செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7112 topics in this forum
-
அஜர்பைஜானைச் சேர்ந்த 36 வயதான ரஷ்ய பேச்சாளர் ஒருவர் லிஸ்பனில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றார். அங்கு மாதுளம் பழச்சாறு ஒடர் செய்ய முயன்றார். மாதுளை என்ற வார்த்தையை போர்ச்சுக்கீசிய மொழியில் கூறுவதற்காக அவர் மொழி பயன்பாட்டை பயன்படுத்தினார். ஆனால் அது அவருக்கு தவறான மொழிபெயர்ப்பை வழங்கி உள்ளது. அதாவது மாதுளம் பழச்சாறு என்பதற்கு பதிலாக, கையெறி குண்டு என வந்துள்ளது. இதை அறியாத அவர் ஒடர் செய்ததும் உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் கையெறி குண்டுகளைக் காட்டி மிரட்டுவதாக கருதிய உணவக ஊழியர்கள் காவல் துறையினரிடம் புகார் செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்றனர். அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட சுற்றுலா பயணியை பிடித்து கைது செய்…
-
- 4 replies
- 333 views
- 1 follower
-
-
இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் மக்கள் ஆர்வம் காட்டினாலும் பாதுகாப்பற்ற நிலையினால் அவர்களினால் முதலீடு செய்ய முடியவில்லை என புலம்பெயர் தமிழ் தொழிலதிபரான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் பெரும்பான்மை இன மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட்டால் நிச்சயமாக பாரியளவிலான முதலீடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பெரும்பான்மை இனத்தவரின் வீடுகளை சுற்றி இராணுவ முகாம்கள் இருந்தால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? யாழ்ப்பாணத்தை சுற்ற…
-
- 0 replies
- 833 views
-
-
02 NOV, 2023 | 03:32 PM தனது கணவரான இராணுவ சிப்பாயின் ஆணுறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனைவியை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணாவார். இவர் பகலில் தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது பாக்குவெட்டி ஒன்றினால் கணவரின் ஆணுறுப்பை வெட்டி காயப்படுத்தியுள்ளார். காயமடைந்தவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது …
-
- 21 replies
- 1.4k views
- 3 followers
-
-
பார்வைக் குறைபாடுடைய பொலிஸாருக்கு நற்செய்தி! யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் பார்வை குறைபாடுடைய பொலிஸாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் காலை 9மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. லயன்ஸ் கிளப்பின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் 400 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கண்ணாடி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1356940
-
- 0 replies
- 158 views
-
-
அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் ஒருவர் 40 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில் திடீரென இறந்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் குழு, கடந்த செப்.20ஆம் திகதி இதயம் பழுதடைந்த 58 வயதான லாரன்ஸ் பேஸட் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர். முன்னாள் கடற்படை வீரரான இவரின் இதயம் செயலிழந்த நிலையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 வாரங்கள் வரை நலமோடு இருந்த லாரன்ஸ், திங்கள்கிழமை (ஒக்.30) அன்று உயிரிழந்துள்ளார். “லாரன்ஸ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது என குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
பெரும்பாலும் பிரபல நட்சத்திரங்களின் சாயல் கொண்ட இளைஞர்கள் அவர்களைப் போலவே ஸ்டைலாக உடை அணிவது அவர்களைப் போலவே தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் புகைப்படங்கள் ரிலீஸ் வீடியோக்கள் என வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பெரும்பாலும் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு அவர்களது இளமைக்கால தோற்றத்தில் தான் பலரும் தங்களது உருவத்தை ஸ்டைலாக மாற்றிக் கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். ஆனால் 72 வயதில் ரஜினிகாந்த் தற்போது இருக்கும் தோற்றத்தில், கேரளாவில் கொச்சியை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் சுதாகர் பிரபு என்பவர் கிட்டத்தட்ட ரஜினியின் சாயலிலேயே பார்ப்பதற்கு ஆச்சரியம் தருகிறார். பலரும் அவருடன் ஆர்வமாக புகைப்படம் செல்பி எடு…
