Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உக்ரைனில் இருந்து ‘சிம்பா’ சிங்கம் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டது கம் சினி செய்திகள் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரால் அந்நாட்டின் அனைத்து நகரங்களும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்க பாதை, பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். போரால் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளை பராமரிக்க முடியாத காரணத்தால் அவைகள் தவித்து வருகின்றன. விலங்குகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்கவில்லை. தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜிபோரிஜியாவில் மிருகக்காட்சி சாலையில் சிம்பா என்ற சிங்கம் பராமரிக்கப்பட்டது. போர் காரணமாக சி…

    • 0 replies
    • 309 views
  2. வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தில் உள்ளது. 139 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இணையத்தளமொன்றினால் இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு மிகவும் குறைந்த நாடாக பாகிஸ்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. வாழ்கைச் செலவு மிகவும் அதிகரித்த நாடாக சுவிட்ஸர்லாந்து பதிவாகியுள்ளது. https://thinakkural.lk/article/265691

  3. உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட்டின் மறுமதிப்பீடு செய்யப்பட்ட உயரம் அறிவிப்பு! உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் முன்பு அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டதை விட 0.86 மீ உயரத்தில் உள்ளது என்று நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன. மறுமதிப்பீடு செய்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.86 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1954ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது அந்த சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என அறிவிக்கப்பட்டது. உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏ…

  4. கனடா- லண்டன் ஒன்ராறியோவை சேர்ந்த பெண் ஒருவர் ஒன்ராறியோ லாட்டரி மற்றும் கேமிங் கூட்டுத்தாபனத்தின் வாழ்க்கைக்கு வாரம் ஒன்றிற்கு 1,000 டொலர்கள் பணம் லாட்டரியில் பரிசு பெற்றுள்ளார். 4 டொலர்கள் பெறுமதி உள்ள இந்த லாட்டரி சீட்டு இவரது பிறந்த நாளன்று கிடைக்கப்பெற்றது. எதிர்பாராத பிறந்த நாள் பரிசு இவருக்கு கிடைத்துள்ளது. இந்த பணத்தில் தனது வீட்டில் சில திருத்த வேலைகள் செய்யவும் தனது மகள்களுடன் உல்லாச கடல் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாக மேரி எல்றிட்ஜ் என்ற இப்பெண் தெரிவித்துள்ளார்.இந்த பரிசுத்தொகையை ஒரு ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படும் சலுகையையும் லாட்டரி வழங்குகின்றது. இவருக்கு கிடைத்த மொத்த தொகை டொலர்கள் 675,000.00 . - See more at: http://www.canadamirror.com/canad…

    • 0 replies
    • 309 views
  5. கடந்த சில வருடங்களாக இலங்கையின் காட்டு யானைகள், மனிதர்களிடமிருந்து உணவைப் பெற சாலையில் திரிவது அதிகரித்துள்ளது. பயணிகள் பலர் மீதமான உணவை சாலையில் கொட்டுவதால், பசியுடன் இருக்கும் யானைகளுக்கு இவை எளிதான உணவாகிவிட்டது.

  6. மெக்சிகோவை சேர்ந்தவர் கிம்பரலி கோர்டான் இவரது மனைவி கெண்ட்ரா வில்லியனுவா, இவர்கள் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் 4 ந்தேதி திடீர் என பெய்த புயல் மழை காரணமாக ஒரு மரத்திற்கு கீழ் ஒதுங்கினர். வில்லியனுவா அப்போது கர்ப்பமாக இருந்தார்.அப்போது மின்னல் வில்லியனுவாவை மின்னல் தாக்கியது. அவரது உடல் புகுந்த மின்சாரம் அவரது பெருவிரல் வழையாக வெளியேறி உள்லது அவரது பெருவிரலில் ரத்தகாயம் உள்ளது. உடனடியாக வில்லியனுவா மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு சிகிஅச்சை அளிக்கபட்டது அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை பாதுகாப்பாக பிறந்தது. அது பெண்குழந்தை அதற்கு கிம்பர்லி கோர்டன் என பெயர் சூட்டி உள்ளனர். மின்னல் தாக்கியதால் வில்லியனுவா வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற…

