செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
பணம் தேவையானவர்கள் என்னிடம் கேட்டுப் பெற்று கொள்ளுக - ரஞ்சன் எம்.பி. ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்களத் திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தன்னிடமுள்ள 40 இலட்சம் ரூபாய் பணத்தைப் பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளுக்காகத் தனக்குக் கிடைத்த 40 இலட்சம் ரூபா பணத்தையே அவர் இவ்வாறாக மக்களுக்கு வழங்குகின்றார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது யூடியூப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ரஞ்சன், மேசை ஒன்றின் மீது 5000 ரூபா பணத்தாள்களைப் பரப்பி வைத்து, பணம் தேவையானவர்களைத் தனது செயலாளரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த நான்கு வருடங…
-
- 1 reply
- 368 views
-
-
https://www.facebook.com/100012450644841/videos/486592501765767
-
- 0 replies
- 844 views
-
-
பிரான்ஸ் நாட்டின் குடியுரிமைக்கு... பிரதமர் பொரிஸ் ஜோன்சனின், தந்தை விண்ணப்பம்! பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தந்தை ஸ்டன்லி ஜோன்சன், பிரான்ஸ் நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதில் விருப்பம் இல்லாத 80 வயதான ஸ்டன்லி ஜோன்சன், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியுள்ள நிலையில், இந்த முடிவினை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இது பிரான்ஸ் குடிமகனாவதற்காக செய்யப்பட்டது அல்ல. இது ஏற்கனவே நாம் யார் என்பதை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை. எனது தாய் பிரான்ஸில் பிறந்தவர். நான் எப்போதும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவன் தான்’ என கூறினார். பழமைவாத கட்சியை சேர்ந்த …
-
- 11 replies
- 871 views
-
-
புத்தாண்டில்... இந்தியாவில், 60,000 குழந்தைகள் பிறப்பு. புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் புத்தாண்டு தினத்தில் பிறக்கும் குழந்தைகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில், ஜனவரி 1ஆம் திகதி பிறந்த குழந்தைகள் பற்றி தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி 1ஆம் திகதி உலகம் முழுவதும் 3,71,504 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இதில் இந்தியாவில் அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை குழந்தை பிறப்பு விகிதத்தில் முதலிடத்தைப் …
-
- 0 replies
- 399 views
-
-
பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்
-
- 67 replies
- 6.7k views
-
-
மெக்ஸிகோவில் திருமணமான காதலி வீட்டுக்குச் செல்ல சுரங்கப்பாதை! கணவரிடம் சிக்கிய காதலன் ஹரீஷ் ம மெக்ஸிகோ - சுரங்கம் இந்த விவகாரத்தைத் தனது மனைவியிடமிருந்து ஆல்பர்டோ மறைக்க முயன்று, ஜார்ஜைத் தன் வீட்டைவிட்டு வெளியேறும்படி கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. மெக்ஸிகோவில் திருமணமான நபர் ஒருவர், தனது காதலியின் வீட்டுக்கு ரகசிய சுரங்கப்பாதை அமைத்து, காதலியின் கணவரிடம் சிக்கிக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், பெருவில் கூகுள் மேப்ஸ் (Google Maps) வசதியைப் பயன்படுத்திய நபர் ஒருவருக்கு, அது தனிப்பட்ட சோகமாக மாறியது. பெருவைச் (Peru) சேர்ந்த கணவர் ஒருவர், நாட்டின் தலைநகர் லிமாவிலுள்ள பிரபல பாலத்தை அடைவதற்கான பாதையைக் …
-
- 3 replies
- 485 views
-
-
இணை இறந்த துக்கத்தில் அவ்விடத்தைவிட்டு நகராமல் இருந்த அன்னப் பறவை. படம்: ஊடகம் 29 Dec 2020 20:46 இணைப் பறவை இறந்த துக்கம் தாளாமல் அதன் உடலருகே அமர்ந்திருந்த அன்னப் பறவையால 23 ரயில்கள் பயணத்தைத் தொடர முடியாமல் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஜெர்மனியின் கேசல், கோட்டிங்கன் நகரங்களுக்கிடையேயான அதிவேக ரயில் தடத்துக்கு அருகில் இரு அன்னப் பறவைகள் சுற்றித் திரிந்ததாக கேசல் நகர போலிசார் தெரிவித்தனர். அவற்றில் ஒன்று மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது. இறந்துபோன பறவையின் உடலுக்கருகில் அமர்ந்த அதன் இணை அவ்விடத்தை விட்டு நகருவதாயில்லை. அதனால் அந்தத் தடத்தில் செல்ல வேண்டிய 23 ரயில்கள் தங்களது பயணத்தை ஒத்தி வைத்துக் காத்திருந்தன. த…