-
- 27 replies
- 2.6k views
- 1 follower
-
-
குரங்குகளின் கர்ப்பத்தைத் தடுக்க லூப் கருத்தடைகளை பயன்படுத்த நடவடிக்கை பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவப் பிரிவும் பேராதனை போதனா வைத்தியசாலையும் இணைந்து குரங்குகளின் கர்ப்பத்தைத் தடுப்பதற்காக ‘லூப் கருத்தடை’ எனப்படும் கருப்பையக சாதனத்தை (IUD) அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.. IUD என்பது T-வடிவ பிளாஸ்டிக் துண்டு ஆகும், இது கர்ப்பத்தைத் தடுக்க கருப்பையில் வைக்கப்படுகிறது. பெண் குரங்குகளுக்குள் IUD ஐச் செருகுவதற்கான சாத்தியமான வழியைக் கண்டறிய ஒரு சோதனை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். “குரங்குகளின் கருப்பையின் அளவு மற்றும் கருப்பை வாயில் …
-
- 2 replies
- 471 views
-
-
பேஸ்புக்கில் மலர்ந்த காதல் : சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டிய இராணுவ வீரர். பேஸ்புக் மூலம்; காதல் வயப்பட்டு 16 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் திரட்டிய இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார். வட மாகாண இராணுவ முகாமில் பணி புரியும் இராணுவ வீரர் பேஸ்புக் மூலம் பாடசாலைக்கு செல்லும் 16 வயது மாணவியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். அதன் மூலம் , குறித்த சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப்பை பயன்படுத்தி பெற்றது மட்டுமன்றி , 13 வயது நிரம்பிய குறித்த சிறுமியின் தங்கையின் புகைப்படங்களையும் பெற்றுள்ளார். பின்னர் , அந்த படங்களை இணையத்தில் பதிவேற்றி விடுவதாக தனது வங்கி கணக்க…
-
- 3 replies
- 787 views
-
-
28 OCT, 2023 | 09:46 AM யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனுக்கு மதுபானத்தை அருந்த கொடுத்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை (27) முச்சக்கர வண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார…
-
- 0 replies
- 536 views
- 1 follower
-
-
செக் குடியரசு நாட்டின் டெலிவிசன் ஷோ நடத்துபவர் கமில் பார்ட்டோஷெக். இவர் கஸ்மா என அழைக்கப்படுகிறார். டெலிவிசன் நிகழ்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரான இவரின், “Onemanshow: The Movie” படத்தில் ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்தார். இதில் வெற்றிபெறும் நபருக்கு சுமார் ஒரு மில்லியன் டொலர் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த கஷ்டமான புதிருக்கு விடையளிக்க கடினம் என்பதால், போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்த அனைவருக்கும், பணத்தை பகிர்ந்து அளிக்க முடிவு செய்தார். இதனால் ஒரு இடத்தை இலக்கு செய்து, அந்த இடத்தில் பணத்தை கொடுக்கப் போவதாக அறிவித்தார். அவர் சொன்னதுபோன்று, சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து…
-
- 0 replies
- 659 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,WEIBO கட்டுரை தகவல் எழுதியவர், பேன் வாங் பதவி, பிபிசி நியூஸ் 23 அக்டோபர் 2023 சீனாவில் சிங்தாவோ பீர் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிலாளி ஒருவர் தொட்டிக்குள் சிறுநீர் கழிப்பதைக் காட்டும் வைரலான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது. வீடியோ தனது கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக நிறுவனம் கூறியது. மேலும், தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்துள்ள பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியது. சிங்தாவோ நிறுவனம் சீனாவின் சி…
-
- 4 replies
- 566 views
- 1 follower
-
-
மயிரிழையில் உயிர் பிழைத்த 1000 பூனைகள். சீனாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக லொறியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட 1000 பூனைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். தமக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே இச்சம்வம் அம்பலமாகியுள்ளது. ஜியாங்சுவில் உள்ள இறைச்சிக் கடையொன்றுக்குக் கொண்டு செல்லப் பட்ட பூனைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டடுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1355628
