Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் துஸ்பிரயோகம் – அவுஸ்ரேலியாவில் இலங்கையர் கைது சிறுமிகளை பாலியல் செயற்பாடுகளுக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடம் ஆபாச ஒளிப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும் அவர்களை அதற்காக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகமான டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தொடர்பாக அந்நாட்டு புலனாய்வாளர்களுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் அவரை பின்தொடர்ந்ததாகவும், மெல்போர்ன் புறநகர்ப் பகுதியான பர்வூட்டில் சந்தேகநபர் தொடர்பாக கிடைத்…

  2. வவுனியாவில் ஒலிவாங்கியை எடுத்துவர மறுத்த மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் வவுனியாவிலுள்ள பிரபல்யமான தேசிய பாடசாலை ஒன்றில் இன்று(வியாழக்கிழமை) காலைப் பிரார்த்தனையின்போது ஆசிரியர் ஒருவர் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் மீது தாக்குதல் நடாத்தியதில் மாணவனுக்கு பல் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை பாடசாலையின் காலைப் பிரார்த்தனையின் போது ( மைக் ) ஒலிவாங்கி பழுதடைந்துவிட்டது. இதையடுத்து காலைப்பிரார்த்தனை ஏற்பாடு செய்த ஆசிரியர் ஒருவர் அலுவலகத்திலுள்ள மற்றைய ஒலிவாங்கியை எடுத்துவருமாறு ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதையடு…

    • 3 replies
    • 1.1k views
  3. இலங்கையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத, பரீட்சைகள் திணைக்களத்திடம் சந்தர்ப்பம் கோரியுள்ளார். பொலநறுவை, அரலங்வில செனுலி லேஹன்ஸா என்ற 9 வயதுடைய சிறுமியே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் திம்புலாகல அரலங்வில, விலயாய ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். தான் 6ஆம் வகுப்பு கற்ற போதிலும், தன்னால் சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்தி பெற கூடிய திறன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்களம், ஆங்கிலம் மற்றும் கணிதம் மட்டுமல்லாமல் விலங்கியல் துறையிலும் நிபுணத்துவம் பெற்ற லேஹன்ஸா ஆவர்த்தன அட்டவணையை சில நொடிகளில் படித்து பாடசாலை அதிபர் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். செனுலி தனது முதல் ஆண்டில் இருந்தபோதும் ஆங்கிலத்தி…

  4. மட்டு பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற 17 வயது சிறுவன் கடலில் முழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு BharatiSeptember 11, 2020 கனகராசா சரவணன் மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலிர் நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் வாழைச்சேனை செம்மன் ஓடை 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய யாவாத் முகமட் றிஸ்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா கல்மலை கடல் பகுதியில் கடலில் நீராடச் சென்று நீர…

  5. இலங்கையில் நீண்ட வரலாற்றைக் கொண்டதென கூறப்படும் மது மரம் அல்லது ஆங்கிலத்தில் சைக்காடேல்ஸ் (Cycadales) என்று சொல்லப்படும் மரத்தின் பழச் சீசன் தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த மது மரம் அல்லது சைக்காடேல்ஸ் என்பது விதை தாவர வரிசையாகும். இது குறிப்பாக உயரமாகவும், சிறிய மரமாகவும் வளரக்கூடியது. இதனுடைய பழத்தினை வெய்லில் காய வைத்து மாவாக்கி பிட்டு, முறுக்கு உள்ளிட்ட உணவு வகைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது மாத்தளை – லக்கல கிராம மக்களிடையே ஒரு சத்தான உணவாக பிரபலமாக உள்ளது. https://newuthayan.com/மது-மரப்-பழ-சீசன்-ஆரம்பித/

  6. கிளிநொச்சி – பரந்தனில் தூக்கில் தொங்கிய நிலையில் காதல் ஜோடி சடலங்களாக மீட்பு Sep 10, 20200 கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.குறித்த இருவரும் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த யுவதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை பரந்தனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றும் சுசிதரன் (28-வயது) இரத்தினபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27-வயது) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.(15) http://www.samakalam.com/செய்த…

