செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
சிறார்களின் ஆபாச வீடியோக்கள் சம்பந்தமாக பொலிஸார் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் யேர்மனியில் Recklinghausen என்ற நகரில் உள்ள ஒரு வீட்டை சோதனையிடச் சென்ற போது அவர்களுக்கு கிடைத்தது ஆபாசப் படங்களும் வீடியோக்களும் மட்டுமல்ல. ஒரு அதிசயமும் சேர்ந்தே கிடைத்தது. அந்த வீட்டில் உள்ள ஒரு அலுமாரியை சோதனைக்காக பொலீஸார் திறந்த போது அந்த அலுமாரிக்குள் ஒரு சிறுவன் ஒளித்து வைக்கப் பட்டிருந்ததைக் கண்டார்கள். அந்தச் சிறுவனை விசாரித்த போது அவனது பெயர் Marvin என்பது அவர்களுக்குத் தெரியவந்தது. 11.06.2017இல் காணாமல் போன Marvin Konsog என்ற பதினைந்து வயதான சிறுவன்தான் அவன் என்பதைப் பொலீஸார் அறிந்து கொண்டார்கள். இனி தனது மகன் கிடைக்க மாட்டான். அவன் இறந்து விட்டிருப்பான்…
-
- 0 replies
- 587 views
-
-
ஸ்பெயின் நாட்டில், டிவியில் லாட்டரி முடிவு விபரங்களை நேரலை செய்துகொண்டிருந்த பெண் நிருபர் ஒருவர், லாட்டரியில் தனக்கும் பரிசு விழுந்திருப்பதை கண்டு உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார். அங்குள்ள டிவி சேனல் ஒன்றில் பணிபுரியும் நடாலியா என்ற பெண், கிறிஸ்துமஸ் லாட்டரி முடிவுகளில் வென்றவர்கள் விபரத்தை நேரலையில் வெளியிட்டுக்கொண்டிருந்தார். அப்போது தனக்கும் சுமார் 4 லட்ச ரூபாய் பரிசு விழுந்திருப்பது கண்டு அதிர்ச்சியில் திளைத்த அவர், மகிழ்ச்சியில் துள்ளினார். https://www.polimernews.com/dnews/94017/லாட்டரி-முடிவுகளை-டிவியில்நேரலை-செய்த-பெண்நிருபருக்கு-லாட்டரி-பரிசு
-
- 1 reply
- 391 views
-
-
நாம் வாழும் இந்த பூமியில் மிக நீண்ட ஒற்றை தூரம் ஒன்றில், நாம் நடக்க துவங்கினால் இறுதியில் எவ்வளவு தூரம் நடந்திருப்போம் தெரியுமா.? அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. பூமியில் மிக நீண்ட தூரம் நடக்கக்கூடிய ஒற்றை தூரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து 14,000 மைல் தொலைவில் உள்ளது. தென் ஆப்பிரிக்கவின் கடலோர கிராமமான எல் அகுல்ஹாசிலிருந்து வடக்கு ரஷியாவின் மகடான் நகர் வரை உள்ள தூரமே, மனிதன் அதிகபட்சமாக நடந்து செல்ல கூடிய தொலைவாக தற்போது கணக்கிடப்பட்டுள்ளது. 14,000 மைல்கள் தொலைவுடைய இந்த தூரத்தை நடந்தே கடக்க 3 ஆண்டுகள் ஆகும். மேற்கண்ட பயணத்தை மேற்கொள்ளும்போது தென்படக்கூடிய ஆறுகளை கடக்க கூட படகை பயன்படுத்த தேவை இல்லை. ஏனெனில் முழு வழியும் பாலங்களை கொண்ட சாலைகளால் ஆனது.…
-
- 0 replies
- 882 views
-
-
22.12.2019 ஞாயிறு காலை 00:40 மணி, Siegburger நகரில் இல் இருந்து Bonn நகருக்குப் புறப்பட்ட 66ம் இலக்க ட்ராம் தொடர்ந்து எட்டுத் தரிப்பிடங்களில் நிறுத்தப்படாமலேயே சென்றுகொண்டேயிருந்தது. ஏன் வண்டி தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது என்று பயணிகளுக்கு முதலில் தெரியவில்லை. வழக்கமாக ஒலிவாங்கியூடாகத் தகவல்களைச் சொல்லும் சாரதியிடம் இருந்தும் எந்தத் தகவல்களும் இல்லை. ஏதோ தவறு நடந்து விட்டது என்பது அவர்களுக்குப் புரிந்தது. பலர் அவசர அழைப்பை ஒரே நேரத்தில் மேற்கொண்டதால் நிலமையை உணர்ந்த நகராட்சியின் கட்டுப்பாட்டு மையம் சாரதியின் கதவை உடைத்து நிலமையை அவதானிக்கும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தியது. சாரதியின் கதவை பயணிகள் உடைத்த போது அவர் மயங்கிய நிலையில் இருப்பது தெரிந்தது. பயணி…