-
- 61 replies
- 6k views
-
-
யாழ்.அரியாலையில் பிறந்த குழந்தையை புதைத்த பெண்! யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியிலுள்ள இளம் பெண்ணொருவர், குழந்தையை பிரசவித்து வீட்டு வளவினுள் புதைத்த நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரியாலை பூங்கங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் வளவினுள் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வசித்து வந்த திருமணமாகாத 24 வயதுடைய பெண், நேற்று (வியாழக்கிழமை) அதீத குருதிப்போக்கு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையின்போது, குறித்த பெண் குழந்தையை பிரசவித்தமை கண்டறியப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரி அப்பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்தார். அதன்போதே குழந்தை புதைக்கப்பட்ட விடயம் கண்டறியப்பட்டு, அது தொடர்பில் ப…
-
- 0 replies
- 616 views
-
-
எங்கள் அன்புக்குரிய ஆண்டான 2020 * இன் மரண அறிவித்தல் ஒன்றை இத்தால் சகலருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன், மற்றும் அவர் பிரிவால் துயரடைந்தது மட்டுமல்லாது அவருடன் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரையும் மாய்ப்பதற்கு தயாராக நிற்கும் அவருடைய 12 மனைவிகள், 52 பிள்ளைகள் மற்றும் 365 குழந்தைகளும் இறைவனுடன் ஐக்கியமாக வேண்டிப் பிராத்திக்கின்றேன். இவர்களது இறுதிச் சடங்குகள் பூமியின் மரவுப்படி, டிசம்பர் 31 வியாழக்கிழமை 23:59 மணிக்கு நடைபெறும், மேலும் தகவலுக்கு திரு. சனவரி அவர்களைத் தொடர்பு கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன். தொலைபேசி எண் 01 01 2021. அவருடைய வாரிசான திரு 2021 அவர்கள் 2020 உங்களுக்குச் செய்த அநியாயங்கள் அக்கிரமங்களை எல்லாம் அகற்றி அனைவரையும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என ஒன்றுபடுத்த…
-
- 5 replies
- 760 views
-
-
அழிந்து போன நகரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடை கண்டுபிடிப்பு! இத்தாலியிலுள்ள புராதான நகரமான பொம்பேயியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட குறித்த கடையில் முழுமையான அளவில் பானைகளும், சில உணவுப் பொருட்களின் தடயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடையின் முன்புறம் சேவல் மற்றும் வாத்து உருவங்கள் இடம் பெற்றுள்ளதால் இது இறைச்சிக் கடையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தநிலையில் இது ஒரு அசாதாரண கண்டுபிடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கி.பி. 79ல் எரிமலைச் சீற்றத்தினால் அழிந்து போன பொம்பேயி நகரத்தில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது…
-
- 2 replies
- 688 views
-
-
இலங்கையின் மிகவும் வயதான பெண் மரணம் இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என சான்றிதழ் வழங்கப்பட்வர் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். குறித்த 117 வயதுடைய பெண்ணான ‘வேலு பாப்பானி அம்மா’ என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மரணமடைந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயாரான இவர் 1903 ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார். அவரது விபரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முதியவரின் அடையாள அட்டை மூலமாகவும் சரிபார்க்கப்பட்டுள்ளன. இதேநேரம், உலக முதியோர் தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் முதாலம் திகதி இலங்கையின் மிகவும் வயதான பெண் எனத் தெரிவிக…
-
- 0 replies
- 695 views
-
-
