செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
இளைஞர் அதுவும் குறிப்பாக புறம் மறந்து காதல் உணர்வை வெளிப்படுத்த விளையும் ஜோடிகள், காவலர்களின் தொல்லையின்றி கூடுவதற்காக சிறப்புப் பூங்கா ஒன்றை உருவாக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் இரு நகரங்களில் பொது இடங்களில் கோஞ்சிக்குலாவிக்கொண்டிருந்த காதலர்கள் பலர் காவலர்களால் கைது செய்யப்பட்டனர். ஆனால், அந்த நிகழ்வு அரசுக்கு சிறிது சங்கடத்ததை ஏற்படுத்தியிருந்தது. அதனையடுத்தே இந்த திட்டத்தை அரசாங்கம் அமல் படுத்தவுள்ளது. இளம் ஜோடிகள் தமது உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் தடையின்றி வெளிப்படுத்த வழி செய்ய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதனைச் சொன்னவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரான லலித் பியும் பெரேரா. இளைஞர்களுக…
-
- 0 replies
- 607 views
-
-
மிகப்பெரிய மரம் எது ! ? அது எங்குள்ளது ? அந்த மரத்தின் பெயர் என்ன என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது . சரி அப்படி உலகிலேயே மிகப் பெரிய மரம் எங்குதான் இருக்கிறது !? உலகிலேயே எடை அதிகமான மரம் கலிபோர்னியாவில் உள்ள ஜெனரல் ஷெர்மன் என்ற மரம்தானாம் .கடந்த ஆண்டு மரங்களின் வளர்சிக் கணக்கெடுப்பின்படி படி இதுவரை இந்த மரத்தின் சாதனையை வேறு எந்த மரமும் வெற்றி கொள்ளவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . . http://en.wikipedia.org/wiki/General_Sherman_(tree)
-
- 2 replies
- 1.1k views
-
-
வினோதமான வேலிகளும் சுவர்களும் http://www.amazingonly.com/amazing/weirdest-fences-around-world-amazing/
-
- 6 replies
- 609 views
-
-
உலகின் மிகப்பெரிய அலாரம்(Alaram} மணிக்கூடு
-
- 8 replies
- 840 views
-
-
" இயேசு கிறிஸ்துவுக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் " - பரபரப்பைக் கிளப்புகிறார் பாஸ்டர் புதன், 03 நவம்பர் 2010 01:04 சமீபத்தில் தான் கலந்து கொண்ட பிரசங்கமொன்றில் இயேசு கிறிஸ்துவுக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் இருந்தது எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பாஸ்டர். கேப் டவுனில் நடந்த பிரச்சாரத்தில் அச்சம் ஏதுமின்றி சோலா ஸ்கோசனா என்ற பாஸ்டர் இவ்வாறு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவ ஆரம்பித்துள்ளது. பலரும் தெய்வமாக வழிபடும் இயேசு கிறிஸ்துவை பாஸ்டர் எய்ட்ஸ் உள்ளவர் எனக் கூறியுள்ளதால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயமும் சம்பந்தப்பட்ட பாஸ்டரின் மீது மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர். கூடிய விரைவில் பாஸ்டர் மீது ஒழுங்கு…
-
- 7 replies
- 1k views
-
-
தெற்கு ஐரோப்பாவிலுள்ள சாவா ஆற்றில் மூழ்கும் படகிலிருந்த ஒருவர் கடைசி செக்கனில் உயிர் மீண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. சரியான நேரத்தில் மீட்புப் படையினர் ஹெலிகொப்டரில் வந்ததால் படகில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரை மீட்க முடிந்தது. ஒரு செக்கன் தாமதமாகியிருந்தால் கூட அந்நபரை பிணமாக தான் மீட்க முடிந்திருக்கும். இப்படியான மீட்பு நடவடிக்கைகள் எல்லாம் நம் நாட்டில் சாத்தியமா? கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