-
- 0 replies
- 355 views
-
-
40 கப்பல்கள், 20 விமானங்களுக்கு நடந்த கதியென்ன? கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண கடல் பரப்பின் மர்மங்களை அவிழ்ப்பதற்கு விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதில் உண்மையான காரணம் என்று எதையும் சொல்ல முடியாமல் வெறும் கூற்றாகவே கூறி வருகின்றனர். பெர்முடா முக்கோண கடல் பகுதியில் செல்லும் கப்பல், விமானங்கள் காணாமல் போவதற்கு கடந்த மார்ச் மாதம் புதிய கூற்று ஒன்றை விஞ்ஞானிகள் முன்வைத்தனர். இதனால் அந்த மர்ம பிரதேசத்தின் முடிச்சு அவிழ்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. கடந்த மார்ச் மாதம் பெர்முடா முக்கோண கடல்பகுதியின் அடியில் இராட்சத பள்ளங்கள் இருப்பதாக ேநார்வே நாட்சே் சேர்ந…
-
- 2 replies
- 838 views
-
-
விமானத்திற்குள் கூச்சலிட்ட தமிழ் யுவதி! விசாரணையில் அம்பலமான கட்டாய திருமண விவகாரம் யாழ்ப்பாணத்தில் உள்ள 27 வயதான பொறியியலாளர் ஒருவருக்கு ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த தமிழ் யுவதியை யுவதியின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணம் செய்து வைக்க இடம்பெற்ற முயற்சி அம்பலமாகியுள்ளது. குறித்த யுவதியை கட்டாயப்படுத்தி விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு அழைத்து செல்ல யுவதியின் பெற்றோரும் சகோதரர்களும் முற்பட்ட போது யுவதி விமானத்துக்குள் கத்திக் குளறியுள்ளார். உடனடியாக விமானத்தினுள் இருந்த விமானி இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்ட போது பொலிசார் யுவதியை மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக ஜேர்மன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யுவ…
-
- 1 reply
- 539 views
-
-
வேலை இல்லாததால் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறை சென்ற நபர் – ஆயுள் தண்டனையால் குதூகலம் ஜேர்மனியில் வேலை இல்லாத, கவனிக்க ஆள் இல்லாத முதியவர் ஒருவர் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறைத் தண்டனை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜேர்மனின் மோனோசென்க்ளாட்பாக் நகரைச் சேர்ந்தவர் எபெர்ஹார்ட் (வயது 62). முன்னாள் கணினி நிபுணரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை இழந்துள்ளார். அதன்பின்னர் தனது சேமிப்பில் இருந்த பணத்தை ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளுக்கு சுற்றுலா சென்று செலவழித்துள்ளார். கையில் இருந்த பணம் தீரவே என்ன செய்வதென்று தெரியாமல் தனது காரிலேயே வசித்து வந்துள்ளார். இதற்கிடையே அவரது சாரதி உரிமமும் காலாவதியானது. அதன்பின்னர் கடந்த ஜூன் ம…
-
- 1 reply
- 430 views
-
-
சிறிய பிரச்சனை என்றால் கூட முதலில் டாக்டரிடம் போகாமல் அருகில் இருக்கும் மெடிக்கல் ஷாப் சென்று மாத்திரகளை வாங்குபவரா நீங்கள்.. உங்களுக்காக தான் இந்த செய்தி நாளுக்கு நாள் புதுப்புது நோய்கள் மனிதனை தாக்கியவாறு உள்ளன. நோய்களை குணமாக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ புதுப்புது மாத்திரைகளும் மருத்துவ சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆய்வு தகவலின் படி நம் நாட்டில் அதிக அளவில் ஆன்டிபயாடிக்ட் மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளன. பெரும்பாலும் நாம் சிறிய உடல்நலக்குறைவு அல்லது மருத்துவரிகளிடம் போக இயலாத சூழலில் அருகிலிருக்கும் மருந்து கடைக்கு சென்று உபாதைகளை சொல்லி மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். அதிகபட்சம் அப்போது நாம் MRP விலையையும், காலாவதி தேதியையும் மட்டும…