அமெரிக்காவின் நாஸ்விலில் பாரிய வெடிப்புசம்பவம் Rajeevan ArasaratnamDecember 25, 2020 அமெரிக்காவின் நாஸ்விலில் பாரிய வெடிப்புசம்பவம்2020-12-25T20:33:07+05:30Breaking news, உலகம் FacebookTwitterMore அமெரிக்காவின் நாஸ்வில் நகரில் பாரிய வெடிப்புசம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று வெடித்துச்சிதறியுள்ளது பலகட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/100800
-
- 0 replies
- 477 views
-
-
28 ஆண்டுகளாக நடந்து வந்த கேரள கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ ஸ்டெபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது கேரள மாநில சிபிஐ நீதிமன்றம். சிறை தண்டனையுடன் சேர்த்து பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ரூ. 6.50 லட்சமும் கன்னியாஸ்திரீ ஸ்டெபிக்கு ரூ. 5.50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 49 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 1992ம் ஆண்டு கொலை நடந்தபோது கன்னியாஸ்திரீ அபயாவுக்கு வயது 19 மட்டுமே. கேரளாவில் மிக நீண்டகாலம் விசாரிக்கப்பட்ட கிரிமினல் வழக்காக இந்தக் கொலை வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. சகோதரி அபயாவின் உடல், அவர் தங்கியிருந்த விடுதியின் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 28 ஆண்டுகள் கழித்து, பாதிரியா…
-
- 8 replies
- 1.5k views
-
-
கொத்தமல்லி எனத் தெரிவித்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குப்பைகள்.! உக்ரைனிலிருந்து கொத்தமல்லி எனத் தெரிவித்து குப்பை கொள்கலன்கள் மறுபடியும் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து சுங்கப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8 இறக்குமதியாளர்களினால் உக்ரைனிலுள்ள AGRONIKA TRADE எனப்படும் நிறுவனத்தினால் இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் திகதி இந்த 8 கொள்கலன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பதுடன், மேலும் 20 கொள்கலன்கள் 21ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இந்தக் கொள்கலன்களில் கொத்தமல்லி இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி, வரி நீங்கலாக 756 இலட்சம் ர…
-
- 0 replies
- 420 views
-
-
கொரோனா மாறுபட்ட குணங்களுடன் கண்டுபிடிப்பு, மீண்டும் ஊரடங்கா..? எப்படி சமாளிக்க போகிறோம். கவனம் மக்களே
-
- 0 replies
- 351 views
-
-
மருத்துவபீட மாணவனின் மரணத்தில் சந்தேகம் November 18, 2020 யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது 23) எனும் மருத்துவ பீட மாணவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தமையால் , மாணவனின் இரத்த மாத…
-
- 19 replies
- 2.9k views
-
-
3 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார். கைலாசா தொடர்பான பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின. கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசு…
-
- 16 replies
- 2.1k views
-
-
மட்டக்களப்பில் வௌவாலால் நடந்த விபரீதம் – தாதி மீது துப்பாக்கிச் சூடு மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3 ம் குறுக்கு வீதியில் தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பறவைகளை சுடும் துப்பாக்கி மூலம் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் எயார்கண் துப்பாகியைக் கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணியளவில் வீட்டின் மேல்மாடியில் இருந்து மரத்தில் இருந்த வௌவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன்போது சத்தம் கேட்டு எதிர்வீட்டில் இருந்து வெளியில் வந்த தாதி மீது குறி தவறி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த தாதி மட்டக்கள…
-
- 0 replies
- 258 views
-
-
