மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 போராளிகளின் வீரவணக்க நாள் கடந்த 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 நவம்பர் 2 ஆம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம் : * பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் என்று அழைக்கப்படும் பரமு தமிழ்ச்செல்வன். (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: கிளிநொச்சி மாவட்டம்) * லெப். கேணல் அன்புமணி அல்லது அலெக்ஸ் என்று அழைக்கப்படும் முத்துக்குமாரு சௌந்தரகிருஸ்ணன் (சொந்த முகவரி யாழ். மாவட்டம்) * மேஜர் மிகுந்தன் என்று அழைக்கப்படுமம் தர்மராசா விஜயகுமார் (சொந்த முகவரி: யாழ். மாவட்டம்) * மேஜர் கலையரசன் அல்லது நேத…
-
- 13 replies
- 1.2k views
-
-
21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் பணியை மேற்கொண்டிருந்தகடற்புலிகளின் கலங்களிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில்ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத்தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் மற்றும் இதேநாள் சுற்றுக்காவல்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை முல்லைக்கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்…
-
- 13 replies
- 1.2k views
-
-
புலிகளின் முதலாவது வெற்றிகரமான தாக்குதல் - லெப்.செல்லக்கிளி அம்மானின் 35வது நினைவுநாள் லெப்.செல்லக்கிளி அம்மான் சதாசிவம் செல்வநாயகம் தமிழீழம்(யாழ் மாவட்டம்) தாய் மடியில் 15.06.1953 மண் மடியில் 23.07.1983 தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்ற திருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்க வளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பல வெற்றிக்கு வித்திட்ட வீரத்தளபதி லெப். கேணல் அமுதாப் ! Last updated Mar 31, 2020 சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின்11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள். லெப். கேணல் அமுதாப் சிதம்பரப்பிள்ளை சிவநாயகம் பிறப்பு- 15.04.1976 வீ.சாவு-31.03.2009 சொந்த முகவரி- தவசியாகுளம்,சாஸ்திரிகூழாங்குழம்,வவுனியா 18 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, 18 ஆம் ஆண்டில் கால் பதிப்பதனையிட்டு கடந்த வியாழக்கிழமை (10.04.08) நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது: இன்று நெருக்கடியான கால கட்டத்தில், நெருக்கமான…
-
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர். இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விர…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
17.11.1994 அன்று நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மல்லி(அமுதன்) அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவில் சந்திரிகா தலைமையில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியிலேயே சிறிலங்கா படையினரால் லெப்.கேணல் மல்லி மீதான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://meenakam.com/...ical/2011/11/17 தமிழீழ தாயக விடியலுக்காய் உழைத்து வீரச்சாவை அணைத்துக் கொண்ட இந்த வீரமறவனுக்கு எனது வீரவணக்கங்கள்.
-
- 8 replies
- 1.2k views
-
-
இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்’ மைக்கேல் வசந்தி’ என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சிபெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார். மன்னாரில் லெப்.கேணல். விக்டர் தலைமையில் நடைபெற்ற பெண்புலிகளின் முதலாவது தாக்குதல் தொடக்கம் இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வரை இவர் பல களங்களைக் கண்டவர்.மணலாற்றுக் காட்டுக்குள் இருந்தகாலத்தில் ஒரு நத்தார் தினத்தன்று சுகவீனமுற்றா…
-
- 7 replies
- 1.2k views
-
-