-
- 0 replies
- 554 views
-
-
நகர மேயராக 7 மாத குழந்தை பதவியேற்பு : அமெரிக்காவில் ருசிகரம்! அமெரிக்காவின் டெக்சாஸ் நகர மேயராக 7 மாத குழந்தை பதவியேற்ற சுவாரஸ்யம் சம்பவம் இடம்பெற்றுள்ளது. டெக்சாஸில் உள்ள வைட் ஹால் நகரின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்ட ஆண்டுதோறும் கௌரவ மேயர் பதவி ஏலம் விடப்படும். இந்த மாதத்திற்கான ஏலத்தில் 7 மாத குழந்தையான வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து கௌரவ மேயராக 7 மாத குழந்தையான சார்லஸ் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் சார்லஸ் மெக்மில்லன் மேயராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்புக்குப் பின் சார்லஸின் வளர்ப்புத் தாயிடம் மேயர் குடியரசு கட்சி ஆதரவாளரா? …
-
- 0 replies
- 242 views
-
-
துருக்கியில் 600 ஆண்டுகள் பழமையான மசூதி வேறிடத்திற்கு இடமாற்றம்! துருக்கியின் ஹசன்கீப் நகரில் இருந்த சுமார் 609 ஆண்டுகள் பழமையான எரி ரிஸ்க் என்ற முஸ்லிம் பள்ளிவாயல் பெயர்த்தெடுக்கப்பட்டு பல்சக்கர வாகனம் மூலம் மூன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹசன்கீப் கலாசாரப் பூங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தெற்கு பகுதியில் பாட்மான் மாகாணத்தில் உள்ள பழமையான நகரம் ஹசன்கீப்பில் துருக்கியின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள் பல அமைந்துள்ளன. இந்தநிலையில், ஹசன்கீப் நகரில் உள்ள ரைக்ரிஸ் ஆற்றுக்கு அருகே லிசு என்ற பிரமாண்ட அணை கட்டப்பட்டு வருகின்றது. நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் ரைக்ரிஸ் ஆற்றில் இருந்து லிசு அணைக்குத் தண்ணீர்…
-
- 0 replies
- 282 views
-
-
நாம் கடிகாரம் வாங்க எந்த கடைக்கு போனாலும் அவை அனைத்திலுமே நேரம் 10.10 என்றே பொதுவாக வைக்கப்பட்டிருக்கும். அது ஏன் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என்பதற்கான காரணங்கள் குறித்து தற்போது பார்ப்போம். நம் கைகளில் மொபைல் புழங்குவதற்கு முன்பெல்லாம் கடிகாரத்தை பார்த்து மட்டுமே நேரம் சொல்லி கொண்டிருந்தோம். ஆனால் செல்போன்கள் வந்த பிறகு அந்த வழக்கத்தை நாம் அடியோடு விட்டுவிட்டோம். எனினும் தற்போதும் வீடுகளுக்குள் சென்றால் சுவர் கடிகாரம் மாட்டாத வீடுகள் இல்லை. அது போல நேரம் பார்க்க பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, ஸ்டைல் மற்றும் பிராண்ட் பெயர்களுக்காகவே சிலர் கைக்கடிகாரம் பயன்படுத்துகின்றனர். பெண்களோ வளையல்கள் அணிவதற்கு பதிலாக கைகடிகாரம் அணிவது தங்களை ஸ்டைலாக காட்டுவதாகவும்…
-
- 1 reply
- 13.1k views
-
-
ரஷியாவில் எரிவாயு நிலையம் ஒன்றில் மிளகாய் பொடி தூவிய திருடனை, பெண் ஊழியர் துடைப்பத்தால் அடித்து துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நோவோஸிபிரிக் என்ற இடத்தில் உள்ள எரிவாயு நிலையத்தின் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த திருடன், மிளகாய்ப்பொடியை தூவி அங்கிருந்த ஊழியரை விரட்டிவிட்டு பணத்தை திருடுகிறான். https://www.msn.com/en-ca/video/watch/employee-at-siberian-gas-station-kicking-robber-out-with-mop/vi-BBY52aT அவனை பிடிக்க முயன்ற மற்றொரு பெண் ஊழியர் மீதும் மிளகாய் பொடியை தூவ முயற்சிக்கிறான். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த பெண் ஊழியர், அருகில் இருந்த துடைப்பத்தை எடுத்து திருடனை அடித்து அங்காடியில் இருந்து விரட்டுகிறார். பெண்ணின் இந்த துணிச்சலான …
