மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
லெப். கேணல் தட்சாயினி நெஞ்சை விட்டகலா நினைவுகளில் நீங்கள் என்றும்… கல்கியின் “பொன்னியின் செல்வனில்” வருவாரே ஒரு முதிய வீரர். பெரிய பழுவேட்டையார் என்று அவருக்குப் பெயர். உடலில் அறுபத்து நான்கு வீரத்தழும்புகள் இருக்கிறதாம் அந்த வீரக்கிழவருக்கு. எங்கள் தாட்சாயினியும் பெரிய பழுவேட்டையரைப் போலதான் என்றால் தாட்சாயினியின் தோழி ஒருத்தி சற்றுப் பெருமையாக, உண்மைதான். தாட்சாயினியின் உடலிலுள்ள வீரத்தழும்புகளை நின்று நிதானமாக எண்ணினால் அறுபத்துநான்குக்கும் அதிகமாகவே இருக்கும். தட்சாயினி! அந்த வயதுக்கேயுரிய முதிர்ச்சி. களங்களில் அவள் காட்டிய உக்கிரம், தன்னோடு நிற்கும் போராளிகளில் வைத்திருக்கும் அன்பு, பராமரிப்பு, அவளது வளர்ப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக தவற…
-
- 5 replies
- 2k views
-
-
தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி புறப்பட்ட மேஜர் விடுதலை.! “தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி ஆழியவளை மண்ணிலிருந்து விடுதலைக்குப் போராடப் புறப்பட்ட கரும்புலி மேஜர் விடுதலை” கந்தையா இந்திராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவள் வடமராட்சி கிழக்கு ஆழியவளை மண்ணில் பிறந்து வளர்ந்தவள். இந்த மண்ணும் தேசவிடுதலைக்குப் போராட பல போராளிகளை உகந்தளித்த மண். அந்த வகையில் இவளும் போராட்டத்தின் தேவையை உணர்ந்து இனவாத அடக்குமுறைக்கு எதிராக 1992ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகளில் முழுமையாக இணைத்துக் கொண்டாள். கடற்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு தொடர்ந்து ஏனைய பயிற்சிகளையும் முடித…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/அன்னை பூமியில், வீரவணக்க நாள்/0 கருத்து எம் மண்ணுக்கு வீரம் விளைந்து விட்டது என்பதை, உரத்த குரலெடுத்து உலகுக்குச் சொல்லிய நாள். அடக்கிவைத்து, எம்மை இனியும் ஆளமுடியாதென்று அந்நியருக்கு அறைகூவல் விடுத்த நாள். உயிர்கொடுத்தே உரிமையைப் பெறமுடியும் என்பதை முதற்சாவு மூலம் முரசறைந்த நாள். ஆம்! மாவீரர்நாள் – தமிழீழத்தின் தேசிய நாள். சத்தியநாதன் என்ற லெப். சங்கர், விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் முதற்சாவை இன்றுதான் சந்தித்தான். ஒரு காலத்தில் எதிரி எட்டி எட்டி உதைக்கவும், உதைத்த காலுக்கு முத்தமிட்டுக் கிடந்தது எங்கள் இனம். காலிமுகத்…
-
- 4 replies
- 2.2k views
-
-
முல்லைக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில் காவியமான இரு கடற்கரும்புலிகள் உட்பட்ட மேஜர் சர்மா என்றா மாவீரனதும் , மற்றும் அக்கரைப்பற்றில் வீரச்சாவைத் தழுவிய லெப். ராகவன் என்ற மாவீரரினதும் , 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். || முல்லைக் கடற்பரப்பில் 04.08.2001 அன்று நடவடிக்கை ஒன்றின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில்…. || இதேநாளில் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில்…. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
-
- 4 replies
- 1.3k views
-
-
1985 காலப்பகுதியில் தமிழகத்தில் 35 போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூத்த தளபதி கேணல் சங்கரண்ணாவின் நெறிப்படுத்தலில் நீரடி நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது. அந்த விசேட நீரடி நீச்சற்பிரிவில் லெப் கேணல் கங்கையமரன் அவர்களும் செயற்பட்டிருந்தார். இவ் அணியில் பயிற்சிபெற்ற சுலோஜன் என்பவர் காரைநகர் கடற்பரப்பில் தரித்துநின்ற கடற்கலத்தை தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது,வீரச்சாவைத்தழுவிக் கொள்கின்றார்.இவரது பெயரிலேயே கடற்புலிகளின் “சுலோஜன் நீரடி நீச்சல் அணி” தளபதி கங்கையமரன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. இவ்வணியே பாரிய கடல் வெற்றிகளைப் பெற்றுத்தந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னாளில் இவ்வணி கங்கையமரன் நீரடி நீச்…
-
- 4 replies
- 883 views
-
-
|||| முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட || ஓயாத அலைகள் – 01 || படை நடவடிக்கையில் 19.07.1996 அன்று இரண்டாம் நாள் சமரில் வீரகாவியமான ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 மாவீரர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்..|||| முல்லைத்தீவு படைத்தளம் மீது 18.07.1996 அன்று தொடங்கப்பட்ட || ஓயாத அலைகள் – 01 || நடவடிக்கையில் படைத்தளத்தின் பெரும்பகுதி முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் ‘ 19.07.1996 ‘ படைத்தளத்தின் எஞ்சிய பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முல்லைத்த…
-