  7. 23 வரு­டங்­க­ளுக்கு முன் உறை­நி­லையில் சேமிக்­கப்­பட்ட தந்­தையின் விந்­த­ணுக்­களைப் பயன்­ப­டுத்தி பிறந்த குழந்தை புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்ட நப­ரொ­ருவர் 23 வரு­டங்­க­ளுக்கு முன் உறை­நி­லையில் பேணப்­பட்ட தனது விந்­த­ணுக்­களைப் பயன்­ப­டுத்தி சோதனைக் குழாய் முறையில் ஆரோக்­கி­ய­மான ஆண் குழந்­தை­யொன்­றுக்கு தந்­தை­யான அதி­சய சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய பிறிஸ்பேன் நகரில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்பில் அவுஸ்­தி­ரே­லிய 'சணல் நைன்' ஊடகம் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இந்தக் குழந்­தை­யா­னது உலகின் மிகவும் பழை­மை­யான குழந்­தை­யாக விளங்­கு­கி­றது. அலெக்ஸ் போவெல் என்ற மேற்­படி நப­ருக்கு அவ­ரது 15 ஆவ…

  8. டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர் ஊழியர்! ஊழியர் ஒருவர் டிஷ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து சிங்கப்பூர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை தனது ‘லிங்ட்இன்’(LINKEDIN) பக்கத்தில் பதிவிட்டு, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பொறுத்தவரை, அவர்களுக்கான மரியாதையும், வேலைவாய்ப்பும், அதற்கான சம்பளமும் மிக அத்தியாவசியமாக இருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, ஊழியர்கள் தங்களது பணியை இராஜினாமா செய்வது வழக்கமானதொன்று. வைரலாகி வரும் அந்த ராஜினாமா கடிதத்தில், “நான் தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பற…

  9. முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் நேற்று வியாழக்கிழமை மன்னார் வங்காலை கடற்கரை மற்றும் சிலாபத்துறை கடங்கரையில் கரையொதுங்கியது. இந்த நிலையில் அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று பார்வiயிட்டுள்ளனர். சிறிய உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதரிய நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(11) காலை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கட…

  10. மன்னாரில் கடும் மழை- மக்களின் இயல்புநிலை பாதிப்பு. October 4, 2021 மன்னாரில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலையும் கடும் மழை பெய்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாந்திபுரம், சௌத்பார், ஜிம்றோன் நகர் உள்ளிட்ட சில கிராமங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளமையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது. https://globaltamilnews.net/2021/166795

  11. மயிலிட்டி பேச்சியம்மன் ஆலய புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு November 25, 2020 மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனருத்தாபன பணிகளை தொடர்வதற்கு தேவையான ஏற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். ஆலய நிர்வாக சபையினர் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கையினை ஆராயந்த ஆராயந்த கடற்றொழில் அமைச்சர், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி குறித்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்தவகையில், சுமார் முப்பது வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட மயிலிட்டி மக்கள் தமது பிரதேசத்தில் சிறிய தற்காலிக கொட்டகையில் அமைந்திருந்த பேச்சியம்மன் ஆலயத்தின் புனருத்தாபனம் செ…

  12. பொலியாவில் கரடு முரடான மலைப் பாதையில் நடந்த சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட ஆண்டஸ்(Andes) மலைத்தொடரில் வளைவு நெளிவான பாதையில் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. மழை, மூடுபனி, கரடு முரடான பாறைகளுக்கு இடையே நடந்த இந்த மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி மிர்தா முனோஸ் பங்கேற்றார். தனது மகன் திடீரென மரணமடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்காக சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட தொடங்கியதாக குறிப்பிட்டுள்ள மிர்தா முனோஸ், தனது 6 பேரக்குழந்தைகளுடன் சைக்கிள் பந்தயம் மேற்கொள்ள வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார். https://w…

    • 0 replies
    • 308 views
  13. இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக போரிட்டு இறந்த இந்தியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த இங்கிலாந்து அரசு தீர்மானித்துள்ளது.உலக வரலாற்றையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் கி.பி. 1939 - 1945ம் ஆண்டுகளுக்கிடையே தொடர்ந்து 6 ஆண்டு காலம் நடைபெற்றது.பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓரணியாகவும் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் இந்த போரில் ஈடுபட்டன. இந்த போரில் சுமார் 7 கோடி பேர் பலியானதாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஒன்றிணைந்த இந்தியா, பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோது, இந்த போரில் சுமார் 12 லட்சம் இந்தியர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஈடுபடுத்தினர். இவர்களில் 74 ஆயிரம் பேர் பிரிட்டிஷ் ஆட்சியி…

  14. காதலியை காண பெண்ணாடையில் வந்த காதலன் கைது கட்டாரிலிருந்து நாடு திரும்பிய காதலியை காண பெண்ணாடையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த காதலனை விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபராவார். இன்று காலை 11 மணிக்கு கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்த தனது காதலியை காணவே வந்ததாக தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டவரிடம் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/9330