-
- 0 replies
- 628 views
-
-
தமிழ் நாட்டில் மருமகள் கடித்ததில் மாமியாரின் தலையில் 6 தையல் போடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி (வயது 62). பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் (38). இவரது மனைவி கல்பனா (33). கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டால் சரவணக்குமார் தனது தாய் நாகேஸ்வரி வீட்டில் தங்கி விடுவார். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கல்பனா தன்னை தாக்கி விட்டதாக மாமியார் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் கொடுத்தார். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன் மீதான புகாரை வாபஸ் பெற கூறி கல்பானா மாமியாரை மிரட்டி வந்தார். இந்நிலையில் நாகே…
-
- 5 replies
- 850 views
-
-
திரைப்படத்தில் சூப்பர்மேன் அணிந்திருந்த உடை, சுமார் ஒரு கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜுலியன் என்ற ஏல நிறுவனத்தில் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதில் 1978ஆம் ஆண்டு வெளியான சூப்பர் மேன் படத்தில் சூப்பர் மேனாக நடித்திருந்த க்ரிஸ்டோபர் ரீவீ (Christopher Reeve) அணிந்திருந்த உடை, சுமார் ஒரு கோடியே 37 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஒன்றின் உடை அதிக தொகைக்கு ஏலம் போனது இதுவே முதன்முறை எனவும் கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் கோஸ்ட்பஸ்டர்ஸ்-2 படத்தில் டேன் அக்ராய்ட் அணிந்திருந்த ஜம்ப்சூட் சுமார் 22 லட்ச ரூ…
-
- 0 replies
- 306 views
-
-
பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகள் : பெண்களை பாதுகாக்க புதிய கருவி கண்டுப்பிடிப்பு! உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘ஆண்டி ரேப் கன்’ என்ற பணப்பையை உருவாக்கியுள்ளார். வாரணாசியைச் சேர்ந்த ஷியாம் சவுராசியா என்பவரே குறித்த கருவியை கண்டுப்பிடித்துள்ளார். இந்த பிரத்யேக மணி பர்ஸுக்குள் புளூடூத் பொருத்தப்பட்டிருப்பதால் ஆபத்து நேரத்தில் இதில் இருக்கும் பொத்தானை அழுத்தி காவல் நிலையத்தின் உதவியை பெறமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். ஆபத்து தீவிரமாக இருந்தால், சிக்கலில் இருப்பவர்கள் பணப்பையில் பொருத்தப்பட்ட ட்ரிகரை அழுத்தினால் அதிலிருந்து வெளியேறும் பயங்கர சத்தம் அருகில் உள்ளவர்ளுக்கு சம்பவம் குறித்து கவனிக்கச் செய்ய…
-
- 0 replies
- 197 views
-
-
44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு! 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள ஒரு குகையை அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது குகையில் இருந்த சுண்ணாம்பு பாறைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதை கண்டனர். ஆடு, மாடு, காட்டுப்பன்றி, மான் மற்றும் குதிரை போன்ற விலங்குகளின் ஓவியங்கள் இருந்தன. சில ஓவியங்கள் விலங்குகளை வேட்டையாடுவது போல் வரையப்பட்டிருந்தன. அதில் வேட்டையாடும் நபர்கள் கைகளில் ஈட்டி மற்றும் கயிறுகளை வைத்திருப்பது தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன. மேலும் அந்த ஓவியங்களில் மனிதர்களின் உருவம் சிறியதாகவும், விலங்குகளின் உருவம் பெரியதாகவும் இருக்கின்றன.…
