Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அதிர்ஷ்ட குலுக்கலில் பரிசு விழுந்ததை அடுத்து ஒரே நாளில் லட்சாதிபதியானார் துபையில் வசிக்கும் 5 வயது இந்தியச் சிறுவன் ஒருவன். இப்ராஹிம் ஃபகிமுதீன் ஷேக் என்ற அந்தச் சிறுவனுக்கு துபையின் தேசிய கடன் பத்திர கழகத்தின் சார்பில் பரிசுச் சீட்டுக்கான பிப்ரவரி மாத குலுக்கலில் இந்தப் பரிசு விழுந்துள்ளது. இவரது குடும்பம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. இவரது பெயரில் தந்தை ஷேக் கடன் பத்திரக் கழகத்தில் பத்திரங்களை வாங்கியுள்ளார். அவ்வாறு வாங்கியவர்களில் குலுக்கல் முறையில் மாதா மாதம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பெரும் தொகை பரிசாக அளிக்கப்படும். பிப்ரவரி மாத குலுக்கலில் ஃபகிமுதீனுக்கு பரிசு விழுந்துள்ள தகவல் அவரது தந்தைக்கு அந்த நிறுவனத்தால் தொலைபேசியில் சொல்லப்பட்…

  2. அதிர்ஷ்ட மீன்கள் . Friday, 14 March, 2008 04:17 PM . ஜகார்த்தா, மார்ச்.14: இந்தோனேஷியாவில் அதிக அளவில் காணப்படும் அரோவானா என்ற மீன் வகைக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறதாம். . ஒன்றரை அடி நீளம் கொண்ட இந்த வகை மீன்கள் இனம் அழிந்து வரும் நிலையில் இவற்றை வீட்டில் வைத்துக் கொள்வது அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். இதனால் இந்த வகை மீன்கள் அதிக அளவில் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறதாம். இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் சமீபத்தில் இந்த மீன் 20 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனையாகி இருக்கிறதாம். இந்த மீன்களை வீட்டில் வளர்ப்ப தால் நல்ல ஆரோக்கியம், அதிர்ஷ்டம், குடும்பத்தில் இனக்கம் மற்றும் தீயசக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்க…

    • 0 replies
    • 1.2k views
  3. யேர்மனிய வீதிகளில் E-Scooter பாவனைக்கு, 2019 யூன் மாதத்தில், அரசு அனுமதி வழங்கியதில் இருந்து போக்குவரத்துக்களில் நாளொன்றுக்கு ஒரு பிரச்சனை வந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2மணியளவில் கேர்ள்ன் நகரைச் சேர்ந்த ஒருவர் A4 அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு கையில் பியர் போத்தலுடன் E-Scooter இல் Olpe நகரத்தை நோக்கிப் பயணித்திருக்கிறார். இதை அவதானித்த பல வாகன ஓட்டுனர்கள் நெடுஞ்சாலைப் பொலீஸாருக்குத் தகவலைத் தந்திருக்கிறார்கள். பொலீஸர் E-Scooter பயணியை நிறுத்தி விசாரித்ததில் தான் பாதை மாறி நெடுஞ்சாலைக்குள் புகுந்து விட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது கையில் இருந்த பியர் போத்தலை அவரால் மறைக்க முடியவில்லை. பொலீஸார் மேற்கொண்ட சோதனையில் இரத்தத்த…

  4. Published By: DIGITAL DESK 3 09 DEC, 2023 | 03:40 PM இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதிவேக வீதியில் போலி நுழைவாயில் அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் கட்ச் பகுதியை இணைக்கும் பாமன்போர் - கட்ச் அதிவேக வீதியில் நுழைவாயில் உள்ளது. இந்த நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வர்கசியா கிராமத்தில் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று மூடிய நிலையில் இருந்துள்ளது. இந்த தொழிற்சாலையை போலி நுழைவாயிலுக்காக மாற்ற சில மோசடி பேர்வழிகள் முடிவு செய்தனர். அதன்படி, தேசிய அதிவேக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் போன்று போலியான நுழைவாயில் அமைத்தனர். …