  15. முகப்புத்தகத்தில் ஏற்பட்ட காதலால் இளைஞன் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர் இழந்த சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு இளைஞர் ஒருவர் முகப்பபுத்தகத்தில் நண்பராகியுள்ளார். தான் கனடாவில் இருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணுடன் கதைத்து பெண்ணைக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தான் இலங்கைக்கு வருவதாகவும் யுவதியைச் சந்திக்க வேண்டும் எனவும் இளைஞன் கூறியுள்ளார். இதனை நம்பிய யுவதி இளைஞன் கூறியபடி, யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தியில் அமைந்துள்ள ஆலயத்துக்கு அருகில் சென்றுள்ளார். அங்கு வருகை தந்த இளைஞன், தனக்கு புதையல் ஒன்று க…

  16. இதுதான் காதல் என்பதா…? மனைவியின் சடலத்துடன் படுத்துறங்கும் காதல் கணவன்! August 09, 20157:23 am காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் கல்லறைக்கூட காதலைத் தடுக்க முடியாது என்று காண்பித்திருக்கிறார், வியட்நாமைச் சேர்ந்த இந்த விசித்திர மனிதர். காதலியோ, மனைவியோ இறந்துவிட்டால் அவள் நினைவுகளுடனும், நிழற்படங்களும் வாழ்க்கை நடத்துகிற காதல் நாயகர்களைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இறந்து போன மனைவியின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அதை பொம்மையாகச் செய்து, அதனுடனேயே தன் முழு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுகொண்டிருக்கிறார், 55 வயதான திரு.லீ வான். வியட்நாமிலுள்ள, ’க்வாங் நாம்’ பிரதேசத்தைச் சேர்ந்த இவர், 2003ல் தன் மனைவியை இழந்த சோகம் தாளாமல், தினந்தோறும் மனைவியின் கல்லறையைக் கட்டி…

    • 0 replies
    • 307 views
  17. பெண் வாடிக்கையாளர்களுக்கு மார்க் போட்ட ஆப்பிள் ஊழியர்கள் நீக்கம் ஆப்பிள் ஸ்டோரில், பெண் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை ரகசியமாக பகிர்ந்து, அவர்கள் புகைப்படத்திற்கு மார்க் போட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சிலர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர் என்று ’Courier-Mail’ செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அவர்களை வேறு காரணத்திற்காக நீக்கினோம் என்று மறுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில், மொபைல் வாங்க வரும் பெண் வாடிக்கையாளர்களை அவர்களின் அனுமதியில்லாமல் ரகசியமாக படம்பிடித்து அதை நண்பர்களுடன் பகிர்ந்து தவறாக கமெண்ட் செய்து வந்துள்ளனர். பிடிப்பட்ட ஊழியர்கள் மொபைலில் நூற்றுக்கணக்கான பெண் வாடிக்கையாளர்களின் க்ளோசப் புகைப்படங்கள…

  18. Published By: DIGITAL DESK 3 13 FEB, 2024 | 09:58 AM யாசகர் ஒருவர் ஐ போன் ஒன்றை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. யாசகம் கேட்டு வந்த முதியவர் ஒருவர் வீடு ஒன்றிலிருந்த பெறுமதி வாய்ந்த ஐ போன் ஒன்றை திருடிச் சென்றுள்ளார். இவ்வாறு திருடிச் சென்ற நபரின் புகைப்படத்தை சி.சி.ரி.வியின் உதவியுடன் முகநூலில் பதிவிட்டதன் பின்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் வசமாக சிக்கியுள்ளார். திருடிய கைபேசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பன செய்த அந்நபர் அந்தப் பணத்தில் மது அருந்திக…

  19. இந்தியா - மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் மாலி (வயது 30). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் ஆனது. திருமணத்துக்கு பிறகு, மனைவியுடன் இந்தூரில் குடியேறினார். அவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திலீப், எத்தனையோ பேரிடம் கடன் வாங்கி, திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். கடன் கொடுத்தவர்களின் தொல்லை தாங்காமல், சொந்த கிராமத்துக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், கடனை அடைப்பதற்காக, தன் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்க தயாராக இருப்பதாகவும், விருப்பம் உள்ளவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் ‘பேஸ்புக்’கில் தனது செல்போன் எண்ணுடன் திலீப் மாலி விளம்பரம் செய்தார…