    • 1 reply
    • 297 views
  7. வவுனியாவில் உணவகமொன்றின் சிற்றுண்டிக்குள் (முட்டை ரோல்) பாவனைக்கு ஒவ்வாத வினோத முட்டை நுகர்வோரால் இனங்காணப்பட்டு வவுனியா நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகத்துடன் கூடிய சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இன்று (09-09) மாலை தேனீர் அருந்தச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்ட சிற்றுண்டிக்குள் இருந்த முட்டை விநோதமாக இருந்துள்ளது. குறித்த முட்டை றப்பரினாலான முட்டை போன்ற தோற்றத்தில் இருந்ததுடன் அதன் இயல்பும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தமையை உணர்ந்த வாடிக்கையாளர்கள் வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்ததை தொடர்ந்து குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு விரைந்த பரி…

  8. கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட அரியவகை வெள்ளை நாவல் இனம் கிளிநொச்சியில் அரியவகை வெள்ளை நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கண்டாவளை- உழவனூர் கிராமத்தில், தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது. உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் காணியில் குறித்த வெள்ளை இன நாவல் மரம் இனம் காணப்பட்டுள்ளது. குறித்த நாவல் மரத்தின் பழங்கள் வித்தியாசமாக இருப்பதனை அவதானித்த அவர், அதனை பிடுங்கி உண்டபோது அவை நன்கு பழுத்த நாவல் பழங்களாக காணப்பட்டுள்ளன. நாவல் மரம் அதன் தோற்றம் என்பன வழமையான நாவல் மரம் போன்றே காணப்படுகின்றது. காய்களும் வழமையான நாவல் காய்கள் போன்றே உள்ளன. ஆனால் பழம் மாத்திரம் வெள்ளை நிறமாக நெ…

  9. வட்டக்கச்சியில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டிச் சவாரி! கிளிநொச்சி மாவட்ட சவாரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் (06) வட்டக்கச்சி கலைவாணி சவாரித்திடலில் மாபெரும் சவாரிப்போட்டி நடைபெற்றது. இதன்போது 100 சோடி மாடுகள் பங்குபற்ற சவாரி போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றது. https://newuthayan.com/வட்டக்கச்சியில்-நடைபெற்/

  10. இறந்தவர் உயிருடன் இருப்பதாக கூறிய ஊர் மக்கள்: வைத்தியசாலையில் குழப்பநிலை நெல்லியடியில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் உயிருடன்தான் உள்ளார் என்று ஊர் மக்கள் முரண்பட்டமையால் பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையில் குழப்பநிலை ஏற்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் பொலிஸாரின் தலையீட்டால் சுமுகநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நெல்லியடி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் பொருள்கள் சுமக்கும் தொழிலாளியான இராஜ கிராமத்தைச் சேர்ந்த நாகராசா நரேஸ் (வயது -26) என்பவரே உயிரிழந்தவராவார். குடும்பத்தலைவர் நேற்று மாலை தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மயக்கமடைந்து சரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக அம்புலன்ஸ் வண்டியில் ம…

  11. ஜேர்மனியில் 5 குழந்தைகள் சடலமாக கண்டெடுப்பு: குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி! மேற்கு ஜேர்மனிய நகரமான சோலிங்கனில் உள்ள ஒரு பெரிய வீட்டுத் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அருகிலுள்ள டுசெல்டார்ஃப் ரயில் நிலையத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் முன், 27 வயதான தாய் குழந்தைகளை கொலை செய்ததாக சந்தேகிப்பதாக பொலிஸார் கூறுகின்றனர். இறப்புக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லாமல், சில விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் நகரின் ஹாசெல்டெல் பகுதியில் உள்ள குடியிருப்புத் தொகுதிக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன. உள்ளூர் நேரப்படி சுமா…

  12. இனநல்லுறவுக்காக நடை பயணம்! இலங்கையில் இனநல்லுறவையும் சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடையணம், யாழ்பாணத்தை சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து காலி நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலியை சேர்ந்த சுப்பிரமணியம் பாலகுமார என்ற 40 வயதுடைய நபரே குறித்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்தவாரம் யாழை சென்றடைந்த அவரது பயணம் அங்கிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இன்று (05) காலை வவுனியாவை வந்தடைந்துள்ளது. https://newuthayan.com/இனநல்லுறவுக்காக-நடை-பயணம/

