செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
ரஷியா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மதுபாட்டில்களை கீழே தள்ளி உடைத்து தரையில் சிந்திய மதுவை பன்றிகள் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைபீரியா பிராந்தியத்தின் டியூமன்((Tyumen)) நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நுழைந்த தாய் பன்றி ஒன்றும் அதன் குட்டிகளும், அங்கிருந்த அலமாரிகளை ஒவ்வொன்றாக மோப்பம் பிடித்துக்கொண்டே உள்ளே சென்றது. பின்னர் மதுபாட்டில்கள் இருந்த இடத்தை கண்ட பின் அதிலிருந்த இரண்டு மது பாட்டில்களை தாய் பன்றி தனது மூக்கால் கீழே தள்ளிவிட்டு உடைத்தது. பின்னர் தரையில் சிந்திய மதுவை 3 பன்றிகளும் சேர்ந்து குடிக்க தொடங்கின. இந்த காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இதையடுத்து பன்றிகளை வெளியேற்றிய ஊழியர்கள், அதன் உரிமையாள…
-
- 0 replies
- 283 views
-
-
பிரித்தானியாவின் கொடிய வல்லுறவுக் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை 136 வல்லுறவுகள் உட்பட 159 பாலியல் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த ரெய்னார்ட் சீனகா என்பவர் இங்கிலாந்தின் மிக மோசமான வல்லுறவுக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 36 வயதான சீனாகா 48 ஆண்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாமென பொலிஸார் நம்புகின்றனர். மன்செஸ்ரரில் உள்ள இரவு நேர விடுதிகளிலிருந்து ஆண்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற சீனாகா அவர்களுக்கு போதைப்பொருள் வழங்கி அதன் பின்னர் அவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல்களை பதிவு செய்த…
-
- 1 reply
- 460 views
-
-
கேகாலை, புளத்கொஹுபிட்டியவின் ஊடாகப் பல கிராமங்களுக்குப் பயணிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலமொன்று, இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களால், இரு முறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களாலேயே, இந்தப் பாலம் இரண்டு முறை திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யடியந்ததோட்டை தொகுதி அமைப்பாளரும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஸ்ரீ லால் விக்கிரமசிங்க, பொதுஜன பெரமுனவின் பிரதேச சபையின் உறுப்பினர் அளவததுரே ரதன வங்ஷ தேரர் உள்ளிட்டோர் இவ்வீதியை வெள்ளிக்கிழமை (03) திறந்து வைத்துள்ளனர். இதனையடுத்து நேற்று (04), முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசீம், ஐ.தே.கட்சிய…
-
- 2 replies
- 485 views
-
-
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஜான்சன், தான் வளர்த்து வந்த ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த கிரிப்பின்ஸ் என்ற நாய்க்கு 2017 டிசம்பரில் ஒரு கட்டி இருப்பதைக் கவனித்தார். மருந்து, மாத்திரையால் சரியாகக்கூடிய சாதாரண கட்டிதான் அது என்று நினைத்தார். ஆனால் மருத்துவர்கள், அது சாதாரண கட்டி அல்ல, டிசெல் லிம்போமா (T cell lymphoma) என்ற புற்றுநோய்க் கட்டி என்றும், இன்னும் மூன்று மாத காலமே கிரிப்பின்ஸ் வாழும் என்றும் தெரிவித்தனர். கிரிப்பின்ஸுக்கு இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்க முடிவெடுத்தார் ஆடம். அப்படி அதை நீக்கிவிட்டு, அறுவை சிகிச்சையின்போது போட்ட தையலை பிரிக்கச் சென்றபோது, அங்கு மேலும் மூன்று கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிகள் வேகமாக வளர்ந்திருந்தன. அவற்றைச் …
-
- 1 reply
- 488 views
-
-
தி.மலை: அவனவன் ஒரு மனைவியை சமாளிக்க அல்லாடிக்கொண்டு இருக்கிறான். ஆனால் வந்தவாசியில் ஒருவர், இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டு, இருவரையும் தேர்தலில் நிற்க வைத்து, வெற்றியும் பெற வைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியதிற்கு உட்பட்ட கோவில் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காஞ்சனாவும், வழூர் அகரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு செல்வியும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும், முன்னாள் பஞ்., தலைவர் தனசேகர் என்பவரின் மனைவிகள் என்பது தான் சுவாரஸ்யம். இரு மனைவிகளுடன் ஒரே குடும்பமாக வசித்து வரும் தனசேகர், விவசாயம் செய்து வருகிறார். மனைவிகள் இருவரும் வெவ்வேறு கிராம பஞ்., தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால், இருவரை…