- 4 replies
- 827 views
-
-
தமிழ் செல்வன் அண்ணாவுக்கும் அவருடன் வீரகாவியமான சக தோழர்களுக்கும் வீர வணக்கம் 🙏 தமிழினத்தின் அழகான சிரிப்பின் குரல் மெளவுனமாகி 12 ஆண்டுகள் ஆகி விட்டது 😓
-
-
- 4 replies
- 804 views
- 1 follower
-
-
கப்டன் விக்னம் இயக்கப் பெயர்: கப்டன் விக்னம் இயற்பெயர்: கந்தையா தவராசா முகவரி: உடுத்துறை வடக்கு, தாளையடி, வடமராட்சிக் கிழக்கு, யாழ்ப்பாணம். ஈழமண்ணில்: 07.08.1968. ஈழவர் மனங்களில்: 05.08.1990. 1984ம்ஆண்டில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த மாணவர்களில் அவர் ஒரு முதன்மைமாணவன். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கிய அவர் அன்றையநாட்களில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தனக்கென ஒரு இடத்தைப்பதித்திருந்தார் என்றால் அது மிகையாகாது. தமிழீழ இலட்சியத்தை வரித்துக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் முனைப்புப்பெற்ற 1984-ம்ஆண்டு ஒக்டோபர்மாதத…
-
-
- 4 replies
- 1.2k views
-
-
மீண்டும் வருவான் மேஜர் மில்ரன்…. “தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்.” அவனது பள்ளித் தோழி விமலா இப்படித்தான் நினைவு கூருகிறாள். அவனது, அம்மாவின் மொழியில் கூறுவதானால், “அவனோட ஆரெண்டு இல்லை – எல்லோரும் வந்து ஒட்டிக்கொள்ளுவினம். அவன் ஊரில இருந்து ஓமந்தைப் பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போகேக்க ஊர் பெடி, பெடிச்சியள் எல்லாரையும் அவன்தான் சாச்சுக்கொண்டு போறவன்.” அவனது கறுத்த முகத்தில் அப்படி ஒரு வசீகரம் என்று சொல்வதைவிட உள்ளார்த்தமாக உண்மையாக, நேர்மையாக, உள்ளார்த்த அன்புடன் பழகிய அவனது உள்ளத்து அன்பே வசீகரத்தின் காரணமெனலாம். …
-
- 4 replies
- 1k views
-
-
22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் 'பபதா' வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் கரன் பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன் மட்டக்களப்பு கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் செல்வராசா தவராசா யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழினியன் நடராசா கிருபாகரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்) துரைராசா சத்தியவாணி கிளிநொச்சி கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா) குமாரசிங்கம் விஜஜேந்திரன் திருகோணமலை கடற்கரும்புலி மேஜர் குமரேஸ் துரைராசா செல்வகுமார் வவுனியா கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி கைலாயநாதன் சுகந்தி முல்லைத்தீவு கடற்கர…
-
- 4 replies
- 882 views
-
-
-
லெப். கேணல் நிரோஜன் கடலில் அவனது காவியம்: கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிரோஜன் கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருக்கின்றன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி இவன் சாதனைகளைப் பற்றி இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால்இ அவை இப்போது மௌனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனது எழுதுகோல் ஏற்…
-
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.! On Jun 26, 2020 கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை 10.2000 விடுதலைப் போர்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி. புலிகளை மட்டுமல்ல, தமிழனின் வீரம்பேசி எழுந்துநின்ற அந்தச் சின்னஞ்சிறு பிரதேசத்தையே பூ…
-
- 4 replies
- 935 views
-
-
2ம் லெப்டினன்ட் சுரேந்தினி வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழிபூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள். இளவாலையைச் சேர்ந்த பரமானந்தம் தம்பதிகளுக்கு மூன்று சகோதரர்களுக்கு ஒரே ஒரு அன்புச் சகோதரியாக ஜனந்தினி மலர்ந்தாள். ஒரேயோரு பெண் குழந்தை என்று பெற்றோரும் இனத்தவர்களும் மிகச் செல்லமாக ஜனந்தினியை வளர்த்தார்கள். அவளை நல்ல முறையில் கற்பித்து ஆளாக்க வேண்டுமென பெற்றோர் பெருவிருப்புக…
-
- 4 replies
- 712 views
- 1 follower
-
-
வித்தியாசமான வீரன் கப்டன் கௌதமன் ஓவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கின்ற போது அந்தக் குழந்தையைப் பெற்ற குடும்பத்தின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமானவை. ஒவ்வொரு அம்மாக்களும் உலகின் பெருமைகளையெல்லாம் தன் பிள்ளை பெற்றுச் சிறப்படைய வேண்டுமென்றே கனவுகள் காண்பார்கள். அத்தகைய கனவுகள் ஊரான் அல்லது கௌதமனின் அம்மாவுக்கும் நிச்சயம் இருந்திருக்கும். 2அக்காக்களுக்குப் பிறகு திரு.திருமதி. அடைக்கலம் தம்பதிகளுக்கு 01.05.1974 அன்று பிறந்தான் இன்பசோதி. அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையும் அவனே. இன்பசோதியின் பிறப்பு வீட்டாருக்கு மட்டுமல்ல ஒருநாள் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துப் புலியாவான் என்று யார் அன்று நினைத்திருப்பார்கள் ? இன்பசோதியென…
