மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
மாவீரர் வாரம் தொடங்கிவிட்டது. மாவீரர்நாள் வருகிறது. ஒவ்வொரு வருடமும் வந்து போகிறது. தெய்வங்களாக வணங்குவோரும் தூற்றுவோரும் துண்டாடுவோரும் ஒரு வைபவமாக கடந்து செல்கின்றோம் ஒரு முறையாவது சிந்தித்தோமா? 2009க்கும் தற்பொழுதும் எமது பலம் எவ்வாறுள்ளது? தாயகத்தை தற்போதைக்கு விடுவோம். புலத்தில் எமது அமைப்புக்கள் வலுவாக உள்ளனவா? வலுவிழக்க யார் காணரம்?? நாமே தான். இதை உணருவோமா?? 2009 இலிருந்து எழுதி வருகின்றேன் அமைப்புக்களை பலமிளக்க செய்யாதீர்கள். மீண்டும் கட்டியமைப்பதென்பது???? அமைப்புக்கள் பாடசாலைகள் விளையாட்டுப்பகுதிகள் கலைப்பிரிவுகள் என தூர நோக்கோடு அவை கட்டியமைக்கப்பட்டன அவை எல்லாம் ஒழுங்காக…
-
- 0 replies
- 1.7k views
-
-
கார்த்திகை 2017 மாவீரர் வாரம் ஆரம்பம் எமக்காக அவர்கள் போராடினார்கள் எமக்காக அவர்கள் உயிர் தந்தார்கள் அமைதியுடன் வேண்டுதல் செய்வோம் உறவுகளே இந்த வாரம் மாவீரர்களை நினைந்து அவர்களை மனதிலிருத்தி பாடல்களைக்கேட்போம்
-
-
- 8 replies
- 2.9k views
-
-
இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு..!
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரு வருஷத்தில் 365 நாட்கள் வந்தாலும் எங்கட ஆட்கள் சிலருக்கு கார்த்திகை 21 -27 வரை உள்ள நாட்கள் தான் தங்கட கொண்டாட்டங்களுக்கு தேவைபடுவது தற்செயலானதா ? அல்லது திட்டமிடப்பட்டதா ?? இதே காலப்பகுதியில் விஜய் டிவி நடத்த இருந்த நிகழ்வையே பொங்கி எழுந்து தடுத்தவர்கள் புலம்பெயர் தமிழர்கள். Union College Tellippalai OSA Social and Karaoke evening on 25th of November in London. ( Sorry I am not able to attached any photos here) புகழோடும் பெருமையோடும் விளங்கும் யூனியன் கல்லூரியின் மேல் வரலாற்று தவறு என்ற கறை படிவதை தடுத்து நிறுத்துங்கள்.பழைய மாணவர் சங்கங்கள் பள்ளிக்கூடத்தின் பெயர் கெட்டாலும் தாங்கள் நினைத்ததை செய்து முடிப்போம் என்று ஒற்றை காலில…
-
-
- 2 replies
- 2.1k views
-
-
போரில் மாண்ட வீரர்கள் நினைவுக் கல்லறை - கனகபுரம் . Sri Lanka: Kanagapuram warrior Cemetery 2004 - போரில் மாண்ட வீரர்கள் நினைவுக் கல்லறை - கனகபுரம் . நன்றி - யூரூப்
-
- 1 reply
- 1.7k views
-
-
11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட "தவளை பாய்ச்சல்" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்
-
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
நன்றி - யூரூப்
-
- 1 reply
- 1.9k views
-
-
21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும். http://eelavenkaii.blogspot.ch/2011/10/8.html
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி. மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே உரித்தான வளர்ச்சி கண்டு நிற்பதைக் உலகம் புரிந்து கொண்டுள்ளது. அன்று எமது குரல்கள் அடங்க்கிக்கிடந்தன, எமக்கான குரல்களும் கேட்காது கிடந்தன, இன்று எட்டி நின்றவர்களும் எமக்காக குரல்கொடுகின்றனர். இது ஒரு கால மாற்றம் இந்த மாற்றத்தை எம் இனத்திற்கு பெற்றுத் தந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் வரிசையில் அத்திவார்கக் கற்களாகி நிற்கும் விக்டர் போன்ற வீரத்தலபதிகளை தமிழி…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழம் மன்னாரை சேர்ந்த சகாயசீலி பேதிருப்பிள்ளை (1967 சனவரி 01 பிறந்தார் எமது சமூகத்தில் பெண் எப்படி இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை முறியடித்து. தேசிய விடுதலைப் போராட்டத்தில் இந்திய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள் நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு 1984 முதல் பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டனர். விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும்…
-
- 0 replies
- 1.6k views
-
-
“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும். எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு கதைக்கும். வெளியிலை வேலை செய்யேக்கை சரியாச் செய்வம்; இல்லாட்டி சனம் சுபநிட்ட சொல்லிடும். நாங்கள் ஏதும் சொல்லால் உங்களோட என்ன பேச்சு. நாங்க தளபதிக்கிட்ட சொல்லிக்கிறோம் என்று சனம் சொல்லும். சுபன் செத்ததை அவங்களாலை தாங்கிக்க முடியலை. மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில் சுபன் காட்டிய கரிசனையையும், அவனுக்கும் மக்களுக்கும் இருந்த நெருக்கத்தையும் பரஞ்சோதி சொல்லிக் கொண்டிருந்தான். “குடுபங்கள் பிரிஞ்ச சிக்கல் எண்டால் சுபன் நேரடியாகவே…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.veeravengaikal.com/index.php/adikatkal/45-lt-shankarsuresh-selvachandran-sathyanathan-kamparmalai-jaffna
-
-
- 9 replies