[size=4]தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் காவியமான லெப்.கேணல் கலாத்தன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் றோசா, கப்டன் இளங்குயிலன் உட்பட்ட 23 மாவீரர்களினதும் முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.இயூயின் என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 21.10.2001 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கைக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல் மற்றும் முல்லைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படைக் கலங்களை வழி மறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலென இரு வேறு நிகழ்வுகளில் கடற்கரும்புலி மேஜர் றோசா (கணேசன் கற்புக்கரசி - காரைநகர், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் இளங்க…
-
- 9 replies
- 1.2k views
-
-
கேணல் நாகேஸ் Last updated Apr 4, 2020 மட்டக்களப்பு புல்லுமலையை பிறப்பிடமாகக் கொண்ட கேணல் நாகேஸ் 1985-86 காலப் பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். ஆரம்பகாலத்தில் லெப்.கேணல் றீகன் அவர்களின் அணியில் தனது சமர்க்களப் பணியை ஆரம்பித்தார். காலங்களில் சிறப்பாக செயல்ப்பட்ட அவர் இந்திய ஆக்கிரமிப்பு படைகளுக்கெதிரான யுத்தம் ஆரம்பமானபோது புல்லுமலைப் பகுதி விடுதலைப் புலிகளின் முகாமின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார். இந்தக் காலகட்டத்தில் அவரின் தலைமையில் இந்திய,சிறிலங்கா படையினருக்கெதிரான பல வெற்றிகரத் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. இத்தாக்குதல் நடவடிக்கைகள் பலவற்றில் ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டன. கண்ணிவெடித் தாக்குதல்களில் அவருக்கென்று தனி…
-
- 1 reply
- 1.2k views
-
-
பூனைத்தொடுவாயில் காவியமான லெப்.கேணல் வாசன், கப்டன் ஆனந்தபாபு, லெப். கெங்கன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் காவியமான லெப். மன்மதன், வீரவேங்கை சாந்தா ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.10.1996 அன்று முல்லை மாவட்டம் பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு(ராடார்) தளத்தினை தாக்குதவற்காக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் “கொமாண்டா” அணியினருடனான மோதலின்போது லெப்.கேணல் வாசன் (தனராஜ்) (நந்தகோபால் நவநீதராஜ் - திருகோணமலை) கப்டன் ஆனந்தபாபு (கிறகோரி கிறித்துராஜா - குருநகர், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கெங்கன் (கெங்காதரன்) (மார்க்கண்டேசர் விக்கினராசா - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட…
-
- 6 replies
- 1.2k views
-
-
காங்கேசன்துறைமுகக் கடற்பரப்பில் வரலாறு காணாத சமர் 16 . 07 . 1995 ... அதிகாலை 01 : 00 மணி துறைமுகத்தின் உள்ளே ” எடித்தாரா ” கட்டளைக் கப்பலோடு , 3 தரையிறங்கு கலங்கள் ( Landing Crafts ) , மேலும் ஒரு கப்பல் என்பன இராணுவத் தளபாடங்களை இருக்கிக்கொண்டிருந்தன. துறைமுகத்தின் வெளிப்பகுதியில் போர்க்கலங்கள் பலம் வாய்ந்த வியூகமிட்டு வளைத்து நின்றன. ” டோறா “ அதிவேகத் தாக்குதற் படகுகள் எட்டு , ” சங்காய் “ பீரங்கிப் படகுகள் மூன்று. இரும்புக் காவல். அலைமடியில் தவழ்ந்து அமைதியாகி நெருங்கின கடற்புலிகளின் படகுகள். ” சுலோஜன் நீரடித் தாக்குதற் பிரிவின் “ கரும்புலி வீரர்களான நியூட்டனும் – தங்கனும் வெடிகுன்டுகளோடு ” எடித்தாராவை ” அண்மித்தார்கள். ஆரம்பித்தது உக்கிரமான சண்டை. …
-
- 8 replies
- 1.2k views
-
-
லெப். கேணல் தியாகன் தமிழீழ போரியல் வரலாற்றில் அதிகளவான கடற் சமர்களின் கதாநாயகனாக விளங்கிய ‘கடற்புலிகளின் சாள்ஸ் படையணி பொறுப்பாளன்’ லெப். கேணல் தியாகன். 1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன். கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான ‘யப்பான் 02’ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து; மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு செல்கிறான். அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் குறிப்பாக தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வகுப்பிலும் சிறந்து விளங்கினான். அத்தோடு தொலைத்த…
-
- 2 replies
- 1.2k views
-
-