  13. பூச்சிகளை சாப்பிடும் மக்கள்;தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள் வடகொரியாவின் நிலைமை குறித்து இளம்பெண் தகவல் வடகொரியாவில் கிம் ஜாங் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் படும் கொடுமைகளை அங்கிருந்து வெளியேறி தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். பதிவு: செப்டம்பர் 05, 2020 14:27 PM கொடுமைகளை அங்கிருந்து வெளியேறி தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். நி்யூயார்க் வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க் என்பவரே தற்போது, தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட கொடுமைகளை வெளிப்படுத்தியதுடன், வடகொரியாவில் வசிக்கும் அப்பாவி மக்களின் நிலையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார். வடகொரியாவில் அன்றாடம…

  14. தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு துரைராஜசிங்கம் முடிவு? September 4, 2020 தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு கி.துரைராஜசிங்கம் தீர்மானித்திருப்பதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, தேசியப் பட்டியல் விவகாரம் போன்றவற்றால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்திலும் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையைக் கூட்டி அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் அவர் பதவியை இராஜினாமா ச…

  15. கஜேந்திரகுமார் வீட்டில் பணியாற்றிய பெரும்பான்மையின தொழிலாளி உயிரிழப்பு September 3, 2020 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது. காலியைச் சேர்ந்த இந்துனில (வயது -38) என்ற தொழிலாளியே உயிரிழந்தவராவார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் கூரை வேலையில் ஈடுபட காலியிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவர், நேற்றிரவு 11 மணியளவில் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார். எனினும் அவர் தவ…

  16. 2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுளில் Sex எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கையை பின்தள்ளிய எத்தியோப்பியா முதலாம் இடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், சிம்பாப்வே, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில், கூகுளில் ‘செக்ஸ்’ வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தில் இருந்தது. 2012ஆம் ஆண்டின் அறிக்கையின் பிரகாரம், இந்த வார்த்தையை தேடிய இடங்களில் மேல் மாகாணத்தின் கொழும்பு, நுகேகொடை, ஹோமாகம ஆகிய நகரங்கள் முன்னிலை வகித்திருந்தன. எனினும், 2020ஆம் ஆண்டில் வடமத்திய மாகாணம் முதலிடத்தை பிட…

  17. பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்ட 4 அடி நீள பாம்பு - இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ மாஸ்கோ:ரஷியாவின் வடக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான தகெஸ்தானில் லெவாஷி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் முற்றத்தில் திறந்தவெளியில் தூங்கினார். காலையில் அவர் கண் விழித்தபோது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப் போன்றும், குமட்டல் உணர்வு ஏற்படுவதைப் போன்றும் உணர்ந்தார். இதையடுத்து அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றுக்குள் பூச்சி போன்ற ஏதோ உயிரினம் புகுந்துள்ளது என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரது வயிற்றினுள் புகுந்த உயிரினம் என்ன என்பதை தெரிந்து வெளியேற்…

  18. Ulf Henricsson இலங்கையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராயிருந்தவர். சுவீடனைச் சேர்ந்தவர். 93-94 காலப்பகுதியில் பொஸ்னியாவில் அமைதிபேண் படைக்குத் தளபதியாயிருந்தவர். To end a civil war நூலின் ஓரிடத்தில் அவர் கூறுகின்றார். “கோத்தபாய நிச்சயமாகப் பேச்சுக்களை விரும்பவில்லை. இறுக்கமான சூழ்நிலைகளின்போது அவர் கோபப்படுவார். கட்டுப்பாடற்றுக் கத்தத் தொடங்குவார். (2006 இன் தொடக்கத்தில் நடந்த சில) நீதித்துறைக்குப் புறம்பான கொலைகளுக்கு அரசே பொறுப்பு என்று நாங்கள் (SLMM - இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு) அறிக்கை வெளியிட்டிருந்தோம். அவர் என்னை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து “அந்த அறிக்கையை நீங்கள் மீளப்பெற வேண்டும்” என்று நேரடியாகக் கேட்டார். “இல்லை. அது எங்களுட…