-
- 0 replies
- 223 views
-
-
நவராத்திரி விழாவுக்கு பாடசாலை மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட ரூ. 64 ஆயிரம் ரூபாவை அப்படியே ஆட்டையை போட்ட பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர், பூசாரியிடம் முட்டையொன்றை மந்திரித்து பாடசாலை மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரிடமும் சத்தியம் வாங்கிய சம்பவமொன்று அம்பலமாகியுள்ளது. நவராத்திரி விழாவினை முன்னிட்டு ஒரு மாணவரிடம் 150 ரூபாய் அடிப்படையில் 64,000ம் ரூபாய் பணம் குறித்த பாடசாலையின் அதிபரினால் வசூல்செய்யப்பட்டது. இவ்வளவு பணம் வசூல் செய்யப்பட்டு இரண்டு தினங்களில் பாடசாலையின் அதிபரினால் களவாடப்பட்டதாக மாணவர்களும் ஆசிரியர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். அதனை மூடி மறைப்பதற்கே முட்டையை வைத்து நாடகமாடுகின்றார் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டைம…
-
- 0 replies
- 200 views
-
-
23 OCT, 2023 | 04:59 PM இலங்கையில் தவளைகளை கடிக்கும் ஒரு வகை புதிய நுளம்பு இனத்தை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பில் பூச்சியல் நிபுணர் கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவிக்கையில், இலங்கையில் மீரிகமை மற்றும் ஹந்துருமுல்லை போன்ற பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை எமது நாட்டில் இனங்காணப்பட்டுள்ள நுளம்பு இனங்களின் மொத்த எண்ணிக்கை 156 ஆகும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167593
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு பல்கேரியா. இதன் தலைநகர் சோஃபியா. இந்நாட்டில் எண்ணிக்கையில் சுமார் 18 ஆயிரம் பேரை கொண்ட கலாய்ழி ரோமா (Kalaidzhi Roma) எனும் இனத்தவர் வசிக்கின்றனர். இவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் நிலவுகிறது. இந்த இனத்தவர்கள் தங்கள் இன இள வயது திருமணமாகாத பெண்கள், பிற ஆண்களுடன் ‘டேட்டிங்’ அல்லது காதல் போன்ற அந்த பருவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிப்பதில்லை. மேலும் இவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பலர் தங்களுடன் இணைத்து கொள்ள தயங்குகின்றனர். அதனால் இவர்கள் சமுதாயத்தில் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் உணர்கிறார்கள். எனவே, இவர்கள் திருமண சம்பந்தத்தையும் பிற இனத்தவர்களுடன் செய்து கொள்வதில்லை. தங்கள…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
மாரடைப்பு ஏற்பட்டதாக நடித்து, பல உணவகங்களில் பில் கட்டாமல் ஏமாற்றியுள்ளார் 50 வயது நபர் ஒருவர். ஸ்பெயின் நாட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், பெரிய உணவகங்களை குறிவைத்து, அங்கு சென்று சாப்பிடுவார். உணவருந்திவிட்டு பில் கட்டவேண்டிய சமயம் வரும் போது மாரடைப்பு ஏற்பட்டது போல நெஞ்சில் கைவைத்து கொண்டு சரிந்து விடுவார், அல்லது மயங்கி கீழே விழுந்துவிடுவார். இவரது நிலையை பார்த்து பயந்து, உணவகத்து ஊழியர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து இவரை அனுப்பி வைப்பார்கள். இந்த கதை சுமார் 20 உணவகங்களில் நடந்துள்ளது. சமீபத்தில் ஒரு உணவகத்தில் இருந்து அவர் தப்பி ஓட நினைத்த போது இந்த நாடகம், அம்பலமாகியுள்ளது. அவர் சாப்பிட்ட உணவி…
-
- 0 replies
- 474 views
- 1 follower
-
-
21 OCT, 2023 | 05:39 PM வெலிகந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மைத்திரிகம பிரதேசத்தில் யானை ஒன்று இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தாய் யானையை குட்டியானை அருகில் இருந்து காவல் காத்து வருகின்றது. சம்பவதினமான நேற்று இரவு யானை மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி கூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அந்த பகுதியில் நிலத்தில் வீழ்ந்து உயிருக்கு போராடிவருகின்றது. வனவிலங்கு உத்தியோகத்தர் செல்ல முற்பட்டபோது குட்டி யானை அங்கு எவரையும் செல்லவிடாது காவல் காத்துவருகின்றது. …