லெப். கேணல் நாகதேவன் பன்முகத் திறன்கள் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் நாகதேவன். “நவம்பர்” என்று போராளிகளால் அன்போடு அழைக்கப்பட்ட நாகதேவன், யாழ். மாவட்டம் மானிப்பாய், கட்டுடை கிராமத்தில் பிறந்தார். கெங்காரட்ணம் ரமேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகதேவன் தனது ஆரம்பக் கல்வியை கட்டுடை சைவ வித்தியாலயத்தில் பயின்றார். தொடர்ந்து மானிப்பாய் இந்து கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் உயரிய நோக்குடன் 1993ம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். க.பொ.த. சாதாரண தர கல்வியை முடித்துக் கொண்டு இயக்கத்தில் இணைந்த கெங்காரட்ணம் ரமேஸ் படைய தொடக்கப் பள்ளியில் தனது ஆரம்பப் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
சமர்க்களங்களின் துணை நாயகன் பிரிகேடியர் தீபன்! Last updated Apr 3, 2020 கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன். தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று…
-
- 1 reply
- 1.2k views
-
-
மூடு இனியன் தமிழீழம் இன் இடுகையில் உள்ள படங்கள் மொபைல் பதிவேற்றங்கள் விருப்பத்தேர்வுகள் Messenger இல் அனுப்பு விரும்பு பகிர் …
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
கேணல் கீதன் மாஸ்ரர் அவர்களின் 12ம் ஆண்டு நினைவில் - கீதனுடன் ஒரு உரையாடல் .! கேணல் கீதன் மாஸ்டர் இந்த இடத்தில் இந்த போராளியைப் பற்றி கூறியே ஆகவேண்டும். எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தனது குடும்பம் வெளிநாட்டில் வசித்தாலும் தமிழீழ விடுதலையை தன் உயிர் மூச்சாக நினைத்து பீசிங் எனப்படும் முட்டு வருத்தத்தின் மத்தியிலும் தலைவனையும் சக போராளிகளையும் உயிராக நேசித்த உன்னதமான போராளி கேணல் கீதன் தன் ஏலாத உடல் நிலையிலும் தலைவரின் எண்ணங்களுக்கு 100% செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று தானும் கால நேரம் பாராமல் செயல்பட்டு தன் சக போராளிகளையும் செயற்பட வைத்த அரிய செயல்பாட்டாளன். லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவு தொடங்கி லெப் கேணல் திலீபன் கல்லூரி வரை தலைவரின் எண்ணக்கருவுக்கு ஏற்ப …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சியில் பயிற்சி வல்லுனராக விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் . தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட வசந்தன் மாஸ்ரர் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாட்டாளனாகவும் பாதுகப்பு அணியின் தற்காப்பு பயிற்சி ஆசானாகவும் விளங்கினார். தோழா ! … தோழா ! …. என் தோழா !…. பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகில் இருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலை…
-
- 9 replies
- 1.2k views
-
-
விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனை கப்டன் லிங்கம்! கப்டன் லிங்கம் சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:16.12.1960 வீரச்சாவு:29.04.1986 நிகழ்வு:யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு லிங்கத்தின் மறைவு விடுதலைப்போரில் திருப்புமுனை.! யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ண…
-
- 3 replies
- 1.2k views
-
-
மான்னார் மாவட்ட கடற்பரப்பில் காவியமான கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் நிரோயன் உட்பட்ட 15 மாவீரர்களினதும் நெடுங்கேணியில் காவியமான வீரவேங்கை இசையமுது என்ற மாவீரரினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 07.10.1999 அன்று மன்னார் மாவட்டக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் நிரோயன் (பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன் - ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்) மேஜர் காமினி (ஜெயராஜ்) (குப்புசாமி அருணாசலம் - கதிரவெளி, மட்டக்களப்பு) மேஜர் நகுலன் (சண்முகலிங்கம் லோகேஸ்வரன் - மாரீசன்கூடல், யாழ்ப்பாணம்) மேஜர் குகன் (செல்லையா) (யோசப் நியூட்டன் - நானாட்டான், மன்னார்) மேஜர் சோழன்…
-
- 9 replies
- 1.2k views
-
-