-
- 1 reply
- 486 views
-
-
சமஸ்கிருதத்தில் கதைத்தால் சர்க்கரை நோய் வராது.. உடலில் கொழுப்பு குறையும்.. பாஜக எம்பி.! ரெல்லி: சமஸ்கிருதத்தில் கதைத்தால் சர்க்கரை நோய் வராது, இதயத்தில் கோளாறுகள் எதுவும் வராது என்று பாஜக எம்பி கணேஷ் சிங் நாடாளுமன்ற விவாதத்தில் தெரிவித்துள்ளார் .அழிந்து வரும் தொன்மையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. சமஸ்கிருத மொழியை கற்பிக்க பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமஸ்கிருத பல்கலைக்கழங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய பாஜக எம்பி கணேஷ் சிங், சமஸ்கிருத மொழியில் கதைப…
-
- 3 replies
- 864 views
-
-
இராட்சத ஒக்டோபஸின் பிடியில் சிக்கிய கழுகு! கனடாவில் ஒக்டோபஸின் பிடியில் சிக்கிய கழுகு ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. படகில் சென்று கொண்டிருந்த சிலர் கழுகு ஒன்று ஒக்டோபஸின் பிடியில் சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதை காப்பாற்றுவதற்கான முயற்சியில் இறங்கிய குறித்த குழுவினர், கொக்கி போன்ற அமைப்பு கொண்ட பெரிய குச்சியை பயன்படுத்தி ஒக்டோபஸினை படகிற்கு அருகில் இழுத்துள்ளனர். குச்சியினை கொண்டு லேசான அழுத்தம் கொடுக்கவும் ஒக்டோபஸ் கழுகின் மீதான தனது பிடியினை தளர்த்தியது. இதன்காரணமாக அடுத்த நொடியே கழுகு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. http://athavannews.com/இராட்சத-ஒக்டோபஸின்-பிடிய/
-
- 0 replies
- 190 views
-
-
வீட்டின் முன்வாசல் விழுப்புரம்.. பின்வாசல் கள்ளக்குறிச்சி..! மாவட்ட பிரிவினையால் பரிதவிக்கும் குக்கிராமம்..! விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்டது கருவேப்பிள்ளைபாளையம் கிராமம். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் குக்கிராமமாக வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கி அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம் 26ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் முதல்வர் புதிய மாவட்டத்திற்கான நிர்வாக பணிகளை தொடங்கி வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது கருவேப்பிள்ளைபாளையம…
-
- 5 replies
- 1.9k views
-
-
தம்முடைய எள்ளு பாட்டி தமிழ்நாட்டில் உள்ள கடலூரை சேர்ந்தவர் என்று, பிரிட்டனை சேர்ந்த பன்னாட்டு தொழில் குழுமமான விர்ஜின் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன் (Richard Branson) தெரிவித்துள்ளார். தமது முன்னோர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 4 தலைமுறைகள் கடலூரில் வாழ்ந்ததாகவும், தமது எள்ளு தாத்தா கடலூரை சேர்ந்த Aria என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டதாகவும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். தமது ரத்தத்தில் இந்திய கலப்பு இருப்பதை மரபணு சோதனைகள் மூலம் உறுதி செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் புதிய சின்னமாக தமது எள்ளு பாட்டியை குறிக்கும் உருவம் இடம்பெறும் என்றும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். https://www.polim…
-
- 0 replies
- 377 views
-
-
