செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர்,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மர்ம நபர்கள், அதிஸ்ட லாப சீட்டில் பெருமளவு பணம் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய குறித்த பெண்ணும் தன்னுடைய தங்க நகைகளை அடகுவைத்து பணத்தை இலங்கை வங்கியில் வைப்பு செய்துள்ளார். பின்னர் தொலைபேசி இலக்கம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். …
-
- 5 replies
- 648 views
- 1 follower
-
-
யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு! யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றையதினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளதுடன், அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது, பாணினுள் இருந்து உடைந்த போத்தலின் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த கடை சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றே பாண் விநியோகம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குறித்த வெதுப்பகத்திற்கு எ…
-
- 1 reply
- 224 views
-
-
யாழ்ப்பாணம் - மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர், சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து மகுடி வாசித்துள்ளார். மகுடி சத்தம் கேட்ட பாம்பு கோயில் முன் பகுதிக்கு வந்துள்ளது. அதன்போதே குறித்த நபர் பெட்டிக்குள் பாம்பை அடைத்து கொண்டு சென்று…
-
- 24 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாள்களினால் அலங்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணமாலையிடப்பட்ட விக்ரகத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது. யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாள்களினால் அலங்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணமாலையிடப்பட்ட விக்ரகத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது. இலங்கையில் பயன்பாட்டில் உள்ள 20, 50, 100, 500, 1000, 5000 ரூபா நாணயத்தாள்களைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எனினும் எந்தக் கோயிலில் இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் சரியாக வெளியாகவில்லை. நாணயத்தாள்களைச் …
-
- 5 replies
- 1.5k views
-
-
யாழில் புறா வளர்ப்பில் போட்டி- பெற்றோல் ஊற்றி கூட்டோடு கொழுத்தப்பட்ட 50 புறாக்கள் யாழ். கொட்டடி பகுதியில் புறா வளர்ப்பில் ஏற்பட்ட போட்டியினால் சுமார் 50 புறாக்களுடன் இருந்த புறா கூட்டுக்கு விசமிகள் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளன.யாழ் நகரில் பூட்டு திருத்தும் கடை ஒன்றினை நடத்திவரும் நபர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் புறா கூட்டுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்த விசமிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.இதனையடுத்து அயலவர்கள் கூடி தீணை கட்டுப்படுத்தினர் எனினும் 40 வரையான புறாக்கள் தீயில் எரிந்து இறந்த சில் எரிந்த காயங்களுடன் சில புறாக்கள் தப்பியுள்ளன. https://www.thaarakam.com/news/…
-
- 5 replies
- 635 views
-
-
யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர் கைது! யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களையும் மோட்டார் சைக்கிளொன்றையும் தீயிட்டுக் கொளுத்தியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் ஒரு தொகைப்பணத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று வட்டுக்கோட்டை பகுதியில் 5ஆயிரம் ரூபாய் தாள்கள் சிலவற்றை வீசியுள்ளார். பின்னர் தனது வீடு நோக்கி திரும்பியவர் வீட்டுக்கு அருகில் இருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் தன் கைவசம் இருந்த மிகுதி பணத்தினையும் வீதியில் போட்டு தீ வைத்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரை…
-
- 0 replies
- 114 views
-
-
யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரி வீதியூடாக சென்று கொண்டிருந்து வேளை அவரைத் துரத்திய நாயை தனது துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கி நாயை கடித்துக் குதறியுள்ளார். இதனால் நாய்க்கு முகத்தில் காயமடைந்துள்ளது. அத்தோடு குறித்த இளைஞருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இரத்தப் போக்கு கரணமாக நாயைக் கடித்த இளைஞன் மயக்கமடைந்துள்ளார். அருகிலுள்ள வீட்டுக்காரரின் உதவியுடன் ஆட்டே ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின…
-
- 9 replies
- 633 views
-
-
