மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
04.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமாமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய் பார்க்க படங்கள் மீது அழுத்தவும்
-
- 14 replies
- 2.4k views
-
-
04.11.1999 அன்று ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையில் ஒதியமலை பகுதி மீட்பின் போதான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மணிவண்ணனின் 11ம் ஆண்டு நினைவு நாளும், கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் நடைபெற்ற மோதல் ஒன்றில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தர்சனின் 10ம் ஆண்டு நினைவு நாளும், 04.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அசோக்குமாரின் 3ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். ஓயாத அலைகள் - 3 படைநடவடிக்கையில் 04.11.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி படையணியைச் சேர்ந்த மேஜர் இராசநாயம், லெப். ஆருரான், 2ம். லெப். திருக்குமரன் 2ம் லெப். வல்லவன், 2ம் லெப். சுபாசன், வீரவேங்கை தீபன் உட்…
-
- 10 replies
- 2.1k views
-
-
[size=4] நவ 2, 2012[/size] [size=4] தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன். தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும். தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்…
-
- 5 replies
- 869 views
- 1 follower
-
-
[size=4]04.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] [size=6]கரும்புலிகள் உயிராயுதம்[/size]
-
- 9 replies
- 1.3k views
-
-
[size=4]03.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] கரும்புலிகள் உயிராயுதம்
-
- 6 replies
- 1.8k views
-
-
ஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 02.11.1999 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஒட்டுசுட்டான் படைத்தள வீழ்ச்சிக்காக தம்மை ஆகுதியாக்கிய சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் நியூட்டன், மேஜர் சாரங்கன்(ஆறுமுகம் கதீபன்), கப்டன் ஜீவராசா(விசுவலிங்கம் சசிக்குமார்), லெப்.இருதயன்(வில்விறட் சுதேசன்), லெப். தரன்(தர்மு செல்வம்), லெப். செல்லத்தேவன்(பழனியாண்டி விமலன்), 2ம் லெப்.வண்ணன் (நல்லையா ரகுச…
-
- 13 replies
- 2.9k views
- 1 follower
-
-
http://m.youtube.com/#/watch?v=rZKFKXLS9TI&desktop_uri=%2Fwatch%3Fv%3DrZKFKXLS9TI&gl=GB
-
-
- 20 replies
- 2k views
- 1 follower
-
-
[size=2] [size=4]02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சல்மான்(இரும்பொறை), லெப்.கேணல் கதிர்காமரூபன்(பெத்தா), மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் சதாசிவம், கப்டன் வல்லவன் ஆகிய கடற்கரும்புலிகளினதும், லெப்.கேணல் சதீஸ்குமார் உட்பட்ட கடற்புலிகளினதும் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.[/size][/size][size=2] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size][/size][size=2] …
-
- 9 replies
- 867 views
-
-
01.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நெடுங்கீரன்(நவம்) அவர்களின் மூன்றாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை அர்ப்பணித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட இந்த மாவீரனுக்கும் இதேநாளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
-
- 8 replies
- 2.1k views
-
-
31.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் நிசாரின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 11 replies
- 2.1k views
-
-
சிங்கள பேரினவாத அரசானது கடல்கடந்து தமிழ் மக்கள் மீது, தமிழீழ விடுதலைக்காக உழைத்தவர்கள் மீது தனது கொலைவெறியினை ஏற்படுத்தி மக்களின் மனதில் பயத்தினை உண்டு பண்ணும் வகையில் சிறீலங்கா அரசின் கைக்கூலிகளின் படுகொலைக்கு உள்ளான லெப். கேணல் நாதன், கப்ரன் கஐன் ஆகியோரது 16 வது ஆண்டு நினைவு வணக்கம் பிரான்சில் ஒபவில்லியே என்னும் இடத்தில் அவர்கள் துயில் கொள்ளும் துயிலும் இல்லத்தில் 26.10.2012 வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் 15.30 மணிக்கு பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இவ் வணக்க நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் திரு. த. சத்தியதாசன் அவர்கள் ஏற்றிவைத்தார். மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர் 2ம் லெப். குழலினியின் சகோதரரும், கப…