-
- 2 replies
- 716 views
-
-
பொப் பாடகி மாயா- ஒரு நாள் முஸ்லிம்! ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2010 13:53 . . முஸ்லிம் பெண்களின் தனித்துவமான அடையான ஹியாப் ஐ அணிந்து சர்ச்சையில் மாட்டுப்பட்டு இருக்கின்றார் உலகின் முன்னணிப் பொப்பிசை பாடகிகளில் ஒருவரான பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழர் மாயா அருள்பிரகாசம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லொஸ்ஏஞ்சல் மாநகரத்தில் Scream Awards என்கிற சர்வதேச- திரைப்பட விருது விழா கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மாயா ஒரு முஸ்லிம் பெண்ணைப் போல் ஹியாப் அணிந்துகொண்டு பிரசன்னமாகி மிகவும் எடுப்பாக காட்சி அளித்தார். கமராக்கள் முன் தோன்றினார். முஸ்லிம் அல்லாத ஒருவர் பகட்டுக்காகவும், ஆடம்…
-
- 4 replies
- 1k views
-
-
பேஸ்புக்' கில் இணைந்திருந்த போது இடையூறு விளைவித்த குழந்தையை கொன்ற தாய், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அமெரிக்க வட புளோரிடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் ' பேஸ்புக் ' இணையத்தளத்தினை உபயோகிக்கும் போது இடைஞ்சலாக இருந்த தனது குழந்தையைக் கொல்ல நேரிட்டதாக, தனது குற்றத்தைத் தானே நேற்று ஒப்புக் கொண்டார். அலெக்ஸேண்ரா டொபியஸ் எனும் இப்பெண் 'பேஸ்புக்'கில் உள்ள ' பார்ம்வெளி ' எனும் பிரபல கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்துள்ளார். அந்நேரத்தில் இவரது 3 மாதங்களேயான குழந்தை அழுதுள்ளது. இதன்போது கோபமடைந்த இவர் ஆத்திரத்தில் குழந்தையைத் தூக்கி வேகமாக குலுக்கவே, அதன் தலை கணினியில் மோதி குழந்தை உயிரிழந்ததாக அலெக்ஸேண்ரா தெரிவித்துள்ளார். இவருக்கான தீர்ப்பு எதிர்வரும் டிச…
-
- 0 replies
- 677 views
-
-
பெர்லின்: உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளின்போது உலகம் முழுவதும் பெரும் பிரபலமான ஆக்டோபஸ் பால் மரணமடைந்து விட்டது. இதை ஜெர்மனியில் பால் வைக்கப்பட்டிருந்த அக்வாரியத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது மிகவும் புகழ் பெற்றது பால். காரணம், முக்கியப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அது சரியாக அடையாளம் காட்டியதால். ஆக்டோபஸ் பால் மொத்தம் எட்டு போட்டிகளின் வெற்றிகளை அடையாளம் காட்டியது பால். அதில் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வெல்லும் என்பதும் அடக்கம். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதேபோல அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனி தோற்கும் என்றும் அடையாளம் காட்டியத…
-
- 7 replies
- 930 views
-
-
பீஜிங்: ஒரு வயதுடைய காங் மெங்ரூ என்ற பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள அபூர்வம் சீனாவில் நடந்துள்ளது. அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்று வினோதமான நிகழ்வு 500,000 பிரசவத்திற்கு ஒரு முறை நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது.