  5. அதீத உடலுறவு காரணமாக இறந்ததா அரியவகை உயிரினம்? ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு க்வோல் எனப்படும் விலங்கு தூக்கத்தை தொலைத்து அதீத உடலுறவில் ஈடுபடுவதாகவும் இதுவே அவற்றின் இறப்புக்கு காரணமாகிவிடுவதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண் க்வோல்கள் உடலுறவுக்காக பெண் க்வோலைத் தேடி தூக்கத்தையும் மறந்து நீண்ட தூரம் பயணிக்கின்றன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெண் க்வோல்கள் நான்கு ஆண்டுகள் வரை வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும். “ அவை கூடுமானவரையில் இணையை சேர்வதற்கு அதிக தூரத்தை கடக்கின்றன, மேலும் அவற்றின் உந்துதல் மிகவும் வலுவாக இருப்பதால், இணையைத் தேடுவதற்காக அதிக நேரம் தூங்குவதைத் தவிர்த்து விடுகின்றன”என்று சன்ஷைன் கோஸ்ட்…

  6. அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல் மாஸ்கோ அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷிய போர்க்கப்பல் துரத்திச் சென்ற விரட்டித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் கடலில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பீட்டர் தி கிரேட் வளைகுடா (Peter the Great Gulf) பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ரஷிய கப்பல், பசிபிக் கடற்படையில் இருந்து, அமெரிக்க போர்க்கப்பலை கண்காணித்து வந்தது. அமெரிக்க போர்க்கப்பல் அத்துமீறி கடல் எல்லையைத் தாண்டி இரண்டு கிலோமீட்டர் தூரம் ரஷியாவின் கடல்…

  7. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன்போது சகாதேவன் அர்ச்சுனாவை பார்த்து, பாராளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல் நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றீர்கள் என்று கூறினார். அதற்கு shut up (வாயை மூடுங்கள்) என்று அர்ச்சுனா கூறினார். இதன்போது குறிக்கிட்ட தம்பிராசா, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். Shut up என்று எல்லாம் கூற முடியாது. இங்கே அதிகாரிகள் தான் உள்ளார்கள் என்றார். இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கதைக்கும் போது, கதைப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்க…

  8. அநாதையான முதியவருக்கு இறுதிக்கிரியை நடத்திய இளைஞர்கள் -குணசேகரன் சுரேன் இணுவில் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் இறுதிக்கிரியைகளை, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நடத்தியுள்ளனர். புலோலியூரைச் சேர்ந்த மேற்படி முதியவர், கடந்த 20 வருடங்களாக இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை, அடியவர் என புனைப்பெயர் கொண்டு அழைத்து வந்தனர். அவருக்கு தேவையான உடை மற்றும் உணவுகளை இளைஞர்கள் சுழற்சி முறையில் வழங்கி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நோய் வாய்ப்பட்ட முதியவரை, இளைஞர்கள் ஒன…

    • 1 reply
    • 368 views
  9. ஏற்றுமதித் தொழிற்துறையைச் சுற்றியுள்ள சவால்கள் தொடர்பாக அநுரகுமார திசாநாயக்க தலைமையில் முக்கிய கலந்துரையாடல் அரசாங்கம் கவிழும் என்ற பிரச்சாரம் நகைச்சுவைத் தனமாகும் – அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவிப்பு வடக்கில் இராணுவத்திடமிருந்த காணிகள் விடுவிக்கப்படும் சில சந்தர்ப்பங்களில், தென்பகுதி அரசியல்வாதிகள் சிலர் அதற்கு எதிராகக் இன்றும் கருத்துத் தெரிவிப்பதாக வட மாகாண கருத்து தற்போதைய அரசின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்