-
- 5 replies
- 1.3k views
-
-
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 11 replies
- 1.9k views
-
-
யாழ். வலிகாமத்தில் 30.10.1995 அன்று சூரியக்கதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் அகிலா - லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாளும், 30.10.2006 அன்று மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி சாவடைந்த லெப்.கேணல் வரதா(ஆதி) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தம்மை அர்ப்பணித்து வழிமூடிய இந்த வீரவேங்கைளிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 15 replies
- 2.6k views
-
-
[size=4]29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாளும் [/size][size=1] [/size][size=1] கரும்புலி 2ம் லெப்டினன்ட் இசைச்செல்வன் நாகராசா சண்முகசீலன் யாழ்ப்பாணம் கரும்புலி கப்டன் அகத்தி இராமநாதன் நடராசா அம்பாறை கரும்புலி கப்டன் ஈழவன் திருச்செல்வம் ரொபேட்சன் யாழ்ப்பாணம் கரும்புலி கப்டன் ஜீவன் (தினகரன்) கணபதிப்பிள்ளை இராமணேஸ்வரன் மட்டக்களப்பு கரும்புலி கப்டன் சிறைவாசன் (திலீப்) நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன் மட்டக்களப்பு கரும்புலி லெப்டினன்ட் கலைச்செல்வன் ஆறுமுகம் சந்திரகுமார…
-
- 7 replies
- 1.6k views
-
-
[size=4]30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] கரும்புலிகள் உயிராயுதம் [size=6]http://www.facebook.com/karumpulimaveerarkal[/size]
-
- 7 replies
- 691 views
-
-
பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தாயகத்திற்கான பயணத்தினை நிறைவு செய்து தமிழகம் திரும்பும்வேளை அவரை மன்னார் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டு தளம் திரும்பும்வேளை வவுனியாவில் இடம்பெற்ற மோதலில் காவியமான நான்கு மாவீரர்களின் 27ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். [size=2][size=4]தாயகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. நெடுமாறன் ஐயா அவர்கள் தனது பயணத்தினை நிறைவு செய்து வன்னித் தளத்திலிருந்து தமிழகம் திரும்பியவேளை அவரை பாதுகாப்பாக மன்னாருக்கு அழைத்துச் சென்று தளபதி விக்ரர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தளம் திரும்பி வரும் வழியில் வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவ…
-
- 9 replies
- 1.3k views
-
-
[size=4]முல்லைத்தீவில் காவியமான கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி, திருகோணமலையில் காவியமான கப்டன் அகத்தியன், கப்டன் நீலவாணன், 2ம் லெப். பூவிழி ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 26.10.2001 அன்று கடற்புலிகளின் மகளீர் படையணி துணைத் தளபதி கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி (சின்னப்பு நந்தினி - செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இதேநாள் திருகோணமலை மாவட்டம் உப்பாறு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை தாக்குதவற்காக வந்த படையினரை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது …
-
- 8 replies
- 813 views
-
-
[size=4]கடற்கரும்புலிகள் மேஜர் நளினன் - கப்டன் ஜெயராஜ் நினைவு தொடர்பாக நாம் ஏற்கனவே அனுப்பிய செய்தி முழுமைப் படுத்தப்படவில்லை எனவே முழுமைப் படுத்பதப்ட்ட இச்செய்தியைப் பயன்படுத்தவும். திருகோணமலை துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நளினன், கப்டன் ஜெயராஜ் மற்றும் கடற்புலி 2ம் லெப்.மதன், வவுனியாவில் காவியமான மேஜர் திருமகன் ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 25.10.1996 அன்று திருகோணமலை துறைமுக நுழைவாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான “டோறா” அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து மூழகடித்து கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) (தெய்வேந்திரன் யோகேஸ்வரன் - மூதூர், திருகோணமலை) கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) (கந்தசாம…
-
- 9 replies
- 744 views
-
-