-
- 4 replies
- 918 views
- 1 follower
-
-
தமிழீழ தாயக விடியலுக்காய் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமா வீரர்களுக்கு எமது வீர வணக்கம். http://www.eeladhesa...=3944&Itemid=53 http://www.eeladhesa...=3943&Itemid=53 http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
- 4 replies
- 1.1k views
-
-
10.06.1998 அன்று வன்னியில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லை . யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம். அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் சிறப்புத்தளபதி லெப் கேணல் வீரமணி அவர்களின் 7 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று 24-05-13 சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு. சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வ…
-
- 4 replies
- 1.3k views
-
-
1987 ஜூன் மாதம் - முகாம்களுக்குள் விடுதலைப்புலிகளால் முடக்கப்பட்டு மூச்சுத்திணறிய சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்றும் நோக்கில் மூர்க்க வெறியுடன் புறப்படுகிறது.தங்களை துட்டகைமுனுக்களாக கற்பனை பண்ணிக் கொண்டிருந்த விமல் விஜயவர்த்தினா, டென்சில் கொப்பேக்கடுவ ஆகியோர் தலைமை தாங்க பலாலி படைத்தளத்திலிருந்து தொண்டமனாறு வழியாக ஒரு அணியும் அச்சுவேலி வல்லை ஊடாக இன்னொரு அணியும் நகர்கின்றன. தொண்டமானாற்றில் விடுதலைப்புலிகள், பெரும் எடுப்பில் விமானக் குண்டுவீச்சுக்கள், கவசவாகனங்களின் துணையுடன் முன்னேறிய இராணுவ அணியைத் தடுத்து சமராடுகின்றனர். கிடுகு வேலிகளும் பனை வடலிகளும் தெருவோர மரங்களும் கக்கிய நீர்ப் பிழம்பில் படையினர் சுருண்டு விழுகின்றனர். வல்வெட்டித்துறை நோக்கி ஒரு அடி கூ…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கான நாட்டுப்பற்றாளர் மதிப்பளித்தல் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள்
-
- 4 replies
- 596 views
-
-
12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுநாள்! இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் 32ஆவது நினைவுநாள் இன்றாகும். இவரின் மறைவு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட முறுகல் நிலைக்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வலுவான நிலையை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதவனின் சிறப்பு தொகுப்பு காணொளியாக… http://athavannews.com/12-நாட்கள்-உண்ணாவிரதமிருந/
-
- 4 replies
- 816 views
-
-
இதுக்குள்ளை இருக்குது கேளுங்கோ! வீரச்சாவு : 1999 https://eelam.tv/watch/border-force-first-woman-maaveerar-ம-தல-வத-எல-ல-ப-பட-ம-வ-ரர-ரத-அவர-கள-ன-வரல-ற_BronIRZ7v31JVGZ.html
-
-
- 4 replies
- 684 views
-
-
தென்தமிழீழம் பெற்ற மாவீரன் தளபதி அன்ரனி ! வசிட்டர் வாயால் பிரமரிஷி என்பதுபோல கிட்டு வாயால் சிறந்த தளபதி அன்ரனி ! "உலகெங்கிலும் கிடைக்காத மலிவான கூலி - எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்" என அடையாளப் படுத்தப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் இவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள். இந்த ஆரம்பம் கல்முனை - துறைநீலாவணைப் பகுதியில் இடம்பெற்றது. பெரும் பாலானோருக்குத் தெரியாது. தம்மைத் தாக்க வந்த ஆயுத தாரிகளான சிங்களவர்களை ஓட ஓட விரட்டியவர்கள் கனகசூரியம் உள்ளடங்கிய குழுவினர். அம்பாறை பட்டிப்பளையில் அரசமரக் கிளையொன்றை நாட்டிய இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ் .சேனநாயக்கா, " இந்த மரக்கன்று பெரிய விருட்சமாகும் போது…
-
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
சிங்கள படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன் லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) Last updated Jul 14, 2020 “அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள் போல…….” லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி புனிதமரியாள் வீதி, திருகோணமலை வீரப்பிறப்பு:11.12.1960 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு “அதோ அந்தப் பறவைபோல …
-
- 4 replies
- 707 views
-
-
தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை...! வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது! வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்கிறது. கப்பலில் பயணித்த போராளிகளை சரணடையும்படி கட்டளை பிறக்கிறது! உயிரணைந்து போனாலும் சரண…
-
- 4 replies
- 2.6k views
-