யாழ்.அச்சுவேலி பகுதியில், இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம். இதுக்கு எதிராக மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் “தடுத்து நிறுத்த” முயற்சி செய்த போதும், அச்சுவேலி பொலிஸாரின் துணையுடன் தப்பிச் சென்றுள்ளனர். தப்பி செல்வதற்கு பாதுகாப்பு வழங்கிய அச்சுவேலி பொலிஸாா் குறித்து பலரும் விசனம் தெரிவித்து உள்ளனர். தற்போது இரண்டு பிள்ளையும் தாயும், நடுத்தெருவில் நிற்பதாக தெரிவிக்கப் படுகிறது. இதன் விபரமான தகவல் இன்னமும் தெரிய வரவில்லை. http://www.jaffnaboys.com
-
- 17 replies
- 2.2k views
-
-
யாழில் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள் யாழ்ப்பாணம், அச்சுவேலி, வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரும் அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1341818
-
- 0 replies
- 510 views
-
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விபரங்கள் வெளியாகாத நிலையில், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/146474
-
- 0 replies
- 392 views
-
-
யாழில் மாதா சொரூபத்தில் கண்ணீர் வடியும் காட்சி! 28 SEP, 2025 | 11:06 AM யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சொரூபத்தில் இருந்து கடந்த மூன்று தினங்களாக கண்ணீர் வடிகின்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த சம்பவமானது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் இதனை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் திரள்தின்றது. https://www.virakesari.lk/article/226294
-
- 0 replies
- 106 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 11:13 AM யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லியுடன் காணப்பட்ட…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
முட்டைகளை குடிப்பதில் கின்னஸ் சாதனை படைப்பதற்கான பரீட்சார்த்த முயற்சியில் யாழ்ப்பாணம் இளவாலையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஈடுபட்ட சுவாரஸ்ய சம்பவம் நேற்று நடந்துள்ளது. இளவாலை கரும்பனை சனசமூக நிலையத்தில் நடந்த இந்த சுவாரஸ்ய நிகழ்வை பார்க்க பெருமளவு மக்கள் முண்டியடித்துக் வந்ததையும் அவதானிக்க முடிந்தது. அளவெட்டி வடக்கைச் சேர்ந்த அப்புத்துரை ராசேந்திரம் [வயது-53] எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையாரே இந்தமுயற்சியில் ஈடுபட்டிருந்தார். நூற்று பத்து முட்டைகள் குடிக்கப்பட்டதே உலக சாதனையாக உள்ளது. இச்சாதனையை முறியடிக்கும் பரீட்சார்த்த நடவடிக்கையாகவே இந்த முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார். காலை 11.10 மணியளவில் முட்டை குடிக்க ஆரம்பித்த அவர் காலை 11.13 மணி 14 வி…
-
- 3 replies
- 518 views
-
-
யாழில் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டு இருந்தார். அப்பெண் தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை செய்த பின்னர் , அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பா…
-
- 7 replies
- 743 views
-
-
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டிற்கு சென்ற ரௌடிக்குழுவொன்று பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது. தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் வாள்வெட்டிற்கு சென்ற குழுவே மடக்கிப் பிடிக்கப்பட்டது. இரண்டு ரௌடிகள் பிடிக்கப்பட்டனர். ஏனையவர்கள் தப்பியோடி விட்டனர். எட்டுப் பேர் கொண்ட ரௌடிக்குழு வாள்களுடன் தாக்குதல் நடத்த சென்றனர். இதையடுத்து ஒன்றுகூடிய மக்கள் ரௌடிகளை வளைத்து பிடிக்க முயன்றனர். இரண்டு ரெடிளகள் சிக்கினர். ஏனைய ரௌடிகள் தப்பியோடி விட்டனர். மடக்கிப் பிடிக்கப்படும் போது இரண்டு ரௌடிகளும் வாள்களுடனேயே சிக்கினர். புத்தூரை சேர்ந்த மகாதேவன் கோகுலன் (30), ஆவரங்கால் மேற்கு புத்தூர் பகுதியை சேர்ந்த…
-
- 0 replies
- 430 views
-
-
யாழில் விபத்து! முதியவர் படுகாயம்..! யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துச் சம்பவத்தில், துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தலையில் படுகாயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளான யாழ் வைத்தியசாலை மற்றும் நொதோண் வைத்தியசாலைகளுக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடனடியாக அங்கு நின்ற மக்கள் விபத்தில் சிக்கிய முதியவருக்கு சிகிச்சை அளிக்குமாறு மேற்குறித்த இரண்டு வைத்தியசாலைகளிலும் உதவி கோரியிருந்தனர். இருந்தும…
-
- 0 replies
- 309 views
-
-
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிறீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த குளிர்பான விற்பனை நிலையத்தில் நேற்று (14) ஐஸ்கிறீம் குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தநிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. https://thinakkural.lk/article/291932
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