[size=4]தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் காவியமான லெப்.கேணல் கலாத்தன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் றோசா, கப்டன் இளங்குயிலன் உட்பட்ட 23 மாவீரர்களினதும் முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.இயூயின் என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 21.10.2001 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கைக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல் மற்றும் முல்லைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படைக் கலங்களை வழி மறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலென இரு வேறு நிகழ்வுகளில் கடற்கரும்புலி மேஜர் றோசா (கணேசன் கற்புக்கரசி - காரைநகர், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் இளங்க…
-
- 9 replies
- 1.2k views
-
-
[size=4]“ஓயாத அலைகள் - 4” நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன், கப்டன் சரத்பாபு ஆகியோரினதும், மட்டக்களப்பில் காவியமான லெப். அருள்மதன் என்ற மாவீரரினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 24.10.200 அன்று “ஓயாத அலைகள் - 4” நடவடிக்கைக்கு வலுச்சேர்ப்பதற்காக நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை ஒன்றின்போது கரும்புலி மேஜர் சோபிதன் (துரைச்சாமி ஜீவகணபதி - மூன்றுமுறிப்பு, வவுனியா) கரும்புலி மேஜர் வர்மன் (மேனவன்) (வடிவேல் தங்கத்துரை - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) கரும்புலி கப்டன் சந்திரபாபு (குமரப்போடி லிங்கராசா - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் மட்டக…
-
- 7 replies
- 732 views
-
-
[size=1]25.10.2006 அன்று திருகோணமலைத் துறைமுக கடற்ப்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோற படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட[/size][size=1] [/size][size=1] கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) கந்தசாமி கோபாலகிருஸ்ணன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) தெய்வேந்திரன் யோகேஸ்வரன் திருகோணமலை ஆகிய கடற்கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=1] [size=4]தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size][/size]
-
- 7 replies
- 816 views
-
-
பூனைத்தொடுவாயில் காவியமான லெப்.கேணல் வாசன், கப்டன் ஆனந்தபாபு, லெப். கெங்கன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் காவியமான லெப். மன்மதன், வீரவேங்கை சாந்தா ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.10.1996 அன்று முல்லை மாவட்டம் பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு(ராடார்) தளத்தினை தாக்குதவற்காக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் “கொமாண்டா” அணியினருடனான மோதலின்போது லெப்.கேணல் வாசன் (தனராஜ்) (நந்தகோபால் நவநீதராஜ் - திருகோணமலை) கப்டன் ஆனந்தபாபு (கிறகோரி கிறித்துராஜா - குருநகர், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கெங்கன் (கெங்காதரன்) (மார்க்கண்டேசர் விக்கினராசா - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட…
-
- 6 replies
- 1.2k views
-
-
[size=2] அனுராதபுரம் வான்படைத் தளத்தில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். [/size][size=2] அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படைத் தளம் மீது “எல்லாளன்” என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் மேலும் பல வானூர்திகள் சேதமாக்கப்பட்டன. பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு: லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் - திருகோணமலை) லெப். க…
-
- 17 replies
- 2k views
-
-
[size=4]ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின்போது காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும், பிற நிகழ்வுகளில் காவியமான ஆறு மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 18.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின் போது நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 23.10.2000 அன்று [size=3]சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் (மாயாண்டி ஜெயக்குமார் - கோணாவில், கிளிநொச்சி)[/size] வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். 23.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலின்போது [size=3]கப்டன் சுதனி (ப…
-
- 11 replies
- 1.4k views
-
-
[size=4]ஓயாத அலைகள் - 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] [size=5]http://www.facebook.com/karumpulimaveerarkal[/size]
-
- 6 replies
- 942 views
-