-
- 8 replies
- 1.4k views
-
-
ரஷ்யாவில் பனி வெடிப்பில் சிக்கி 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் மூழ்கின. விளாடிவோஸ்டாக் அருகில் உள்ள ரஸ்கி தீவில் உறை பனிக்காலம் முடிவடைந்த நிலையில் அங்கு ஏராளமானோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது உருகிய பனியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. பல நூறு மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்ட பனி வெடிப்பினால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கின. சில வாகனங்கள் நீருக்கு அடியில் இருந்த உறைபனியில் சிக்கிக் கொண்டன. இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஏனைய வாகனங்களில் கயிறு கட்டி நீருக்குள் மூழ்கிய வாகனங்களை மீட்டெடுத்தனர். https://www.polimernews.com/dnews/95606/ரஷ்யாவில்-பனிவெடிப்பில்சிக்கி-ஏராளமான…
-
- 0 replies
- 278 views
-
-
ஆசிய நாடான ஜப்பானில், புத்தாண்டு தினத்தன்று நடந்த மீன் ஏலத்தில், 276 கிலோ எடையுள்ள, டுனா வகை மீனை, 13 கோடி ரூபாய்க்கு, ஓட்டல் நடத்தி வரும், 'டுனா கிங்' என்றழைக்கப்படும், கியோஷி கிமுரா ஏலம் எடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டுனா மீன் ஏலத்தில், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்து பிரபலமானவர் இவர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2451177
-
- 0 replies
- 377 views
-
-
டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு விண்ணில் நடக்கும் வாணவேடிக்கைகள் ஒரு குதூகலத்தைத் தந்து நெஞ்சில் நிறைந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் புதிய ஆண்டை பெரும்பாலும் அனைவரும் மகிழ்ச்சியாகத்தான் வரவேற்பார்கள். கடந்த ஆண்டில் நிறைவேற்ற முடியாததை புது ஆண்டில் முடித்து விடலாம் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கும். பிறக்கும் புது ஆண்டில் தேவையில்லாத சில விடயங்களைக் கைவிடுவதாக சிலர் சபதமும் எடுத்துக் கொள்வார்கள். புத்தாண்டு பிறக்கும் வேளைகளில் சில நாடுகளில் சம்பிராதயங்கள் சிலவற்றை காலகாலமாகக் கடைப்பிடிக்கிறார்கள். ஸ்பெயின், போர்த்துக்கல், ஆர்ஜென்ரீனிய நாடுகளில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் விரைவாக முந்திரிப் பழங்களை உண்ணும் ஒரு பழக்கம் இருக்கிறது. பழங்களை உண்ணும் போது அவற்றை…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஒஸ்ரியா - இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Luttach என்ற இடத்தில் இருபதிலிருந்து இருபத்தியொரு வயது வரை மதிக்கத்தக்க யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் 6பேர் இறந்தும் 11 பேர்காயப்பட்டும் ஒரு துயரச் சம்பவம் இன்று நடந்திருக்கிறது. கடந்த வார இறுதியில்தான் ஒஸ்ரியாவின் தெற்கு Tyrol என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்தில் மூன்று யேர்மனியர்கள் இறந்து போனார்கள். இப்பொழுது இது இரண்டாவது சம்பவம். குளிர் காலத்தில் பனிச்சறுக்கலுக்காகச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இவை அதிர்ச்சிச் செய்திகள். இன்றைய சம்பவத்தில் இறந்த யேர்மனியர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் அறியப்படவில்லை. சம்பவம் பற்றிய தகவல் இப்படி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 1 மணியளவில் பனிச் சறுக்கலுக்காக யேர்மன…
-
- 0 replies
- 284 views
-
-
