Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. 25 /10 / 1985 இல் வீரசாவை தழுவிக்கொண்ட ஜீவன், சபா, லோரன்ஸ், லலித் நெடுமாறன் ஐயா வன்னிக்கு வந்து தமிழகம் திரும்பும்போது அவருக்கு பாதுகாப்புக்காக ஜீவன், சபா, மற்றும் லோரன்ஸ், லலித் மன்னார் சென்று பாதுகாப்பாக விக்ரர் அண்ணாவிடம் நெடுமாறன் ஐயாவை விட்டு விட்டு திரும்பி வந்தபோது வவுனியா சாஸ்திரி கூளாங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் கொப்பேகடுவ தலைமையில் பதுங்கி தாக்குதலின் போது. தமிழ் ஈழத்தாயகத்தை மீட்க்கும் போராட்டத்தில் தம் இனிய உயிர்களை அர்ப்பணித்த இந்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

  2. ஓயாத அலைகள் – 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/24/ தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எனது வீரவணக்கங்கள்.

  3. 18.10.2000 அன்று ஓயாத அலைகள் 4 படை நடவடிக்கையில் நாகர்கோவில் களமுனையில் விழுப்புண்ணடைந்து 23.10.2000 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் அவர்களினதும், இதே நாள் திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்களை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி, மேஜர்கள் திருமாறன், மயூரன், நித்தி, நிதர்சன், றோஸ்மன் ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கும், இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். …

  4. எல்லாளன் தாக்குதல் 4 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முக்கியத்துவமுடிய தாக்குதல்களின் பட்டியலில் இடம் பிடித்த எல்லாளன் தாக்குதல் நடவடிக்கை 22.10.2007 அன்று தலைவர் அவர்களின் இரகசிய திட்டத்திற்கிணங்க நடத்தப்பட்டு பெரும் வெற்றியும் ஈட்டப்பட்டது. எல்லாளன் நடவடிக்கை என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும். இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும்…

  5. 21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் பணியை மேற்கொண்டிருந்தகடற்புலிகளின் கலங்களிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில்ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத்தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் மற்றும் இதேநாள் சுற்றுக்காவல்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை முல்லைக்கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்…

  6. 18.10.2006 அன்று சிறிலங்காவின் காலித்துறை முகத்தில் வைத்து பல கடற்படைக் கலங்களை அழித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தில்லைச்செல்வி, லெப்.கேணல் அரவிந்தா உட்பட்ட கடற்கரும்புலிகளின் 4ம் ஆண்டு நினைவு நாளும் 18.10.1997 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவு நாளும் 18.10.1995 அன்று யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாவண்ணனின் 15ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இ…

  7. 17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க இன்றாகும். தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/17/ தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

  8. ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2011 11:06 | இன்று கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் வீரவணக்க நாள் 15.10.2006 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வீரகாவியமான கடற்கரும்புலி லெப்.கேணல்வளவன் அவர்களின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=10273:2011-10-16-11-06-51&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  9. 14.10.1999 முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ் உட்பட்ட ஆறு கடற்கரும்புலி மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கொக்குளாய் கடற்பரப்பில் கடற்படையினரின் டோறா கடற்கலங்கள் கடற்புலிகளால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை டோறா கலங்களை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த இரு கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதினால் ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ், மேஜர் கலைமகள், மேஜர் சூரியப்பிரபா, மேஜர் பரணி, கப்டன் சுதாகரன் ஆகிய கடற்கரும்ப…

  10. 13.10.1997 அன்று வவுனியா மாவட்டம் பெரியமடுப்பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சந்திரகாந்தன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 13.10.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அன்பரசன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/13/13 தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த இம்மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

  11. 12.10.1986 அன்று மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிககொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://www.eeladhesa...ndex.php?option மண்ணின் விடியலுக்காக தம்மையே ஆகுதியாக்கிய இந்த மாவீரருக்கு எனது வீரவணக்கம்