பதுளை மற்றும் மஹியங்கனையில் மீன் மழை பதுளை மற்றும் மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ‘விரானகம’ என்ற கிராமத்தில் மீன் மழை பொழிந்துள்ளது. கடந்த 20 மற்றும் 21 ஆகிய இரு தினங்களிலும் மீன் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். வீடு மற்றும் வயல் நிலங்களுக்கு முன்னால் இவ்வாறு மீன்கள் விழுந்தன எனவும் இதற்கு முன்னர் இப்பகுதியில் இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை எனவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டினர். மழைக்கு மத்தியிலும் மக்கள் வீதியில் இறங்கி, விழுந்த மீன்களை பக்கெட்டுகளில் சேமித்து எடுத்து சென்றுள்ள சம்பவமும் இடம்பெற்றது. குறித்த மழை மூலம் சுமார் 100 கிலோவுக்கும் மேற்பட்ட மீன்கள் நிலத்தில் விழுந்திருக்ககூடும் எனவும், ஒரு சிலர் 30- 40 கிலோ வரை மீன…
-
- 2 replies
- 494 views
-
-
அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம்
-
- 3 replies
- 892 views
-
-
வவுனியாவில் போட்டி போட்டு ஓடியதால் உயிரை கையில் பிடித்தபடி இருந்த பயணிகள்: பேருந்துகள் விபத்து சற்று முன் வவுனியா கற்பகபுரத்தில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : போட்டி போட்டு ஓடியதாக மக்கள் குற்றச்சாட்டு வவுனியா – மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (19.12.2020) மதியம் 12.00 மணியளவில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை மன்னார் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் , இ.போ.ச பேரூந்துகள் ஒன்றின் பின் ஒன்றாக பயணத்தினை தொடர்ந்துள்ளது. இதன் போது பறயனானங்குளம் பகுதியினை அண்மித்த சமயத்தில் இரு பேரூந்துகளும் ஒன்றையோன்று சந்திந்துள்ளது. இதனையடுத்து குறித்த தன…
-
- 0 replies
- 395 views
-
-
காங்கேசன்துறை சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்தது December 19, 2020 காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது. நேற்றிரவு பொழிந்த கடும் மழையின் போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. சுனாமி, கடும் மழையுடன் இடைக்கிடை ஏற்படும் வெள்ளம், மண்சரிவு மற்றும் வான் கதவுகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள நிலமை மற்றும் காலநிலை முன் எச்சரிக்கைகளை இந்த சுனாமி எச்சரிக்கை கோபுரங்களைப் பயன்படுத்தி கணிப்பிடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #காங்கேசன்துறை #சுனாமி #எச்சரிக்கைகோபுரம் #மண்சரிவு https://globaltamilnews.net/2020/154552/
-
- 0 replies
- 297 views
-
-
“இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம்” - கோரப் போவது தமிழ்த் தேசியக் கட்சிகள்.? அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர்கள் ஒருசிலர் ஈடுபட்டிருப்பதாக அருவிக்கு நம்பகரமாக தெரியவந்துள்ளது. இலங்கை அரசுக்கு தமிழர் தரப்பின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்ட தீா்மானங்கள் மற்றும் பொறுப்புக் கூறலை நிறைவேற்றுவதில் மேலும் கால அவகாசத்தை வழங்க குறித்த பிரமுகர்கள் சிலா் முயற்சிகளை எடுத்துள்ளனர். இலங்கைக்கு மேலும் அவகாசத்தை வழங்கப் பரிந்துரைக்கும் திட்டத்தில் ஏ…
-
- 1 reply
- 729 views
-
-
MCC உடன்படிக்கையை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானம் – நிதி உதவிகளை இழக்கும் இலங்கை 19 Views MCC எனப்படும் மிலேனியம் கோப்பரேஷன் உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கமைய 5 வருட காலத்திற்காக இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இரத்து செய்யப்படவுள்ளது. MCC பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமெரிக்காவின் வௌிநாட்டு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.ilakku.org/?p=37434
-
- 1 reply
- 543 views
-
-
கொழும்பில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்ற கொவிட்-19 தொற்றாளர் கொழும்பு டி சொய்சா மகப்பேற்று மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை இன்று(17) பிரசவித்துள்ளார். மருதானையைச் சேர்ந்த 29 வயது பெண்ணுக்கே இரு பெண் குழந்தைகளும் இரு ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக அறிய வருகிறது. கொழும்பில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்ற கொவிட்-19 தொற்றாளர் – Thinakkural
-
- 0 replies
- 312 views
-