  10. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கூட கைது செய்யப்படலாம் என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் (Nilamdeen) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கி ஊழல் விடயத்தில் அர்ஜுன் மகேந்திரன் (Arjun Mahendran) தொடர்பில் வெடித்த பாரிய போராட்டங்களை தடுத்து நிறுத்தியவர் ரணில். கைது நடவடிக்கைகள் ரணிலிற்கு எதிராக அநுர செயற்படுவாரா என நோக்கும் போது, முன்னாள் அதிபர் என்ற பதுங்கள் கூட காணப்பட்டு அடுத்தடுத்தவர்கள…

  11. அநுராதபுரத்திலிருந்து வத்தளைக்கு கடிதம் கொண்டு சேர்த்த புறா புறா ஒன்று தனது காலில் தூதுக் கடிதம் ஒன்றை சுமந்து கொண்டு அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து வத்­த­ளைக்கு 2 மணித்­தி­யாலம் 14 நிமி­டங்­களில் வந்­த­டைந்த சம்­பவம் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றுள்­ளது. புரா­தன காலத்தில் பற­வைகள் மூலம் தூத­னுப்பும் நடை­முறை பற்றி பாட­சாலை மாண­வர்­க­ளுக்குத் தெளி­வூட்டும் வேலைத்­திட்டம் ஒன்றை அநு­ரா­த­புரம் டி.எஸ்.சேன­நா­யக்க வித்­தி­யா­லயம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இந்த நிகழ்வில் வந்­தளை ‑ ஹெந்­தல சந்­தியில் உள்ள புறா வளர்ப்பு நிலை­யத்தை நடத்திச் செல்லும் எம்.லெனரோல் கலந்­து­கொண்­டி­ருந்­த­தோடு 12 புறாக்­க­ளையும் இதில் ஈடு­ப­டுத்­தினா…

  12. செல்ஃபி எடுக்க சென்று ரயிலில் மோதி தாயும் மகளும் பலி December 22, 2024 07:25 pm அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த தாயும் மகளுமே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 18 வயதுடைய மகளும் 37 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலில் அவர்கள் மோதுண்டுள்ளனர். செல்ஃபி எடுக்கும்போத…

  13. அந்தரங்க உறுப்பை கடித்த இருவர் கைது கொஸ்கொட துவேமோதர எனுமிடத்தில் உப-பொலிஸ் பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவும், பொது இடத்தில் இவ்விருவரும் மதுபானம் அருந்திகொண்டிருந்துள்ளனர். அதனை, அந்த உப-பொலிஸ் பரிசோகர் கண்டித்துள்ளார். இதனையடுத்தே இவ்விருவரும் சேர்ந்து, உப-பொலிஸ் பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியுள்ளனர். காயங்களுக்கு உள்ளான அவர், பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/168930/%E0%AE%85%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B0%E…

  14. தனது அந்தரங்க உறுப்பை பொதுமக்களிடம் காட்டி அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட ஒருவருக்கு 10 ரூபா அபராதம் விதித்த சம்பவம் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து அஜித் என்பவர் தனது அந்தரங்க உறுப்பை பொதுமக்களுக்கு காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த நபருக்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரத்தன பத்து ரூபா அபராதத்தை விதித்ததார். அவதூறு மற்றும் நிந்தனை விளைவிப்போர் சட்டத்தின் கீழ் மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=2076

  15. அந்தரங்கங்களை அம்பலப்படுத்தவுள்ள மோனிகா லெவின்ஸ்கி By General 2012-09-27 14:51:40 அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுடனான காதல் தொடர்பில் தான் வெளீயிடவுள்ள புத்தகத்தில் கொட்டித் தீர்க்க முடிவெடுத்துள்ளார், அவரின் முன்னாள் காதலி மோனிகா லெவின்ஸ்கி. அமெரிக்காவில், 1993 முதல், 2001ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் பில் கிளின்டன். ஆனால், ஆட்சியின் கடைசி காலத்தில் பாலியல் புகாரில் சிக்கி, பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, சீரழியும் நிலைக்கு ஆளானார், கிளின்டன். அமெரிக்க ஜனாதிபதிகளில் எண்ட்ரூ ஜொன்சனுக்கு பின், கண்டனத் தீர்மானத்தைச் சந்தித்த அடுத்த ஜனாதிபதி பில் கிளின்டன் மட்டுமே. புகழின் உச்சியில் இருந்த …