    • 13 replies
    • 1.9k views
  12. Started by அறிவிலி,

    இரண்டரை வருசத்துக்கு , முன்னாடி எல்லாம் , மாவீரர்கள்னா ஒரு , பயம் இருக்கும், கவலை இருக்கும்,,, அழுகை இருக்கும்! இப்போ அதெல்லாம் இல்ல,,, ஓடிப்போன குதிரைகள் இனி திரும்பிவராது எங்கிற , தைரியத்தில் , போறவன் வாறவன் எல்லாம்............ அத வளர்த்தது , நான் தான் எங்கிற ,, காமெடி பீசுகள் கைல சிக்கிகிட்டது அவர்கள் வரலாறு! அனைத்தையும் இழந்து , எங்களுக்காய் ,,, புலியாய் செத்தவனுக்கு ,, எல்லாவற்றையும் வைத்திருக்கும் , இந்த புண்ணாக்கு கூட்டம் , ஒற்றுமையாய் அஞ்சலி செய்ய தயாரில்லை! மாவீரர் கல்லறைகளை புல்டோசர்கொண்டு கிளறி எடுத்து , எப்பவோ செத்து புதைக்கப்பட்ட , அவர்கள் எலும்புக்கூடுகளை , தெருவோரம் வீசிய சிங்களவன்... எங்களைவிட ஆயிரம் மடங்கு நல்லவ…

  13. வெள்ளி, 7 அக்டோபர், 2011 06.10.1998 மாங்குளம் நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் டயஸ் உட்பட்ட மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் புனிதா உட்பட்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவண…

  14. இன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள் (Video & Photo in) Wednesday, October 5, 2011, 8:46 இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் அப்துல்லா, ரகு, நளன், பழனி, மிரேஸ், றெஜினோல்ட், தவக்குமார், அன்பழகன், கரன், ஆனந்தக்குமார் ஆகியோரின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1987ம் ஆண்டு இதே காலப்பகுதியில் தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு இலங்கை – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 198…

  15. வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் 26-09-2001 தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்தது. ஈழ விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் ப…

      • Like
    • 17 replies
    • 1.6k views
  16. தியாகத்தின் சிகரம் திலீபனைப் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆக்கம் (பருத்தியன்)! அதை தியாகசீலன் திலீபனின் நினைவுநாளில் இங்கு இணைத்து பகிர்கின்றேன்! இருபத்தியிரண்டு ஆண்டுகள் என்பது "இருபத்திநான்கு" என மாற்றப்பட்டுள்ளது.(நீல நிறத்தில் உள்ளவை) வேறெதுவும் மாற்றமில்லை. நன்றி பருத்தியன் தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்திநான்கு வருடங்களுக்கு முன்பு ...அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது. "இனவிடு…

    • 9 replies
    • 4.3k views
  17. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். Saturday, September 17, 2011, 9:10 சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட மின்னல் படைநடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 17.09.1991ம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின், 2ம் லெப். மில்ராஜ் ஆகிய மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.09.2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் அந்தணன், லெப்.கேணல் விதுசன், லெப்.கேணல் கலைச்செல்வன் மற்றும் லெப்.கேணல் வெற்றியரசன், லெப்.கேணல் நான்முகன் உட்பட்ட கடற்புலிகளினதும் …

    • 18 replies
    • 2.3k views
  18. சென்ற 16.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிக் கடற் கலங்களை மூழ்கடித்து மேலும் சில கடற்கலங்களை தேசமாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர், லெப்.கேணல் குமுதன் உட்பட்ட….. ….கடற் கரும்புலிகள் லெப்.கேணல் அனோசன், மேஜர் அருணா, மேஜர் நித்தியா, மேஜர் காந்தி மற்றும் – 10 மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பற் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வழிமறித்து கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான கடற் புலிகளும், கடற் கரும்புலிகளும் சிறிலங்கா…

  19. 12.09.1999 அன்று யாழ். நல்லூர் பகுதியில் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டலெப்டினன்ட் கேணல் செந்தமிழ் (செந்தமிழ்ச்செல்வன்) அவர்களின் 12ம் ஆண்டு நினைவு நாளும், மட்டக்களப்பு அரணகல்வில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவகாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். http://www.tamilthai.com/?p=26532

