எதையும் செய்து கொடுக்காமல் மீள்குடியேற்றம் நடைபெற்று முடிந்து விட்டது என்று சிறீலங்காஅரசு அறிவித்துள்ள நிலையில் எதுவித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் …
-
- 0 replies
- 325 views
-
-
சேற்று வெள்ளத்தில் சிக்கி போராடி தப்பிய பெண் (காணொளி) பெரு நாட்டின் லிமாவின் புறநகர்ப்பகுதியில் ஏற்பட்ட சேற்று நீர்ச்சுழியில் இருந்து போராடி உயிர் தப்பியுள்ளார் 32 வயதான இவன்ஜெலினா சாமாரோ டையஸ். சேற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட அவர் மரத் துண்டுகள், கிளைகளைப் பற்றி போராடி கரை சேர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெருவில் கன மழை பெய்து வருகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, சிகிச்சை பெற்று வருவதாக பெரு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. http://www.bbc.com/tamil/global-39306793
-
- 3 replies
- 325 views
-
-
கொரோனா அச்சம் காரணமாக... மரத்தில், தங்களை தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்கள்! சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய மேற்கு வங்க மாநில இளைஞர்களை தனியாக வசிக்கும்படி வைத்தியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அவர்களது, வீட்டில் தனி அறை இல்லாததால், அவர்கள் மரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் வங்கிடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 7 இளைஞர்கள், சென்னையில் வேலைபார்த்துள்ளனர். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர்கள், வைத்தியர்களை சந்தித்துள்ளனர். அப்போது வைத்தியர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்களை, தனிமைபடுத்தி கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால், அவர்கள் ஏழ்மையில் உள்ளதால், வீட்டின் அருகில் உள்ள…
-
- 1 reply
- 325 views
-
-
காற்று வாங்குவதற்காக விமானத்தின் கதவைத் திறந்த பயணி புறப்படுவதற்குத் தயாராக இருந்த விமானத்தின் அவசர கால கதவை பயணியொருவர் திறந்துவைத்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஃபிரெஷ்ஷாக காற்று வாங்குவதற்காக தான் இக் கதவைத் திறந்ததாக மேற்படி பயணி தெரிவித்துள்ளார். சைனா சதர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பிளைட் சி.இஸட் 3693 இவ் விமானம், சிச்சுவான் மாகாணத்திலுள்ள செங்குடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து உரும்கி டிவோபு சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்படுவதற்கு கடந்த புதன்கிழமை காலை தயாராக இருந்தது. 130 பயணிகள் அவ் விமானத்தில் இருந்தனர். …
-
- 0 replies
- 325 views
-
-
வாள் ஒன்றினை, வாயில் வைத்து... காணொளி வெளியிட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸாரினால் கைது! வாள் ஒன்றினை வாயில் வைத்து ரிக் ரொக் (TikTok) காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2021/1221583
-
- 0 replies
- 325 views
-
-
இனி உங்களால் உடைக்க முடியாது! சமூக வலைதளங்கள் வாயிலாக, உலகமே திரண்டு ஒரு நிறுவனத்துக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளது. அது எந்த நிறுவனம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? கோக்ககோலா? மான்சாண்டோ? கேஎஃப்சி?... கண்டிப்பாக நீங்கள் கண்டுபிடித்திருக்க மாட்டீர்கள். சீல்டு ஏர் (Sealed Air) என்கிற பபில் விராப் ( Bubble Wrap) பேகேஜிங் கவர் தயாரிக்கும் நிறுவனம்தான் அது. பேகேஜ் செய்து அனுப்பப்படும் பெரிய இயந்திரங்கள் முதல் கையடக்க செல்போன் வரை பாதுகாப்பாக செல்ல பயன்படுத்தப்படும் இந்த Bubble Wrap-ஐ அனைவருமே பார்த்திருப்போம். காற்று நிரப்பப்பட்ட சிறு பிளாஸ்டிக் குமிழ் போன்ற அமைப்பைக் கொண்ட அந்த கவரை பார்த்ததுமே உங்களை அறியாமலே அந்த பபில்ஸை உடைத்து பொழுது போக்கியிருக்கிறீர்கள் என்றால்…
-
- 0 replies
- 325 views
-
-
சமூக வலைத்தள மோகம் – மூக்கில் பாம்பிடம் கடி வாங்கிய இளம் பெண். சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்கள் வாழ்வில் நடைபெறும் செயல்களை வீடியோ எடுத்து பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவை சேர்ந்த ஷ்கோடலேரா என்ற இளம்பெண் பாம்பை கையில் வைத்து விளையாடிய காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவர் கையில் பாம்பை பிடித்து கொண்டு போஸ் கொடுப்பது போன்று வீடியோ தொடங்குகிறது. உற்சாகமிகுதியில் ஷ்கோடலேரா பாம்பை மேலே தூக்கிய போது திடீரென பாம்பு அவரின் மூக்கை கடித்தது. இதனால் வலியில் துடித்த ஷ்கோடலேரா பாம்பை தரையில் வைத்துவிட்டு தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. நெட்டிசன…
-
-
- 2 replies
- 325 views
- 1 follower
-
-
”என் கணவர் சண்டையே போடாமல் ஓவர் லவ்சாக இருக்கிறார்” : 18 மாதங்களில் டைவர்ஸ் கேட்ட மனைவி.! தன் கணவரின் அளவுக்கதிகமான அன்பை தன்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. கடந்த 18 மாதங்களில் ஒருமுறை கூட சண்டைபோடவில்லை என்று ஒரு பெண் விவாகரத்துக் கோரியிருக்கிறார். உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் திருமணமாகி 18 மாதங்களிலேயே விவாகரத்துக் கோரியுள்ளார். விவாகரத்துக்காக சம்பலில் உள்ள ஷரியா நீதிமன்றத்தை அணுகிய அவர் சொன்ன காரணம் நீதிமன்றத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியது. காரணம், அவர் கணவர் தன்னுடன் சண்டை போடுவதில்லை. அளவுக்கதிகமாக நேசிக்கிறார் என்பதுதான் அவருடைய பிரச்னை. இந்தி நாளிதழான டைனிக் ஜாக்ரானின் அறிக்கைப்படி, அந்த பெண்ணுக்கு கணவரின் அதீத அன்பை பொறுத்துக…
-
- 0 replies
- 324 views
-