செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர் என்பவர் பாம்போடு பாம்பாக நடனமாடி அசத்திய நிகழ்வு இன்று காத்தான்குடியில் இடம்பெற்றது. பொல்காவலை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி பாத்திமா நஜ்லாவின்(வயது 16) முள்ளந்தண்டு சத்திரசிகிச்சைக்காக மேற்படி மாபெரும் நிகழ்வு இடம்பெற்றது. உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர், 'சமாதானம் என்றால் என்ன? ஒற்றுமை என்றால் என்ன" என்ற அடிப்படையில் மேற்படி நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்ருந்தது. காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விஷப் பாம்புகளுடன் விபரீதமாக விளையாடும் காட்சி, 10அடி நீளம் கொண்ட 20அடி எடை கொண்ட மலைப்பாம்பை கழுத்தில் சுற்றி நடனமாடுதல், தீப்பந்தங்களினால் …
-
- 0 replies
- 328 views
-
-
மஹிந்தவின் வெற்றிக்கு இந்திய றோ தீவிரம்…? July 16, 201510:43 am முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக இந்திய புலனாய்வு சேவையான றோ செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதனடிப்படையில், பல்வேறு காரணங்களை கூறி இலங்கை வந்துள்ள இந்திய புலனாய்வு சேவையின் உறுப்பினர்கள் பல மாவட்டங்களில் நிலை கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவின் வெற்றி என்பது இந்தியாவின் தேவை என்பதுடன் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளால், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் தொய்வுகள் ஏற்பட்டால், அது குறித்து இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்து அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு றோ அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக…
-
- 1 reply
- 328 views
-
-
வாள் ஒன்றினை, வாயில் வைத்து... காணொளி வெளியிட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸாரினால் கைது! வாள் ஒன்றினை வாயில் வைத்து ரிக் ரொக் (TikTok) காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2021/1221583
-
- 0 replies
- 328 views
-
-
1 கோடி இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் - கருத்து கணிப்பு நடத்தப்பட்டதில் தகவல்! [Monday, 2014-04-28 07:33:04] அமெரிக்காவில் குடியேற 1 கோடி இந்தியர்கள் விரும்புகின்றனர். சீனா, இந்தியா, வங்காள தேசம், நைஜீரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் இளைஞர்களிடம் 'நீங்கள் எந்தநாட்டில் குடியேற விரும்புகிறீர்கள்' என கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் வாழும் 6 கோடியே 40 லட்சம் இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 1 1/2 கோடி பேர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா, இந்தியா, பிரேசில், நைஜர், வங்காள தேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்களில் இந்தியாவை சேர…
-
- 0 replies
- 328 views
-
-
டெல்லியில் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி ஒருவர் தன்னுடைய குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் ஆத்திரத்தில் குழந்தையை சப்பாத்தி உருட்டும் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். டெல்லி சாஸ்திரி நகரின் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி நரிஸ் ஷேக். இவருக்கு ராகுல் என்ற 9 வயது சிறுவனும், சவுரயா என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். நேற்று மாலை 11 மணியளவில் அவரது மனைவி வீட்டில் இல்லாத போது 2 வயது குழந்தை சவுரயா விடாமல் அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகையை நிறுத்த நரிஸ் முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால ஆத்திரமடைந்த நரிஸ் முதலில் குழந்தையை கையால் அடித்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாத குழந்தை மேலும் …