  20. 11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் வேங்கை, லெப்.கேணல் திருவருள் உட்பட்ட கடற்புலிகள் மற்றும்லெப்.கேணல் தமிழ்மாறன்(கஜேந்திரன்) ஆகியோரினதும் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். http://www.tamilthai.com/?p=26450

  21. Saturday, September 10, 2011, 1:30 தமிழீழம், மாவீரர்கள் 10.09.1997 அன்று புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில்வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவரசன்(பைப்) அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள். 10.09.2000 அன்று யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சிவம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் 10.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செண்பகச்செல்வன், லெப்.கேணல் எரிமலை, லெப்.கேணல் முல்லைமாறன், லெப்.கேணல் சிறிகாந்த், லெப்.கேணல் வீமன்(ஜது) உட்பட்ட கடற்புலிகளினதும், லெப்.கேணல் கலையழகன்(லுஜின்) ஆகியோரதும் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 10.09.1995 அன்று காங்கேச…

  22. Posted by: on Sep 8, 2011 மாதம் ஒரு முறை நடக்கும் துளசிராம் இலக்கிய வட்டத்திற்குச் சென்ற போது நிலவனைச் சந்தித்திருக்கிறேன். அவனை நான் பெரிது படுத்தியதில்லை. சக போராளி என்ற மதிப்பை மாத்திரம் கொடுத்தேன். அதற்கு மேல் என்னத்தைச் செய்ய முடியும். அவனுடைய வரலாறு சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்றேன். அதை முழுமையானது என்று சொல்ல முடியாது. துண்டுகளாகச் சில செய்திகள் வாய்வழியாக கிடைத்தன. அவற்றைப் பொருத்தி எழுதுகிறேன். வரலாறு என்று தலைப்பிட்டாலும் துணுக்குகள் என்றால் மிகப் பொருத்தம். துளசிராம் மட்டக்களப்புப் போராளி. இலட்சியத்திற்காக உயிரீகம் செய்த மாவீரன். எழுத்தில் வல்லவனான இந்த மாவீரன் நினைவாக இந்த இலக்கிய வட்டம் உருவாக்கப்பட்டது. அனேகமான ச…

  23. பதிந்தவர்: தம்பியன் வியாழன், 25 ஆகஸ்ட், 2011 கேணல் ராயு [குயிலன்] (அம்பலவாணர் நேமிநாதன்) ஏழாலை, யாழ். வீரப்பிறப்பு: 30.05.1961 வீரமரணம்: 25.08.2002 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர் கேணல் ராயு. முதலாவது சிறப்புக் கொமாண்டோ படையணியை உருவாக்கியவர். விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். விடுதலைப் போரின் முதலாவது கனரக ஆட்லறிப் பீரங்கிப் படையணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மாவீரன் கேணல் ராயு. அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்டார். கேணல் ராயுவின் இறுதி வ…

  24. 01.08.1997ம் ஆண்டு யெஜசிக்குறு சமர்களத்தில் மேஜர் சிட்டு அவர்கள் வீரகாவியமானார். தனது இனிய குரலால் இன்றும் எல்லோரின் நினைவுகளோடும் வாழும் சிட்டு அவர்களது14ம் ஆண்டு நினைவுநாள் இன்று. 70பாடல்கள் வரை பாடியுள்ளார். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிட்டு உறங்கிய துயிலிடம் 2003 தாயகம் போனது போது எடுக்கப்பட்ட படம் இது. சிட்டுவின் நினைவாய் புதுவை அவர்கள் எழுதிய நினைவுப்பாடல் சாந்தன் அவர்களால் பாடப்பட்டது. சிட்டு பாடிய *கண்ணீரில் காவியங்கள் என்ற பாடல்.இதுவே சிட்டுவின் முதலாவது பாடல்.

      • Like
    • 34 replies
    • 7.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.