புது வருடத்தில் நுளையும் போது “ஐயையோ எனக்கு ஒரு வயது கூடப் போகிறதே” என வருத்தப்படும் சில வயதுக்கு வந்த பெரியவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஐப்பானில் ஒரு பெண் தன் வயது ஏற ஏற பெருமிதம் கொள்கிறார். Tanaka என்ற ஒரு பெண்ணுக்கு இந்த வருடம் ஜனவரி இரண்டாம் திகதி 117 வயதாகி இருக்கிறது. இவர்தான் இன்றைய நிலையில் உலகில் அதிக வயதானவர் என்ற இடத்தில் இருக்கிறார். எட்டுக் குழந்தைகளில் ஏழாவதாக 1903ம் ஆண்டு பிறந்த Tanka 1922இல் திருமணம் செய்து தனது கணவனுடன் நூடுள்ஸ்-அரிசி விற்கும் ஒரு சிறிய கடையை ஆரம்பித்தார். தனது கணவணின் மறைவுக்குப் பின்னர் தனியாகவே அந்தக் கடையை இவர் நடத்தி வந்திருக்கிறார். இன்று ஓய்வூதியம் பெறும் நான்கு பிள்ளைகளுக்குத் தாயான Tankaவுக்கு ஐந்து…
-
- 10 replies
- 973 views
-
-
முறை கேடாக... பல்லாயிரக்கணக்கான டொலர்களை வசூலித்த பல்மருத்துவருக்கு கடுமையான தண்டனை! பிரிட்டிஷ் கொலம்பியா – ரிச்மண்ட் பகுதியில், செய்யாத வேலைக்காக பல்லாயிரக்கணக்கான டொலர்களை வசூலித்த பல்மருத்துவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட அபராதத் தீர்ப்பின்படி, மருத்துவர் பின் சூ, கடந்த 2017ஆம் ஆண்டு தானாக முன்வந்து பல்மருத்துவருக்கான நடைமுறையில் இருந்து விலகிய பின்னர் காணாமல் போனார். இதனைத் தொடர்ந்து பி.சி.யின் பல் அறுவை சிகிச்சை கல்லூரி நடத்திய விசாரணையின் போது, அவர் திறமையற்றவர் என்றும் மூன்று ஆண்டுகளில் 70 தடவைகளுக்கு மேல் முறைகேடு செய்ததாகவும் கண்டறியப்பட்டது. இதனால், அவருக்கு உரிமத்தை இரத்து செய்த நிர்வாகம், அவருக்கு 50,00…
-
- 1 reply
- 521 views
-
-
ஒரு குடிமகன் தான் குடியிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்த அத்தனை பேரையும் புத்தாண்டில் வீதியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். புத்தாண்டு நேரத்தில் பட்டாசு, வாண வேடிக்கைகள் இல்லாவிட்டால் அது அழகிருகாயிருக்காது. அத்தோடு கடந்த வருடத்தை கவலையோடு அனுப்பி வைக்கவும் வரும் வருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்பதற்கும் தண்ணி போட்டுத்தானே ஆக வேண்டும். ஆனால் ஒருவர் நள்ளிரவில் போட வேண்டிய தண்ணியை மாற்றி பகல் நேரத்தில் போட்டதால் அவரது வாணவேடிக்கையை இரசிக்க முடியாமல் போயிற்று. யேர்மனியில் Hessen மாநிலத்தில் Bebra என்ற இடத்தில் 52 வயதான ஒருவர் நண்பகல் தனது வீட்டுக்குள் இருந்து வாணம் விட்டிருக்கின்றார். அவர் விட்ட வாணம் அவரது வீட்டுக்குள்ளேயே அவர் வாங்கி வைத்திருந்த் பட்டா…
-
- 5 replies
- 1.1k views
-
-
சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசுகளை வெடித்த தமிழருக்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சீனிவாசன் சுப்பையா முருகன் என்ற தமிழர், தடையை மீறி பட்டாசுகளை வெடித்தார். இது தொடர்பாக முருகன் மீது வழக்கு தொடரப்பட்டு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் முருகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, முருகனுக்கு இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். …
-
- 0 replies
- 301 views
-
-
புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கவுள்ளதாக யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, நேற்று நள்ளிரவு முதல், ஜனவரி 1ஆம் தேதி இரவு வரையிலான காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. அதில், சுமார் 67 ஆயிரம் குழந்தைகள் இந்தியாவில் பிறக்கவுள்ளதாகவும் கணித்துள்ளது. உலக அளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் பிறக்கவுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 17 சதவிகிதமாக உள்ளது. பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள சீனாவில், சுமார் 46ஆயிரம் குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியாவில் சுமார் 26ஆயிரம் குழந்தைகளும், பாகிஸ்…
-
- 4 replies
- 559 views
-
-
ரோமானியாவில்.... அறுவை சிகிச்சையின் போது, நோயாளி மீது பற்றி ஏரிந்த.. தீ! ரோமானியாவில் மருத்துவமனை ஒன்றில், புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளோரியாஸ்கா அவசர சிகிச்சை மருத்துவமனையில், கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதான பெண்னொருவருக்கு, அறுவை சிகிச்சையின் போது அல்கஹால் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின் அவருக்கு மின்சார கத்தியை மருத்துவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன்போது மின்சாரமும் அல்கஹாலும் வினையாற்றியதால் நோயாளி மீது தீ பற்றியது. இதன் காரணமாக அவருக்கு 40 சதவீத காயம் ஏற்பட்டு பின்னர், அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்…