-
- 0 replies
- 732 views
-
-
கல்லறையில் பிணத்தை தோண்டி ரத்தம் குடிக்கும் காட்டேரியை பற்றி கட்டுக்கதைகள் படித்திருப்பீர்கள். ஆண் ரத்தத்தை குடிக்கும் அணங்கு என்றும் கூட சினிமாக்களிலும் பார்த்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் இப்படி இந்தக் காலத்திலும் சிலர் உள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள். ஆஸ்திரேலியாவில் ஒரு பெண், தன் அன்பை வெளிப்படுத்த உச்சகட்டமாய், கணவனின் ரத்தத்தை குடிக்கிறாள். இவளின் பெயர் கிரிஸ் பாய்சன். (பெயரிலேயே விஷம் இருக்கு...) ‘நான் என் கணவனின் அனுமதியுடன் தான் அவரது ரத்தத்தை குடிக்கிறேன். காதலன் தன் காதலியின் ரத்தத்தை குடிப்பதும், காதலன் ரத்தத்தை காதலி குடிப்பதும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு உச்சகட்ட உத்தி தான். நான் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெண்கள், ரத்தம…
-
- 5 replies
- 1.5k views
-
-
சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட `டிராபிக் ஜாம்’ உலக சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. இதைவிட வினோதமாக, நண்டு விளையாட்டால் மாதக் கணக்கில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது தைவான் நாட்டில். அங்குள்ள கென்டிங் தேசிய பூங்கா அருகே ஒரு கடற்கரை உள்ளது. அதையொட்டி பிரதான கடற்கரை சாலையும் செல்கிறது. தற்போது நண்டுகளின் இனபெருக்க காலமாகும். அதனால் 40 வகையான நண்டு இனங்கள் தங்கள் இனபெருக்க வேலையில் இறங்கி உள்ளன. நண்டுகள் நடுரோட்டில் நின்றுகொண்டு `நண்டூறுது, நரியூறுது’ விளையாட்டில் ஈடுபடுகின்றன. கடற்கரையில் நண்டுகள் விளையாடினால் ரசிக்கும் மனிதர்கள், நடுரோட்டில் நண்டுகளை பார்த்ததும் எரிச்சலாகிவிடுகிறார்கள். ஒன்று, இரண்டல்ல சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான நண்டுகள் லீலை செய்கின்றன. குஞ்சுகளை அழைத்…
-
- 2 replies
- 668 views
-
-
உலகம் முழுவதும் 460 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால் ரூ. 150 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கிறது. செல்போனை பயன்படுத்தினால் புற்று நோய் வரும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால் இதை ஒரு தரப்பு விஞ்ஞானிகள் மறுத்தனர். இந்த நிலையில் அமெரிக்க நோபல் பரிசு விஞ்ஞானியும், விஷத்தன்மை ஆய்வு நிபுணருமான தேவ்ரா டேவில் செல்போன் மனித குலத்துக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இது சம்பந்தமாக அவர் எழுதியிருப்பதாவது:- செல்போன் பயன்பாடு உலக சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. செல்போனில் ஒருவகை கதிரியக்கம் தொடர்ந்து வெளிபட்டு கொண்டே இருக்கும். இதனால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படைந்து அதனால் …
-
- 8 replies
- 1.1k views
-
-
தென் தமிழீழம் மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை நகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அதிசய விநாயகர் ஆலயத்தின் வளாகத்தில் உள்ள மாமரத்தில் பிள்ளையார் உருவத்தினை கொண்ட அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது. மேற்படி ஆலயத்தின் புனர்நிர்மானப் பணிகள் இடம்பெற்று வரும் இத்தருணத்தில் இவ்வாறான அதிசயப் பிள்ளையாரின் தோற்றம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை பெருந்திரளான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டு வருவதுடன், மாங்காய் உருவத்தில் தோன்றியுள்ள அதிசயப் பிள்ளையாரின் இயற்கையான இந்த வடிவம் பிள்ளையாரின் அருள் கடாட்சம் இந்த இடத்தில் நேரடியாக கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. http://www.vannionline.com/2010/10/blog-post_6928.html
-
- 13 replies
- 6.2k views
-
-