-
- 0 replies
- 328 views
-
-
கருவிலுள்ள குழந்தைகளுக்கு கருணை காட்டும் கொரோனா- அவசர ஆய்வில் கிடைத்த அற்புத தகவல் கொரோனாவின் கொடூரப் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் தொடர்ந்து சின்னாபின்னமாகி வரும் சீனாவில், இதுவரை 1500இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா (COVID-19) வைரஸ் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்குக் குறைந்த அளவு பாதிப்புகளையே ஏற்படுத்தக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மிக எளிதில் பரவக் கூடியதாகவுள்ளது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரால் மேலும் இருவருக்கு அதிவேகமாக கொரோனா பரவுகிறது. ஆனாலும் இதுவரை இந்த கொடிய வைரஸ்க்குக் குறைவான எண்ணிக்கையிலான குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கொரோனாவின் அறிகுறியான சுவாசப…
-
- 0 replies
- 328 views
-
-
பார்வையாளர்களுக்குப் பதிலாகத் தாவரங்கள்: ஸ்பெயினில் நடந்த வித்தியாச இசை நிகழ்ச்சி தாவரங்களுக்கு மத்தியில் ஸ்பெயினில் நடந்த இசை நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கரோனா வைரஸ் உலகின் இயல்பு வாழ்க்கையையே திருப்பிப் போட்டுள்ளது. அரசியல் நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஓவ்வொரு நாளும் புதிய புதிய அணுகுமுறையில் உலக நாடுகள் கரோனா வைரஸை எதிர்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் உள்ள ஒபரா இசை அரங்கில் 2000க்கும் அதிகமான தாவரங்களுக்கு மத்தியில் இசை நிகழ்ச்சியை இசைக் கலைஞர்கள் நடத்தினர். இந்நிகழ்ச்சியின் மூலம் சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர்கள்…
-
- 0 replies
- 327 views
-
-
லம்பேடுசா தீவு இத்தாலிக்குச் சொந்தமானது. ருனீசியாவில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் மத்தியதரைக் கடலில் உள்ள பெலகி தீவுகளில் இதுவும் ஒன்று. வெறும் 20 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இத்தீவின் சனத்தொகை 7000க்கு சற்று அதிகம். ஆழம் இல்லாத கடல், பல வர்ணங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினங்கள், 27 பாகை செல்சியஸ் வெப்பநிலை என சுற்றுலாப் பயணிகளை கவரும் அழகான தீவான லம்பேடுசா, இப்பொழுது அகதிகளால் திண்டாடுகிறது. சென்ற கிழமை மட்டும் இந்தத் தீவுக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்ந்த அகதிகள் 7000க்கு மேல் என அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு படகு என்ற வீதம் ஏராளமான படகுகள் அணிவகுத்து வந்தன என ஊடகங்கள் சொல்கின்றன. லம்பேடுசா தீவின் மக்கள் தொகையை விட ஒரு கிழமை…
-
- 1 reply
- 327 views
-
-
எம்.றொசாந்த், நிதர்ஷன் வினோத் தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள குளிர்களி (ஐஸ் கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதனை அடுத்து பாதிக்கப்பட்ட யுவதியால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடை உரிமையாளரை கைது செய்து மல்லாகம் நீதவான…
-
- 0 replies
- 327 views
-
-
345,000 பயன்படுத்திய ஆணுறைகள் மீட்பு : வியட்நாமில் பரபரப்பு வியட்நாம் பொலிஸார் சுமார் 345,000 பயன்படுத்திய ஆணுறைகளை பறிமுதல் செய்துள்ளனர். அவை சுத்தம் செய்யப்பட்டு புதியவையென மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தவாரம் வியாட்நாம் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையொன்று ஒளிபரப்பிய காணொளிக் காட்சிகளில் இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணுறைகள் தெற்கு மாகாணமான பின் துவாங் நகரில் ஒரு குழியொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய பைகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள பைகள் 360 கிலோகிராம் (794 பவுண்ட் ) எடையுள்ளதாகவும் அவற்றுள் 345,000 அணுறைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணொளிக் காட்சிகளி…