-
- 1 reply
- 334 views
-
-
ஆயுதங்களுக்கு பதில் மாவு, முட்டைகளை வீசி தாக்கிக் கொண்ட வித்தியாசமான போர் திருவிழா ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. ஏரோது மன்னர் ஆட்சிக் காலத்தில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நகரத்தின் மையத்தில், இரு குழுக்களாக ராணுவ உடையணிந்தவர்கள் பிரிந்து உணவுப்பொருட்கள், பட்டாசுகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து விளையாடினர். இறுதியாக தோல்வியடைந்த குழுவிடம் இருந்து பணம் வசூலித்து தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. https://www.polimernews.com/dnews/94824/மாவு,-முட்டை-வீசி-நடந்தவித்தியாசமான-போர்-திருவிழா
-
- 2 replies
- 450 views
-
-
ஆங்கில புத்தாண்டு தொடக்கத்தின்போது, லண்டனிலுள்ள புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் ஒலிக்க செய்யப்படவுள்ளது. 96 மீட்டர் உயர எலிசபெத் கோபுர உச்சியில் உள்ள அக்கடிகாரத்தை புதுப்பிக்கும் பணி 2017 முதல் நடைபெறுகிறது. அந்தப் பணி இன்னும் நிறைவடையாத போதிலும், மிக முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அது அவ்வப்போது ஒலிக்க செய்யப்படுகிறது. அதன்படி புத்தாண்டு தொடக்கத்தை குறிக்கும் வகையில் 31ம் தேதி நள்ளிரவு ஒலிக்க செய்யப்படவுள்ளது. இதையொட்டி மூடி வைக்கப்பட்டிருந்த கடிகாரம் திறக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/94790/புத்தாண்டு-தொடக்கத்தில்புகழ்பெற்ற-பிக்பென்கடிகாரம்-ஒலிக்கசெய்யப்படுகிறது
-
- 0 replies
- 406 views
-
-
யேர்மனிய வீதிகளில் E-Scooter பாவனைக்கு, 2019 யூன் மாதத்தில், அரசு அனுமதி வழங்கியதில் இருந்து போக்குவரத்துக்களில் நாளொன்றுக்கு ஒரு பிரச்சனை வந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2மணியளவில் கேர்ள்ன் நகரைச் சேர்ந்த ஒருவர் A4 அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு கையில் பியர் போத்தலுடன் E-Scooter இல் Olpe நகரத்தை நோக்கிப் பயணித்திருக்கிறார். இதை அவதானித்த பல வாகன ஓட்டுனர்கள் நெடுஞ்சாலைப் பொலீஸாருக்குத் தகவலைத் தந்திருக்கிறார்கள். பொலீஸர் E-Scooter பயணியை நிறுத்தி விசாரித்ததில் தான் பாதை மாறி நெடுஞ்சாலைக்குள் புகுந்து விட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது கையில் இருந்த பியர் போத்தலை அவரால் மறைக்க முடியவில்லை. பொலீஸார் மேற்கொண்ட சோதனையில் இரத்தத்த…
-
- 2 replies
- 564 views
-
-
உணவகத்தில் பிரித்தானிய அரச தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு! கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. வன்கூவரிலுள்ள Deep Cove Chalet என்ற உணவகத்தைக் கண்ட ஹரியின் பாதுகாவலர்கள், அந்த உணவகம் ஹரி குடும்பம் உணவு உண்ண பாதுகாப்பானதாக இருக்கும் என எண்ணி அங்கு முன் பதிவு செய்வதற்காக சென்றுள்ளனர். குறித்த உணவகத்தை நடத்தி வரும் Pierre மற்றும் Bev Koffel ஆகியோர் ஹரி குடும்பத்தின் வேண்டுகோளை நிராகரித்துள்ளனர். தங்கள் உணவகம் அமைந்திருக்கும் Horth Hill என்னும்…
-
- 0 replies
- 306 views
-
-
சூரிய கிரகணத்தின்போது தரையில் ஒருபக்கமாக சாயாமல் கோழி முட்டை நின்றதாக மலேசியா, இந்தோனேசியா சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சூரிய கிரகணம் நேற்று தெரிந்த நிலையில், அந்த 2 நாடுகளைச் சேர்ந்த சிலர் சமூகவலைதளங்களில் விநோத வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் கிரகணத்தின்போது மட்டும் முட்டை இப்படி நிற்காது, அனைத்து நேரத்திலும் இவ்வாறுதான் நிற்கும் என மலேசிய அறிவியல் பல்கலைக்கழக வேதியியல் துறை முன்னாள் பேராசிரியர் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/94514/சூரிய-கிரகணத்தின்போதுதரையில்-சாயாமல்-நின்ற-முட்டை..-சமூகவலைதளங்களில்வீடியோ-பகிர்வு