  20. சுவையான "பர்கர்" பரிமாறிய ஒபாமா: சந்தோஷத்தில் மூழ்கிய சிறுமி[ புதன்கிழமை, 15 யூலை 2015, 08:22.59 மு.ப GMT ] வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 9 வயது சிறுமிக்கு பர்கர் பரிமாறியுள்ளார்.சமீபத்தில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிகாகோவை சேர்ந்த 9 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுமி ஸ்ரேயா படேல் தனது தாயார் பிரீதி படேலுடன் கலந்து கொண்டார். விருந்தில் பல்சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன, அப்போது விருந்து நடைபெற்ற இடத்துக்கு திடீரென வருகை தந்த ஒபாமா, விருந்தில் உணவு பரிமாறுவதை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், சிறுமி ஸ்ரேயா படேலுக்கு ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் அவளுக்கு ‘கரம் மசாலா பர்கர்’…

    • 0 replies
    • 307 views
  21. துப்பறியும் மோப்ப நாய், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: வவுனியாவில் சம்பவம்! வவுனியா, குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் மோப்பநாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. கூப்பர் என அழைக்கப்படும் குறித்த மோப்பநாய் இன்று (புதன்கிழமை) காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்போதே மின்சாரம் தாக்கியுள்ளதுடன், மோப்பநாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, குற்றத்தடுப்புப் பொலிஸாருடன் இணைந்து பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை இலகுவில் இனங்கண்டு துப்பறியும் நடவடிக்கைகளில் குறித்த மோப்பநாய் ஈடுபட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று காலை …

  22. இப்படியும் அச்சுறுத்தலா ? எச்சரிக்கை !! அது கடந்த மார்ச் மாதத்தின் நடுப்­ப­கு­திக்கு உட்­பட்ட ஒரு நாள். மாலை­தீவின் பிர­பல கோடீஸ்­வரர் ஹசீம் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) இலங்­கையின் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு அழைப்­பொன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். அவரின் அழைப்­புக்கு பதி­ல­ளித்­துள்ள பொலிஸ் தலை­மை­ய­கத்தின் தொலை­பேசி அலு­வ­லர்கள் "வணக்கம்…. இது இலங்கை பொலிஸ் திணைக்­களம்" என தம்மை அறி­முகம் செய்­யவே ஹசீமும் பதி­லுக்கு காலை வணக்கம் கூறி தமது பிரச்­சி­னையை கூறியுள்ளார். ஹசீம் ஏதோ பெரும் சிக்கல் ஒன்று தொடர்பில் முறைப்­பா­ட­ளிக்­கவே தடு­மா­று­கிறார் என்­பதை புரிந்­து­கொண்ட பொலிஸ் தலை­மை­ய­கத்தின் தொலை­பேசி அலு­வலர் அவரின் அழைப்பை பொலிஸ் மா அதிபர் உத­விப்­…

  23. உலகில் முதலாவது செயற்கை கருவூட்டல் சிறுத்தைக்குட்டி: கடித்துக் கொன்ற தாய் சிறுத்தை Published by T. Saranya on 2019-04-04 16:14:46 செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த உலகின் முதலாவது சிறுத்தைக்குட்டியை அதன் தாய் சிறுத்தை கடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்குறித்த சம்பவமானது பிரேசிலின் சாவோ போலோ நகரில் உள்ள ஜுன்டியாய் பகுதியில் உள்ள வரும் வனவிலங்கு ஆராய்ச்சிக் கூடத்தில், செயற்கை கருவூட்டலின் மூலம் உலகின் முதல் சிறுத்தைக் குட்டி பிறந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த சிறுத்தைக் குட்டியை அதன் தாய் சிறுத்தை இரண்டே நாட்களில் கடித்துக் கொன்றுள்ளது. Sh செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த உலகின் ம…

  24. காதலனின் மனைவி திடீரென வீட்டுக்குள் வந்தமையால் பெண் தோழிக்கு நேர்ந்த விபரீதம் காதலனின் மனைவி எதிர்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தமையால் பெண்தோழி யன்னல் வழியாக தப்பியோட முயன்றதில் மினசாரக்கம்பத்தில் தொங்கிய காட்சி சீனாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, காதலனின் மனைவி எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தமையால் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற பெண்தோழி யன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார். இந்நிலையில் அரைகுறை ஆடையுடன் யன்னல் வழியாக தப்பிச்செல்ல முயன்ற பெண்தோழி எதிர்பாராத விதமாக வீதியில் போடப்பட்டிருந்த மின்சார வயரில் சிக்கி அரைகுறை ஆடையுடன் தலைகீழாக அந்தரத்தில் தொங்கியுள்ளார். …

    • 1 reply
    • 307 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.