கள்ளகாதலுக்கு தொல்லையாக இருந்த கணவன் நாக்கை அறுத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி(40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாரியாயி (35). இவர்களுக்கு இரணடு பெண் மற்றும் ஒரு ஆண் உள்ளனர். இந்த நிலையில், மாரியாயிக்கும், களத்துப்பட்டியை சேர்ந்த நல்லசாமி என்பவருக்கும் இடையே கடந்த மூன்று வருடங்களாக கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. நல்லசாமிக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கர்நாடகாவில் போர்வெல் வண்டி ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். அடிக்கடி களத்துப்பட்டிக்கு வரும் நல்லசாமி மாரியாயியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து…
-
- 0 replies
- 742 views
-
-
லண்டன்:டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு மாலுமியே காரணம் என, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. டைட்டானிக் உல்லாச கப்பல் நடுக்கடலில் மூழ்கிய தினம், கடந்த நூற்றாண்டின் கறுப்பு தினமாக கருதப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படாமல், ரகசியம் காக்கப்படுகிறது. இந்த நிலையில், மாலுமியின் தவறான முடிவுகளால் கப்பல் விபத்துக்குள்ளானதாக சமீபத்தில் வெளியான ""குட் இஸ் கோல்டு'' என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை டைட்டானிக் கப்பலில் துணை கேப்டனாக இருந்த சார்லஸ் லைட்டோலர் பேத்தி லூயிஸ் பேட்டன் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:பனிப்பாறை இருப்பது குறித்து இரண்டு கடல்மைல் தொலைவுக்கு முன்னதாகவே கப்பல் கேப்டன் வில்லியமுக்கு …
-
- 2 replies
- 722 views
-
-
உலகின் அதி உயர குழந்தை : வயது இரண்டரை, உயரம் 4 அடி 5அங்குலம்! (படங்கள் இணைப்பு) உலகின் உயரமான குழந்தையாக இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த கரன் சிங் கருதப்படுகின்றார். இரண்டரை வயதான இக்குழந்தையின் தற்போதைய உயரம் 4 அடி 5 அங்குலங்கள். 7 அடி 2 அங்குலமான இவரது தாயார் ஆசியாவின் உயரமான பெண்மணியென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு கூடைப்பந்து வீராங்கனையாவர். இதே வயதையொத்த குழந்தைகளைவிட இவர் சுமார் 2 மடங்கு உயரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிறக்கும் போதே இக்குழந்தை 2 அடி உயரம் இருந்ததாகவும், தன்னை விட உயரமாக, தன் மகன் வளர்வான் எனவும் கரனின் தாயார் தெரிவித்துள்ளார். கர…
-
- 3 replies
- 651 views
-
-
கலாச்சாரம் அதிகரிக்க அதிகரிக்க ஜீன்ஸ் பேண்ட் கீழே இறங்கிக் கொண்டே இருக்க வேண்டுமாம், அதை ஈடுகட்டும் விதமாக பிரேசில் நாட்டில் உருவாகியிருக்கிறது ஜீன்ஸ் + உள்ளாடை. ஸாண்ட்ரா டனிமூரா – இந்த ஆடையை வடிவமைத்தவர் இதன் அருமை பெருமைகளை அடுக்கினார். நன்றாக கீழிறங்கியபடி இருக்கும் ஜீன்ஸ்களையே பெண்கள் பெரிதும் விரும்பியதாகவும், ஆனால் அப்படிப்பட்ட ஆடைகள் தயாராக்கும் போது அவை உடனே கீழே இறங்கி தரையில் விழுந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். இதற்கு ஒரு பரிகாரம் காண வேண்டும் என யோசனையில், ஜீன்ஸ்க்குக் கீழே அமர்ந்து தியானம் செய்த அவருக்கு, ஆப்பிள் விழுந்தபோது புவீஈர்ப்பு விசையைப் புரிந்து கொண்ட ஐசக் போல ஜீன்ஸ் விழுந்தபோது புதிய விதி புலப்பட்டதாம். அதாவது உள்ளாடையுடன் கூடிய …
-
- 1 reply
- 1.1k views
-
-
சீனாவின் ஹெபேயி நகரிலுள்ள மிருகக்காட்சிசாலையில் 4 வயதான யங் யங் என்ற ஆண் குரங்கிற்கும் 6 வயதான வான் ஸிங் என்ற பெண் குரங்கிற்கும் செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த இரு குரங்குகளும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காதல் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்து.இந்த திருமணத்தில் காதல் ஜோடியின் சகப்பாடிகளும் பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
-
- 5 replies
- 1.5k views
-
-
தண்டையார்பேட்டை : முதலிரவு அறைக்குள் புகுந்த கும்பல், மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி விட்டு மணப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. போலீசார் மீட்டு இருவரையும் சேர்த்து வைத்தனர். புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரீத்தி (18). நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் (22), தனியார் நிறுவன ஊழியர். உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த 27ம் தேதி பிரீத்தியும் சண்முகமும் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு கோயிலில் திருமணம் செய…