26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் “ரணகோச” நடவடிக்கை மூலம் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முற்றுகைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஐயன் மற்றும் லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட்ட 75 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தம்மைச் சுற்றிவளைத்து சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த பாரிய முற்றுகை நடவடிக்கையை எதிர்த்து தீரமுடன் களமாடிய விடுதலைப் புலிகளின் படையணிகள் பல மணிநேரச் சமரின் பின் படை முற்றுகையை முறியடித்தனர். இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பலநூறுபேர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 75 போராளிகள் …
-
- 10 replies
- 1.2k views
-
-
பதியப்பட்ட நாள்February 7th, 2012 நேரம்: 0:04 http://meenakam.com/2012/02/07/20609 பெப்ரவரி 7ம் திகதி (2005) தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம். இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது. லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கை…
-
- 15 replies
- 1.2k views
-
-
மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில் மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்) (சோமசுந்தரம் சற்குணம் - மாதகல், யாழ்ப்பாணம்) கப்டன் கணேசன் (கணேஸ்) (புண்ணியமூர்த்தி ரகு - கந்தளாய், திருகோணமலை) கப்டன் வன்னியன் (கணபதிப்பிள்ளை கணநாதன் - துணுக்காய், முல்லைத்தீவு) லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்) (சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் - யோகபுரம், முல்லைத்தீவு) லெப்டினன்ட் அருளையன் (பிரதீப்) (சாமித்தம்பி மகிந்தன் - பு…
-
- 16 replies
- 1.2k views
- 1 follower
-
-
லெப். கேணல் சேகர் சாவுக்குள் உழைத்த வீரம் ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் சேகர் 1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதாமாளிகைக்குப் பேரூந்து வருமென சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித்தளம் மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கிணங்க மையத்தளத்தினுள் முன்னேறிய எமது போராளிகளை வீழ்த்தி எமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்தான் எதிரி. எதிரிக்காக எடுத்த சாட்டையின் அடி எங்கள் முதுகுகளிலேயே விழுந்து விடுமா? எதிரி கொடியேற்றும் நாளில் எங்கள் தேசியக்கொடி அரைக்கம்பத்திற் பறக்குமா? அர்த்தமற்ற உயிரிழப்புக்களுடன் நாம் தளம் திரும்ப நேருமா? தலைவன் இட்ட ஆணையை வீணேபோக…
-
-
- 1 reply
- 1.2k views
-
-
கப்டன் விக்னம் இயக்கப் பெயர்: கப்டன் விக்னம் இயற்பெயர்: கந்தையா தவராசா முகவரி: உடுத்துறை வடக்கு, தாளையடி, வடமராட்சிக் கிழக்கு, யாழ்ப்பாணம். ஈழமண்ணில்: 07.08.1968. ஈழவர் மனங்களில்: 05.08.1990. 1984ம்ஆண்டில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த மாணவர்களில் அவர் ஒரு முதன்மைமாணவன். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கிய அவர் அன்றையநாட்களில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தனக்கென ஒரு இடத்தைப்பதித்திருந்தார் என்றால் அது மிகையாகாது. தமிழீழ இலட்சியத்தை வரித்துக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் முனைப்புப்பெற்ற 1984-ம்ஆண்டு ஒக்டோபர்மாதத…
-
-
- 4 replies
- 1.2k views
-
-
பரந்தன் பகுதியில் சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான 67 மாவீரர்களினதும், இதன்போது கிளிநொச்சிப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் வெண்நிலவன், கப்டன் உத்தமன் ஆகியோரினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். || ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி “சத்ஜய” என்ருபெருமெடுப்பில் பெயர் சூட்டபப்ட்டு முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின்போது சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.|| இந்த முறியடிப்புத் தாக்குதலில் 67 வரையான போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையி…
-
- 8 replies
- 1.2k views
-