  16. நாம் பொதுவாக தொலைக்காட்சியில் ஒளிப்பாகும் டிஸ்கவரி அலைவரிசையில் பெரும் காட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்போம். அதில் பெரும் விநோதங்களும் இருக்கும் ஆபத்துக்களும் இருக்கும் அந்த வகையில் இதுவும் ஒன்று.. தென் அமெரிக்காவின் அமேசன் காட்டு பகுதியில் அனகொண்டா பாம்பினை தேடி நிருபர் ஒருவர் ஒரு சிலரின் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டார். ஒர் பற்றையில் இருந்து பெறப்படும் பாம்பினை உதவியாளர் மிகவும் லாபகரமாக பிடித்து நிருபரிடம் கையயளித்து விட்டு தேடுதல் பணியில் ஈடுபடும்வேளையில் நிருபரை குறித்த பாம்பு சுற்றி வளைத்து தாக்குதலுக்கு தயார் ஆகின்றது http://www.youtube.com/watch?v=sV-56_fu2b8&feature=player_embedded http…

  17. http://www.youtube.com/watch?v=JsNnDWKh_u4&feature=player_embedded http://www.pathivu.com/news/18244/57//d,article_full.aspx

  18. அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்ற வீடியோவை பதிவேற்றம் செய்து பரபரப்பை உண்டாக்கினார். பின்னர் அது டிஸ்கவரி சேனலில் டிசம்பர் மாதம் ஒளிப்பரப்பாக இருக்கும் ஈட்டன் லைவ் எனும் நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட முன்னோட்டம் என்பது தெரிய வந்தது. அழிந்து வரும் அமேசான் மழைக்காடுகளின் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வர வேண்டியே இந்த முடிவை எடுத்ததாக ரொசோலி தெரிவித்தார். மனிதர்களின் கேளிக்கைக்காக விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த நிகழ…

  19. மனிதர்களைவிட நாய்கள் நல்லவை’ என்கிறார் 23 வயது ஆண்ட்ரூ. வீடில்லாதவர். சாலைகளில் வசிப்பவர். இவருக்கு உற்றத் துணை இவரது செல்ல நாய் ஸ்மோக்கிதான். என்னுடைய வாழ்க்கையைத் தவிர என்னுடன் தொடர்ந்து வருவது இந்த நாய்தான்’ என்று நன்றியுடன் சொல்லுகிறார் ஆண்ட்ரூ. இவர் மட்டும் அல்ல ரொறான்ரோ வீதிகளில் வசிக்கும் பல வீடில்லா அனாதைகளின் உற்ற தோழனாக நாய்கள்தாம் இருக்கின்றன. நாய்கள் வளர்ப்பதனால் இவர்கள் முக்கியமான ஒரு பிரச்சனையைச் சந்திக்க நேரிடுகிறது. இவர்களை பல ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. அங்கெல்லாம் நாய்கள் வளர்க்க தடை இருக்கிறது. ‘நாய்கள் வளர்ப்பது இவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனிதர்களுடன் பழக முடியாத இவர்களூக்கு நாய்கள்தாம் வாழ்க்கையை நகற்ற உதவுகிறது’ என்கிறார…

  20. அனிமேஷன் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ 'அல்லா': தடை விதித்தது மலேசியா [saturday, 2014-03-08 10:41:18] ஜப்பானில் பிரபலமாக விளங்கும் அல்ட்ராமேன் என்ற அனிமேஷன் காமிக்ஸ் கதை 1960-களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மலேசியா உட்பட உலகளவில் பிரபலமான இந்த புத்தகத்தின் பல தொகுப்புகளும் மலேசிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும், புத்தகங்களாகவும் மக்களை அடைந்தன. இந்தப் பதிப்புகளில் ஒன்றான 'அல்ட்ராமேன், தி அல்ட்ரா பவர்' என்ற புத்தகத்தில் வரும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் பெயர் அல்லா என்று வருவதால் மலேசியாவில் அந்தப் பதிப்பைத் தடை செய்துள்ளதாக மலேசிய அரசு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். உள்நாட்டுத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகி…