-
- 0 replies
- 234 views
-
-
Niedersachsen மாநிலத்தில் Aurich என்ற நகரில் இருந்த ஒருவருக்கு பழைய பொருட்கள் விற்கப்படும் அங்காடியில் இருந்த பழமையான ஒரு சுவர் மணிக்கூடு பிடித்துப் போயிற்று. அதனை வாங்கும் போது அது ஒரு பெறுமதி மிக்க மணிக்கூடு என்று அந்த மனிதனுக்கோ அல்லது சந்தையில் அதை விற்றவருக்கோ தெரிந்திருக்கவில்லை. ஆசையோடு அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் அந்த மணிக்கூட்டை ஆராய்ந்ததில், 80 செ.மீற்றர் அளவிலான மரத்தால் செய்யப்பட்ட அந்தக் கடிகாரத்தின் உட் பகுதியில் 50,000 டொச்சமார்க்குகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததை கண்டிருக்கின்றார். அதனுடைய மதிப்பை இன்றைய யூரோக்களில் கணக்கிட்டால் 25,500 அளவில் வரும். நேர்மையான அந்த மனிதன் பணத்தை கொண்டுபோய் Aurich நகரின், இழந்த பொருட்களை கண்டு பிடிக்கும்…
-
- 5 replies
- 958 views
-
-
அமெரிக்காவில் வங்கியில் கொள்ளையடித்த பணத்தை பொது மக்களை நோக்கி வீசியெறிந்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 'அகாடமி வங்கி'யில் புகுந்த முதியவர் ஒருவர் தன்னிடம் பயங்கர ஆயுதம் இருப்பதாக கூறி ஊழியர்களை மிரட்டி பல லட்சம் டாலர்களை கொள்ளையடித்தார்.பை நிறைய பணத்துடன் வெளியே வந்த அவர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்திற்குச் சென்று டாலர்களை அள்ளி வீசியுள்ளார். இதை நேரில் பார்த்த டியன் பாஸ்கல் என்பவர் தனியார் 'டிவி'க்கு அளித்த பேட்டி:வெள்ளைத் தாடியுடன் காணப்பட்ட அந்த முதியவர் திடீரென்று கத்தை கத்தையாக டாலர்களை அள்ளி வீசியதும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நான் உட்பட அங்கிருந்தோர் அனைவரும் விழுந்தடித்து பணத்தை எடுத்தோம்.அந்த முதியவர் 'எல்ல…
-
- 0 replies
- 327 views
-
-
மறைந்த மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக உள்ளவர் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன். கடந்த 2009-ம் ஆண்டு காலமானார். இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவைச் சேர்ந்த இசை கலைஞர் செர்ஜியோ கோர்டெஸ், மறைந்த மைக்கேல் ஜாக்சனின் உருவத்துடன் அச்சு அசலாக உள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் செர்ஜியோ கோர்டெஸ் தான், உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். இந்நிலையில் செர்ஜியோ கோர்டெஸ் தான் மைக்…
-
- 0 replies
- 406 views
-
-
விமான நிலையத்தில் உள்ள கடையில் சட்டையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட அர்ஜென்டினாவுக்கான மெக்சிகோ தூதர் பதவி விலகியுள்ளார். 77 வயதாகவும் பிக்கார்டோ வலெரோ உடல் நலப் பிரச்சனைகளுக்காக பதவி விலகியுள்ளதாக மெக்சிகோவின் வெளியுறவு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பியூனஸ் ஏர்ஸ் விமான நிலையத்தில் உள்ள கடையில், செய்தித்தாளுக்கு நடுவே மறைத்து வைத்து புத்தகம் ஒன்றை அவர் திருடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது. தற்போது ஒரு விமான நிலைய கடை ஒன்றில் சட்டை ஒன்றை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மெக்சிகோவுக்கு செல்ல விமானம் ஏறுவதற்கு முன்பு விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் கட்டணம் எதுவும் செலுத்தாமல் சட்டையை திருடி செல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டப்ப…
-
- 1 reply
- 434 views
-
-
அமெரிக்காவில் 60 கார்கள் மோதி கோர விபத்து – 50இற்கும் மேற்பட்டோர் காயம் அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக 60இற்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த கோர விபத்தில் 50இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று (திங்கட்கிழமை) கடும் பனிமூட்டம் நிலவியது. முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. அதற்கமைய அடுத்தடுத்து 60இற்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் 50இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…
-
- 0 replies
- 599 views
-