யாழில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை உடைத்துவிட்டு வன்முறைக் கும்பல் தப்பியோட்டம்! யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்குப் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், பெறுமிக்க பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. ஒன்பது பேர் கொண்ட கும்பலே இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆறு மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் குறித்த வீடுகளுக்குச் சென்றிருந்த கும்பல், பெறுமதியான தளபாடங்களை அடித்து உடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டுவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார் ம…
-
- 0 replies
- 386 views
-
-
யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு; சொகுசு கார் தீயில் எரிந்தது! யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனம் தெரியாத வன்முறை கும்பல் ஒன்றே இவ்வாறு பெற்றோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த தாக்குதலில் வீட்டில் தரித்து நின்ற காரிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com/யாழில்-வீட்டின்-மீது-பெற/
-
- 0 replies
- 371 views
-
-
யாழ்.பொலிஸ் நிலையமருகில் கடந்த 20ஆம் திகதியில் இருந்து உரிமைகோரப்படாது அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் இன்று வீடு சென்றுள்ளது. அதன் உரிமையாளர் இன்று பிணையில் விடுதலையாகியதையடுத்தே மோட்டார் சைக்கிள் வீடு சென்றுள்ளது. நீதிமன்றம் தாக்கப்பட்ட தினமான கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரம் காற்று போயுள்ளது. அதனையடுத்து மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் விட்டுவிட்டு சில்லினை கழற்றி காற்று அடிப்பதற்கு கடைக்கு சென்றுள்ளார். அவ் வேளையில் யாழ்.நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 130 பேர் கைதாகியிருந்த நிலையினில் அவர்களுடன் மோட்டார் சைக்கிள் சி…
-
- 0 replies
- 305 views
-
-
யாழில் வீதியில் நெல் விதைத்துப் போராட்டம்! வீதியில் நெல் விதைத்து யாழில் இன்று விநோத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- மானிப்பாய் – காரைநகர் வீதியை புனரமைப்புச் செய்துதருமாறு கோரியே மூளாயில் மக்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் வீதியில் வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில் ஏர் பூட்டியும், உழவியந்திரங்களைக் கொண்டும் வயல் உழுவது போன்று பாசாங்கு செய்து நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களும் மூளாய், பொன்னாலை பிரதேச மக்களும் அதிக அளவில் பங்குபற்றினர். https://athavannews.com/2023/1358212
-
- 4 replies
- 667 views
- 1 follower
-
-
யாழில், கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து.. காயங்களை ஏற்படுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த நான்காம் திகதி இடம்பெற்றது. “சந்தேக நபரின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று வந்ததையடுத்து அதனை விரட்ட சந்தேக நபர் பெற்றோலை விசிறியுள்ளார் அது அங்கு ஏற்றப்பட்டிருந்த சாம்பிராணி குச்சியில் பட்டு தீ ஏற்பட்டுள்ளது. கணவன் மீது பெற்றோலை ஊற்றும் எண்ணம் சந்தேக நபரிடம் இல்லை” என்று ச…
-
- 15 replies
- 549 views
-
-
யாழில், பயணத் தடை வேளையிலும்... இயங்கி வந்த, மதுபானசாலை முற்றுகை !! யாழ்ப்பாணம் -கோப்பாய் பொலிஸ் பிரிவில் மதுபான சாலை ஒன்று மதுவரித் திணைக்களத்தினால் சீல் செய்யப்பட்டதுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வரும் ஜூன் 7ஆம் திகதிவரை மதுபான சாலைகளை மூட மதுவரி ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் அதனை மீறி மதுபான சாலையைத் திறந்த குற்றச்சாட்டில் அதன் முகாமையாளர், விற்பனையாளரும் அரச சாராயத்தை சட்டத்துக்குப் புறம்பாக வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (செவ்வாய்க்கிழ…
-
- 0 replies
- 286 views
-
-
யாழில், போதைக்கு அடிமையான... 17 வயது சிறுமி, கர்ப்பம் – மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை. யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த சிறுமி போதைப்…
-
- 1 reply
- 410 views
- 1 follower
-
-
யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது. யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து, துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 17 நாட்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த சிறுமி நல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டார். இதனையடுத்து பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறித்த சிறுமியை இளைஞன் ஒருவர் காதலித்து வந்ததாகவும், அவரே சிறும…
-
-
- 7 replies
- 372 views
- 1 follower
-