“தலைக்கவசம் போட்டு வெங்காயம் விக்கிறான்… என்னத்த சொல்ல” Seeman News - இந்திய அளவில் வெங்காயத்தின் விலை, கிலோவுக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. நாடாளுமன்றம் வரை இது பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அது குறித்து கறாரான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் இது குறித்துப் பேசிய சீமான், “நம் நாட்டின் அரசு அனைவருக்கும் வாகனத்தையும் அலைபேசியையும் கொடுப்பதற்குத் திட்டம் வைத்துள்ளது. ஆனால் நீரையும் சோறையும் எல்லோருக்கும் வழங்குவதற்கு அதனிடம் திட்டம் கிடையாது. வெங்காயத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்த காரணத்தினால்தான் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக சொல்கிறார்கள். சொந்த நாட்டு மக்களுக்கே வெங்காயம் இல்லாத போத…
-
- 1 reply
- 513 views
-
-
பெரு நாட்டில் நடைபெற்ற சக போட்டியாளர்களின் கன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டியில் 16 பேர் கலந்து கொண்டனர். அமெரிக்கா, ரஷ்யா நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற இப்போட்டி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன்முறையாக பெரு நாட்டில் நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்கள் தங்களது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் பரஸ்பரம் வேகமாக கன்னத்தில் அறைந்தனர். போட்டியில் கலந்து கொண்ட பலர், அறை விழுந்து முகம் வீங்கி காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் அடி தாங்காமல் மயங்கியதால் வெளியேற்றப்பட்டார். https://www.polimernews.com/dnews/92138/கன்னத்தில்-வேகமாக-அறையும்விநோத-போட்டி
-
- 4 replies
- 940 views
-
-
தமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது. இந்தியாவில், தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள 'எஸ்.டி.ஆர் மொபைல்ஸ்' எனும் தொலைபேசி விற்பனை கடை, ‘ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ என, அதிரடி சலுகை ஒன்…
-
- 4 replies
- 593 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம் முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (சனிக்கிழமை) வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். லைகா நிறுவனர் சுபாஸ்கரன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசை: மணிரத்னம் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரனின் சமூக சேவைகளைப் பாராட்டி, மலேசியாவின் அமிஸ்ட் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. தனது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து பல்வேறு பிரம்மாண்ட படங்களைத் தமிழில் தயாரித்து வருகிறார். தற்போது ரஜினி நடிக்கும் 'தர்பார்', கம…
-
- 5 replies
- 1.2k views
-
-
தொடர் மழையால் வெங்காயம் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்திற்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மார்கெட்டில் இரண்டு மூட்டை வெங்காயம் திருடியவர் சிக்கினார். மேலும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வழக்கமாக இறக்குமதி செய்யும் மொத்த வியாபாரிகள் வழக்கம் போல கொள்முதல் செய்ய முடியாததால் வெங்காயத்தின் அளவு டன் கணக்கில் குறைந்து, இதுவரை இல்லாத அளவிற்கு வெங்காயத்தின் விலையானது உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். விலையுயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசானது, வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்…
-
- 0 replies
- 224 views
-