-
- 0 replies
- 327 views
-
-
நண்பன்’ பட க்ளைமாக்ஸில் அனுயா ஒரு இக்கட்டான சூழலில் பிரசவ வலியில் துடிக்க, மருத்துவரான இலியானா கணினி இணைய இணைப்பின் மூலம் ‘லைவ்’ ஆக வழிமுறைகள் சொல்ல, அதைப் பின்பற்றி அனுயாவுக்கு விஜய் பிரசவம் பார்க்க... வெற்றிகரமாகப் பிறக்கும் குழந்தை! சினிமாவில் நாம் கைதட்டி ரசித்த காட்சி, நிஜத்தில் அமெரிக்காவில் நடந்துள்ளது. நியூஜெர்ஸியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ரிவேரா, அந்த மாதத்திற்கான பரிசோதனைக்காக தான் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் அந்நேரம் ரிவேராவின் டாக்டர் மேனா டெவல்லா வேறொரு மருத்துவமனையில் இருக்க, எதிர்பாராத விதமாக ரிவேராவுக்கு பனிக்குடம் உடைந்தது. வலியில் துடிக்க ஆரம்பித்தார். மருத்துவமனையில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்திருந்த மெடிக்கல…
-
- 1 reply
- 327 views
-
-
-
கணவரின் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள், ஆவணங்கள், செய்திகள் அல்லது வேறேதும் தகவல்களை, கண்காணிப்பு சாதனங்களைக் கொண்டு சேகரிப்பதற்கு, அவரின் மனைவிக்கு தடையுத்தரவு பிறப்பித்து கல்கிஸை மாவட்ட நீமன்றம் கட்டளையிட்டுள்ளது. தான் வீ்ட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் தனது தனிப்பட்ட கணினியிலுள்ள தகவல்களை தன்னுடைய மனைவி ஆராய்கிறார் என குற்றஞ்சுமத்தி கணவரொருவரால் கல்கிஸை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது மனைவிக்கும் தனக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு இதே நீதிமன்றத்தில் நிலுவவையில் உள்ள நிலையில், தனது பல்வேறுபட்ட தகவல்களையும் தொலைபேசி உரையாடல்ளையும் தனது அறையில் ஒலி கண்காணிப்பு சாதனத்தைப் பொருத்தி, தன்னுடைய மனைவி தரவிறக்கம் செய்து…
-
- 0 replies
- 327 views
-
-
பாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, மதம் மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர் பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இளம்பெண்களை கடத்தி சென்று, இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்து பின்னர் கட்டாய திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலம் ஆக கூறப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வசித்து வருபவர் அலி அசார் (வயது 44). இவர் அர்ஜூ ராஜா என்ற 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, ஆவணங்களிலும் மாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு பிறந்த சிறுமியின் பள்ளி ஆவண பதிவிலும், சர்ச்சில் உள்ள ரெஜி…
-
- 0 replies
- 327 views
-
-
பெண் பொலிஸார் குளிப்பதை கூரையை பிய்த்து பார்த்த சார்ஜென்ட் கைது பெண் பொலிஸார் குளிப்பதை, கூரையின் தகரத்தை நீக்கிவிட்டு அதிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு-07, மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் கலாசார பிரிவில் இணைந்து சேவையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் தங்கியிருக்கும் வீட்டின் குளியல் அறையின் கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் தகரத்தை கழற்றிவிட்டு, பெண் பொலிஸார் சிலர் குளித்துக்கொண்டிருப்பதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்டனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றுபவர் என்…
-
- 1 reply
- 327 views
-
-
மனுநீதி தேடும் பசு.. ஆனால் மனுநீதி போதிக்க தமிழ் சோழ ஆட்சி தான் இல்லையே... இன்று தென்னகத்தில்.. கொடும் திராவிட ஆட்சி தான் இருக்கென்று பஸ்ஸுற்கு கன்றிழந்த இந்தப் பசுவுக்கு தெரிய வாய்ப்பில்லை. பாவம் அது என்ன செய்யும். அனுதாபங்கள் பசுவே..!