  19. துணைவியை மன்னித்து தனது அழகிகள் குழுவினருடன் இணைந்து கொள்ள தாய்லாந்து மன்னர் உத்தரவு பெர்லின் கொரோனாவுடன் தாய்லாந்து மக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த நாட்டு மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் ஜெர்மனியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 20 அழகிகளுடன் குதூகலமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். 68 வயதான மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜேர்மனியில் இருந்து வருகிறார்.கொரோனா நெருக்கடியை அடுத்து ஜெர்மனியின் ஆல்பைன் ரிசார்ட்டில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் மன்னர் தனது ஊழியர்களுடன் தனிமைப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தாய்லாந்து மன்னரின் தனிப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரியும், மன்னரின் துணைவியுமான 35 வயது சினீனா…

    • 15 replies
    • 1.2k views
  20. அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகர் ரோன் ஜெரேமி, ஒரு 15 வயது சிறுமி உள்பட, மேலும் 13 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் 2004ஆம் ஆண்டு நடைபெற்றன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 67 வயதாகும் ஜெரேமி 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நான்கு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் மற்றும் பாலியல் வல்லுறவு செய்தார் என்று ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசப்படத் துறையில் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவரான ரோன் ஜெரேமி, 40 ஆண்டுகளில் 1,700க்கும் அதிகமான ஆபாசப் படங்களில் நடித்துள்ளார். இவர் மீதான க…

  21. காதலை எதிர்த்தமைக்காக தனது தந்தையை விசம் வைத்து கொலை செய்ய முயன்ற 18 வயதான யுவதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கையுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது. மாத்தறை மேலதிக நீதவான் இசுறு நெத்தி குமார முன்னிலையில் யுவதி முற்படுத்தப்பட்டபோது, அவரை 500,000 ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். 18 வயதான யுவதிக்கு காதல் தொடர்பு இருந்தது. இதை தந்தையார் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். அண்மை நாட்களாக தந்தை கடுமையான கண்டிப்புக்களை மேற்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யுவதி, தந்தையை கொல்ல முடிவு செய்திருந்தார். சில தினங்களின் முன்னர் தந்தைக்கு இரவு உணவு தயாரித்த யுவதி, மீன் பொரித்து அதில் மிளகாய் சேர்த்து, அதில் விசம் கலந்து தந்தைக்கு உண்ண கொண்டு வந்துள்ளார். தந்தை உண்ண ஆரம்பித்த…

  22. ரூ.9 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்த அவலம் போபால், மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் கரையோர மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு நிறைந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவர் நேற்று முன்தினம் ஹோசங்காபாத் மாவட்டத்திற்கும், நேற்று விதிசா பகுதிக்கும் சென்றார். இன்று படகு ஒன்றில் சென்று வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மத்திய பிரதேசத்தின் சிய…

  23. தன்னால் வளர்க்கப்பட்ட சிங்கங்களுக்கு இரையான நபர்! August 31, 2020 தென் ஆபிரிக்காவில் வெஸ்ட் மேத்யூசன் (West Mathewson) என்பவர் தன்னால் வளர்க்கப்பட்ட சிங்கங்களுக்கு இரையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. லிம்போபோ மாகாணத்தைச் சேர்ந்த குறித்த நபர் அப்பகுதியில் ‘லயன் ட்ரீ டொப் லொட்ஜ்‘ (Lion Tree Top Lodge) என்ற விடுதியை நடத்தி வந்துள்ளார். இந் நிலையில் கடந்த புதன் கிழமை அவர் விடுதி வளாகத்துக்குள் சென்ற போது இரு வெள்ளைச் சிங்கங்கள், அவர் மீது எதிர்பாராத விதமாக தாக்கியதாகவும் இதன் காரணமாக மேத்யூசன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தினையடுத்து குறித்த சிங்கங்கள் தற்காலிக முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு , அ…

    • 1 reply
    • 368 views
  24. கோயில் விக்கிரகங்களின் வாயில் இருந்து வடியும் நீர் போன்ற திரவம்! – யாழில் சம்பவம் யாழில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான், வைரவர் போன்ற விக்கிரகங்களி…

  25. கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த நால்வர் தப்பியோட்டம்: தீவிர தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 4கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம், ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரவிக்கின்றன. தெலுங்கானா மாநிலம்- சார்லபள்ளி சிறையிலுள்ள கைதிகள் 4பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும், செகந்திராபாத்திலுள்ள காந்தி வைத்தியசாலையிலுள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்,கைதிகள் 4 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த நான்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.