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 21 அக்டோபர் 2023, 03:53 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்து பாலித்தீனிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்திப் பலரைக் கொன்றனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோரைப் பணயக் கைதிகளாகக் கொண்டு சென்றனர். அப்போது தனது வீட்டுக்குள் நுழைந்த ஆயுதக்குழுவினரை டீயும் பிஸ்கட்டும் கொடுத்து ஒரு வயதான பெண் சமாளித்து, தன் உயிரையும் தனது கணவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். தற்போது அவர் இஸ்ரேலில் ஒரு தேசியக் கதாநாயகியாகப் பார்க்கப்படுகிறார். அவர் அந்த நாளில் நடந்தவற்றை நினைவுகூர்கிறார். 'நீங்கள் என் அம்மாவைப் போலவே இருக்கிறீர்கள்' "…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
-
- 22 replies
- 1.8k views
- 1 follower
-
-
மகிந்தவின் அலுவலகத்திற்குள் அமானுஷ சக்திகள்: ராஜபக்ஷர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபக்சவின் நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக கண் திருஸ்ட்டி, தோசங்கள் ஏற்பட்டுள்ளதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்பட்டுள்ள தோசங்களை கழிக்கும் பூஜைகள், பிரித் பரிகாரங்கள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதற்கமைய, அடுத்த மாதம் 3ஆம் திகதி இரவு பூஜை வழிப்பாடுகளை மேற்கொண்டு மறுநாள் காலை தானத்துடன் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு இது நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டாலும், கட்சி அலுவலகத்தில் தற்போது எழுந்துள்ள தேவைய…
-
- 0 replies
- 174 views
-
-
சாப்பிட்ட வாழைப்பழத்தின் சிறு துண்டு நுரையீரலில் சிக்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் யிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையின் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தரான லக்ஷ்மன் ஹெட்டி பத்திரன (64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நபர் பல வருடங்களாக நோயினால் அவதிப்பட்டு வந்த நிலையில் இவரை மனைவி கவனித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 18ம் தேதி மதியம் சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அதன்படி, ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சிந்த…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 11:04 AM கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் ராகம பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளன. குறித்த ஆறு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா உறுதிப்படுத்தியுள்ளளார். இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். வைத்தியசாலை மற்றும் பெற்றோருக்கு முக்கிய தருணமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி முதன்முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள் பிறந்தன. அதில் மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 5 replies
- 456 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலியாவில் 18வது பிறந்தநாள் கொண்டாட்டம். https://m.facebook.com/people/Royal-R-event-management/100069237794187/
-
- 1 reply
- 495 views
-
-
பாலஸ்தீன ஆக்கிரமிப்பு மற்றும் இஸ்லாமியர்கள் படுகொலைக்கு எதிராக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிக்குழு கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்தத் தாக்குதலை அடுத்து இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பின் மீதும், பாலஸ்தீனத்தின் மீதும் அதிரடித் தாக்குதலில் இறங்கியிருக்கிறது. இதன் விளைவால் 1600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், சுமார் 1,20,000 மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். மேலும், பாலஸ்தீன காசா எல்லையைச் சுற்றிவளைத்திருக்கும் 1,00,000 இஸ்ரேலிய ராணுவத்தினர் அந்தப் பகுதி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர். மியா காலிஃபா இதைத்தொடர்ந்து பல்வேறு நாட்டின் தலைவர்களும், பிரபலங்…
-
- 22 replies
- 1.3k views
-
-
-
- 41 replies
- 4.2k views
-