-
- 0 replies
- 815 views
-
-
கான்கிரீட் வீடு கட்டினா சாமி குத்தம் சேலம் மாவட்டம் மல்லியகரையில் இருந்து ராசிபுரம் செல்லும் மெயின்ரோடு. சன்னாசி வரதன் மலையடிவாரத்தில் பாக்கு மரங்கள், தென்னந்தோப்பு, வாழை தோட்டங்கள் நிறைந்த இந்த பகுதியில் ஒன்றரை கி.மீ. தூரம் சென்றதும் இடது புறம் திரும்புகிறது சாலை. கருத்தராஜாபாளையம் கிராமத்துக்கு செல்லும் வழி. நுழைந்ததுமே பிரமாண்ட விழுதுகளுடன் வரவேற்கிறது சாலையோர உச்சிலிமரம். மரத்தடியில் காளியம்மன் கோயில். போயர் காலனி, புதுக்காலனியை கடந்தால் க.ரா.பாளையம். மொத்தம் 400 வீடுகள். ஒரு ஊர் என்றால் குடிசை, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு, பண்ணை வீடு, பங்களா என்று கலவையாக இருக்கும். இங்கு வித்தியாசம். ஆஸ்பெட்டாஸ், ஓடு, கூரை வீடுகள் மட்டுமே உள்ளன. கான்கிரீட் வீடு ஒன்றுகூட இல…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெர்மனி நாட்டில் வெளிநாட்டு மந்திரியாக இருப்பவர் கைடோ வெஸ்டர்வெல். 48 வயதான இவர் தன் நீண்டகால நண்பரும் வர்த்தகருமான மைக்கேல் மொரான்சை கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டார். மைக்கேல் விளையாட்டு நிகழ்ச்சிளை நடத்தும் அமைப்பாளராக இருக்கிறார். அவர் வயது 43 ஆகும். பான் நகர மேயர் ஜுயெர்ஜன் நிம்ட்ஸ் பதிவாளராக இருந்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில் நாட்டின் பெண் அதிபர் ஏஞ்சலா மார்க்கலோ, மற்ற மந்திரிகளோ கலந்து கொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்கள், மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் பதிவானதும், விருந்தினர்களுக்கு ஒரு ஓட்டலில் விருந்து கொடுத்து கொண்டாடினார்கள். இவர்கள் இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒர…
-
- 21 replies
- 1.9k views
-
-
உயிர்போகும் தருவாயிலில இருந்த பாம்பு பெண்ணாகிய மாரிய அதியச சம்பவம் கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படிதியுள்ளது.கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள் அதைக் கொல்ல முயன்ற போது, அது திடீரென ஒரு பெண்ணாக உரு மாறியது..இது பற்றி எபாஹ் குரிப்புகையில் "பாம்பு பெண்ணாக உருவானதாக மக்கள் கூச்சளிடுகையில், அந்தப் பெண் கோபத்துடன் 'உரு மாறினா என்ன?' எனக் குறிப்பிட்டது." என்று கூறினார்.மேலும் குறிப்பிடுகையில் "வித்தியாசமான பாம்பு போன்ற ஓசையை எழுப்பியபடி எழுந்த அந்தப் பெண்ணின் உடல் பாம்புச் சட்டை போன்ற சுடுபட்ட தோலைக் கொண்டிருந்தார்."காவல் துறையினருக்கு மக்கள் தகவல் கொடுக்க, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்தப் பெ…
-
- 2 replies
- 1.5k views
-
-
இங்கிலாந்தில் வின்டோ லாண்யா ரோமன் கோட்டை பகுதியில் போர் வீரர்கள் அறையின் மூலையில் தோண்டி அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது. இதன் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. மண்டை ஓட்டில் அடிபட்டு இருந்தது. இந்த எலும்பு கூட்டை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இது ஒரு பெண் குழந்தையின் எலும்பு கூடு என்றும், இவள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் அப்போது இங்கிலாந்தை ஆண்டை ரோமானியர்கள் மனிதர்களை புதைத்த இடங்களில் கோட்டைகள் மற்றும் நகரங்களை அமைத்ததாக கூறப்படுகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp…
-
- 0 replies
- 496 views
-
-
மனித முகத்தைக் கொண்ட மீன் ஒன்று மல்வானை பகுதியில் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்வானைப் பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீனை சிறுமி ஒருவர் வாங்கி வந்த போதே குறித்த மீனில் மனித முகம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
-
- 2 replies
- 633 views
-