-
- 0 replies
- 326 views
-
-
காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு – பின்னணியில் புலிக்குட்டி? adminJanuary 12, 2024 யாழ்ப்பாணம் – மண்டைதீவு காவலரண் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவர், பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நால்வரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள ஊர்காவற்துறை காவற்துறையினரின் காவலரண் மீது நேற்று முன்தினம் புதன்கிழமை (10.01.24) இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இருவரை காவற்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (11.01.24) முற்படுத்தினர். அதன் போது, போதைப்பொருளுடன் நபர்…
-
- 1 reply
- 326 views
-
-
-
வங்கிக் கொள்ளையை கடமையாக கருதிய கிளர்ச்சியாளர்: ஹாலிவுட்டையே மிஞ்சிய உண்மை கதை பட மூலாதாரம்,COURTESY OF EDITORIAL TXALAPARTA கட்டுரை தகவல் எழுதியவர்,போலா ரோஜாஸ் பதவி,பிபிசி நியூஸ் முண்டோ 18 மார்ச் 2023 "பொதுமக்கள் நலன் கருதி வங்கியைக் கொள்ளையடித்தேன். அதை நீங்கள் திருட்டு என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஏழையைக் கொள்ளையடிப்பதே திருட்டு எனச் சொல்லப்படுகிறது. கொள்ளையனை கொள்ளையடிப்பவன் என்றென்றும் மன்னிக்கப்படுகிறான். வங்கியைக் கொள்ளையடிப்பது மரியாதைக்குரிய விஷயம்." கொள்ளையடிப்பது, 'சொந்த நலனுக்காக அல்லாமல் கூட்டு நன்மைக்காக' செய்யப்படும் வரை லோஸியோ அர்தாபியாவ…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
தனது வாழ்நாள் முழுவதும் கூண்டிலேயே அடைக்கப்பட்டிருந்த 28 வயதான வனில்லா ( Vanilla ) என்ற சிம்பன்சி, புளோரிடாவில் உள்ள தனது புதிய இருப்பிடமான சேவ் தி சிம்ப்ஸ் சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அது கூண்டிலிருந்து வெளியே வந்து முதன்முறையாக வானத்தை பார்த்து அதிசயித்து நின்ற வீடியோ, பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. வனில்லா தனது 2 வயது வரை ஒரு மோசமான ஆய்வகத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. 1997ம் ஆண்டு அந்த ஆய்வகம் மூடப்பட்டதும், வனில்லா உட்பட சுமார் 30 சிம்பன்சிகளும் கலிபோர்னியாவில் இருந்த மூடப்பட்ட விலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, 5 அடி சதுர கூண்டு வடிவிலான இடத்தில்தான் வனில்லா வாழ்ந்து வந்தது. 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயின் பாதிப்…
-
- 1 reply
- 326 views
- 1 follower
-
-
இலங்கையின் எல்லா இடங்களிலும் புதிய அறிவிப்பு ! பங்குனி 31 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
-
- 1 reply
- 326 views
-
-
சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள் கொரோனா பேரிடரால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித்தவித்து வருகிறது. சவுதி அரேபியாவிடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன், ஐக்கிய அரபு அமீரகத்திடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிவருகிறது. எனினும், சீன அரசு அவ்வப்போது நிதியுதவி அளித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது. சீனாவிடம் இருந்து வாங்கியுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் விற்பனை மூலமாகவே பாகிஸ்தான் அரசு சரிக்கட்டி வருகிறது. உலக அளவில் கழுதைகள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது. 3 வது நாடாக பாகிஸ்தான் உள்ளது. 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் , எர…
-
- 1 reply
- 326 views
-
-
-
- 2 replies
- 326 views
-
-
"50 வயதை நெருங்கும்போது 2வது குழந்தையை பெற்றெடுக்க என் அம்மா ஏன் கூச்சப்பட வேண்டும்?" பட மூலாதாரம்,ARYA PARVATHY 12 மார்ச் 2023, 12:12 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் “அம்மாவும் அப்பாவும் ஒருநாள் எனக்கு ஃபோன் பண்ணி அழுதாங்க. உன்கிட்ட கடந்த சில மாதங்களா நாங்க ஒரு உண்மைய மறைச்சிட்டோம்னு சொன்னாங்க. எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. ஆனா உண்மை தெரிஞ்சப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன்,” என்று மலையாளம் கலந்த தமிழில் குதூகலமான குரலில் கூறினார் கேரளாவை சேர்ந்த மோகினியாட்டக் கலைஞர் ஆர்யா பார்வதி. கேரளாவில் பிறந்து வளர்ந்த ஆர்யா பார்வதி, அவருடைய பெற்றோருக்கு கடந்த 23 ஆண்டுகளாக ஒர…
-
- 4 replies
- 326 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 02:50 PM நல்லின (பொமேரியன்) வளர்ப்பு நாய்க்கு இரு தரப்பினர்கள் உரிமை கோருவதனால், அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது. நாயை கடத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. கிளிநொச்சியில் உள்ள குடியிருப்பாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வளர்ப்பு நாயை கடத்தி கட்டிவைத்து பராமரித்ததாக அயலவர் மீது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர். குற்றஞ்சாட்டவர் சார்பில் அவரது சட்டத்தரணியினால் பின்வர…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-