- 3.5k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்த ளபதி 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். விடு தலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பல வற்றின் பின்னால் ராயு அண்ணாவின் வெளிக் கொணராத செயற்பாடுகள் பல உள்ளன. http://www.tamilkingdom.com/2017/08/16_25.html கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயு அவர்கள் 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாச…
-
-
- 3 replies
- 2.5k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழில்கொஞ்சும் அழகிய கிராமங்களில் ஒன்றான சித்தாண்டி மண்ணில் மோகனசுந்தரம் (மோகன்) என்ற இயற்பெயரை கொண்ட ஆட்சி நம்பி பிறந்தான் காசுபதி அவர்களின் கடைசி மாகனான மோகான் வீட்டின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்து வந்தான் ஆரம்ப கல்வியை மத்திய மாக வித்தியாலையம் சித்தாண்டியில்( m.m.v ) மேற்கொண்ட மோகன் குடும்ப கஷ்ரநிலமை காரணமாக தனது படிப்பை இடைநடுவே விட்டுவிட்டு தனுது தந்தையுடன் விவசாயம் செய்வது மாடு மேய்ப்பது என தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தான் அந்த காலகட்டத்தில் தான் வீட்டுக்கொரு போராளி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இனையவேண்டும் என சொல்லப்பட்டது எல்லாரது வீடுகளுக்கும் கடிதங்கள் வந்தது போலவே மோகனின் வீட்டுக்கும் கடிதம் வந்தது கடிதத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 27 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள்.இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர்.தென் தமிழீழத்தின் புகழ் பூத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பி…
-
- 6 replies
- 3.2k views
-
-
ஓவியர் வீரசந்தானம் ஐயா ! உங்கள் பெயர் ஈழ வரலாற்றில் எழுதிவைக்கப்படும். தலை வணங்கி கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறேன்! விடுதலைப் பயணத்தில் இதுவரை இழப்புக்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. ஆனாலும் மனம் இறுகவில்லை. பதிலாக, ஒவ்வொரு இழப்புக்களின் போதும் மனம் கலங்கி, தடுமாறித்தான் போகின்றது.
-
-
- 6 replies
- 3.3k views
-
-
யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை. அமைதியும் கவர்ச்சியும் கொண்ட…
-
- 2 replies
- 2.4k views
-
-
இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி பி.திகதி – 24.07.1958 அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது. அந்தத் தடங்களில் மாதவன் மாஸ்ரரும் நடந்து உயர்ந்து விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகியிருந்தார். காலங்கள் கடந்தும் அழியாத வரலாற்றுப் பொக்கிசமாக முள்ளிவாய்க்கால் முடிவோடு இன்னும் முடியாத வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் மாதவன் மாஸ்ரரையும் காலம் கௌரவப்படுத்திக் கொள்கிறது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மாணவனாக பட…
-
-
- 6 replies
- 3.5k views
-
-
தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த பிரிகேடியர் சசிக்குமார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது.படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தக…
-
- 1 reply
- 1.8k views
-
-
நாட்டுப் பற்றாளர் அம்பலவாணர் குமாரவேலு ஆசிரியர் அவர்கள் பதிவு-2005. மீள்பதிவு.2017 “காலத்தால் செய் உதவி சிறிதெனினும் ஞானத்தில் மாணல் பெரிது„ வள்ளுவப் பெரும்தகையின் திருக்குறள் போதிக்கும் விடையம் இது. உதவிகளைப் பொறுத்தவரை அவை புரியப்படும் காலத்தைப் பொறுத்தே பெறுமதி மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு “ஞானத்தில் மாணல் பெரிது” என்னும் அளவில் பங்களிப்பை வழங்கிய நாட்டுப்பற்றாளர் உயர்திரு அம்பலவாணர் குமாரவேலு ஆசிரியர் அவர்கள் எம்மால் என்றும் நினைவு கூறப்படவேண்டியவர். இன்று எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் 18000க்கு மேற்பட்ட மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் போராளிகளாக உள்ள…
-
-
- 1 reply
- 1.4k views
-
-
2009 மே மாதம், கறுப்பு மாதம். அப்போது நடந்த தமிழ் இனப் படுகொலைகளை மறக்க முடியுமா.
-
-
- 8 replies
- 2.1k views
-
-
இன்று தமிழீழத்தின் வீரமங்கை அன்னை பூபதி பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த நாள் மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே. (குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது). திலீபனின் உண்ணா விரதம் தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் கெடுக்கவா…
-
- 3 replies
- 2.1k views
-
-
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது. அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களை…
-
- 3 replies
- 1.7k views
-