  21. மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் தெரிவிப்பு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த 20 வருட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தில் வடக்குக்கு சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ளதாக தகவல்

  22. சிறைக்குள் வெள்ளம் புகுந்ததால் கைதிகளை துப்பாக்கி முனையில் படகில் ஏற்றிய காவலர்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அனுராதபுரத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் அங்குள்ள சிறைச்சாலைக்குள் புகுந்தது. இதன் காரணமாக, அந்த சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பாதுகாப்பாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டனர். இலங்கை காவல் துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கைதிகள் மார்பளவு நீரில் நடந்து சென்று படகில் ஏறும் வீடியோ வெளியாகியுள்ளது. இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட…

  23. அனுஷ்காவுடன் மும்பை வந்து சேர்ந்தார் கோஹ்லி.... ! மும்பை: உலகக்கோப்பை போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட கோஹ்லி தனது காதலி அனுஷ்காவுடன் மும்பை வந்து சேர்ந்துள்ளார். ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்த இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனால், போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியில் கோஹ்லி விளையாடுவதை நேரில் காண அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆஸ்திரேலியா சென்றிருந்தார். ஒரே ரன்னில்... எதிர்பாராத விதமாக இந்தப் போட்டியில் ஒரே ஒரு ரன் எடுத்து ஷாக் கொடுத்தார் கோஹ்லி. ஆனால், கிரிக்கெட் ரசிகர்களின் கோஹ்லிக்கு பதிலாக அவரது காதலி அனுஷ்கா …

  24. தமிழீழப் பாட்டாளி வர்க்கமானது , ஒருபுறம் முதலாளித்துவ சுரண்டல் முறையையும் மறுபுறம் இனவாத ஒடுக்குமுறையையும் சந்தித்து நிற்கின்றன . சமூகநீதி சரிவரப் பேணப்பட்டால் தான் சமுதாயம் ஒரு உன்னதநிலைக்கு வரும் என்ற எமது தேசியத்தலைவரின் உன்னத கருத்துக்கு அமைய அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து யேர்மனியில் 10 நகரங்களுக்கும் மேலாக பேரணிகள் ஒழுக்கு செய்யப்பட்டுள்ளது . முக்கிய நகரங்களில் பேரணிகள் ஆரம்பமாகும் முகவரிகளை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவித்தலில் காணமுடியும் . பல்லின மக்களுக்கு ஈழத்தமிழர் சார்ந்த துண்டுப்பிரசும் கொடுப்பதற்கு எம்முடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளவும் .தேவையான பதாகைகளும் , வாசகங்களும் அனுப்பிவைக்கப்படும் . உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியே ஒர…

  25. இரண்டாம் உலகப் போர் முடிவில் ஜக்கிய நாடுகள் சபை எனப்படும் ஜநா 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை பல ஏற்றத் தாழ்வுகளோடு செயற்படுகிறது. ஜநா அமைப்பில் ஜந்து அடிப்படைப் பிரிவுகள் இருக்கின்றன. 1. ஜநா பொதுச் சபை -General Assembly. உறுப்பு நாடுகளின் விவாத அரங்காகவும் தீர்மானங்கள் நிறைவேற்றும் களமாகவும் இடம்பெறுகிறது. 2. ஜநா பாதுகாப்பு சபை -Security Council உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பொறுப்பான அமைப்பு. இதில் ஜந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் பத்து தற்காலிக உறுப்பு நாடுகளும் உறுப்புரிமை வகிக்கின்றன. 3. பொருளாதார மற்றும் சமூக மன்றம் -Social and Economic Council இதை எக்கோசொக் (Ecosoc) என்றும் அழைப்பார்கள். உலகப் பொருளாதார சமூக ஒத்துழைப்பிற்கான மன்றமாகவும் மேம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.